24/06/2018

பணத்தின் கவர்ச்சி...


ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் பரவாயில்லை.

இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்னெறியைப் பற்றியும், அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத் தான் இருக்கும்.

ஒரு மனிதன் நிகழ்  காலத்தில் வாழும் போது மட்டும் தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.

பணம் என்பது எதிர்காலம். எதிர்காலத்துக்கான பாதுகாப்பு. அதிகாரத்தின் அடையாளம். அதனால் தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.

ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது.

ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது. மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.

ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள். அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.

அது பணமாக இருக்கலாம்; அதிகாரமாக இருக்கலாம்; தன்  மதிப்பாக இருக்கலாம்; மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம்; நல்ல குண நலன்களாக இருக்கலாம்.

இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.

இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை. இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள். அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.

வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள்.

உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார். எதிர்காலத்தை விட்டுவிடு. அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்...

அவசரப்பட்டு உளறிட்டீங்களே.....


சேலம் 8 வழி சாலை எனும் மரண வழி சாலை...


ஏக பட்ட விவசாயிகளின் வயிற்றில் அடித்து சாபங்களை பெற்று உருவாகி வரும் சென்னை to சேலம் 8 வழி சாலையில் என்ன வெல்லாம் நடக்க இருக்கி்றது என்று பார்க்கலாம்.

முதலில் அரசாங்கம்  கொடுத்துள்ள அறிக்கை படி கைபற்ற படும் நிலத்தின் அளவு 1900 ஹெக்டர் .ஆனால் நெடுஞ்சாலை துறை ஆவணத்தில் அது தெளிவாக 2560 ஹெக்ட்ர் கைப்பற்ற போவது குறிப்பிட பட்டு இருக்கிறது ..

இதில் 120 ஹெக்டர் காடுகள் அழிக்க பட இருக்கிறது.

8 மலைகள் அழிக்க பட இருக்கிறது.

9 மேம்பாலங்கள் கட்ட பட இருக்கிறது.

வாகனங்கள் செல்ல 22 கீழ்வழி சாலை அமைக்க பட இருக்கிறது.

3 சுரங்க பாதை வர இருக்கிறது.

8 சுங்க சாவடி வர இருக்கிறது.

10 லாரி மற்றும் பேருந்து நிறுத்துங்கள் வர இருக்கிறது.

மேலும் 4 லட்சம் மரங்கள் வெட்ட பட இருக்கின்ற. ( இவைகள் கணக்கில் வெறும் 6400 மரங்கள் வெட்ட போவதாக மட்டுமே சொல்ல பட்டு இருக்கின்றன ).

23 பெரிய பாலங்கள்.. 156 சிறிய பாலங்கள் வர போகிறது.

இவை எல்லாம் விட நிலம் இழந்து வீடு இழந்து கையறு நிலைக்கு 1000 கணக்கான விவசாயிகள் தள்ள பட இருக்கிறார்கள்.

ஒரே ஒரு சந்தேகம் தான்... இன்று மண்ணை வாரி தூற்றி வயிறு எரிந்து சாபம் கொடுத்து கொண்டிருக்கிறான் அப்பாவி விவசாயி.

இதற்க்கு குரல் கொடுப்பவர்கள் யாவரையும் சமூக விரோதி .. நட்சலைட்.. தீவிர வாதி என முத்திரை குத்தி கைது செய்கிறது அரசாங்கம்.

கேள்வி என்னன்னா...

நல்ல மனநிலையில்  இருபவனை அழைத்து சென்று பைத்திய விடுதியில் சேர்த்து ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து நிஜ பைத்தியமாக மாற்றுவதை போல....

இன்று அமைதியாக இருக்கும் மக்களை இப்படி வலுகட்டயமாக தீவிர வாதியாக மாற்றுகிறதே அரசாங்கம்...

நாளை அவன் நீ கட்ட போகும் பாலத்திற்கு நிஜமாக வெடி குண்டு செய்து வந்து வைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்.?

- சமூக விரோதி...

Dubsmash உண்மைகள்...








வேற்று கிரகவாசிகள் நமது எதிர்காலச் சந்ததியினரா.?


வேற்று கிரகவாசிகள் நமது எதிர்காலச் சந்ததியினரா? பதிவின் தொடர்ச்சியாக; ஸ்ட்ரிங்க் தியரியும், எம் தியரியும் உண்மையாக இருக்க வேண்டுமென்றால், நமது அண்டம் நாம் நினைப்பது போல இருக்காது. நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வடிவத்தில்தான் அண்டம் இருக்க முடியும்.

பூமியில் வசிக்கும் நாம் முப்பரிமாணமாகத்தான் ( 3 Dimention) உலகைப் பார்க்கிறோம். இடம் வலம், முன்னே பின்னே, மேலே கீழே என்ற மூன்று பரிமாணங்கள் நமக்கு உண்டு. இதுவரை மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன என்றுதான் நம்பியுமிருந்தோம்.

ஆனால் ஸ்ட்ரிங்க் தியரி, எம் தியரி ஆகிய இரண்டு கோட்பாடுகளின்படி நமது பூமியும், அண்டமும் பதினொரு பரிமாணங்களைக் கொண்டன என்று கண்டுபிடித்துள்ளனர். ஒரு மனிதனால் மூன்று பரிமாணங்களுக்கு மேல் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனையே பண்ணிப் பார்க்க முடியாது.

உதாரணமாக, நிலத்தில் மட்டும் ஊர்ந்து செல்லும் ஒரு புழுவை எடுத்துக் கொள்வோம். நிலத்தில் இடம் வலம், முன் பின்னாக இரண்டு பரிமாணங்களில் மட்டுமே அதனால் ஊர்ந்து செல்ல முடியும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் புழுவிடம் மேல் நோக்கிப் பறக்கலாம் என்ற ஒரு பரிமாணம் உள்ளது என்று நாம் சொன்னால், அதைக் கற்பனை பண்ணிப் பார்க்க அந்தப் புழுவால் முடியாமல் போகும். அது போல, நமக்கும் மூன்று பரிமாணங்களுக்கு மேலே கற்பனை பண்ணிப் பார்க்க முடிவதில்லை.

ஆனால் பல பரிமாணங்கள் இருப்பது என்னவோ உண்மைதான். 

இரண்டு பரிமாணத்தில் இயங்கும் புழுவினால் மூன்றாவது பரிமாணமான மேலே, வானத்தில் உள்ள எதையும் பார்க்க முடியாதது போல, முன்று பரிமாணத்தில் உள்ள மனிதனால் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது...,

பதினோராவது என்னும் பரிமாணங்களில் இயங்குபவர்களையும், அந்தப் பரிமாணங்களில் இருக்கும் எதையும் காணமுடியாது. ஆனால் மூன்று பரிமாணங்களில் இயங்கக் கூடிய மனிதனால், இரண்டு பரிமாணங்களில் இயங்கும் புழுவைப் பார்க்க முடிகிறது அல்லவா? அது போல, மூன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களில் இயங்குபவர்களால், முப்பரிமாணத்தில் இயங்கும் மனிதனைக் காணக் கூடியதாக இருக்கும்.


இப்போது சொல்லும் விசயம் மட்டும் உங்களுக்குப் புரிந்தால், இனி சொல்லப் போகும் அனைத்தையும் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். இப்போது நாம் வேற்றுகிரகவாசிகள் விசயத்துக்கு வரலாம். அதாவது வேற்றுகிரகவாசிகள் மூன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களான, நான்காவது , ஐந்தாவது ஆறாவது பரிமாணங்களில் இயங்கக் கூடியவர்களாக இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படியெனின், அவர்களை நம்மால் காணமுடியாது. அதே நேரத்தில் அவர்களால் நம்மைக் காண முடியும்.

ஏதோ ஒரு தேவைக்கான கணத்தில் அவர்கள் மூன்றாவது பரிமாணத்தில் நுழையும்போது நமக்குக் காட்சி தருகிறார்கள்.

மனிதனாலும் இரண்டு பரிமாணங்களில் இயங்க முடியாது.
ஏதோ ஒரு கணத்தில் நிலத்தோடு நிலமாகப் புழுவை இரண்டு பரிமாணத்தில் நாம் சந்தித்தால் மட்டுமே புழுவால் நம்மைப் பார்க்க முடியும். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்
இப்போது இன்னுமொரு புரியாத விசயமொன்றும் உள்ளது.

இடம் வலம், முன் பின் என்றிருக்கும் இரண்டு பரிமாணமான நிலத்தையும், மூன்றாவது பரிமாணமான மேல்வெளியையும் பிரிப்பது மிகச் சிறிய ஒரு பகுதிதான். அதாவது நிலத்திலிருந்து உயர அளவில் ஒரு செண்டி மீட்டர் மேலே வந்தாலும் அது மூன்றாவது பரிமாணமாகிவிடும். ஒரு செண்டிமீட்டர் கூட இல்லை, ஒரு மில்லிமீட்டர் மேலே வந்தாலும் அது மூன்றாவது பரிமாணம்தான்.

அதாவது இரண்டு பரிமாணத்தையும், மூன்றாவது பரிமாணத்தையும் ஒரு மில்லிமீட்டர் அளவுள்ள மிக மெல்லிய ஒரு படைதான் பிரிக்கிறது. அது போல, மனிதனுக்குத் தெரிந்த முன்றாவது பரிமாணத்தையும் அதற்கு மேலுள்ள பரிமாணங்களையும் மிக மெல்லிய ஒரு நூலிழை போன்ற படைதான் பிரிக்கின்றது என்கிறார்கள் இயற்பியலாளர்கள். நான்காவது பரிமாணமோ அல்லது அதற்கு மேலுள்ள பரிமாணங்களோ நமக்கு மிக அருகாமையில்தான் இருக்கின்றன. அப்படி நம்மையும் அடுத்த பரிமாணத்தையும் பிரிக்கும் மெல்லிய பகுதியை மெம்பிரான் என்று அழைக்கிறார்கள்.

வேற்றுகிரகவாசிகள் என்னும் அதிபுத்திசாலிகளான உயிரினங்கள், நாம் வாழும் பூமிக்கு மிக அருகிலேயே வாழ்கிறார்கள். அவர்களையும் நம்மையும் 'மெம்பிரான்' என்று சொல்லப்படும் ஒரு மிக மெல்லிய சவ்வு ஒன்று பிரிக்கிறது. ஏலியன்களை நம்மால் பார்க்க முடியாமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள் நம்மைப் போல மூன்று பரிமாணங்களில் மட்டும் இயங்குபவர்கள் அல்ல. அதற்கும் மேற்பட்ட பரிமாணங்களில் இயங்குபவர்கள். குறைந்த பரிமாணங்களில் இயங்குபவர்களால், கூடிய பரிமாணங்களில் இயங்குபவர்களைக் காண முடியாது.


எப்போதாவது தேவைகள் ஏற்படும் போது, நான்காவது, ஐந்தாவது என்று அதிகப் பரிமாணங்களில் இயங்குபவர்களான வேற்று கிரகவாசிகள், நாம் வாழும் மூன்று பரிமாணப் பூமிக்கு வந்து போகின்றனர். இப்போது வேற்றுகிரகவாசிகள் பற்றி நாம் கொண்டிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் இதில் பொருத்திப் பாருங்கள். எல்லாமே அதனதன் இடத்தில் கச்சிதமாகப் பொருந்துவதைக் காணலாம்.

