10/04/2018

தமிழன்கிட்டயே வா...


சென்னை சேப்பாக்கத்தை கதற விடும் தமிழர்கள்...


அடுத்த ஆட்டம் தயார்...


அத்தனை கெடுபிடியை மீறி.. தங்கள் எதிர்ப்பை காட்டிய தமிழர்கள்...


அத்தனை கெடுபிடியை மீறி.. தங்கள் எதிர்ப்பை காட்டிய தமிழர்கள்...


அத்தனை கெடுபிடியை மீறி.. தங்கள் எதிர்ப்பை காட்டிய தமிழர்கள்...


இந்த செருப்படி வேணுமாடா. மூடிட்டு ஓட்டல்லயே இருக்க வேண்டியது தான?


பாலா என்றும் பாலா தான்...


சென்னையில் ஐ.பி.எல் - சேப்பாக்கம் மைதானம் உள்ளே தற்போதிய சூழ்நிலை....



இந்தா ஆரம்பிச்சாச்சுல...


கவுன்டவுன் ஸ்டார்ட்...


சோ மச் எல்லோவாம் நம்பிட்டோம் போங்க தம்பி...



நாங்க யாருக்கு பயம் காட்டனும்னு நெனச்சமோ அவங்களுக்கு காட்டிட்டோம்.. நீங்க (ஐபிஎல்) தவிர்க்க முடியாத சேதாரம் அவ்ளோதான்.. இனிமே தான் எங்க ஆட்டமே...

ஸ்டேடியம் உங்க கண்ட்ரோல்.. மெரினா எங்க கண்ட்ரோல்...


நாளைக்கு ஸ்கூல் காலேஜ் எல்லாம் லீவு...

எல்லாரும் உடனே மெரினாவுக்கு வா.. கெத்து காட்டுவோம் இன்னைக்கி...

ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் பதவி விலகு...


தமிழகத்தில் கிரிக்கெட்க்கு ஊஊஊ... தமிழன் விழித்துக் கொண்டான்...


மக்கள் விரோதத்துறை தன் வேலையை ஆரம்பித்து விட்டது... உஷார்...


குமுதா ஐபிஎல் கூட்டம் சும்மா அள்ளுது...




கேளரி முழுக்க தேன்கூடா தான் இருக்கும்.. கொளுத்திராதிங்க...


கெட்ட பசங்கடா இந்த தமிழர்கள்...


ரியல் ஐபிஎல் ஆரம்பம்...


சென்னையை மிரள செய்த தமிழர் படை.. இன்னும் வந்துகிட்டே இருக்கும்...


டேய்... யாருகிட்ட?


Ipl பார்க்க, செல்போன் கொண்டு போககூடாது, ஆடை கட்டுப்பாடு, வாகன கட்டுப்பாடு உட்பட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். நீ அங்க போகப்போறியா?


இல்லை எந்த கட்டுப்பாடும் இல்லாம நீ நீயாவே வந்து உனக்காகவும், இந்த இனத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும், உன் வருங்கால தலைமுறைக்காகவும் போராடுன்னு சொல்ற எங்க கூட வர்றீயா?

உனக்காக பல தலைமுறைகள் காத்துக்கொண்டுஇருக்கிறது.
முடிவு உன் கையில் இளைஞனே...

அட இது புதுசா இருக்கே...


நெய்வேலி மின்சாரத் தடுப்புப் போராட்ட வரலாறு...


காவிரித் தடுக்கும் கன்னடனுக்கு தமிழ்நாட்டின் நெய்வேலி மின்சாரத்தை அனுப்பக் கூடாது என்று தமிழ்நாடெங்கும் இன்று குரல்கள் கேட்கின்றன. அக்கோரிக்கையின் சுருக்கமான வரலாறு இது..

தமிழ்நாட்டின் நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து கர்நாடகத்துக்கு மின்சாரம் செல்லும் செய்தியை உலகிற்கு முதன் முதலில் அறிவித்தப் போராட்டம் 17.07.1991 அன்று, ஊடகங்களுக்கோ, காவல்துறைக்கோ எவ்வித அறிவிப்பும் இன்றி - தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி) தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில் -  நெய்வேலி அனல் மின் நிலைய நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து 26 விவசாயத் தோழர்கள் நடத்திய போராட்டமாகும்! கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட 26 தோழர்களும் பின்னர் பிணையில் வெளி வந்தனர்.

