04/03/2018

செவி முத்திரை அல்லது சூன்ய முத்திரை...


செய்முறை...

கட்டை(பெரு) விரலால் நடு(பாம்பு) விரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். 

நடு விரலின் நுனி பெரு விரலின் அடிப்பாகத்தை தொடவேண்டும். மற்ற விரல்களை நேராக வைத்துக் கொள்ளவும்.

வானம் (ஆகாயம்) செவியுடன் தொடர்புடையது அதனால் தான் வானத்தை குறைக்கிறோம்.

பலன்கள்...

காதுவலி குறையும்.
காது கேளாதவர்கள் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்பதில் முன்னேற்றம் இருக்கும்.
காது வலி போனவுடன் அல்லது காது கேட்க ஆரம்பித்தவுடன் இம்முத்திரையை செய்வதை நிறுத்தி விட வேண்டும்...

கடந்த ஐம்பதாண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியில் ஆக்கப்பட்ட ஐவகை தமிழக நிலங்கள்...


பாஜக மோடியின் சாதனைகள்...


இந்த இரண்டிற்கும் சம்பந்தம் இருக்கிறது...


மே17 மலையாளி திருட்டு காந்தியின் ஏமாற்று வேலைகள்...


இன்றுவரை விடுதலை புலிகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பாரேயானால், அவருக்கு வயது 63 (பிறந்த வருடம் 1954)...

மறுமலர்ச்சி திராவிடர் கழகம் வைகோவின் வயது 73 (பிறந்த வருடம் 1944)...

மே 17 திருமுருகன் காந்தி தொடக்க 40 வயதுகளில் இருக்கிறார்...

வைகோவை விட பல மடங்கு வலிமை வாய்ந்த, முப்படைகளை தலைவனாய் நின்று வழி நடத்திய வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்படி திருமுருகன் காந்திக்கு "தோழர்" ஆகிறார் என்று நாம் கவனிக்க வேண்டும்.

ஈழத்தில் இறுதி போர் நடந்த காலத்தில் சீமானை விடுதலை புலிகள் அழைக்கிறார்கள். தான் சென்று பிரபாகரனை பார்த்து வந்து இன்று வரை சீமான், பிரபாகரனை "தமிழ் தேசிய இனத்தலைவர்" என்று எங்கு போனாலும் சொல்லி வருகிறார்.

ஆனால் திருமுருகன் காந்தியை ஈழ இறுதி போரின் போது விடுதலை புலிகள் யாரும் அழைக்கவில்லை, இன்னும் சொல்ல போனால் திருமுருகன் காந்தி, பிரபாகரனோடு பேசியது கூட கிடையாது.

மேலும் பிரபாகரனோடு ஒப்பிடுகையில் திருமுருகன் காந்தி வயதில் மிகவும் இளையவர்.

ஆனால் திருமுருகன் காந்திக்கு பிரபாகரனை "தோழர்" என்று கூப்பிட தான் மனம் வருகிறது.

ஆனால் வைகோவை திருமுருகன் காந்தி "தலைவர்" என்று அழைக்கிறார்.

ஈழ விடுதலையை எதிர் பார்த்து காத்து இருக்கும் பெரும்பான்மையான
ஈழ தமிழர்களுக்கும், ஈழம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பல தமிழகத்து தமிழர்களுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைவராய் தெரிகிறார்.

ஆனால் ஈழ விடுதலையை பேசும் திருமுருகன் காந்திக்கு மட்டும் பிரபாகரன் தோழராய் தெரிகிறார்.

திருமுருகன் காந்தி பிரபாகரனை தலைவராய் ஏற்கும் மனநிலையில் என்றுமே இருந்ததும் இல்லை / இருக்க போவதும் இல்லை.

இங்கு தான் தமிழ் தேசியத்தின் முகமூடியில், திராவிடம் விளையாடுகிறது.

திராவிடர்கள் என்றுமே பிரபாகரனை, தலைவர் என்ற அளவுக்கு ஏற்றதே இல்லை. ஈழ விடுதலை உணர்வை, தமிழர்கள் அல்லாத திராவிடர்கள் தான் வழி நடத்த வேண்டும் என்று இன்று வரை முனைப்போடு உள்ளார்கள்.

அதற்கு இன்றைய இளைய தலைமுறை ஆள் தான் திருமுருகன் காந்தி என்ற தமிழ் தேசிய முகமூடியை அணிந்த திராவிடவாதி , அதற்கு தேவையான கருத்தியல் உள்ளீட்டை கொடுத்து கொண்டிருக்கும் பழைய தலைமுறை ஆள் தான் வைகோ.

