06/10/2018

தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்...


தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sponsored by Revcontent

The Largest Demand Going into the Future - Where's the Supply Coming From?
SXSTREET

இந்நிலையில் தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் 7-ம் தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடல் காற்று பலமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கு 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம் உள்ளிட்ட 15 மண்டலங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் கொத்தவாசேரியில் 9.3 செ.மீ மழை, விழுப்புரம், குன்னூரில் 8 செ.மீ., கடலூர் வானமாதேவி, நீலகிரி பர்லியாற்றில் 7 செ.மீ மழை

தென்காசி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குமரி மாவட்ட மீனவர்கள் 800 பேர் கரை திரும்பவில்லை. முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 557 விசைப்படகுகள் கரைதிரும்பின.

80 படகுகளில் சென்ற 800 மீனவர்கள் கரை திரும்பவில்லை. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் விமானப்படை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது...

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்...


சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அக்டோபர் 7ஆம் தேதி அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதனை கண்காணிக்கவும் சென்னையிலுள்ள 15 மண்டலங்களுக்கும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகளும் இன்று முதல் பணிகளை தொடங்கவிருக்கிறார்கள்...

கன்னட கமல் எனும் அரசியல் உளவாளி...


தொண்டனுக்கு தோள் கொடுப்போம். - திமுக உதயநிதி ஸ்டாலின்...


வாழைப்பழத்த எல்லாம் மொத்த குடும்பமும் தின்னுட்டு தோலை மட்டும் தொண்டனுக்கு தருவீர்கள் அதானே...?

தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை சப்ளை செய்த தெலுங்கர் வைகோ & கோ...


நான் பெறாத மகன் வைகோ -- வைகோவுக்கு வாஜ்பாய் புகழாரம்...

வைகோ பாஜக கூட்டணி வாஜ்பாயின் தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கிய போது அந்த கூட்டணியில் அமுக்கமாக எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தார்  வைகோ...

வைகோ கூட்டணி வாஜ்பாய் அரசு பல்வேறு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது.

INS SARAYU என்னும் கப்பலை வாஜ்பாய் அரசாங்கம் இலங்கைக்கு கொடுத்தது. இந்தக் கப்பலை பயன்படுத்தி 10/03/2003 விடுதலைப் புலிகளின் கப்பலை இலங்கை கடற்படை அழித்தது. அதற்குப் பிறகு விடுதலைப் புலிகளின் கப்பல்களில் 8 கப்பல்களை அழிப்பதற்கு இந்தக் கப்பல்தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

தரையிலிருந்து வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் (SURFACE TO AIR MISSILES) (IGLA LAUNCHERS) மொத்தம் 36 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன.

உலகிலேயே அதிக உயரத்திற்கு பறக்கும் தன்மை படைத்த CHEETAH ஹெலிகாப்டர்கள் 3 வாஜ்பாய் அரசால், இலங்கைக்கு வழங்கப்பட்டன .

போபர்ஸ் நிறுவனத்தின் விமான எதிர்ப்பு தானியங்கி துப்பாக்கிகள் (40 MM AUTOMATIC ANTI AIRCRAFT GUN) மொத்தம் 24 வாஜ்பாய் அரசால் கொடுக்கப்பட்டன

கண்ணிவெடிகளில் இருந்து பாதுகாக்கும் வாகனங்கள் (MINE PROTECTED VEHICLES) 10 வாகனங்களை வாஜ்பாய் அரசாங்கம் கொடுத்தது.

இலங்கை ராணுவ திற்கு சிறப்பு பயிற்சி கொடுத்தது இந்திய அரசாங்கம்.

இது தவிர, வாஜ்பாய் அரசாங்கம் ராடார்களையும் இலங்கை அரசிற்கு கொடுத்தது.

இங்கே நான் அளித்திருக்கும் பட்டியல் முழுமையானது அல்ல சில மட்டுமே.

வைகோவை பற்றி இன்னும் தெளிவாக புரிந்துகொள்வதற்கு 2008 இல் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது 2007 செப்டம்பரில் இந்தியா மேலும் இரண்டு கப்பல்களை இலங்கை அரசிற்கு கொடுக்கின்றது. VARAHA என்ற கப்பலையும் VIGRAHA என்ற கப்பலையும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒருவருட கால லீஸ்க்கு கொடுக்கிறது, அது ஒவ்வொரு வருடம் நீடிக்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது[80]. அந்த கப்பல் சென்னையில் நிலைநிறுத்தபட்ட கப்பல். இதனை சென்னையில் வைத்து கொடுத்தால் இங்கே எதிர்ப்புகள் எழக்கூடும் என்பதற்காக அந்த கப்பலை விசாகபட்டினத்திற்கு கொண்டு சென்று, அங்கே வைத்து கோத்தபய ராஜபக்சேவிடம் கொடுத்தார்கள்.

அந்த கப்பல் தான் விடுதலைபுலிகள் அமைப்பின் கடைசி இரண்டு கப்பல்களை அழிப்பதற்கு மிக பெரும் பங்காற்றியது. அதிலும் குறிப்பாக விடுதலைபுலிகள் அமைப்பின் ஆயுத கிடங்கு கப்பலை இலங்கை, ஈழ கடற்பரப்பில் இருந்து 1860 மைல்கள் தொலைவிற்கு விரட்டிச்சென்று அங்கு வைத்து அழித்தது.

எதிரியை விட துரோகி ஆபத்தானவன்..

சிந்தியுங்கள் தோழர்களே..

- தமிழர்.திரு.உமர்

நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை?

– உமரின் ஆவணத்தில் உள்ள சில குறிப்புகள்...

புவிகுள்ளாற இருக்கிறதெல்லாம் தோண்டி வேதாந்தா, ரிலையன்ஸ் ன்னு அள்ளி கொடுக்குறதால இந்த 'புரவலர்' விருதோ?


சித்தர் ஆவது எப்படி - 7...


சாமியே சரணம் குருவே சரணம்...

சாமியே சரணம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.. சாமியை பிரித்தால் ச்+ ஆம்+ இ ஆக பிரியும்..

ச் என்ற நிகழ் காலம் ஆம் என்று அப்படியாய் இ என்று இருப்பவனே என பொருளாய் அமையும்...

சாமி என்றால் நிகழ் காலமாய் இருப்பவன் என பொருள்..

சாமியே என்று கடவுள் சிலைக்கு முன் வேண்டும் பக்தன், சிலையை சிலையாகத் தான் பார்கின்றானே தவிர அதை சாமியாக பார்ப்பதில்லை.. வேண்டுதல் என்ற செயல் பாட்டிற்கு முன்னே நிகழ் காலம் காணாமல் போய் விடுகிறது..

எண்ண ஆதிக்கங்கள் விளைவாக வேண்டுதல் எதிர்காலமாக தொடர்ந்தால் அங்கே நிகழ் காலம் இருக்க முடியாது..

சிலை என்பது ச் + இலை அதாவது நிகழ் காலம் இல்லை என பொருள்..

அது மட்டுமா மனிதன் சிலை அல்லாத உயிரோட்டம் உள்ள ஜீவர்களையுமே சிலை வடிவாகத் தான் பார்க்கிறான்..

அப்படி அன்பு நிலை இல்லாது சிலை வடிவாக அனைத்தையும் காணும்
பண்பு எதனால் வந்தது?..

நீர் பூதமாகிய சித்தத்தில் நிறைந்துள்ள பழைய எண்ண பதிவுகளின் ஆதிக்கமே காரணம்..

சிவம் என்ற சொல் நிகழ் கால குறிக்க வந்த சொல் என்பதை முன்பே அறிந்தோம்...

அந்த நிகழ் காலமாய் மாறினால் மட்டுமே அன்பு என்பது உருவாகி சிவமே அன்பாகும் அல்லது அன்பே சிவமாகும்..

இந்த நிகழ் காலத்தில் அன்பு ஒன்று மட்டுமே உருவாகி இருப்பதால், சித்தத்தின் எண்ண ஆதிக்கம் இருக்கவே இருக்காது..

இப்படி சிலையை சாமி ஆக்க, அன்பு மலர, சிவம் தோன்ற, நிகழ் காலம் உதிக்க ஒரு சக்தி தேவை படிகிறது அல்லவா அது தான் குரு என்பது...

அந்த குரு, இரு என்ற நிலையில் இருந்து உருவாகிறது..

இரு என்ற இருத்தல் நிலை உருவாகும் வரை குரு தோன்றவே மாட்டார்..

எல்லா எண்ணங்களும் கற்பனை செயல் வடிவாய் இருப்பதால் இருத்தல் என்பது அதற்கு தெரியவே தெரியாது...

செயலாகிய இயக்கம் இருக்கும் இடத்தில் எப்படி இருத்தல்,நிலைத்தல், ஒய்வு, அமைதி இருக்க முடியும் ?...

கற்பனை செயல் வடிவமாக, பிரகாசமாக இருந்து, கனல் என்ற பேரண்ட மூல ஆற்றலை, விரையமாக்கும்...

சித்தத்தின் எண்ண ஆதிக்கம் இல்லாத ஒரு இடம் தான், தொட்டு காட்டக் கூடிய தகுதியான ஒரு இடம் ஆகும்..

அங்கே மட்டுமே, இருத்தல் என்ற கனலின் இருப்பு நிலையை அடையாளம் காண முடியும்..

கனலின் இருப்பு நிலை என்பது கனலின் நிலையாய் நின்ற நிலை அதாவது static energy.. அதாவது கனல் சேமித்த அல்லது சேமிக்கப் பட்ட நிலை...

இந்த சேமித்த கனல் தான், புத்தி என்ற பூதமாய் பேரறிவின் துணையோடு சக்தி வாய்ந்த குருவாய் மலர, உருவாகத் தொடங்குகிறது..

குரு என்பது பிரிந்தால் க்+உரு ஆகும்..

க் என்றால் கடவுள் தன்மையிலிருந்து பெறும் கனல் சக்தி ஆகும்..

உரு என்பது உருவாகி பயன்பாட்டிற்கு வருவதாகும்...

சேமிக்கப் பட்ட கனலால் மட்டுமே, வலுவடைந்த புத்தி, குருவாய் எழுந்து செயலாற்ற தொடங்க முடியும்...

அப்படி கனலை பெருக்கும் பயிற்சிதான் கனல் தீட்சை என்கின்றனர்..