ஆனாலும் நம்மிடம் மிகப் பெரிய கேள்வி ஒன்று இப்போதும் எஞ்சியிருக்கும். அந்தக் கேள்வி இதை வாசிக்கும் பலருக்குத் தோன்றியிருக்கலாம், சிலருக்குத் தோன்றியிருக்காது. அதனால் அந்தக் கேள்வி."மற்ற பரிமாணங்களில் இயங்கும் வேற்று கிரகவாசிகள் எங்கே வசிக்கிறார்கள்?

என்பதே அந்தக் கேள்வி. நமது கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்கள் அனைத்துமே முப்பரிமாணத்தில் அடங்குபவைதான். அவை நம் கண்ணுக்குத் தெரிவது ஒன்றே அதற்கு சாட்சியாகின்றது. மேலே சொல்லப்பட்ட கோட்பாட்டின்படி..

மூன்று பரிமாணங்களுக்கு மேற்பட்ட வேறு எங்கோதான் அவர்கள் வசிக்க வேண்டும். அப்படியாயின் அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்னும் கேள்வி எழுவது இயல்பானதே!இந்தக் கேள்விக்கு தான் அறிவியல் ஆய்வாளர்கள் பதிலைத் தேடிக் கொண்டு  உள்ளார்கள்...

வேற்று கிரகவாசிகள் நமது எதிர்காலச் சந்ததியினரா.?


வேற்றுகிரகவாசி என்றுவுடன் நாம் வர்ணிப்பு தலை பெரிதாகவும், கைகால்கள் சிறியதாகவும் இருக்கும் என்பதே ஒருவேளை அந்த வடிவத்தில் இருப்பது நம் எதிர்காலச் சந்ததி மனிதனா?  அப்படி இருக்க முடியுமா? என்று சிலர் சந்தேகங்கள் கேட்டிருந்தனர்,எனக்கும் இந்த கேள்விகள் எழுந்தன கேள்வி எழுப்பியவருக்கு நன்றி.

'ஒரு உயிரினம், தனது எந்த உடல் உறுப்பை அதிகம் பயன்படுத்தாது போகின்றதோ,அந்த உடல் உறுப்பு, படிப்படியாகக் குறுகி இல்லாமலே போகலாம்' என்றார் டார்வின். அதற்கு உதாரணமாக, 'மனிதனுக்கு வால் இல்லாமல் அகன்றது அதனால்தான்' என்கிறார். அதே போல, 'ஒரு உயிரினம், எந்த உறுப்பை அதிகம் பயன்படுத்துகிறதோ, அந்த உறுப்பு வளர்ந்து பெரிதாக மாறலாம்' என்றும் சொன்னார். அதற்கு உதாரணமாக, ஒட்டகச் சிவிங்கியின் தலை நீண்டதைச் சொல்கிறார். இதுபோல பல ஆயிரம் வருடங்களுக்குப் பின், நமது எதிர்காலச் சந்ததியினரும் கைகால்களை அதிகம் பயன்படுத்தாததால் அவை சிறுத்தும், மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பதால், தலை பெரியதாக வளர்ந்தும், இன்று நாம் வேற்று கிரகவாசிகள் என்று நம்பும் ஒரு உருவத்துக்கு மாறலாம் அல்லவா? இப்படி நான் சொல்வதால்,அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு உடனே நீங்கள் வந்துவிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.காரணம், நான் சொல்பவை எல்லாமே சாத்தியக்கூறுகள் மட்டும்தான். அவையே முடிவான முடிவுகளல்ல. 

வேற்றுகிரகவாசிகளின் பூமிக்கு வந்து போவதானால் அதற்கு இரண்டு அடிப்படைச் சாத்தியங்கள்தான் உண்டு. ஒன்று பூமி தாண்டிப் பிரபஞ்சத்தில் வேறு எங்கோ இருக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு அருகில் இருக்கும் கோளில் இருந்து வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வரவேண்டும். இல்லையெனின், பூமியின் எதிர்காலச் சந்ததியினர், கால இயந்திரத்தின் உதவியினால் தற்சமயம் நாம் வாழும் இந்தக் காலத்துக்கு வரவேண்டும்.


இது தவிர்ந்து வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வரச் சாத்தியமே இல்லை. அது போல, வேற்றுகிரகவாசிகள் மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பூமிக்கு வருவதாயின், ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்தாலும் பல ஆண்டுகள் எடுக்கலாம் என்றும், புள்ளியை விடச் சிறிய பூமியை இந்தப் பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் கண்டுபிடிப்பது என்பதே மிகச்சிரமம்.

இதனால் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்திருக்க முடியாதோ என்ற சந்தேகமும் நமக்கு வந்தது. ஆனால் நவீன அறிவியலின் கோட்பாடு ஒன்று இந்தச் சந்தேகத்தை உடைத்தெறிந்தது. அது என்ன கோட்பாடு என்பதை நாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன் சில வார்த்தைகள்.இப்போது சொல்லப் போவது மிகவும் சிக்கலான அறிவியல் கோட்பாடு. சிலசமயங்களில் நான் சொல்வது உங்களுக்குப் புரியாமல் போகலாம். அப்படிப் புரியாமல் போனால் அது உங்கள் தவறல்ல.அதைச் சரியாகப் புரிய வைக்க முடியாமல் போன எங்கள் தவறாகத்தான் அது இருக்க முடியும். அப்படிப் புரிந்தாலும், அதில் உள்ள நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமும் உங்களுக்கு எழலாம்.

இதுவரை இந்தக் கோட்பாட்டை விஞ்ஞானிகளும், இயற்பியலாளர்களும் மறுக்கவில்லை.அனைவருமே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் ஏற்றுக் கொண்ட ஒன்றே இந்தக் கோட்பாடு உண்மையானதாக இருக்க அதிக சாத்தியத்தைக் கொண்டது என்றாகின்றது. இருந்தாலும் இதுவரை அது கோட்பாடு என்னும் நிலையிலேயே உள்ளது.

அணு முதல் அண்டம் வரை உள்ள அனைத்தையும் நான்கு அடிப்படையான விசைகளே கட்டுப்படுத்துகின்றன என்று அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது.

மின்காந்த விசை
(Electromagnetic Force),

திடமான அணுக்கரு விசை
(Strong Nuclear Force),

திடமற்ற அணுக்கரு விசை
(Weak Nuclear Force),

ஈர்ப்பு விசை
(Gravitational Force)

என்பவையே அந்த நான்கு விசைகளும் ஆகும்.

இந்த அண்டம் தோன்றியதாகக் கருதப்படும் பெருவெடிப்பின் (Big Bang) போதுதான் இந்த நான்கு விசைகளும் தோன்றின என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

அதாவது ஒரு சிறிய பொருள் ஒன்று, எந்த ஒரு விளைவும் இல்லாமல் பல காலம் அமைதியாக இருந்து, ஏதோ ஒரு கணத்தில் பெரிதாக வெடித்ததால்தான் அண்டம் தோன்றியது.அப்படிப் பார்த்தால், பெருவெடிப்பினால் தோன்றிய இந்த நான்கு விசைகளும், பெருவெடிப்பிற்கு முன்னால் ஒன்று சேர்ந்து, ஒரே விசையாகச் சமநிலைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்திருக்க வேண்டும் அல்லவா?

அதனால், இயற்பியலின்படி இந்த நான்கு விசைகளும் ஒரே கணிதச் சமன்பாட்டில் வரக்கூடிய வகையில் நிச்சயம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தனர்.

அந்தச் சமன்பாடு எதுவென்று கண்டுபிடிப்பதற்கு, ஐன்ஸ்டைன் முதல் இன்றுள்ள எல்லா விஞ்ஞானிகளும் முயற்சிக்கின்றனர். இதுவரை அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இந்த நான்கு விசைகளையும் ஒன்று சேர்க்கும் கோட்பாட்டை தியரி ஆஃப் எவ்ரிதிங்க் (Theory of everything) என்று அழைக்கிறார்கள். ஐன்ஸ்டைன் தனது இறுதிக் காலங்கள் அனைத்தையும் இந்தச் சமன்பாட்டைக் கண்டு பிடிப்பதிலேயே செலவிட்டார்.

ஆனாலும் கண்டுபிடிக்க முடியாமலே மரணத்தைத் தழுவினார்.

இப்படி ஒரு சமன்பாட்டைக் கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு சிரமங்கள் உள்ளன என்று படிப்படியாகப் பார்த்த போதுதான், எங்கோ தவறு செய்கிறோம் என்னும் யோசனை விஞ்ஞானிகளுக்கு வந்தது.

அணுக்களைப் பிரித்துப் பார்த்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியாத பல உப அணுத்துகள்கள் (Subatomic Particles) அணுவுக்குள் இருக்கின்றன என்னும் உண்மைகள் மெல்லப் புரியலாயிற்று. பல விதமான, பல தன்மையுள்ள உப அணுத்துகள்கள் அணுவுக்குள் இருக்கின்றன என்பதை முதலில் கோட்பாட்டு ரீதியாக முடிவு செய்தார்கள். அணுக்கருக்களை ஒன்றுடன் ஒன்று மிக வேகமாக மோதவிட்டு, அதன் மூலம் உப அணுத்துகள்களை  ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கவும் ஆரம்பித்தார்கள். இப்படித்தான் 'ஹிக்ஸ் போஸான்' (Higgs Boson) என்னும் 'கடவுள் துகள்' என்று சொல்லப்பட்ட உப அணுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.


இவற்றையெல்லாம் ஒன்றுபடுத்தி, ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கிப் பார்த்தபோது, நான்கு விசைகளையும் சமப்படுத்தக் கூடிய சமன்பாடு ஒன்றை உருவாக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்குவதன் மூலம் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்க்' என்பதற்கான சமன்பாட்டை உருவாக்கக் கூடியதாக இருந்தது. நான்கு விசைகளையும் ஒன்றாகக் கொண்ட சமன்பாட்டை வடிவமைக்க உருவாக்கப்பட்ட புதிய கோட்பாடுதான்
#அதிர்விழைக்_கோட்பாடு' என்று சொல்லப்படும் #ஸ்ட்ரிங்க்_தியரி' (String Theory) ஆகும்.

ஸ்ட்ரிங்க் தியரி உருவாகியதைத் தொடர்ந்து எம் தியரி (M theory) என்னும் பெயரில் இன்னுமொரு கோட்பாடும் தோன்றியது. இந்த இரண்டு கோட்பாடுகளும் தோன்றியதால் அண்டம் எப்படி உருவாகியது, எந்த நிலையில் அண்டம் இருக்கிறது, நாம் அண்டத்தில் எப்படி வசிக்கிறோம் என்ற பல உண்மைகள் (அவை உண்மைகளா என்று தெரியாவிட்டாலும்) கோட்பாடுகளாக வெளிவரத் தொடங்கின. அப்படி வெளிவந்த உண்மைகளை பற்றி அடுத்த பதிவில்....

வானில் மிதக்கும் நகரம்...


வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டை விட ஆச்சரியமான விசயம் தான் வானத்தில் மிதக்கும் நகரம்.

