11/04/2017
இலுமினாட்டி களின் 13 துறைகள்...
இலுமினாட்டிகள் உலகை 13 துறைகளாக பிரித்து ஆட்சி புரிகின்றனர். அவை...
1. நுகர்வு பொருட்கள் (Consumer products)
2. ஆற்றல் துறை (Power sector)
3. மருத்துவ துறை (Medical)
4. போக்குவரத்து துறை (Transport)
5. ஆயுதம் (Weapons)
6. ஊடகம் (Media)
7. நிதி (Finance)
8. அரசியல் (Politics)
9. உணவு மற்றும் குடிநீர் (Food & beverage)
10. சமயம் (Religion)
11. கல்வி (Education)
12. உள்கட்டமைப்பு (Infrastructure)
13. தொடர்பாடல் (Communication)
இவற்றை பற்றி ஒவ்வொன்றாக அவர்கள் கட்டுப்படுத்தும் நிறுவனங்களோடு சேர்த்து விரிவாக பின்பு பார்ப்போம்...
அனைவரின் இறப்பிலும் பாடப்படும் பாடல்...
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க..
ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை..
பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே..
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க..
பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை..
கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன..
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்.
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்..
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்..
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க...
சித்தர் ஆவது எப்படி - 8...
சித்தத்தின் வெளிச்சத்தால் வரும் அலைச்சல்..
வெளிச்சம் என்பது சிதறிய ஒளி.. ஒளி என்பது ஒரே நேர் கோட்டில் பயணப் படுவது..
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே என்று ஒரு சிவனடியார் சொன்னால் அவர் தன் வெளிச்சமான சித்தத்தை பலவகைகளில் சிதற விடாமல், ஒரே நெறியாக கொள்கையாக, ஒரே நோக்கமாக, பார்வையாக, ஒளியாக சிவ நெறிபால் மாற்றி கொண்டார் என்று அர்த்தம்... இதை தான் தெளிந்த சித்தம் எனப்படும்...
அதாவது பல தரப்பட்ட எண்ணங்கள் செயல்பாட்டால் எது செய்வது என்று நிலை குழைந்து போகாமல், எதை செய்தால் எல்லாம் செய்வதாக ஆகுமோ, அதற்கான ஒரு எண்ணத்தோடு இருந்து தன் முழு ஆற்றலையும் சிதற அடிக்காமல், ஒரே குறிகோள் உடன் இருந்து முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெற்றி பெறுபவர் என குறிக்கும்..
இப்படி பட்டவர்களை ஒளி நெறியாளர்கள் என அழைக்கப் படுவார்கள்... சித்தம் தெளிந்தாரே ஒளி நெறியாளர் ஆக முடியும்.... சித்தர்கள் தோற்று வித்த ஒளி நெறி பீடம் ஒளி நெறியாளர்களுக்காகவே...
சித்தம் தெளியாமையாலே சிதறிய ஒளி, சிதறிய வண்ணமான வெளிச்சமாகவே இருந்து, முதலில் குறிகோள் அற்று இருப்பதும், பின் குறிகோள்களை அடிக்கடி மாற்றி மாற்றி அலைவதும், பின் ஏதாவது குறிக்கோளை பிடித்து விட்டால் அதில் முழு கவனம் செலுத்த முடியாமல், பலதரப்பட்ட எண்ண ஆதிக்கங்களால் தடைகள் ஏற்பட்டு, அந்த குறிகோளை தவற விடுவதும், இது போன்ற நெறி கெட்ட செயல்கள் நடந்து கொண்டே இருக்கும்..
சித்தம் தெளியவில்லை என்றால் வாழ் நாள் முழுமைக்கும் மனிதன் துன்பத்தை தவிர வேறு ஒன்றை அனுபவிக்க முடியாது... எதையும் அடையாமல் அலைச்சல் ஒன்றே மிஞ்சும்....
சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கவல்லது புத்தியும் அறிவுமே.. மன சாட்சியாகிய புத்தியில் நிலை கொள்ள கொள்ள புத்தி பலப் பட்டு விட்டால், பின் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கும் வலிமை புத்திக்கு வந்து விடும்...
புத்தி பலப் படுவது மனிதனுடைய இருப்பு தன்மைதான் என்றும் அந்த இருப்பு தன்மை வாசியோகத்தில் சூரிய கலையில் முடியும் தருவாயில் கிடைப்பதை நாம் ஏற்கனவே கண்டோம்..
இருப்பு தன்மையில் இருக்க இருக்க ஒரு உள் உணர்வு தோன்றுவதை பயிற்சியில் கண்டோம்.. அந்த உணர்வு பேரண்ட பேராற்றலின் வரவாக கனலை உணர்வதே..
அப்படி உள் உணர்வை உணர உணர புத்தியில் கனல் பெருக்கம் அதிகமாகிறது.. இதை தான் குரு பீடம் உருவாகி, வலுவான குரு தோன்றுகிறார் என்கிறோம்.. உள் குரு புத்தியில் வலுவாக உட்கார்ந்து விட்டால், நம் பிரச்சனை முக்கால்வாசிக்கு மேல் தீர்ந்தது போலதான்..
நம் உள் குரு பீடம் அமைய, ஒரு உருப்படியான உபாயம், வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையின் முடிவில் உணரும் கனல் தன்மை தான் என்பதை மறக்காமல், அதை சூரிய கலை முழுமைக்கும் பயின்று, அனுபவப் படும் போது, கனல் பெருக்கம் ஏற்படும்.. நாத ஒளியோடு நாம் இருக்கின்ற போதும், கனல் பெருக்கம் ஏற்படுகிறது..
அக குருவாகிய உள் குரு தோன்றி பலப்படும் போது சித்தம் அடக்கப் படுகிறது... அடக்கப் பட்ட சித்தம் என்றாவது ஒரு நாளோ சற்று தாமதமாகவோ மீண்டும் எழுந்து ஆட தொடங்கலாம்...
சித்தத்தை தற்காலிகமாக அடக்கி அடக்கி வைத்து கொண்டாலும் ஞானம் பெற்ற உள் குரு ஒன்றே, சித்தத்தை நிரந்தரமாக சமாதானப் பெற்ற நிலைக்கு சித்தத்தை கொண்டு வர முடியும்..
அக குரு ஞான குருவாக உயர வேண்டிய அவசியம் ஆகிறது.. அதனை பின் வரும் பகுதிகளில் காணலாம்..
அக குரு பலப் பட்டு விட்டாலே போதும், வாழும் உலகில் நம்முடைய எந்த பிரச்சனை இருந்தாலும், அதனை திறம் பட சமாளிக்கும் வல்லமை வந்து விடும்.. நாம் நன்றாக வாழும் வழி நம் கையில் மட்டுமே உள்ளது...
