07/03/2018

தமிழின் சிறப்புணர்த்தும் அடை மொழிகள்...


1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்.

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்.

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்.

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்.

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம்
பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்.

6) அன்னைத்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் அன்னையாக விளங்கும் தமிழ்.

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு).

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது.

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது).

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும்
இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும்
இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச்
சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்).

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்.

13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்).

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்.

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் கற்க கற்க மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்.

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும், இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்.

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்.

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்.

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை,
கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது.

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்).

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்.

22) தனித்தமிழ்:- தன்னிகரில்லாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்.

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது.

24) தாய்த்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் தாயாக மூலமாக விளங்கும் தமிழ்.

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்.

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது.

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்.

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்.

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை).

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்.

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது.

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது.

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது.

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின்மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும்
பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது.

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப்
பொருளுணர்த்தும் உரிச்சொல் மா).

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்.

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்).

38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்து கொண்டே வரும் தமிழ்...

கிராமங்களை தேடி செல்வோம்.. தற்சார்பு வாழ்க்கை வாழ்வோம்..


இயற்கை மீட்சி பெறும்.. காடுகள் உருவாகும்...

அதிமுக அமைச்சர்களுக்கு தான் மானம் ரோசலாம் இல்லையே...


பாஜகவால் லெனின் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் பல அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றது...


பாஜக வெற்றியை தொடர்ந்து திரிபுரா மாநிலத்தில் பதட்டம்.. ஏவ விட்டு  வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு ? மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார்...

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என ஹெச் ராஜா பதிவிட்டுள்ளது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து அமைதியாக வாழும் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி விட்டு பாஜக குளிர் காய பார்க்கின்றது எனப் சமூக செயல்பாட்டாளர்களிடையே புகார் எழுந்துள்ளது.

ஒரு மாநிலத்தில் படுதோல்வி அடைந்து கூட்டணி கட்சியின் உதவியால் சொற்ப வித்தியாசத்தில் திரிபுராவில் வெற்றி பெற்றுள்ள பாஜக தம்பட்டம் அடிக்க கூடாது,  பாஜகவை எதிர்த்து திரிபுராவில் 45 சதவிகிதம் பேர் எதிர் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்றளவும் நோட்டாவை விட குறைவாக வாங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து கொண்டு ஹெச் ராஜா போன்றவர்கள் தம்பட்டம் அடிக்க எந்த முகாந்திரமும் இல்லை , என சமூக வலைதளத்தில் ஹெச் ராஜாவிற்கு பெரியாரிய செயல்பாட்டாளர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்...

காற்றுக்கு எத்தனை பெயர்கள்...


தமிழர்கள் காற்றினை வகைபடுத்திய விதம். திசை மற்றும் வேகம் போன்றவற்றை கொண்டு காற்றின் வகைகள்.

(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள

(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று..

(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று..

(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று..

(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று..

(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்...

(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று மென்காற்று..

(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல்..

(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று தென்றல்..

(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புழுதிக்காற்று..

(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று ஆடிக்காற்று..

(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று..

(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று..

(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று சூறாவளிக் காற்று...

தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே - புரட்சி கவிஞன் பாரதிதாசன்...


தமிழ் தந்த சிறப்பு நன்னூல்.. நன்னூல் தமிழுக்கு தந்த சிறப்பு...


இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்" எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது?

பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது ?

துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன்..

தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு, கழுத்து, தலை, மூக்கு, ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது.

இதை ஒலிக்க உதடு, நாக்கு, பல், அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ) அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது, அங்காத்தல் ( வாய் திறத்தல் ) , உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல், குவிதல், என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது..

அ,ஆ எனும் முதல் இரு எழுதும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு - வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது..

இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி,  வாய், அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் (பொருந்துதல்) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது...

உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன..

தமிழ் எழுத்துகளுக்கு எத்தனை சிறப்புக்கள் என்று பாருங்கள் ?

உலகில் வேறு ஏதாவது மொழிக்கு இந்த சிறப்பு உண்டா ?

இன்னும் என்ன தயக்கம் தமிழை பெருமையாய் பேச ?

தமிழரின் சாதனைத் தேடல் தொடரும்...

மராட்டிய ரஜினி யின் தமிழின அழிப்பு ஆரம்பம்...


முதுமையை போக்கி என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி...


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்...

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே..

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்...

தனிப்பட்ட விரோதம் காரணமாக நடக்கும் விடயங்களுக்கும், அதை மத ரீதியாக மாற்றி நடக்கும் விடயங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது...


உங்களின் தனிப்பட்ட செயல்களை மத ரீதியாக மாற்றுவதே அதிகார வர்க்கத்தின் செயலாகும்...

ஞானம்...


பிறப்பும், இறப்பும் சரி விகிதத்தில் இருக்கும் போது ஞானம் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக தான் இருக்கிறதே தவிர சரிவிகிதமாக இல்லையே.... ஏன் இந்த தாமதம்....?

ஞானம் தாமதிப்பதில்லை ஆனால், நாம் தான் தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

புத்தத் தன்மையை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், புத்தரைப் போல ஆக வேண்டும் எனபதில் தான் சிக்கல் இருக்கிறது.

ஞானத்தைப் பற்றிய ஏராளமான புனைக் கதைகளால் நாம் நிரபபப் பட்டிருக்கிறோம்.

அது தான் ஞானம் தெளிவதற்கு தடையாக இருக்கிறது.

ஞானிகள் அடைந்த பெயர், புகழ், நடை, உடை, பாவனை, அற்புதங்கள் செய்யும் திறன், இவைகளில் மட்டுமே பெரும்பாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.

மனமானது தந்திர உபயங்கள் நிரம்பியது. அதனால் தொடர்ந்து அது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்க முயற்சிக்கிறது.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளாகவே பதிலும் இருக்கிறது.