ஒரு வேளை இந்த வேற்றுகிரகவாசிகள் இனம் அறிவில், அறிவியலில் உச்ச நிலை அடைந்து தங்களது மொத்த நகரத்தையே நகர்ந்தும் வல்லமை பெற்று இருக்கலாம். வானத்தில் மிதக்கும் நகரம் தோன்றும் ஒவ்வொரு முறையும் அதன் மீதான அதிகப்படியான ஆர்வமும்,பயமும் நம்மிடம் அதிகரித்தே உள்ளது. சரி இந்த மிதக்கும் நகரம் சம்பவங்களுக்கு விஞ்ஞானிகள்,
சிதிகோட்பாட்டாளர்கள் தரும் விளக்கங்கள் என்ன? என்றும்.
இதற்கான நமது அறிவியல் விளக்கம் 
என்ன? என்றும் பார்ப்பதற்கு முன்பு மிதக்கும் நகரம்  பற்றிய பண்டைய,நடப்பு சம்பவங்களை பார்த்துவிடலாம்.

பைபிளில் திகிலடையச் செய்யும் வெட்டுக்கிளி வாதையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த வானில் மிதக்கும் நகரம். முதலாவதாக, இந்த வாதையை நன்றாக புரிந்துகொள்ள நமக்கு உதவும் மற்ற வேதவசனங்கள்
2 பொ.ச.மு. ஒன்பதாவது நூற்றாண்டினூடே எழுதப்பட்ட பைபிள் புத்தகமாகிய யோவல், யோவான் பார்க்கும் அதே போன்ற, வெட்டுக்கிளிகளை உள்ளடக்கும், ஒரு பூச்சிகளின் வாதையை விளக்குகிறது. ( யோவேல் 2:1-11, 25)

அது விசுவாசத்துரோக இஸ்ரவேலுக்கு அதிக நலக்கேடை உண்டாக்குவதாக இருந்தது, ஆனால் தனிப்பட்ட யூதர்கள் மனந்திரும்பி யெகோவாவின் தயவுக்கு திரும்புவதிலும் விளைவடையும். (யோவேல் 2:6, 12-14 )

அந்தக் காலம் வந்தபோது, யெகோவா அவருடைய ஆவியை “மாம்சமான யாவர் மேலும்” ஊற்றுவார், “யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே” அச்சம் தரும் அடையாளங்களும் திகிலூட்டும் அறிகுறிகளும் இருக்கும்.— யோவேல் 2:11,28-32 ,

அன்றைய இஸ்ரவேல் மக்கள் தங்கள் வானில் கண்ட காட்சியின் விளைவாக தான் இந்த வசனங்களை நான் பார்க்கிறேன். வானில் மிதந்து வந்த வேற்றுகிரகவாசிகள் இனம் பூமிவாசிகளை அழிக்க வெட்டுகிளி போன்ற உயிரினத்தை பயன்படுத்தி இருக்கலாம். ஹிஸ்டரி சேனலில் வெளிவந்த (Ancient Aliens, S06E18 “Aliens and Insects) என்ற தொடரை பார்த்தால் இந்த வசனங்கள் பற்றிய விளக்கங்கள் உங்களுக்கு புரியும்.

#பண்டைய_ரோம சாம்ராஜ்ஜியத்தின்
வரலாறுகளைத் தொகுத்த பிரபல வரலாற்று ஆசிரியராகக் கருதப்படும்,
“டைட்டஸ் லிவியஸ்” (Titus Livius) என்பவர், பிரபலமான வரலாற்றுத் தொகுப்பு நூலாகக் கருதப்படும்
“Ab Urbe Condita Libri”  (நகரத்தின் அத்திவாரத்திலிருந்து
தொகுக்கப்பட்ட நூல்கள்), எனும் தனது நூலில், வானில்_கப்பல்கள் என்ற
தலைப்பில் ஒரு விசித்திரமான சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அதாவது, அன்றைய ரோம
சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரான ரோம் நகரில், கி.மு. 214 ஆம் ஆண்டின் குளிர்காலப் பகுதியில், கப்பல்களைப் போன்ற சில விசித்திரமான ஊர்திகள் மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் வானில் தோன்றியதாகவும், தொடர்ச்சியாக இவை வானில் மிளிர்ந்து கொண்டிருந்ததாகவும் இவரது பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது நூலில் இந்தச் சம்பவத்தை டைட்டஸ், “navium speciem de caelo adfulsisse” (வானிலிருந்து நெருங்கி வந்து மின்னிக் கொண்டிருந்த நகரங்களின் தோற்றம்) என்று நேரடியாகவே தனதுமொழியில் பதிவு செய்திருக்கிறார். வானில் மிதந்த நகரமா போன்ற காட்சிகளை மக்கள் வானில் கண்கூடாகக் கண்டதாகப்
இந்த நூலின் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.


நைஜீரியாவில்...

2011-ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஒரு சிறிய எல்லை நகரமான டராஸோவில் நூற்றுக்கணக்கான மக்கள் வானத்தில் மிதந்த ஒரு பெரிய நகரத்தை கண்டுள்ளனர்.

அந்த நகரத்தின் தரைப்பகுதிக்கு மிக அருகில் ஒரு மெல்லிய மேகம் சூழ்ந்துள்ளது, அதனுள் மிதக்கும் நகரம் வெளியாகியுள்ளது.

வானத்தில் வெளியான மிதக்கும் நகரத்தை நேரில் கண்ட சாட்சிகள் அதில் அழகான பெரிய கட்டிடங்கள், பெரிய கோபுரங்களை பார்த்தது மட்டுமின்றி, நகரத்தில் தோற்றுவிக்கப்பட்ட இயந்திரங்களின் ஒலிகளையும் கேட்டுள்ளார்.

சீனாவின் போஷன்...

நைஜீரியாவை தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி சீனாவின் போஷன் நகரில் இரண்டாம் முறையாக மிதக்கும் நகரம் தோன்றியது..

ஊடக தரவுகளின்படி, சீனாவில் தோன்றிய மிதக்கும் நகரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் சாட்சிகளாக இருக்கின்றன மற்றும் அதை பேய் நகரம் என்றும் நம்புகின்றனர். சீனாவில் வெளியான அந்த மிதக்கும் நகரத்தில் வானளாவிய கட்டிடங்கள் இருப்பதை சமூக வலைத்தளங்கள் துல்லியமாக காட்சிப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2011-ஆம் ஆண்டு, சீனாவில் தெற்கு அன்ஹுயில் உள்ள ஹுனான்ஷான் நகரில் மிகத்தெளிவாக ஒரு மாபெரும் நகர அமைப்பு கொண்ட மிதக்கும் நகரம் தோன்றியது.

கலிபோர்னியா...

இப்போது சமீபத்தில் சீனாவில் இரண்டாம் முறை தோன்றிய நகரத்தை போன்றே ஒரு மிதக்கும் நகரம் கலிபோர்னியாவில் வெளியாகியுள்ளது, இதற்கும் பல நகரவாசிகள் சாட்சிகளாய் உள்ளனர்.

மிதக்கும் மர்மமான நகரத்தை அடிப்படையாக கொண்டு இதுவரை மூன்று கோட்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.

ஒரு இந்த மிதக்கும் நகரங்கள் முழுக்க முழுக்க ஒரு விரிவான புரளியாக இருக்க வேண்டும் அல்லது இதுவொரு மிகவும் ரகசியமான அரசாங்க சதியாலோசனை திட்டமாக இருக்க வேண்டும் அல்லது நிஜமாகவே மிதக்கும் நகரங்கள் வேறொரு உலகத்தின் நுழைவாக இருக்க வேண்டும்.

இந்த ப்ளோட்டிங் சிட்டி சர்ச்சையில் மிக மர்மமானபகுதி என்னவென்றால் கலிபோர்னியாவில் தோன்றிய மிதக்கும் நகரமும் சீனாவில் தோன்றிய நகரமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அமைப்பை கொண்டுள்ளது தான்.

அணு பிளவு பரிசோதனை...

சுவிச்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பின் சிஇஆர்என் (CERN) மையத்தில் நடத்தப்பட்ட பெரிய ஆட்ரான் மோதுவி அணு பிளவு பரிசோதனைகள்
(Large Hadron Collider atom smasher)
மூலம் ஏற்படுவதே இந்த மிதக்கும் நகரம் என்று சிலர் நம்புகின்றனர்.

இதுவரையிலாக கருந்துளைகளை கண்டுபிடிக்கவும், சிறிய அளவிலான கருந்துளைகளை உருவாக்கவும் தான் விஞ்ஞானிகள் உயர் ஆற்றல் வெளிக்கிடும் அணு பிளவை நிகழ்த்துயுள்ளனர்.

இதுபோன்ற முயற்சிகளின் போது சிறிய அளவிலான கருப்பு ஓட்டைகளை உருவாக்கும் சாத்தியகூறுகளுடன் நமது சொந்த பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பின் மூலம் ஒரு இணை பிரபஞ்சத்தை கசிய வைக்கவும் முடியும் என்று சில விஞ்ஞானி கள் நம்புகின்றனர்.

இது போன்ற அறிக்கைகளால் சிஇஆர்என் சோதனைகள் மூலம் பூமி கிரகம் முன்பு காணாத பல நிகழ்வுகளை உருவாகலாம் என்று பல மக்கள் நம்புகின்றனர், குறிப்பாக இதுபோன்ற மிதக்கும் நகரங்கள்.

இது போன்ற மாயத் தோற்றத்திற்கு காரணம் நாசாவின் ரகசிய திட்டங்களில் ஒன்றான ப்ராஜக்ட் ப்ளூ பீம் (Project Blue Beam) என்றும் சில சதி கோட்ப்பாட்டாளர்கள் கூறுகிறாரக்ள்.
அதாவது சுருக்கமாக, இல்லாத ஒன்றை இருப்பது போல் கண்களுக்கு தோன்ற வைக்கும் இல்லுஷன் (Illusion) காட்சிகளை உருவாக்கம் செய்தல் தான்
- ப்ராஜக்ட் ப்ளூ பீம் ஆகும்.


இந்த மிதக்கும் நகரங்களை பாடா மார்கனா (Fata Morgana) என்றும் சிலர் நம்புகின்றனர், அதாவது துருவ பகுதிகளின் நிலம் மற்றும் கடல்களில் தென்படும் கானல் நீர். இதுவொரு இயற்கையான ஒளியியல் மாயை ஆகும். பாடா மார்கனா ஆனது வெவ்வேறு வெப்பநிலையில் உள்ள காற்று அடுக்குகளுக்குள் நுழைந்து கடந்து செல்லும் ஒளி கதிர்களால் ஏற்படுகிறன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி வேற்றுகிரகவாசிகள் வரும் பரிமாணம் பற்றி மீண்டும் ஆராய்வோம்...

வேற்று கிரகவாசிகள் வருவது வேற்று கிரகங்களா வேறு பரிமாணத்திலா?


வேற்றுக்கிரகவாசிகள் வேற்று கிரகங்களில் இருந்து வருகிறார்களா? இல்லை நமது பூமியில் உள்ள நமது கண்களுக்கு புலப்படாத மற்றொரு பரிணாமத்தில் இருந்து வருகிறார்களா?

ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் நமக்கு அடுத்தடுத்த பரிமாணங்களில் வாழ்வார்களேயானால், அவர்கள் நம்மைவிட பலமடங்கு அறிவில் மேம்பட்ட உயிரினமான இருப்பார்கள்.