நம்மிடம் தற்போது இருக்கின்ற புத்தியை திசை திருப்பி அதனையே, அதாவது அந்த புத்தியையே வலுப் படுத்தும் நெறிக்கு செல்வோமாக...
இதை தவிர வேறு ஒரு வழி இல்லை, இல்லவே இல்லை.. உணர்ந்து செயல் படுவோமாக...
போராடிய பெண்களை ஆவேசமாக கண்ணத்தில் அறைந்து தாக்கும் திருப்பூர் டிஎஸ்பி , பொதுமக்கள் கடும் கண்டனம்....
ஊருக்குள் புதிய சாராயக்கடையை திறக்க வேண்டாம் என காலையில் இருந்து திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள் பொதுமக்கள் போராடி வந்தனர்.
இது மனித உரிமை மீறல் என பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது...
திருப்பூரில்.. தடியடி பதட்டம்...
திருப்பூர் சாமனாபுரத்தில் புதிய சாராயக்கடையை திறக்கக் கூடாது என அறவழியில் போராடியவர்கள் மீது போலிசார் காட்டுமிராண்டி தாக்குதல், பெண்கள் மீது தடியடி, பொதுமக்கள் கல் வீச்சு. திருப்பூரில் பரபரப்பு...
பன்னீர் செல்வம் மகனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை...
ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிடிவி மற்றும் ஒபிஸ் அணிக்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் பன்னீர் செல்வத்தின் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து பன்னீர் செல்வம் தரப்பு உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தது, இதை விசாரித்த உயர் நீதிமன்றம் பன்னீர் செல்வத்தின் மகனை கைது செய்யக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது...
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்ற கிளைக்கு உள்ளதா , சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி...
செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துள்ளனர், மேலும் ஒரு அமைச்சர், சசிகலா ஆணைப்படி தான் தமிழக அரசு நடைபெறுகின்றது எனக் கூறியுள்ளார். இது அவர்கள் ஏற்ற அரசியல் சாசன உறுதி மொழிக்கு எதிரானது.
எனவே இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், இவர்களை தகுதி நீக்கம் செய்யாத முதலமைச்சரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தான் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த கேள்வியை இன்று எழுப்பியுள்ளது. மேலும் சபாநாயகர் இதன் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது...
ஆகாயத்தில் ஒரு ஒளி - 8...
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இன்று நாம் அறிய வேண்டிய முக்கிய நிகழ்வு ஒன்று உண்டு. அது வான் மண்டலத்தில் நிகழும் அதிசயங்களைப் பற்றி நமக்கு எடுத்துக் கூறுகிறது.
வான் வெளியில் பல பிரபஞ்சங்கள் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.. ஆனால் இதுவரை அறிந்திடாத ஒரு பிரபஞ்சத்தை நமது விஞ்ஞானிகள் கண்டறிய உள்ளார்கள்.
அங்கு பல வியத்தகு ரகசியங்கள் உள்ளதை ஆதாரத்துடன் விஞ்ஞானிகள் வெளிப்படுத்த உள்ளார்கள். வானில் ஒரு மகா பேரொளி தோன்றி அந்த பிரபஞ்சத்தினுள் ஊடுருவிச் செல்வதை உலக விஞ்ஞானிகள் கண்டு வியப்பார்கள் என்றும்,
அச்சமயத்தில் அங்கிருந்து பறக்கும் தட்டுகள் வெளியேறி பூமியின் சுற்றுவட்டப் பாதையை நெருங்கும் காட்சியை கண்டு விஞ்ஞானிகள் வியப்படைவார்கள் என்பதே இன்றைய எட்டாவது தீர்க்க தரிசனம் உறுதிபட கூறுகிறது.
இந்த 8-வது தீர்க்க தரிசனம் நடை பெறுவதற்கு முன்பாக உலகில் உள்ள மகாபெரும் கடலிலிருந்து ஒரு அதிசயம் வெளிப்படும் என்றும்,
அது இதுவரை தேடிய ஒரு முக்கிய ரகசியம் அதுவென்பதை உலகமே அறிந்து வியப்படையும் என்றும்,
இதுவே 8-வது தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்கு முன் நடைபெறும் அதிசய நிகழ்வு என்று 8-ம் தீர்க்க தரிசனம் நமக்கு தெளிவுப்படுத்துகிறது.
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இத்தொடரின் மூலம் உலக மக்கள் இணைக்கப்படும் அதிசய நிகழ்வு ஒன்றும் கூடிய விரைவில் நடைபெற உள்ளதாக 8-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு செய்தியை வெளிப்படுத்துகின்றது.
நாம் காணும் செய்திகள் இன்று பொய்யாக நமது மனத்திற்குள் தோன்றலாம். ஆனால், நாளைய வருங்காலத்தில் இவைகளே நிஜங்களாக மாறி ஆகாயத்தில் ஒளிகளாக பிரகாசிக்கும் என்பதை மட்டும் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடல் சூழ்ந்த நாட்டில் உள்ள கயவர்களால் சில நாட்டு மக்கள் கடத்தப்படும் சம்பவம் நடைபெறும். அச்சமயத்தில் 8-ம் தீர்க்க தரிசனத்தின் செயல்பாடுகள் இவ்வுலகில் நடக்கும் காலம் இதுவென்று நாம் உணர வேண்டும் என 8-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை இங்கு தருகிறது.
சத்திய யுகம்.. இறைவனின் யுகம்.. இது இந்தியாவில் வேர் ஊன்றி விருட்சமாக
வளர உள்ளது...
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை..
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
இந்தியாவில் எந்த மாநில பாஜக ஆட்களும் தன் சொந்த மாநில மக்களின் போராட்டங்களுக்கு எதிராக வாய் திறப்பதே இல்லை...
தமிழ்நாட்டில் மட்டும் தான் போராடுபவர்களுக்கு எதிராக பேசுவதோடு அவர்களை தயங்காமல் இழிவுபடுத்தவும் செய்கிறார்கள்..
நம் பருப்பை தமிழகத்தில் விற்கவே முடியாது என தெரியும் போது வரும் விரக்தி, ஆற்றாமை அது.
அப்புறம் எப்படி உங்க கட்சி உ.பி யில் கடனை ரத்து செய்தது..
GDP யில் தமிழகம் முதல் 5 இடங்களில் இருக்கு ராகவன்...
தென்னிந்தியர்கள் இந்தியர்களா.. இல்லையா... தனி நாடு கோரிக்கை வரும் என எச்சரிக்கை...
தென்னிந்தியர்கள் குறித்து முன்னாள் எம்பி தருண் விஜய் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது.
தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்தியர்களா இல்லையா என அரசு விளக்கமளிக்க வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே ஆவேசமாக வாதிட்டார்.
தென் மாநிலங்களை பற்றி தவறாக குறிப்பிட்ட தருண் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்கே முழங்கினார்.
இது போன்ற பேச்சுக்களை அனுமதித்தால் தென் மாநிலங்கள் தனி நாடாக பிரிந்து செல்ல முற்படும் என்றும் கார்கே எச்சரித்தார்.
கார்கே பேச்சுக்கு எதிர்கட்சிகளின் மற்ற எம்பிக்களும் ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிறத்தின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் பாகுபாடு தொடர அனுமதிக்கப் போவதில்லை என உறுதியளித்தார்...
நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...
பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.
அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.
இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.
அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.
இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை...
நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...
தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு...
தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு.. கிட்டத்தட்ட Venturi - போன்று இது செயல்படுகிறது..
மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.
கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.
அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்று விடும். தூர்வாரும் வேலை குறைந்து விடும்.. சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.
நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது.
வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள் - 16) என்கிறார் வள்ளுவர்.
அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர்.
மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது.
இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்.
(வரி.26 - 28).
இப்பாடலடியில், மழை பிணித்து ஆண்ட மன்னவன் என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.
இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.
(புறம் - 18,28 - 30).
என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார்.
இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.
அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ.
(புறம்.118).
எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது.
ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும்.
இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.
சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார்.
அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை..
வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார். (83).
என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை,
யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்.
என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது.
இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும்.
பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது.
கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,
பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே. (25).
என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள்.
சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.
பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற கலிங்கு என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான அறவணர் தொழுத காதை என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,
பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும். (1384 - 87).
என்கிறார். சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும்.
அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.
1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே குமிழித்தூம்பு என்பதாகும்.
பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் குமிழித்தூம்பு அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.
இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை கற்சிறை எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது (வரி:725 - 726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.
தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது...
தாலி கட்டுவது தமிழர் பண்பாடு...
தாலி கட்டுவது தமிழ் இந்துக்களின் வழக்கம் என்று விக்கிபீடீயாவில் எழுதப்பட்டுள்ளது. இதுவே பெரும்பாலானவர்களுடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது.
ஆனால், தமிழரல்லாத திராவிட இந்துக்கள் அனைவரிடமும் இப்பழக்கம் இல்லை என்பதை நான் அறிவேன்.
உதாரணமாக, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநில திராவிடர் இந்துகள் பெரும்பாலும் ஐம்படைத்தாலி எனும் பாரம்பரியம் இல்லாதவர்கள்.
சரி, திராவிடர்களை விட்டுவிடுவோம். ஆரியர்கள் அனைவருமே தாலிகட்டும் வழக்கம் உடையவர்களா?
இவர்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ளனர். ஆனால், தமிழர் கலாச்சாரத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஆரியர்கள் மட்டுமே இந்த வழக்கத்தை மதித்து பின் பற்றுகிறார்கள்.
தமிழருடைய பாரம்பரிய வழக்கத்தை திராவிடர்களுடையது என்றும் இந்து மதத்திற்கு சொந்தமானது என்றும் மாறி மாறி சொல்லிக்கொண்டிருப்பதன் நோக்கம் என்ன? (ஏற்கெனவே அறுத்தது போதாதா?).
தாலிகட்டுவது தமிழர் பண்பாடா? தருவிக்கப்பட்டதா?
திரு.ஜெயமோகன்...
தாலம் என்றால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இலை என்று தான் முதற் பொருள். ஆனால் வடமொழியில் அதற்கு வேர்ச்சொல் இல்லை. வேர்ச்சொல் இருப்பது தமிழில்.
ஆகவே அது இங்கிருந்துபோன சொல். ‘தால்’ என்றால் இலை என்பதுடன் நாக்கு என்றும் பழந்தமிழ் மொழியில் பொருள் உள்ளது.
இலையை மரத்தின் நாக்குகளாகக் கண்ட ஒரு தொல்குடியின் விழியே மொழியாக ஆனதா அது?
அந்த வேர்ச்சொல்லில் இருந்து கற்பனையும் நடைமுறையும் கலந்து பல ஆயிரம் வருடங்களாக சொற்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன.
இலையே உண்கலமாக ஆனதனால் தாலம் என்பது உண்கலம் என்று பொருள் பெற்றது.
பின்னர் தட்டுக்கு தாலமென்று பொருள் வந்தது. அதன்பின் தாம்பாளத்துக்கு தாலம் என்று பொருளாகியது.
மலையாளத்தில் இன்றுள்ள நடைமுறை வழக்கிலும் தாலம் என்றால் தட்டுதான். தமிழ்நாட்டில் இன்று சில பகுதிகளில் வெற்றிலைத்தட்டு தாலம் என்று சொல்லப்படுகிறது.
எப்போதோ ஒரு கட்டத்தில் பூமியின் மாபெரும் வட்டவிரிவுக்கும் தாலம் என்றே பொருள் வந்தது.
இலைபோல் அகன்ற யானையின் காதுக்கும் தாலம் என்றுபெயர்.
பின்னர் குறிப்பாக பனையோலைக்கு தாலம் என்றபெயர் புழங்கலாயிற்று. தாலகி என்றால் பனையிலிருந்து வடிக்கும் கள். தாலத்திலிருந்து வந்ததே தாலி.
மணமகன் மணமகள் கழுத்தில் கட்டும் தாலி என்பது ஒரு பனையோலைச் சுருள்தான்.
இளம்பனையின் ஓலை நறுக்கில் காப்பு மந்திரத்தை எழுதி அதில் சுண்ணமும் மஞ்சளும் கலந்து பூசி இறுக்கமாகச் சுருட்டி மஞ்சள் நூலால் இறுகச் சுற்றிக்கட்டி மஞ்சள்சரடில் கோர்த்து கட்டுவார்கள்.
ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் வரைகூட அந்த தாலி குமரிமாவட்டத்தில் புழக்கத்தில் இருந்து நான் கண்டிருக்கிறேன்.
(திரு.ஜெயமோகன், http://www.jeyamohan.in/514#.VSFHVtKUdJA)
பண்டையகாலத்தில், தாலிப்பனையின் ஓலைகளை சுருட்டி, நூலினால் கட்டி, கழுத்தில் அணியும் வழக்கம் இருந்தது. இதனால் கழுத்தில் அணியப்படும் அணிகலனுக்கு தாலி என்று பெயர் வந்தது.
