ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்கக் கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நம் தமிழ்ச்சித்தர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?
இந்த வர்மக்கலை ஒரு கடல். இதைப் பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரும், ஞானபண்டிதரான முருப்பெருமானின் முதற் சீடருமான, கும்பமுனி, குருமுனி என அழைக்கப்படுவரும், 1008 அண்டங்களையும் அருளாட்சி செய்பவரும், அகத்தியம் என்ற தமிழ்நூலைப் படைத்தவருமான சித்தபெருமான் அகத்தியர்.
இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ). தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே. என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்குச் சாட்சி.
சித்தபெருமான் அகத்தியர் கற்பித்த சில வர்மக்கலைகளில் அகஸ்தியர் வர்ம திறவுகோல், அகஸ்தியர் வர்ம கண்டி, அகஸ்தியர் ஊசி முறை வர்மம், அகஸ்தியர் வசி வர்மம், வர்ம ஒடிவு முறிவு, அகஸ்தியர் வர்மக் கண்ணாடி, வர்ம வரிசை, அகஸ்தியர் மெய் தீண்டாக்கலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஜடாவர்மன் பாண்டியன் என்ற மன்னன் தான் இதில் வல்லவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத் தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்குப் பின்னர் வந்த சோழர்கள் இதனைக் கற்றனர்.
பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்தமதத்தைப் பரப்பச் சீனா சென்ற போது இந்தக் கலையும் அங்கு பரவியது.
Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் The fighting techniques to train the body from India என்ற பொருளைத் தருகின்றது.
ஹு ஷிஹ் என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது இந்தியா ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார்.
1793ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது தாங்கள் இந்தக் கலை மூலமாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தமிழக இளைஞர்கள் வர்மக்கலை பயில்வதைத் தடை செய்தனர்.
அன்று ஆரம்பமான அழிவு, இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது. இந்தக் கலையை அனைவருக்கும் கற்றுத்தர மாட்டார்கள்.
இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்.
வர்மக்கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறையைக் கையாள வேண்டும் என அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.
இதை எந்த வயதினரும் கற்கலாம். ஆனால் யார் மட்டுமே கற்க முடியும்? கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது.
வர்மக் கலைகளின் முக்கியமான வகைகள் தொடு வர்மம், படு வர்மம், தட்டு வர்மம், நோக்கு வர்மம் என வகைப் படுத்தப்பட்டுள்ளது.
தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார். இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்தப் பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும்.
படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பாதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும்.
தட்டு வர்மம் யாருக்கும் கற்றுத் தரப்படமாட்டாது. இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும்.
நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது. யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும்.
உதாரணத்திற்க்குச் சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம். அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம்.
ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரைத் தாக்கும் வல்லமை கொண்டது இந்தக் கலை. ஆனால், இது யாருக்கும் இலகுவாகக் கற்றுத்தர படமாட்டாது.
ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் மட்டுமே இதைக் கற்கலாம்.
தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.
இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை...