24/12/2021

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்..

 


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.

இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

வயிற்றில் வித்தியாசம் -  உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை.

குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு -  வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.. ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.

பெண்டுலம் ட்ரிக் - உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.

எடை ஜாஸ்தியா இருக்கா - சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம்.. குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.

புளிப்பா? இனிப்பா - உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம்.. அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.

அதிக வாந்தியா - கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது சாதாரணம்..

ஆனால் இது அளவுக்கு அதிகமாக இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.. குறைவாக இருந்தால் பெண் குழந்தை என அர்த்தம்...

இனிய இரவு வணக்கம்...

திருட்டு திமுக ஸ்டாலின் கொடுக்கும் விடியல்...

பிராண சிகிச்சை...

 


இச்சிகிச்சையளிக்கும் முன், சிகிச்சை பெறுபவருக்கு இச்சிகிச்சை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை முதல்  சிகிச்சையின் போது தெரிவித்தல் வேண்டும்.  இதன் பின்னரே அவரின் முழுச் சம்மதத்துடன் இதனைச் செய்தல் வேண்டும்.

சாதாரண வைத்திய முறையில் சில சிகிச்சைகள் அவர்கள் உறவினர் அல்லது அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் ஆரம்பிக்கபடுகின்றன. இதற்கு, அத்தனிப்பட்ட மனிதரின் தெளிவான மனச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலே நல்ல முடிவை, நல்ல நிவாரணத்தைப் பெற முடியும். அல்லாது போனால் விழலுக்கு இறைத்த நீர் போல பிரயோசனமற்றதாகும்.

முதலில் இறை சக்தி அல்லது இயற்கை சக்தியில் சிகிச்சை அளிப்பவருக்கு நம்பிக்கை வேண்டும்.  இதனைச் செய்பவர், இது தன் செயல் அல்ல, தான் ஒரு ஊடகம் அல்லது கருவி என்பதை தாமே உணர்ந்து அதனை சிகிச்சை செய்பவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும்.

அரியசக்தி ஒன்று பிரபஞ்சத்தில் இருந்து எம்மை இயக்கும்  பிராண சக்தியாக எம்மில் புகுந்து, எம்மூலம் சிகிச்சை பெறுபவரின் உடற்கூறுகளை வெவ்வேறு உடற் கவசங்களினூடாக அடைந்து, ஒரு சீரிய மாற்றத்தை உண்டாக்கி சிகிச்சை பெறுபவரின் உடற் சக்கரங்களில் ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் சீரான ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் ஓர் சீரான பிராண ஓட்டத்தை உண்டாக்கி பிராணா குறைந்த இடத்திற்குத் தேவையான பிராணாவை அளிப்பதன் மூலமும், பிராணா கூடிய பகுதிக்கு தேவையற்ற  பிராணாவை  நீக்குவதன் மூலமும், ஒரு சம நிலையை உருவாக்கி, நோய்களை அந்தப் பகுதிகளில் குணப்படுத்துகின்றது.

இச்சிகிச்சை, அதனைப் பெறுபவரின் முழுச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலும் இதனைப் பெறுபவரின் மனம்  இச்சிகிச்சையின் போது, இந்த அரிய சக்தியிலோ அல்லது இதனைச் செய்பவரின் மேலோ சந்தேகம் கொண்டால் இதனால் பயன் ஏற்படாது.

மேலும் மனதை ஒரு நிலையில் வைத்து அமைதியாக  இச்சிகிச்சையின் தாக்கத்தை உணர்ந்து, அனுபவித்து, அந்த அனுபவத்தை இதனைச் செய்பவரிடம்  தேவையெனில் தெரியப்படுத்துவதோடு நில்லாமல், மனத்தை சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அல்லது முற்றிலும் புறம்பான எண்ணங்களை மனதில் அலைய விட்டு, பிறவிடயங்களில் முக்கிய கண்ணாக இருந்து கொண்டால்  இச்சிகிச்சையினால் பயன் கிட்டாது.

இதனைச் செய்பவருக்கும் அதிருப்தியையும் சோர்வையுமே உண்டாக்கும்.