சங்க காலத்திற்கு முன்னரே, திருமணமாகத ஆண்பிள்ளைகள், தாம் வேட்டையாடிய புலியின் கோரைப்பற்கள் இரண்டையும் கோர்த்து தாலியாக அணிந்திருந்தனர்..
அதை தாம் ஏற்றுக்கொள்ளும் பெண்சாதியின் கழுத்தில் அணிவித்து கௌரவித்தனர்..
தனது கணவன் ஒரு புலிக்கு நிகரான வீரன் என்கிற பெருமையுடன் அதை பெண்சாதியினர் அணிந்திருந்தனர்..
(புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண்களும் அதே சங்ககாலத்தை சேர்ந்தவர்களே).
அதற்கு மஞ்கள் பூசியணியும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது என்பதற்கு சான்றாக, அல்லூர் நன்முல்லையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் 67 இருக்கிறது.
மகளிர் அணிந்திருந்த தாலியானது வேப்பம்பழம் போன்ற அழகுடன் இருந்ததாகவும், அது புதுநாண் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
குறுந்தொகை 386ல் வெள்ளிவீதியார், தாலி அணிந்த பெண்களை வாலிழைமகளிர் என்று குறிப்பிடுகிறார். மாங்களியம், மங்கலியம், மங்கலவணி போன்ற தூய தமிழ்ச்சொற்களால் தாலியானது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றளவும், அதே புலிப்பல் சின்னமானது பொன்னினால் செய்விக்கப்பட்டு அணிவிக்கப்படுகிறது.
இத்தகைய வீரவரலாறு உலகில் தமிழினத்தை தவிர வேறெந்த இனத்திற்கு இருக்க முடியும்?
இந்த வரலாற்று உண்மையை அழிக்கவே தாலி அறுப்பு நிகழ்ச்சி நடத்துகிறார்கள் திருட்டு திராவிடர்கள்...
தமிழனை அழிக்க தோன்றியதே திராவிடம்...
இந்த திராவிடர்கள் குழப்பி வைப்பதற்கு முன்பு இருந்த தமிழ் சமூக கட்டமைப்பை இங்கே இருக்கும் தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே நாளில் அது நடக்காது. பொறுமையாக தான் நடக்கும்..
இங்கே இருக்கும் சாதி சிக்கல்களை தீர்த்து வையுங்கள் சாமி என்று திராவிடரிடம் செல்வது வடிகட்டிய முட்டாள்தனம்...
ஏனெனில் தமிழனை வீழ்த்தி, அவனது சமூக கட்டமைப்பை குழப்பி, அவனை ஒழித்து கட்டுவதையே குறியாக கொண்டவர்கள் தெலுங்கர்களின் வழி தொன்றிகலான திராவிட இயக்கங்கள்...
சித்தர் ஆவது எப்படி - 7...
அக குருவின் பெருமை...
ஒரு குருவின் துணையின்றி நமது சித்தத்தை ஒரு போதும் சீர் செய்ய முடியாது... அகத்திலிருந்து செயல் படும் சித்தத்தின் வேகத்தை அதே அகத்திலே வாழும் கனலை தாங்கிய புத்தி என்ற பூதம் மட்டுமே எதிர்கொண்டு, சமாளிக்கவும், கையாளவும், முடியும்... வேறு எந்த காரிய குருக்களான புற குருக்களால் சரிவர அந்த பணியினை செய்ய முடியாது..
புற குருக்கள் ஆசையென்ற வார்த்தைகளை அள்ளி வீசி மேலும் மேலும் சித்தத்தை வலு படுத்தி, அதன் ஆதிக்கத்தை அதிகப் படுத்தவே செய்வார்களே தவிர, சித்தத்தை சீர் செய்யவும், தெளிய வைக்க வகையறியாது தவிப்பார்கள்..
இதயத்தில் அன்பு இருந்தாலும் அவர்களுக்குள் அறியாமை ஒன்று உள்ளதே.. என்ன செய்வது ? சித்தம் தெளிய மருந்து அக குருவாகிய பலப்பட்ட குருவிடம் மட்டுமே உள்ளது...
மந்திரங்கள், உபதேசங்கள், சாஸ்திரங்கள், வேத ஆகம நூல்கள், எல்லாம் ஏறக்குறைய நன்மை செய்வது போல், மாயை காட்டி முடிவில் பக்க விளைவாக சித்தத்தை பலப் படுத்தி குரு பீடத்தை அணுகாமலேயே, கால விரையத்தை ஏற்படுத்துகின்றன...
உதாரணங்களுக்கு உலக விவகாரங்களை காட்டி காட்டி, மேலும் மேலும் வெளிச்சத்தையே காட்ட முயன்று, முடிவில் கனல் குறைந்து, ஆற்றல் குறைந்து, மரணத்தை நோக்கியே பயணப் பட வைக்கின்றன...
அகக்குரு பலப்பட, அமைதியும், சாந்தமும் மௌனமான சூழ்நிலைதான் தேவையே தவிர, சித்தம் கொதிக்க வைக்கும் இலக்கிய சிந்தனைகள், பாரத போர் சூர சம்காரம் போன்ற உணர்ச்சி கொப்பளிக்கும் காட்சி பாவனைகள், உச்ச கட்ட உணர்ச்சியை தட்டி எழுப்ப கூடிய மத போதனைகள், மத கருத்துக்கள் எல்லாம் புத்தியில் நிறைந்து இருக்க வேண்டிய சூனிய தன்மையான இருப்பு தன்மையை, கட்டாயம் நாசம் செய்து அதில் கனல் பெருக்கம் துளியும் ஏற்படாமல் பெரும் தீமையே செய்யும்...
குரு பீடத்திற்கு பீடை அதாவது நோய் தான் கவ்வும்.. இதனால் தான் சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் ஆகியவற்றின் ஆசார சங்கல்ப விகற்பங்கள் எம்மை பற்றாதவண்ணம் காத்து அருள் புரிதல் வேண்டும் என அருள் பெருஞ்சோதியை எங்கேயும் எப்போதும் முதலிலேயே வேண்டி கொள்கின்றார் வள்ளலார்...
முழுமையாகவே வெளிச்சத்தை கக்கும் தன்மை உடைய சித்தத்தை பலப் படுத்தும் மத சமூக போதனைகள் தரும் தீங்கை புத்தி பலம் உள்ளவர்கள் மட்டுமே உணர முடியும்...
கனல் என்றால் பேரண்ட ஆற்றலின் வரவு.. அந்த வரவின் சமயம் அது உணர்வாக தோன்றும்...
எண்ணம் என்பது ஆற்றலின் செலவு.. அது வெளிச்சமாக பொறி புலன்கள் மூலம் வெளியேறும்....
