15/02/2019
தமிழரின் பண்பாட்டில் அனைத்தும் சமமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது...
உன் பண்பாட்டில் இயல்பாக இருந்த ஒன்றே அவர்கள் மிகைப்படுத்தியும், மற்றொன்றை அறுவறுப்பு நிறைந்ததாகவும் மாற்றியுள்ளனர்..
ஆனால் அவர்கள் அதை சமமாகவே வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர்..
நாம் ஒன்றை அறுவறுப்பாக பார்த்ததன் விளைவுதான் இன்று பாலியல் கல்வி வேண்டும் என கூறுகிறோம்..
அதைப்பற்றி அறியாதவன் தான் எத்தனையோ சிறு பிள்ளைகளையும், பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றான்..
நினைவுகொள் பெண் என்பவள் உன்னைப் போன்று ஒரு உயிர்.. உன்னை படைத்தவளும் அவள் தான்..
திராவிடம் என்பது தமிழர் இனப்பகையே? அதனை ஏன் அகற்ற வேண்டும்?
1.1965 ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் விளைந்த காங்கிரஸ் எதிர்ப்பினை வடுக திராவிடம் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 1967 ல் காங்கிரஸ் அரசினை தமிழர்களின் ஏகோபித்த ஆதரவினால் வீழ்த்தியது.
ஆனால் அந்தக் காங்கிரஸ் அரசு தான் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தினை அமுல் படுத்தி அதனை ஆட்சி மொழியாக்கக் கருதி தமிழ் ஆட்சி அதிகார மொழிக்கான பேரகராதியை உருவாக்க ரூபாய் 56கோடியை (66 கோடியா என்று நினைவில் இல்லை. இருக்கலாம் ) ஒதுக்கி விட்டு ஆட்சிக் கட்டிலை விட்டு இறங்கியது.
ஆட்சிக்கு வந்த வடுக தெலுங்கர் அண்ணாதுரை திராவிட அரசு அந்தச் செயல் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது.
அது மட்டும் இல்லாமல் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வாய்மணக்க முழங்கி விட்டு, திராவிடர்களால் குல்லூகப் பட்டர் என்று அழைக்கப்பட்ட ராச கோபாலாச்சாரியாருடன் சேர்ந்து கொண்டு HINDI NEVER - ENGLISH EVER என்று மாநாடு நடத்தி முழங்கினார்.
ஆனால் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவதற்கு பதிலாக தாய்மொழிக்கல்வியை நடைமுறைப் படுத்துவோம் என்று கூறி அதன்படியே செயல்பட்டார்.
அதாவது தாய்மொழிக் கல்வி என்றால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 85 விழுக்காடு தமிழர்கள் என்ற நிலையில் அன்று இருந்த தமிழ் அறிஞர்கள் அது தமிழ் வழிக் கல்வியாகவே இருக்கும் என்று நம்பி ஏமாந்தார்கள்.
ஆனால் வடுகத் திராவிடம் இந்த சூழ்ச்சியினால் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி மொழி, கல்வி மொழி நீதிமன்ற மொழி, வணிக மொழியில் தமிழ் கோலோச்சுவதை தடை செய்து விட்டு, இன்னொருபுறம் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அது ஒரு மூட நம்பிக்கையுள்ள மொழி என்ற பிரச்சாரத்தை ஊடகம், சினிமா அச்சு ஊடகங்கள் வழியாக கன்னட ராமசாமியின் பிரச்சாரத்தின் மூலம் தமிழ் மக்களையே தமிழுக்கு எதிராக மடை மாற்றினார்கள்.
அது மட்டும் அல்ல இன்று ஆரம்பக் கல்வியில் இருந்தும் தமிழ் விரட்டுப்பட்டு விட்டதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இவ்ர்கள் இவ்வாறு நடந்துக் கொள்ளக் காரணம் இவர்கள் தமிழர்கள் இல்லை என்பதாலும் இவர்களே காலம் காலமாக தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்று கருதுவதாலும் தான்..
தமிழர்களின் தாய் மொழியாம் தமிழை அழித்து ஒழிக்க முற்பட்டுள்ளார்கள்.
எனவே தான் திராவிடம் தமிழ்நாட்டில் இருந்து முற்றாக அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.
அதனை நாம் வாக்குச் சீட்டின் மூலம் நிறைவேற்ற முடியும்...
