11/01/2021

அண்ட, பிண்ட விசாரம்...

 

அண்டத்திற்குள் பிண்டம்...

பிண்டத்திற்குள் அண்டம்...

அண்ட, பிண்ட விசாரம்...

பொதுவாக அண்டம் என்றால் இந்தப் பிரபஞ்சத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள்.

ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன.

நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும்.

பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும்.

அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.

அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும்.

அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் சூட்டினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை.

அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் சூட்டைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளது.

மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது.

அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது சித்தபெருமக்கள் கூறி இருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே...

இயற்கையிடம் இருந்து மக்களை திட்டமிட்டு வெளியேற்றி கொண்டு இருக்கிறார்கள்...

 


உலகத்திலேயே தமிழக மக்களாகிய நாம்தான் அடிமை மக்கள் என்பதனை இந்த கொரோனா அடக்கு முறைகளில் வெளிப்படுகிறது. நாம் கோழைகள்...

 


மருத்துவ குணம் கொண்ட அரச மரம்...

 


மருத்துவ குணம் கொண்ட அரச மரம்! , ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?

அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறதுநம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள்.

அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்...

நம்ப முடியாத உண்மைகள்...

 


பாஜக மோடியின் இந்த மத வியாபாரத்தில் வளர்ந்துள்ள பிராடு சாமியார்கள்...

 


தேமுதிக எனும் தெலுங்கர் கட்சி கலாட்டா...

 


தமிழின் பொருள் என்ன?


பல  சினிமா  படங்களில்  தமிழ் மொழி கடினமான  மொழி  என்று காட்டபடுகிறது.

இது வருத்தத்திற்கு உரிய  செயல்.

இன்று தமிழ் நாட்டில் பெரும்பான்மையான  விண்ணப்ப படிவங்கள்  தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளன.

தமிழ்  உலகிலேயே  வேறு  எந்த மொழிக்கும் இல்லாத பெருமை இதற்கு உண்டு.

அது என்னவென்றால் வேறு  எந்த மொழினுடைய  பெயருக்கு  அர்த்தம்  இருக்காது.

ஆனால்  தமிழ் மொழிக்கு  மட்டும் இனிமை  என்ற பொருள் உண்டு...

வென்றாக வேண்டும் விவசாயிகள் போராட்டம்...

 


பேருந்தில் இருந்து ஏழரை சவரன் நகையை திருடிய திமுக இளைஞரணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்...

 


ஒரு மாநிலத்தில் 30 % விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்லேயே சொல்லப்ட்டிருந்தும்...

தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது.

அதில் மேலும் கொடுமை...

மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும் , கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது.

இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது .

60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு.

சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது , மொழி இழந்தோம் , மானம் இழந்தோம் , அரசியல் அறிவை இழந்தோம் . நிலம் இழந்தோம் , காடு மலை இழந்தோம் , இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்.

இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ , அல்ல மாவட்ட போருப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும் . ஆனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி.

ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு வேண்டும் . ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு .

நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம் . குறைந்த பட்சம் , மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ? சிந்தியுங்கள்..

இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்.

இவை எல்லாம் மறந்து மானம்கெட்டு பாடுவோம்.. ஜன கன மன..

சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்.....

பாஜக அமைச்சர் ஜெய்சங்கர் திட்டப்படியே இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துக்கிறது...



இந்த இனத்தில் பிறந்து நாங்கள் பெருமை கொள்வதா... அல்லது இவர்களுடன் சேர்ந்து நாமும் இறப்பதா...

அதிமுக ஊழல் எடப்பாடி கலாட்டா...

 


சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய்...

 


சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.

ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய்.

இதைப் பற்றி நான் இங்கே பதியக் காரணம் இந்த விஷயம் மீடியாக்களால் பேசப் படவில்லை என்பதும், நமது பாடப் புத்தகங்களிலும் பெரிதாக எந்த விவரங்களும் தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான்.

இதை அரசாங்கம் குப்பைகளாலும் இடி பொருட்களாலும் நிரப்பி மறைத்து விட முயல்வது ஒரு தேச அவமானம். தொலை நோக்குப் பார்வை (அப்படின்னா) இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள் ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரே புதையலையும் மண்ணாக்கி விட்ட அநியாயம் இது.