உணர்வும் எண்ணமும் வட துருவம் தென் துருவம் போல.. இரவும் பகலும் போல... ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது.. இதை ஒரு நாளும் மறக்கக் கூடாது...
இந்த விதியை பயன் படுத்தி தான் கனல் பெருக்கும் வழியினை இனி விரிவாக காணப்போகிறோம்...
பேரண்ட சக்தி நாம் பெறுகின்ற போது, நமது பஞ்ச பூதங்கள் பெறுகின்ற உருமாற்ற பட்ட சக்தியை அந்த அந்த பூதங்களுக்கு ஏற்றவாறு அழைக்கிறோம்..
நம்மில் அறிவு அனுபவ சக்தியாகவும், புத்தி கனல் சக்தியாகவும் மனம் வெளிச்ச சக்தியாகவும், சித்தம் உந்தல் சக்தியாகவும், தேகம் பொருள் இயக்க சக்தியாகவும் அழைக்கப் படுகிறது... புத்தி அறிவோடு இயல்பாகவே அதிக தொடர்பு உடையது..
மனம் சித்தத்தோடு இயல்பாகவே அதிக தொடர்பு உடையது... அதனால் தான் பொறிபுலன் வழியாக சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தின் உந்தல் சக்தியால் மனம் வெளிச்சமாக எதையாவது செய்ய முனையும்....
கனல் என்பது புத்தியின் சக்தி.. அது அனுபவ அறிவோடு இணைந்து, தகுந்த முடிவு எடுக்க வல்லது... இந்த கனல் சக்தி பெருக்கத்தில் தான் புத்தி தகுந்த முடிவு எடுக்கும்.. இதனையே உள் குருவாக கொள்ள வேண்டும்..
இந்த புத்தியாகிய உள் குருவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படியெல்லாம் நாம் உலகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் தான் பெற்ற கனல் சக்தியின் அளவினை பொறுத்து தகுந்த, உறுதியான, சரியான முடிவு எடுக்கும்...
ஆகவே நாம் வெளி குருவை போற்றுவதை காட்டிலும் பல மடங்கு உள் குருவாகிய புத்தியை போற்றி அதை பெருக்கும் வழியினை எந்த வகையிலாவது உயர்த்திக் கொள்ள வேண்டும்..
வெளி குருவை போற்றுவதில் தவறு எதுவும் இல்லை.. ஆனால் உள் குருவின் துணையின்றி கடுகளவும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண முடியாது..
உள் குருவின், அக குருவின் பலத்தை பெற்று விட்டால் ஆன்மீகத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சரியான அடியாகவே இருக்கும்..
வெளி குருக்களின் அறியாமை விளைவாக, நம்மை எப்படி எல்லாம் பின் தங்க வைக்கிறார்கள் என்பது நன்கு புரியும்.. அக குருவின் பலத்தை பெற்ற பின் இதுவரை வெளி குருகளிடம் கற்றதை மறக்கும் பணியை செய்யவேண்டி உள்ளதால், இன்னும் நமக்கு கால விரையம் ஏற்படும்..
அந்த நிலையில் தான் கற்ற தெல்லாம் வீணே என்ற வள்ளலார் கூற்று நினைவுக்கு வரும்..
நன்றாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. நமக்குள் இருக்கும் குரு நமது அல்ல.. இதில் நாம் என்ற ஆணவ குறிப்பு உள் குருவை தனதாக பாவிக்கின்ற மாயை தோற்றம்..
அக்குரு அண்ட சராசரம் முழுமைக்கும் பேராட்சி நடத்திக் கொண்டு இருக்கும் பேரறிவின் அம்சம் அல்லவா?
நான் நாம் என்ற குறுகிய வட்டத்தில் அரசாட்சி செய்து கொண்டு இருக்கும் ஆணவம் தான் தனது என உரிமை கொண்டாடுவதால், பேரறிவின் கசிவிலிருந்து வரும் கனலை உடைய புத்தியை, தன்னை விட உயர்ந்ததாக கருதாது..
ஆணவம் என்பது மனதின் பொறி புலன்கள் மேல் உள்ள ஆதிக்கமும், பேரண்ட பேராற்றலால் காரிய பட்ட ஒடுங்கிய செத்த நிலையில் உள்ள புற பொருள்களின் மேல் உள்ள ஆதிக்கமே...
உலக பொருள்கள் எல்லாம் பிரபஞ்சத்தால் தோற்றுவிக்கப் பட்டாலும், அவைகள் அத்தனையும் பிரபஞ்ச கழிவுகள்.. கழிவுகளை ஆதிக்கம் செய்வதால் ஏதோ பிரபஞ்சத்தையே ஆதிக்கம் செய்ய கூடிய அறியாமை தான், மனத்தினுடைய ஆணவம் என்பது....
நம்முள் உள்ள புத்தி ஆணவத்திற்கு சொந்தம் அல்ல.. அது பேரண்ட புனிதத்தின் செயல் பாடு..
இப்படியாக ஆணவத்திற்கு சொந்தமாக பாராட்டாமல் அதனை பேரறிவின் உடமையாக கொண்டதால் தான், தன்னுள் குடிகொண்ட புனித புத்தியின் மூலம், சித்தர்கள் அளப்பறிய ஆற்றல் உடைய சித்தர்கள் ஆக முடிந்தது..
புத்திமானே பலவான் என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உடைய நாம், நம் அக குருவை போற்றி போற்றி, வணங்கி வணங்கி, கனல் பெருக்கும் மார்க்கத்தில், நம்மிடம் உள்ள குரு பீடத்தை திடமாக்குவோம் வலுவாக்குவோம், சித்தராவோம்...
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக நாங்கள் வீர மரணம் அடையவும் தயாராக உள்ளோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்...
கோரிக்கைகளுக்காக ஜந்தர் மந்தரிலேயே வீரமரணம் அடையவும் விவசாயிகள் தயாராக உள்ளோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் 27 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது போராட்டம் இன்று 28-ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் போராட்டக் களத்துக்கு வந்த டெல்லி போலீஸார் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அய்யாகண்ணு தலைமையில் 10 விவசாயிகள் ஜீப்பில் ஏறினர்.
பின்னர் பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களில் அய்யாகண்ணுவை மட்டும் பிரதமர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு உள்ளே சென்றதும் அவரிடம் இருந்த கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
இதைக் கண்டித்து முழு நிர்வாண போராட்டம் மேற்கொண்ட 7 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
பிரதமரை சந்திக்க அழைத்து செல்வதாக கூறிவிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதிலேயே போலீஸார் குறியாக உள்ளதாக அய்யாகண்ணு குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பிரதமரை சந்திப்பதாக அழைத்து சென்று எங்களை மத்திய அரசு நிர்வாணமாக்கி விட்டது.