அதனால் தான் வைகோவை திருமுருகன் காந்தி தலைவர் என்று அழைக்க மனம் வருகிறது, பிரபாகரனை தோழர் என்ற அளவிலே வைத்து பார்க்க முடிகிறது.

வைகோ போன்ற திராவிடர்களும் மேலும் திருமுருகன் காந்தி போன்ற தமிழ் தேசிய முகமூடி அணிந்த திராவிடர்களும் ஈழ விடுதலையை பற்றி பேசுவார்களே தவிர அதற்கான தீர்வை எங்கும் முன் நிறுத்த மாட்டார்கள்.

தமிழர்கள் அல்லாத திராவிடர்களுக்கு நாங்களும் தமிழ் உணர்வோடு இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ளவே இவர்களுக்கு அவ்வப்போது ஈழ அரசியலையும் ஊறுகாய் போல தொட்டு கொள்கிறார்களே தவிர வேறு ஒன்றுமில்லை. அதில் சில ஈழ தமிழர்களும் திருமுருகன் காந்தியை நம்பி ஏமாந்து கொண்டும் உள்ளார்கள்.

விழிப்பு தேவை..

பதிவு - நியந்தகுமார் சுப்பிரமணியம் (Jafna)...

குறிப்பு : சீமானை விடுதலை புலிகள் அழைத்து பேச வில்லை... அவராக சென்று ஒரு சில நிமடங்கள் சந்தித்தார் அவ்வளவு தான்...

என் வளங்கள் எனக்கில்லாத போதும், அதை அழிக்கன்ற போதும் நான் எதிர்ப்பது எனது முதல் உரிமையாக இருக்கிறது, அதை வல்லாதிக்க சக்திகள் அடக்குவது அவர்களின் கடமை..


அந்த சூழ்நிலையில் எனது மனநிலை எந்த சூழ்நிலையிலும், நான் பின்வாங்காமல் எனது வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதற்காக நான் எல்லா வழிகளிலும் அவர்களை எதிர்ப்பேன்...

ஆசியாவிலேயே மிகவும் அதிக அளவில் ஊழல் நிறைந்த நாடுகளில் பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா முதலிடம்...


சட்டத்தை மீறிய அரசுக்கு என்ன தண்டனை? அந்தத் தண்டனையைக் கொடுப்பது யார்?


ஓ.என்.ஜி.சி-யின் ஒரு கிணறுக்குக்கூட லைசென்ஸ் கிடையாது.. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்..

துரை.நாகராஜன் துரை.நாகராஜன் இரா.கலைச் செல்வன்(விகடன்.காம்)..

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் விஷயமும், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்களும், அதனைத் தொடர்ந்த நெடுவாசல், கதிராமங்கலம்  உள்ளிட்ட போராட்டங்களும் உலகறிந்த ஒன்று.

காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவை எடுக்கப்படுவதன் மூலம் டெல்டாவின்  மொத்த விவசாயமும் முடங்கிப் போவதோடு அல்லாமல், நிலத்தடி நீரின்றி, மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் எனப் பல சூழலியலாளர்களும், இயற்கை ஆர்வலர்களும் ஆதாரங்களோடு குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து  அறம் சார்ந்தும், சட்ட ரீதியாகவும் போராடி வருகின்றனர். மக்கள் போராடும்போதெல்லாம் மத்திய, மாநில அரசுகள் ஓ.என்.ஜி.சியின் பக்கம்தான் ஆதரவாக நின்றது. ஓ.என்.ஜி.சிக்கு எதிராகப் போராடியதற்காக மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.செயராமன் கைது செய்யப்பட்டு 42 நாள்கள் சிறை வைக்கப்பட்டார்.

இதுதவிர போராடும் மக்களுக்கு எதிராகக் காவல்துறையின் அடக்குமுறையும் உச்சக்கட்டத்தை எட்டியது.

நிலை இப்படியிருக்க,
காவிரி டெல்டா கண்காணிப்பு இயக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஓ.என்.ஜி.சி கிணறுகள் குறித்து ஆர்.டி.ஐயில் மனு செய்கிறார்.

அப்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தங்களிடம் உள்ள விபரங்களை அளிக்கிறது. அதில் உள்ள தகவல்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் 219 ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகள் மட்டுமே தமிழ்நாட்டில் இருப்பதாகவும், அதில் 71 கிணறுகள் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதே சமயம், ஓஎன்ஜிசி தரப்பில்
தங்களுக்கு இந்தியாவில் திரிபுராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான்
700 எண்ணெய்க் கிணறுகள் இருப்பதாகத் தகவல் சொன்னது.

