23/10/2018

திமுக வின் சன் குழுமத்தின் ஆபாசத்தின் உச்சம்...


ரெஹானா பாணியில் தர்பூசணியால் மார்பை மறைக்கும் சொப்பனசுந்தரி.. சன் லைப்பில் ஆபாசத்தின் உச்சக்கட்டம்...

சன் லைப் தொலைக்காட்சி தற்போது புது பொலிவுடன் ஜொலிக்கிறது என்று பார்த்தால், அதில் வரக்கூடிய  நிகழ்சிகளும் மிகவும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சொப்பன சுந்தரி என்ற  நிகழ்ச்சியை  ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் உச்சக்கட்ட ஒரு காட்சி இடம்பெற்று உள்ளது. அதாவது மார்பகங்களை தர்பூசணி வைத்து மறைத்துக்கொண்டு காட்சி தருகிறார் போட்டியாளர் ஒருவர். மாடல் அழகிகளுக்கு மென்டராக நடிகைகள் பார்வதி நாயர், சாக்ஷி அகர்வால் பங்கேற்று உள்ளனர்.

சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உள்ள போட்டியாளர்கள் பழங்கள் மற்றும் உணவு பொருட்களை வைத்து தங்களால் எந்த அளவிற்கு அழகாக தோற்றமளிக்க முடியுமா அந்த அளவிற்கு  உச்சக்கட்டமாக செயல்பட்டு உள்ளனர்.

இதற்கு முன்பு கொச்சியை சேர்ந்த ரெகானா பாத்திமா என்ற பெண்ணியவாதி சபரிமலை செய்ய முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவரது பின்னணியை ஆராய்ந்த போது அவர் தர்பூசணி பழத்தை வைத்து தனது மார்பகத்தை மறைப்பது போன்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளது  தெரியவந்துள்ளது.

தற்போது அதனையும் மிஞ்சும் வகையில் உள்ளது இந்த சொப்பன சுந்தரி நிகழ்ச்சி உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்...

தீபாவளியன்று இரவு 8 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதி....



சேலம் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை வெட்டிக்கொலை செய்து தலையை சாலையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சாமிவேல். இவரது மகள் ராஜலட்சுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது தோட்டத்தின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் ரிக் வண்டி தொழிலாளி தினேஷ்குமார்.

சாமிவேல் வீட்டிற்கு அரை நிர்வாணத்துடன் வந்த தினேஷ்குமார், ராஜலட்சுமி  கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை வெட்டிக்கொலை செய்தார். பிறகு ராஜலட்சுமியின் தலையை துண்டித்து, அதை எடுத்துச் சென்று சாலையில் வீசியுள்ளார். இதனைதொடர்ந்து அங்கு வந்த தினேஷ் குமாரின் மனைவி சாரதா, அவரை அழைத்துச் சென்று ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் சரண் அடையச் செய்தார்.

கொலையாளி சைகோவாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே,  கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது இரண்டரை வயது மகன் செல்வதரனீஷை  தினேஷ்குமார் கழுத்து நெரித்து கொலை செய்ய முயன்றதும் தெரிய வந்தது...

நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ தடையில்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு...


2012 இல் சபரிமலை ஐயப்பனை பெண்களை அழைத்துசென்று தரிசனம் செய்த தொழிலதிபர் சுனில் சுவாமி...



தொழிலதிபர்களுக்கு மட்டும் விதிவிலக்கு போல...

திமுக ஆன்லைன் பத்திரிக்கையிலே சொல்லிட்டாங்களா..?


வறட்டு இருமல் குணமாக...


வறட்டு இருமல் என்றால் என்ன?

வறட்டு இருமல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது அதிகமாக குழந்தைகளை பாதிக்கிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று அதிக சத்தத்துடன் இருமுவார்கள். இருமும் பொழுது தொண்டையில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். குறிப்பாக படுத்தவுடன் இருமல் அதிகமாக ஏற்படும். தொண்டை கட்டினாற்போல் பேசுவார்கள்.

வறட்டு இருமல் வரக்காரணம்..

வறட்டு இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை. புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம். வறட்டு இருமலின் பெயருக்கு ஏற்றார் போல் இந்த வறட்டு இருமல் சளி இல்லாமல் நம்மை தாக்கும். இதன் மற்றொரு காரணமாக ஒவ்வாமை கூறப்படுகிறது. சிலருக்கு விலங்குகளின் முடியினாலும் வறட்டு இருமல் ஏற்படலாம். சினிமா தியேட்டரில் விற்கும் நாள்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் வறட்டு இருமல் வரும்.

வறட்டு இருமலை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு விரட்டலாம்..

வறட்டு இருமலுக்கு கொள்ளுப்பொடி, மிளகு, சுக்கு, பூண்டு கசாயம் மருந்து..

கொள்ளுப்பயிறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் மிளகு, சுக்கு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை இரண்டு நாட்கள், நாளுக்கு இரு வேளை குடித்தாலே போதும் வறட்டு இருமல் மட்டுமின்றி எந்த விதமான இருமலும் காணாமல் போகும்.

வறட்டு இருமல் குணமாக எலுமிச்சை, தேன் மருத்துவம்..

பொதுவாக இருமல் ஜலதோஷம் அதிகம் உள்ளவர்கள் விட்டமின் c அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரணம் விட்டமின் c சளி யை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. எலுமிச்சையில் விட்டமின் c அதிக அளவில் உள்ளது. இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எழுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் மற்றும் அதன் காரணமான சளியும் காணாமல் போகும்.

வறட்டு இருமல் குணமாக இஞ்சி, தேன் மருந்து..

அரை விரல் அளவிற்கு இஞ்சியை எடுத்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக உலர் திராட்சை மருந்து..

உலர் திராட்சை குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் ஓர் உணவு. 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிண்ட வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும். இதன் சுவையும் நன்றாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்திருந்தால் இந்த மருந்தை தாரளமாக கொடுக்கலாம்.

வறட்டு இருமலுக்கு புதினா மருந்து..

வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ சூப் செய்தோ சேர்த்துக்கொள்வதால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

வறட்டு இருமல் குணமாக மாதுளம், தேன், இஞ்சி மருந்து..

மாதுளம் பழத்தை தோல் இல்லாமல் மாதுளம் பழ முத்துக்களை மட்டும் எடுத்து பழசாறு ஆக்கி கொள்ள வேண்டும். மாதுளம் பழத்தின் முத்துக்களை மிக எளிமையாக எடுக்க, மாதுளம் பழத்தை சரி பாதியாக வெட்டி, பாதி மாதுளம் பழத்தை தலைகீழாக பிடித்துக்கொண்டு ஒரு கரண்டியை வைத்து வேகமாக தட்டினால் முத்துக்கள் தானாய் உதிர்ந்து விடும். மாதுளம் பழசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக திப்பிலி, தேன் மருந்து..

திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக வெங்காயம், சர்க்கரை மருந்து..

சின்ன வெங்காயம் 150 கிராம் எடுத்துக்கொண்டு அதனை நீர் விட்டு நன்கு அரைத்து சிறு துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்ச வேண்டும். இந்த பாகினை மூன்று வேளையும் பருகி வர வறட்டு இருமல் காணாமல் போகும்.

வறட்டு இருமல் குணமாக பால், மஞ்சள், மிளகு மருந்து..

நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அருந்தி வர வறட்டு இருமல் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். புகை பிடிப்பவர்கள் வாரம் ஒரு முறையேனும் இந்த மங்சள், மிளகு சேர்த்த பாலை அருந்த வேண்டும்.

வறட்டு இருமல் குணமாக பால், பனங்கற்கண்டு, மிளகு மருந்து..

நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மூன்று நாள் அருந்த வேண்டும். இப்படி செய்தால் வறட்டு இருமல் மட்டுமின்றி எப்பேர்பட்ட இருமலும் காணாமல் போகும்.

வறட்டு இருமல் குணமாக சீரகம், பனங்கற்கண்டு மருந்து..

10 கிராம் சீரகத்தை எடுத்துக்கொண்டு அதனை பொடி செய்து கொண்டு அதனுடன் சம அளவில் பனங்கற்கண்டை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதை காலை மாலை அரை ஸ்பூன் சாப்பிட்டு இளஞ்சூடான நீரை அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலை குணமாக்க இது மிகவும் எளிமையான முறை ஆகும்.

வறட்டு இருமல் சரியாக மிளகு மருந்து..

மிளகை நன்கு சிவப்பாக வறுத்து கொண்டு அந்த சட்டியில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் பாதி நீரை காலையிலும் மீதி நீரை மாலையிலும் அருந்தி வர வறட்டு இருமல் சரியாகும்.

வறட்டு இருமல் சரியாக தேன், பட்டை மருத்துவம்..

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை போக்க ஒரு ஸ்பூன் தேனுடன் பட்டையை பொடி செய்து ஒரு சிட்டிகை கலந்து கொடுக்க வேண்டும். இருமல் காணாமல் போகும்.

வறட்டு இருமல் குணமாக தேன், தூதுவளை மருந்து..

சளிக்கும் இருமலுக்கும் தூதுவளை மிக அருமையான மருந்து. தூதுவளை கொடியை நன்கு காய வைத்து பொடியாக்கி வைத்து கொள்ள வேண்டும். நாட்டு மருந்துக்கடைகளில் தூதுவளை பொடியாகவே கிடைக்கும். ஒரு சிட்டிகை தூதுவளை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்து வர வறட்டு இருமல் குணமாகும். இருமல் மட்டுமல்லாமல் சளியும் குணமாகும்...

நியூ கினியாவில் உள்ள காட்டுவாசிகள் தங்கள் வீடுகளில் கோராவார் என்று அழைக்கப்படும் ஒரு பொம்மையை வைத்திருக்கிறார்கள்...


இந்த மந்திர பொம்மை இறந்தவர்களுடன் பேச மீடியமாக பயன்படுகிறது...

அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் என்றால் என்ன?


கொடிவகை செடியான இதனை காணாதவர்களே இருக்க முடியாது.

இரண்டில் ஒரு வீட்டில் கண்டிப்பாக மணி பிளாண்ட் வளர்க்க தவறுவதில்லை.

அதனால் பல வீடுகளில் செழிப்பாக வளர்ந்த நிலையில் மணி பிளாண்ட்டை காண நேரிடலாம்.

அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது.

மணி பிளாண்ட்டை மலபார் செஸ்ட்நட் அல்லது சபா நட என்றும் அழைப்பார்கள்.

மணி பிளாண்ட்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது.

மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்க பல காரணங்கள் உள்ளது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது மணி பிளாண்ட்.

இது பண வளத்தை பெருகச் செய்து நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இருப்பினும் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வகையில் இதனை வீட்டிற்கு உள்ளேயும் வளர்க்கலாம்.

வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால் அதனைப் பற்றி நான் கூறப்போகும் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தும்.

மணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள்..

இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

1. வனப்பகுதியில் வளரும் மணி பிளாண்ட் 50-60 அடி உயர மரமாக வளரக் கூடும். இருப்பினும் ஒரு சின்ன தொட்டியில் வளர்க்கும் போது 10-15 அடி உயரத்தை தான் அதனால் எட்ட முடியும். மணி பிளாண்ட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில் இது முக்கியமான ஒன்றாகும்.

2. மணி பிளாண்ட்டின் ஒவ்வொரு கிளைகளிலும், 12 இன்ச் நீளம் வரை வளரக் கூடிய 5 இலைகள் இருக்கும். அவைகள் பளிச்சென்ற பச்சை நிறத்தில் பளபளவென இருக்கும்.

3. மணி பிளாண்ட்டில் உள்ள க்ரீமி வெண்ணிற பூக்கள் வீரியமிக்க வாசனையை பரப்புவதால், அவை தேனீக்கள், வௌவால்கள் மற்றும் பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும்.

4. இன்னொரு ஆச்சரியமான தகவல் - மணி பிளாண்ட்டில் விதைகள் இருப்பது. நமக்கு தெரிந்த வரை மணி பிளாண்ட்டை சுற்றி எந்த விதைகளையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் செடியின் விதைப்பையில் விதைகள் இருக்கும். இந்த விதைகள் மெதுவாக பெரிதாகி, பின் வெடித்து கீழே விழும்.

5. மணி பிளாண்ட் கிளைகளில் காணப்படும் 5 இலைகள் ஐந்து சின்னங்களை குறிக்கும். ஃபெங் சூய் சாஸ்திரப்படி, ஒரு கிளையில் காணப்படும் ஐந்து இலைகள் ஐந்து பொருட்களை குறிக்கிறது: உலோகம், கட்டை, நீர், நெருப்பு மற்றும் பூமி. இந்த ஐந்து சின்னங்கள் செடி வைத்திருப்பவருக்கு நல்ல வளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

6. மணி பிளாண்ட்டின் நற்பதமான இலையை உட்கொள்ள பயன்படுத்தலாம் என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயமே. அதன் கொழுந்து இலைகள் மற்றும் பூக்களை காய்கறியாக சமைக்கலாம் அல்லது வேறு பொருட்கள் சமைக்கும் போது இதனை சேர்த்து கொள்ளவும் செய்யலாம்.

7. மணி பிளாண்ட்டின் விதைகளையும் கூட உண்ணலாம். மணி பிளாண்ட்டின் விதைகள் கடலை பருப்பு சுவையை போல் இருக்குமாம். இந்த விதைகளை ரோஸ்ட் செய்து, நொறுக்குத் தீனியாகவும் சிலர் சாப்பிடுவார்கள்...

ஆரியம் - திராவிடம் - தலித்தியம் - கம்யூனிசம்...


இந்த நான்கும் 'மண்ணின் மைந்தர்கள்' என்ற கருத்தியலுக்கு எதிரானது சிந்தியுங்கள் புரியும்.

'தமிழர்' என்ற கருத்தியலுக்கு எதிரானவை என்று புரியும்.


அந்த அடிப்படையில் இந்த நான்கையும் நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், புறம்தள்ள வேண்டும் என்றும் புரியும்...

சிறப்புப் பஞ்ச கற்பம்...


பஞ்ச கற்பத்தைப் பற்றி பல வைத்தியர்கள் அளவு முறையில் மாற்றி பயன் படுத்தி வந்தாலும் சிததர்கள் அனைவரும் கடுக்காத்தோல், விதை நீக்கிய நெல்லி வத்தல், வெண்மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு..

ஆகியவற்றை சம அளவாகப் பயன்படுத்தச் சொல்லி இருக்கின்றனர்.

அதிலும் போகமாமுனிவர் எழுதிய போகர் 7000, என்ற நூலில் பஞ்சகல்பத்தை இரவில் கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஊற வைத்து மறுநாள் காவையில் பசுவின் பால் விட்டரைத்து தேய்த்து வெந்நீரில் குளிக்கும் படி சொல்லி இருக்கிறார்.

இம்முறையில் 15 நாட்களுக்கொருமுறை குளித்து வரச் சொல்லியிருந்தாலும்.

நோய்களுக்குத் தக்கவாறு தோல்சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாரத்தில் இரண்டு நாட்களும் எயிட்ஸ் நோயாளிக்கு தொடர்ந்து 48, நாட்களும் நோயில்லா மற்றவர்களுக்கு 15, நாட்களுக்கொருமுறையும் கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு தயாரித்து பயன்படுத்தும் பஞ்ச கல்பத்தினால் கபாலம் கெட்டியாகும்.

உரோமம் தும்பி போல் கருப்பாக வளரும் மழையில் நனைந்தாலும் குளிராது கண்பார்வை அதிகரிக்கும் உடம்பில் நச்சு நீர் வெளியேறும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.

நீண்ட நாட்கள் தலைவலி நீங்கிவிடும்.

சிறு வயதில் இருந்தே 15 நாட்களுக்கொரு முறை பயன்படுத்தி வந்தால் அவர்களக்கு 4448 வகையான நோய்கள் மற்றும் நரை திரை வராது என்றும் சித்தர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பாரம்பரிய வைத்தியங்களை கடைப்பிடித்து நோயின்றி வாழ்வோம்...

ஆங்கிலம் தமிழில் இருந்து வந்ததா.? ஆதாரம் இதோ....


W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி..

எடுத்துகாட்டுகள் :

Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலி
ருந்து வந்தது.

Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலி
ருந்துவந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது.

இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை, பின்
ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.

ஆதாரம் : உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள் -  ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு..

தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி.

உலக கலாச்சாரங்களின் தொட்டில்.

உலக நாகரீகங்களின் ஊற்று.

உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ்.

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations.

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம்..

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் )

600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும்..

உருளை = roll (கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை).

கற்குவியல் = Calculation ; calculatrice .

கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் ).

பொத்தல் ல இருந்து பொத்தான் = Button.

உலகில் உள்ள, இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது.

ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது.

ஆங்கிலத்தின் தாய் மொழியான.. லத்தீன், கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது.

லத்தீன், கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி..

2015 ஆய்வுகளின் படி...

( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ) - சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி.

- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி ).

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி..

சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி ..

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி, இயற்கையான மொழி ).

இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி

மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது.

கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .

அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது.

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து  1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் ..

1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும்.

" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .

700 வருடங்களுக்கு முன்பு மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை.

தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம்..

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது..

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை.

இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000..

தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள்..

கி. முன் 3000
கி.முன் 5000
கி. முன் 7000
நூலான தொல்காப்பியமும் உள்ளது..

தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும்..

கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான்..

மரத்தை கட்டுவதால் கட்டு மரம்.

இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம் " தான்..

ஆங்கிலம் பேசுவது பெருமை என நினைக்கும் தமிழர்களுக்கு உரக்கச் சொல்லுங்கள்...

தமிழர் யார் என்பதற்கான வரையறை...


கேள்வி: செம்மண், உவர் மண், களி மண் உண்டு. மாறாக 'தமிழ் மண்' என்று எங்கும் இருந்தது இல்லையே...?

இதே போல தமிழர் தேசம் என்றோ, தமிழர் என்றோ யாரும் எங்கும் இருந்தது இல்லையே...?

அப்படி என்றால், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள், எந்த அடிப்படையில் 'இன்னார் தான் தமிழர்' என்று வரையறை செய்கிறீர்கள்?

பதில்: தொழில் பிரிவுகளாகவே ஆதியில் சாதி என்கிற இனக் குழுக்கள் உருவாகின என்பதையும், இந்தியா முழுக்க முன்பு 'தமிழ்' என்ற மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டோர் ஆய்ந்து அறிந்து கூறியதற்கு இணங்க, அப்படி தமிழ் கூறும் மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு இனக்குழுக்களாகவே வரையறுக்கப்பட்டு உள்ளனர் என்பதும் உண்மை.

மாறாக மொழி மட்டுமோ, அல்லது பூகோள இடமோ ஒரு இனத்தை தீர்மானிக்காது.

இந்திய அரசியல் சட்டத்தில் ஒருவர் மதம் கூட மாற முடியும். ஆனால், சாதி விட்டு சாதி மாற முடியாது.

காரணம், பல ஆயிரம் வருடங்களாக இந்த இனக்குழு (என்கிற) சாதியானது, அத்துணை இறுக்கமான ஒரு இத்யாதி.

இவ்வாறு இனக்குழுக்களின் தொகுதியே ஒரு இனத்தை வரையறுக்கிறது.

இந்த அடிப்படையில் தமிழர் என்ற இனத்தை நான் இப்படி வரையறை செய்கிறேன்.

தாய் மொழியாக தமிழை கொண்ட, தமிழ் சாதியை சேர்ந்தவனே தமிழன் ஆவான்...

இப்படி துல்லியமாக வரையறுக்கா விட்டால், எதிர் காலத்தில் என்ன என்ன கேடுகள் விளையும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வு தான் கேரளாவில் இருந்து தமிழர்களை வெளியேற்ற நினைக்கும் அட்டப்பாடி பிரச்சனை..

குறிப்பு : இல்லாத இந்தியத்தை போலியாக உருவாக்க முடிந்தது என்றால்...

பல்லாயிரம் ஆண்டுகளாக வரலாறாக வாழும் தமிழினம் மீண்டும் தனக்கான தேசத்தை ஏன் உருவாக்க முடியாது.?

விசிக டூபாக்கூர் திருமாவளவன்...


திருமாவளவன் அவர்களிடம் பெண்களே சபரிமலை விஷயத்தில் போகக்கூடாது என்று போராட்டம் செய்கிறார்களே என்று நியூஸ் 7 ல் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில்....

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்து சட்ட மசோதா கொண்டுவந்தபோது அப்போதைய மூர்க்க இந்துத்துவவாதிகளான பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, வல்லபாய் பட்டேல் போன்றோர் எதிர்த்தனர். பெண்களை அணிதிரட்டி எதிர்த்தனர் - என்று பதில் சொல்லியிருக்கிறார்.

1948ல் இந்த மசோதா தாக்கலானது.

1915ல் கோபால கிருஷ்ண கோகலே மறைந்துவிட்டார்.

1920ல் பாலகங்காதரத் திலகர் மறைந்துவிட்டார்.

1915ல், 1920ல் மறைந்த தலைவர்கள் 1948ல் எப்படி அண்ணல் அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியும்?

வரலாற்றை யாரும் சரிபார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வாய்க்கு வந்தபடி பேசி தன்னுடைய மக்களை, தொண்டர்களை முட்டாளாக்குவது என்று முடிவெடுத்தபின் எப்படி பேசினால் என்ன....

ரத்த அழுத்தம் குறைக்கும் கொடம் புளி...


மலபார் புளி என்ற பெயரும் கொடம் புளிக்கு உண்டு. கொடம் புளியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

கொடம் புளி, கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும். தென் தமிழகத்தில், மீன் குழம்பு செய்யும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொடம் புளியைத்தான் பயன்படுத்துவார்கள்.

கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.

கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்து வந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கொடம்புளியை  ஒரு கப் தண்ணீர்  சேர்த்து,  மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக  அரைத்துக் கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்...

வயிற்று போக்கு உடனே நிறுத்த சித்தர் மருத்துவம்...


சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு...


பிஸ்தாவின் மருத்துவ பலன்கள்...

நட்ஸ்களில் மிக முக்கியமான ஒன்று பிஸ்தா, இதில் 30 வகையான வைட்டமின்கள், நார்ச்சத்துகள், நல்ல கொழுப்பு போன்ற ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன.

மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்றாகும்.

ஏனெனில் இதில் காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன்கள், கொழுப்புக்கள், நார்ச்சத்துக்கள், பீட்டா-கரோட்டீன், கால்சியம், வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் நியாசின் போன்றவை உள்ளதால் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வருவது உடலுக்கு நன்மையை தரக்கூடியது.

தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.

வெள்ளை ரொட்டியுடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியை தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள்.

ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

இதிலுள்ள வைட்டமின் பி6 இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது.

அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கண்களில் உள்ள திசுக்களுக்கு பாதுகாப்பு வழங்கி கண்களை பாதுகாக்கிறது...

அமைச்சர் ஜெயக்குமார் குழந்தை குடுத்தது இந்த பெண்ணிற்கு தான். பெயர் சிந்து...


தாய்லாந்தில் தமிழ்...


கீழ்க்காணும் படம் தாய்லாந்தில்
கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம்.

தாய்லாந்து (தாய்) மொழியில் தமிழ்
சொற்களின் வேர்கள்..

தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால்
ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ்
மொழியில் இருந்து பலச் சொற்கள்
தாய்லாந்து மொழிக்குத்
தருவிக்கப்பட்டன.

தாய்லாந்து மொழி தமிழ் மொழியின்
துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும்.

அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு...

1. தங்கம் -> தொங்கம்
2. கப்பல் -> கம்பன்
3. மாலை -> மாலே
4. கிராம்பு -> கிலாம்பு
5. கிண்டி -> கெண்டி
6. அப்பா -> பா
7. தாத்தா -> தா
8. அம்மா -> மே, தான்தா
9. பட்டணம் -> பட்டோம்
10. ஆசிரியர் -> ஆசான்
11. பாட்டன் -> பா, புட்டன்
12. திருப்பாவை -> திரிபவாய்
13. வீதி -> வீதி
14. மூக்கு -> சாமுக்
15. நெற்றி -> நெத்தர்
16. கை -> கை
17. கால் -> கா
18. பால் -> பன்
19. கங்கை -> கோங்கா
20. தொலைபேசி -> தொரசாப்
21. தொலைக்காட்சி -> தொரதாட்
22. குலம் -> குல்
23. நங்கை -> நங்
24. துவரை -> துவா
25. சிற்பம் -> சில்பா
26. நாழிகை -> நாளிகா
27. வானரம் -> வானரா
28. வேளை -> வேளா
29. மல்லி -> மல்லி
30. நெய் -> நெய்யி
31. கருணை -> கருணா
32. விநாடி -> விநாடி
33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்
34. கணம் -> கணா
35. விதி -> விதி
36. போய் -> பாய்
37. சந்திரன் -> சாந்
38. ரோகம் -> ரூகி
39. தூக்கு -> தூக்
40. மாங்காய் -> மாங்க்
41. மேகம் -> மேக்,மீக்
42. பிரான், -> எம்பிரான் பிரா
43. யோனி -> யூனி
44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு -> சான்க்
46. தானம் -> தார்ன்
47. பிரேதம் -> பிரீதி
48. நகரம் -> நகான்
49. பார்வை -> பார்வே
50. ஆதித்தன் -> ஆதித்
51. உலகம் -> லூகா
52. மரியாதை -> மார-யார்ட்
53. தாது -> தாட்
54. உலோகம் -> லூகா
55. குரோதம் -> குரோதீ
56. சாமி -> சாமி
57. பார்யாள் -> பார்ய
58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய...

உதவி கேட்டு வந்த பெண்ணை கர்பமாக்கிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்...


உலக வரலாற்றில் உருளைக்கிழங்கு ஏற்ப்படுத்திய தாக்கம்...


உருளைக்கிழங்கு ஒரு காலத்தில் மதிக்கப்படாத உணவு...

பன்றிக்கு தரும் முக்கிய உணவாக இது இருந்தது அதுவும் நோஞ்சான பன்றிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவாக இது இருந்துள்ளது..