நாமே இந்த அளவு செயல்படும் போது வேற்றுக்கிரகவாசிகள் நம்மைவிட அறிவில் மேம்பட்டிருந்தால் அவர்களின் செயல்பாடு நம்மைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இன்று நாம் செய்யும் மேற்படி தேடுதல் வேலைகளை அவர்கள் என்றோ செய்திருப்பார்கள் (பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே). ஒருவேளை அப்படி அவர்கள் தேடி கண்டுபிடித்த கிரகம்தான் பூமியாகவும் இருக்கலாம். பரிமாணம் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அதைப் பற்றிய சிறு விளக்கம் பின்வருமாறு.

பரிமாணம் என்பது ஒரு அளவீடு அது நீளம், அகலம், உயரம், வெப்பநிலை, வெளிச்சம் , அலைநீளம் என பலவற்றை பொதுவாக குறிக்க பயன்படும் அளவீடு.
சரி நமக்கு தெரிந்த,தொழிற்படும் பரிமாணங்களை பார்ப்போம்.

புள்ளி.. Dot பரிமாணம்..

ஒரு புள்ளி ஒரு இடத்தில் நிலையாக இருக்குமெனில் அதாவது அதனால் எங்கும் நகர முடியவில்லை எனில் அது ஒற்றை பரிமாணத்தில் இருக்கிறது.இதை கணித முறையில் கூறினால் dot.

முதல் பரிமாணம்..

ஒரு புள்ளி/உயிரினம் முன்னும் பின்னும் மட்டுமே நகர முடியும் எனில் அது ஒற்றை பரிமாணத்தில் இருக்கிறது.கணித முறையில் straight line. அதாவது Dot. பரிமாணத்தின் தொடர்ச்சியான வடிவமே முதல் பரிமாணம்..ஒரு நேர்கோடு.

இரண்டாம் பரிமாணம்...

ஒரு புள்ளி/உயிரினம் முன்னும் பின்னும் மற்றும் இடம் வலம் மட்டுமே நகர முடியும் எனில் அது இரண்டாம் பரிமாணத்தில் இருக்கிறது.ஆகையால் இரண்டாம் பரிமாணத்தில் வாழும் உயிரினத்தால் நீளம் மற்றும் அகலத்தை மட்டுமே கணக்கிட முடியும். இந்த உரியினம் முப்பரிமான உலகில் இருந்தாலும் அதன் பார்வை புலன் படி அவை அனைத்தையும் இருபரிமாண காட்சிகளாகவே பார்க்கும். அதாவது முப்பரிமான பொருட்களை இவைகளால் காண முடியாது.. ஆனால் மூன்றாம் பரிமாணத்தில் உள்ள உயிரினம் பற்றி உணர முடியும்.முதல் பரிமாண இரண்டு பொருள்களை ஒன்றையொன்று செங்குத்தாக இணைத்தால் கிடக்கபெருவது இருபரிமாண வடிவம்.x மற்றும் y அச்சு.

மூன்றாம் பரிமாணம்...

ஒரு புள்ளி/உயிரினம் முன்னும் பின்னும் மேலும் இடம் வலம் மற்றும் மேல் கீழ் நகர முடியும் அது மூன்றாம் பரிமாணத்தில் இருக்கிறது. ஆகையால் முன்றாம் பரிமாணத்தில் வாழும் உயிரினத்தால் நீளம்,அகலம் மற்றும் உயரத்தை கணக்கிட முடியும். தொலைவு, ஆழம் ஆகியவற்றை இப்பரிமானத்தில் வாழும் உயிரினங்களால் எளிதில் கணக்கிட முடியும். எ.கா மனிதன் மற்றும் விலங்குகள்.

நான்காம் பரிமாணம்..

காலவெளி spacetime.. கணித முறையில் நான்காம் பரிமாணத்திற்கும் வடிவமைப்பு உள்ளது.இரண்டு பரிமாணங்கள் உடைய இரண்டு பொருளை ஒருங்கிணைத்தால் கிடைப்பது முப்பரிமான பொருள்…அதே போல் மூப்பரிமாணம் கொண்ட இரண்டு பொருள்களை இணைத்தால் கிடைப்பது என்ன?பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

இவைகள்மட்டுமே மனிதன் நன்கு அறிந்த பரிணாமத்தின் வகைகள் ஆனால் இந்த ஸ்ட்ரிங் தியரி பரிமாணங்களை இன்னும் விரிவாக்கி கொண்டே செல்கிறது…

நான்காவது பரிமாணத்தில் கடந்தக் காலத்தைப் பற்றிய கவலையோ, வருங்காலத்தைப் பற்றிய பயமோ இருக்காது. மிகவும் தெளிவான மனநிலை ஏற்படும். காலத்தை நமக்கு ஏற்றார்போல வளைக்கமுடியும் என்ற உண்மை தெரியவரும். மூன்றாவது பரிமாணத்தில் ஆச்சர்யமாக தோன்றிய பல விசயங்கள் இங்கு சாதாரணமாகத் தோன்றும்.


இந்த பிரபஞ்சம் முப்பரிமாண அமைப்பை கொண்டுள்ளதாக நாம் நினைக்கிறோம் காரணம் நம்முடைய பார்வை புலன் முப்பரிமாண அமைப்புக்கள் வரை மட்டுமே காணக் கூடியது,உண்மையில் நம் பிரபஞ்சம் பல பரிமாண அடுக்குகளை கொண்டது, நமது பார்வை புலன் மற்றும் நம்முடைய அடிப்படை துகள்களின் காரணமாக நம்மால் மற்ற பரிமாணங்களை காணமுடிவதில்லை… பல பரிமாணங்கள் என்ற கோட்ப்பாடு பற்றி பல விஞ்ஞானிகள் நம்பினாலும் அவற்றை நிருபிக்க சான்றுகள் இல்லை…

காரணம்...

1.பரிமாணங்கள் அனைத்தும் பல சிறு சிறு அடுக்குகாளாக இணைந்துள்ளன. அந்த அடுக்குகள் மிகச்சிறிய தூரங்களில் இருக்கின்றன அதாவது சில மில்லிமீட்டர் தொலைவில் இருக்கலாம் அல்லது ஒரு பெரிய பரிமாணத்தில் நம்முடைய முப்பரிமாணம் சிறு இடத்தையே வகித்திருக்கலாம். அதனால் தான் அதை நம்மால் உணரமுடிவதில்லை.

2.மற்ற பரிமாணத்தில் காணப்படும் அடிப்படை மூலக்கூறுகள் வேறாக இருக்கலாம்.ஆகவே அந்த துகள்களால் ஆனா உலகை நம்மால் அறிய முடியாமலும் போயிருக்கலாம்
மற்ற பரிமாணங்களை எப்படி அணுகுவது?இதற்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை.ஆனாலும் விஞ்ஞானிகள் கரும் சக்தி இதற்கு உதவும் என நம்புகின்றனர். ஆகையால் தற்போது விஞ்ஞானிகளின் பார்வை கரும் சக்தியை நோக்கியுள்ளது.
ஆனால் சில விஞ்ஞானிகள் இதை ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தில் பரிமாணத்தை அணுகுகின்றனர்.

அதாவது நாம் மற்ற பரிமாணங்களை முன்பே அணுகிவிட்டோம் என்கிறார்கள். ஜெனீவா “ஹாட்ரோன் கொலைடர்” (Hadron Collider) CERN இல் உள்ள துகள் செலுத்தியில் பல அடிப்படை மூலக்கூறுகளை மோத செய்து உப துகள்களை கண்டறிகின்றனர்…அப்போது அந்த அடிப்படைதுகள்கள் எட்ட முடிந்த வேகத்தில் அதாவது ஒளியின் வேகத்தில் 99% அடைந்த பின் அது நம்முடைய பார்வையிலிருந்து மறைந்து (கரைந்து)போவது போல் தோன்றினாலும்,அது அடுத்த பரிமாணத்தில் நுழைவதாக சில விஞ்ஞானிகள் அனுமானிக்கின்றனர்..

வேற்றுக்கிரகவாசிகள் நமது முப்பரிமாண உலகில் பிரவேசிக்கவே
மனித உடல் போன்ற உடைகளை உடுத்தியிருக்கலாம். உதாரணமாக நாம் கடலின் அடியில் செல்வதற்கு பயன்படுத்தும் ஆக்ஸிஜன் உடை போன்று. பறக்கும்தட்டுகளும் கூட இந்த அடிப்படையில் பயன்படுத்தபடுவதாக தோன்றுகிறது.

ஒரு பேச்சுக்கு வேற்றுக்கிரகவாசிகள் நான்காவது, ஐந்தாவது, அல்லது அதற்கு அடுத்த பரிமாணங்களில் வாழ்பவர்களாக இருந்தால் அவர்களில் அறிவுத்திறமையும் தொழில் நுட்பத்தையும் நினைத்துப் பாருங்களேன்...

வேற்று கிரகவாசிகளை பற்றி பசிபிக்கடல்டயே கேட்டு தெரிஞ்சிக்கலாம்...


அண்டத்தின் நமது இருப்பை பற்றி ஒரு விஞ்ஞானி ஒரு முறை இப்படி சொன்னார்..

இரண்டே உண்மைகள் தான் சாத்தியம் ஒன்று இவ்ளோ பெரிய மகா பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம். அல்லது  இந்த பிரபஞ்சத்தில் நாம தனியா இல்லை....

Otto Oscar Schneider’ இவர் உலக யுத்தத்தின் போது நாசி,நேசபடைகள் எற இரு தரப்புக்கள் சார்பாகவும் யுத்தம் செய்த ஒருவர். ஆரம்பத்தில் அவர் ஜஃேர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் படையில் ஒரு U-boat ரக நீர்மூழ்கிக் கப்பகுக்கு கேப்டனாக இருந்தார். யுத்தத்தின் போது நேச நாடுகளால் சிறைப்பிடிக்கப் பட்டார். அதன் பிறகு ஐக்கிய அமெரிக்காவின் குடிமகனாக அவர் மாற்றப்பட்டு, இந்த தேசத்தின் மீது உண்மையான பக்தி வைக்கும் அளவுக்கு அவர் கொள்கை மாற்றம் செய்யப்பட்டார்.

அவர் கண்டுபிடித்த அதிவேக கமெராவின் மூலம் 1946, ஜூலை 12ம் திகதி பசிபிக் பெருங்கடல் பகுதியை ஒட்டிய  #பிக்கினி_தீவில் (Bikini Island) நடத்தப்பட்ட அனுகுண்டு வெடிப்புப் பரிசோதனை கூட படம் பிடிக்கப் பட்டது. அந்தப் புகைப்படங்களின் அசல் பிரதிகள் இப்போது கூட அமெரிக்க அரசு வசம் இருக்கின்றன.

மேலும், அன்று பிக்கினி தீவில் நடத்தப் பட்ட அணுகுண்டுப் பரிசோதனையின் போது, அங்கிருந்த பல பறக்கும் தட்டுக்கள், பரிசோதனையின் காரணமாக அங்கிருந்து இடத்தைக் காலி செய்து, அதிவேகத்தில் பறந்து சென்றன. அவ்வாறு பறந்து செல்லும் சில பறக்கும் தட்டுக்கள் கூட இந்தப் புகைப்படங்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றன.