அதில் 183 கிணறுகள் இயங்கி வருவதாகவும் அது குறிப்பிட்டது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சொன்ன தகவலுக்கும், ஓ.என்.ஜி.சி சொன்ன தகவலுக்குமே அதிகமான வித்தியாசங்களும் முரண்பாடுகளும் நிறைந்திருக்கின்றன.

இதற்கெல்லாம் மேலாக முரணாகவும், அதிர்ச்சி தரக்கூடியதாகவும் ஒரு செய்தியை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அத்தகவல்படி,
காவிரி டெல்டாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எந்த எண்ணெய்க் கிணறுகளுக்குமே உரிமம் கிடையாது எனத் தெரிவித்துள்ளது ஓஎன்ஜிசி..

அதாவது, மக்களின் உயிர்களையே பலி வாங்கக்கூடிய வாய்ப்புகள் நிறைந்த ஒரு திட்டத்திற்கு அனுமதியே பெறப்படவில்லை. அது எல்லா வகையிலும் சட்ட விரோதமான செயல். அதே சமயம், தங்கள் மண்ணிற்கும், வாழ்விற்கும் பெரும் ஆபத்து தரக்கூடிய இந்தத் திட்டத்தை எதிர்த்து, சட்டத்திற்கு உட்பட்டு அறவழியில் போராடிய மக்கள்மீது மிக மோசமான வன்முறையை ஏவியது காவல்துறை.

கதிராமங்கலத்தில் உரிமம் பெறாமல் இருக்கும் எண்ணெய்க் கிணற்றில் இருந்து செல்லும் எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டு ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் வரத் தாமதமானதால் தீப்பற்றி எரிந்தது.

அப்போது அங்கே சட்டப்பூர்வமாக போராடிக்கொண்டிருந்த மக்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியது சட்டவிரோதமானதுதானே? தடியடியில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டதற்கும், போராடிய மக்கள்மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ததற்கும் அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகிறது?

ஓ என் ஜி சி எண்ணெய் கசிவு...

ஒரு நிலத்தை குழாய் பதிப்பதற்காக குத்தகைக்கு வாங்கும்போது, அவர்களின் நிலத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உத்திரவாதம் அளிக்கும் ஓ.என்.ஜி.சி. குழாய்களில் ஒரு பிரச்னை ஏற்படுவதற்கு முன்னரே 'வரும் முன் காப்போம்' கொள்கையில் மிகத் துரிதமாக செயல்படுவோம் என்பதும் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதி. ஆனால், இதுவரை டெல்டா பகுதிகளில் அப்படி அவர்கள் வரும் முன் காத்ததாக எந்த வரலாறுமே கிடையாது.

மாறாக, பிரச்னைகள் வந்தும்கூட காக்கப்படாத கதைகள்தான் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.

நெடுவாசலில் இருந்து சில கி.மீ. தொலைவில் இருக்கும் நல்லாண்டார் கொல்லையில் இன்றுவரை எண்ணெய் கொப்பளித்துக் கொண்டே தானிருக்கிறது. 

திருப்புஞ்சை, ஆனைமங்கலம் கிராமங்களில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட வயலில் இன்றும் அதன் பாதிப்புகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு காலத்தில் தன் மடியில் விதைகளைச் சுமந்து தன் செழிப்பை வெளிப்படுத்திய மண், இன்று இந்த எண்ணெய்க் கசிவினால் மலடாகி மட்கிக் கிடக்கிறது.

கடந்த வாரம்கூட, திருவாரூர் அருகே எருக்காட்டூரில்  ‌வயலில் கொட்டிய எண்ணெயைத் தீ வைத்து எரித்ததே தவிர, முறையாகச் சுத்தம் செய்ய முன்வரவில்லை ஓ.என்.ஜி.சி.

ஒருவேளை தீ வைத்து எரிப்பதுதான் ஓ.என்.ஜி.சியின் உலகத்தர தொழில்நுட்பம் போல...

கதிராமங்கலம்...

இதுவரை தோண்டப்பட்ட எண்ணெய்க் கிணறுகளுக்கே உரிமம் பெறவில்லை. அந்தக் கிணறுகளால் பாதிக்கப்பட்ட நிலங்களை எந்நாளும் மீட்க முடியாத நிலை. தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்தத் திட்டங்களை எதிர்த்தவர்களை 'தேச விரோதிகள்', 'வளர்ச்சிக்கு எதிரானவர்கள்' என்று பச்சை குத்தியது மத்திய அரசு.

சட்டவிரோதமாக நடக்கும் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்த வளர்மதிக்கு குண்டர் சட்டத்தில் சிறை தண்டனை. எதிர்த்துப் பேசினால் தடியடி. உக்கிரமாக இன்னும் எதிர்த்தால் உறுதியாய் கடுமையான சிறை தண்டனை.