கோரிக்கைகளுக்காக ஜந்தர் மந்தரிலேயே வீரமரணம் அடையவும் விவசாயிகள் தயாராக உள்ளோம்.
எங்கள் மானம் போய்விட்டது, பிரதமர் சந்திக்கவில்லை, எங்கள் உயிர் போனால் தான் எங்களை சந்திப்பார் என்றால் அதற்கும் நாங்கள் தயார்.
எங்களது போராட்டத்தை பிரதமர் மோடி கேட்காதது ஏன்? நாங்கள் தீண்டத்தகாதவர்களா? இந்தியாவை விவசாய நாடு என்று இதற்கு மேல் சொல்ல முடியுமா?
விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிடுவது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு அவமானம் இல்லையா ?
பிரதமர் அழைத்து பேசாததால் நிர்வாணமாக போராட்டம் நடத்தினோம்.
விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்க பார்க்கிறதா மத்திய அரசு.
கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை.
இதன் பிறகாவது எங்களை பிரதமர் சந்திக்க வேண்டும் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்...
ஆகாயத்தில் ஒரு ஒளி - 7...
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு தீர்க்க தரிசனங்களும் மக்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக அல்ல.. மக்கள் கடவுளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ வேண்டும் என்பதற்கே இங்கு வெளிப்படுத்தப் படுகின்றன.
உண்மைக்குள் ஒழிந்துள்ள தெய்வீக உண்மைகளை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டுவதே ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரின் முக்கிய நோக்கமாகும்.
இங்கு வெளியிடப்படும் தீர்க்க தரிசனங்களைப் போன்று உலகில் பல மக்கள், பல மதத்தினர் வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், இத் தொடரில் இடம் பெறும் தீர்க்க தரிசனங்கள் யாவும் கடவுளின் வருகைக்கு முன்பாக இப் புவியில் மக்களுக்கு நடக்கும் சம்பவங்களை வெளிச்சமிட்டு காட்டுவதற்கே இங்கு வெளியிடப்படுகின்றன.
ஆனால் விஞ்ஞானம் முழுவதையும் கண்டறியாது. அதே சமயத்தில் முழுமையாக மக்கள் அறிந்து கொள்ளும்படி அது வெளிப்படுத்தாது. அது அரசாங்கத்தின் முக்கிய கட்டுப்பாட்டு விதிமுறையாகும்.
உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய சம்பவங்களையே இத்தொடர் தீர்க்க தரிசனங்களாக வெளிச்சமிட்டுக் காட்டும். சுட்டிக் காட்டப்படும் தீர்க்க தரிசனங்களின் மீது யாரும் எவரும் பயப்படத் தேவையில்லை. அவைகள் நிகழும் சமயத்தில் இறைவனே அதனை தடுக்கவும் உதவுவார்.
அப்படி என்றால் இந்த சம்பவங்கள் இறைவனால் நிகழ்த்தப்பட உள்ளதா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இது அப்படி அல்ல.
ஏனெனில் இது முன்பே வகுக்கப்பட்ட உலகியல் விதி ஆகும். இதனை மாற்ற முடியாது.
ஆனால் மக்கள் நினைத்தால் இதன் பாதையை மாற்றி அமைக்க முடியும். மக்களின் பழக்க வழக்கங்களிலும், நடைமுறை செயல்களிலும் நேர்மை இருந்தால், இறைவன் அவர்களுக்காக இதனை மாற்றி அமைப்பார் என்று இறை கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
இன்று 7-வது தீர்க்க தரிசனம் எதுவென்று நாம் அறிந்து கொள்ளலாம்..
கிருஸ்துவ சபை ஒன்று கூடி ஒரு தீர்க்க தரிசனத்தை அறிவிக்க உள்ளது. அது இயேசுவின் வருகையை ஆணித்தரமாக அறிவிக்க உள்ளார்கள்.
இதனால் உலக கிருஸ்துவர்களுக்குள் ஒரு புதிய நம்பிக்கை பிறந்து புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும்.
அச்சமயத்தில் பிரசித்திப் பெற்ற மற்றொரு கிறிஸ்துவ அமைப்பு இது பொய் என்றும், இதனால் மக்கள் சமுதாயம் அழிய வகை ஏற்படும் என்றும் இதனை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று ஒரு அறிக்கையை வெளிப்படுத்தும்.
ஆனால் உலக மக்களின் நம்பிக்கையை வலிமைப்படுத்தும் வகையில் இயேசுவின் வருகைக்கான வான் தூதுவர்கள், தோன்றி அவரின் வருகையை உறுதிப்படுத்தும் அதிசய சம்பவம் நடைபெற உள்ளது என்று ஏழாம் தீர்க்க தரிசனம் கூறுகிறது.
ஏழாம் தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்கு முன்பாக இந்த பூமியில் மிகப்பெரிய அழிவுச் சம்பவம் ஒன்று தென்நாட்டில் நடக்கும் என்றும், இது உலக நாடுகள் முழுவதும் எதிரொலிக்கும் என்றும் அந்த ஏழாம் தீர்க்க தரிசனம் நிச்சயம் நடைபெறப் போவதை இச்சம்பவமே உறுதிப்படுத்தும் என்று தெய்வீக தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.
நாடுகளும், மதங்களும் மற்போர் புரியும் அளவிற்கு பல சம்பவங்கள் 7-ம் தீர்க்க தரிசனத்திற்கு முன்பாக நடைபெறும் என்றும்,
உலகில் பல நாடுகளில் போலி குருமார்கள் தோன்றி தமது சபைகளுக்காக மக்களை தன்வசப்படுத்துவார்கள் என்றும்.
அச்சமயத்தில்தான் உலக கிருஸ்து சபை இயேசுவின் வருகையை உறுதிபடுத்தி அறிக்கையை வெளியிடும் என்று 7-ம் தீர்க்க தரிசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
இயேசுவின் வருகைக்கு முன்பாக நடக்கும் சம்பவங்களை உலக நாட்டு மக்கள் இனம் கண்டு நமது தீர்க்க தரிசனத்தின் உண்மைகளை அறிந்து மகிழும் அச்சமயத்தில் ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடர்அவர்கள் மனதில் பிரகாசமாக ஒளி வீசி பதிவாகும். இந்த நாள் நமக்கு இனிய நாளாக அமையும்...
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் எற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தை பற்றி விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதைப்போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோகம்...
இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது.
இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது.
தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது.
மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா, சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இப்போது தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது.