ஆனால், மனம் நுணுகி செல்லாமல் மேலோட்டமாகவே நின்று கொண்டு கேள்வி வந்த உடன் புறத்தில் கேட்டக் கற்றுக் கொண்டிருக்கிறது.

ஏனெனில், கேள்வி கேட்பதும் ஞானம் என்று சொல்லப்பட்டிருப்பதால் கேள்வியே ஞானம் என்று தவறான முடிவுக்கு வந்துவிடும் பழக்கமாகிவிட்டது.

மனதிற்குள் பதிலை தயார் நிலையில் வைத்துவிட்டு தான் கேள்வியானது புறத்தில் எழுகிறது.

ஆனால், மனம் நுணுகி செல்ல மறுப்பதால் புறத்தில் தேடிக்கொண்டிருக்கிறது.

பதிலை தெரிந்த பிறகு கேள்வியும், பதிலும் வேறு வேறாக இல்லாமல், இணைந்தே இருபது தெரிய வரும்.

அப்படி தெரிய விடாமல் செய்வது மனம் தான்.

எப்படி என்றால், மனம் ஏதோ ஒரு வழியில் அடையாளங்களை பிடித்து வைத்திருக்கிறது.

அந்த அடையாளங்களை வைத்துக்கொண்டு பதிலை தேட முயற்சிப்பதால் தான் பதில் கிடைத்தும் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னும் வேறு ஒருவரிடம் கேட்டால் தெளிவு பிறக்கும் என்று எண்ணி வாழ்க்கை முழுவது தேடுதலிலேயே அலைந்து கொண்டிருக்கிறது.

மனம் தேடுதலை முடித்துக் கொள்ள தயார் நிலையில் இருப்பதில்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகவும், அகலமாகவும் செல்லலாமே என்று சமாதானம் செய்து கொண்டு தன் தந்திரத்தை உயிர்பித்துக் கொள்கிறது.

இது புரியாமல் நாமும் மனதின் வழியே சென்று பயணித்து காலத்தால் விரக்தி நிலையை மனம் எய்துகிறது.

அதன்பின் ஞானம் குழப்பம் என்ற முத்திரையும் கொடுத்து விடுகிறோம்.

இது யார் தவறு.....?

மனதின் தவறா....?

இல்லை ஞானத்தின் தவறா..?

கார்பரேட் பொருட்களை வாங்காதீர்கள்...


தமிழக காவல்துறை எனும் ஏவல்துறை...


சென்னையில் முதல்வரை சந்தித்து 22 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சந்திக்க வந்தவர்களை அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் போராட்டம் நடத்திய மாற்று திராணாளிகள் அனைவரையும் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சிக்கு.. தமிழகத்தை பலியாக்கிறது... தமிழா விழித்துக்கொள்..


விவசாயிகள் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்...


உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் காவிரி மேலான்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் , பெற்று தர தவறும் தமிழக அரசையும் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்துகின்றனர்...

ஒட்டக்கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்..


இப்பழமொழிக்கு தற்போது கூறப்பட்டு வரும் பொருள் இதுதான்..

ஒட்டக்கூத்தன் என்னும் புலவனுக்கு மட்டும் இரண்டு தாழ்ப்பாள் போட்டாளாம் அரசி.

இக் கருத்தின் பின்னணியாக இணையத்தில் கூறப்பட்டு வரும் கதை என்னவெனில்...

கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் கட்டோட ஆகாது. மன்னன்கிட்ட ஒட்டக்கூத்தனுக்கு செல்வாக்கு. அரசிக்கோ கம்பன் கவிதையில் ஈடுபாடு. ஒரு நாள் அரசனிடம் அரசிக்கு ஊடல். ராணி உள்பக்கமா தாப்பா போட்டுகிட்டு தெறக்காமக் கோவமா இருக்கா. அரசன் ஒட்டக்கூத்தனக் கூப்பிட்டு எதாவது கவிதை சொல்லி ராணிய சரிக்கட்ட சொல்றான். ஒட்ட்க்கூத்தனும் போய் கவி பாடறான். உள்ளேந்து தாப்பா போடற சத்தம் கேக்குது. பின்னாடியே ராணியோட குரலும் வருது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் அப்பிடின்னு.

இது கட்டுக்கதை என்பதைப் படித்தாலே புரிந்து கொள்ளலாம். பழமொழியைத் தவறாகப் புரிந்துகொண்டு பொருள் கூறியதால் அதை சரிக்கட்ட ஒரு கதை தேவைப்படுகிறது.

இனி இப்பழமொழியின் உண்மையான நிலை என்ன என்று காணலாம்.

இப்பழமொழியின் உண்மையான வடிவம் இதுதான்...

ஒத்தக் கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். அது என்ன?

விடை: இந்த விடுமொழியில் வரும் கூத்தன் என்பது கூத்தாடும் இயல்புடைய நாக்கினைக் குறிப்பதாகும். தாழ்ப்பாள் என்பது உதட்டினைக் குறிப்பதாகும். இரண்டு தாழ்ப்பாள் என்பது மேலுதடு, கீழுதடு ஆகிய இரண்டையும் குறிப்பதாகும். ஒத்தையா ரெட்டையா என்ற சொல் வழக்கினைப் போல இந்த விடுமொழியானது

ஒத்தக் கூத்தனுக்கு (ஒரு நாக்குக்கு) இரட்டைத் தாழ்ப்பாள் (இரண்டு உதடுகள்) என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதே நாக்கையும் உதடுகளையும் விடைகளாகக் கொண்டு தான் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ' என்ற பழமொழியும் அமைந்துள்ளது...

சிரியாவில் மனித வேட்டை தொடர்துக் கொண்டு தான் இருக்கிறது...


தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி...


கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள்  தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழே குறிப்பிடுள்ள பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்..

பறவை சப்திக்கும் நேரம்...

