தாலி கட்டுவது தமிழ் இந்துக்களின் வழக்கம் என்று விக்கிபீடீயாவில் எழுதப்பட்டுள்ளது. இதுவே பெரும்பாலானவர்களுடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது.
ஆனால், தமிழரல்லாத திராவிட இந்துக்கள் அனைவரிடமும் இப்பழக்கம் இல்லை என்பதை நான் அறிவேன்.
உதாரணமாக, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநில திராவிடர் இந்துகள் பெரும்பாலும் ஐம்படைத்தாலி எனும் பாரம்பரியம் இல்லாதவர்கள்.
சரி, திராவிடர்களை விட்டுவிடுவோம். ஆரியர்கள் அனைவருமே தாலிகட்டும் வழக்கம் உடையவர்களா?
இவர்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ளனர். ஆனால், தமிழர் கலாச்சாரத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஆரியர்கள் மட்டுமே இந்த வழக்கத்தை மதித்து பின் பற்றுகிறார்கள்.
தமிழருடைய பாரம்பரிய வழக்கத்தை திராவிடர்களுடையது என்றும் இந்து மதத்திற்கு சொந்தமானது என்றும் மாறி மாறி சொல்லிக்கொண்டிருப்பதன் நோக்கம் என்ன? (ஏற்கெனவே அறுத்தது போதாதா?).
தாலிகட்டுவது தமிழர் பண்பாடா? தருவிக்கப்பட்டதா?
திரு.ஜெயமோகன்...
தாலம் என்றால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இலை என்று தான் முதற் பொருள். ஆனால் வடமொழியில் அதற்கு வேர்ச்சொல் இல்லை. வேர்ச்சொல் இருப்பது தமிழில்.
ஆகவே அது இங்கிருந்துபோன சொல். ‘தால்’ என்றால் இலை என்பதுடன் நாக்கு என்றும் பழந்தமிழ் மொழியில் பொருள் உள்ளது.
இலையை மரத்தின் நாக்குகளாகக் கண்ட ஒரு தொல்குடியின் விழியே மொழியாக ஆனதா அது?
அந்த வேர்ச்சொல்லில் இருந்து கற்பனையும் நடைமுறையும் கலந்து பல ஆயிரம் வருடங்களாக சொற்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன.
இலையே உண்கலமாக ஆனதனால் தாலம் என்பது உண்கலம் என்று பொருள் பெற்றது.
பின்னர் தட்டுக்கு தாலமென்று பொருள் வந்தது. அதன்பின் தாம்பாளத்துக்கு தாலம் என்று பொருளாகியது.
மலையாளத்தில் இன்றுள்ள நடைமுறை வழக்கிலும் தாலம் என்றால் தட்டுதான். தமிழ்நாட்டில் இன்று சில பகுதிகளில் வெற்றிலைத்தட்டு தாலம் என்று சொல்லப்படுகிறது.
எப்போதோ ஒரு கட்டத்தில் பூமியின் மாபெரும் வட்டவிரிவுக்கும் தாலம் என்றே பொருள் வந்தது.
இலைபோல் அகன்ற யானையின் காதுக்கும் தாலம் என்றுபெயர்.
பின்னர் குறிப்பாக பனையோலைக்கு தாலம் என்றபெயர் புழங்கலாயிற்று. தாலகி என்றால் பனையிலிருந்து வடிக்கும் கள். தாலத்திலிருந்து வந்ததே தாலி.
மணமகன் மணமகள் கழுத்தில் கட்டும் தாலி என்பது ஒரு பனையோலைச் சுருள்தான்.
இளம்பனையின் ஓலை நறுக்கில் காப்பு மந்திரத்தை எழுதி அதில் சுண்ணமும் மஞ்சளும் கலந்து பூசி இறுக்கமாகச் சுருட்டி மஞ்சள் நூலால் இறுகச் சுற்றிக்கட்டி மஞ்சள்சரடில் கோர்த்து கட்டுவார்கள்.
ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் வரைகூட அந்த தாலி குமரிமாவட்டத்தில் புழக்கத்தில் இருந்து நான் கண்டிருக்கிறேன்.
(திரு.ஜெயமோகன், http://www.jeyamohan.in/514#.VSFHVtKUdJA)
பண்டையகாலத்தில், தாலிப்பனையின் ஓலைகளை சுருட்டி, நூலினால் கட்டி, கழுத்தில் அணியும் வழக்கம் இருந்தது. இதனால் கழுத்தில் அணியப்படும் அணிகலனுக்கு தாலி என்று பெயர் வந்தது.
சங்க காலத்திற்கு முன்னரே, திருமணமாகத ஆண்பிள்ளைகள், தாம் வேட்டையாடிய புலியின் கோரைப்பற்கள் இரண்டையும் கோர்த்து தாலியாக அணிந்திருந்தனர்..
அதை தாம் ஏற்றுக்கொள்ளும் பெண்சாதியின் கழுத்தில் அணிவித்து கௌரவித்தனர்..
தனது கணவன் ஒரு புலிக்கு நிகரான வீரன் என்கிற பெருமையுடன் அதை பெண்சாதியினர் அணிந்திருந்தனர்..
(புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண்களும் அதே சங்ககாலத்தை சேர்ந்தவர்களே).
அதற்கு மஞ்கள் பூசியணியும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது என்பதற்கு சான்றாக, அல்லூர் நன்முல்லையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் 67 இருக்கிறது.
மகளிர் அணிந்திருந்த தாலியானது வேப்பம்பழம் போன்ற அழகுடன் இருந்ததாகவும், அது புதுநாண் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
குறுந்தொகை 386ல் வெள்ளிவீதியார், தாலி அணிந்த பெண்களை வாலிழைமகளிர் என்று குறிப்பிடுகிறார். மாங்களியம், மங்கலியம், மங்கலவணி போன்ற தூய தமிழ்ச்சொற்களால் தாலியானது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றளவும், அதே புலிப்பல் சின்னமானது பொன்னினால் செய்விக்கப்பட்டு அணிவிக்கப்படுகிறது.
இத்தகைய வீரவரலாறு உலகில் தமிழினத்தை தவிர வேறெந்த இனத்திற்கு இருக்க முடியும்?
இந்த வரலாற்று உண்மையை அழிக்கவே தாலி அறுப்பு நிகழ்ச்சி நடத்துகிறார்கள் திருட்டு திராவிடர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.