அன்றைய காலங்களில் பிக்கினி தீவு என்பது, கொசு மொய்ப்பது போல் பறக்கும் தட்டுக்களால் மொய்க்கப்பட்டிருந்த ஒரு தீவுப் பிரதேசமாகும். குறிப்பாக அந்தத் தீவைச் சூழவுல்ல கடலுக்கு அடியில் ஏராளமான பறக்கும் தட்டுக்களின் நடமாட்டங்கள் உண்டு. அந்தத் தீவில் வாழும் பழங்குடி மக்கள் இந்தப் பறக்கும் தட்டுக்குரியோரால் நீண்ட நாட்களாகப் பல இன்னல்களுக்கும், நஷ்டங்களுக்கும் ஆளாகிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

குறிப்பாக இந்த வேற்றுக் கிரகவாசிகளின் விசித்திரமான சில பரிசோதனைகளின் விளைவாக, தமது வாழ்வாதாரங்களாக அவர்கள் வளர்த்து வரும் பல கால்நடைகள், மற்றும் பண்ணை விலங்குகள் அங்கவீனப் படுத்தப்படுவடுண்டு. இவற்றால் அவர்கள் பெரும் நஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள். 

இதன் விளைவாக அமெரிக்க அதிகாரிக “ஜெனரல் மெக் ஆதர்” (General MacArthur), ‘அடுத்த யுத்தம் அனேகமாக இந்த வேற்றுக்கிரவாசிகளோடு தான்’ என்று அடிக்கடி மீடியாக்களில் கூறிவந்தார்.”

உலகின் 90 சதவிகிதம் நில நடுக்கங்களும் 80 சதவிகிதம் பெரிய நில நடுக்கங்களும்  பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான் ஏற்படுகின்றன.
40,000 கிலோமீட்டர் நீளமான குதிரை லாட வடிவமுடைய இந்த நெருப்பு வளையம் நியூஸிலாந்து தொடங்கி ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரைகள் வழியாக சிலியில் முடிவடைகிறது.
வேற்றுகிரகவாசிகளால் இந்த நெருப்பு வளைய பகுதியில் நில நடுக்கம் மற்றும் எரிமலை நிகழ்வுகளை தொடர்ந்து உருவாக்கி தங்கள் இருப்பை பூமிவாசிகள் அறியாத வண்ணம் அப்பகுதியில் வாழ்பவர்களுக்கு எப்போதுமே ஒரு அபாயம் உருவாக்கிகொண்டே இருக்கிறார்கள்.

உலகில் உள்ள கடல்களிலே மிகவும் ஆழமான கடல் பகுதி என்றால் அது பசிபிக் பெருங்கடல் தான். இதனை பற்றி பலருக்கு தெரிந்திருந்தாலும் இதனுள் வாழும் வேற்றுகிரகவாசிகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உலகிலேயே மிகவும் உயரமான பகுதி எவெரெஸ்ட் என்றால் உலகிலேயே மிகவும் ஆழமான மற்றும் ஆபத்தான பகுதி இந்த பசிபிக் பெருங்கடல் பகுதிதான். இந்த கடல் பகுதியில் சுமார் 2550 கி.மீ நீளமும் 69 கி.மீ அகலமும் கொண்ட 'v' வடிவம் உள்ள மாபெரும் பள்ளதாக்கு கண்டுபிடிக்கபட்டது.

1957 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் சில பரிசோதனை கப்பலின் உதவியுடன் இந்த பகுதியில் சுமார் 7 கீ.மி ஆழத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்ட போது இதுவரை வேறு எங்கும் கண்டுபிடிக்காத இன்னும் சொல்ல போனால் நம் மனித இனத்திற்க்கே புதிதான சில  வேற்று கிரகவாசிகள் உருவங்களை கண்டுள்ளனர். இருப்பினும் போதிய கருவிகள் மற்றும் நவீன வசதிகள் இல்லாததால் 7 கீ.மீட்டருக்கு கீழ் என்ன இருக்கிறது என்பதை அவர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை.


மர்மம் நிறைந்த இந்த இடத்தை ஆராய்ச்சி செய்வதற்காக நவீன நீர் மூழ்கி கப்பலின் உதவியுடன் உள்ளே சென்றனர்.ஆனால் நீரின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவர்களால் 20 நிமிடத்திற்கு மேல் உள்ள இருக்க முடியவில்லை. இருப்பினும் அந்த குறைந்த நேரத்தில் பல வேற்று கிரகவாசிகளை கண்டத்துடன் பல ராட்சச வடிவிலான பறக்கும் தட்டு களையும் கண்டுள்ளனர். ஆனால் அது சில வினாடிக்குள் காணாமல் போனதால் அது என்ன என்று அவர்களால் தெளிவாக கூறமுடியவில்லை.

பசிபிக் ரிம் ஹாலிவுட் படம் பார்த்திருப்பிர்கள். பசிபிக் கடல் பகுதியில் உருவாகும் பிளவிலிருந்து வெளிவரும் மிக பிரம்மாண்டமான மிருகம் உலகை அழிக்கப்பார்க்கிறது. கைஜு எனப்படும் இந்த மிருகத்தை அழிக்க, ஏகர்ஸ் எனப்படும் மிகப் பிரம்மாண்டமான ரோபோக்களை உருவாக்குகிறார்கள். இந்த ரோபோக்களை இயக்கும் இரண்டு பைலட்டுகள் உயிரைக் கொடுத்து உலகைக் காப்பாற்றுவதோடு முடியும் படம். இது கிட்டத்தட்ட பசிபிகின் V வடிவ பள்ளதாக்கில் ஆய்வாளர்கள் கண்ட வேற்றுகிரகவாசிகள் பற்றி கதைதான்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில்
பசிபிக் கடல் பகுதியில் இருந்த பிளவு மூடப்பட்டுவிட்டதால் ராட்சத மிருகம் குறித்த அச்சமின்றி இருந்த நிலையில், ஒரு மோசமான விஞ்ஞானி தன்னை யாரும் மதிப்பதில்லை என்பதால் மீண்டும் அந்த மிருகங்களை கட்டவிழ்த்துவிடுகிறார். அவற்றைச் சமாளிக்க மீண்டும் ஏகர்ஸ் எனப்படும் ராட்சத ரோபாக்களைக் களமிறக்குகிறார்கள் விஞ்ஞானிகள்.
இதுவும் எதிர்காலத்தில் ஏதோ ஒரு நடக்கும் சம்பவத்தை மறைமுகமாக மக்களுக்கு தெரிவிப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது.

பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு. இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் (Dutch explorer ) வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது.

இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள். இந்த சிலைகளை ”மோய்” (Moai) என குறிப்ப்பிடப்படுகின்றன.

இச்சமூகத்தில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் அல்லது நரபலி இருந்திருக்கிறது. இந்த சிலைகள் தமது கடவுளான வேற்றுகிரகவாசிகளுக்கு இவர்கள் நிறுவியிருக்கலாம்
வேற்றுகிரகவாசிகளுக்கும் இத்தீவிற்கும் தொடர்பு இருக்கவேண்டும் என நம்புகின்றனர்.

ஆக நாம் வேற்றுகிரகவாசிகளை விண்வெளியில் தேடிக்கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்கள் நம் கடல்பகுதியில் தங்கள் இருப்பை உருவாக்கி உள்ளனர். மேலும் நாம் முன்பே பார்த்தோம் இவர்களின் பறக்கும் தட்டுகளின் பிரதான எரிபொருளே நமது நீலத் தங்கம் எனப்படும் தண்ணீர் தான்.

ஆனால் இந்த உண்மைகளை வெளிஉலகிற்கு தெரியாத வண்ணம்
வேற்றுகிரகவாசிகளிடம் தொடர்பில் உள்ள ரகசிய சமூகம் மறைத்து வருகிறது. ஏனினும் உண்மை வெளிவந்த கொண்டுதான் இருக்கின்றன...

வேற்று கிரகவாசிகள் பற்றிய மனிதனின் உளவியல்...


மனிதன் அனைத்தையும் அதாவது பூமியில் உள்ள அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறான்.

அவன் உணவு சங்கிலியில் நாம் முதல் இடம் பிடித்திருந்தாலும் உடல் அளவில் பலவீனமானவன். அதை மனித இனமும் அறியும்.

ஆகவே தான் நாம் நம்மை
மற்றவைகளிடமிருந்து (அதாவது பலமுடைய விலங்குகளிடம் இருந்து ”இதில் மனிதனும் அடக்கம்”) காத்து கொள்ள பல ஆயுதங்களை கண்டு பிடுத்துள்ளோம்.

வேற்றுகிரகவாசி, பூமியை தாக்குவார்களா?

மனித இனத்தை முற்றிலுமாக
அழித்து விடுவார்களா? என மனிதன் எண்ணுகிறான்..

அதாவது நம்முடைய வீடான இந்த பூமீயை இழக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ?

அல்லது நமக்கு எதிர்காலம்
இல்லாமல் போய்விடுமோ?

அல்லது பூமியின் செல்வங்கள் திருட பட்டுவிடுமோ ?

என்ற பயம் உள்ளது. இந்த கூற்றை பல விஞ்ஞானிகளும்,மக்களும்,நானும் ஒப்புக்கொள்கிறேன்


நிங்களே நல்லா யோசிச்சு பாருங்க வேற்றுகிரகவாசியை காணும் தருணத்தில், உங்களுக்கு இந்த இடம் சார்ந்த பயமா தோன்றுகிறது?

இல்லை உயிர் தொடர்பான பயம் தோன்றுகிறதா?.. கண்டிப்பா இல்லை என்றே நான் கூறுவேன்.. 

அங்கு நடப்பது.. இனம் புரியாதது
அது என்னாதுனா புதிய தொரு உருவம்/உயிரினத்தை காணும் போது ஏற்படும் உணர்வு. அந்த உணர்வு நம்மை பயப்பட
வைக்ககூடியதாகவே இருக்கிறது இதற்கும் காரணம் உண்டு பரிணாமம்..

நாம் உடல் அளவில் பலவினமானவர்கள்
என்பதால் நம்மை காத்து கொள்ள மூளை எப்போதும் விழிப்புடனே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விழிப்புடன் இருக்கும் முளையால் முடிவுகள் அதிவேகத்தில் பெறப்படும்.

ஆகையால் தான் நாம் பூமியில் நிண்ட காலத்திற்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பரிமாணத்தை சற்று தள்ளி வைத்து விட்டு பயத்தை பற்றி பார்ப்போம்..

மனிதன் புதியனவைகளை கண்டால் பயப்படுகிறான் என்ற இந்த கூற்றை பலர் மறுத்தாலும்.

அது உண்மை தான் தெளிவாக சொல்ல போனால் தோற்றம் குறித்த பயம்.

வேற்றுகிரகவாசி நம்மை போன்று பரிணாமத்தில் வளர்ச்சி அடைந்திருக்கலாம், அவ்வாறு பரிணாமத்தில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அவர்கள் நம்மை போன்று தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.


டினோசார் போன்ற தோல் அமைப்புடன் கூட இருக்கலாம்.. ஏன் அவர்கள் நம்மை போன்றோ அல்லது நம்மை விட அழகாக கூட இருக்கலாம்.

குறிப்பு:- வேற்றுவாசிகளில்
அழகான இனம் Nordic..

அசிங்கமான இனம் Retallians..

அவர்கள் மனிதன் போன்ற உருவத்தில் இருந்தாலும் அவர்களை காணும் முதல் தருணம் நமக்கு பயம் ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கும்.