கரிச்சான் குருவி - 3.00 மணி.
செம்போத்து         - 3.30 மணி.
குயில்                     - 4.00 மணி.
சேவல்                    - 4.30 மணி.
காகம்                     - 5.00 மணி.
மீன் கொத்தி         - 6.00 மணி..

தொப்பையை குறைக்க கொள்ளு ரசம் குடிங்கள்...


உடல் பருமனா? வயிற்று பிரச்சினையா?

கொள்ளு ரசம்...

கொள்ளு-600 கி.
வெந்தயம்-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

உடல் பருமனா? உங்களுக்கான டயட்...

20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர். பட்டினி கிடந்தால் உடல் குறைந்து விடும் என்பது தவறான கருத்து. இது உடலை பலவீனமாக்கி விடும்.

மாத்திரைகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உடல்பருமனை குறைக்க முறையான உடற்பயிற்சியோடு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

ஒருநாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

காலை 6 மணி : டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம்..

வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்...

திமுக தெலுங்கர் ஸ்டாலினை கலாய்க்கும் மராட்டியன் ரஜினி...


திமுக ஸ்டாலினும் நடிப்புத் துறைகளும்...


1987 ல் கருணாநிதியால் கதை வசனம் எழுதப்பட்டது வெளிவந்த ஒரே இரத்தம் என்ற திரைப்படத்தில் நடிகனாக அறிமுகமாகி.. படம் ஒடாததால்... நாடகங்களில் நடித்து விட்டு...

திமுக என்ற நாடக நிறுவனத்திலேயே திரும்பவும் கருணாநிதியின் கதை வசனத்தில் நடிக்க தொடங்கி..

இன்றுவரை ஆட்சியில் இருக்கும் போது ஒரு நடிப்பும்... ஆட்சியில் இல்லாத போது ஒரு நடிப்பாக நடித்து...

அந்த படத்திற்கு பெயராக நமக்கு நாமே என்று சூட்டிக் கொண்டார்...

இதுவே திமுக தெலுங்கர் ஸ்டாலின் வரலாறு...

ஏற்கனவே கணவனை தாக்குவதில் உலகில் 3வது இடத்தில் இருப்பது இந்தியா தான்...


இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல...


இந்தியாவின் தலைநகரம் :புது டெல்லி 
இந்தியாவின் தேசிய பறவை : மயில்
இந்தியாவின் தேசிய விலங்கு : புலி
இந்தியாவின் தேசிய மொழி :..... ?

இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்விக்கு உடனே எல்லோரும் சொல்லும் பதில் இந்தி. அதுவும் நீங்கள் இந்தி பேசும் மக்களுடன் இருக்கும் போது , அவர்கள் இந்தியில் பேச்சை துவங்க நீங்கள் உங்களுக்கு இந்தி தெரியாது என சொல்ல அரே.. இந்தி... ராஷ்டிர பாஷா..  As a Indian.. you should learn our national language..  என்ற அறிவுரை உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

நானும் ரொம்ப நாட்களாக இந்த பாழாய் போன தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இப்புடி செஞ்சிபுட்டான்களே என்று திட்டிக் கொண்டிருந்தேன்.

சமீபத்தில் Wikipedia  வில் இந்தியாவை பற்றி படிக்க நேர்ந்தது.

விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் கிடையாது.

அதாவது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை,

அதனால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது.

விக்கிபீடியா சொல்லும் உண்மை..

அதே சமயம் இந்தியும், ஆங்கிலமும் Official Language என்று வரையருக்கப்பட்டுளன.

இதன் அர்த்தம் என்னவென்றால் மத்திய அரசாங்கத்திற்கும் அதன் சார்ந்த துறைகளுக்கும், மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இந்த இரண்டு மொழிகளும் Official Language  ஆகும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் Official Language  தேர்வு செய்யும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5  மாநிலங்களே (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார் , டெல்லி, ராஜஸ்தான் ) இந்தியை அந்த மாநில Official Language  ஆக தேர்வு செய்துள்ளன.

ஆக இந்த 5  மாநிலங்களை தவிர மற்ற மாநில அரசுகளுடனோ அல்லது அந்த அரசு சார்ந்த துறைகளுடனோ நடைபெறும் பரிவர்த்தனம் ஆங்கிலமோ அல்லது அந்த மாநில Official Language -லோ நடைபெற வேண்டும்.

உதாரணமாக மகாராஷ்டிரா அரசுடன் நடைபெறும் communication
மராட்டியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். 

இதன்படி பார்த்தாலும் மத்திய அரசின்  Official Language  இல் ஒன்றான இந்தியின் மூலம் மேற்சொன்ன 5 மாநில அரசுகளுடன்தான் பரிவர்த்தனம் செய்ய முடியும்.

ஆனால் ஆங்கிலத்தின் மூலம் அனைத்து மாநில அரசுகளுடனும் பரிவர்த்தனம் செய்ய முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக புரிகிறது.

இதில் நீதித் துறை சற்றே வித்தியாசமானது..

ஒவ்வொரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் எந்த மொழியில் வாதிடலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் டெல்லி உச்ச நீதி மன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ் நாடு உயர் நீதி மன்றம் தமிழில் வாதிட உச்ச நீதி மன்றத்திடம் அனுமதி கேட்டு அதுவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம்.

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு பிரபல கம்பனியின் பிஸ்கட் பாக்கெட்டில் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்   பட்டு உள்ளதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கின் விபரம் - இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது  தண்டனைக்குரியது...

வழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது..

இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் இந்தியை தேசிய மொழி  என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல .. ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது...

இது என்னுடைய சொந்த புனைவு அல்ல. இதற்கான ஆதாரம் இதோ இங்கே..