ஆம்.. இனி தமிழர் நாட்டை தமிழரை மட்டுமே ஆள வைப்போம்...
டிரைவருக்கு திடீர் மாரடைப்பு... தன்னுயிரை கொடுத்து பயணிகளை காப்பாற்றினார்...
திருவள்ளூரில் இருந்து சென்னை வரும் விரைவு அரசுப் பேருந்தை இன்று அதிகாலை அரசுப் பேருந்து ஊழியர் ரமேஷ் (47 வயது) ஓட்டி வந்தார். மனிதனின் சராசரி வயதான இந்த வயதில் ரமேஷூக்கு திடீரென மாரடைப்பு அறிகுறி தென்பட்டு அவருக்கு நெஞ்சடைத்தது போன்றதொரு உணர்வு தோன்றியுள்ளது.
சிறிது நேரத்தில் அந்த உணர்வு மேலோங்கி நெஞ்சம் முழுவதும் அடைத்துள்ளது. தனது மாரடைப்பை முற்றிலுமாக உணர்ந்த டிரைவர் ரமேஷ், மிகவும் சமயோஜிதமாக யோசித்து.
எப்படியேனும் பேருந்தில் உள்ள பயணிகளை காப்பாற்றிவிட வேண்டும் என்கிற நோக்கில், பேருந்தை மெதுவாக இயக்கிச் சென்று சாலையின் ஒருபுறமாக நிறுத்திவிட்டார்.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக, பேருந்தை நிலைநிறுத்திய கணமே அவரது மூச்சும் நின்றுவிட்டது. தனது மூச்சியக்கம் நின்றதும் அந்த டிரைவர், தான் இயக்கிவந்த பேருந்து ஸ்டியரிங்கின் மீது தலைகவிழ்ந்தபடி சரிந்தார்.
பதறிப்போன மக்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றமர். அங்கு அவர் உயிர் பிரிந்துவிட்டார் என்பதை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...
பொய்களின் மடம் காஞ்சி மடம்...
காஞ்சி காமகோட்டி மடம் ஆதிசங்கரர் நிறுவியது என்பது முழுப் பொய்...
அதன் தலைமை மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என்ற பட்டத்தைப் பயன்படுத்த தகுதி இல்லாதவர்கள்...
அந்த மடம் உருவானது 1780களில்...
ஆதிசங்கரருக்கும் காஞ்சி மடத்திற்கும் தொடர்பே கிடையாது...
காஞ்சி சங்கராச்சாரிகள் அத்தனை பேரும் முழுப் பொய்யர்கள் என்பதையும் அவர்கள் கூறும் வரலாறு அனைத்துமே கட்டுக்கதை என்பதையும்..
ஆதிசங்கரர் நிறுவிய சிருங்கேரி, பூரி, துவாரகா, பதரி ஆகிய நான்கு மடங்களினுடைய உண்மையான சங்கராச்சாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்...
இதற்கெல்லாம் சான்று காஞ்சி சங்கராச்சாரிகள் பத்திரிக்கைகளில் எழுதிய தொடருக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்து 'வாரணாசி ராஜ்கோபால் சர்மா' (பிராமணர்) எழுதிய "Kanchi Kamakoti Math - A Myth" என்ற புத்தகம்.
அந்த கொலகாரனுக மொதல்ல சங்கராச்சாரியே கெடையாது ஓய்...
டி.என்.எ என்பது எங்கு உள்ளது? அதை பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?
நம் உடல் முழுவதும் கலங்களால் ஆனது. ஒரு கிராம் சதையில், ஒரு துளி ரத்தத்தில் சில ஆயிரம் கலங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு கலத்திலும் உட்கரு ஒன்று உள்ளது. ஒவ்வொரு உட்கருவிலும் 46 நிறமூர்த்தங்கள் (Chromosomes) உள்ளன. ஒவ்வொரு நிறமூர்த்தங்களிற்குள்ளேயும் இருப்பதுதான் டி.என்.எ, அதன் சிறு பகுதிகள் தான் மரபணுக்கள்.
இதுதான் டி.என்.எ வின் இருப்பிடதகவல் (Location). உயிரகளின் உருவாக்கம் மற்றும் அவற்றின் அடிப்படை செயல்பாடுகள் அனைத்திற்கும் டி.என்.எ வே காரணம். அவற்றில் பத்து லட்சம் (million) கணக்கான வருட பரிணாம வளர்ச்சியால் தகவல்கள் பதிகின்றன.