இதோ... அரசின் எல்லாப் பொய் முகங்களும் வெட்டவெளிக்கு வந்துவிட்டன.

மழை பெய்யவில்லை... இந்த வெயிலிலேயே அதன் சாயம் வெளுத்து விட்டது...

தமிழக விபச்சார ஊடகங்களின் பின்புலங்கள் வெட்ட வெளிச்சமாக்கப்படும்....


எவனெல்லாம் ONGC ஆதரிக்கிறானோ, எண்ணெய் எடுக்குமிடத்தில் சென்று குடும்பதோட வாழ்ந்து காட்டுங்க, இல்லனா மூடிகிட்டு இருங்கடா...


நான் vs ஆன்மா...


1. ஆணவம் தனக்கு மட்டும் சேவை செய்ய முயலும்...
ஆன்மா மற்றவர்களுக்கும் சேவை செய்ய முயலும்...

2. ஆணவம் எப்பொழுதும் வெளிப்புறமாக அங்கீகரிக்க முயலும்...
ஆன்மா எப்பொழுதும் உள் நம்பகத் தன்மையையாய் இருக்க முயலும்...

3. ஆணவம் வாழ்க்கையை போட்டி மனப்பான்மையோடு பார்க்கும்...
ஆன்மா பரிசாய் கொடுத்த வாழ்க்கையாய் பார்க்கும்...

4. ஆணவம் தன்னை மட்டும் பாதுக்காக முயலும்...
ஆன்மா மற்றவரையும் பாதுக்காக முயலும்...

5. ஆணவம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கும்...
ஆன்மா உள்தொற்றத்தை பார்க்கும்...

6. ஆணவம் பற்றாக்குறையை உணரும்..
ஆன்மா மிகுதியை உணரும்..

7. ஆணவம் அழியும்..
ஆன்மா அழியாது...

8. ஆணவம் காமத்தை ஈர்க்கும்..
ஆன்மா அன்பை ஈர்க்கும்..

9. ஆணவம் ஞானத்தை தேடும்...
ஆன்மா ஞானமாகவே இருக்கும்...

10. ஆணவம் பரிசை மட்டும் அனுபவிக்கும்...
ஆன்மா வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்...

11. ஆணவம் பல வலிகளுக்கு காரணமகா இருக்கும்..
ஆன்மா மனக்காயங்களை ஆற சிகிச்சை முறைக்கு காரணமாக இருக்கும்..

12. ஆணவம் இறைவனை நிராகரிக்கும்..
ஆன்மா இறைவனை அரவணைக்கும்...

13. ஆணவம் பூர்த்தி செய்ய முயலும்...
ஆன்மா அழியாமல் முழுமையாய் இருக்கும்..

14. ஆணவம் என்பது நான்...
ஆன்மா என்பது நாம்...

அரசு ஊழியர்கள் செய்யும் தவறுகளை நீங்கள் ஒரு ஓரமாக போடும் செய்தியை நாங்கள் தலைப்பு செய்தி ஆக்குவோம்...


தமிழக விபச்சார செய்தித்தாள்களே...


இதலாம் முக்கிய செய்தியா முதல் பக்கத்துல போட மாட்டியே... எதாவது ஒரு நடிகை செத்தா 4 பக்கத்துக்கு கண்ணீர் போட்டு.. சமூக அக்கறை என்று சொல்லி ஏமாத்த வேண்டியது...

தமிழ் மொழியிடம் களவாடி ஆங்கிலம்...


படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி...

Mango - மாங்காய்
Cash - காசு
One - "ஒன்"று
Eight - "எட்"டு
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit
representation in Tamil)
Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்)
Vomit - ஒமட்டு (குமட்டுதல்)

பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்...

Script - குறிப்பு
Speech-பேச்சு
Speed - பீடு/வேகம் (பீடு நடை -
வேக நடை)
Sponge - பஞ்சு
Snake - நாகம்
A"ttack" - தாக்கு
M"ake" - "ஆக்க"ம்
Round - உ"ருண்டை"
Lemon - "இளம"ஞ்சள்காய்
(எலுமிச்சை)
Roll - உ"ருள்"
Orate - "உரை"யாற்று
"Know"ledge - "ஞான"ம்
Ginger - இ"ஞ்சி"
Molecule - மூலக்கூறு
Kill - கொல்
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண்
கயிறு என்று சொல்லுவதை நினைவில்
கொள்க)
Culprit - கள்ளன்(குற்றவாளி)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Surround - சுற்றம்
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்/புட்டி
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Betrothal - பெற்றோர் ஒத்தல்
(திருமணத்திற்கு பெற்றோர்
சம்மதித்தல்)
Grain - குருணை
Button - பொத்தான்

இதை விட பல சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தின் 60%சொற்களின் மூலம் நம் தமிழ்மொழியே...