சிலர்  இச்சிகிச்சையின் தூய உயர் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் இதனை ஒரு மனோ வசியம் அல்லது மாந்த்ரீகம் (மந்திரம்) சம்பந்தமானது என்று தாமும் ஐயம் கொண்டு, பலரையும் தடுமாற வைக்கிறார்கள்.

இது அவர்கள் இது பற்றி சரியான அறிவை, அல்லது தகவல்களைப் பெறாததாலும், அல்லது  இச்சிகிச்சையினால் பலன் கிட்டாத சிலரின் கதைப் பரப்பலாலும் (gossip) ஏற்பட்ட விளைவேயன்றி  இச்சிகிச்சையில் எந்தவித கெட்ட தன்மையும் இல்லை.

ஒரு வைத்தியரிடம் (medical doctor) எவ்வாறு முழுமையாக அவரை நம்பி சிகிச்சை பெறுகிறோமோ, அதே போல்  இச்சிகி்ச்சையில், எம்மை ஆளும் ஒரு இயற்கைச் சக்தியிடமோ அல்லது அத்தகைய ஒரு பரம் பொருளிடமோ மனத்தளவிலாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.

அடுத்து  இச்சிகிச்சையைச் செய்பவரிடமும், முழுமையான நம்பிக்கையை, அவர் அச்சக்தியை வழிப்படுத்தி நம்மில் நன்மையை, தன்னலமற்ற முறையில் இந்த அரிய சக்தியை தம்மூடே கடத்தி அதனைத் தகுந்தவாறு சிகிச்சை செய்பவருக்காக உபயோகப்படுத்துகிறார், என்பதையும் புரிந்து கொண்டு, மனப் பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.  

இறைவன் ஒருவன் இருப்பதை நம்பாமல் இறை வழிபாடு அல்லது கோயில் வழிபாடு செய்வது போல், அல்லது வைத்தியரிடம் நம்பிக்கை வைக்காது அவரிடம் சிகிச்சை பெறுவது போல், அல்லது குருவின் அறிவை ஆற்றலை உணராது, மதிக்காது அவரிடம் பாடமோ, பயிற்சியோ பெறுவது போல் இப்பிராண சிகிச்சையின் போது, நம்பிக்கை வைக்காது சிந்தனையை அலைய விட்டால் பயன் கிடைக்குமா..?

இனிய மாலை வணக்கம்...

திராவிட போர்வையில் வந்தேறிகளின் தில்லு முல்லு...

தமிழக கிராமிய மக்களுக்கு அறிவியலை ஊட்டுங்கள்..

 


கோவில்கள் அனைத்திலும் இலவசப் பள்ளிகள் அமையுங்கள் பகுதி நேரமாக என்றாலும்.

செய்ய விடுவார்களா இந்தப் பகுத்தறிவுவாதிகள். இல்லவே இல்லை.

மாறாக.. கோவில் சிலைகளுக்கு கல்லால் அடிக்கவும் பிராமணர்களை ஒழிக்கவும் கோசம் போட்டு சமூகப் பிரிவினைகளை வளர்க்கவும்..

தமிழகத்தில் ஒரு பதட்டமான சூழலைப் பேணி சாதி அரசியல் நடத்தவுமே இவர்கள் இந்தக் கோசத்தைப் பாவிக்கப் போகின்றனர்.

அதுதான் கடந்த 70- 80 வருடங்களாக நடந்தும் வருகிறது..

இது தான் பெரியாரிசம் என்கிற திராவிட கம்பனியின் வேளை...

தமிழ்நாடு முதலிடம்.. கடன் வாங்கியதில் 😁

திருட்டு திமுக ஸ்டாலின் அடிக்கும் பெட்ரோல் கொள்ளை...

தமிழினமே விழித்தெழு...

 


அமெரிக்காவில் 75%க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள். ரஷ்சியாவில் அப்படி. ஜேர்மனியில் அப்படி. இத்தாலியில் அப்படி. அவர்கள் மத எதிர்ப்பு.. மதப் பிரிவினை என்று எதையாவது முழங்கி தங்கள் சமூகங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனரா இல்லை.