1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து 420 km நீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த அதிசயம் உருவானது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல இது பெரிதாக உபயோகபடுத்தபட்டு இருக்கிறது.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக் கால்வாய், சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. மற்ற பகுதிகளில் இன்னும் பெரிதும் பாதிக்கப் படாத இந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும் உபயோக நிலையிலேயே உள்ளது. சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 km நீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டிருக்கிறது.

MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக் கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது. இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பது யாருக்குமே புரியவில்லை என்பது பரிதாபம் தான். இந்த ரயில் பாதை கட்டுமானம் பெரும்பாலான இடங்களில் இந்தக் கால்வாயை சிதைத்து விட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள் பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப் பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்காத ஒன்று.

2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தமிழக மற்றும் ஆந்திர அரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

பல கோடி செலவில் சாலைகள் அமைத்து நம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இது போன்ற எளிய இயற்கையான போக்குவரத்து வழிகளை ஏன் மறந்து விட்டிருக்கிறது? இன்றைய தேதிக்கு இது போன்ற திட்டத்தை அமைக்க எத்தனை ஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்று யாராவது யோசித்தால் தேவலை (200% மந்திரி வரிகள் தனி).

ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும் போதும் பல இடங்களில் ஸ்கேல் வைத்துப் போட்டது போல நேராகத் தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய் நாம் எவ்வளவு அறிவில்லாமல், பொறுப்பில்லாமல் வாழ்கிறோம் என்பதை ஒரு அளவுகோல் போல நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது...

பாஜக அமைச்சர் ஜெய்சங்கர் தான் இலங்கை முள்ளிவாய்கால் தகர்ப்புக்கு காரணம்...

 


தெலுங்கர் வைகோ நாயுடு எனும் தமிழின எதிரியின் நாடகம்...

 


ஜவ்வரிசி...

இந்த வார்த்தை தமிழும் கிடையாது...

அதேவேளை ஜவ்வரிசி என்பது அனைவருக்கும் தெரிந்த அத்யாவசிய உணவு..

இது எப்படி தமிழர்கள் மத்தியில் பரவலானதாக ஆகியது என்ற விஷயத்தை தேடும்போது தான் தெரிந்தது..

ஜாவா அரிசி தான் ஜவ்வரிசி ஆனது..

ஆம் ஜாவா பகுதியில் இருந்து தான் இந்த ஜவ்வரிசி வருகிறது இதுவே ஜாவா அரிசி ஜவ்வரிசி ஆனது ...

மராட்டிய பிராடு ரஜினியும்... முட்டாள் ரசிகர்களும்...

 


அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


தேவை...

 


காட்சிக்கும் பார்வைக்கும்  வித்தியாசம் இருக்கிறது.

மனித கண்களால் காண கூடியவை அனைத்துமே காட்சியாகும்.

ஆனால் எது தேவை என்பதை பொறுத்துத்தான் பார்வை முடிவாகும்.

பார்வை நம் மனதின் தேவையால் கிடைப்பது.

இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை உணர்ந்து அறிந்தோர்க்கு, தேவையானவை தெரியும்.

தேவையானவை மட்டுமே தெரியும்...

கேரள ஆளுநர் சதாசிவம் யார் தெரியுமா...

 


ஆஸ்திரேலிய பாதிரியார் கிரகம் ஸ்டெயினஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் பிலிப்பு மற்றும் திமத்தெயு இந்துத்துவா காவி தீவிரவாத வெறியர்களால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மரணதண்டனையை ஆயுளாக குறைத்த உத்தமன்...

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை போலி என்கவுண்டர் செய்த வழக்கில் காவி தீவிரவாதி அமித்ஷாவை தப்பிக்க வைத்தவர்..

அதற்கு பரிசாக ஓய்வுபெற்ற மறுநாளே ஒய்யாரமாக கேரள ஆளுனராக கொலுவேற்றப்பட்டார் சதாசிவம்...

வாழ்க மனிதாபிமானம்...

மராட்டிய பிராடு ரஜினியும்.. முட்டாள் ரசிகர்களும்...

 


திருட்டு திமுக காரனுங்களே கடைசி வரை திருந்தவே மாட்டீங்களா.?

 


வெண்டைக்காய்...

இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்...

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு.

ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும்.

நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும்.

உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்...

விவசாயிகளின் போராட்டம் அவர்களுக்கு மட்டுமானது அல்ல, ஒட்டுமொத்த மக்களுக்குமானது என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள்...

 


அதிமுக வளர்மதி கலாட்டா...