கணினி நினைவகம் (Computer Memory) போலத்தான். இப்படி பதிந்துள்ள தகவல்கள் மூலம்தான் எல்லாம் நடக்கிறது. பரிணாம வளர்ச்சி மூலம் பல்வேறு உயிரனங்கள் உண்டானதே இந்த டி.என்.எ வில் நடந்த மாற்றங்களும் அவற்றை இயற்கை தேர்வு செய்ததும்தான்.
பறவை, பாம்பு, பொருட்களைப்புளிக்க வைக்கும் (அ) நோய் உண்டாக்கும் நுண் உயிரிகள் (bacteria) , திமிங்கலம், குரங்கு, மனிதன் என்று வெவ்வேறு உயிரனங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளும், ஒரே சிற்றினத்தின், உதாரணமாக மனித இனத்தின் தனித்தனி மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளும் (முகம், கைரேகை, விழித்திரை உட்பட) இந்த டி.என்.எ வின் அமைப்பில் உள்ள மாற்றங்களால்தான்.
அவ்வளவு முக்கியமான விசயம் அது. சரி டி.என்.எ என்பது எங்கு உள்ளது? ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? என்று தெரிந்தது. அடிப்படியில் அது என்ன? அது ஒரு மூலக்கூறு. கார்பன்,ஐதரசன் (Hydrogen), பிராணவாயு (oxygen), நைதரசன் (Nitrogen), எரியம் (phosphorus) ஆகிய தனிம அணுக்கள் சேர்ந்த ஒரு பெரிய மூலக்கூறு. மிக மிகப்பெரிய மூலக்கூறு...
மூட்டு வலியை சரி செய்யலாம் வாங்க....
மூட்டுவலி என்பது இன்று மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.
மூட்டு வலி இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று சுண்ணாம்பு சத்து (Calcium) குறைபாட்டால் ஏற்படுவது மற்றொன்று மூட்டின் பசை குறைந்து விடுவதால் மூட்டு வலி ஏற்படுகிறது.
எலும்பு தேய்வு ஏற்படுகிறது என்பது தவறான கருத்து ஆகும். எலும்பு தேய்மானம் ஏற்படவே ஏற்படாது. எனவே நமக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாக 40 வயது ஏற்பட்டுவிட்டாலே சுண்ணாம்பு சத்து குறைபாடு பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சுண்ணாம்பு சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொண்டாலே மூட்டுவலி ஏற்படாது.
என்னவெல்லாம் சாப்பிடலாம். பால், முட்டை, மீன், பேரிச்சம்பழம், புளிப்பு சம்மத்தப்பட்ட பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். எனவே சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு மூட்டுவலியை சரி செய்து விடலாம்...
உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா...?
இல்லையென்றால் படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள்.
இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.
பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... உடல் கட்டுப்பாடை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...
முயற்சி செய்து பாருங்கள் உடல் கட்டுப்பாடு கண்டிப்பாக தெரியும்...
நம்பிக்கை...
நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல. எல்லா மனிதர்களும் அவர்களுடைய இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால், தெய்வ சக்தியின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து ஒருவன் செயல்படும்போது, அவனது திறமையின்மைகூட திறமையாக மாற்றப்பட்டுவிடும்.
- ஸ்ரீஅரவிந்தர்.
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும், மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.
- யாக்கோபு 1:27.
நிச்சயமாக அல்லாஹ் (இறைவன்) மனிதர்களுக்கு எந்தவித அநியாயமும் செய்யமாட்டான். எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றார்கள்.
- திருக்குர்ஆன் 10:44...
மோடியை கைது செய்யுங்கள்- ராகுல்காந்தி அதிரடி...
ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில், ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு மோடி உதவுவதாக கூறிய காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டைம் அனில் அம்பானி மறுத்து உள்ளார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், பாதுகாப்பு துறை அமைச்சருக்கும் தெரியாதபோது, அணில் அம்பானிக்கு 10 நாட்களுக்கு மென்பே எப்படி தெரிந்தது.
