ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி சென்றுருந்தார்...
கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்.
இங்கே காபி பொடியும் இல்லை சர்க்கரை யும் இல்லை அடுப்பங்கரையிலிருந்து சத்தமிட்டார்..
எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டு தான் கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்து விடுகிறான்.
இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா என்று அழ ஆரம்பித்தாள் மனைவி…
இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினார் விருந்தாளி...
அவர் வெளியேறிவிட்டதும் ”கொல்” என சிரித்தனர் கணவனும் மனைவியும்…
எப்படி இருந்தது என் நடிப்பு.. அடிப்பது போல் அடித்தேனே.. என்றான் கணவன்..
ஆஹா.. அழுவது போல் அழுதேனே.. எப்படி இருந்தது. என் நடிப்பு…”என்றாள் மனைவி...
பிராமாதம் என்றான் கணவன்...
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது…
நானும் போவது போல் போய்விட்டு திரும்பி விட்டேன்.. என்றார் விருந்தாளி..
யாருக்கிட்ட...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.