திருவடி தீட்சையும் நாத தீட்சையும் நயன தீட்சையும் கனல் தீட்சையின் உட் பிரிவாக உள்ளன...

ஆனால் வாசி யோகத்தில் இந்த கனல் தீட்சை மிக மிக எளிமையானது.. விரைவில் கனலை அதிகப் படுத்தக் கூடியது..

முறை தவறி போன வாசியோகத்தில் அங்கே கனல் பெருக்கத்திற்கு பதிலாக கனல் சுருக்கம் ஏற்பட்டு புத்தி வலு இழந்து போன அவல நிலைதான்..

ஆகவே முறையற்ற வாசியோகம், கனலை காட்ட தவறி விட்டது என்றே தோன்றுகிறது.. காரணம் தோன்றா நிலையாகிய பேரறிவு அதில் அனுபவப் படாததே...

வாசியோகத்தில் எவ்வாறு இந்த கனல் பெருக்கம் ஏற்படுகிறது என்பதை சற்று கவனிப்போம்.. குரு உருவாகாதவரை, சித்தத்தின் ஆதிக்கத்தை வேறு எந்த பூதத்தாலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது...

அதே சமயம் சித்தத்தின் ஆதிக்கம் இருக்கும் வரை குரு உருவாக மாட்டார்..

இந்த இக்கட்டான சூழ்நிலைதான் மனிதனை மேல் நிலைக்கு ஏற விடாமல் செய்கிறது..

இதிலிருந்து மீள தான் சித்தர்கள் வாசி யோகத்தை கண்டு அறிந்து பயின்றார்கள்..

சித்தத்திலிருந்து எண்ண ஆதிக்கங்கள் எழ அதற்கு சக்தி வேண்டும்..

சக்தி கிடைக்காவிட்டால் அது சித்தம் என்ற நீர் பூதத்தின் உள்ளே புதைந்தே கிடக்கும்..

கனல் சக்தி என்பது சதா காலமும் பேரண்ட பேராற்றலாய் சீராக கிடைக்கக் கூடிய ஓன்று..

எந்த ஏற்ற தாழ்வும் இன்றி சீராக கிடைக்கும் கனல் என்ற சக்தியை சித்தத்தின் எண்ண ஆதிக்கம் உறிஞ்சாத போது கனல் சற்று தேகத்திற்கு மனம் கொடுக்கிறது..

அப்படி பெற்ற ஆற்றலின் மூலம் தேகம், தான் தூக்கத்தில் பெற்ற ஆற்றலோடு இணைத்து ஈடு கட்டிக் கொள்கிறது..

சித்தத்தின் அதி மிக எண்ண ஆதிக்கம், அப்படி தேகம் ஈடு கட்டும் ஆற்றலையும், உறிஞ்சி வாங்கி கொள்ளும் போது, தேகம் விரைவாக ஈடு கட்டும் ஆற்றல் இன்றி சோர்வு அடைகிறது...

இதன் மூலம் அறியப் படும் இரகசியம் என்ன வென்றால், சித்தத்தின் எண்ண ஆதிக்கம் வலு இழக்கச் செய்யும் முறையிலும், அப்படி வலு இழந்த கால அளவை நீடிக்க செய்வதின் மூலமும் புத்தி அதிக கனலை பெற முடியும்..

சித்தத்தை வலு இழக்க செய்ய வல்லது எது.. வாசி யோகத்தில் மூச்சின் சூரிய கலையாகிய வெளி மூச்சில் சித்தம் சிறுக சிறுக வலு இழந்து சூரிய கலையின் முடிவில் முழுமையாக வலு இழந்து விடுகிறது..

அந்த இடத்தை புத்தியும் அறிவும் பிடித்துக்கொள்ளும் பொழுது அங்கே அகப்படும் கனல் அனைத்தையும் புத்தியும் அறிவும் பெற்றுக் கொள்கிறது..

சூரிய கலையில் வலு இழந்த அந்த முடிவான இடத்தின் தளர்ந்த அமைதியான சூழ்நிலையை அனுபவமாக அறிவு பற்றிக் கொள்ளும்...

அத்தகைய சூரிய கலையின் இரண்டரை விநாடி முழுமைக்கும் அளப்பறிய கனலை பெற்றுக்கொள்ளும் ஒரு அற்புத நிகழ்வினை எமது வாசி யோக பயிற்சியில் அனுபவப் பட்டீர்கள் என நம்புகிறேன்..

இதில் அனுபவ அறிவு தான் கனலை பெறும் கால அளவினை விரிவாக்கம் செய்ய கூடியது.. இதனை சுட்டி காட்டாத இன்றைய வாசியோகம், அற்ப கனலை மட்டுமே பெற்று, அதனையும் முறையற்ற பயிற்சியின் தீவிரத்தில் இழந்து விடுகிறது...

நம் முறையான வாசியோகத்தில் இப்படியாக பெற்ற கனல் உருவாகி குரு பலமாகிறார்..

பலப் பட்ட குரு தான் நமக்கு எல்லா வகையிலும் புத்தியாக இருந்து சிறந்த வழி காட்டியாக இருக்கிறார்..

அனுபவ அறிவின் துணையை இனி வரும் பகுதியில் கண்டு குரு பீடத்தை வலு படுவதை காணலாம்...

இதுவும் இனி வரும் பகுதிகளும் சற்று கடினமானவை...

சிலை கடத்தல் வழக்கில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு...


அமெரிக்க விடுதலைப் போரும், அதைத் தூண்டிய வரிவிதிப்பும்...


அமெரிக்கா என்ற நாடு உருவான வரலாறு தெரியுமா?

அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து அதன் பூர்வகுடிகளை கொன்றுவிட்டு (ஸ்பானியர்களுக்கு அடுத்ததாக) ஆங்கிலேயர் குடியேறிக்கொண்டனர்.

மிகப்பெரிய நிலம், குறைவான மக்கட்தொகை, கொழிக்கும் வளம் என ஆங்கிலேயர் நல்ல வசதியாக வாழத் தொடங்கினர்.

இவர்கள் தமது தாய்நாட்டையே எதிர்த்து போராடி தனிநாடு ஆனது ஏன் தெரியுமா?

இங்கிலாந்து அவர்கள் மீது விதித்த வரியும், தன்னிடம் தான் வணிகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் தான்.

அதாவது ஒரே தேசம்.. ஒரே வரி.. ஒரே வணிக வழி..

இதனால் அமெரிக்க மாநிலங்கள் தானே சுயமாக எந்த அரசுடனும் வணிகம் செய்ய முடியாத நிலை.

உற்பத்தி அனைத்தும் இங்கிலாந்துக்கே போனது.

இறக்குமதியும் அங்கிருந்தே வந்தது.

வரிச்சுமையும் அழுத்தியது.

இறுதியில் 13 ஆங்கிலேய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து 'ஒருங்கிணைந்த அமெரிக்க மாநிலங்கள்' அதாவது 'United States of America' ஆகி தம்மை குடிவைத்து பெரிய நிலம் கொடுத்து வாழ்வளித்த தமது தாய்நாடான ஆங்கிலேய பேரரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கின.

அது வாஷிங்டன் தலைமையில் விடுதலைப் போராட்டமாக வெடித்தது.

இராணுவத் தோல்வியையே காணாத நாடாக அன்று உலகின் கால்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாபெரும் ஆங்கில பேரரசு, தனது சொந்த இனத்தாலேயே மிகமோசமாகத் தோற்கடிக்கப்பட்டது.

அமெரிக்கா என்ற அறியப்படும் U.S.A உருவானது.

அதன்பிறகு மிக வேகமாக வளர்ந்த அமெரிக்கா நெப்போலியனிடம் லூசியானா பகுதியை விலைக்கு வாங்கி இரு மடங்காக பெருத்தது.

பிறகு அருகே குடியிருந்த ஸ்பானிய பகுதிகளையும் ஆக்கிரமித்து விடுதலைப் போரைத் தொடங்கிய வெறும் 100 ஆண்டுகளுக்குள் 6 மடங்கு பெருத்து வீங்கி..

பிறகு ரஷ்யாவிடம் அலாஸ்காவை விலைக்கு வாங்கி..

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய வல்லரசாக உருவெடுத்தது.

(ஸ்பானியரை ஆங்கிலேயருக்கு அறவே பிடிக்காது. இதுதான் ஸ்பானிய குடிவழி நாடான மெக்சிகோ மீதான வெறுப்புக்கு காரணம்)

இன்று அமெரிக்காவில் கால்வாசி மக்கள் ஆங்கில குடிவழிகள். ஆனால் எங்கும் எதிலும் இவர்கள் ஆதிக்கமே..

(கனடாவிலும் இதே நிலைதான், பிரெஞ்சு குடியேற்றப்பகுதியான கியூபெக் மட்டும் அங்கே விதிவிலக்கு)

ஆங்கில பேரரசைத் தோற்கடித்தாலும் ஆங்கில தாய்நாட்டுக்கு ஒன்றென்றால் பதறி ஓடி வந்து உயிரைக் கொடுத்து காப்பாற்றும் அமெரிக்கா..

அமெரிக்கர் மத்தியில் தாய்நிலத்திலிருந்து யாராவது வந்தால் அத்தனை மரியாதை..

தாய்நில ஆங்கில உச்சரிப்புக்கு அதாவது british english accent க்கு அத்தனை மதிப்பு..

அதாவது இனப்பற்றில் உலகில் ஈடு இணையே சொல்ல முடியாத ஆங்கில இனமே கூட தனது இனப்பற்றையும் மீறி தனிநாடு கேட்க காரணம் அவர்கள் மீது விதிக்கப்பட்ட வரியும் சுரண்டலும் தான்..

இங்கே நடப்பதும் கிட்டத்தட்ட அதேதான்..

வேறுபாடு என்னவென்றால் நாம் தாய்நாட்டால் சுரண்டப்படவில்லை..

வேற்றின ஹிந்தியரால் சுரண்டப் படுகிறோம்..

ஆங்கில அரசு அதன் குடியேற்ற மாநிலங்களைக் கொள்ளை தான் அடித்தது..

ஆனால் ஹிந்தியா அதன் மாநிலங்களை கொள்ளையடிப்பது மட்டுமன்றி முற்றாக அழித்து விடவும் துடிக்கிறது..

இத்தனைக்கும் அதன் ராணுவம் வலிமையானதும் கிடையாது..

நம்மிடம் மோதி வெல்லவும் முடியாது..