Times Of India: http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi

The Hindu: http://www.thehindu.com/news/national/article94695.ece

உண்மை இப்படி இருக்க அனைத்து பள்ளிகளிலும் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இவ்வாறு தவறாக சொல்லித்  தரப்படுகிறது? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

இதே போல இந்தியாவின் தேசிய கீதம் ஜன கன மன கதி..  நிறையபேர்  இந்தியில் எழுதப்பட்டது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இது பெங்காலி மொழியில் எழுதப்பட்டது என்பது தான் உண்மை.

இன்னொரு கொசுறு உண்மை..

அமெரிக்காவுக்கும் தேசிய மொழி இல்லை. ஏனென்றால் அமெரிக்கா விடுதலை அடைந்த போது அப்போது இருந்த ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு சிறுபான்மை மக்களை கருத்தில் கொண்டு ஆங்கிலத்தை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.

இனி உங்களை யாராவது இந்தியாவின் தேசிய மொழி எது? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பது தெளிவாகியிருக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை முடிக்கின்றேன்...

கேவலமான உண்மை...


பொது மனம் என்றால் என்ன? – ESP சக்தியின் அடிப்படை...


பொதுமனம் என்பது பலரால் நம்ப முடியாத ஒரு தேற்றமாகத்தான் இருக்கிறது. நம்புவோருக்காக…

பொது மனத்தை அறிய முன்னர், பிரபஞ்ச உருவாக்கத்தை சிம்பிளாக பார்த்தாக வேண்டும்…

பிரபஞ்சம் என்பது, பெரு வெடிப்பு மூலம் தோற்றுவிக்கப்பட்ட ஒன்று என விஞ்ஞானம் அறிந்துள்ளது.

அணுவொன்றின் அல்லது சிறிய பொருள் ஒன்றின் வெடிப்பின் மூலம் பிறப்பிக்கப்பட்ட அதீத சக்தியினால் வாயுக்கள் உருவாகியதாகவும், பின்னர் அவை தமக்குள் ஈர்ப்படைந்து இறுக்கமடைந்து திண்மங்களாகவும், திண்மத்தை அண்டி இருந்த வாயு குளிர்வடைந்து திரவமாகவும் மாறியதாக கூறப்படுகிறது.

அப்படி திண்மம், திரவம், வாயு , வாயுக்களின் சேர்க்கையால் உருவான அதீத வெப்பத்தாலான நட்சத்திரங்கள் என்பன தமது ஈர்ப்பின் சக்திக்கு ஏற்ப தனித்தனி கூட்டங்களாக உருவாகின. அப்படி உருவான ஒரு கூட்டம் தான் பூமி அடங்களான சூரிய குடும்பம்..

திண்ம, திரவம், வாயுவின் சேர்க்கையால் கலங்கள் உருவாகின, கலங்களின் சேர்க்கையால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என்பன படிப்படியாக உருவாகின.

பூச்சி, நாய், மனிதன், காகம் என அனைத்துமே அடிப்படையாக கலங்களில் இருந்தே உருவாகியுள்ளன.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப்போனால்; பூச்சியும், பிரபஞ்சமும் திண்மம், திரவம், வாயுவின் சேர்க்கையாலேயே உருவாகின என்றும் சொல்லலாம்.

நமது வீட்களில் செல்லப்பிராணிகள் இருக்கின்றன. உண்ணிப்பாக கவணித்துப் பாருங்கள், நாம் வீட்டிற்கு அதீத கோபமாகவோ டென்ஷனாகவோ வரும் போது அவை அதை உணர்ந்து கொண்டு நம்மை தொந்தரவு செய்யாமல் சென்றுவிடும்.

பாடசாலையில் இருந்து அல்லது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு நாம் வரும் போதே, வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் அதற்கு ஏற்ப விளைவுகளை வீட்டில் காட்டத் தொடங்கி விடும்..

நேரத்தை உணர்ந்து கொள்ள முடியாத அவை, நாம் நேர தாமதமால் வீட்டில் சற்று பதட்டத்தை காண்பிக்கும்.

நம்மிடையே பார்த்தால், நாம் பலர் இருந்து பேசிக்கொண்டிருப்போம், திடீரென நாம் சொல்ல நினைத்ததை அருகில் இங்கிருக்கும் ஒருவர் சொல்லிவிடுவார்.

எங்கோ தொலைவில் வேறு நாடுகளில் இருக்கும் நமது உறவினர் அல்லது நண்பரைப்பற்றி யோசித்துக் கொண்டிருப்போம். அவருடன் பேசினால் நன்றாக இருக்கும் என நினைப்போம், அவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவார்.

நமது நெருங்கிய உறவினர் ஒருவர் எங்கேயோ இறந்தாலும், நமக்கு இறந்த தகவல் தெரிய முன்னரே, குறிப்பிட்ட நபர் இறந்த அந்த நேரத்தில் பதட்டம், பயம், சோக உணர்வு என்பன உருவாகும். இதை பலர் உணர்ந்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இன்னொரு பக்கம் பார்த்தால்,
இயற்கை சீற்றங்கள் வருவதை விலங்குகள் முன்னோக்கியே உணர்ந்து கொண்டு தமது பதட்டத்தை வெளிக்காட்டுவதுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரவும் ஆரம்பிக்கும். சுனாமி நேரத்தில் இதை பலர் உணர்ந்துள்ளார்கள்.

அதே போல் பாரிய விமான விபத்துக்கள், சாலை விபத்துக்கள் எதிர் பாராது நிகழ்ந்த நாட்களில், ஏனைய நாட்களில் பிரயாணிக்கும் மக்களை விட குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பயணித்துள்ளார்கள்..( உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் தரவிது.) இதை எச்சரிக்கை உணர்வு எனவும் சொல்லலாம்.

என்னடா பிரபஞ்சத்தை பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு திடீரென சம்பந்தமில்லாத தகவல்களை பேசிக் கொண்டிருக்கிறேன் என நினைக்க வேண்டாம். நான் மேலே சொன்ன மூன்று தொகுதி உதாரணங்களும் ஏற்படுவதற்கு காரணம் பொது மனம் தான்.