அதாவது மிகவும் அதிர்சியடைந்த
நிலையாகவே இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. ஏலியன்களை கண்டால் தான் பயமா? என்று கேட்டால் அதற்கும் இல்லை என்று தான் கூறுவேன்…

காரணம் இயற்கையில் மனிதன், உணவு, இருப்பிடம், விலங்கினங்கள், கருவிகள் என அனைத்தையும் பரிசோதனை மற்றும் அனுபவம் முறையில் தான் கண்டறிந்துள்ளான், இந்த முறையில் எந்த அளவிற்கு நன்மைகள் இருந்தனவோ அதே அளவிற்கு தீமைகளும் இருந்தன…

உதாரணத்திற்கு விஷமுடைய கனியை உண்ட பின் தான் அது விஷமுடையது என தெரிந்தது.. விளைவு ஒரு நன்மை ஒரு தீமை.. இந்த கனியை சாப்பிடக்கூடாது, சாப்பிட்டால் இறப்பு நிச்சயம் என்று. இந்த பயம் மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் முற்காலத்தில் காணப்பட்டது.


பரிசோதனை மற்றும் அனுபவம் முறையில் எக்கனிகள் சாப்பிடக்கூடியது
என தெரிந்த பின், கனிகளின் நிறங்களை கொண்டே இது
உண்ணக்கூடியது, இவை உண்ண தகுதியற்றது என பிரிக்க தொடங்கினான்.. இவ்வாறு அவன் செய்த ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக பயங்கள்
இருந்தன..

இந்த பயங்களின் தொகுப்பு இன்னும் நமது ஜீன்களுக்குள் நடமாடிக் கொண்டிருக்கிறது…

ஆகவே தான் அவன் புதியவைகளை அதாவது புதிய உருவத்தை கண்டால் பயப்படுகிறான்… நாம் அனைத்தையும் அறிந்துவிட்டதாக எண்ணிக்
கொண்டிருக்கிறோம்.. உண்மையை ஆராய்ந்தால் இன்னும் அவன் பூமியை
முழுவதுமாக ஆராயவில்லை..

அதாவது பூமியில் மனித காலடி தடம் படாத இடங்கள் பல உள்ளன. இதே போன்று பூமியில் காணப்படும் பல விலங்கினங்களை இன்னும் ஆராயபடவில்லை.

குறிப்பாக கடலில்… அவ்வாறு ஆராயும் போது சில உயிரினங்களை கண்டாலே நமக்கு பயம் வரும். அவைகளின் தோற்றம் நம்மை சற்று வியக்க வைக்கும்.

இந்த பயங்களுக்கு காராணம் நாம் நம் சுயக்கட்டுப்பாடை இழந்து அதாவது நம்
முன்னோர்கள் போன்று சிந்திப்பது தான்…

வேற்றுகிரகவாசியின் பறக்கும் தட்டு பற்றிய செய்தி வந்தால், அத்தருணத்தில் நாம் டிவி முன்னாடி வந்து அவற்றை நன்கு கவனிப்போம்….

என்ன ஏதாவது பறக்கும்தட்டு நினைவுக்கு வருகிறதா?

இவ்வாறு பயங்கள் நமக்கு தோன்றினாலும் அவை சில நிமிடங்களே நீடிக்கின்றன… நம் சிந்தனை மீண்டும் துண்டப்பட்டுவிடுகிறது..

நான் ஒன்றை கூற மறந்து விட்டேன் மனித இனம் ஆர்வமுடைய இனம் கூட, ஆகையால் தான் அது
தெரியாதவைகளை ஆராய்ந்து
தெரிந்து கொள்கிறது….

வேற்றுகிரகவாசி....


வேற்றுகிரகவாசி என்றவுடன்; சிலர் அவர்களை வரவேற்பேன் என்பார்கள், பலர் அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்வேன் என்பார்கள். வெகு சிலர் அட போங்கடா முட்டாபயளுகலா உங்களுக்கு வேறவேலையே இல்லையா? என்று கூறிவிட்டு வேலைகளை பார்க்க துவங்குவார்கள்..

நாங்கள்..  வெற்று வெறுப்பில் உள்ளவர்களுக்கும் சேர்த்தே இதை சொல்லி வைப்போம்..

வேற்றுகிரகவாசிகளை  வேற எங்கேயும் தேட வேண்டாம்  நம்ம தொகுதியில் தான் இருக்கிறார்கள்.

வேற்று கிரகவாசிகளின் கோள்களின் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கண்டதாவது நமது சூரிய குடும்பத்தை
தாண்டி 1700 கிரகங்களில் உயிர் வாழ கூடிய சூழ்நிலை உள்ளது.

சரி உயிர் வாழ சாத்தியமுண்டு என்று விஞ்ஞானிகள் எப்படி
அனுமானிக்கின்றனர்?

கண்டு பிடிக்கபட்ட கோளின் நிறம், கனிமங்கள், நிறை,சூரியனிலிருந்து அவை இருக்கும் தூரம், கோளின் சுழற்சி வேகம், ஆகியவற்றை கொண்டு அளக்கப்படுகிறது.

ஆனால் அவற்றை தாண்டி தட்பவெப்பம் உயிர் வாழ்க்கையில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது..

மேற்கூறிய அனைத்தும் இருந்தாலும் தட்பவெப்பமே உயிர்
உருவாவதற்கான சூழலை அமைக்கிறது…

இந்த தட்பவெப்ப நிலையை வியாழன் கிரக துணைக்கோளான ஐஒ உடன்
ஒப்பிடுகின்றனர். ஐஒ மிகக் கடும் குளிர் நிறைந்த பனிகோள். ஆனால் அங்கு உயிரிகள் வாழும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காரணம் மாபெரும் நிறை கொண்ட வியாழன் கிரகத்தின் ஈர்ப்பினால் உண்டான இழுவிசை காரணத்தினால்
ஐஓவின் பனிக்கடியில் வெப்பம்
உருவாகிறது.அந்த வெப்பத்தின் காரணமாக உயிரினங்கள் உருவாக்கி
இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

சரி வெப்பம் இருந்தால் தான் உயிரினம் தலைக்குமா? இல்லை.. இதற்கு நமது பூமியே அதற்கு ஆதாரம். பூமியில் மிக கடும் பனி மற்றும் குளிர் நிலவும் எவரெஸ்ட் போன்ற பனி பகுதிகளில் கூட உயிரினங்கள் வாழ்கின்றன என பல ஆராய்ச்சியின் மூலம்
விஞ்ஞானிகள் நிருப்பித்துள்ளனர்.

நாம் இதுவரைபூமி, நிலா, செவ்வாய், மேலும் நமது சூரிய குடும்பம் முழுவதையும் ஓரளவு ஆராய்ந்துள்ளோம்.

மேலும் சிலபல ஆராய்ச்சிகள் நம்முடைய சூரிய குடும்பம் வரை நீண்டாலும் அதை தாண்டி அல்பா செண்டரி, கெப்ளர் என அருகில்
இருக்கும் சூரிய குடும்பங்களும் ஆண்ட்ரோமிடா என்ற காலக்ஸிகளும் என்று பல உள்ளன.

இவை அனைத்திலும் அதனதன் சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் உருவாக்கி இருக்கலாம்.. இல்லை உருவாகி காலநிலை, தட்பவெப்பம்
காரணமாக அழிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்து
தெரிவிக்கின்றனர்.

நாம் அனுப்பிய வாயேஜர் 1,2
விண்வெளியை சுற்றி வருகிறது…

அது நம் அடையாளத்தை வேறு ஏதேனும்
வேற்றுக்கிரகவாசிகளுக்கு எடுத்துக் காட்டும் என நம்புகிறேன்..

தற்போது நாம் உருவாகும் செயற்கை அலைகள் அதிக வலிமையுடையதாக உள்ளது.

சில குறைவான அலை வரிசையில் உள்ளது.. இந்த சிக்னல்கள் நமது பூமியில் மட்டும் சுற்றி வட்டமிடவில்லை.. அதையும் தாண்டி விண்வெளியை அடைந்து விண்வெளியில் பயணிக்கிறது….

ஒன்னு சொல்லடுமா நாம் பேசுகின்ற மொழி ஒலியின் மூலக்கூறுகள் (Molecule) அனைத்தும் அழிவின்றி இந்த பிரபஞ்சத்தில் கலந்துள்ளது, நம் மூதாதையர்களின் பேச்சுகளும் இதில் அடங்கும்.

இவை நாம் பூமியில் இருக்கிறோம் என்றதொரு மற்றொரு அடையாளம்…..

இந்த அலைகள் மற்ற வேற்று கிரகவாசிகளுக்கு நாம் இருக்கும் இடத்தை எதிர்காலத்தில் காட்டி
கொடுக்கலாம்… அன்று வேற்று கிரகவாசிகள் வெற்றி காண்பார்கள் நாங்கள் வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்து விட்டோம் என...

போல் ஹெல்யர் (Paul Hellyer):..


1960களில் கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் இவர். கனடாவின் விமானப்படை, மற்றும் கடற்படை ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, இன்று இருக்கும் விதத்தில் கனடா இராணுவப் படைக் கட்டமைப்பு மாற்றியமைக்கப் பட்டதற்கு இவரே மூல காரணமாக இருந்தவர். கனடா அரசின் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதியுயர் மட்ட அதிகாரியாக இருந்தவர்.

இது மட்டுமல்லாமல் இவர் ஒரு பொறியியலாளராகவும், எழுத்தாளராகவும் கூட இருந்தவர். இவரது செல்வாக்கு எத்தகையது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

பறக்கும் தட்டுக்கள், மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய பல தகவல்களை வெளிப்படையாக உலகுக்குச் சொன்ன பிரபலமானவர்களுள், இவரது கருத்துக்களுக்கென்று தனி மரியாதை சர்வதேச மட்டத்தில் உண்டு. 

RT என்ற செய்தித் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது,
#இதுவரை_நான்கு_பிரதான_வேற்றுக்கிரகவாசி_இனங்கள் ஆதாரங்களோடு கண்டறியப் பட்டுள்ளன” என்று இவர் பச்சையாகவே குறிப்பிட்டார்.

பறக்கும் தட்டுக்கள் குறித்த முதலாவது நேரடி அனுபவம் இவருக்கு 1967ம் ஆண்டு தான் ஏற்பட்டது. ஜூன் மாதம் 3ம் திகதி 1967 இல், அமைச்சர் ஹெல்யர், அல்பெர்ட்டாவில் இருக்கும் செயின்ட் போல் நகரில் பறக்கும் தட்டுக்கள் தரையிறங்குவதற்காகவென்றே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமானத்தளம் ஒன்றை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைப்பதற்குச் சென்றிருந்தார்.

கனடாவின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டியே இந்தப் புதிய விமானத்தளம் இவரால் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு சென்ற அவரது ஹெலிகப்டர் தரையிறங்கும் போது, இறங்குதளத்துக்குப் பக்கத்தில் வடிவமைக்கப் பட்டிருந்த அறிவித்தல் பலகையில் விசித்திரமான ஒரு வாசகம் எழுதப் பட்டிருந்ததை அவர் வாசித்தார். அந்த வாசகம் இது தான்:

“பறக்கும் தட்டுக்கள் தரையிறங்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட உலகின் முதலாவது விமானத்தளமாக செயிண்ட் போல் விமானத்தளமே திகழ்கிறது. மனித இனம் பூமியின் எல்லையைத் தாண்டிய விண்வெளியில் சமாதானத்தை வேண்டுவதைப் பிரதிபலிக்கும் ஒரு சின்னமாகவே இந்த விமானத்தளம் திகழ்கிறது.