அதன்பிறகு, 22.12.2003 அன்று தோழர் பெ. மணியரசன் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கம், தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், தோழர் பொழிலன் தலைமையிலான தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தோழர் அ.கோ. கஸ்தூரிரங்கன் தலைமையிலான தமிழர் தன்மானப் பேரவை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து “தமிழ்த்தேசிய முன்னணி” என்ற கூட்டமைப்பின் சார்பில் 2003 திசம்பரில் கல்லணையிலிருந்து நெய்வேலி வரை நடைப்பயணம் மேற்கொண்டு நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் 272 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இயற்கை வேளாண் அறிவியலாளர் - ஐயா கோ. நம்மாழ்வார் இந்நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

2012இல் தமிழ்நாடு கடும் மின்வெட்டை சுமந்து வந்த நிலையில், 21.02.2012 அன்று தமிழ்நாடெங்கும் நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கே கேட்டு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 10.08.2012 அன்று நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமையகத்தை தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில் முற்றுகையிட்ட 300க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். 18.10.2012 அன்று கிருட்டிணகிரி மாவட்டம் - சூளகிரியில் நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு பிரித்து அனுப்பும் மின் நிலையத்தை வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் 56 பேர் முற்றுகையிட்டுக் கைது செய்தனர்.
அதன்பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கே கேட்டு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து, 25.12.2012 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவே நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கு கேட்டு இந்தியத் தலைமையமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.

இப்போது, மீண்டும் இன்று (10.04.2018) நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு அனுப்பாதே என்ற கோரிக்கையுடனும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்தும் நெய்வேலி முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக இதை காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.

தமிழர் தேசிய முன்னணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, மனித நேய சனநாயகக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, எஸ்.டி.பி.ஐ., மே பதினேழு இயக்கம், தமிழக மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் பங்கேற்கின்றனர். நீங்களும் வாருங்கள்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்...

தற்போது ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட்டை மாணவர்கள் தன்னிச்சையாக முற்றுகையிட்டு வாகனங்களிடம் சுங்கவரி வசூல் செய்யாமல் அனுப்பி வைக்கின்றனர்...


நீங்க யாருடா எங்களை விடுறதுக்கு... நாங்க உங்களை உள்ளே விட்டா தானே டா...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ச.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ச.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தீக்குளிக்க முயன்ற தொண்டரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

அரசாங்கத்தை நாமும் திசை திருப்பலாம்...


ஆந்திராவை தமிழ்நாடு மாதிரி நெனச்சீங்களா? இல்ல என்னைத்தான் எடப்பாடினு நெனச்சீங்களா? பாஜகவை பந்தாடிய சந்திரபாபு நாயுடு...


தமிழகத்தில் நாடகம் நடத்துவதுபோல், பாஜகவால் ஆந்திராவில் நடத்த முடியவில்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த தெலுங்குதேசம் கட்சி, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய பாஜக அரசு அலட்சியம் காட்டியதால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தற்போது கடுமையாக எதிர்த்துவருகிறது.

அண்மையில் ஜனசேனா கட்சியின் ஆண்டுவிழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் மீது சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார்.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, என் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை ஆசிர்வாதமாகவே பார்க்கிறேன்.

ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் என் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்த குற்றசாட்டுகளை அவராக முன்வைக்கவில்லை. அவர் பேசியிருப்பது அவரது சொந்த பேச்சு அல்ல. டெல்லியில் இருந்து பாஜக எழுதிக்கொடுத்த உரையைத்தான் அவர் படித்து இருக்கிறார். பவன் கல்யாணின் அனைத்து குற்றச்சாட்டுகளின் பின்புலத்தில், பாஜக இருக்கிறது.

தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல் ஆந்திராவில் நடத்த நினைக்கிறது. அதுபோன்ற நாடகத்தை ஆந்திராவில் நடத்த முடியவில்லை என விமர்சித்தார்.