தமிழர் ராணுவமான விடுதலைப் புலிகளிடம் மோதி ஹிந்தியா மண்ணைக் கவ்விய வரலாறு கண்முண்ணே நடந்துள்ளது..

நாம் ஏன் விடுதலைப் போரைத் தொடங்கக் கூடாது?

ஸ்டெர்லைட்க்கு தமிழகத்தை விற்கும் பாஜக - அதிமுக...


மறுபிறப்பு...


பரப்பிரம்மத்தின் பிம்பமாக பிறப்பெடுத்த நாம் உலக மாயைகளில் சிக்கி கர்ம வினைகளை சேர்த்து மறுபிறவிக்கு வித்திடுகிறோம்.

தூய ஆத்மா நாம் செய்யும் பாவ புண்ணியங்களை சுமந்து கொண்டு மறுபிறப்பெடுகிறது.

நாம் செய்யும் பாவம் இரும்பு விலங்கிட்டு நம்மை மறுபிறவிக்கு கூட்டி செல்லும்.

நாம் செய்யும் புண்ணியம் பொன் விலங்கிட்டு மறுபிறவிக்கு அழைத்து செல்லும்.

உலக பற்று நீங்கும் வரை நமது பிறப்பு தொடர்கதை தான்.

வினை விதைத்தவன் நிச்சயம் அதை அறுத்தே தீருவான்.

இதை முன்பே நமக்கு கடவுள் கூறி அனுப்பி இருந்தால் அன்பை மட்டுமே வாழ்கை ஆக்கி இருப்போம்.

உலகபற்றுதலில் இருந்து எப்பொழுது மனம் விடுபடுகிறதோ அதுவே நமக்கு கடைசியாகி நமது இந்த அற்புதமான பிறப்பு ஓரு முடிவுக்கு வருகிறது...

தமிழக விவசாயிகளை மிரட்டும் பாஜக அமைச்சர்...


கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்...


உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.

அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.

ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.

பி காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.

மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும ், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை...

எங்கடா அந்த திருட்டு சாதி ஒழிப்பு புரட்சியாளர்கள்...


உதவிக்கு வராத நன்றி கெட்ட கேரள மக்கள்...


கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்தபோது, 100 க்கும் மேற்பட்டோரை படகுமூலம் காப்பாற்றிய ஜினீஷ் ஜிரோன் கடந்த வாரம் விபத்தில் சிக்கியபோது உதவிக்குச் சாலையில் சென்றவர்கள் தாமதமாக வந்ததால், பலியான சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் செங்கனூர் பூந்துரா நகரைச் சேர்ந்தவர் ஜினீஷ் ஜிரோன். 24வயதான ஜினீஷ் மீன்பிடித்தொழில் செய்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் அடைமழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதில் ஜினீஷ் தனது சொந்த படகு மூலமும், தனது நண்பர்கள் குழு மூலமும் மீட்புப்பணியில் ஈடுபட்டார். இதில் ஜினீஷ் மட்டும் வெள்ளத்தில்சிக்கிய 100 பேரைக் காப்பாற்றி இருப்பார், இவர்களின் கோஸ்டல் வாரியர்ஸ் 800-க்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றினார். ஆனால், ஜினீஷ் பெயர் அரசின் பதிவேட்டில் இல்லை. பதிவேட்டில் பதிவு செய்ய ஜினீஷுக்கு விருப்பமும் இல்லாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஜினீஷும், அவரின் நண்பர் ஜெகனும் பைக்கில் செங்கனூர் சென்றனர். அப்போது, செங்கனூர்அருகே பழைய உச்சகடா பகுதியில் வந்தபோது, லாரி மோதியதில் ஜினீஷ் பலியானார். இதில் அவரின் நண்பர் ஜெகன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

இடுப்புப்பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடி, ஜினீஷ் உதவிக் கேட்டு கூக்குரலிட்டபோது, நீண்டநேராக சாலையில் சென்றவர்கள் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை, ஏறக்குறைய 45 நிமிடங்களுக்கு பின்புதான் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. ஆனால், சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஜினீஷ் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜினீஷ் நண்பர் ஜெகன் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

கடந்த வெள்ளிக்கிழமை நானும், ஜினீஷும்தான் பைக்கில் செங்கனூர் சென்றோம். நான் பைக்கை ஓட்டினேன். அப்போது பைக் மீது ஒரு லாரி உரசியபோது நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தோம். நான் ஒருபுறம் தூக்கி வீசப்பட்டேன், ஆனால், சாலையில் விழுந்த ஜினீஷ் இடுப்புப்பகுதியில் அடிப்பட்டு உயிருக்குப் போராடினான். நானும் காயத்தால் அலறினேன்.

ஆனால், சாலையில் சென்ற வாகனங்கள் யாரும் நிறுத்தி எங்களுக்கு உதவில்லை. கேரள வெள்ளத்தின் போது நூற்றுக்கணக்கானவர்களை மீட்ட ஜினீஷ்க்கு உதவ யாரும் வரவில்லை.

அனைவருக்கும் உதவி செய்வதற்கு விரும்பும் ஜினீஷ்க்கு யாரும் உதவி செய்யவில்லையே எனக்கு அழுகை வந்தது. அதன்பின் 45 நிமிடங்களுக்குப் பின் ஆம்புலன்ஸ் வந்து ஜினீஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாகப் பலியானார் எனத் தெரிவித்தார்.

ஜினீஷின் தாய் செல்வி கூறுகையில், எனது மகன் ஜினீஷ் வெள்ளத்தில் சிக்கிய ஏராளமானோரைக் காப்பாற்றிவிட்டு வந்தபோது மிகவும் பெருமைப்பட்டேன். ஆனால், அவன் விபத்தில் சிக்கி உயிருக்காகவும், உதவிக்காகவும் போராடியபோது, ஒருவர் கூட உதவவில்லை என்ற போது வேதனையளிக்கிறது. என் மகன் இறப்பு பாடமாக இருக்கட்டும். இனிமேல், சாலையில் யாரேனும் விபத்தில் சிக்கி இருந்தால், அவர்களுக்கு வாகனத்தில் செல்பவர்கள் உதவி செய்யுங்கள் என்று தெரிவித்தார்...

பெட்ரோல், டீசல் விலை ₹2.50 குறைப்பு - நிதியமைச்சர் பாஜக அருண் ஜெட்லி அறிவிப்பு...


விலையை 20ரூபாய் ஏற்றி விட்டு... அதில் இருந்து 2.50 ரூபாய் குறைத்து.. தேர்த்தலுக்காக நாடகத்தை தொடங்கி விட்டார்கள்...

உண்மையில் 50ரூபாக்குள் பெட்ரோல், டீசல் கிடைத்தால் மட்டும் மக்களுக்கு நன்மை... அதுவே உண்மையாக வசுலிக்கப்பட வேண்டிய கட்டண  தொகையும் கூட...

குலக்கல்வி என்ற அவதூறு...


ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக்  கூறிக் கொண்டே இருந்தால் அது காலப்போக்கில் உண்மையாகி விடும் என்பது கோயபல்ஸ் பரப்புரை அரசியல் உத்தி ஆகும்..

இராஜகோபாலாச்சாரி மீது பரப்பப்பட்ட அவதூறுகள்..

1)இராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்தார்.

2)நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி 600 பள்ளிகளை மூடினார்.

3)பிராமணருக்கு வேத பாடசாலைகளைத் திறந்தார்.

மூன்றுமே வடிகட்ட பொய்கள்..

முதல் பொய் இராசாசி குலக்கல்வியைக் கொண்டு வந்தார் என்பது.

அவர் பார்ப்பனராம், மனிதர்கள் எந்த குலத்தில் பிறந்தார்களோ அந்த அந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று மனுதர்மம் கூறுவதை நடைமுறைப்படுத்தப் பார்த்தாராம்.

உண்மை என்ன வென்றால் அது இராசாசி வகுத்த திட்டமே கிடையாது.

அதிலே குலம் பற்றி எதுவுமே விதிகள் இல்லை.

அவர் செய்தது நேரச் சீர்திருத்தம் மட்டும்தான்.

Hereditary Education Policy என்ற இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜாவின் ஆட்சியில் சில பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது.

அதை தமிழகம் முழுவதும் இராசாசி நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

ஆசிரியர்கள் அப்போது குறைவு.

புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் பணமில்லை.

அதனால் ஆசிரியரின் 8 மணிநேர வேலை நேரத்தை ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று மூன்று மணி நேரமாக பிரித்துக் கொடுப்பது தான் திட்டம்.

சாதி பற்றியோ பிறப்பு பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை.

இத்திட்டத்தால் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்தது.

மூன்றுமணி நேரம் போக மீதி நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு பேட்டியில் கேட்டார்களாம்.

இராஜாஜி மீதி நேரங்களில் பெற்றோருக்கு உதவி செய்யலாம் என்று கூறினாராம்.

இதை அண்ணாதுரை பிடித்துக் கொண்டு 'பெற்றோரின் வேலையைத் தான் பிள்ளைகள் செய்யவேண்டும் என்று பார்ப்பனர் இராசி கூறிவிட்டார்' என்று அவதூறு பரப்பினார்.

இதற்கு 'குலக்கல்வித் திட்டம்' என்று பெயர் சூட்டி திராவிடவாதிகள் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டனர்.

இன்றுவரை இந்தப் பொய்ப் பெயரால் தான் இந்தத் திட்டம் அறியப்படுகிறது.

600 பள்ளிகளை அவர் மூடினார் என்பதும் பச்சைப்பொய்.

அன்று கல்வி சேவை செய்யும் சில கிராமிய அமைப்புகளைக்கு அரசு நிதி கொடுத்துவந்தது.

அந்த நிதி முறையற்ற வகையில் செலவு செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதை இராசாசி நிறுத்தக்கூட இல்லை.

அது சரியாக நடக்கிறதா என்று முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார்.

ஆந்திராவுக்குக் கிடைக்கும் நிதி போய்விடுமோ என்ற பயத்தில் நீதிக்கட்சி எனும் திராவிடக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

உடனே ஈ.வே.ரா, ஆந்திராவில் இந்த நிதி இல்லாமல் போனால் 600 'பள்ளிகள்' மூடவேண்டி வரலாம் என்று உண்மைக்குப் புறம்பாக எழுதினார்.

அதையும் கோயபல்ஸ் பரப்புரை செய்து வருகின்றனர்.