மேலும், வெவ்வேறு கிரகங்களுக்கு இடையில் பிரயாணம் செய்வோரது (Intergalactic beings) எதிர்காலப் பிரயாணங்கள் பாதுகாப்பானவையாக இருப்பதற்கான உத்தரவாதச் சின்னமாகவும் இது திகழ்கிறது. பூமியிலிருந்தும், மற்றும் வெளியுலகிலிருந்தும் வருகை தரக் கூடிய அனைவரையும் இந்த விமானத்தளமும், இந்த நகரமும் அன்போடு வரவேற்கிறது”

இந்தச் சம்பவத்துக்குப் பல ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் 2005ம் ஆண்டில், அமைச்சர் ஹெல்யர், வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிப் பகிரங்கமாகவே பல மீடியாக்களிலும் பேச ஆரம்பித்தார்.

செப்டம்பர் மாதம் 25ம் திகதி 2005 இல், டொரண்ட்டோ நகரில் நடைபெற்ற ஓய்வுபெற்ற அரசியல்வாதிகளின் சம்மேளனத்துக்கு சிறப்பு விருந்தினராக இவர் அழைக்கப் பட்டிருந்தார். அங்கு இவர் நிகழ்த்திய சொற்பொழிவின் போதும் பகிரங்கமாகவே வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய பல தகவல்களைப் போட்டு உடைத்தார்.

தனது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தனது நிலைபாடுகளை இவர் உலக அரங்கில் பகிரங்கப் படுத்த ஆரம்பித்தார்.

மேலும், இவரது கருத்துக்கள், ஒரு தனி நபரின் கருத்து எனும் அடிப்படையில் கூட அமைந்திருக்கவில்லை. மாறாக, இவரது வாக்குமூலங்களை நாலா புறங்களிலும் இருந்து நூற்றுக்கணக்கான இராணுவ உயர் அதிகாரிகள் ஊர்ஜிதப் படுத்தத் தொடங்கினர்.

மேலும், பல்வேறு நாடுகளில் இந்தக் காலப்பகுதியையொட்டி வெளியான உத்தியோகபூர்வமான பல அரச ஆவணங்கள் கூட..

வேற்றுக்கிரகவாசிகள் பற்றி இவர் முன்வைத்த கருத்துக்களை மேலும் உறுதிப்படுத்துவதாக இருந்தன. இது போன்ற பல்வேறு அடிப்படைகளில் வேற்றுக்கிரகவாசிகளின் மர்மம் மிக்க நடவடிக்கைகள் பற்றி இவர் மக்கள் மன்றத்தில் முன்வைத்த கருத்துக்கள் மறுக்க முடியாதவாறு நிரூபனமாயின.

போல் ஹெல்யர் குறிப்பிட்ட அந்த நான்கு வேற்றுகிரகவாசி இனங்கள் யாவை? என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்..

காது வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்.?


உடலில் உண்டாகும் எல்லா பிரச்னைகளையும் கவனிக்கும் நாம் காது சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

அப்படி காது வலி போன்ற பிரச்னைகள் வந்தால், எப்படி சமாளிப்பது?

1. நாயுருவிச் செடியின் இலையில் இருந்து சாறு எடுத்து, காதில் இரண்டு சொட்டுகள் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

2. மாதுளம் பழச் சாறு எடுத்து, சிறிது சூடாக்கி ஆறிய பிறகு காதில் இரண்டு சொட்டுகள் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

3. கற்றாழையைத் தீயில் லேசாக வாட்டி அதில் இருந்து சாறு பிழிந்து, காதில் மூன்று சொட்டுகள் விட்டால் சீழ் வடிவது நின்றுபோகும்.

4. தென்னை மர வேரின் சிறு பகுதியை எடுத்து அரைத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு சூடுபடுத்தி, ஆறிய பிறகு இரண்டு சொட்டுகளைக் காதில் விட்டால் காது வலி குணமாகும்.

5. வெள்ளைப் பூண்டை (3) நன்றாக அரைத்து பஞ்சில் ஒற்றி எடுத்து, இரவு படுக்கும்போது அந்தப் பஞ்சை காதில் வைத்துக்கொண்டு துாங்க வேண்டும். இப்படித் தொடர்ந்து மூன்று நாள்கள் செய்தால், காது இரைச்சல் குணமாகும்.

6. வசம்பைச் சுடும்போது வரும் புகையை, காதுக்குள் செலுத்திக் கொண்டால் காது இரைச்சல் குணமாகும்.

7. காதில் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டு பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டால், காது குடைச்சல் சரியாகி விடும். காதில் அதிக சாறு விடக் கூடாது. கவனம் தேவை.

8. காதில் மூன்று சொட்டு தாழம்பூ சாறு விட்டால், காது வலி குணமாகும்.

9. மணத்தக்காளிக் கீரை, துளசி இரண்டையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து காதில் மூன்று சொட்டுகள் விட்டுக்கொண்டால் காது வலி சரியாகும்.

10. எருக்கம் பூ மொட்டை எடுத்துக் கசக்கி காதில் இரண்டு சொட்டு விட்டால், காது வலி குணமாகும்.

11. வெற்றிலைச் சாற்றை மூன்று சொட்டு காதில் விட்டால் காது வலி குணமாகும்...

பணம் எனும் மாயை...


துபாய் ஷார்ஜா நகரில் ஆறு வயது சிறுமி வீட்டிலிருக்கும் மொபைலை எடுத்து விளையாட்டுத்தனமாக சும்மா மூன்று பட்டனை அமர்த்தி போன் செய்வது போல் காதில் வைத்துள்ளார்...


ஆனால் குழந்தை சுமையா அமர்த்திய நம்பர் துபாய் கண்ட்ரோல் போலீசிற்க்கு சென்றுவிட அவர்கள் போன் அட்டன் செய்து யார் என கேட்டால் ஒரு குழந்தையின் குரல் உடனே நிலமையை புரிந்து அன்போடு உன் பெயர் என்ன என கேட்டதும் சுமையா என்று சொல்ல உனக்கு என்ன வேணும் என்றதும் எனக்கு இப்பவே பெருநாள் கிஃப்ட் வேணும் என சொல்லியிருக்கிறாள் சுமையா அவர்கள் சிரித்துக்கொண்டே போனை கட் செய்து அந்த மொபைல் நம்பர் உள்ள வீட்டை கண்டுபிடித்து பெருநாள் கிஃப்டோடு சென்றுவிட்டனர்.

பெருநாள் அதுவுமா வீட்டுக்கு போலீஸ் வந்ததும் சுமையாவின் பெற்றோர் குழப்பமான மனதோடு போலீசை பார்க்க அவர்கள் பயப்பட வேணாம் நாங்க சுமையாவுக்கு கிஃப்ட் கொடுக்கவே வந்தோம் என கூறி கைநிறைய அன்பளிப்புகளை அள்ளி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

காவல்துறை  உண்மையாக மக்களின் நண்பனாக இருந்தால் யார்தான் வெறுக்கப் போகிறார்கள்?

மக்களை நேசிக்கும் எல்லா காவலர்களுக்கும் மக்கள் நண்பர்களே...

சேலம்- சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை அரசு கைவிடாவிட்டால் புரட்சி வெடிக்கும் - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை...


பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம் - நந்தினி கைது...


தமிழ்நாட்டில்  பி.ஜே.பி நடத்தும் சட்டவிரோதமான காட்டாட்சியைக் கண்டித்து டெல்லியில் வருகிற ஜூன்-25அன்று பிரதமர் மோடி வீட்டு முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில்.. மோடி வீட்டின் முன் போராட்டம் நடத்துவதை தடுக்க நந்தினி, அப்பா ஆனந்தன் இருவரையும் காவல்துறையினர் இன்று வீட்டிற்கே வந்து வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்...

இலுமினாட்டி ரோத்ஸ்சைல்டு இங்கிலாந்தை வாங்கியது எப்படி..?


வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் என தெரியுமா..?


வளைகாப்பு, கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும், ஏக்கமும் இருக்கும்..

வெறும் நிகழ்வாக இருந்தால் ஏன் அதை குறிப்பிட்டு ஏழாவது மாதத்தில் செய்ய வேண்டும்..

ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் செய்யலாமே என்ற கேள்வி என்றாவது உங்களுக்குள் எழுந்திருக்கிறதா..?

அதற்கான விடை தான் இந்த கட்டுரை..

நமது முன்னோர்கள் எதையும் கண்மூடித்தனமாக செய்துவிட்டு செல்லவில்லை..

அனைத்திற்கும் பின், நுண்ணறிவும், அறிவியலும் புதைந்திருக்கிறது..

முக்கியமாக இந்த வளைகாப்பு சடங்கிலும் கூட..

கர்பிணி எப்போது தன் கணவனை பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, ஏன் எதற்கு என அனைத்திற்கும் காரணம் இருக்கின்றன..

காரணம் 1..

ஏழாவது மாதத்திற்கு பிறகு கணவன், மனைவி உடலுறவில் ஈடுபடுவது அபாயம். இதனால், பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி இருவரையும் பிரித்து வைக்கின்றனர்..

காரணம் 2..

ஏழு மாதத்திற்கு பிறகு தம்பதிகள் உறவில் ஈடுபட்டால் கருவில் வளரும் குழந்தை திரும்பிக் கொள்ளும், மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்..

காரணம் 3..

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு மன தைரியம் ஊட்டவும் வளைகாப்பு நடத்தப்படுகிறது.
பிள்ளை பெற்று நாங்கள் இவ்வளவு பேர் தைரியமாக, ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை காட்ட தான் பிள்ளை பெற்ற பெண்களை வளைகாப்பிற்கு அழைக்கின்றனர்.

காரணம் 4..

மேலும், வளைகாப்பில் வளையல் போடும் நிகழ்வு சிறப்புக்குரியது.
ஆம், கர்ப்பிணி பெண்ணின் வளையல் ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு தாலாட்டு போன்றது, இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்..

காரணம் 5..

ஏழாவது மாதம் மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் துவக்கம்.
இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் சிசு இருவருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம்.
வளைகாப்பு நிகழ்வின் போது உறவினர்கள் எல்லாரும் ஏழு விதமான அறுசுவை உணவுகள் தந்து கர்ப்பிணி பெண்ணை ஆசீர்வாதம் செய்வார்கள்.
இதனால் கர்ப்பிணி மற்றும் கருவில் வளரும் சிசுவும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் பெற்று ஆரோக்கியமாக இருப்பார்கள்..

காரணம் 6..

சுகப்பிரசவம் ஆகவேண்டும் அதற்கு கர்ப்பிணி பெண்ணுக்கு மன நலமும், உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் வளைகாப்பு என்னும் நிகழ்வே நடத்தப்படுகிறது.. அதிலும், முக்கியமாக ஏழாவது மாதத்தில்.
இவை யாவும் நுண்ணறிவுடன் முன்னோர்கள் செய்து வைத்துவிட்டு போன சம்பிரதாயங்கள்..

காரணம் 7..

மேலும், சுகப்பிரசவம் நடக்க, தாயும், சேயும் நலமுடன் இருக்க வளைகாப்பு நல்ல பயனளிக்கும் வகையில் அமையும் நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால், இன்றோ பெண்கள் சுக பிரசவம் என்றாலே அச்சம் கொள்கின்றனர். அதற்கு காரணம், சரியான அளவு உடல் வேலை இல்லை, உடலில் தெம்பும் இல்லை..