தமிழகத்தை பாஜக மறைமுகமாக ஆட்சி செய்கிறது எனவும் மத்திய பாஜக அரசின் எண்ணங்களுக்கும் உத்தரவுக்கும் ஏற்ற வகையில்தான் முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுகிறது என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக எதிர்க்கட்சிகளை கடந்து தற்போது அப்படியான விமர்சனத்தை அண்டை மாநிலமான ஆந்திர முதல்வரே முன்வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் மீதான ஆந்திர முதல்வரின் மதிப்பீட்டையும் அவரது இந்த பேச்சு வெளிச்சம் போட்டு காட்டுகிறது...

சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு...


இது காவிரி விவகாரம் தொடப்பாக பாஜக கைகூலி உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்கிய 15/02/2018 தீர்ப்பின் நகல்...


தனது தீர்ப்பிலேயே Scheme என்றால் என்ன என்பதை தீர்ப்பின் 355 வது பக்கத்தில் Mechanism என்று நடைமுறைபடுத்தும் வழிகாட்டுதலை காவிரி மேலாண்மை வாரியம் அதாவது Cauvery Management Board(CMB) என தெளிவாக குறிப்பிட்டு பக்ராநங்கல் அணைக்கட்டில் உபயோகபடுத்துவதை உதாரணமும் காட்டியுள்ளது.
 
எழுத்துக்கூட்டி படித்தால் கூட LKG குழந்தை கூட தெரிந்து கொள்ளும் இது அறிவுஜீவி IAS களை கொண்டு இயங்கும் மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு 60 நாளாய் தெரியாதது ஏன்?

தான் எழுதியதீர்ப்பில் இந்த வார்த்தை உள்ளது எனத்தெரிந்தும் ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி Scheme என்றால் காவிரிமேலாண்மை வாரியம் என்று பொருளல்ல !என்று உண்மைக்கு புறம்பாக பேசுவது ஏன்?

எல்லாவற்றையும் விட தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று வாதிடுபவர்கள் கூட இந்த பக்கத்தை மேற்கோள் காட்ட தவறியது ஏன்?

என்சிற்றறிவுக்கு எட்டிய சில அனுமானங்கள்...

1.இன்னும் சிலவருடங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க படாது.

2.கர்நாடகாவே தண்ணீர் தருவதாக இருந்தாலும் மத்திய அரசு தருவதற்கு அனுமதிக்காது.

3.காவிரி ஆற்றுநீர் உரிமை படிப்படியாக தனியார்வசம் ஒப்படைக்க படும். தற்போதைய காவிரி நீர் கர்நாடகா விவசாயிகளுக்கு சிறிது மட்டும் வழங்கபடும்.

(தமிழருக்கு எதிராக போராட ஆள் வேண்டுமே) தனியார் தொழிற்சாலைகளுக்கே அதிகம் வழங்கபடும். பிறகு எதற்கு தீர்ப்பு என்கிறீர்களா?

காவிரி டெல்டா மொத்தமும் தரிசாக்கபட்டு அரசால் கையகபடுத்த பட்டு சேலம் தர்மபுரி மாவட்டங்களில் பிளாட்டினம் இரும்பு போன்ற கனிமவளங்களை கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்கும்  தஞ்சை திருச்சி திருவாரூர் நாகை மாவட்டங்களில்  மீத்தேன் ஹைட்ரொக் கார்பன்  குறிப்பாக நிலக்கரி தோண்டபட்டு அந்த தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவைக்காக தண்ணீர் தேவைபடும் போது இந்த தீர்ப்பு அமல்படுத்த படும்.

எனவே இந்த தீர்ப்பு நமக்கானதல்ல! நாம் போராடி கொண்டு வரப்போகும்
காவிரி மேலாண்மை வாரியமும் நமக்கானதல்ல. இனி காவிரியும் நமக்கானதல்ல.

பன்னாட்டு நரிகளுக்கே இனி காவிரி சொந்தம்.

அரிமாக்கள் முழங்காத காட்டில் நரிகள் தான் ஊளையிடும்.
நரிக்கு நாட்டாண்மை தந்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்...

-தோழமையுடன்
பேரளம் பிரகாஷ்...

இங்கே இருக்கிற ஆகச்சிறந்த பிரச்சனை...


நீங்கள் உங்கள் வாழ்க்கையே பணம் என்ற மாயை உடன் இணைத்து விட்டீர்கள், அதன் வெளிப்பாடுதான் இந்த அமைப்பை நீங்கள் எதிர்த்து பேசாமல் இருப்பது..