நன்றி : எழுத்தாளர் .திரு. ஜெயமோகன்...

அன்று இராசாசி எதைச் செய்தாலும் திராவிடவாதிகள் அதை எதிர்த்தனர்.

எடுத்துக்காட்டாக..

அன்று அவர்அரும்பாடு பட்டு மதுவிலக்கை அமல்படுத்தினார்.

உடனே ஈ.வே.ரா முழுமூச்சாக குடிக்கும் உரிமை கேட்டு மது ஆதரவுப் பிரச்சாரம் செய்தார்.

25 ஆண்டுகள் குடியை மறந்திருந்த திராவிடம் மீண்டும் சாராயக்கடைகளைத் திறந்தது.

திராவிடம் என்பது அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் B-அணி ஆகும்...

பன்னாட்டு குளிர்பானங்கள் விற்க மாட்டோம் - கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்...


பாவாணர் போற்றும் பார்ப்பனர்கள்...


பாவாணர் நீலகண்ட சாஸ்திரியை எவ்வளவு கடுமையாக சாடுகிறார் பாருங்கள்..

ஆரியத்தை எதிர்த்துத் தமிழைப் பேணிய நக்கீரர், பரிதிமாற் கலைஞர், ஸ்ரீநிவாச ஐயங்கார், கிருட்டிணசாமி ஐயங்கார் முதலிய பிராமணர் பலர் வையாபுரி பிள்ளையினும் தெ.பொ.மீ.யினும் சிறந்த தமிழரே.

ஆதலால் இனிமேல் பிராமணர் அனைவரும் பிணக்கின்றித் தமிழரோடு பிணைந்து வாழ்ந்து தமிழ்நாட்டரசிலும் தலைமை தாங்கித்.. தமிழையே பேணித் தமிழராகவே விளங்குவாராக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் தமது இறுதிக் கட்டுரையில் - செந்தமிழ்ச் செல்வி, டிசம்பர் 1980..

பாவாணர் நீலகண்ட சாஸ்திரியை இனவெறியர் மொழிவெறியர் என்கிறார்..

இதனால் அவர் தமிழரல்லாதார் என்று அறியலாம்..

தமிழ் வரலாற்றிற்கெட்டாத தொன்முது பழைமையான உலக முதன் மொழியாதலால்,
கிறித்துவிற்குப் பிற்பட்ட காலத்து முக்கழக வரலாற்றிற் பல காலமுரண்பட்ட குழறுபடைகள் குழம்பிக் கிடப்பது இயல்பே.

அச் சிக்கல்களைக் களைந்து உண்மைகளை வடித்தெடுத்தல் வரலாற்றாராய்ச்சியாளன் கடமையாகும்.

அக் கடமையை மேற்கொண்டே,
திரு. (P.T.)சீநிவாசய்யங்காரும் பேரா.(V.R.)இராமச்சந்திர தீட்சிதரும்
தமிழரின் தென்னாட்டுப் பழங்குடிமையைத் தத்தம் நூல்களில் ஐயந்திரிபற நாட்டிச் சென்றனர்.

ஆயினும், எல்லையற்ற இனவெறியும் மொழிவெறியும் பித்தொடு கலந்த பேய்கோள் போல் வருத்துவதால், பேரா. (கே) நீலகண்ட சாத்திரியாரும் அவர் மாணவரான பர். (Dr.) (N.) சுப்பிரமணியனாரும், பிறரும்,
இடைக்காலத்தில் தீத்திறமாகவும் தெற்றுமாற்றாகவும் புகுத்தப்பட்ட சமற்கிருத மேம்பாட்டை என்றும் போற்றிக் காத்தற்பொருட்டு, தமிழரின் குமரிநாட்டுத் தோற்றத்தை விடாப்பிடியாய் மறைத்து வருகின்றனர்..

பி.தி.சீநிவாசையங்கார் 'இந்தியக் கற்காலம்' (Stone age in India),

'ஆரியர்க்கு முன்னைத் தமிழ்க் கலை நாகரிகம்' (Pre-Aryan Tamil Culture),

'தமிழர் வரலாறு' (History of the Tamils)

முதலிய நூல்களையும்..

வி.ரா. இராமச்சந்திர தீட்சிதர்
'தமிழர் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils),

'வரலாற்றிற்கு முன்னைத் தென்னிந்தியா' (Pre-Historic South India)

முதலிய நூல்களையும், எவரும் மறுக்க முடியாதவாறு திறம்பட எழுதிப் போயினர்.

ஆயின், அவர் மறைந்தபின்,
பேரா. கே. நீலகண்ட சாத்திரியார் அவர் கொள்கைக்குங் கூற்றிற்கும் நேர்மாறாக,

ஆரிய வேதத்தையே அடிப்படையாகக் கொண்டு இந்திய வரலாற்றை வடக்கினின்று தொடங்கி, உண்மைக்கும் உத்திக்கும் ஒவ்வாவாறு பேரன் பாட்டனைப் பெற்றான் என்பதுபோல், தமிழர் வரலாற்றைத் தலைகீழாக வரைந்துள்ளார்.

தமிழன் பிறந்தகம் தெற்கில் முழுகிப் போன குமரிநாடென்னும் அடிப்படையிலேயே, தமிழின் சிறப்பையும் தமிழன் உயர்வையும்,
உண்மையாக உணர்தலொண்ணும்.

'வரலாற்றிற்கு முன்னைத் தென்னிந்தியா' என்னும் வரலாற்றுப் பொத்தகம் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாயிருந்தும்,
அதைப் படியாமையாலோ, தம் இயற்கையான அடிமைத் தனத்தாலோ, வையாபுரித் தன்மையாலோ, தலைமைப் பதவித் தமிழ்ப் பேராசிரியரும் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியாரை எதிர்க்கத் துணிவதில்லை.

அதனால், தமிழின் தொன்மையும், முன்மையும், தாய்மையும், தலைமையும் தமிழ்நாட்டிலும் ஒப்புக்கொள்ளப்படாமலே யிருக்கின்றன - செந்தமிழ்ச் செல்வி திசம்பர் 1980..

பி.கு:- நீலகண்ட சாஸ்திரி ஒரு தெலுங்கர் என்று நரசய்யா தமிழ்நாட்டு வந்தேறியான தெலுங்கு வடுகர் தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன? என்ற (மின்தமிழ்) கூகுள் இழையில் கூறியுள்ளார்.

ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ரா உம் கூட தெலுங்கர்களாம்.

வருவான் தமிழ்ப் பார்ப்பான் தமிழ்த்தேசியம் நோக்கி...

தமிழகத்தை அழிக்க பாஜக மோடியின் சதிகள்...


இலுமினாட்டி நமது நிலத்தில் : இந்தியாவின் அடிமைத்தனும் விடுதலையும்...


இலுமினாட்டிகள் என்ற இந்த விழிப்புணர்வு மிக்க குழுவினர் தமிழர்கள் மீது தனிப்பட்ட பகை கொண்டவர்கள்..

பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழும் பழிதீர்ப்பு இது..

தற்பொழுது இந்தியாவிற்கு வருவோம். இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்த பகுதியே என்பது நாம் அறிந்ததே. 

இந்தியா என்பது சுதந்திரத்தினால்  உருவான ஓர் நாடு.

நாடு என்பதை விட ஓர் நிறுவனம் எனலாம்.

சுதந்திரத்துக்கு முன் இது பல நாடுகளாக இருந்து.

அரசாட்சி இருந்தாலும் மக்கள் பொதுவாக மகிழ்ச்சியோடே வாழ்ந்தனர்.

கடந்த சில நூற்றாண்டுகளில் சில மேற்கத்திய அரசுகள் பல நாடுகளை தங்கள் காலணி ஆதிக்க நாடுகளாக மாற்றின.

நமது நிலமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரிட்டிசிடம் முழுமையாக மாட்டிக்கொண்டது.

பின் நம் விடுதலை மாவீர்கள் போராடி நமக்கு விடுதலை பெற்று தந்தனர்.

ஆனால் உண்மை என்றால் அந்த இந்திய கிழக்கிந்திய கம்பேனி ஓர் அரசு நிறுவனம் அல்ல.

அது ஓர் தனியார் நிறுவனம்.

இதன் உரிமையாளர் ரோத்சைல்ட் Rothschild. 

இவன் இலுமிணாட்டியில் முதன்மையானவன்.

சுதந்திர போராட்டம்..

இந்தியாவை வெற்றிகரமாக ஆட்சி செய்து கொண்டிருந்தது நிறுவனம்.
அப்பொழுது சில உண்மையான தேசிய விடுதலை வீரர்களான நேதாஜி போன்றோர்,  இது எங்கள் நாடு நீ வெளியேறு என முழங்கினர்.

ஆயித போராட்டங்களால் நிறுவனத்தின் சொத்துக்கள் அழிந்தன.

ஒத்துழையாமை இயக்கம் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது.

இந்திய தேசிய இராணுவமும்
நாடு கடந்த இந்தியாவின் முதல் இராணுவ பிரதமரான நேதாஜியும் ஜப்பானின் உதவியோடு இந்தியாவை மீட்க பயணமானார்.

முதலில் அந்தமாண், கூட்டு இராணுவத்தினரால் கிழக்கு இந்திய கம்பேனியிடம் இருந்து மீட்கப்பட்டது அந்தமாண், ஓர் இராணவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும்.

18 நாடுகளை அப்பகுதியை பிடிப்பதன் மூலம் ஆட்சி செய்ய முடியும். மேலும் அங்கு உள்ள ஒரு சிறிய தீவு இலுமிணாட்டிகளுக்கு மிக முக்கியமானது ஆகும்.

அங்கே தான் அவர்கள் தங்கள் இறையை வழிபடுகிறார்கள்.

அணுகுண்டு இந்தியாவுக்காக
இப்பொழுது அவர்கள் ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்தார்கள்.

இந்தியாவையும் அந்தமானையும் சுபாஸையும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி போ இதுவே மிரட்டல்.

ஜப்பான் அடிபணிய மறுத்தது. 

இரண்டு அணு குண்டுகள் ஜப்பானை தாக்கின.

ஜப்பான் அவர்கள் சொன்னதை செய்துவிட்டு நாடு திரும்பியது.

சுதந்திரம் என்ற மாயை..

சுதந்திர போராட்டங்களால் நட்டம் அடைந்த கிழக்கு இந்திய நிறுவனம் ஒரு திட்டம் தீட்டியது.