பர்மாவைத் தாக்கிய பிறகு தனது படையினரையும் ஆயுத தளபாடங்களையும் எடுத்துச் செல்ல ஒரு புகையிரதப் பாதை அமைக்க தொடங்கியது. தாய்லாந்து தலைநகர் பாங்கொக், பர்மா தலைநகர் இரங்கூன் ஆகியவற்றை இணைக்கும் 252 மையில் நிளமான இருப்புப் பாதையை அமைக்க ஜப்பான் திட்டம் தீட்டியது.
அடர் காடுகள், கருங்கல், மலைகள், பெரிய நதிகள் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. பாதை போடும் பணிக்குப் போர்க் கைதிகளைப் பயன்படுத்த ஜப்பான் படையினர் திட்டமிட்டனர்.
அத்தோடு மலாயா சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகக் ஈடுபடுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமிழ் ஆண்களும் இளைஞர்களும் சரியான உணவு, மருந்து, ஒய்வு இல்லாமல் மரணமடைந்தனர்.
ஓரு சிலரை விட எல்லோரும் கொல்லப்பட்டனர் என்பதால் இந்த புகையிரதப் பாதை மரண இரயில்வே என்று அழைக்கப்படுகிறது.
சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான இந்தச் செயல் ஜப்பான் அரசு இழைத்த மிகப் பெரிய போர்க் குற்றமாக போர் முடிந்த பிறகு அதன் மீது சுமத்தப்பட்டது.
இந்த இரும்புப் பாதையைப் போடுவதற்கு ஜப்பான் இராணுவம் 16,000 போர்க் கைதிகளையும் கூடுதலான எண்ணிக்கையில் பொது மக்களையும் பயன்படுத்தியது.
மலாயாத் தோட்டப் புறங்களில் இருந்து கொண்டுச் செல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80,000 தொடக்கம் 100,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த போர்க் கைதிகள் மேற்கூறிய 16,000 பேரில் அடங்குவர்.
மலேரியா, கொலரா, பெரிபெரி, போசாக்கின்மை போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தின. வேலை செய்ய முடியாதவர்கள் சுடப்பட்டனர். குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.
மலாயா சிங்கப்பூர் தமிழர் வரலாற்றில் இது ஒரு கண்ணீர் அத்தியாயம்.
சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள் பர்மா – சயாம் இரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்படவில்லை.
இந்த ரயில் பாதை தொடர்பான திரைப்படங்களும் ஆய்வு நூல்களும் இன்றுவரை வெளிவந்தபடி உள்ளன.
குவாய் நதிக்கு மேலான பாலம் (Bridge on the River Kwai) என்ற திரைப்படம் பிரசித்தமானது. இதனுடைய படப்பிடிப்பு இலங்கையின் மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது. காலஞ்சென்ற பிரிட்டிஷ் நடிகர் சேர் அலெக் கினெஸ் (Sri Alec Guinness) பிரதம பாகத்தில் நடித்தார்.
அவுஸ்திரேலியப் போர் கைதிகளின் துன்பியல் வரலாறு பற்றி ஊடகவியலாளர் கமரன் போர்ப்ஸ் (Cameron Forbes) நரகநெருப்பு (Hellfire) என்ற தலைப்பில் 559 பக்க ஆய்வு நூலை எழுதினார். ஒரு அத்தியாயத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிறிய கப்பலில் ஓரு சிலரை ஜப்பான் படை அதிகாரிகள் மிக நல்லமுறையில் கவனித்தனர்.
சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரணடைந்த பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஆர்தர் பேர்சிவலை (Gen Arthur Percival) மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய தளபதி ஜெனரல் தோமோயுக்கி யமாஷிற்றா (Gen Tomoyuki Yamashita) பெரும் மரியாதையுடன் நடத்தினார்.
1,700 கைதிகள் நெருக்கமாக அடையப்பட்டனர். நிற்பதற்கு மாத்திரம் இடம் இருந்தது. வேண்டுமென்றே கப்பல் 54மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கைதிகள் ஒருவருக்குமேல் ஒருவர் படுத்து உறங்கினார்கள். சிலர் கப்பலில் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன. பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இறந்தனர்.
போர் முடிந்து ஜப்பான் படைகள் சரண்புகுந்த பிறகு அவுஸ்திரேலியப் படைகள் அவர்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத்தனர். நீதி விசாரணை என்ற பெயரில் நாளொன்றுக்கு சராசரி ஏழு ஜப்பான் படையாட்கள் தூக்கிலடபட்டனர். விசாரணை இல்லாமல் பலர் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.
வெறி அடங்கியதும் நட்புறவுகள் ஆரம்பித்தன. சில அவுஸ்திரேலியப் போர் வீரர்கள் ஜப்பான் பெண்களைத் திருமணம் செய்தனர். இன்னும் சிலர் ஜப்பான் சென்று பழைய படையினரோடு நற்புறவு பூண்டனர். இந்த நடவடிக்கைகள் வெள்ளை அவுஸ்திரேலியா நிறவெறிக் கொள்கையை உடைக்க உதவின.
இன்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வர்த்தகப் பங்காளிகளாகி விட்டனர். மன்னிப்போம் மறப்போம் என்ற கட்டம் தொடங்கிவிட்டது.
ஆனால் ஈழத்தமிழர்களால் ஜப்பான் ஆடிய கபட நாடகத்தை மன்னிக்க முடியவில்லை.
தமிழ் ஈழ தாயகத்தின் விடிவிற்காக உலகத் தமிழர்களின் குரலாக ஒன்றிணைவோம்...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 7...
எண்ணங்களின் சக்தியை ரஷியாவில் வாசிலிவ் ஆய்வு நடத்திக் கொண்டிருந்த காலத்திற்கும் சற்று முன்பே, 1910ஆம் ஆண்டு, ஜப்பானில் டாக்டர் டொமொகிச்சி புகுரை என்ற டோக்கியோவின் இம்பீரியல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
எண்ணங்களையும் புகைப்படம் எடுக்க முடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் மையக் கருத்தாக இருந்தது.
தன் கண்டு பிடிப்புகளை அவர் வெளியிட்ட போது ஜப்பானிய அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக எதிர்க்க அவர் தன் வேலையை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.
ஆனால் தன் கருத்தில் ஆழமாக நம்பிக்கை கொண்ட புகுரை கோயா சிகரத்தில் உள்ள ஒரு புத்தமத ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
அதை 1931ல் Spirit and Mysterious World என்ற புத்தகத்தில் விவரமாக வெளியிட்டார் என்றாலும் அபோதும் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அதை அங்கீகரிக்கவில்லை.