எனவே, வலியை மனதில் கொண்டு சிசேரியன் செய்துக் கொள்ள தலையாட்டி விடுகிறார்கள்...

சேலம் 8 வழி சாலை : அரசு வெளியிட்ட அறிவிப்பு, அரசின் இணையத்திலும் உள்ளது...


திராவிடலு பகுதி - 9...


அன்றைய மதராச மாகாணத்தில் 1916ல் முதல் திராவிடக்கட்சியான 'நீதிக்கட்சி' பிறந்ததும் அதோடு சேர்ந்து தமிழ்,தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மூன்று நாளிதழ்கள் பிறந்தன.

தமிழ் - திராவிடம்
தெலுங்கு- ஆந்திர பிரகாசிகா
ஆங்கிலம்- ஜஸ்டிஸ்

இதில் தெலுங்கில் திராவிடப் பெயர் பயன்படுத்தப்படவில்லை என்பதை கூர்ந்து நோக்குக.

அதாவது தமிழரை திராவிடர் என்று ஏமாற்றிவிட்டு, ஆந்திரருக்கு முன் அவர்கள் இனத்திற்கான கட்சியாகவே ஜஸ்டிஸ் கட்சி காட்டிக் கொண்டது புலனாகும்.

இக்கட்சியை இனி 'ஐஸ்டிஸ்' கட்சி என்றே அழைப்போம்.

இந்த கட்சி அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சி செலுத்திய அழகைப் பார்ப்போம்.

இக்கட்சி ஆண்ட 1916 முதல் 1936 வரையான காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர்களைப் பார்ப்போம்.

திரு.ஏ.சுப்புராயலு ரெட்டி
(7-12-20 முதல் 11-77-21)
பனகல் அரசர்
(19-12-23 முதல் 3-12-26)
திரு.பி.முனுசாமி நாயுடு
(27-10-30முதல் 4-11-32)
பொப்பிலி அரசர்
(5-11-32 முதல் 1-4-37)
சர்.கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
(1-4-37 முதல் 14-7-37)

இவர்களில் எவரும் தமிழர்  இல்லை. எப்படி இருப்பர் ?

திராவிடம் என்பதே தமிழ்ப்பிராமணரை (அதாவது தமிழரை) பின்னுக்குத் தள்ளப் பிறந்ததாயிற்றே..

நன்கு கவனிக்க இவர்கள் அனைவரும் ஆதிக்கவர்த்தினர் ஆவர்.

அதற்காக அக்கட்சியில் தமிழர் குறைவென்று நினைக்க வேண்டாம்.

தமிழ் வாக்காளர் குறைவென்றும் நினைக்கவேண்டாம்.

சரி.நிறையபேர் தாழ்த்தப்பட்டோர்க்கு உரிமை பெற்றுத்தருவதே திராவிடம் என்று முழங்குகின்றனர்.

கிடையவே கிடையாது.

வந்தேறிய பிராமணரிடம் குவிந்து இருக்கும் அதிகாரத்தை மண்ணின் மைந்தருக்கு (அதாவது அவர்கள் பார்வையில் திராவிடருக்கு) பெற்றுத் தருவதாகக் கூறிக்கொண்டு தாழ்த்தப்பட்ட, பிராமணரல்லாத தமிழர் வாக்குகளைப் பெற்ற பிறகு, அவ்வாக்குறுதியை ஒருநாளும்  நிறைவேற்றியதில்லை.

அக்கட்சியில் திரு.ரெட்டைமலை சீனிவாசன், திரு.எம்.சி.ராசா, திரு.வி.ஐ.முனுசாமி, திரு.என்.சிவராஜ் ஆகியப் பட்டதாரி தாழ்த்தப்பட்டத் தலைவர்கள் முன்னனியிலிருந்தனர்.

இவர்களில் எவரும் ஒருமுறைகூட அமைச்சராகவிட்டதில்லை.

திராவிடம் என்பது பிராமணரின் அதிகாரத்தை மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் பிடுங்கிக்கொள்ள உருவாக்கப்பட்டது.

அதாவது தமிழ்நாட்டில் மட்டும்.

அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி இனி எந்தக்காலமானாலும் சரிஆந்திர - கேரள - கன்னட மக்கள்  தம் இனத்தைக் கூறுபோடும் திராவிடத்தைத் துளியும் ஏற்றுக்கொள்வதில்லை.

தமிழகத்தில் கட்சிப் பெயர்களில் திராவிடம், தாழ்த்தப்பட்டோரைக் குறிக்க ஆதிதிராவிடர் எனும் சொற்றொடர் எல்லாம் திட்டமிட்டே புகுத்தப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டத் தெலுங்கு மக்கள் ஆதிதெலுங்கர் என்றே அழைக்கப்படுகின்றனர்.

தமிழகம் தவிர மற்ற எந்த இடத்திலும் திராவிடம் என்கிற பெயரோ, இயக்கமோ, கட்சியோ, நாளிதழோ எதுவும் இன்றுவரை வழக்கில் இல்லை.

திராவிடம் என்பது தமிழரை ஏமாற்றி தமிழகத்தை வேற்றினத்தவரின் கல்வி, வேலை மற்றும் தொழில் வேட்டைக்களமாக மாற்றித்தருவதே ஆகும்.

1936 ல் நடந்ததைப்பற்றி இப்போதென்ன கவலை என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம் இன்றும் தமிழர் தமது அத்தனையையும் வேற்றினத்தவருக்கு 'மொய்' எழுதிவருகின்றனர்.

மற்ற இனத்தவரிடம் பரப்புரை செய்யாமலேயே இயல்பாக இருந்த இனவுணர்வு அவர்களைக் கொடிய திராவிடத்திலிருந்து காத்தது, ஆனால் அன்றையத் தமிழுணர்வாளர் கரடியாய்க் கத்தியும்கூடத் தமிழருக்கு அதெல்லாம் 'செவிடன் காதில் ஊதிய சங்காகிப்' போனது.

அந்தத்தவறை இன்று நாமும் செய்யக்கூடாது.

திராவிடத்தின் பிறவி குணத்தைத் தெரிந்து கொண்டோம்.

மேலும் அலசலாம் தான்.

ஆனால் இது ஒரு குறிப்பிட்டக் கட்சியை விமர்சிப்பதாகிவிடும்.

1930க்குப் பிறகு திராவிடத்தின் அசுரப்பாய்ச்சல் பற்றியும், திராவிடம்  புதுவடிவம் எடுத்ததாகவும் தவறுகள் களையப்பட்டதாகவும் திராவிடவாதிகள் கூறலாம்.

அதையும் அலசத்தானே போகிறோம்...

- தொடரும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


உடற்கூறு கணிதம்: 21600 மூச்சுக்காற்று...


எண்ணும் எழுத்தும் - 21600 மூச்சுக்காற்று...

உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது.

இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம்.

இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது.

ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள்.

இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம் (அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.

உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.

ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

அருளொலி வீசும் ஆன்மா (அ+உ+ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.

இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.

அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.

இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும்.

பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை.

5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.

இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். இதுவே அனைத்து வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்வதும்.

நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்ரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.

10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரத்தை உச்சரிக்க நமக்கு ஒரு மூச்சை அதாவது நான்கு விநாடி செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூச்சின் கணக்கு...

1. ஒரு நாள் நாம் விடும் மூச்சு 21600 . இதில் நாளின் முதல் பாதியில் 10800 மறு பாதியில் 10800.

2. ஒரு மூச்சென்பது நான்கு விநாடிகள்.

நேரத்தின் கணக்கு...

1. 24 மணிநேரம் x 60 நிமிடங்கள் = 1440 நிமிடங்கள்.

2. 1440 நிமிடங்கள்x 60 விநாடிகள்= 86400 விநாடிகள்; 86400/21600 = 4 விநாடிகள்= 1 மூச்சு.

3. 1 கடிகை என்பது 24 நிமிடங்கள்= 1440 விநாடிகள் (=360 மூச்சுக்கள் ).

சித்தர் வான்வெளியின் நேரக் கணக்கு...

1. ஒரு சதுர்யுகம் = 1 கல்ப வருடம்/1000.

2. 10 வார்த்தைகளைக் கொண்ட அட்சரம் = 1 மூச்சு (மூச்சு = 4 விநாடிகள்) 360 மூச்சுக்கள் = 1 கடிகை (=24 நிமிடங்கள்).

3. 60 கடிகைகள் = 1 நாள்.

4. 1 சதுர்யுகம் = 4320000 சூரிய வருடங்கள்.

ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது..

1. கிரேதா யுகம் = 1728000 சூரிய வருடங்கள்.

2. திரேதா யுகம் = 1296000 சூரிய வருடங்கள்.

3. துவாபர யுகம் = 864000 சூரிய வருடங்கள்.

4. கலி யுகம் = 432000 சூரிய வருடங்கள்.

நந்தனார் கீர்த்தனையில் 'எட்டும் இரண்டமறியாத மூடன்' என்கிறார்.

8 என்பது 'அ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது.

2 என்பது 'உ' காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது.

இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8*2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்
தகும்...

பாஜக கைகூலி கலெக்டர் ரோகினி முகத்திரை மகக்கள் முன்பு கிழிந்து கொண்டே வருகிறது...


பூமி மீண்டும் ஒரு தண்ணீர் உலகமாக மாறப்போகுதாம்...


மேற்பரப்பில் உள்ள நிலம் முழுவதும்
மறைந்து பூமி மீண்டும் ஒரு தண்ணீர்
உலகமாக மாறிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவில், கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாகவும் இதனால் இன்னும் 2 பில்லியன் ஆண்டுகளில் பூமி மீண்டும் ஒரு தண்ணீர் உலகமாக மாறிவிடும் எனவும்
கூறப்பட்டுள்ளது...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக... இரகசியமாக வழக்கறிஞர்களை கைது செய்யும் காவல்துறை...


வேம்பு என்பது வேப்ப மரமும்...


வேம்பு என்பது வேப்ப மரம் தான். இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாகிசுத்தானும் தான்.

பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். இது சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது.

நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம்.  பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள்.

வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம்.

இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்...

வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.

வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.

வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.

வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.

உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீழ் வாதம் தீரும்.

5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.

வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.

வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.

வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். தொழுநோய் (குஷ்ட )நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.

வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு குவளை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி இவை குணமாகும்.

வேப்பம்பட்டை 5 பலம், காசறை (கஸ்தூரி) மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு 50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும்.

உரிய பதம் வந்ததும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால்  மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.

வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.

எல்லாப் பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேம்பு வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும்.

வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல் துலக்கி வந்தால் வாய் துர் நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும்.

உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

காய சித்தியாகும் கடி யசிலேச்(ஷ்)ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம் – தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்தக்கும் வேம்பதற்கு தேர்.
                                                            அகத்தியர்.

குட்டநோய் பதினெட்டும் தீர்வதற்கு………

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
ஏனமுதற் ச(ஜ)லமிக்க கொழுந்தைக் கிள்ளி
இன்பமுடன் தின்று வாயிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டுப் போகும்ப்பா அறிந்து கொள்ளே
கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
குட்டமென்ற பதினெட்டு வகையுந் தீரும்.

கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும்.

வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.

காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்...

இன்றைய குழந்தைகள் எதை கற்று கொள்கிறார்கள் தெரியுமா.?