ராக்ஃபெல்லரால் Rockefeller  உருவாகக்கப்பட்ட உளவியல் ஆய்வு மையம் ஒரு நல்ல யோசனை வழங்கியது அது தான் சுதந்திரம்.

மறைமுகமாக நாட்டை ஆட்சி செய்வது.

அதன்படி தீவிர விடுதலை போராட்ட வீரர்கள் கொலை செய்யப்பட்ட பின் பிள்ளை பூச்சிகளை வைத்து சுத்திரம் வழங்கி ஆட்சி அமைக்கப்பட்டது.

இந்தியாவை போன்ற பிற நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.

தற்போது இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதாக நம்பி மக்கள் மாயையில் வாழ்கின்றர்.

இலுமினாட்டிகள் தங்கள் 13 துறைகளை கொண்டு நாட்டை தற்பொழுதும் ஆட்சி செய்கின்றனர்...

பாஜக - அதிமுக வின் ஹைட்ரோகார்பன் சதிகள்...


சிகப்பு எச்சரிக்கை என்றால் என்ன.?


ரெட் அலர்ட் என்றால் என்ன?

தற்பொழுது வானிலை மையங்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தையான ரெட் அலர்ட் என்றால் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.

அடுத்த 5 நாட்களில் வானிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போல் அறியும்பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். அந்த எச்சரிக்கையானது பச்சை எச்சரிக்கை (Green Alert ), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) , ஆம்பர் எச்சரிக்கை ( Amber Alert)  மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) என மொத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

பச்சை எச்சரிக்கை கொடுக்கப்பட்டால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை. ஏனெனில், மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் வகையில் வானிலை இருக்கும் பட்சத்தில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அப்பொழுது, பயணம் செய்வதை மக்கள் தவிர்க்கவேண்டும்.

மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழக்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...

தயாராகும் இந்தியா...


தமிழகத்து தர்கா வழிபாடு...


பள்ளிவாசல் வேறு தர்கா வேறு..

பள்ளிவாசலில் சமயகுரு 5 வேளை பாங்கு கூறி அழைப்பார்.

பிறகு கூட்டு வழிபாடு நடைபெறும்.

இங்கே பிற சமயத்தினரும் இசுலாமியப் பெண்களும் பள்ளிவாசல் செல்வதில்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்வதே 'தர்கா' வழிபாடு.

தர்கா என்பது இறையடியார் ஒருவர் உடல் அடக்கமான இடத்தைச் சுற்றி எழுப்பப்படும் கோவில்.

(திறந்தவெளிக் கல்லறைகளும் உள்ளன)

பள்ளிவாசலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட பச்சை நிறத்தில் வெள்ளைநிறப் பிறை நிலாவும், விண்மீனும் கொண்ட கொடி ஏற்றப்பட்டிருக்கும்.

இங்கே அந்த இறையடியாரை யாரும் வணங்குவதில்லை.

அந்த இறையடியாருக்காக ஆண்டவனிடம் வேண்டுகிறார்கள்.

இங்கே பல்வேறு சமயத்தவரும் இசுலாமியரும் வந்து போகிறார்கள்.

நேரக்கட்டுப்பாடு இல்லை.
வழிபாட்டு விதிகள் இல்லை.

அதாவது தமது ஊரில் ஒரு பெரிய மனிதர் மறைந்தபிறகு (அவர் இசுலாமியராய் இருந்தாலும்) அவ்வூர் மக்கள் (பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்) அவரது நினைவைப் போற்றும் நாட்டார் வழிபாட்டு முறையே தர்கா வழிபாடு..

சீறாப் புராணம் எழுதிய உமறுப்புலவரின் திறந்தவெளி தர்காவை சுற்றி (பிள்ளைப்பேறு நேர்த்திக் கடனுக்காகக்) கட்டிடம் எழுப்பியவர் 'பிச்சையாக் கோனார் என்பவராவார்.

இறையடியார்கள் இறைவனடி சேர்ந்த நாளில் 'சந்தனக்கூடு' விழா நடக்கிறது.

பத்து நாட்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கம்பில் பச்சைநிறத்தில் பிறை மற்றும் விண்மீன் கூடிய துணி கட்டி ஊர்வலமாக எடுத்துச்சென்று தர்காவின் வாசலில் கட்டுவார்கள்.

(இது தமிழர்கள் அனைவரும்  திருக்கோவில்களில் விழா எடுக்கும் முன்பு கொடியேற்றும் வழக்கம்தான்.

தமிழக கத்தோலிக்க தேவாலயங்களிலும் இத்தகைய கொடியேற்றம் உண்டு).

பிறகு பத்துநாட்கள் கல்லறையைச் சுற்றி அமர்ந்து தமிழிலும் அரபியிலும் இறையடியாரின் புகழைப் பாடுவார்கள்.

பத்தாம் நாளில் சந்தனத்தைக் குழைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சந்தனக்கூடை சுமந்து ஊர்வலமாக எடுத்துச்செல்வர்.

இதற்கு பரம்பரை பரம்பரையாக மாடும் வண்டியும் தருவோர் பல்வேறு சமயத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பர்.

இவ்வூர்வலத்தில் சிலம்பாட்டம் கழியாட்டம் போன்ற தமிழ் கலைகளும் இடம்பெறும்.

பிறகு சுமந்துவந்த குடத்திலிருந்து சந்தனத்தை கல்லறை மீது பூசுவர்.

பிறகு சிறிதளவு சந்தனத்தை வீடுகளுக்கு எடுத்துச்செல்வர்.

பிறகு கந்தூரி விருந்து நடைபெறும்.

இதற்கான செலவு அவ்வூர் மக்கள் அனைவரிடமும் பெறப்பட்ட வரியிலிருந்து கிடைக்கிறது.

(நன்கொடை அதிகம் கிடைக்கும் சில பெரிய தர்காக்கள் விதிவிலக்கு).

இரவு அவ்வூரார் அனைவரும் மதவேறுபாடின்றி அமர்ந்து இறைச்சி விருந்து உண்பார்கள்.

தமிழகத்தில் மிக பழமையான தர்கா இராமேஸ்வரத்திலுள்ள ஆபில் காபில் தர்கா.

இவர்கள் ஆதாமின் மகன்கள் ஆவர்.

(ஆபெல், கெய்ன் என்று பைபிள் கூறுகிறது).

மிகவும் புகழ்பெற்ற தர்கா 'நாகூர் தர்கா' ஆகும்.

இவரை 'முகைதீன் ஆண்டவர்' என்று எல்லா மதத்தினரும் அழைக்கின்றனர்.

இதுபோல குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பீர்முகமது தர்கா,

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு அருகிலுள்ள ஏர்வாடி செய்யது இப்ராகிம் தர்கா,

திருச்சியிலுள்ள நத்தார்வலி தர்கா,

ஆகியன குறிப்பிடத்தகுந்த தர்காக்கள்.

இது தவிர வட்டார ரீதியாக புகழ்பெற்ற பல தர்காக்கள் உள்ளன.

நாகூர் தர்கா விற்கு அச்சுதப்பநாயக்கர் எனும் தெலுங்கு மன்னர் முப்பது வேலி நிலம் வழங்கியுள்ளார்.

இதே தர்காவிற்கு தஞ்சை மராட்டிய மன்னர் 'துக்கோசி' 131 அடி கோபுரம் கட்டித்தந்து இளங்கடமனூர் எனும் ஊரையும் நன்கொடை அளித்துள்ளார்.

இன்று தஞ்சை மராட்டிய மன்னர் கந்தூரி அன்று குடும்பம் சந்தனமும் பட்டுசால்வையும் அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நாகூர் தர்காவின் கல்லறை மீது போர்த்தப்படும் போர்வை சென்னையைச் சேர்ந்த 'பழனியாண்டிப் பிள்ளை' என்பவரது பரம்பரையினர் அனுப்பி வைக்கின்றனர்.

கோரிப்பாளையம் தர்கா விற்கு கூன்பாண்டியன் (சுந்தரபாண்டியன்) எனும் பாண்டிய மன்னன் 15000 பொன் வழங்கியுள்ளான்.

இதில் ஏற்பட்ட ஒரு பூசலை தீர்த்து பொறிக்கப்பட்ட நாயக்கர்கால கல்வெட்டுச் சான்று உள்ளது.

அருப்புக்கோட்டை பள்ளிவாசல் கட்ட நிலம் கொடுத்தவர்கள் (தெலுங்கு) நாயக்க மக்கள்.

ஏர்வாடி தர்கா விற்கு 'முத்துக்குமார் விஜயரகுநாத சேதுபதி' எனும் சேதுபதி மன்னர் விளை நிலங்களையும் சில வரிகளைகளையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

இதே மன்னர் 1745ல் புதுக்குளம் ஊரை 'ஆபில் காபில் தர்கா'வுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இத்தர்காவில் 19 வலிமார்கள் சமாதிகள் உள்ளன.

இங்கே பல்வேறு சாதியார் பரம்பரை பரம்பரையாக சில பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்.

இங்கே சந்தனக்கூடு குடம் கொண்டு செல்லும் மரக்கூட்டினை வழங்குவோர் ஆசாரிகள்.

கூடுகட்ட கயிறு, நார் போன்றவை நாடார்கள் பொறுப்பு.

கூடு அலங்கரிப்பு பறையர் மற்றும் கோனார் பொறுப்பு.

நெய்பந்தத்துணி வண்ணார்கள் பொறுப்பு.

சந்தக்கூடு விழாவில் அனைத்து மதத்திலிருந்தும் 2லட்சம் பேர் கூடுவர்.

திருநெல்வேலி-மதுரை சாலையில் காட்டுப் பள்ளிவாசல் என்ற தர்கா உள்ளது.

'இப்ராகிம் ராவுத்தர்' என்பவரும் அவரது நண்பர் 'முத்துக்கோனார்' என்பவரும் இங்கே அடக்கமான இறையடியார்களுக்கு சிறிய அளவில் வழிபாட்டைத் தொடங்கினர்.

இன்று கூரையில்லாத கட்டிடம் தர்காவாக இயங்குகிறது.

மதுரையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் திருப்பத்தூர் அருகேயும் ஒரு "காட்டுப் பள்ளிவாசல்" இருக்கிறது.

ஏழு பார்ப்பனப் பெண்களையும் இரண்டு பிராமணக் குழந்தைகளையும் காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த 'சையது பக்ருதீன்' அடக்கமான தர்கா இது.