இரண்டாம் தொகுப்பை பார்த்தால்,
நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும் சிந்தித்திக் கொண்டிருக்கும் போதும், நமது உடலை விட்டு கண்ணிற்கு புலப்படாத எண்ண அலைகள் விரிந்து பரவிச்செல்கின்றன. அந்த எண்ண அலைகள் எம்மோடு தொடர்புடையவர்களின் எண்ண அலைகளுடன் ஒத்திசைவடையும் போது, அந்த செய்தியை உணர்ந்து கொள்ளும் திறன் நமது மனதிற்கு உண்டு.

அதன் விளைவே நாம் நினைப்பதை சொல்வதற்கும், நாம் நினைக்கும் போது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதற்கும், இறப்புக்களை உணர்ந்து கொள்வதற்கும் இது தான் காரணம். இது தான் பொது மனம்.

முதலாம் தொகுப்பை இப்போது பார்ப்போம்..

மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு விலங்குகளின் எண்ணங்களுடன் மனித எண்ணங்கள் ஒத்திசைவைடைவதால் ஏற்படும் விளைவுகளுக்கான உதாரணங்களே மேற்சொன்னவை.

இதில் ஒரு துரதிஷ்டமான விடையம் விலங்குகளின் எண்ணங்களை நமது மனம் உள்வாங்கிக் கொள்ளும் திறனை இழந்து விட்டது. அதற்கான தேவை குறைந்ததும், மனித மனதிற்குள் வேறு பல சிந்தனைகள் குடிகொண்டதும் காரணாம இருக்கலாம்.

இதைப்பற்றிய முழுமையான விளக்கம் கொடுக்காமலே, ஜென் கதைகளில் சிங்கத்தை கட்டுப்படுத்தும் மனிதர்களை பற்றி கூறப்பட்டுள்ளது..

அவை, நமது எண்ண அலைகள் பொது மனதில் சஞ்சரித்து விலங்குகளின் எண்ணங்களுடன் ஒத்திசைந்து விலங்குகளின் மனதினால் உணரப்பட்டு ஏற்படுத்தப்படும் நடத்தை விளைவுகளையே காட்டுகின்றன.

இறுதியாக மூன்றாவது தொகுப்பை பார்ப்போம்..

இது விளக்குவதற்கு சற்று கடினமானது, இது இயற்கை விதிகளுக்கும் மனித எண்ண அலைகளுக்கும் இடையிலான ஒத்திசைவினால் ஏற்படும் விளைவுகளாகும்.

இயற்கை விதிகள் என நான் சொல்வது கோயஸ் – வண்ணத்திப்பூச்சி விளைவு இனால் ஏற்படும் விளைவுகளை குறிக்கும்.

உதாரணமாக -  கோயஸ் தேற்றப்படி.. நாளை ஏற்படப்போகும் விபத்து, நேற்றோ பல நாட்களுக்கு முன்னரோ ஏற்பட்ட ஒரு விளைவினால் ஏற்படுவது என்பதை குறிக்கிறது. எனவே, நாளை ஏற்படப்போகும் விபத்து பற்றிய தகவல் அடங்கில அலைகள் எம்மை சூழவும் பிரபஞ்சத்தை சூழவும் வியாபித்திருக்கும்.. அவற்றுடன் எமது மன அலைகள் ஒத்திசைவடையும் போது நமக்கு எச்சரிக்கை உணர்வு ஏற்படுகிறது.

ஆகவே, உயிரினங்களின் எண்ணங்கள் அனைத்துமே பொது உலகில் வியாபித்திருக்கின்றன. உயிரினங்கள் மட்டும் அல்லாது உலக, பிரபஞ்ச தகவல்கள் கூட பொது மன உலகில் இருக்கலாம்.

அதனால் தான், நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்கள் எதிர்வுகூற முடிந்தது..

இங்கு இன்னோர் தகவலையும் குறிப்பிடலாம்..

ஐன்ஸ்டைனின் தோற்றத்தை அடிப்படையாக்கக்கொண்ட காலப் பயணத்தைப் பற்றி பேசும் போதே, சில விஞ்ஞானிகள் பண்டைய உலகை அறிந்து கொள்ள பொது மன அலைகளை உணர்ந்து கொள்ளும் ஒரு கருவியை கண்டறிந்தால் போதுமானது எனக்கூறுகிறார்கள்.

அவர்களின் எண்ணப்படி, அக்கருவி மூலம் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணங்களை ஒன்றினைத்து, அவற்றை அறிவதன் மூலம் அக்கால கட்டத்தை அறிந்து கொள்ள முடியும்.

ESP செயற்பாட்டின் அடிப்படையான பொது மனத்தைப் பற்றி பேசியுள்ளோம்.

இனி, ESP சக்தியை வெளிப்படுத்திய வினோத மனிதர்கள் பற்றியும், வினோத ESP சந்தர்ப்பங்களையும் இடையிடையே அது தொடர்பாக உள்ள தோற்றங்கள், மற்றும் புராண சம்பவங்களையும் பார்ப்போம்...

மராட்டியன் ரஜினி கலாட்டா...


இந்தோனேஷியாவில் வாழை மரங்களை வீணடிப்பது கிடையாது...


அதில் துளைபோட்டு மண்ணை நிரப்பி
அதில் பயிர் செய்கின்றனர்..

வாழை மரத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் தனியாக செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை செடிகள் நன்றாக வளர்கின்றன.

மகசூல் முடிந்ததும் வாழைமரம் மக்கி நல்ல  உரமாகி விடும்...

மராட்டியன் ரஜினி கலாட்டா...


சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும்...


மேற்கத்திய நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள்.

நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர்.

இன்று மொத்த நாடே நாசமாய் போனது.

கையூட்டு (லஞ்சம்)  வாங்கியவர்களின் சந்ததி உட்பட.