ஏற்றுக் கொண்ட மதக் கொள்கைகளை மனிதனை சமூக வாழ்வியலுக்குள் நிலை நிறுத்த பயன்படுத்திக் கொண்டு அறிவியலை வளர்த்து பொருளாதார சமூக முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ..

நீ பகுத்தறிவுவாதி நான் பகுத்தறிவற்றவாதி என்று மாறி மாறி சிலைகளுக்கு கல்லால் அடிக்கும் பகுத்தறிவற்ற மனிதருக்கு 1%த்துக்கும் உதவாத செயலைச் செய்ய தூண்டிவிட்டு பகைமையை தந்திரமாக உருவாக்கி திராவிடர் போர்வையிலுள்ள வந்தேறி  தெலுங்கர்கள் நம்மை ஆட்சி செய்து பிழைத்து கொண்டிருக்கிறார்கள்...

அதிமுக ராஜேந்திர பாலாஜி கலாட்டா...

இந்திய விற்பனையாளர் பாஜக மோடி Vs என்ஜின் திருடன்...

சிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு...

 


சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர

உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

மாலை வணக்கம்...

என்னமோ போடீ...

திருட்டு திமுக ஸ்டாலின் கொடுத்த விடியல்...

திருட்டு திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலாட்டா...

கோவில்களில் பாலியலில் சிற்பங்கள் போதிக்கும் தத்துவம்...

 


இவ்வகையான பாலியல் சிற்பங்கள் கோபுரத்தின் வெளிப்புறத்தில் தான் காணப்படும்.

ஒரு மனிதன் பாலியலில் உச்சத்தில் இருக்கும் போது  நான் என்ற சிந்தை இல்லாமல் இருப்பான்.

நான் என்ற சிந்தை எந்த தருணத்தில் அறுந்து போகிறதோ அந்த தருணத்தில் அவன் இறைத்தன்மையை அடைகிறான்.

ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக நான் என்ற அகந்தையற்ற சிந்தனை காமத்தில் 1 நிமிடம் கூட நீடிப்பதில்லை. இதன் காரணமாகவே இதனை சிற்றின்பம் என்று கூறுகிறார்கள்.

இத்தகைய நிலையை தியானத்தின் மூலமாக மட்டுமே ஒரு மனிதனால் நிரந்திரமாக அடைய முடியும். அதனால் இதை பேரின்பம் என்று கூறுகிறார்கள்.

காமத்தை எவ்வளவுதான் உயர்த்திப் பிடித்தாலும் அது வெறும் வெளிப்புற இச்சையாகவே கருதப்படுகிறது. அதன் காரணத்தினால் தான் இத்தகைய சிற்பம் வெளிப்புறமாக செதுக்கப்பட்டிருக்கிறது.

நான் என்ற அகந்தையற்ற சிந்தனையை ஒரு மனிதனால் தியானத்தின் மூலமாக மட்டுமே நிரந்திரமாக பெற்று முக்தியடைய முடியும்.

இங்கே தியானமானது மனதால் மட்டுமே சித்தமாகும் விசயம்.

அதனால் தான் கருவறை முதல் தியான மண்டபம் வரை கோவிலின் உள்ளே இருக்கிறது.

அக புறத்தில் கிடைக்கும் 1 நிமிட இறைத்தன்மையை காட்டிலும் அகத்தின் மூலமாக நித்திய இறைத்தன்மைக்கு வழி வகை செய் என்பதை உணர்த்தவே பாலியல் சிற்பம் கோவிலின் வெளிப்புறம் நிறுவப்பட்டுள்ளது...

கிருஷ்ணன் Vs அர்ஜூனன்...

 


அா்ஜூனா உன் வீரத்தை மெச்சினேன் என்ன வரம் வேண்டும் கேள்...

கிருஷ்ணா 14 வருடம் காட்டிலும் 1 வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தும், போராலும் மனம் வேதனைப்பட்டுள்ளேன். அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு சுகபோக வாழ்க்கையை தரவேண்டும் பிரபு...

அப்படியே ஆகட்டும். உன்னை ஒரு நாட்டுக்கு மன்னராக்கி. பல கோடி அளவில் பொருட்களையும் தருகிறேன்.

