19/06/2021

தமிழன் கண்டுபிடிப்பான திருகை...

 


நம் தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு...

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும்.

இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும். சமாச்சாரம் இது...

இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...

காதல் வரமா சாபமா..?

 




காலம் நேரம் தெரியாமல்
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையைக் கூட
நீ கேட்க தயாராக இல்லை

வந்த வழியே செல்கிறாய்
இதயத்தில் - புதியதாய்
ஒரு வலி உண்டாகிறது..

காதலில்
வரமே சாபங்களாகிறது...

அற்புதமான பிரபஞ்ச சக்தி...

 


பிரபஞ்சம் என்றால் என்ன?

இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.

கற்பனைக் கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம்.

எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்?

அது தான் பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே.

பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம்.

ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்?

மிக மிகக்  குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப்  பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?

தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள்  வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.

நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப்  பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?

ரொம்ப கடுபேத்தறிங்க மைலார்ட்😜


 

திமுக ஸ்டாலினும் நீட் தேர்வு தில்லு முல்லு பித்தலாட்டமும்...

 


ஒருத்தன ஏமாத்தனும்னா ௮வன்கிட்ட கருணைய ௭திர்பார்க்ககூடாது, ௮வன் ஆசைய தூண்டனும்...

ஏனா உருட்டு ௮ப்படி...🤨

திமுக_பிண_௮ரசியல்...

மனிதன் எத்தனை வகை...

 




மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்...

1.Introverts  : மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது..

2.Extroverts : எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள். வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.

3.ambiverts : மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.

மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்...

தைல புத்தி : ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும். அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.

கிரத  புத்தி : நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும். பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால்  சொல்லத் தெரியாது.

கம்பள புத்தி : விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பது போல வரும் போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும் போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.


களி மண்  புத்தி: எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது...

தரகர் பாஜக மோடி அரசின் கலாட்டா...

 


திமுக ஸ்டாலினும் நீட் தேர்வு தில்லு முல்லும்...

 


தொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா?

 


பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன் உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை.

ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு நெய் மிக முக்கியமான மருந்து.

நெய் எளிதில் ஜீரணமாகி விடும். சாப்பிட்டவுடன் அவை கொழுப்பாக உடலில் தங்கப்படுவதில்லை. மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.

மாலைக்கண் மற்றும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை என பார்வை குறைபாடு இருப்பவர்கள் கட்டாயம் நெய்யை சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை தெளிவடையும்.

பால், தயிர் போன்றவற்றில் ஒவ்வாமை இருப்பவர்கள் தாராளமாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றிலுள்ள லாக்டோஸ் இல்லையே தவிர அவற்றின் பண்புகள் ஒத்திருக்கும்.

நெய்யில் நிறைய நேர்மறையான குணங்கள் இருப்பதால் அதனை சாப்பிடுவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. அவை மருந்துக்களின் குணங்களை செல்களின் சுவருக்குள் ஊடுருவச் செய்கிறது.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே.

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்...

பாஜக மோடி கலாட்டா...

 


அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூடாது...

 


பணத்தின் கவர்ச்சி...

 


ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.

அவர்கள் பரவாயில்லை.

இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்னெறியைப் பற்றியும், அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.

ஒரு மனிதன் நிகழ்  காலத்தில் வாழும்போது மட்டும்தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.

பணம் என்பது எதிர்காலம்.

எதிர்காலத்துக்கான பாதுகாப்பு.

அதிகாரத்தின் அடையாளம்.

அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.

ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது.

ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது.

மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.

ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள்.

அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.

அது பணமாக இருக்கலாம், அதிகாரமாக இருக்கலாம், தன்  மதிப்பாக இருக்கலாம், மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம், நல்ல குண நலன்களாக இருக்கலாம்.

இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.

இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை.

இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள். அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.

வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள்.

உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார். எதிர்காலத்தை விட்டுவிடு.

அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்...

காதல் தோல்வி...

 




ஒருவன் ஒருத்தியை விரும்புகிறான்…
ஒருத்தி ஒருவனை விரும்புகிறாள்…

காலமாற்றம் பிரிவைத் தர
தற்கொலையை நாடலாமா?

இங்கு யாரும்
காதலுக்காகப் பிறக்கவில்லை..

காதல் தான்
உங்களுக்காக பிறக்கபட்டது..

அதில் தோற்றதினால்
தற்கொலை தீர்வாகுமா?

தற்கொலையை நாடாமல்
வாழ்ந்து காட்டு
அதுவே காதலைத் தோற்கடிக்குமே...

அதிமுக எடப்பாடியின் பித்தலாட்டம்...

 


அதிமுக பிராடு ஓபிஎஸ் பித்தலாட்டம்...

 


தொப்பை கரைய ஆண்களுக்கும் பெண்களுக்கும்…

 


உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத ஆபத்தான கொழுப்பை கரைக்க எளிய வழி (4 நாட்களில் மாற்றத்தை உணரலாம்)...

8 ½ கப் சுத்தமான தண்ணீர் (2லி)

1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி அல்லது 1 டீஸ்பூன் இஞ்சி வேரின் பொடி

1 சிறிய எழுமிச்சை பழம் நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)

1 சிறிய வெள்ளரி பிஞ்சி நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)

12 புதினா இலைகள்..

அனைத்தையும் 8 ½ கப் சுத்தமான தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் வடிகட்டி நீரை மட்டும் சிறிது சிறிதாக பிரித்து குடிக்கவும்.

ஒரே நாள்ல குடிக்க முடியலைன்னாலும் பிர்ட்ஜ்ல வைச்சி இரண்டு நாட்களாக பிரித்து குடிக்கலாம்.

இப்படி தொடர்ந்து 4 வாரங்கள் குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

(This drink keeps you hydrated and does not have any side effects.)...

அவள் நினைவில் நான்...

 




புகை
புகைத்து
புதைக்கத்தான்
பார்த்தேன்...

இன்றோ...

பூ
பூத்தது
புற்றுநோயாய் ....

அவள் நினைவில் நான்...

தடுப்பூசி கட்டாயமில்லை... ஒருபுறம் வீடு வீடாக சென்று மக்களை கட்டாயப்படுத்தி ஊசி போட வைப்பது...

 


இது எங்க வழியடா - யானைகள்...