இராமநாதபுரம் மன்னர் 'கிழவன் சேதுபதி' (1674-1710) இத்தர்காவுக்ககு கொடைகள் வழங்கியுள்ளார்.

இங்கே நடக்கும் சந்தனக்கூடு விழாவில் கள்ளர் சாதியினர் பெருமளவு கலந்து கொள்கின்றனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு பார்ப்பன பெண்ணுக்கும் அவரை கள்வர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த "பக்கிரி சாய்பு"வுக்கும் தர்கா உள்ளது.

தூத்துக்குடி வைப்பாறு சிற்றூரில் "ஒலியுல்லா தர்கா"வின் கந்தூரி விழாவில் தெலுங்கு கம்பளத்து நாயக்கர்கள் பெரிய பங்களிப்புகளைச் செய்கின்றனர்.

ஊத்துமலை தேவர்குளம் அருகே "கான்சாமாடன்" எனும் தர்காவை மறவர் மக்கள் வணங்குகின்றனர். ஊத்துமலை ஜமீன்தார்கள் முன்னின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை நடத்துகின்றனர்.

ஊர்மக்கள் பசுமாடு ஈன்றபிறகு கறக்கும் முதல் பாலை இச்சமாதியில் ஊற்றுகின்றனர்.

நாகூருக்குத் தெற்கேயுள்ள "முத்துப்பேட்டைத் தர்கா" 'கருப்பையாக் கோனார்' என்பவர் கட்டியதாகக் கூறுகிறார்கள்.

திருப்பத்தூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள "அகோரி கானுமியா ஒளி" தர்காவிற்கு மருதுபாண்டியர் மானியம் வழங்கியுள்ளனர்.

கி.பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மீனாட்சி சுந்தரம் ஐயர் தமிழிலும் இசையிலும் நல்ல புலமை பெற்றவர்.

அவர் இசுலாத்தைத் தழுவி 'மீனா நூர்தின்' என்று பெயரை மாற்றிக்கொண்டார். இவரது தர்கா மதுரை தெற்கு வெளிவீதியில் உள்ளது.

நாகப்பட்டிணத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் இடையில் "பாப்பாக்கோயில் தர்கா" உள்ளது.

இரண்டு இறையடியார்களுடன் இசுலாத்தைத் தழுவிய பார்ப்பனப் பெண் (ஹபீஸ் அம்மா) ஒருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்-பெங்களூர் சாலையில் தொப்பூர் என்ற இடத்தில் "ஹாவாலிக் தர்கா" உள்ளது.

இங்கேயும் இசுலாமைத் தழுவிய பார்ப்பனப் பெண் அடக்கமாகியுள்ளார்.

இங்கே அசைவ விருந்து கிடையாது.

இங்கே அன்னதானம் நடக்கும்போது முதலில் இசுலாமியரல்லாத சிலருக்கு வழங்கிவிட்டு பிறகே அனைவருக்கும் அன்னதானம் தொடங்குகிறது.

தஞ்சை நகரின் கிழக்கே மாரியம்மன் கோவில் பழைய தெருவில் "பாப்பாத்தியம்மன் தர்கா" உள்ளது.

இவரும் பார்ப்பனராயிருந்து இசுலாமைத் தழுவியவரே.

கி.பி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ நாயன்மார் சேரமான் பெருமாள் (சேர மன்னர்).

'பொன்வண்ணத்தந்தாதி', 'திருவாரூர் மும்மணிக்கோவை', 'திருக்கயிலாய ஞான உலா' போன்ற சைவ இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

இவர் சுந்தரரின் நண்பர்.

கேரளமான்மியம் என்ற வடமொழி நூலும் கேரளோற்பத்தி என்ற மலையாள நூலும் இவர் மெக்கா சென்று நபிகள் நாயகம் முன்னிலையில் இசுலாமைத் தழுவியதாகக் கூறுகின்றன.

'சிராஜிதின்' என்று பெயர் மாற்றிக் கொண்டாராம். திரும்பும் வழியில் மரணமடைந்ததாகவும் இவரது உடல் தூத்துக்குடி குலசேகரப் பட்டிணம் அருகே கரை ஒதுங்கியதாம்.

அங்கேயே கடற்கரையில் இவருக்கு தர்கா உள்ளது.

இங்கே கல்லறை அறையில் ஒரு சன்னல் சிதம்பரனாதர் கோவிலின் நுழைவாயிலுக்கு நேராக அமைக்கப்பட்டுள்ளது.

அதன் வழியாகப் பார்த்தால் கோவிலின் கருவறையைக் காணமுடியும்.

திருநெல்வேலி நான்குநேரி அருகே விஜயநாராணம் என்ற ஊர் உள்ளது.

அங்கே செய்யது முகம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை என்பவர் வசித்துவந்தார்.

இவரது நண்பர் மாடசாமித் தேவர்.

மாடசாமித் தேவரின் தங்கைக்கும் மேத்தப்பிள்ளைக்கும் தவறான உறவிருப்பதாக மேத்தப்பிள்ளையின் வேலைக்காரன் சொல்ல
மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளையையும் தனது தங்கையையும் கொன்றுவிட்டார்.

வேலைக்காரன் சொன்னது பொய் என்று தெரிந்த பிறகு மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளைக்கு தர்கா எழுப்பினார்.

தன் தங்கைக்கு நடுகல் நட்டார்.

இன்றுவரை அவரது வம்சாவளியினர் அந்த தர்காவுக்காக அனைத்து உதவிகளையும் செய்கின்றனர்.

தன் குழந்தைகளுக்கு மேத்தப்பாண்டியன், மேத்தா என்று பெயர் வைக்கின்றனர்.

அதோடு நடுகல் வைத்த இடத்தை 'கன்னியம்மன்' தெய்வமாகவும் வழிபடுகின்றனர் மாடசாமி வம்சத்தார்.

"மேத்தப்பிள்ளை அப்பா தர்கா" என்ற பெயருடைய இந்த தர்காவில் ஆடி 16 அன்று சாதிமத பேதமில்லாமல் ஆயிர்காணக்கில் மக்கள் கூடுகின்றனர்.

இங்கே வாழும் மறவர் மக்கள் தங்கள் வீடுகளில் மக்களைத் தங்கவைத்து விருந்தோம்புகின்றனர்.

240 ஆண்டுகளாக இது நடந்துவந்தாலும் இதுவரை காவல்துறை வந்து நடத்தித்தந்தது கிடையாது.

இதுபோல இன்னும் பலப்பல தர்காக்கள் உள்ளன.

அனைத்திலும் பல சமயத்தாரும் பங்கேற்கின்றனர்.

நன்றி: தர்காக்களும் இந்து-இசுலாமிய ஒற்றுமையும் - ஆ.சிவசுப்பிரமணியன்..

இசுலாமிய தீவிரவாதிகள் தர்கா வழிபாட்டை எதிர்ப்பதற்குக் காரணம் மத நல்லிணக்கனம் ஏற்பட்டால் தம் பிழைப்பை நடத்த முடியாது என்பதால்தான்.

இதிலே ஒருபடி மேலே போய் குரானுக்குப் போட்டியாக தவ்கீத்து சமாஅத்து என்ற கூட்டம் திருக்குறளை வேறு வம்புக்கிழுக்கிறது.

இசுலாம் பரவியுள்ள அனைத்து இடங்களிலும் அந்த அந்த இனத்தின் பழமையான பழக்க வழக்கங்கள் இசுலாமிய வழிபாட்டிற்குள் கலந்துள்ளதைக் காணமுடியும்.இது இயல்பான ஒன்றே.

மக்களுக்காக தான் மதம்.
மதத்திற்காக மக்கள் அல்லர்.

இறைமறுப்பாளனான என் தனிப்பட்ட கருத்து,

தர்கா வழிபாடு செய்யப்படும் இறையடியார்கள் யாருமே அத்தனை பெரிய ஈகி(தியாகி)கள் கிடையாது.

இந்த வழிபாடும் அதனுடன் இணைந்த சடங்குகளும் மூட நம்பிக்கைகளேயன்றி வேறில்லை...

பாஜக மோடியின் வரலாற்று சாதனை...


விழித்தெழு முட்டாள் தமிழினமே...


ஆரியன் அறிவை பயன்படுத்துகிறான்..

சூத்திரன் அருவாளை பயன்படுத்துகிறான்..

ஆனால் இந்த பகுத்தறிவாதிகளோ இந்த இரண்டு பேருக்குள் நுழைந்து காசு பார்த்து தன் வாரிசுகளுக்காக சொத்து சேர்த்து கொண்டிருக்கிறான்...

தாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்...


ரோம் நகரில் கி.பி.1427 இல் ஒரு சர்க்கஸ் கம்பெனி செயல் பட்டுவந்தது..

அந்த சர்க்கஸ் கம்பெனியின் சிறப்பு யானை தான்.

அந்த யானையின் பாகன் அந்த கம்பெனியிலேயே தங்கியிருந்து, யானைக்குப் பயிற்சி கொடுக்கிறான்.

குட்டியாக இருந்த யானை மிகுந்த உற்சாகத்துடன் பாகன் கற்றுக் கொடுத்ததை சரியாகச் செய்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.

மூன்று கால்களில் நிற்பது, முக்காலியில் ஏறுவது, சைக்கிள் ஒட்டுவது என அந்த யானை செய்யும் சாகசங்களால் சர்க்கஸீக்கு வரும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாட்கள் நகர்கின்றன..

ஒருநாள் அந்த யானைப் பாகன் இறந்து விடுகிறான்..

அதில் இருந்து அந்த யானை சரிவர சாப்பிடுவது இல்லை.. அதன் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருக்கிறது.

அதன் உடல் சில நாட்களிலேயே மெலிந்து சோர்ந்து போனது.

சர்க்கஸ் முதலாளி கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து காட்டுகிறார்.

அவர்கள் மருந்து, மாத்திரைகளை கொடுக்கிறார்கள். ஆனாலும், அதன் உடல்நிலையில் எந்த சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை..

அப்போது அங்கு வந்த வழிப்போக்கன் சர்க்கஸ் முதலாளியிடம், யானையை நான் குணப்படுத்தட்டுமா? என்று கேட்கிறான்..

அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே என முடிவு செய்கிறார்.

அந்த வழிப்போக்கன் யானையின் அருகில் சென்று, அதன் காதருகே நின்று யானையிடம் ஏதோ சொன்னான்..

