24/05/2022
தமிழின எதிர்ப்புக்கொள்கை கொள்கை வகுப்பாளர் அரசியல் ஞான சூனியன்களின் தவறான வழிகாட்டுதலில் தவறிழைத்து தவறிப்போன அரசியல் ஞானசூனியம் - ராஜீவ் காந்தி...
வெளியுறவுத்துறையில், தீர்கதரிசி, தன்மான தமிழன் ஏ_பி_வெங்கடேசுவரன்,
இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்புவது மிகவும் தவறான செயலாக முடியும் அது இறுதியில் ஈழதமிழர்களுக்கு எதிராகவே அங்கு திரும்பும் நிலை ஏற்படுத்தபடும் என பிரதமர் ராஜீவை இறுதிவரை எச்சரித்தும் அவர் கோரிக்கை ஏற்கபடாததால் வெளியுறவுத் துறை செயலாளர் பதவியை தூக்கி எறிந்து ராஜூவ் காந்திக்கு தன் எதிர்ப்பை தெரிவித்தவர் தன்மானத் தமிழன் ஏ,பி.,வெங்கடேசுவரன்.
ஜெயவர்த்தனே அதிபராக இருந்த 1983 ஜூலையில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத குண்டர்கள் அந்நாட்டு ராணுவம் கூட்டாக சேர்ந்து நடத்திய இனப்படுகொலை
தமிழர் சொத்துகள் சூறையாடல் , யாழ் நூலகம் தீ வைப்பு என நடத்தபட்ட மிகப் பெரும் கொடுமைகண்டு,
தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆவேச கொந்தளிப்பு போராட்டங்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட
அன்றைய பிரதமர் #இந்திரா அவர்கள் முதலாவதாக செய்தது வெளியுறவு செயலாளராக இருந்த ஜி_பார்த்தசாரதியை விரைந்து கொழும்பு அனுப்பி கொலைவெறி ஆட்டம் போட்ட ஜெயவர்த்தனேவை எச்சரித்து அடக்கி உட்கார வைத்ததும்,
அதன்பிறகு போராளிகளுக்கு ஆயுதபயிற்சி அளிப்பது என முக்கிய கொள்கை முடிவுகளை
பிரதமர் இந்திரா எடுத்தார்,
அதன்பின் இந்திராகாந்தி ஈழத் தமிழர்கள் விவகாரத்தை ஏ_பி_வெங்கடேசுவரனை வைத்தே கையாண்டார். இதனால் கிழட்டு நரி #ஜெயவர்த்தனே அடங்கி கிடந்தது வரலாறு.
இந்திரா அவர்களின் படுகொலைக்கு பிறகு பிரதமராக வந்த #ராஜீவின் அனுபவமற்ற தன்மையால்
நரி ஜெயவர்த்தனே யின் வஞ்சக வலையில் விழுந்து, முதல் நிபந்தனையான ஏ,பி, வெங்கடேசுவரன் பேச்சுவார்த்தையில் விலக்கபட்டு,
ஜே_என்_தீட்சித், ரொமேஷ்_பண்டாரி, எம்_கே_நாராயணன் போன்ற தமிழர் இனத்திற்கு எதிரான மன நிலை கொண்டவர்களால் அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் ஈழத்தமிழர் விரும்பாத ஒன்றை திணித்து, அமைதிப்படையை அனுப்பி அது ஜெயவர்தனே வின் வஞ்சகத்தால் தமிழர்களுக்கு எதிராகவே மோதலுக்கு திருப்பபட்டது.
அதன் பின் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமே
மிகப்பெரும் தவறான அரசியல் கணிப்பு ஒப்பந்தம், அமைதிப்படை அனுப்பிய செயலே.
இதையெல்லாம் முன்கூட்டியே கணித்துஎதிர்ப்பு தெரிவித்து வெளியுறவு செயலர் பதவியை தூக்கி எறிந்து ராஜீவுக்கு பாடம் கற்பித்த
தமிழர் ஏ.பி. வெங்கடேசுவரன் அவர்கள் சேவை தமிழர் வரலாற்றில் என்றென்றும்
நன்றியுடன் நினைவு கூறப்படும்....