உருளைக்கிழங்கை சாப்பிடுவது கேவலமான செயலாக இருந்த காலமும் உண்டு..

போர் காலகட்டத்தில் அடிமைகளுக்கு வழங்கப்படும் உணவாகவும் இருந்தது..

அவித்த உருளைக்கிழங்கு ஒரு துண்டு  பல கருப்பு இன ஏழைகளுக்கு அன்றாட உணவாகவும் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது..

இதற்கு காரணம் இத்தாலி போன்ற  மேலைநாட்டு பணக்காரர்கள் செய்த செயல் தான்..

பொதுவாக உருளைக்கிழங்கு என்பது மற்ற காய்கறிகள் போன்று அல்ல, உருளை கிழங்கு ஒரு வகையான பசியாற்றும் உணவு..

சோறுக்கு பதில் உருளைகிழங்கை மட்டுமே உண்டு வாழ்ந்த மக்களுக்கும் இருந்துள்ளனர்..

இந்த உருளைக்கிழங்கு வரலாற்றில் பயங்கர தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஆப்பிரிக்க பகுதியில் அடிக்கடி போர் நடப்பதால் அப்பகுதி மக்கள் பதுங்குகுழி களை அமைத்து அங்கே சிறிது சிறிதாக உருளைக்கிழங்கை தான் சேமித்து வைத்து இருந்துள்ளார்கள்..

காரணம் போர் முடிய மாதக்கணக்கில் கூட ஆகலாம் அதுவரை பதுங்குகுழி க்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்..

அந்த நேரத்தில் உருளைக்கிழங்கு தான் முழு நேர உணவாக உண்டு வந்துள்ளனர்..

மன்னர் காலத்தில் பஞ்சத்தை போக்க உருளை கிழங்கை பயிருடுவதையும் அதை ஊக்கப்படுத்தும் வகையில் பல மன்னர்கள் தங்களது தோட்டதில் உருளைகிழங்கை பயிருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் என்பதும் வரலாறு தான்..

Maria Antonia ப்ரான்ஸ் நாட்டின் இரானி என்றழைக்கப்படும் இந்த அரசி கூட உருளை கிழங்கின் பெருமதியை உணர்ந்து உருளைச் செடியின் பூவை மகுடமாக தலையில் வைத்து இருந்தால் என்றும் வரலாறு உள்ளது..

இந்த வரலாற்றை ஏன் கூறினேன் தெரியுமா?

சில பணக்காரர்கள்  சமீபத்திய பணக்கார உணவாகவுள்ள  (ப்ரெஞ் ஃபிரை) உருளைக்கிழங்கு பொறியல்  வாங்கி உதடு படாமல் சாப்பிடும் போது இந்த வரலாற்றை சொல்ல தூண்டியது..

ஃபிங்கர் சிப்ஸ் எனவும் ஃபரெஞ் ஃபிரை எனவும் விற்பனை செய்யும் பெரிய பெரிய சாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ள குளிர்சாதன அரங்கத்தில் உள்ள ப்ரெஞ் ஃபிரை புகைப்படங்கள் நம்மை அழைக்கிறது..

அவைகளுக்கு இந்த வரலாறு தெரியுமா?

இவைகள் பணக்காரன் சாப்பிடும் உணவு போன்றே ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது..

பெரு நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் ஒரு நாள் உணவாக ஒரு அவித்த உருளை கிழங்கும் ஒரு கோப்பை ஆட்டுப்பாலும் தான் பெரும்பாலான உணவாக இருந்துள்ளது என்ற தகவலும் உண்டு..

உங்கள் வீட்டில் இனி உருளைக்கிழங்கு கொண்டு வந்து வைத்தால் பல ஆயிரம் ஆண்டுகளுகளாக பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உணவாக இது இருந்துள்ளது என்ற மனதுடன் உண்ணுங்கள்..

ஆனால் ஒரு விஷயம் பாருங்கள் இப்படி உணவாக காலம் முழுவதும் உருளை கிழங்கு உண்ட மக்களுக்கு வாய்வு பிரச்சினை இருந்து இருக்க வேண்டுமே அதனால் இந்த உணவின் வீரியம் குறைந்திருக்க வேண்டுமே இதைப்பற்றி வரலாற்றில் எங்குமே குறிப்பு இல்லை...

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது நம்மிடம் எப்படி தொற்றிக் கொண்டது...

சிந்தியுங்கள் புலப்படும்...

டெங்கு காய்ச்சலின பாதிப்பால், சென்னையை சேர்ந்த தட்சன், தீக்ஷா ஆகிய இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு...


தமிழர்களுக்கு ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்தானதா?


அந்நியன் படத்துல ஒரு வசனம் வரும்.

தப்பு என்ன பனியன் சைஸா? மீடியம், லார்ஜ், எக்சல், டபுள் எக்சல்ன்ன்னு... அது போலத்தான் இந்த கேள்வியும் இருக்கு.

ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்துன்னு சொல்றதோ, தலித்தியத்தை விட ஆரியம் ஆபத்துன்னு சொல்றதோ, சரியான ஒப்பீடு கிடையாது.

ஆரியமும், திராவிடமும் சம விகிதத்தில் தமிழனுக்கு ஆபத்தானவை தான்.

ஆரியம், தமிழனின் தேசியத்தை வீழ்த்துகிறது.

தலித்தியம், தமிழனின் தெய்வீகத்தை வீழ்த்துகிறது.

ஆனால், ஆரியம் - திராவிடம் என்ற இந்த இரண்டிற்கும் இடையில் திராவிடத்தின் சூழ்ச்சியும் இருக்கின்றது என்பதை தமிழன் புரிந்து கொண்டு..

ஆரியம் - திராவிடம் - தலித்தியம் இந்த மூன்றையும் புறந்தள்ளும் காலம் வந்த பிறகு, தமிழன் உலகையே ஆள்வான்...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


எலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை...


சாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்து விடுகிறீர்களா?

அப்படியெனில், நீங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன. அகத்திக்கீரைக்கு அடுத்த படியாக கறிவேப்பிலையில் தான் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.

கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து - கொட்டைப்பாக்கு அளவாவது - சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடலில் பலவீனம் ஏற்படுவது குறையும். கண், பல் தொடர்பான நோய்கள் குணமாவதோடு, வயதான காலத்திலும் பார்வைத்திறன் மங்காமல் பிரகாசமாகத் தெரியும்.

துவையல் செய்ய நேரமில்லை என்பவர்கள், வெறுமனே கறிவேப்பிலையை மென்றே சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ் செய்தும் அருந்தலாம்.

கறிவேப்பிலையுடன் கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி சேர்த்து அரைத்து, பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து வடிகட்டி, எலுமிச்சைச்சாறு கலந்தால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி!

உடல் சூடு, அஜீரணம், வாய்வுக்கோளாறு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தால், கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து, அதில் நான்கில் ஒரு பங்கு சீரகம் சேர்த்து மையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவில் வாயில் போட்டு விழுங்கி வெந்நீரைக் குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

பன்றிக்காய்ச்சல், டெங்கு எனப் பல வடிவங்களில் காய்ச்சல் வந்து பயமுறுத்தும் இந்த நேரத்தில் சாதாரணக் காய்ச்சலோ, விஷக்காய்ச்சலோ - எது வந்தாலும் கறிவேப்பிலைச் சாறு நிவாரணம் தரும். ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், அதில் பாதி மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் வெந்நீர்விட்டு மையாக அரைக்க வேண்டும். அதை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்து அரை டேபிள்ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். மீதியுள்ள மருந்தை இதேபோல மாலையில் சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் வெந்நீர் குடிக்கலாம். இதை மூன்று நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் முழுமையாகக் குணமாகும்.

மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கு மையாக அரைத்த கறிவேப்பிலையுடன் பாதியளவு எலுமிச்சைப்பழத்தைச் சாறு பிழிந்து கலந்து, சாதத்துடன் சேர்த்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும். இதைப் பகல், இரவு எனச் சாப்பிட வேண்டியது அவசியம்.

கோடைக் காலத்தில் சிலருக்கு கண் இமைகளின்மேல் கட்டிகள் வரும். அப்போது, கறிவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து வெண்சங்கைச் சேர்த்து உரைத்து பற்றுப் போட்டு வந்தால், கட்டிகள் பழுத்து உடையும். கட்டிகள் உடைந்தபிறகும் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் புண்களும் ஆறிவிடும்...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


கன்னியாஸ்திரி உடையணிந்து ஷாப்பிங் வந்த வேற்றுகிரகவாசிகள்.. பால் ஹெல்யர் ஷாக்...