யானையின் கண்களில் உற்சாகம் தெரியத் துவங்கியது.. உடனே அது எழுந்து போய் சாப்பாடு வைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று சாப்பிட்டது..

சர்க்கஸ் முதலாளி, அந்த நபரிடம் சென்று, நீங்கள் அதன் காதருகே எதையோ சொன்னதும் சாப்பிட்டதே அப்படி என்னதான் சொன்னீர்கள்? என்று கேட்டார்.

அந்த வழிப்போக்கன், இந்த யானை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது..

யானைப் பாகன் தமிழில் பேசி அதை பராமரித்து வந்தான்.

பாகன் இல்லாததால் இந்த யானைக்கு அவன் பேசிய மொழியை கேட்காமல் வருத்தப்பட்டது.

நானும் தமிழகத்தில் இருந்து வருகிறேன்.. அதனால் யானைக்கு என் தமிழ் மொழியில், ‘அட முட்டாள் யானையே இப்படி சாப்பிடாமல் கிடந்தால் உடல் மெலிந்து செத்துவிடுவாய்’ என்று சொன்னேன்’ அவ்வளவு தான்  என்றான்..

ஒரு யானைக்குக் கூட அதைப் பழக்கியவனின் மொழி என்பது முக்கியமாக இருக்கிறது..

ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மரியாதை என்ற அடிமைப்புத்தி பரவிவிட்டது.

மரபும், தொன்மையும் கொண்ட தமிழ் மொழியின் பெருமைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை..

உலகத்திலேயே எந்த நாட்டிலும் தாய்மொழியைத் தெரியாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது..

ஆனால், இங்கே மட்டும் தான் அது நடக்கிறது..

இங்கே தாய்மொழியைக் கற்றுக் கொள்ளாமலேயே எந்தத் துறையிலும் உயர் கல்வியைக் கற்றுவிட முடியும்..

ஆனால், அது வாழ்க்கைச் சார்ந்ததாக இருக்குமா? என்பது கேள்விக் குறியே..

நாம் அனைவருமே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்..

அதற்கு நமது தாய்மொழியின் பெருமையும், அதன் தொன்மையையும் தெரிந்திருப்பது அவசியம்...

திமுக பினாமி திருமுருகன்காந்தி...


தெலுங்கு வருணாசிரம அரசுக்கு காவல் காக்கும் திராவிடம் தமிழர்களின அரசை இகழ்கிறதே...


தமிழர்கள் வரலாற்றிலேயே மிக மோசமான காலம் எது என்றால் திராவிட தெலுங்கு பாளையக்கார கும்பல்களின் அராஜக ஆட்சி நடத்திய கால கட்டம் தான்..

சங்க கால தமிழர்கள் ஆட்சியாக இருந்தாலும், அதன்பின் வந்த களப்பிரர்கள் ஆட்சி என்றாலும் அதன் பிறகான பல்லவர் ஆட்சி, பிற்கால சோழர்கள் ஆட்சி, பாண்டியர்கள் ஆட்சி என அனைத்தும் மைய ஆட்சி அதன் பின்பான படிநிலை குறுநில மன்னர்கள், அதன் கீழ் மண்டலங்கள், ஊராட்சிவரை ஒரு அமைப்பு, ஒரு சிஸ்டம் இருந்துள்ளது, வரிவிதிப்புகள் தண்டனைகள் என அனைத்தும் ஒரு அமைப்பாக சிஸ்டமாக இருந்தது, இதில் கட்டிடகலை, போர், நீர்வளம், மருத்துவம், கலை இலக்கியம் என அனைத்தும் செழித்து வளர்ந்தது, என்று தமிழர்களின் ஆட்சி போய் திராவிட தெலுங்கு கும்பல்களின் ஆட்சி வந்ததோ அப்போதிருந்தே தமிழர்கள் அறிவு திட்டமிட்டு அழிக்கப்பட்டது..

அதிலும் பாளையக்காரர்கள் என்ற பெயரில் தெலுங்கு கும்பல் ஆட்சி செய்த போது சிறு சிறு பகுதிகளை கொண்டு எந்த விதமான ஒரு அரசு அமைப்புக்குள்ளும் உட்படாமல் ஒரு சிஸ்டமே இல்லாமல் பொறுக்கித்தனமான ஆட்சி நடந்து மக்களை கொடூரமாக நடத்தி விரும்பிய பெண்களை தூக்கிப்போட்டுக்கொண்டு போய் கெடுத்து (நாட்டார் கதைகளில் மிகப்பல ஜமீன்கள் பெண்களை தூக்கியதால் பெண்ணை கொலை செய்த கதைகள், பெண் ஜமீனை கொலை செய்த கதைகள், பெண் தற்கொலை செய்து கொண்ட கதைகள்) காட்டாட்சி செய்தனர் தெலுங்கு திராவிட கும்பல்கள்.

வருணாசிரமத்தை காக்கவே உருவாக்கப்பட்ட மனுதர்ம ஆட்சி நடத்திய இந்து மத(பார்ப்பன) ஆட்சியான விஜயநகர அரசுகளையும் அதன் வழி தமிழகத்தை பல நூறு ஆண்டுகள் சுரண்டிய தெலுங்கு நாயக்க ஆட்சிகள், நாட்டை கூறு போட்டு பாளையக்காரர்கள் என்ற பெயரில் மக்களை கொள்ளையடித்த தெலுங்கர்களை பற்றி ஒருவார்த்தை கூட பேசாத இதே திராவிட புருடாக்கள் தான் தமிழ் மாமன்னர்களை கொச்சை படுத்துகிறார்கள்..

இதில் தமிழ் மாமன்னர்களை பற்றி மிக மோசமாக பேசி பேசி நானும் கூட திராவிட மாயையில் சில ஆண்டுகளுக்கு முன் எம் முன்னோர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்று கேட்டிருக்கிறேன், அவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டிடம் நிற்கிறது, கடலில் நீரோட்டத்தில் வழி கண்டு நாகப்பட்டினத்திலிருந்து மலாக்காவிற்குள் கப்பல்களில் நுழைந்திருக்கிறான், ஒரே நேரத்தில் துறைமுகங்களில் நுழைந்து தாக்கி சீனாவுக்கான வியாபர பாதையான பட்டு பாதையை  கட்டுப்படுத்தி தெற்காசியாவை 250 ஆண்டுகள் ஆண்டிருக்கிறான், இன்றைக்கு சிக்ஸ் சிக்மா வைத்துக்கொண்டு ஒரு சேஞ்ச் ரெக்வெஸ்ட்டுக்கு 4 முறை ரீ பேஸ்லைன் செய்யும் காலத்தில் ஒற்றை பாறையில் கோயில்கள் செதுக்கியுள்ளான் ஒரே ஒரு தவறு கூட இல்லாமல், இவ்வளவு அறிவையும் அழித்து மறைத்து எங்களையே எம்ம முன்னோர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்று கேட்க வைத்தது திராவிடம்..

திராவிட மாயையை ஒழிக்க வேண்டும், தமிழகத்தில் தெலுங்கு திராவிட கும்பல்களின் அரசியல் அழிவில் தான் தமிழர்களின் வரலாறும், அதிகாரமும் மீண்டு வரும்...

மழை காரணமாக சென்னைக்கு சிகப்பு எச்சரிக்கை...


பண்டைத் தமிழகத்தில் தீபாவளி...


பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை..

ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன.

கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு கூறும்.

இக்காலத்தில், மலை உச்சியில் கூட விளக்கேற்றி வைத்தனர். இந்த நிகழ்வு பிற்காலத்தில் தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.

விஜயநகர, நாயக்க பேரரசு காலத்தில் தமிழகத்தில் தீபாவளி விழா பெரிய அளவில் அறிமுகமானது என்ற கருத்து உண்டு. செஞ்சி நாயக்கர், தஞ்சை நாயக்கர் செல்வாக்காலும் மராட்டிய வணிகர்கள், போர் வீரர்கள் ஆகியோரின் செல்வாக்காலும் தஞ்சை, மதுரை பகுதிகளில் தீபாவளி பரவலாகியிருக்கிறது.

இது குறித்த ஆவணங்களை புலவர் ராசு பதிப்பித்திருக்கிறார்...

தஞ்சை அரண்மனை தேவதாசியான சுந்தரி என்பவள் தீபாவளி சமயம் அரண்மனையில் நடனமாட கொடுக்கப்பட்ட பரிசுகளை ஒரு மோடி ஆவணம் கூறும் ( கி.பி. 18 ஆம் நூற்.) 1821-ம் ஆண்டு ஆவணம் தஞ்சை கோட்டைக்குள் நகர்வீதியில் செல்லும் மக்களுக்கு இனிப்பு பண்டங்களைத் தானமாக வழங்கியதை குறிப்பிடுகிறது.

இன்னொரு ஆவணம், தீபாவளி முந்திய நாளில் எண்ணெய் குளியல் செய்யப்பட்டதையும் கூறும்.

1827- ம் ஆண்டு ஆவணம் தஞ்சை அரண்மனைகளில் 100 பட்டாசு கட்டுகள் வாங்கப்பட்டதற்கு முக்கால் பணம் கொடுக்கப்பட்டதையும் 1839- ம் ஆண்டு ஆவணம் 300 கட்டு பட்டாசு வாங்கியதையும் கூறும்.

இந்தப் பட்டாசுகள் பொது மக்களுக்கும் இலவசமாய்க் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் 19- ம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே தீபாவளி விழாவில் பட்டாசு கொளுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது...

அமெரிக்கா - சீனா உளவு...


கடந்த 19 ஆண்டுகளாக ‘நாம் தமிழர்’ சீமான் பிடியிலிருந்த வீட்டை மீட்ட மகிழ்ச்சியில் இருக்கும் பெரியவரின் புகைப்படம் ஒன்று முகநூலில் வைரல் ஆகி வருகிறது...


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு வளசரவாக்கத்தில் பெரிய வீடு ஒன்று உள்ளது. அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அந்த வீட்டை ஆக்கிரமித்து குடியிருந்து வந்ததாகவும், அவ்வீட்டின் உரிமையாளர் வீட்டைக்காலி செய்யச்சொல்லி கோர்ட் படிகளில் ஏறிப் போராடியபோதும் முறைப்படி மீட்க முடியாமல் தவித்து வந்ததாகவும் செய்திகள் நடமாடின.