பிரமிப்பு ஏற்பட்டால் உங்கள் நட்பு வட்டத்திற்கும் அனுப்புங்கள்...

நெடுவாசலில் போராடுபவர்கள் எல்லாம் தெரிந்த விஞ்ஞானிகளா - தமிழின விரோதி பாஜக பொன். ராதா...


திரிபுரா மாநில தேர்தலில் மாணிக் சர்க்கார் தோல்வி...


என்னாது தஞ்சை பெரிய கோவில்ல இரண்டு சிலைய மட்டும் காணோமா.. இதுக்குத் தான் எங்க மரபுநடைக்கு வரணும்குறது...


டியர் ஆபிசர்ஸ் தஞ்சை பெரிய கோவில்லேர்ந்து மட்டும் காணாம போன சிலைகளோட பட்டியல் கீழே இருக்கு பார்த்துக்கோங்க...

1. நம்பியாரூரார்,
2. நங்கை பரவையார்,
3. திருநாவுக்கரசர்,
4. திருஞான சம்பந்தர்,
5. பெரிய பெருமாள்(இது தான் நீங்க தேடுற இராஜராஜர் சிலை),
6. பெரிய பெருமாள் நம்பிராட்டியார்
(இராஜராஜர் மனைவி ஒலோகமாதேவி சிலை),
7. சந்திரசேகர தேவர்,
8. ஷேத்ரபாலர்,
9. ஆடுகின்ற பைரவ மூர்த்தி,
10. சிறுத்தொண்ட நம்பி,
11. திருவெண்காட்டு நங்கை,
12. சீராளதேவர்,
13. ஆடவல்லான்,
14. ஆடவல்லான் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி,
15. மிலாடுடையார்,
16. ரிஷபவாகனதேவர்,
17. ரிஷபவாகனதேவர் நம்பிராட்டியார்,
18. ரிஷபம்,
19. கணபதி,
20. இலிங்கபுராண தேவர்
21. சிவபெருமானின் கல்யாண சுந்தரர் திருமேனி,
22. தஞ்சை அழகர்,
23. தஞ்சை அழகர் நம்பிராட்டியார்,
24. கணபதி(நின்ற நிலை),
25. பதஞ்சலித் தேவர்
26. ஆடவல்லார் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி,
27. தஷிணமேருவிடங்கர் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி,
28. தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமா பரமேஸ்வரி,
29. பொன்மாளிகை துஞ்சியதேவர்(சுந்தர சோழர் சிலை),
30. குந்தவை தம் அம்மையாக எழுந்தருள்வித்த திருமேனி( வானவன் மாதேவி சிலை)
31. பிச்சத்தேவர் திருமேனி,
32. சண்டேச பிரதாச தேவர்,
33. பஞ்சதேக மூர்த்தி,
34. தஷிணாமூர்த்தி,
35. சண்டேசர்
36. பிருங்கீசர்,
37. சூர்ய தேவர்,
38. கிராதார்ச்சுன தேவர் சிலை
39. காளபிடாரி திருமேனி,
40. உமாஸகிதர்,
41. உமா பரமேஸ்வரி,
42. கணபதி,
43. சுப்பிரமண்யர்,
44. வில்லானைக்கு குருக்களாக எழுந்தருள்வித்த திருமேனி,
45. துர்க்கா பரமேஸ்வரி.

இவை அனைத்தும் இராஜராஜ சோழரும் அவர்தம் மனைவிகளும், பெருந்தரம், சிறுந்தரம், ஸ்ரீகாரியம் போன்ற பல்வேறு அதிகாரிகளும் எடுப்பித்த திருமேனிகள்.
இது எல்லாத்துக்கும் கல்வெட்டு ஆதாரங்கள் சிலைகளோட அளவுகளோடு துல்லியமா இருக்கு....

இதுல ஒண்ணு கூட இப்ப அங்க இல்லை.
இது மட்டுமில்லை...

அந்த சிலைகளுக்குரிய பொன்னாபரணங்கள், விலை மதிப்பில்லா வைர வைடூரியம் போன்ற பல்வகை ரத்தினங்கள் பதிக்கப்பட்ட நகைகள், கிடைத்தற்கரிய ஆயிரக்கணக்கான நல்முத்துக்கள்னு லிஸ்ட் எடுத்தீங்கனா மயக்கம் போட்டு விழுறது உறுதி...

இவ்வளவு ஏன் அவ்வளவு பெரிய விமானம் முழுதுமே பொன்னால் வேய்ந்திருக்கிறார் எங்கள் இராஜராஜர்..