வேற்று கிரகவாசிகள் பூமிக்கு ஏற்கனவே வந்துவிட்டதாக கனடாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பால் ஹெல்யர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பால் ஹெல்யர், பல ஆயிரம் ஆண்டுகளாக நான்கு வகைக்கும் மேலான வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

வேற்று கிரகவாசிகள் குறித்து கடந்த பல வருடங்களாக கருத்தரங்குகளில் பேசி வருகிறேன். ஒருமுறை எனது மனைவி மற்றும் நண்பர்களுடன் வேற்று கிரகவாசிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து வேற்றுகிரகவாசிகள் குறித்து நம்புகிறேன்.

இதுவரை நான்கிலிருந்து 8 வகைக்கும் மேலான வேற்றுகிரகவாசிகள் பூமிக்கான வழியை கண்டு பிடித்துள்ளனர்.

அதில் 4 வகையான வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வந்து சென்றுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது.

மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் அணுகுண்டை பார்த்து தான் வேற்று கிரகவாசிகள் மிகவும் வருந்துகிறார்கள்.

அணுகுண்டுகளில் பயன்பாட்டால் அண்டசராசரத்தில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் அதனை அவர்கள் வெறுக்கிறார்கள்.

வேற்றுகிரகவாசிகளிடம் பூமியை பசுமையாக்கும் பல யோசனைகள் உள்ளன. அவர்கள் நினைத்தால் பருவநிலை மாற்றங்களுக்கு நிரந்திர தீர்வு காண முடியும் என கூறியுள்ளார்.

இவ்வாறு பல அதிர்ச்சிகரமான செய்திகளை தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த அவர், சில வகையான வேற்று கிரகவாசிகள் மனிதர்களைப் போல தோற்றம் அளிப்பதாகவும், சில வேற்று கிரகவாசி பெண்கள் அமெரிக்காவின் வெகஸ் நகரில் கன்னியாஸ்திரிகளைப் போல உடையணிந்து ஷாப்பிங்கும் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வாதங்களுக்கு தேவையான ஆதாரங்கள் தன்னிடமில்லை என்று கூறும் பால் ஹெல்யர், அவற்றை நான் நேரில் பார்த்துள்ளது மட்டும் தான் என் ஆதாரம். நான் தான் ஆதாரம் என்றும் கூறியுள்ளார்.

பால் ஹெல்யரின் வார்த்தைகளை சிலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே சமயம் அவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்பதோடு, பறக்கும் தட்டுகள் குறித்து பல ஆராய்ச்சிகளை நடத்திய விமானப் பொறியாளர் என்பதால் பால்ஹெல்யர் கூறுவதை வேதவாக்காக நம்பி வருகின்றனர்...

பாஜக மோடிக்கு மாமா வேலை பார்க்கும் ஊடகங்கள்...


நான் ஏன் பாமக வை ஆதரிக்கிறேன்..?


பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருந்தாலும்...

1992ல் அக்கட்சி நடத்திய "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" பாட்டாளி மக்கள் கட்சியின் பலத்தையும், உணர்வையும் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

1992 என்பது, ராஜீவ் மரணத்துக்கு மறு ஆண்டு. அப்போது "தடா" என்ற கடுமையான ஆள் தூக்கிச் சட்டம் அமலில் இருந்தது.

விடுதலைப் புலிகள், பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே, தடா சட்டம் பாயும் என்பதான ஒரு சூழல் அது.

அந்தச் சூழலில், பிரபாகரன் படங்களையும், புலிக் கொடிகளையும் ஏந்தி, பெரியார் திடலில், "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" நடை பெற்றது.

மிகப் பெரும் பலத்தோடு அப்போது ஆட்சியில் இருந்து, காவல்துறையை வைத்து, நீதிபதியின் மருமகன் மேல் எல்லாம் கஞ்சா வழக்கு போடும் நிலையில் செல்வி.ஜெயலலிதா இருந்தார்.

இருந்த போதும், பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இந்த மாநாடு, ஜெயலலிதாவை திகைக்க வைத்தது.

ஜெயலலிதா, இவரைப் பார்த்து உண்மையிலேயே அஞ்சினார் என்பதுதான் உண்மை.

பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை தடா சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்த ஜெயலலிதா,  பாமக வை  நெருங்க முடியவில்லை...

"தடா" சட்டத்தை எதிர்த்து, அடக்குமுறை சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை மருத்துவர் ராமதாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து தொடங்கி, தமிழகம் முழுக்க, தடா சட்டத்தை எதிர்த்து இயக்கங்களை நடத்தினார்.

தற்போது புதிதாக உணர்வு வந்து தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருப்பவர்கள் பலர் அப்போது திமுக - அதிமுக க்கு ஆதரவாக இருந்தவர்கள் தான்...

600 கோடி மோசடி செய்த சிவசங்கரனை வெளிநாட்டிற்கு வழி அனுப்பி வைத்த பாஜக வின் சிபிஐ...


பாரத நாடு பழந்தமிழர் நாடு.. இமயம் வரை ஆட்சிப் பரப்பை வைத்திருந்தவர்கள் தமிழர்...



இந்தியாவிற்கு என்று ஒரு அடையாளம் உண்டென்றால் அது தமிழர் எனும் பூர்வ குடிகளால் மட்டும் தான்...

பாஜக மோடியின் நண்பன் நிறுவனமான பதஞ்சலிக்கு கத்தாரில் தடை...


தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை பிரதமரிடம் இந்தியா வலியுறுத்தாதது ஏன்? - பாமக அறிக்கை...


இந்தியாவிற்கு 3 நாட்கள் அரசு முறை பயணமாக வந்து சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தியுள்ளார். எனினும், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்து இலங்கைப் பிரதமரிடம் இந்தியத் தரப்பில் எந்த அழுத்தமும் அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சிங்களக் கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தலா 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன். இதைத் தொடர்ந்து மேலும் பல கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார்.

இத்தகைய சூழலில் தில்லியில் நேற்று நடைபெற்ற இந்திய, இலங்கை பிரதமர்கள் இடையிலான சந்திப்பில், இலங்கை சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்த பேச்சுக்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த சந்திப்பு தொடர்பாக  வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. இந்தியா, இலங்கை இடையிலான பேச்சுக்களின் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயமே  மீனவர் பிரச்சினை தான். ஆனால், அது குறித்து பேசப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்ததும், அவர்களுக்கு தலா ரூ.60 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டதும் இரு தரப்பு உடன்பாடுகளை மீறிய செயலாகும். மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக டெல்லியில் கடந்த 22.01.2013 அன்று அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்திய&இலங்கை கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில்,‘‘எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது எத்தகைய சூழலிலும் பலப்பிரயோகம் செய்யக்கூடாது. மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் போக்கு தொடர வேண்டும்’’ என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 18.01.2015 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசிய போது, இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விஷயத்தில் மனிதநேய அணுகுமுறை தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது தமிழக மீனவர்களுக்கு, தலா 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை மத்திய அரசு தான் முதலில் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அதை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாததைப் பார்க்கும் போது, தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய குடிமக்களாகவே மத்திய அரசு கருதவில்லையோ? என்ற ஐயம் தான் எழுகிறது.

கடந்த காலங்களில் இலங்கை அதிபரோ, பிரதமரோ இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் போது இரு நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், இம்முறை இலங்கை பிரதமர் விக்கிரமசிங்கே இந்தியா வந்த போது, நல்லெண்ண அடிப்படையில் எந்த மீனவரும் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால், இவை எதையுமே மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற உண்மை கசக்கிறது; தமிழக மீனவர்கள்  விவகாரத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது.

இலங்கை அரசின் அத்துமீறலில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து இலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்...


1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய் போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்...

விக்ஸ் ஆஸ்சன் 500 மாந்திரை உண்மைகள்...


ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் கட்டணம் ஆன்-லைன் மூலம் செலுத்தலாம்...


ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கான கட்டணம் முழுவதுமாக விண்ணப்ப தாரர்கள் தங்கள் இருப்பிடத்தி லிருந்தே செலுத்தும் வசதி அக். 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அக்டோபர் 1 முதல் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளுக்கான (பழுகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல்) கட்டணம் முழுவதுமாக விண்ணப்ப தாரர்கள் தங்கள் இருப்பிடத்தி லிருந்து செயல்படுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் நேரடியாக parivahan.gov.in/sarathiservicecov6/sarathiHomePublic.do என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைனில் மூலம் செலுத்தி பயன் பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மனுவை பூர்த்தி செய்த பிறகு அதற்கான கட்டணத்தை வங்கி இணைய சேவை மூலமாகவோ, டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு மூலமாகவோ, இணையதளம் மூலமாக ரசீதை உருவாக்கி அதை அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு சென்று பணமாகவோ செலுத்தலாம்.

செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டை அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்று தகுந்த சோதனையில் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்து உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அலுவலக த்துக்கு வந்து பணம் செலுத்துவதால் ஏற்படும் காலவிரயமும், பொதுமக்கள் அலுவலகங்களில் காத்திருப்பதும் குறைக்கப்படுகிறது.
மேலும், விண்ணப்பதாரர்கள் இருப்பிடத்திலிருந்தே மனு செய்வதோடு, 24 மணி நேரமும் வங்கி வழியாக பணம் செலுத்தி பயன்பெறலாம்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணிகள் அனைத்தும் படிப்படியாக ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்யவும், மற்ற சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

விதைக்கும் கருத்தியிலை கடந்து செல்லாமல் புரிந்துக் கொண்டு பகிர்ந்து விட்டு செல்லுங்கள்...


இதையும் நகைப்பவர்கள் இருக்கக்கூடும் அவர்களை பற்றி சிந்திக்க எங்களுக்கு நேரமில்லை...

சித்தர் ஆவது எப்படி - 19...


பிறவி தாண்டிய அனுபவத்திற்கு சுவாச ஒழுங்கு மட்டுமே...

பிறவி தாண்டிய நிலை என்பது என்ன ?

மனிதன் பிறக்கும் சமயத்தில் பிரபஞ்சத்தின் பூரண ஆசியோடு குழந்தையாக இருக்கும் சமயம் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற விதியில் அவன் தெய்வநிலைக்கு நிகராக இருக்கிறான்..

பின் உலகியல் பல்வேறு தொடர்பால் ஒழுங்கின்மை என்ற நோய் கவ்வி, தெய்வ நிலையிலிருந்து தேய்ந்து தேய்ந்து ஒய்ந்து போய் பின் செயல் இழந்த நிலையான மரணத்தை தழுவுகின்றான்...

மரணம் என்பது எந்த செயலும் அற்ற ஒரு அமைதி நிலை.. அமைதி என்பது ஒரு ஒழுங்கு நிலை.. அந்த ஒழுங்கு நிலையில் ஒழுங்கு தன்மை வாய்ந்த பிரபஞ்ச ஆற்றல் இசைந்து கொள்கிறது..

இப்படி இசைந்து கொள்வதை தான் Law of attraction என்ற தலைப்பில் மேலை நாட்டில் பல கோணங்களில் கருத்துக்கள் எழுந்து உள்ளன..

ஒரு மனிதன் அமைதி என்ற ஒழுங்கு தன்மைக்கு செல்லும் போது அதற்கு ஒத்த ஒன்று அதோடு இணையும் செய்கையை இசைதல் எனப்படுகிறது..

மரணத்திற்கு பின் மட்டுமே இந்த பிரபஞ்ச ஆற்றலின் இசைதல் செயல் பாடு நடக்கிறது...

ஆனால் அந்த இசைதலில் அனுபவ பட தேகமும் மனமும் இல்லையாதலால் அந்த இசைதல் என்ற செயல் பாட்டின் அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவ பட முடியாமேலே போய் விடுகிறது..

ஆகவே மிக முக்கியமான அந்த அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவப் பட தேகத்தில் உயிர் உள்ள போதே அந்த பேரமைதி என்ற எந்த செயலும் அற்ற அந்த தோன்றா நிலையை நாம் அனுபவப் படுகின்ற போது, அந்த பிரபஞ்ச ஆற்றல் நம்மோடு இசைய தொடங்கி அதன் ஆற்றலின் வரவு வர தொடங்குகிறது.... அதனால் அளவற்ற ஆற்றலை பெற தொடங்குகிறோம்....

இந்த இசைதல் என்ற Law of attraction மூலம் பிர பஞ்ச சக்தியை பெற மரணத்தை ஒத்த அந்த தோன்றா நிலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஆகிறது...

அந்த தோன்றா நிலை என்பது ஒரு அனுபவம்.. அதுவே பிறவி தாண்டிய அனுபவநிலை.. பிறவி தாண்டிய நிலை என்பது மரணத்தை மட்டுமே குறிக்கும்..

பிறவி தாண்டிய அனுபவநிலை என்பது தோன்றா நிலை அனுபவத்தைக் குறிப்பது... இதன் மூலம் பிறவி தாண்டிய நிலையான மரணத்திற்கும், பிறவி தாண்டிய அனுபவ நிலையான தோன்றா நிலை அனுபவத்திற்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம் நமக்கு தெரிய வேண்டும்...

பல் வேறு ஒழுங்கின்மை காரணத்தால் பிறவி தாண்டிய நிலையான மரணத்தையே தழுவி தழுவி எண்ணிக்கை இல்லா பிறவிகளை அடைகின்றோம்...

ஆனால் பிறவி தாண்டிய அனுபவ நிலையை அடைகின்ற போது அங்கே பிரபஞ்ச ஆற்றல் தொடர்பால் நாம் மரணத்தை வெல்லுகின்றோம்...

இதை நாம் உற்று கவனித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும்..

வலுவான பஞ்ச பூதங்களோடு நாம் பிறவி தாண்டிய அனுபவநிலையான தோன்றா நிலைக்கு செல்லும் போது, பிரபஞ்ச ஆற்றலின் பெரும் வரவால் பஞ்ச பூதங்கள் மேலும் மேலும் வலுவடைந்து, மரணம் என்பது தொலைந்து போய் விடுகிறது..

பஞ்சபூதங்களில் ஒன்றான அறிவும் பலப் படுவதால், மரணத்தை வெல்லும் உபாயத்தையும் அறிவு, அறிந்து கொள்கிறது..

அமைதியின் மறு பக்கம் ஒழுங்கு.. பிரபஞ்சம் என்பது பேர் ஒழுங்கு.. ஒழுங்கோடு ஒழுங்கு இணைவதையே இசைதல் என்பதாகும்..

பஞ்ச பூதங்களிலே அமைதியற்ற மனம் அமைதியுடன் இருக்கும் போது, மனம் சுத்த மனம் என்ற ஒழுங்கு தன்மை அடையும் போது, சுத்த மனத்தால், இசைவதால் இணைகின்ற பிரபஞ்ச ஆற்றலால், பஞ்ச பூதங்களும் வலு பெற தொடங்குகின்றன...

இந்த ஒழுங்கு என்ற நிலையை வேறு எந்த வழிகளிலும் உபாயங்கள் மூலமாக நாம் கற்று அடைவதைக் காட்டிலும் ஜீவ சக்தியால் இயல்பாக நடக்கின்ற சுவாசத்தில் நாம் அந்த ஒழுங்கு முறையை மிக மிக விரைவாக கற்று அதுவாகவே ஆகி அமைதி நிலைக்கு விரைவாக செல்ல முடிவதால், அதன் மூலம் பிரபஞ்ச பேராற்றலை பெற முடிவதால், சுவாச ஒழுங்கு என்ற நிலை பாட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது..

ஆனாலும் ஜென்ம ஜென்மமாக ஒழுங்கின்மையில் வாழ்ந்த மனித குலம் தான் வாழும் காலத்தில் தன் ஜீவ ஆற்றலாக விளங்கும் சுவாசத்தில் ஒழுங்கு தன்மையோடு இருக்க மிகவும் சிரமப் படுகிறது...

எல்லா சவால்களையும் சந்திக்கும் மனம் இந்த சுவாச ஒழுங்கிற்கான சவால்களை சந்திக்க முடியாமல் இருப்பதற்கு காரணம், இந்த சுவாச ஒழுங்கு என்பது பயிற்சி அல்ல என்பதாலும் அது ஜீவ ஆற்றலின் ஒழுங்கு நிலை எனபதாலும் அதற்கு மனம் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாது.. அது உதவி செய்வதாக இருந்தால் இடைஞ்சலாகத் தான் இருக்கும்...

ஆகவே மனம் சுத்த மனம் ஆகும் வரை ஒழுங்கற்ற சாதாரண மனம் சுவாச ஒழுங்கிற்கு ஒத்து வராது..

இந்த நிலையில் ஒழுங்கின்மையை அடையாளம் காட்டி மனதை ஆதிக்க செலுத்தி மீண்டும் ஒழுங்கிற்கு வரும் போது, மனதை வெல்லும் புத்தி செயல் பட தொடங்குகிறது..

இந்த சுவாச ஒழுங்கின் எளிமையான நிலைப் பாட்டில் மிக பெரிய ஆன்மா இலாபம் என்னவென்றால் புத்தி பலப் படுவதற்கான ஒரு சீரான வலுவான அளவற்ற சந்தர்ப்பங்கள் கிடைகின்றன..

வேறு எந்த பயிற்சியிலே இது போன்ற மேன்மையான புத்தியை பலப் படுத்துவதற்கான வழி முறைகள் இல்லை.. இல்லவே இல்லை என்று உறுதியாக சொல்லலாம்...

ஆகவே சேரும் நிலை அறிந்து சேர்ந்து சித்தராக முனைவோமாக...

நமக்கு தாகம் எப்படி எடுக்கிறது?


இரத்தத்தில் நீரும் உப்பும் இருக்கின்றன..

இவை ஒரே சீரான அளவில் இருக்கும் போது நமக்கு தாகம் எடுப்பதில்லை..

