தனது தீர்ப்பிலேயே Scheme என்றால் என்ன என்பதை தீர்ப்பின் 355 வது பக்கத்தில் Mechanism என்று நடைமுறைபடுத்தும் வழிகாட்டுதலை காவிரி மேலாண்மை வாரியம் அதாவது Cauvery Management Board(CMB) என தெளிவாக குறிப்பிட்டு பக்ராநங்கல் அணைக்கட்டில் உபயோகபடுத்துவதை உதாரணமும் காட்டியுள்ளது.
எழுத்துக்கூட்டி படித்தால் கூட LKG குழந்தை கூட தெரிந்து கொள்ளும் இது அறிவுஜீவி IAS களை கொண்டு இயங்கும் மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு 60 நாளாய் தெரியாதது ஏன்?
தான் எழுதியதீர்ப்பில் இந்த வார்த்தை உள்ளது எனத்தெரிந்தும் ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி Scheme என்றால் காவிரிமேலாண்மை வாரியம் என்று பொருளல்ல !என்று உண்மைக்கு புறம்பாக பேசுவது ஏன்?
எல்லாவற்றையும் விட தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று வாதிடுபவர்கள் கூட இந்த பக்கத்தை மேற்கோள் காட்ட தவறியது ஏன்?
என்சிற்றறிவுக்கு எட்டிய சில அனுமானங்கள்...
1.இன்னும் சிலவருடங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க படாது.
2.கர்நாடகாவே தண்ணீர் தருவதாக இருந்தாலும் மத்திய அரசு தருவதற்கு அனுமதிக்காது.
3.காவிரி ஆற்றுநீர் உரிமை படிப்படியாக தனியார்வசம் ஒப்படைக்க படும். தற்போதைய காவிரி நீர் கர்நாடகா விவசாயிகளுக்கு சிறிது மட்டும் வழங்கபடும்.
(தமிழருக்கு எதிராக போராட ஆள் வேண்டுமே) தனியார் தொழிற்சாலைகளுக்கே அதிகம் வழங்கபடும். பிறகு எதற்கு தீர்ப்பு என்கிறீர்களா?
காவிரி டெல்டா மொத்தமும் தரிசாக்கபட்டு அரசால் கையகபடுத்த பட்டு சேலம் தர்மபுரி மாவட்டங்களில் பிளாட்டினம் இரும்பு போன்ற கனிமவளங்களை கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்கும் தஞ்சை திருச்சி திருவாரூர் நாகை மாவட்டங்களில் மீத்தேன் ஹைட்ரொக் கார்பன் குறிப்பாக நிலக்கரி தோண்டபட்டு அந்த தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவைக்காக தண்ணீர் தேவைபடும் போது இந்த தீர்ப்பு அமல்படுத்த படும்.
எனவே இந்த தீர்ப்பு நமக்கானதல்ல! நாம் போராடி கொண்டு வரப்போகும்
காவிரி மேலாண்மை வாரியமும் நமக்கானதல்ல. இனி காவிரியும் நமக்கானதல்ல.
பன்னாட்டு நரிகளுக்கே இனி காவிரி சொந்தம்.
அரிமாக்கள் முழங்காத காட்டில் நரிகள் தான் ஊளையிடும்.
நரிக்கு நாட்டாண்மை தந்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்...
-தோழமையுடன்
பேரளம் பிரகாஷ்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.