எனவே, ரகசிய காப்புச் சட்டத்தில் மோடியைக் கைது செய்ய வேண்டும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மேலும் ராகுல் காந்தி அளித்துள்ள பேட்டியில், ''ரஃபேல் போர் விமானம் குறித்து இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடக்கும் முன்பே, தொழிலதிபர் அனில் அம்பானி 10 நாட்களுக்கு முன்பே பிரான்ஸ் சென்று பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சரைச் சந்தித்துள்ளார். அவருக்கு இந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து இருக்கிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர், எச்ஏஎல், வெளியுறவுத்துறை செயலர் ஆகியோருக்கு தெரியும் முன்னதாகவும், இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் 10 நாட்களுக்கு முன்னதாகவும், எப்படி அனில் அம்பானிக்கு தெரியவந்தது? மேலும் இது தொடர்பாக ஏர்பஸ் அதிகாரி, பிரான்ஸ் அதிகாரிக்கு மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறார்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ரகசிய காப்புச் சட்டத்தை பிரதமர் மோடி மீறியுள்ளது உண்மையாகும். அவரை ரசகிய காப்புச் சட்டத்தை மீறிய வகையில் கைது செய்ய முடியும்'' என்று அந்த பேட்டியில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்...
குடம் புளியால் கிடு கிடுவென்று உடல் எடை குறையுமா?
குடம்புளி என்றொரு வஸ்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் பலருக்கும் தெரிந்திருக்காது என்பதும் உண்மை.
குடம்புளி அல்லது கோக்கம் புளி என்று தமிழிலும் மலபார் டாமரிண்ட் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் குடம்புளியின் அறிவியல் பெயர் கார்சீனியா கம்போஜியா.
இன்றளவில் உடல் எடை குறைப்பு விசயத்தில் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்யும் எடை குறைப்பு கேப்ஸ்யூல்களில் பெருமளவு பயன்படுத்தப் படுவது இந்த குடம்புளி தான்.
கார்சீனியா கம்போஜியா கேப்ஸ்யூல்கள் என்ற பெயரில் இவை விற்பனைக்கு வந்திருக்கின்றன.
குடம்புளி எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தக் குடம்புளி 2000 வருடங்களுக்கு முன்பு இந்தியச் சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப் பட்டு வந்தது.
நாம் இன்று பயன்படுத்தும் புளியின் வரலாறு வெறும் 300 வருடங்கள் தான்.
ஆனால் குடம்புளி அல்லது பழம்புளியின் வரலாறோ 2000 வருடங்களுக்கும் முற்பட்டது.
தற்போதைய சீமைப் புளி போலல்லாமல் இந்தக் குடம்புளியானது செடிகளில் விளைகிறது.
தட்டையான சதைப்பற்றுடன் கூடிய பூசணிக்காய் வடிவ குடம்புளி பழமானதும், பறிக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது.
காய்ந்த புளி பல வருடங்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
குடம்புளியில் இப்போது நாம் பயன்படுத்தும் புளி போல சுள்ளென்ற புளிப்புத் தன்மை இருப்பதில்லை, மாறாக புளிப்புத் தன்மையுடன் சற்றே தூக்கலாக துவர்ப்புச் சுவையும் இருக்கும்.
அதோடு இது பழநறுமணப் பொருள் வகைப்பாட்டில் வருவதால் இதைப் பயன்படுத்திச் சமையல் செய்யும் போது பதார்த்தங்களில் அதீத மணம் தெருமுனை வரை நீளும் என்பதும் உறுதி.
குடம்புளி விளையும் இடங்கள்...
இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் விளையும் இந்தக் குடம்புளி கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றது.
புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாக இப்போதும் கேரளாவில் அன்றாடச் சமையலில் பயன்படுத்தப்படுகின்றது.
இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது.
இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும்.
குடம்புளி எங்கே கிடைக்கும்.?
பொதுவாக நாட்டு மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த குடம்புளி தற்போது மக்களிடையே உணவு விசயத்தில் ஏற்பட்ட மனமாற்றம் மற்றும் விழிப்புணர்வின் பின் பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
கணிசமான மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சாதாரணப் புளியுடன் ஒப்பிடுகையில் விலை தான் சற்று அதிகம்.
நாம் வழக்கமாக தற்போது பயன்படுத்தும் புளி விலை கிலோ 100 ரூபாய் என்றால் குடம்புளியின் விலையோ அதை விட மும்மடங்கு அதிகமாக இருக்கிறது.