கடைசியாக ஒரு வேண்டுகோள் எம் மன்னர் கைப்பட்ட கண்பட்ட சிலைகளுக்கும் நகைகளுக்கும் விலை நிர்ணயம் யாராலும் செய்ய முடியாது...

மல்லையாவை எதிர்ப்பது போல பாஜக மோடி திருட்டு வேசம் போடுகிறார்...


இவங்க கட்சிக்கு மாபெரும் நிதி எப்படி வருது, இப்படி தான் வருது...

அதிமுக என். முருகுமாறன் MLA. ஊழல்...


10HP மோட்டார் - ரூ.33000,
வாட்டர் டேங்க்(3000 லிட்டர்) - ரூ.15000,
இதர செலவுகள் - ரூ.20000.
மொத்த செலவு - ரூ.68000,

எப்படி அதிக கணக்கிட்டு பார்த்தாலும் எங்கயோ இடிக்குதே.?

சரி விடு, விக்குற விலைவாசிக்கும், கொடுத்திருக்கிற பெயிண்ட் கலர் எல்லாம் சேர்த்து பார்த்த ரூ.1.75 லட்சம் செலவு கொஞ்சம் குறைவு தான்...

தமிழா விழித்துக்கொள்...


தமிழக பட்ஜெட் மார்ச் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என தகவல்...


2018 - 19ஆம் ஆண்டுக்கான  தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்கிறார்...

கண் பார்வை குறைபாடு நீங்க...


ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?


நாம் கற்பனை செய்யும் அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும்.

பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்...

நம்மாளுங்க தான் வேலை செய்யப் போகும் அனைத்து இடங்களிலும் பிரச்சனையை சந்திக்கிறான் அடிமைப்படுத்தப்படுகிறான்...


தமிழகம் மட்டும் விதிவலக்கல்ல சொந்த மண்ணிலும் பணியா கைப்பற்றுகிறான் வணிகத்தை...

வளரி...


நமது பழந்தமிழர்கள் பயன்படுத்திய தனித்தன்மை வாய்ந்த ஆயுதம் பற்றிய சிறுபார்வை..

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும்.

இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்..

அமைப்பு...

இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால்
உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது..

பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்து விடும்..

ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல..

வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன..

சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும்..

சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்..

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு..

கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும்..

சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள்..

பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால்
சீவித்தள்ளி விடும்..

எறியப்படும் முறைகள்...

வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு..

பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும்..

இப்படி எறியப்படும் போது.. இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும்... அல்லது சுழலாமலே செல்லக்கூடும்.. அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது..

உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும்..

பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்..

பயன்கள்...

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும்..

பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது..

தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை , மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது..

வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன..

சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள் , மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க
தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது..

சங்க இலக்கியத்தில் வளரி...

வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில்.. ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர்..

சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில்...

மணம் நாறு மார்பின்
மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்.. என்ற
ஒரு குறிப்பு உள்ளது.

அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன்..

என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது..

மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது...

திராவிடத் திருடர்களே பதில் சொல்லுங்கள்..


தமிழும் திராவிடமும் ஒன்று தான் என்று சொல்கிறீர்கள்..

அப்படியானால் தெலுங்கு திராவிடமில்லையா? தெலுங்கரான நீங்கள் திராவிடரில்லையா?

மலையாளியான எம்.ஜி.ஆரும் கன்னடரான செயலலிதாவும் திராவிடரில்லையா?

இல்லை, கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம், தமிழ் ஆகியன தான் திராவிடம் என்றால், ஏன் திராவிட ஆட்சியில் ஒரு தமிழர் கூட தலைமைப் பதவிக்கு வர இயலவில்லை?

ஆக, திராவிடம் என்பது தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் அரசியல் கருத்தியலா? இல்லையா?

திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று அச்சிட்டது, சிலை வடித்தது, விருது கொடுத்தது போன்ற மேலோட்டமான செயற்பாடுகளைப் பட்டியலிடுகிற நீங்கள்..

திராவிடம் ஆட்சிக்கு வந்தபின் நடந்த கேடுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

கீழ வெண்மணிப் படுகொலை,
குறிஞ்சாக்குளம் படுகொலை,
உஞ்சனை, மேலவளவு, கொடியன்குளம், தாமிரபரணி, பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும் சாதி மற்றும் இன ஒடுக்குமுறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே!

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக் கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது!

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆட்சிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப் பலககையில் இருக்கிறதா?
ஆட்சி மொழியாக இருக்கிறதா?
வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?
பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை?