அவருடைய ஆராய்ச்சிக் கருத்துகள் வலிமை பெற ஆரம்பித்தது 1950 ஆம் ஆண்டிற்குப் பின் தான். அதுவும் அறிவியலுக்கு சம்பந்தமே இல்லாத டெட் சிரியோஸ் (1918-2006) என்ற சிகாகோவில் வசித்து வந்த ஒரு குடிகார நபர் மூலம் தற்செயலாக வெளிப்பட்டது.
தான் போதையில் இருக்கும் போது தனக்கு வித்தியாசமான காட்சிகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் கடலிலும் மண்ணிலும் புதைந்து கிடக்கும் புதையல்கள் கூடத் தெளிவாகத் தெரிகின்றன என்றும் தெரிவித்தார்.
அவரது நண்பர் விளையாட்டாக உனக்குத் தெளிவாக மனதில் தெரியும் காட்சிகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கும் போது நீ வெற்று சுவரைப் பார்த்தபடி காமிராவை வைத்துப் படம் பிடித்தால் வந்தாலும் வரலாம் என்று சொல்ல அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அப்படியே சிரியோஸ் செய்தார்.
ஆனால் அவர் நினைத்தது போல் அதில் புதையுண்ட புதையல்கள் படம் வரவில்லை. அதற்குப் பதிலாக வேறெதோ படங்கள் வந்தன. அந்தப் புகைப்படங்கள் அந்த அறையில் இருந்த பொருள்களின் படங்களாகவும் அவை இருக்கவில்லை. அப்படியானால் வெள்ளைச் சுவரை நோக்கி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வந்த பிம்பங்கள் அவருடைய மனதில் இருந்த புதையலைப் பற்றிய எண்ணங்களில் இருந்து வந்திருக்கக் கூடுமா என்ற சந்தேகம் வந்தது. ஆச்சரியப்பட்ட சிரியோஸ் மீண்டும் மீண்டும் அது போல் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் காட்ட ஆரம்பித்தார்.
இந்தச் செய்தி இல்லினாய்ஸ் நகரின் ஆழ்மன சக்திகளின் ஆராய்ச்சிக் கூடத்தை எட்டவே அவர்கள் டென்வர் நகரைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஜூல் இய்சன்பட் (1908-1999) என்பவரை செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து வருமாறு கேட்டுக் கொண்டார்கள்.
ஆரம்பத்தில் இய்சன்பட்டிற்கு டெட் சிரியோஸை வைத்து நடத்திய ஆய்வுகள் அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. குடிகார டெட் சிரியோஸ் தனக்குக் காட்சிகள் தெளிவாகத் தெரியாத போது போதையில் கத்துவது, உளறுவது, தலையை சுவரிலோ, தரையிலோ இடித்துக் கொள்வது போன்ற செய்கைகளில் ஈடுபட்டது இய்சன்பட்டிற்கு ரசிக்கவில்லை.
ஆனால் ஒருசில நேரங்களில் கிடைத்த புகைப்படங்களின் தத்ரூபம் டெட் சிரியோஸை ஒரேயடியாக ஒதுக்கவும் விடவில்லை. இய்சன்பட் டென்வரில் உள்ள தன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு டெட் சிரியோஸை வரவழைத்து இரண்டாண்டு காலம் ஆராய்ச்சி செய்தார்.
பலர் முன்னிலையில் டெட் சிரியோஸ் செய்து காட்டிய விந்தைகள் சில அற்புதமானவை. ஒரு முறை பார்வையாளர்கள் அவரை பழங்கால ரோதன்பர்க் என்ற நகரப் படத்தை மனதில் எண்ணிப் புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். ஓரளவு சரியாகவே செய்து காட்டினார் சிரியோஸ்.
பின் கொலராடோவில் மத்திய நகரத்தில் உள்ள பழைய ஆப்ரா ஹவுஸ் என்ற இடத்தின் படத்தை புகைப்படமாக்கச் சொன்னார்கள். அதையும் செய்து காட்டிய சிரியோஸ் இந்த இரண்டு புகைப்படங்களையும் கலக்கி ஒரு புகைப்படம் உருவாக்கட்டுமா? என்று சொல்ல பார்வையாளர்கள் உற்சாகமாக செய்து காட்டச் சொன்னார்கள்.
டெட் சிரியோஸ் உருவாக்கிக் காட்டிய புகைப்படம் அவர் சொன்னது போலவே பழைய ஆப்ரா ஹவுஸில் குறுக்கே உள்ள குதிரை லாயத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. அதில் செங்கல் கட்டிடத்திற்குப் பதிலாக ரோதன்பர்க் நகரப் படத்தில் உள்ளது போல கல்லால் ஆன கட்டிடத் தோற்றம் இருந்தது. ஆப்ரா ஹவுஸ் குதிரைலாயப் புகைப்படத்தையும், இரு காலக்கட்டத்தை இணைத்து அவர் எடுத்த புகைப்படத்தையும் இங்கே நீங்கள் காணலாம்.
1967ல் இய்சன்பட் டெட் சிரியோஸின் உலகம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் தன் ஆராய்ச்சிகளை விரிவாக ஆதார புகைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார்.
ஒருசில இடங்களை சிரியோஸ் எண்ணப் புகைப்படங்களாக எடுத்து தந்தது மேலிருந்தும், மரக் கிளைகளின் நடுவிலிருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும் இய்சன்பட் வியப்புடன் கூறியிருக்கிறார்.
அது போன்ற கோணங்களில் இருந்து எடுப்பது போல் புகைப்படம் எடுக்க முடிவது எப்படி என்பது கேள்விக்குறியாக இருந்தது. பலரும் டெட் சிரியோஸின் நம்பகத் தன்மையை சந்தேகிக்கவே செய்தார்கள் என்றாலும் இது போன்ற ஆற்றல் வெளிப்படுத்துவதில் பல ஏமாற்று வேலைகள், தில்லுமுல்லுகள் செய்ய முடியும் என்பதால் மிகக் கவனமாகத் தன் ஆராய்ச்சிகளைச் செய்ததாக இய்சன்பட் கூறினார்.
பிற்காலத்தில் இது போன்ற ஆய்வுகள் உலகின் பல பகுதிகளிலும் நடக்கத் துவங்கின. ஒருசில ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் டெட் சிரியோஸை ஆராய்ச்சிக்காக அணுகிய போது அவருடைய அபூர்வ சக்தி குறைய ஆரம்பித்திருந்தது. பிந்தைய ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் உதவ முடியவில்லை.
ஆனாலும் எண்ணப் புகைப்படங்கள் என்றாலே மனோசக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு டெட் சிரியோஸின் நினைவு தான் முதலில் வரும் நிலை இன்றும் இருந்து வருகிறது.
இனியும் ஆழமாகப் பயணிப்போம்....
Subscribe to:
Posts (Atom)