குடம்புளியின் பயன்...
குடம்புளி உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் உடல் எடை குறைப்பு விசயத்திலும் குடம்புளியின் பங்கானது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மை.
மனித மூளையின் பயனியல் கிளாட்டில் செரட்டோனின் உற்பத்தியைத் தூண்டி அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவும் குடம்புளி உதவுகிறது என சித்த மருத்துவர்கள் கருதுவதால் சித்த மருத்துவத்தில் குடம்புளி ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக இன்றளவிலும் நீடித்து வருகிறது.
குடம்புளியில் இருக்கும் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் மூளைநரம்புகளிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உதவக் கூடிய செரட்டோனின் செயல்பாட்டைத் தூண்டும்.
இதனால் பசி உணர்வு கட்டுப்படுத்த படுத்தப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்பு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நமது பமரபார்ந்த புளி குடம்புளி தான் என்றால் அது ஏன் இப்போது அதிகமாகப் புழக்கத்தில் இல்லை?
குடம்புளியைப் பொறுத்தவரை அதன் விளைச்சல் இந்தியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பரவலாகக் காணப் படுகிறது என்பதோடு அதன் விலையும் அதிகம் என்பதால் மூன்னூறு வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இப்போதைய புளி அதை ஓரங்கட்டி விட்டு இந்தியச் சமையலறைகளில் முதலிடம் பெற்றிருக்கலாம் என்பததை தாண்டி இதில் யோசிக்க தேவையான ஆதாரங்களென எதுவுமில்லை.
அதோடு நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாகக் கிடைக்கிறது எனும் குறிப்பை ஒட்டி யோசித்தால் அங்கே கிடைக்கக் கூடிய ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நம் அன்றாட வாழ்வில் மளிகைக் கடைகளில் சரளமாகக் கிடைப்பதில்லை என்பதோடு மிகச் சிறிய அளவில் மட்டுமே நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதாலும் அதற்கான தேவை குறைந்திருக்கலாம்.
இதெல்லாம் தமிழ்நாட்டில், ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் குடம்புளியில் தான் மீன் குழம்பு சமைத்து சாப்பிடுகிறார்கள்.
எப்போதுமே மரபார்ந்த விசயங்களைப் பின்பற்றுவதிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் முதலிடம் வகிக்கும் கேரளா இந்த விசயத்திலும் நம்மை முந்திக் கொண்டு முன்னுதாரணமாகி விட்டது.
எந்தெந்த சமையலில் குடம்புளி சேர்க்கலாம்?
காரக் குழம்பு, மீன் குழம்பு, ரசம், சாம்பார் என நாம் வழக்கமாகப் புளி சேர்த்து சமைக்கும் அத்தனை உணவுப் பொருட்களிலும் குடம் புளி சேர்த்து சமைக்கலாம்...
ஆன்மீக வாழ்வு...
காலகாலமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் தமக்கு பிரியமான வழியில் இறைவழிபாடு செய்து வருகின்றனர்.
இங்கு நான் உங்களுடன் பகிரவிருப்பது இந்து சமய தெய்வ வழிபாட்டு முறை பற்றி..
இந்து சமயம் பல நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது.
அவ்வப்போது அது தன் வீரியத்தை இழக்கும் போதும், வேற்று சமயத்தவரால் தொல்லைகள் வந்த போதும் அதனை எதிர்கொண்டு மீண்டு வந்த வண்ணம் இருக்கிறது.
மற்ற எந்த சமயத்தைக் காட்டிலும் பல்லாயிரம் ஞானியரை, சித்தமஹா புருஷர்களையும், இறை அவதாரங்களையும் காலந்தோறும் தொடர்ந்து தோற்று விக்கும் இறை கற்பகவிருட்சம் இந்து தர்மம்.
ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், ஞானியர் இவர்களே இறைவன் எனும் கடலில் சிறிதேனும் நீந்தியவர்கள் அந்த கடல் நீரை பருகியவர்கள்.
நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் அந்த கடலை தள்ளி நின்று வேடிக்கை பார்த்து ஆச்சர்யப்பட்டு நிற்பவர்கள்.
நமது ஞானப் பெருமக்கள் அவர்கள் கண்ட ஆன்மா அனுபவத்தை நாமும் காண வழிவகைகளைக் கூறிச் சென்றுள்ளார்கள்.