இவற்றின் அளவு குறையும்போது தான் தாகம் எடுக்கிறது..

உதாரணமாக வெயிலில் நடந்து வரும்போது உடலிலுள்ள வியர்வை அதிகமாக வெளியேறுகிறது..

இதனால் இரத்தத்திலுள்ள உப்பின் அளவு குறைகிறது..

இந்த அவசர நிலையை மூளையிலுள்ள தாக மையம் தொண்டைக்கு செய்தியாக அனுப்புகிறது..

அப்போது தொண்டையில் சுருக்கம் ஏற்படுகிறது..

உடனே தொண்டை உலர்ந்து தாகம் எடுக்கிறது...

தமிழினமே விழித்தெழு...


ஒவ்வொரு சிக்கலையும் ஒரு சாதிச் சண்டையாக வளர்த்தெடுக்கும் போக்கு வந்தேறிகளின் அடிப்படையான அரசியல் வியூகத்தைச் சுட்டி நிற்கின்றன...

வந்தேறிகள் தமிழர்களை ஆள வேண்டுமானால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது என்பது அவர்கள் கற்ற பால பாடம்..

சாதி பேதங்களோ, தீண்டாமையோ இல்லாதிருந்த தமிழகத்தில் இவற்றை உருவாக்கி வளர்த்தவர்கள் தமிழகத்தைக் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஆண்ட வந்தேறி சமூகங்கள் தான் என்பதையும் நாம் உணர வேண்டும்...

தமிழில் பேர் வையுங்கடா...


நெல்லிக்காயில் என்ன உள்ளது?


நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது.

நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம்.

100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன.

மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும்.

நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும்.

நெல்லியை காய வைத்தாலும் அதிலுள்ள விட்டமின் சி சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது, இந்த சக்தி அதிகரிக்கிறது.

ஆன்டி ஆக்சிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது.

இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது.

பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு.

ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

இருதய வால்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது.

கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

ரத்தக்கொதிப்பா?

நெல்லி வற்றல், பச்சை பயிறு, வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு, 200 மி.லிட்டராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்...

வெகுசன மக்களை ஒருபோதும் ஊடகங்களில் காட்ட மாட்டார்கள்...


வெகுசன மக்களின் கேள்விகளுக்கு இங்கு இருக்கும் எந்த அரசியல்வியாதிகளிடமும் பதில் இல்லை...

விடுதலை புலிகள் ஆதரவு - தனித் தமிழ்நாடு - ராஜீவ் கொலைக்குப் பாராட்டு - 1992ல் பாமக இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்...



பாமக நிறுவனர் உயர்திரு. மருத்துவர் இராமதாசு அவர்கள்...

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்..

புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்..

தனித் தமிழ்நாடு பற்றியும்..

இனப்பற்றுடன் வெளிப்படையாகப் அன்று பேசிய போது ( அன்றே பாமக தமிழ் தேசியத்திற்கான போராட்டத்தை தொடங்கி விட்டது ) அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை..

ஏடு: செங்கோல்  நாள்: 20.09.1992.

தலைப்பு: ராஜீவைக் கொன்றவன் என் தோழன், தமிழகப் பிரிவினையும் கோருவோம் பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்..

குறிப்பு : இன்று தமிழ் தேசியம் பேசுகின்ற பலர்.. அன்று திராவிடத்திற்கு கூஜா தூக்கிட்டு தமிழ் தேசியத்தை ஆதரிக்காதவர்கள் தான்...

கார்ப்பரேட் தண்ணீராக மாறிப்போன கோவை குடிநீர்..


பொலிவியா நாட்டில் சுயஸ் நிறுவனத்திற்கு நடந்தது என்ன?

தற்போது பொலிவியா (Boliva) நாட்டில் கொச்சபம்மா (Cochabamba) நகரில் நடந்த சம்பவத்தை பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள். 1997 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை முதலில் சிமாபா (SEMAPA) என்னும் அரசு கம்பனிக்கும் பின் இதே சுயஸ் (SUEZ) என்னும் தனியார் நிறுவனத்திற்க்கு வழங்கியது. கார்டை சொருகினால் தண்ணீர். கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் தண்ணீர் கொடுப்பார்கள். பணம் இல்லை என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.

இந்நிலையில், மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த துவங்கினார்கள். இதை பொருத்துக்கொள்ள முடியாத தனியார் நிறுவனம். ஆற்று வழிப்பாதை அமைப்பதாக கூறி அங்கு தனியார் இரானுவத்தை நிறுத்தி மக்கள் ஆற்றில் நீர் எடுப்பதை தடுத்தார்கள்.

(இந்நேரம் ஜக்கியின் Rally for River ஐ உங்களுக்கு ஞாபகப்படுத்த விருப்புகிறேன்).

சரி ஆற்றில் தான் தண்ணீர் எடுக்க முடியாது. தன் வீட்டு கிணற்றில், ஆழ்துளை கிணற்றில் (Bore well) தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார்கள். அதையும் தடுத்து அதற்கு கட்டணம் வசூலித்தார்கள். வெறுத்துப் போன மக்கள், சரி மழை நீரையாவது பயன்படுத்துவோம் என மழை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கினார்கள். ஆத்திரமடைந்த சூயஸ் நிறுவனம் மழை நீரை பயன்படுத்த கூடாது என்று அதற்கும் சரமாரியாக கட்டணம் வசூலித்து. மழை நீரை கூட விட்டு வைக்கா பாவிகள் என Even The Rain என்று இச்சம்பவம் ஒரு படமாக உருவானது.

வெகுண்டெழுந்த மக்கள் போர் களத்தில் குதித்தனர். உள்நாட்டு போர் வெடித்தது. மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடி அந்நிறுவனத்தை நாட்டை விட்டே அடித்து விரட்டினர்...

சித்தராவது எப்படி - 18...


அந்த மாவீரன் ஒரு மகா கோழையே...

இந்த பிறவியில் இருக்கும் துயரங்களை போக்குவதற்கு துயரங்களின் துன்பங்களின் தொடர்புகளை வகுத்து வகுத்து வைத்து இன்னும் அடைய கூடிய எதிர் கால துன்பங்களையும் பட்டியல் இட்டு ஒரு மனிதனை பயமுறுத்தி, குழப்பத்தினை உருவாக்கும் உலகத்தின் போக்கால் மனித குலம் அடையும் துயரங்களுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது..

எல்லாம் கடந்து போகும் என்ற நிலையான சத்தியத்தை முன் வைத்து தகுந்த விளக்கம் கொடுக்கும் மேதாவிகள் யாரும் இல்லை..

நோயை உருவாக்கி பிழைப்பை நடத்தும் பொய்யான மருத்துவனை போல் இன்று துயரம் என்ற பொய்யான மாயையான நோயை உருவாக்கி அதை தீர்ப்பது போல் பாவனை செய்பவர்களே பலர் இருக்கிறார்கள்..

ஒழுங்கின்மையே நோய் என்றும் அதை தீர்க்க ஒழுங்கு என்ற மாமருந்து ஒன்றே ஒன்று தான் உண்டு என்பதை அறிந்து இருந்தும் மறைத்து விட்டார்கள்.. அல்லது மறந்து விட்டார்கள்...

நோய்களை உருவாக்கும் சுவாச ஒழுங்கின்மையை சுவாச ஒழுங்கு என்ற மாமருந்து சீர் படுத்தும், என்ற அடிப்படையான மிக எளிமையான உண்மையை ஏற்றுக் கொள்பவர்கள், ஏற்றுக்கொண்டபின் அதை நடைமுறை படுத்துபவர்கள் எவரேனும் உண்டா என்றால் கேள்வி குறியாக உள்ளது...

ஒழுங்கின்மையிலே பழகி பழகி போய் விட்ட நிலையில் கிணற்று நீரின் அடியில் ஒரு மணி நேரம் மூச்சை அடக்கி பயிலும் ஒரு யோகி என்று சொல்லக் கூடியவரை தனது இயல்பாக ஓடும் சுவாசத்தில் சுவாச ஒழுங்கோடு இருக்கச் சொன்னால் அவரால் 2 நிமிடம் கூட இருக்க முடியாமல் இருப்பது மிகவும் வியப்பான விசயமாகும்..

இந்த கோணத்தில் பார்க்கையில் எல்லா சாதனைகளும் ஒழுகின்மையின் அடிபடையில் அமைக்கப் பட்டதால் அவற்றில் எந்த விசேசமும் இல்லை..

பிரபலமான நடிகர்கள் தங்களின் இயல்பான நிலையை விட்டு ஏதோ கற்பனை பாத்திரத்தின் ஒழுங்கின்மை என்ற நடிப்பில் பேரும் புகழும் அடைவது என்பது சமுதாயத்தின் ஒழுங்கின்மைக்கு ஏற்றால் போல் இருப்பதாலே இது சாத்தியமாகிறது..