அவர்களும் உங்களின் மன ஒட்டம் கருதி அந்த அமைப்பை வலுவாக அமைத்து விட்டனர்..

இயற்கையோடு தற்சார்பு வாழ்க்கையை யோசித்து பாருங்கள் உவனின் பயணத்தில் முதல் பார்வை புலப்படும்...

நம் எதிர்காலத்தை உருவாக்க ஒவ்வொரு தமிழனும் எழுந்து வா...


ஸ்கீம் என்றால் என்ன அர்த்தம் என்பது மத்திய அரசிற்கு தெரியும் தெரியாமல் இருக்காது.. மே 3 ஆம் தேதிக்குள் எங்கள் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான வரைவை சமர்பிக்கவும் - மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு...


உத்தரவை நீங்கள் நடைமுறைப்படுத்தியாக வேண்டும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லை , நாங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அதை செயல்படுத்தாமல் இருந்து விட்டு கடைசி நேரத்தில் விளக்கம் கேட்பதா - உச்ச நீதிமன்றம் கண்டனம்..

இரண்டு மாநிலங்களும் அமைதிகாக்குமாறும்  உச்ச நீதிமன்றம் வேண்டுகோள்...

தொடர்ந்து தமிழர்களை மிரட்டி வரும் தமிழான துரோகி பாஜக தமிழிசை...


உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு...


ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம்....

இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராச(ஜ)ன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலச்சாரம் விவரிக்கின்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த வணிகப் பெருநகரமாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் இவ்வூர் கொடுமணம் என்றழைக்கப்படுகிறது.

சங்ககாலத்தில் அரிய கற்களால் ஆன அணிகலங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக விளங்கியிருந்ததை “கொடுமணம் பட்ட ...... நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) எனக் சங்கப் புலவர் கபிலரும், “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” (பதிற்றுப்பத்து 74) என அரிசில்கிழாரும் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது.

இவ்வூர் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், அவர்களது சிறப்புப் பெற்ற மேலைக் கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது. இப்பெருவழி பிற்காலக் கல்வெட்டுக்களில் “கொங்கப் பெருவழி” என அழைக்கப்படுவதன் மூலமும், இப்பெருவழியில் ஏராளமான வெள்ளி மற்றும் தங்க ரோம நாணயங்கள் கத்தாங்கண்ணி, சூலூர், வெள்ளலூர், வேலந்தாவளம் போன்ற இடங்களில் கிடைத்ததன் மூலமும் இது உறுதிபடுத்தப்படுகிறது.

15 கெ(ஹெ)க்டேர் (Hectares) பரப்பளவு உள்ள வாழ்விடப்பகுதியில் 9 அகழாவுக் குழிகளும், 40 கெக்டேர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில் ஒரு ஈமச்சின்னமும் அகழப்பட்டன. இவ்வகழாய்வில் வெளிப் போந்த பண்பாட்டு எச்சங்கள் இவ்வூர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாவுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற் கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர நெசவுத் தொழில் செழிப்புற்றிருந்ததை நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத் தொழில் சிறப்புற்று இருந்தமையை இங்கு கிடைத்த சங்கு வளையல்கள், கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகின்றது. யானை தந்தத்தால் ஆன அணிகலங்களும் இங்கு கிடைத்துள்ளன.

இத் தொழிற் கூடங்கள் குறிப்பாக பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, கார்னீலியன், இரத்தினக் கல் வகை (agate), செவ்வந்திக் கல் (amethyst) போன்ற அரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற் கூடம் அதன் பல்வேறு படிநிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இந்த ஆண்டு அகழாய்வின் சிறப்பம்சமாகும்.

இத் தொழிற் கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் இங்கு நின்று நிலைத்துள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலங்களை பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் வந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியில் இருந்து வணிகர்களும், கைவினஞர்களும் இங்கு வந்துள்ளதை தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட் பெயர்களும், வணிகர் பெயர்களும் ஊறுதிபடுத்துகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக கங்கைச் சமவெளிப் பகுதி பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள் கங்கைச் சமவெளிப்பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டுக்கும் கி.மு 2 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம் மட்பாண்டம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்.