அதை வைராக்யத்துடன் தொடர்ந்து அப்யாசித்தால் நாமும் இறைவனை அடையலாம்.
ரிஷி என்ற வார்த்தையின் பொருள் மந்திர த்ரஷ்டா அதாவது மந்திரங்களை நேரில் கண்டவர்கள் என்று அர்த்தம்.
மந்திரங்கள் பிரபஞ்சத்தில் காலாகாலத்திற்கும் சாஸ்வதமாக இருப்பவை.
ரிஷிகளும் சித்தர்களும் தமது மனம் கடந்த நிலையில் இறைக் கருணையால் அதை உணர்ந்தவர்கள்.
எந்த மனிதனும் யாருக்கும் பணிந்து வாழ ஆசைப்படுவதில்லை அடிமையும் கூட..
அப்படியிருக்க நாம் சிறுவயது முதலே இறைவழிபாடு செய்து வருகிறோம்.
இத்தனை வருட பக்தியில் ஏதேனும் சொல்லிக் கொள்ளத்தக்க இறையனுபவம் நமக்கு உண்டா என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் வெட்கமின்றி சொல்வதானால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
வெறுமனே வேண்டுதல்கள் பலிப்பதும், செல்வமும் மட்டும் இறைவழிபாட்டின் பயன்களல்ல.
படைப்புகளில் எல்லா ஜீவராசியின் வாழ்க்கையும் ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்டது.
ஆனால் மனிதன் மட்டும் அதற்கு விதிவிலக்காக சிறிது அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டவன்.
ஏனென்றால் எந்த மரமும், விலங்கும், பறவையும் இன்ன பிறவும் விரும்பினால் வேறொன்றாக மாறச் சுதந்திரம் அற்றவை.
மனிதன் மட்டுமே நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், யோகி, ஞானி, மகான் என தான் விரும்பியபடி வாழவும், விரும்பிய யாவையும் முயற்சியால் அடையவும் வல்லவன்.
அந்த சாய்ஸ் உடன் படைக்கப்பட்ட நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம் கடவுளாய் கூட..
இன்று நாம் வழிபட்டு வரும் பல தெய்வங்கள் மனிதர்களாய்ப் பிறந்து பின் உயர்ந்த நிலை அடைந்தவர்கள் தான்..
அது குறித்து பின்னர் விரிவாய் காண்போம்...
உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர்...
சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில் திருவள்ளுவர் சிலை.
சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.
பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது, மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.
இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ…
லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி..
இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும்.
இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார்.
பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.
இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும்.
தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்...
வெங்காயத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?
வெங்காயத்தில் 50 மருத்துவ குணங்கள் உள்ளது..
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.
சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சம அளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்து விட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்...
திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 19 வயது வாலிபர், இறுதியில் நேர்ந்த கொடூரம்...
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் டிக்குவாபுடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜலு-முனிச்சன்ட்ரம்மாவின் மகன் வம்சி. 19 வயதான இவர் ஜே.சி.பி., ஆபரேட்டரான இவர் கடந்த வியாழக்கிழமை அருகில் இருக்கும் காட்டிற்கு சென்றுள்ளார்.
வெகுநேரமாக தேடியும் கிடைக்கவில்லை. அதன்பின் காட்டில் இருந்து ஒரு வித துர்நாற்றம் வீசியதால் உள்ளூர்வாசிகள் என்ன வென்று தேடிப்பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட நிலையில், உடல் பாகங்கள் ஒருவரின் உடல் இருந்துள்ளது.
அதன் அருகில் செல்போன் ஒன்று இருந்தது. அது வம்சி பயன்படுத்தும் செல்போன் என்பதால் அவர்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.
விரைந்து வந்த போலீசார் 5 மணி நேரம் தேடலுக்கு பின்னர் துண்டிக்கப்பட்டதலை கிடந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கிராமத்தில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது...
பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம்...
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன...
இதை மற்றவர்களும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அமெரிக்கா இதற்கும் பதிப்புரிமை (copyright) வாங்கி விடும்.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.
திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.
இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா?
மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விசயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.
கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.
கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன.
பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா?
முறையான பராமரிப்பற்ற காரனங்களுக்ககவே அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை. சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று?
இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்...
Subscribe to:
Posts (Atom)