ஆட்சிக்கு வந்த அத்தனைத் திராவிட இயக்கத் தலைமையின் மீதும் அடுக்கடுக்காக வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யா?

வீராணம் முதல் அலைக்கற்றை வரை ஊழலில் தி.மு.க. செய்தது சாதனையா?

அல்லது தி.மு.க.வின் எதிரணியில் இருக்கிற அ.தி.மு.க.வின் தலைமை இன்றைக்கும் பெங்களூர் நீதி மன்ற வளாகங்களிலே படியேறி இறங்குகிறதே இவையெல்லாம் சாதனைகளா?

இல்லை வேதனைகளா?

தமிழகத்தில் திராவிடம் மலர்ந்ததாக மார் தட்டிக் கொள்ளும் இதே காலகட்டத்தில் தானே ஈழத்தில் தமிழர்கள் தன்னுரிமைக்காகப் போராடி வந்தார்கள். பல கோடித் தமிழர்களின் தலைமையை ஏற்ற திராவிடம் சில லட்சம் தமிழர்கள் ஈழத்தில் அல்லலுற்ற போது என்ன செய்தீர்கள்?

குட்டிமணி செகனைக் காட்டிக் கொடுத்ததிலிருந்து முள்ளி வாய்க்கால் படுகொலை வரை நீங்கள் போட்ட நாடகங்கள் எத்தனை எத்தனை?

காவிரியைக் கன்னடர்களிடம் காவு கொடுத்தது எப்போது?

பாலாறு பாழனாது திராவிடத்தின் ஆட்சியில் இல்லையா?

முல்லைப் பெரியாறு சிக்கல் முற்றியதிலும் உங்கள் கையாலாகாத் தனமும் காட்டிக் கொடுப்பும் இல்லையா?

கிழக்குக் கடற்கரையில் 900 மீனவத் தமிழர்கள் அன்னியநாட்டுப் படையால் காக்கைக் குருவி போல சுட்டுத் தள்ளப்பட்டபோது கைசூப்பிக் கொண்டு கடுதாசி போட்டீர்களே தவிர உருப்படியாக எதைச் செய்து அப்படுகொலைகளைத் தடுத்தீர்கள்?

கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட போது என்ன செய்தீர்கள்?

இறுதியில் திராவிடத்தின் சாதனைதான் என்ன?

ஊழல் சாதனைகள்,

கொள்ளையடித்து குடுமபத்தை வளர்த்த சாதனைகள்,

தமிழரல்லாதவர்கள் கொற்றத்தை இந்தத் தமிழ் மண்ணில் வேறுரூன்ற வைத்த சாதனைகள்!

தமிழ்ச் சாதிகளுக்குள் மோதல் போக்கை உருவாக்கி குளிர்காய்ந்த சாதனை!

சாராயத்தை ஆறாக ஓடவிட்ட சாதனை!

திரை மாயையைத் திணித்த சாதனை!

இவைகள் போக, வேறு என்ன சாதனை செய்தீர்கள்?

இப்படிப்பட்ட திராவிடம் தமிழ் மண்ணில் இருக்க வேண்டுமா? இல்லை இல்லாது போக வேண்டுமா?

என்னதான் நீங்கள் எட்டி எட்டி குட்டிக்கர்ணம் போட்டாலும் தமிழர்கள் இன்னும் ஏமாற மாட்டார்கள் என்று மட்டும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...

தமிழக விபச்சார ஊடகத்தால் மறைக்கப்படும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்...


பழமை வாய்ந்த சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களாக சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

மாணவர் போராட்டம் வெல்லட்டும்...

பாரின் சரக்கு அடிக்கும் பணக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதை பாரில் சரக்கு அடிக்கும் பாமரனுக்கு தர மறுப்பதேன்...


ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?


நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்த பின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.

அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்த பிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகி விடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்து விட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்...

தமிழா விழித்துக்கொள்..


சமூக சேவையில் சேலம் காவலர்கள்...


காலை  9.30 க்கு கிளாஸ் ரூமில் மாணவர்கள் இருக்க வேண்டும்.10 மணிக்கு தேர்வு தொடங்கி விடும்...

ஆனால் 9.45 மணிக்கு ஒரு மாணவி பேருந்து கிடைக்காமால் கண்ணீர் விட்டு கொண்டிருந்தை மாணவியிடம் கேட்டு அறிந்து...

காவலர் பால்ராஜ் அவர்கள் உதவிய சம்பவமே கீழ்கண்டவை....

நாம் தவறு செய்யும் காவலர்களை எப்படி விமர்சனம் செய்கிறோமோ... அதே போல் இது போன்ற நல்ல மனமுள்ள காவலர்களை பாராட்டுவதும் நம் கடமையாகும்....