இக்காலத்தை மேலும் உறுதி படுத்தும் வகையில் அறிவியல் சார்ந்த கரியமிலக் காலக் கணிப்புக்காக அமெரிக்காவில் உள்ள காலக்கணிப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு கொடுமணலின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டது. இக்காலக்கணிப்பு இங்கு கிடைத்த ஐநூற்றிக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளுக்கும் பொருந்தும்.

அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தை கி.மு. 5 ம் நூற்றாண்டு எனலாம். அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், ஸ்ந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவெ எழுத்தறிவு பெற்று மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இச்சான்றுகள் உறுதிபடுத்துகின்றன.

எனவே கொடுமணல் என்ற இச்சிற்றூர் சங்ககாலத்தில் மிகச் சிறந்த தொழிற் கூடங்களைக் கொண்ட தொழில் நகரமாக, உள்நாட்டு, வெளிநாட்டு வணிக உறவுகளைக் கொண்ட வணிக நகரமாக, எழுத்தறிவு பெற்ற நகரமாக சமூக, பொருளாதார நிலையில் மேம்பட்ட சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இவ்வகழாய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்ட சான்றுகள் மூலம் உய்த்துணர முடிகிறது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய சிபிஐ இணையதளம் முடக்கம்...


ஆழ்மன எண்ணங்கள்...


ரஷிய மருத்துவரும் ஆழ்மன ஆரார்ய்ச்சியாளருமான லியோனிட் லியோனிடோவிச் வாசிலிவ் (1891-1966) என்பவர் சர்வாதிகாரி ஸ்டாலினை ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி கேட்டு அணுகினார்.

கம்யூனிஸ்டான ஸ்டாலினுக்கு இந்த ஆழ்மன சக்திகளில் சுத்தமாக நம்பிக்கை இருக்கவில்லை.

தன்னிடம் உள்ள சக்தியை நிரூபிக்க ஸ்டாலினை அவருடைய பாதுகாப்பு வளையத்தையும் மீறி, அவருடைய தனியறையில் ஒரு குறிப்பிட்ட நாள் இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திப்பதாக வாசிலிவ் சொன்ன போது, ஸ்டாலினுக்கு சிரிப்பு தான் வந்தது.

அப்படி வந்தால் கண்டிப்பாக அவர் விருப்பப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தருவதாக ஸ்டாலின் உறுதியளித்தார்.

உடனடியாக தன் பாதுகாவலர்களை அழைத்து வாசிலிவ் பற்றிச் சொல்லி எக்காரணத்தைக் கொண்டும் அவரை தன்னை வந்து சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று சொல்லிய ஸ்டாலின் பின் அந்த விஷயத்தையே மறந்தார்.

வாசிலிவ் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இரவு நேரத்தில் அவரது தனியறையில் வந்து நின்ற போது, ஸ்டாலினுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. உடனடியாக வெளியே நின்றிருந்த தன் பாதுகாவலர்களை அழைத்த வாசிலிவைக் காட்டி தன் கட்டளையை மீறி அவரை உள்ளே விட்டது ஏன் என்று ஸ்டாலின் கேட்டார். மிரண்டு போன பாதுகாவலர்கள் அவரைத் தாங்கள் பார்க்கவேயில்லை என்று சாதித்தனர்.

கோபத்தின் உச்சிக்கே போன ஸ்டாலின் அவர்களுக்கு அந்த இடத்திலேயே மரண தண்டனை விதித்து ஆணையிட, வாசிலிவ் இடைமறித்து தவறு அவர்களிடத்தில் இல்லையென்று சொன்னார்.

ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான ஆலோசகர் ஒருவருடைய உருவத்தை பாதுகாவலர்கள் மனதில் ஏற்படுத்தி தான் அவர்களைக் கடந்து வந்ததாக வாசிலிவ் சொன்னார்.

விசாரித்த போது பாதுகாவலர்கள் அனைவரும் அந்த ஆலோசகரைப் பார்த்ததாக ஒருமித்து சொன்னார்கள். வியப்புற்ற ஸ்டாலின் மரண தண்டனையை விலக்கிக் கொண்டார்.