சோமாலியாவின் முதல் நாசம் 1960களில் மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவின் தலைமையில் மீத்தேன் மற்றும் இதர வாயுக்களின் சோதனை சோமாலியாவின் ஒட்டு மொத்த விவசாயத்தையே அழித்து விட்டது.

இரண்டாவதாக அந்நாட்டை விளையாத பூமி என்று அதே அமெரிக்கர்களால் முத்திரை  குத்தப்பட்டு,  அந்த நாட்டை உலக குப்பை தொட்டியாக்கி அனுக்கழிவு, மருத்துவக்கழிவுகளை கொட்டி கடல்வளத்தையும் அழித்தார்கள்.

ஓரு விவசாயியும், மீனவனும் இல்லாமல் போனால் எஞ்சியவர்கள் உணவுக்காக கொள்ளையர்களாகத் தானே மாற முடியும்...

அதே அமெரிக்கர் வயிற்று பசிக்கான சோமலியர்களின் கொள்ளையிலும்,  வயிற்றில் புல்லட்டை சுட்டு பரிசளித்தான்.

நம் கண் முன்னே ஓரு நாடே சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல் முழ்குகிறது. 

சோமாலியர் சில நேரங்களில் பல உயிரை கொடுத்து கடத்திய கப்பலில் சில உணவு பொருட்களை திருடி சென்ற அவலமும் உண்டு. பசிக்காக போராடுபவனுக்கு கடல் கொள்ளையன் பட்டமும்...

இன்றைய கார்ப்ரேட் அமெரிக்க,  இஸ்ரேலின் அடுத்த சோமாலிய பார்வை நம்நாடு.

கார்ப்ரேட்களுக்கு நம் நாட்டில் மோடி ஓதுக்கி குடுத்த நிலம் தமிழ்நாடு.

தனக்கு ஓட்டு போடாத இவர்கள் இருந்தாலென்ன,  செத்தாலென்ன என்ற மோடியின் மனநிலையாக இருக்கலாம்.

கிளின் இந்தியா என்று மாய கூச்சலிட்டு மக்களின் கண்னில் மண்னை தூவிய மோடி பல டண் குப்பைகளை இந்தியாவில் கொட்ட உலக நாடுகளுக்கு அனுமதி வழங்கி முடிந்து விட்டது.

சென்னையில் ஓரு கப்பல் விபத்து அதனால் பல லட்சம் லிட்டர் கழிவு ஆயில் கொட்டியது. அது விபத்து அல்ல. நம் தமிழ்நாட்டின் மீது நடத்தப்பட்ட வெள்ளோட்டம்.

இனி வருங்காலங்களில் நம் நாட்டை தேடி கேன்சர் குப்பையும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த மீத்தேன் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றால் 3,000 கோடி மத்திய அரசுக்கு,  தமிழக நல்லி எலும்பு நாய்களுக்கு 400 கோடி கிடைக்கும்.

தமிழக மக்களாகிய நாம் விரைவில் சோமாலியாக மாற தயாராகி கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டை இந்தியாவிடமிருந்து மீட்க போகிறோமா ?

அல்லது பாஜக தலைவர்கள் சொல்வது போல் இந்தியாவிற்காக தமிழ்நாட்டை இழந்து சோமாலியா போல் செத்து மடிய போகிறோமா என்ற கேள்விக்கு விடை தேடும் விளிம்பில் நிற்கிறோம்.....

தோட்டாவே வந்தாலும் மாரில் ஏந்தி மடிவோமே ஒழிய.... நாங்கள் பீட்டாவிடம் தோற்றுவிட மாட்டோம்...


வாவ்- ஏலியன்ஸ் பூமியை தொடர்பு கொண்டனவா?



வருடம் 1977, ஒரு கோடைகால இரவு, வழக்கம் போல தான் ஆய்வகதில் விண்வெளியை பற்றியும், வேற்றுலக வாசிகளை பற்றியும் ஆராய்சி செய்து கொண்டு இருந்தார்  ஜெர்ரி எஹ்மான்,(Jerry Ehman).

அன்று இரவு வழக்கத்திற்கு மாறாக அவரது கணினி ஏதோ ஒரு ரேடியோ சிக்னலை பதிவு செய்தது..

அந்த சிக்னல்(தகவல்/ சாமிக்ஞை) ஒரு 72 நொடிகளுக்கு தொடர்ந்து கிடைத்தது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்ல்வு ஜெர்ரியை திகைப்படைய வைத்தது.

உடனேயே அந்த சிக்னலை, செய்தியாக கணினியின் உதவியுடன் பரிமாற்றப்பட்டது. இதற்கு மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. அவ்வாறு பரிமாற்றப்பட்ட வார்த்தை தான் வாவ்..

அதாவது நாம் பூமியில் வாழும் உயிரினகளால் அனுப்ப படாத, நம் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து பெறப்பட்ட ஒரே தகவல்.

இந்த தகவல் டௌ சகிட்டரீ  (Tau Sagittarii), என்ற நட்சதிரனின் சுற்றுப்புரதத்திலிருந்து வந்ததாக பின்னர் கண்டறியப் பட்டது.

இந்த நட்சதிரம் பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் (1 light-year= 9.4605284 × 10^12 kilometers) தொலைவிலிருந்து வந்தது.

ஆனால் அது தான் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து நாம் பெற்ற முதல் மற்றும் கடைசி தகவல்.

அந்த தகவல் அனுப்பப்பட்ட அலைவரிசை 1420MHz . இந்த ரேடியோ அலைவரிசை விண்வேளி ஆய்விற்கு உகந்ததாக உள்ளதால் இந்த அலைவரிசை மற்ற வானொலி, தொலைக்கச்சியின்  பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த அலைவரிசைக்கு ஹைட்ரஜன் லைன்  என்று பெயர்.

1977ல் பெறப்பட்ட பிறகு இன்று வரை வேறு எந்த சிக்னலும் பெறப்படவில்லை.