அப்பெரும் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், கோர்ட் தீர்ப்பு பெரியவருக்கு சாதகமாக வந்ததை சீமான் வீட்டைக்காலி செய்து வெளியேறிவிட்டதாகவும் அப்பெரியவரின் வக்கீல் முகநூலில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்று இரவிலிருந்து வைரல் ஆகிவரும் அப்பதிவு இதோ; ’தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தில் 19 ஆண்டுகாலமாக நுழைய முடியாமல் பரிதவித்த பெரியவரின் நிம்மதி பெருமூச்சை இன்று கண்டேன்.

ஆனந்த கண்ணீரோடு, அவரது இடத்தில் அங்குமிங்கும் நடந்து பார்த்து பரவசம் அடைந்தபோது என் கண்களும் கலங்கியது.

இத்தனை ஆண்டுகாலமாக 4500000ற்கு மேல் வாடகை பாக்கி, பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல்.

ஒருவழியாக இன்று என்னால் அதற்கு தீர்வு கிடைத்தது என நினைக்கும் போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன். இத்தனைக்கும் சீமான் அவர் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல.

உண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டு சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குனராக தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தை விட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார் .

வாடகை நிர்ணயம் செய்த வழக்கில் வெற்றி, வீட்டை காலி செய்ய சொன்ன வழக்கில் வெற்றி, மேல்முறையீடு வழக்கில் வெற்றி, தீர்ப்பை செயல்படுத்தும் வழக்கிலும் இன்று இறுதி வெற்றி.

இன்று இதுவரை தான் செய்த தவறை உணர்ந்து, மனம்திருந்தி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சி சீமான்.

ஒரு பக்கம் அவர் வாழ்ந்து வளர்ந்த வீட்டை, சட்டத்தின் வழியில் பிடுங்கி, உரிமையாளர் வசம் ஒப்படைக்கும்போது சீமானுக்காக சற்று கவலையுற்றாலும், சொத்தை சம்பாதித்தவரின் முகத்தில் மகிழ்ச்சியை காணும்போது நான் நேர்மையாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்துகிறேன் என மனம் நிம்மதி அடைகிறேன்.

இதன்மூலம் அதிகாரம் மிக்க தலைவர்களுக்கு நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

அப்பாவி மக்களின் சொத்துக்களை பறித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல.

அன்புடன் :வழக்கறிஞர் V.S.கோபு. இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.

https://twitter.com/asianet_tamil/status/1047326229278482433?s=19

தீவிரமாகும் வணிகப் போர்...


சென்னையின் 20 ரூபாய் ஃபீஸ் டாக்டர் காலமானார்...


டாக்டர் ஜகன் மோகன். 1975 முதல் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தவர் கடைசியாக வாங்கிய பரிசோதனை கட்டணம் ரூ 20. சந்திரா கிளினிக் என்ற கிளினிக் நடத்தி வந்தார் இன்று வசூலித்த 20₹ கட்டணமும் அவருடைய கண் பார்வை பாதித்த காரணமாக வேலைக்கு அமர்த்திய ஆட்களின் சம்பளத்திற்கும் , மின் கட்டணத்திற்கும் தான் நேற்று மாலை வரை மருத்துவம் பார்த்தவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலிக்காரணமாக இன்று காலை உயிரிழந்தார்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


யூஃபாவில் உள்ள ஒரு ரஷ்ய கண் மருத்துவர் டாக்டர் எர்ன்ஸ்ட் முல்டாஷேவ், திபெத்தில் உள்ள மவுண்ட் கைலாஷ் உண்மையில் ஒரு சிறிய  பிரமிடுகளால் சூழப்பட்ட ஒரு பழங்கால மனிதனால் தங்கள் விண்ணுலக கடவுளுக்காக உருவாக்கப்பட்ட பிரமிடு என்பதோடு, கிசா மற்றும் தியோடிஹுகானில் உள்ள பிரமிடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

கடல் மட்டத்திலிருந்து 6718 மீட்டர் உயரத்தில் திபெத்தில் உள்ள கைலாயம் ஹிந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் ஜெயின்ஸ் ஆகியோரால் புனிதமானதாக கருதப்படுகிறது. தீமை அழிப்பவர் சிவன், மலையில் நிரந்தர தியானத்தில் அமர்ந்திருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

இந்தியர்களைப் போன்ற ரஷ்யர்களுக்கும் நீண்ட காலமாக மலைகள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. நிக்கோலஸ் ரோரிக் மவுண்ட் கைலாஷ்ல் கண்ட அமானுஷ்யங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதினார்.

கைலாய மலைக்கு அருகிலுள்ள ஷம்பலா என்ற ஒரு மாய ராஜ்யம் இருப்பதாக ரோரிச் நம்பினார். சில ஹிந்து பிரிவுகளான ஷாம்பாலா கபப்பாவைக் குறிக்கின்றன, (இந்த கப்பாகள் சீன, ஜப்பானிய நாட்டுப்புறப் கதைகளில் வரும் வேற்றுகிரக உயிரினமாக கூறப்படுகிறது.) இந்த இன மக்கள் அங்கு வசிக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.

1999 ஆம் ஆண்டில்  எர்ன்ஸ்ட் முல்டாஷேவ், கைலாய மலையின் இரகசியங்களை கண்டுபிடிப்பதற்காக திபெத்திற்கு பயணம் செய்ய முடிவு செய்தார். அவரது குழுவில் புவியியல், இயற்பியல் மற்றும் வரலாற்றுயியல் நிபுணர்களைக் கொண்டிருந்தது. குழு மற்றும் பல திபெத்திய லாமாக்களும் இருந்தனர். இந்த குழு பல மாதங்கள் புனித கைலாய மலையின் அடிவாரத்தில் தங்கினர். (இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிட்லரின் நாசிப் படைகளும் திபெத்திய லாமாக்களுடன் சேர்ந்து ஒருவித அமானுஷ்ய இனத்தின் உதவியை நாடினார்கள். இதைபற்றி இன்னோர் பதிவில் பார்க்கலாம்.)

முல்டாஷேவின் குழு, கைலாய மலை உண்மையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பிரமிடு என்றும், பண்டைய காலத்தில் கட்டப்பட்டது என்றும் முடிவுக்கு வந்தனர். அது பல சிறு பிரமிடுகளால் சூழப்பட்டதாகவும், அந்த மலை அனைத்து அமானுஷ்ய நடவடிக்கைகளின் மையமாகவும் இருப்பதாக அவர்கள் கூறினார்.

"இரவின் மெளனத்தில், மலையின் வயிற்றில் வித்தியாசமான வாயு ஒலிகள் வந்தன" என்ற எழுத்தாளர் முல்டாஷேவ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.  அந்த இரைச்சலை என் நண்பர்களும் தெளிவாக கேட்டார்கள் என்றும்." சில மனிதர்கள் பிரமிடுக்குள் வாழ்வதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

"திபெத்திய நூல்களில் ஷாம்பலா. கைலாய மலையின் வடக்கில் அமைந்திருக்கும் ஆன்மீக நாடாக இருப்பதாக எழுதுகிறார்" மேலும்
"இந்த விவாதத்தை விஞ்ஞானபூர்வமான பார்வையில் இருந்து விவாதிக்க எனக்கு கடினமாக உள்ளது. ஆனால் கைலாஷ் வளாகம் நேரடியாக பூமியில் வாழ்வதுடன், பிரமிடுகள் மற்றும் கல் கண்ணாடிகளை உள்ளடக்கிய 'கடவுளின் நகரத்தின்' திட்ட வரைபடத்தை நாங்கள் செய்தபோது, நாங்கள் மிகவும் வியப்படைந்தோம். டி.என்.ஏ மூலக்கூறுகளின் சேமிப்பு கிடங்கு இடஞ்சார்ந்த கட்டமைப்பு. " என்று தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

பிரமிடுகள் நுட்பமான பண்டைய மற்றும் மேம்பட்ட மக்களால் கட்டப்பட்டது என்று முல்டாஷேவ் நம்புகிறார். மலைப்பகுதி பண்டைய நினைவுச்சின்ன அமைப்புகளின் ஒரு மிக முக்கியமான பகுதியாகும் என்றும், நேரடியாக கிசா மற்றும் தியோதிஹாகான் பிரமிடுகள் போன்ற பூமியின் முக்கிய பிரமிடுகளோடு இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் எழுதினார்.

ரஷ்ய அரசு இவரது ஆய்வுகளை விவரமாக ஆராய்ந்து வருகிறது.
சீன அரசோ முல்டாஷேவ் இன் ஆய்வுகளையும் கூற்றுகளையும் மூடிமறைப்பதில் மும்முரமாக இருந்தது.

பிரபஞ்சத்தின் இரகசியங்களைப் பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லாத ஒரு ஆர்வமுள்ள நபர், கைலாயம் பற்றி இந்தளவுக்கு ஆராய்ந்து உள்ளார். உலகளாவிய இந்துக்கள் மற்றும் பௌத்தர்களின் உணர்வுகளை சீன அரசாங்கம் மதிக்கிறதா என்பது தெரியவில்லை.

ஆனால் எவரையும் மவுண்ட் கைலாஷ்  பற்றி உண்மையை அறிய முயற்சி செய்யக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது....

சில ஜோதிட சூட்சுமங்கள்...


பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா...
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே... கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது...

ஆம், ஒருவர் ஜாதகத்தில் நன்மை தரும் கிரகங்கள் மறைந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது கெடுதல் செய்யும் கிரகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், திக் பலம் மற்றும் பாவாதிபத்தியப்படி அவை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எப்போதுமே சிறப்புதான். அப்படியாக சில கிரக அமைப்புகளைக் கீழே காணலாம்...

1ல் சூரியன் / புதன் / குரு இருப்பது
2ல் சந்திரன் / ராகு இருப்பது
3ல் புதன் இருப்பது
4ல் குரு / சந்திரன் / சுக்கிரன் இருப்பது
5ல் சந்திரன் இருப்பது மிகச் சிறப்பு
6ல் புதன் / செவ்வாய் இருப்பது
7ல் சனி இருப்பது
8ல் புதன் / கேது இருப்பது
9ல் சந்திரன் இருப்பது மிகச் சிறப்பு
10ல் செவ்வாய் / சூரியன் இருப்பது
11ல் சனி / சூரியன் / மாந்தி இருப்பது
12ல் குரு / சுக்கிரன் இருப்பது...