நமது மூலம் என்ன? நாம் நமது தாய் தந்தை வழியே இணைய பெற்று இங்கு வந்துள்ளோம்.
தாய் தந்தையின் விந்தணுவில் உள்ள 46 குரோமோசோம்களும் இணைந்து வந்துள்ளோம்.
தாயின் மரபணுவில் உள்ள 23 குரோமோசோம்களும், தந்தையின் மரபணுவில் வந்த 23 குரோமோசோம்களும் இணைந்து ஒரு செல் உருவாகி, தாயின் கருவில் வளர்ந்து நாம் இங்கு வந்துள்ளோம்.
சரி தாய் தந்தையின் மூலம் என்ன?
நமது தாய் உருவாக இரண்டு பேர் காரணம், அவளது தாய் மற்றும் தந்தை, நம் தந்தை உருவாக இரண்டு பேர் காரணம், அவனது தாய் மற்றும் தந்தை.
ஆக நான்கு பேர்கள். அந்த நான்கு பேர்களின் தாய் தந்தையென எட்டு பேர்கள். இப்படி 2-4-8-16-32-64-128-256-512-1024.
இந்த பெருகி வரும் நம் முன்னோர் சந்ததி இரு வேறு புறத்திலும் விரி வடைகிறது.
ஆக, நாம் என்னவோ முப்பாட்டன் பாட்டன் அப்பன் பிறகு நான் எனக்கு அடுத்து என் மகன் என இந்த மரபு தந்தையின் மூலம் ஒரே வழியாக நேரடியாக வரும் மரபு என நினைத்து கொண்டு இருக்கிறோம்.
அது தவறு, அது நேரடியான மரபு அல்ல. உன் முன்னோர்கள் என சொன்னால் அது ஒரு நதியின் நீரோட்டமல்ல. அந்த நதி தாய் தந்தை என இரண்டு கிளைகளாக பிரிகிறது. இன்னும் கொஞ்சம் முன்னே பார்த்தால் அந்த இரண்டுக்கும் நான்கு கிளைகள்.
இப்படி ஒவ்வொரு கிளைக்கும் மொத்தம் 1024 கிளைகள் பிரிந்து செல்கிறது. நம் உயிரானது இந்த கிளைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடத்தில் உருவாகிறது.
ஆம் நம் மூலம் ஒருவழிப் பாதை அல்ல. இருவேறு வழிப்பாதை. நமது இடப்புற பாதையிலும் வலப்புற பாதையிலும் இருவேறு உலகங்கள் அகண்டு விரிந்து பரவுகிறது.
பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்....