வேண்டாம் கிருஷ்ணா, பதவியையும் - பொருட்களையும்  பாதுகாக்க வேண்டும். எந்த நேரம் எதிரி போருக்கு வருவான் என்ற அச்சத்துடன் தினம் தினம் வாழ வேண்டும். அதனால்.....

அதனால் சொல்லு அா்ஜூனா....

என்னை பாரத நாட்டில் தமிழ் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியராக நியமித்து, அதே அரசு பள்ளி ஆசிரியை மனைவியாக அருள்புரிவாய் ஆண்டவா ?

என்னை விந்தை இது ? அரசாளும் பதவி வேண்டாம்.அரசாங்க ஆசிரியா் பதவி வேண்டுமா ? என்ன சிறப்பு அது ?

கிருஷ்ணா, எந்த டென்சனும் வேண்டாம்.எதையும் கஷ்டப்பட்டு பாதுகாக்க வேண்டாம். 1ம் தேதிக்கு முன் தினம் 31,30,28 எந்த தேதியாக இருந்தாலும் இரவு 8 மணிக்கு சம்பளம் வந்துவிடும். 

வருடத்தில் 200 நாட்கள் பணி என்பாா்கள் 8 மணிநேர பணியை கணக்கிட்டால் 100 நாட்கள் கூட வராது. மனைவியும் ஆசிரியராகி ஒரே ஊரில் பணி அமைந்துவிட்டால் இந்திரலோகத்து அரசனைவிட நானே பாக்கியவன் பெற்றவனாவேன் பிரபு...

நல்லாயிருக்கே இந்த பணி மேல சொல்லு அா்ஜூனா..

வருடத்திற்க்கு ஒரு முறை சம்பள உயா்வு கேட்டு போராட்டம் நடத்தலாம்.

வருடத்திற்கு ஒரு முறையா ? அரசு நடவடிக்கை எடு்க்காதா ?

தோ்தல்பணி ஆசிரியா்கள் தானே பாா்க்க வேண்டும். அதனால் அரசும் ஆசிரியா்களுக்கு பயப்படும். 

மருத்துவா்கள் பணிநிறுத்தம் செய்தால் கூட அனுபவம் இல்லாத மருத்துவா்களை நியமனம் செய்வாா்கள். ஆனால் ஆசிரியா் வேலைநிறுத்தம் செய்தால் தற்காலிக  பணியாளா்கள் நியமிக்க தயங்குவாா்கள்..

இதற்காகவா ஆசிரியராக பணி செய்ய கேட்கிறாய்..

இல்லை கிருஷ்ணா.  கொரனோ ஊரடங்கில் கோவில்களை பூட்டி உன்னை கூட பட்டினி போட்டாா்கள். ஆனால் கொரானோ ஊரடங்கில் மனம் வாடாதவா்கள் ஆசிரியா்கள் தான். 

2 வருடத்திற்கு பிறகு இப்ப தான் பள்ளிகூடம் பக்கம் சென்றாா்கள். இந்த வருணன் இருக்கிறானே ஆசிரியர்களிடம் ஏதும் பெற்றானா என தெரியவில்லை.

2 மாதமாக தமிழகத்தை விட்டு வேறு எங்கும் போகாமல் ஆசிரியா்களை வீட்டைவிட்டு வெளியே வராமல் பாா்த்துக் கொண்டான்.

அப்ப இதற்கும் சம்பளம் உண்டா ?

ஆமா பிரபு..

அா்ஜூனா, நானும் ஆசிரியராகி விடவா ?

கிருஷ்ணா நான் பள்ளி ஆசிரியராகி நீயும் பள்ளி ஆசிரியரானால் நன்றாக இருக்காது.   நீ அரசாங்க கல்லூரி புரபசர் ஆகிவிடு.

அங்கும் இப்படி சலுகைகள் கிடைக்குமல்லவா ?

இதைவிட அதிகம் கிடைக்கும்,

அப்ப வா, தமிழக அரசு ஆசிரியராக ஆகிவிடுவோம்...

🤓🤓🤓😂😂😂

அடேய் மூவ் கம்பெனி காரா...

பெண்களிடம் கடலை போடும் ஆண்களே உஷார் 😁