அவருக்கு வாழ்த்துக்கள்... நன்றி....

பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்து ஓட்டு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்து வென்று வருகிறது...


சென்னையில் விற்கப்படும் ரசாயண வாழைப்பழங்கள்.. புற்று நோயை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை...


சென்னையில் சாலையோரம் நின்ற காரை காயலான் கடையில் விற்ற காவல்துறை...



இந்த மீத்தேன் திட்டத்திற்கு மாற்று வழியாக ஒரு முறை இருகின்றது.

அது என்னவென்றால்...

வீட்டிற்கு ஒரு இயற்கை எரிவாயு உற்பத்தி கலன் (எரிசானம்) வைத்துவிட்டாலே போதும்.

அதிலிருந்து வீட்டுக்கு தேவையான எரிவாயு, மின்சாரம் மற்றும் மீத்தேன் போன்றவை பூமிக்கு அடியில் கிடைப்பதைவிட பல மடங்கு பூமிக்கு மேலேயே அதிகம் பெறலாம்.

இந்த எளிய வழியை விட்டுவிட்டு பூமியை துளையிடுவதால் ஒரு சிலருக்கே லாபம்... மக்களுக்கு பெரும் நஷ்டமே...

30 அடி விட்டத்தில் ஒரு துளையிட்டு அது 500 அடியிலிருந்து 1500 அடி வரை பூமிக்கடியில் சென்று சுமார் 35 வருடம் எடுக்கப்படும் மீத்தேன் எளிமையாக கிடைக்க வழி இருக்கும் பொழுது எதற்க்காக இந்த துளையிடுதல் செய்ய வேண்டும்.

இதனால் நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழ் செல்லும்... நீர் இன்றி நிலம் வறண்டு போகும்... நிலங்கள் வறண்டு போனால் பயிர்கள் கருகும்...

இப்படியே போனால் மேலே இருந்தும் மழை இல்லை... பூமியில் இருந்தும் பயிர்(உணவு) இல்லை... என்றாகி முழுவதும் சுடுகாடாகி நிலக்கரி மட்டுமே மிஞ்சும்.

பின்பு அதையும் எடுக்க ஒருவன் வருவான்.

வீட்டுக்கு வீடு 'மழை நீர் சேகரிக்கும் தொட்டி' அமைத்தது போல்
வீட்டுக்கு வீடு 'இயற்கை எரிவாயு உற்பத்தி கலன் (எரிசானம்)' அமைக்கலாமே...

- இப்படிக்கு திரு.நம்மாழ்வார் அவர்கள்...

தமிழின் முதல் இலுமினாட்டிகள் பற்றிய படம்...


தனி ஒருவன் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடித்து வெளிவந்த படம்.

இது நம் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான களமாக இருந்ததால் வெற்றி பெற்றது.

ஆனால் இப்படம் சூசகமாக இலுமினாட்டிகளைப் பற்றி சொன்னது, இதனைக் குறிக்கும் இப்படத்தின் சில ஒற்றுமைகள்..

இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரமான அரவிந்த்சாமி மிக அதீத அறிவுடனும், பண பலத்துடனும் அரசையே கட்டுப்படுத்துவார்.

தான் நேரடியாக எதையும் செய்யாமல் மாஃபியாக்கள் மூலம் அனைத்து குற்றங்களையும் செய்வார்.

மருத்துவத்துறையிலேயே இவர்கள் அதீத லாபம் ஈட்டுவதாக காட்டியிருப்பர்.

குழந்தைகளை சோதனைக்கு உட்படுத்துவர்.

ஒரு பிரச்சினையை திசைதிருப்ப வேறொரு பிரச்சினையை உருவாக்குவது போல காட்டியிருப்பர்.

ஒவ்வொரு செய்திக்கும் ஒரு தொடர்பு உள்ளதெனவும், ஒவ்வொரு செய்திகளுக்குப் பின்னரும் வேறொரு சதி ஒளிந்துள்ளது என்பன போன்றும் காட்டியிருப்பர்.

ஜெயம் ரவியின் கதாபாத்திரம் இலுமினாட்டிகளைப் பற்றி ஆய்வு செய்யும் conspiracy theorist கள் போல வடிவமைக்கப்பட்டிருக்கும்.

படத்தின் முடிவு கெட்டவன் சாவது போல் தானே உள்ளது என நீங்கள் கருதலாம். ஆனால் இங்கு உள்ள Subliminal message என்னவெனில் படம் பார்த்து முடித்தவுடன் உங்களுக்கு Hero வை விட Villan னைத்தான் அதிகம் பிடித்திருக்கும்.

இதற்கெல்லாம் உச்சம்தான் தீமைதான் வெல்லும் பாடல்...