ஆனாலும் இந்த மனோசக்தி ஸ்டாலினைக் குழம்ப வைத்தது. ஆராய்ச்சிக் கூடம் அமைக்க அனுமதி தந்த ஸ்டாலின் வாசிலிவை இன்னொரு அதிசயத்தைச் செய்து காட்டச் சொன்னார். ஒப்புக் கொண்ட வாசிலிவ் ஸ்டாலினுக்கு நம்பகமான இருவரைத் தன்னுடன் ஒரு வங்கிக்கு அனுப்பச் சொன்னார். உடனடியாகத் தன் ஒற்றர் படையில் இருவரைத் தேர்ந்தெடுத்து ஸ்டாலின் அவருடன் அவர்களை அனுப்பி வைத்தார்.

வங்கிக்குச் சென்ற வாசிலிவ் ஒரு வெள்ளைக் காகிதத்தை வங்கி கேஷியரிடம் தந்து, அதற்கு ஆயிரம் ரூபிள்கள் தரச் சொன்னார். அதை வாங்கிய கேஷியர் மனதில் வாசிலிவ், அது ஆயிரம் ரூபிளுக்கான வங்கிக் காசோலை என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர். அந்தக் கேஷியர் அதை வாங்கிப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் ஆயிரம் ரூபிள்களை எண்ணி அவரிடம் தந்ததை ஸ்டாலினின் ஒற்றர்கள் விழிகள் பிதுங்கப் பார்த்தனர்.

பின், அந்தக் கேஷியரிடம் மீண்டும் அந்தப் பணத்தைத் தந்த வாசிலிவ் அந்தக் காகிதத்தை இன்னொரு முறை பார்க்கச் சொல்ல, வெள்ளைக் காகிதத்தைப் பார்த்த வங்கி கேஷியர் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபிள்கள் என்பது மிகப் பெரிய தொகை.

இறுதியில் ஸ்டாலின் உறுதியளித்தபடி ஆழ்மன ஆராய்ச்சிக் கூடத்தை லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் நிறுவ அனுமதியளித்தார். நாட்டு விஷயங்களிலும், தனிப்பட்ட அரசியல் விஷயங்களிலும் கூட ஸ்டாலின் வாசிலிவின் சக்தியினைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லப்பட்டாலும், அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

எல்லா சர்வாதிகாரிகளுக்கும் இருக்கக்கூடிய சந்தேகமும், பயமும் ஸ்டாலினுக்கும் இருந்ததால் அவர் அவ்வபோது அந்த ஆராய்ச்சிகளுக்குக் காட்டிய உற்சாகத்தைக் குறைத்துக் கொண்டார். அரசியல் கலக்காத மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சிகள் பற்றிய விவரம் கூட வெளிவருவதை ஏனோ அவர் விரும்பவில்லை. அதனால் 1920, 1930களில் வாசிலிவ் மனோசக்தி குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து வெற்றி கண்ட விவரங்கள் 1960 கழிந்து ஸ்டாலின் மறைவிற்குப் பின் தான் வெளிவந்தன.

ஆரம்பத்தில் ஆழ்ந்த ஹிப்னாடிச மயக்கத்தில் சோதனையாளர்களை ஆழ்த்தி தான் சொன்னபடி அவர்களை செயல்படுத்த வைத்த வாசிலிவ் பின் வாய் விட்டு சொல்லாமலேயே நினைத்தவுடன் அது போல் நடந்து கொள்ள வைப்பதில் வெற்றி கண்டார். “வலது கையை அசை. இடது காலைத் தூக்கு. இப்போதே உறங்க ஆரம்பி. விழித்துக் கொள்” என்பது போன்ற கட்டளைகள் அவர் மனதில் எழுந்தவுடன் ஹிப்னாடிச நிலையில் இருந்த சோதனையாளர்கள் தங்களை அறியாமல் அதை செய்தார்கள். அந்த ஹிப்னாடிச உறக்கத்தில் பல நோயாளிகளை அவர் குணப்படுத்தியும் காட்டினார்.

அடுத்த கட்டமாக சோதனையாளர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் மிகச் சுலபமாக இதை நடத்திக் காட்ட முடியும் என்று நம்பிய வாசிலிவ் அதை நிரூபித்தும் காட்டினார்.