அப்படியே உலக சாதனைகளை படைத்த அனைத்து பிரபலங்களும் ஒழுங்கின்மையின் உச்சத்திற்கு சென்றவர்கள்..

உதாரணமாக மாவீரன் என்று போற்றப்படும் அலெக்சாண்டர் பல ஆயிரம் உயிர்களை கொன்ற ஒரு உச்சக் கட்ட ஒழுங்கின்மையின் பூரண அடையாளம்.. அவன் பல நாடுகளை வென்றாலும், அவனால் இரண்டு நிமிடம் கூட சுவாச ஒழுங்கிலே இருக்க முடியாது..

காரணம் தன்னை வெல்ல முடியாத மகா கோழை அவன்... தன்னை வெல்ல முடியாத மகா கோழைகளுக்கே பேரும் புகழும் வந்து சேருகின்றன.. இதுதான் விசித்திரமான மாயையின் தோற்றம்..

தன்னை வெல்ல முடியாதவன் உலகை வெல்வதால் எந்த சிறப்பும் இல்லை.. தன்னை வெல்ல முடியாத பிரபல நடிகர்கள் அரசியல்வாதிகளிடம் இருக்கும் தனிப் பட்ட கெட்ட பழக்க வழக்கங்கள் அவர்களின் கோழைதனத்தின் மறைமுக எடுத்துக் காட்டு...

தன்னை அறிந்து தன் இயல்பு நிலை அறிந்து, தன் பிரபஞ்ச தொடர்பு நிலை அறிந்து, அதோடு பொருந்தி, பொருந்தி, சிறப்பான சத்திய, ஒழுங்கு,தயவு வாழ்வு, வாழ முடியாதவர்கள் உண்மையில் கோழைகளே....

ஏன் இந்த சுவாச ஒழுங்கோடு இருப்பது அவ்வளவு சிரமம் ?.. மரணத்திற்கு பின் ஒருவரின் சூட்சம தேகம் பிரபஞ்ச பேராற்றலால் பேரறிவால் பக்குவப் படுத்தப் பட்டு பண்படுத்தப் படுகிறது..

தோன்றா நிலையில் இருக்கும் அந்த பிரபஞ்ச பேராற்றல் ஒழுங்கின் வடிவம்..

அதை அடைந்த எதுவும் தன் ஒழுங்கின்மையை கை விட்டு விட்டு அந்த பேரற்றலின் ஒழுங்கோடு இணைந்து ஒழுங்கின் வடிவமாக மாறியே ஆக வேண்டும்.. அதுவாகவே ஆக வேண்டும்..

அப்படி ஆன அந்த சூட்சம தேகம் பிறவி எடுத்த உடன் முதலில் பிரபஞ்ச ஓழுங்கோடு தான் இருகிறது.. தூல தேகத்தில் மட்டுமே அந்த தூய பிரபஞ்சத்தின் தன்மையை அனுபவப் பட முடியுமே தவிர சூட்சம தேகத்தால் முடியாது..

அப்படி உடல் எடுத்த சூட்சம தேகம் உலக சார்புகளை சார்ந்து ஒழுங்கின்மை ஆகி விடுகிறது... பிரபஞ்சத்தின் தூய்மையை மறந்து போய் விடுகிறது.. ஒழுங்கின்மை காரணமாக அழிந்து போன தேகத்திற்கு மீண்டும் அதே கதைதான்..

அந்த கதை மீண்டும் மீண்டும் தொடராமல் இருக்கவே சுவாச ஒழுங்கின் மூலம் பிரபஞ்சத்தின் தூய்மையை மீண்டும் பெற வேண்டி இருக்கிறது.. ஒழுங்கின்மையின் அழுத்தம் அதிகமாக இருக்க இருக்க சுவாச ஒழுங்கு என்ற இயல்பான நிலை மிகவும் கடினமாகிறது..

ஆக சுவாச ஒழுங்கு என்பது, பிரபஞ்ச ஆற்றலால் இயக்கப்படும் சுவாசத்தில், நிலை நிறுத்தப் படும் ஒழுங்கு என்பது பிரபஞ்ச ஆற்றலோடு, இணைந்து இருப்பதற்கு சமம்..

மரணத்திற்கு பின் ஆன்மா ஆகிய உயிர் நிலை, பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து, பக்குவப் படுதலுக்கு ஒத்த நிலை..

அந்த சுவாச ஒழுங்கில் மனம் தன் தன்மையான ஒழுங்கின்மையை இழக்க நேரிடுவதால், மனம் தன்னையே இழந்தது போல ஆவதால், மனம் தான் கொண்டுள்ள எண்ண ஆதிக்கங்களால், சுவாச ஒழுங்கை எப்படியாவது கெடுக்கவே செய்யும்..

அதனால் தான் சுவாச ஒழுங்கு அவ்வளவு சிரமமாக உள்ளது.. இந்த சுவாச ஒழுங்கின்மையை புத்தி கண்டு அறிந்து ஒவ்வொரு தடவையும் சுவாச ஒழுங்கின்மையை சரி செய்யும் பொழுது, புத்தியானது தனது ஆதிக்கத்தை மனதின் மேல் செலுத்துகிறது..

இப்படியாக சுவாச ஒழுங்கிற்கு ஏற்படும் ஒவ்வொரு தவறிலும், அதை ஒழுங்கிற்கு கொண்டு வர முயலும் புத்தி சிறுக சிறுக மனதின் மேல் ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு முடிவில், பூரணமாக புத்தி ஆனது மனதை தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்கிறது..

அந்த நிலையில் மனமானது புனித சக்தியாகிய புத்தியின் கனலால் நிரப்பப் பட்டு சுத்த மனம் ஆகிறது..

அந்த நிலையில் மட்டுமே மனதின் ஆதிக்கத்தில் உள்ள சித்தமும் தேகமும் முழுமையாக பிரபஞ்ச ஆற்றலை பெறும் தகுதி பெற்று, பேரண்ட பேர் ஆற்றலையும் பெறுகிறது..

இவை அத்தனையும் சுவாச ஒழுங்கில் சாத்தியமாகிறது...

இந்த சுவாச ஒழுங்கின் மூலம் பிரபஞ்ச பேராற்றலையும் பேரறிவையும் பெறலாம் என்பதும், சித்தராகலாம் என்பதும், வலுவான சத்தியமான உண்மை...

பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத உண்மைகள்...


குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும்..

ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது.

ஆம், என்ன தான் பல கஷ்டங்களைத் தாங்கி பத்து மாதம் குழந்தையை சுமந்து பெற்றாலும், அத்தாய்க்கும் பிறந்த குழந்தையைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்காது..

அதிலும் முதல் குழந்தை என்றால் சிறுதுளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

இங்கு பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்...

பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகளே இருக்காது.

மேலும் இவர்களுக்கு பிறந்து 3 மாதங்களில் தான் கண்ணீர் சுரப்பிகள் வளரவே ஆரம்பிக்கும்.

வேண்டுமானால் பிறந்த குழந்தையின் அழுகையைக் கவனியுங்கள். அவர்களுக்கு கண்ணீரே வராது..

பிறந்த குழந்தை தாயிடம் வந்ததும் தன் அழுகையை நிறுத்திவிடும். எப்படியெனில் கருவில் இருக்கும் போதே, தன் தாயின் குரல் மற்றும் ஸ்பரிசம் நன்கு தெரியும்.

பிறந்த குழந்தையால் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண முடியும்.

சராசரி மனிதனால் 600 அடி வரையுள்ள அனைத்தையும் காண முடியும்.

ஆய்வுகளில் பிறந்த குழந்தையால் மனித முகத்தை நன்கு அடையாளம் காண முடியும் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பொம்மைகளை விட, ஒருவரின் முகத்தைக் காண பிடிக்கும்.

அதனால் தான் பிறந்த குழந்தைகள் ஒருவரைக் காணும் போது புன்னகைக்கின்றன.

மற்றொரு முக்கியமான விஷயம் பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும்.

அவர்கள் வளர வளர பார்வையும் வளர்ச்சி பெற்று, மற்ற நிறங்களால் அவர்கள் கவரப்படுகின்றனர்.

சராசரி மனிதனின் உடலில் 206 எலும்புகள் இருக்கும்.

ஆனால் பிறந்த குழந்தைக்கோ ஆரம்பத்தில் 270 எலும்புகள் இருக்கும்.

அவர்கள் வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து 206 எலும்புகளாகின்றன.

குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் தலை மற்றும் சருமத்தில் மென்மையான முடிகள் அதிகம் இருக்கும்.

ஆனால் ஒரு சில வாரங்களில் அந்த முடி தானாக உதிர்த்துவிடும்.

இருப்பினும் தலையில் உதிர்ந்த முடிகள் அடுத்த சில வாரங்களில் நன்கு வளர ஆரம்பிக்கும்...