செவஸ்டோபோல் என்ற நகரம் லெனின்கிராடிலிருந்து சுமார் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருந்தது. அங்குள்ள ஒரு ஆராய்ச்சிக் கூடத்திற்கு இன்னொரு ஆராய்ச்சியாளரான டொமாஷெவ்ஸ்கீ என்பவரை அனுப்பி ஒரு குறிப்பிட்ட நேரத்தினை முன் கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நேரத்தில் இந்த மனோசக்தி பரிசோதனைகளை நடத்தி எண்ணங்களின் சக்தியை அனுப்பவோ, பெறவோ, தூரம் ஒரு தடை அல்ல என்று கண்டுபிடித்தார். ஒரு நாள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் லெனின்கிராடு ஆராய்ச்சிக் கூடத்தில் எந்த ஒரு பதிவும் பதியாததைப் பார்த்த வாசிலிவ் பிறகு செவஸ்டோபோல் ஆராய்ச்சிக் கூடத்தை தொடர்பு கொண்ட போது டொமாஷெவ்ஸ்கீயிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் எந்த சோதனையும் அன்று செய்யவில்லை என்பது தெரிந்தது.

எண்ண அலைகளின் சக்தி எப்படியெல்லாம் வெற்றி பெறுகிறது என்பதைக் கண்ட வாசிலிவ் அந்த எண்ண அலைகளில் காந்தத் தன்மை இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டு இரும்புச் சுவர்கள் கொண்ட அறையில் சோதனையாளர்களை அமர வைத்து பரிசோதனைகள் செய்து பார்த்தார். அந்த ஆராய்ச்சிக் கூட பரிசோதனைக் கருவிகள் எந்தக் காந்த சக்தியும் அந்த இரும்புச் சுவரை ஊடுருவுவதையும் கண்டு பிடிக்கவில்லை.

எந்த பரிசோதனைக் கருவியிலும் பரிசோதிக்க முடியாத, ஆனால் எல்லையில்லாத சக்திகள் கொண்ட ஆழ்மன எண்ணங்கள் செய்ய முடிகின்ற அற்புதங்கள் தான் எத்தனை என்று தோன்றுகிறதல்லவா?

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் தமிழர்கள் போராட்டம்...


கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது...


இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும்.

அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும் என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது.

அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’ என்றும் பெயர் உண்டு.

அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர்.

கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது...

இந்தியாவின் திருட்டு அரசியல்...


நகங்களை வைத்து நோய்களை அறியலாம்...


உடலில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்த மட்டும் தான் இருக்கின்றன என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு.

சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர்.

மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம்.

ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும்.

நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலம் நகத்தில் தெரிந்துவிடும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இப்போது என்னென்ன நிறத்தில் இருந்தால் என்னென்ன பிரச்சனை என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் அறிகுறிகளை கண்டறிய...
நகங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது.

நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி சிவப்பாக இருந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் நகங்களானது இருக்கும்.

நகங்கள் வெளுத்து குழியாக இருந்தால், இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருக்கும்.

மேலும் நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருந்தால், நாள்பட்ட நுரையீரல், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும்.

நகங்கள் நீல நிறத்தில் இருந்தால் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் ஒன்றாக கலந்திருக்கிறது.

மேலும் இரத்தத்தில் போதிய அளவுக்கு ஓட்சிசன் இல்லாவிட்டாலும், ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். அவர்கள் அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச்சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். ஆகவே அவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன சின்னக் குழிகள் நகத்தில் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால், அது சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்.

நகத்தில் மஞ்சள் கோடுகள் இருந்தால், அதிகமாக புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து இருக்கலாம் அல்லது நகங்களுக்கு நெயில் பாலிஷ் தீட்டுவதாலும் ஏற்பட்டு இருக்கலாம்.

நகங்களில் எப்போதும் செய்யக் கூடியவை...

1. நகங்களை எப்போதும் நுனிப்பகுதிகளை சுத்தமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால், நகத்தை சுற்றி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.

2. நகங்களை பற்களால் கடிக்கக்கூடாது. நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே நகங்களை வெட்ட வேண்டும்.

3. சாப்பிட்டப்பிறகு கைகளை கழுவும் போது நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லையென்றால் நகங்களில் கிருமிகள் படிந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.

4. இரவில் தூங்கும் முன் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக கழுவி பின் தூங்க வேண்டும்.

5. நகங்கள் அழகாக இருக்க தினமும் காய் மற்றும் கனிகளை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் காய்கனிகளில் உள்ள சத்துக்கள் உடலில் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கும்.

ஆகவே நகங்களானது எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவு நமது உடலும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்...


முக்தியும் மனமும்...


ஆன்மாவாகிய நாம் முதல் பிறப்பில் இருந்து சேர்த்த எண்ணப் பதிவுகளே நம்மை மறுபிறவிக்கு அழைத்து செல்கிறது.

அதை நாம் மனதின் கர்மம் என்கிறோம். இந்த கர்ம வினைகளை ஒருகாலும் நாம் அழிக்கவே முடியாது.

பிரபஞ்சத்தின் உருவான தகவல் ஒரு போதும் அழியாது என தற்போது வாழும் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாங்கிங்கே ஒப்புக் கொண்டார்.

ஆம் நாம் தகவலை அழிக்கவே முடியாது. ஆனால் அந்த கர்மத்தில் இருந்து மனதை பிரிக்க முடியும்.

நாம் பற்றற்ற நிலையில் எல்லா ஆசைகளையும் துறந்தால் நம் ஆன்மா எண்ணப் பதிவுகளில் இருந்து படிப்படியாக விலகும்.

பாவம்-இரும்பு விலங்கிட்டும், புண்ணியம்- பொன் விலங்கிட்டும், நம்மை மறுபிறப்பிற்கு அழைத்து செல்லும்.

எனவே சித்த நிலைக்கு முயல்பவன் மனித வாசனைகள் அல்லாத காடுகளுக்கு சென்று குகைகளில் மறைந்து தனித்து வாழ்கிறான்.

இன்னும் சில உண்மைகளை நான் இங்கு சொன்னால் அது கசக்கும் என்பதால் வேண்டாம் என விட்டுவிட்டேன்...

தமிழின துரோகி பாஜக தமிழிசை கெழவிக்கு கட்டம் சரியில்ல...


அட இதை கவனிக்காம விட்டுடோமே...


ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கே இங்கிருந்து தான் நீர் செல்கிறது.. இதனை தடுத்தால்..? தெறிக்க விடும் தமிழர்கள்: அலறும் மத்திய அரசு...

ரயில்வேயின் துணை நிறுவனமான உணவு மற்றும் சுற்றுலா அமைப்பு செங்கல்பட்டு அருகே பாலூரில் ரயில் நீர் தொழிற்சாலையை இயக்கி வருகிறது.
பாலூரில் நாள் ஒன்றுக்கு 1.8 லட்சம் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன.

பாலூரை தொடர்ந்து பீகார் மாநிலம் தானாபாத், டெல்லி ஆகிய இடங்களில் ஐஆர்சிடிசியின் ரயில்நீர் தொழிற்சாலை அமைக்கப்பட்டன.

ஆனால், நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் ரயில்வேக்கு 30 லட்சம் ஒரு லிட்டர் பாட்டில் தேவைப்படுகிறது.

ரயில்வேயில் நூறு சதவீத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தனியார் பங்களிப்புடன புதிதாக 6 ரயில்நீர் தொழிற்சாலை தொடங்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலையில் மட்டும், நாள் ஒன்றுக்கு தலா 75,000 ஒரு லிட்டர் பாட்டில் தயாரிக்கப்படுகிறது.
இது இந்தியாவில் மூன்றாவது தொழிற்ச்சாலையாகும்.

தென்னிந்தியாவில் இந்த ஒரு தொழிற்சாலை மட்டும்தான் இருக்கிறது.

இந்த தொழிற்சாலை நிலத்தடி நீரை எடுத்து அதனை சுத்திகரித்து விற்பைனை செய்து வருகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் யாரெல்லாம் நமக்கு தண்ணிர் தர மாட்டோம்னு சொல்றாங்களோ, அவங்களுக்கெல்லாம் இங்க இருந்து தான் தண்ணீர் சப்பளை ஆகிறது.

தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடந்து வருவதால், நீர்நிலையை காக்க வேண்டி அப்பகுதி மக்களின் பார்வை இந்த தொழிற்சாலை மீது திரும்பியுள்ளது.

இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்...