ஒரு வேலை வேறு எந்த சிக்னலும் அனுப்ப படவில்லையா, அல்லது அந்த தகவல் அனுப்பப்பட்டு நம்மால் பெற முடியாமல் போனதா என்று இன்றுவரை விடை இல்லை.

35 வருடங்களாக பூமியிலிருந்து பல சிக்னல்கள் அந்த சிக்னல் வந்த திசை நோக்கி அனுப்பப் பட்டு வருகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு நாள் அந்த சிக்னலை பற்றிய ஆய்விற்கு சரியான விடை கிடைக்கும். அப்போது ஏலியன்கள் பற்றிய மர்மங்கள் விலகும்.

அவர்கள் இருப்பது உன்மயானால், அது நம் பூமியின் வரலாற்றை வேறு ஒரு புதிய பாதை நோக்கி அழைத்து செல்லும்...

மராட்டியன் ரஜினி கலாட்டா...


உடலும் உயரமும்...


ஒவ்வொரு மனிதரும் அவரவர் கையின் அளவுப் படி தொண்ணூற்றாறு அங்குல உயரமே என்பர்.

அவரவர் கையின் விரல் பருமன் ஒரு அங்குலம் எனக் கூறப்படும். அங்குலம், சாண், முழம், மார் என்பதும் கையின் அளவைக் கொண்டே கணிக்கப்படும்.

எண் சாண் உடலம் என்பதும், எறும்புக்கும் தன்கையால் எட்டு என்பதும் உடலின் உயரத்தைக் குறித்தே வழங்கப்படும்.

சென்ம சரீ ரந்தொண்ணூற் றாற தென்னச்
செப்புமங் குலமவர்கள் கையாலே தான் - 150 என்பர்..

இந்த உயரத்தின் அளவு என்பது எல்லோருக்கும் பொது என்று உரைக்கப்படுகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு வரின் உயரமும் ஒத்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்குச் சித்தர்கள் கூறும் முறை அறிவியல் முறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கிரம் எட்டும் எண்சாண் அது ஆகுமே - 151..

ஆணும் பெண்ணும் கூடும் போது நாடியில் தோன்றும் சுக்கிலம் சுரோணிதம் என்னும் இரண்டும் கலந்து பெண்ணின் கருப்பையில் கருவாக அமையும்.

அக்கரு அமையும் வேளையில், பெண் விடுகின்ற மூச்சுக் காற்று, 12 அங்குல கன அளவு உடம்புக்குள் செல்கிறது.

அதில் 8 அங்குல கன அளவு மட்டும் பெண்ணின் உடலுக்குள் தங்கி விடுகிறது.

மீதமுள்ள நான்கு அங்குல கன அளவுக் காற்று வெளியே வந்து விடுகிறது.

உடம்பில் சேர்ந்த 8 அங்குல கன அளவு காற்று, கருவாக அமைந்த குழந்தையின் உடலாக அமைந்து எட்டுச் சாண் என்ற அளவை அமைக்கிறது என்பது திருமூலர் கண்டறிந்த உயிரியல் முறையாகும்...

மனிதாபிமானத்த பத்தி பேச ஒரு அருகதை வேணும்... விசிக திருமா...


தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா.?


இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய சுதந்திர போர்..

அப்படியானால் தமிழகத்தை தமிழன் தானே ஆளவேண்டும்.

ஏன் இன்றுவரை தமிழகத்தை ஆள்பவர்கள், ஆண்டவர்கள் பெரும்பாலோனோர் பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.?

தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா.?

தமிழினமே சிந்தித்து விழித்தெழு...

தமிழனை திசை திருப்ப.. ஆரியமும் திராவிடம் பங்காளி மோதல்கள் உருவாக்கம் உஷார்...


எண்ணங்கள்...


அடிப்படையில் ஒருவனை உணர்ந்த கொள்ள எண்ணங்கள் தான் மூலம் அதை  கவனித்தால் போதுமானது..

எப்படி கவனிப்பது ஒவ்வொரு எண்ணங்களையும் சாதாரணமாக  கவனித்து கொண்டு அதன் இயல்பு நமக்கு உள்ளே  பொருந்துகின்றதா- இல்லையா,( உடல் ரசாயன மாற்றம் இல்லாத நிலை உள்ளதா) என்பதை பார்த்ததால் போதுமானது..

எண்ணத்தை நல்ல எண்ணம் தீய எண்ணம் என்று பார்க்கும் வரை குற்ற உணர்வும் - அடக்கு முறைகளும் தான் வளரும் அங்கு தெளிவு பிறக்காது..

அந்த தெளிவில் எண்ணத்தின் மூலம் இருக்கும் பற்றுகள் கொண்ட அடர்த்தி குறைந்து எண்ணங்கள் லேசாக மாறுவதும் அதன் பின் எண்ணங்கள் கரைந்த நிலைக்கு செல்ல முடியும்..

இந்த எண்ணங்கள் கரைந்த நிலையில் வெற்றிடம் இயல்பாக உணர முடியும்..

இந்த தன்மை வரும் பொழுது அங்கு எண்ணம் எழும் அலைத்தன்மை வெகு அழகாக கவனிக்க முடியும் அது இயல்பாக மலரும் பூவை போல நமக்கு உள்ளே இருந்து உணர்வின் வெளிப்பாட்டில் நடைமுறை வாழ்க்கையில் வளம் வருகிறது..

இந்த அடிப்படை தான் தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆழ்ந்த கவனிப்பில் நிகழும் ஒன்று..

கவனித்தல் என்பது உணராதவர்
உணர்ந்து கொண்டிருப்பவர். உணர்ந்தவர் என  எல்லோருக்கும் பொதுவான நிகழ்வு- ஏன் ஞானியே ஆயினும் இதே நிலை தான் என்ற அடிப்படை தெளிவுக்கு வரும் வரை எண்ணம் என்பதில் குழப்பமே தீராது..

தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டே இருக்க வேண்டியது தான்..

ஒவ்வொரு குணத்திற்கு மூலம் எண்ணமே - அதற்கு மேலே உள்ளவாறு கவனித்தால் இயல்பாக எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் உணர்வின் அடிப்படையில்..

ஆன்மீகம் ஆன்மீக விவாதங்கள் இயல்பாக மலர வைக்கும் தன்மையாக இருக்க வேண்டும் - மாறாக குற்ற உணர்வையும் - நல்லவன்- கெட்டவன் - நல்லது - கெட்டது - அவனை அடிமை படுத்தி மேலே எழுந்து கொள்ள முடியாத சுமைகளை திணிக்க கூடாது..

உணர்வின் ஆழத்தில் பயணிக்கும் போதே இந்த தன்மை கூட புரிந்து கொள்ள முடியும்..

விழிப்புணர்வுக்கும் ஆரம்ப நிலைக்கும் பெரிய இடைவெளி உருவாக்கும் நிலை மனம் தான் - எண்ணத்தை சீரமைப்பது விழிப்புநிலையில் தான் நிகழ்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்..

மனதின் அடிப்படையில் இயங்கும் எண்ணத்தை கரைத்து மனம் என்ற அடிப்படையை கடந்து வெற்றிடத்தை பார்ப்பதே ஆன்மீகம்..

பெரிய மலையை தூக்கும் வேலை இல்லை serious இல்லாத  இயல்பான கொண்டாட்டத்தில் தன்னை  உணர்ந்து கொள்வது அவ்வளவே..

தியானம் அதற்கு மூலம்...

கன்னடன் ஈ.வே. ராமசாமி எனும் பெரியார் சிலையை உடைத்த பாஜக பிரமுகர் முத்துராமனை பொது மக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர...


கால நிலை மாற்றமும் இலுமினாட்டியும் – INWO பற்றிய பின்னனித் தகவல்...


1990 ஆம் ஆண்டளவில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் INWO என்ற ஒரு காட்ஸ் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

INWO என்பது Illuminati – New World Order (இலுமினாட்டி – புதிய உலக கட்டளைகள்) என்பதன் சுருக்கமாகும்.

ஸ்டீவ் ஜக்ஸன் என்பவர் இந்த விளையாட்டை வடிவமைத்திருந்தார். இந்த விளையாட்டில் இடம் பெற்ற 3 அட்டைகள் தெளிவாக செப்டொம்பர் 11 தாக்குதல் பற்றி விவரித்திருந்தது..

லண்டன் தாக்குதல் மற்றும் எதிர்காலத்திட்டங்களை இந்த அட்டைகள் வெளிப்படுத்தியிருந்தது.

ஸ்டீவ் ஜக்ஸனுக்கும் இலுமினாட்டிக்கும் என்ன தொடர்பு?

ஸ்டீவ் ஜக்ஸன் பிரபல கார்ட், போர்ட், விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனத்திற்கு சொந்தக்காரர். பல இடங்களில் வாசித்து அறிந்ததன் படி ஜக்ஸனுக்கும் இலுமினாட்டிக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருந்ததாக சான்றுகள் இல்லை.


தற்செயலாக, இலுமினாட்டி இரகசியக் குழுவின் தகவல்களை அறிய நேர்ந்த பின்னர்.. உருவாக்கப்பட்ட விளையாட்டாகவே இந்த இலுமினாட்டி அட்டைகள் கருதப்படுகின்றன.

ஸ்டீவ் ஜக்ஸன் இவ் விளையாட்டை உருவாக்கியதும், அவருக்கு அனுசரனை வழங்கிய நிறுவனத்தில் 1990 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி திடீரென எந்த வித முன்னறிவிப்புமில்லாமல் சோதனையிடப்பட்டது.

4 முக்கிய கணனிகள் கைப்பற்றப்பட்டதுடன். நிறுவனத்தின் மூது பொய் வழக்குகள் போடப்பட்டது.

இலுமினாட்டி அட்டைகளின் உருவாக்க பின்னனியைப் பார்த்தோம்.

இனி… இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் படங்களைப் பாருங்கள்… இவரை இலுமினாட்டி விளையாட்டு அட்டைகளில் இடம் பெற்ற இரு அட்டைகள்.

காலனிலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக இவ் இரு அட்டைகளும் கூறுகின்றன.


முதலாவது அட்டையான International Weather… அட்டையைப் பார்த்தோமானால்,
All Places you control என்ற சொல் மூலம் இலுமினாட்டி உலகம் முழுவதுமான கால நிலைகளை கட்டுப்படுத்தும் என்பது கூறப்பட்டுள்ளது.

கால நிலையை எப்படி கட்டுப்படுத்துவது? அது இயற்கையான ஒன்று என நினைத்தால், அது தவறு..

ஆம், Cloud Seeding என அழைக்கப்படும் நவீன தொழில் நுட்ப முறை மூலம் இப்போது தேவைப்படும் இடங்களில் தேவையான அளவிற்கு மழையை பெய்விக்க முடிகிறது.

இத்தொழில் நுட்பம் இன்னமும் முழுமையாகவில்லை. அத்துடன் ஒரு இடத்தில் செயற்கையாக மழையை பெய்விக்க வேண்டும் எனும் போது, இயற்கையாக இன்னோர் இடத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்ப்பிக்கப்படும்..

இவ்வாறு கால நிலைகளை மாற்றுவதன் மூலமாக, இன்றைய தொழில் நுட்பப்படி இன்னோர் இடத்தில் வறட்சியை ஏற்படுத்த முடியும்.

மேலும் சில காலங்களில் வெள்ளப் பெருக்குகளையும் ஏற்படுத்த சாத்தியமுண்டு.

இவ்வாறு எதிர் பாராத கால நிலை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக, இலுமினாட்டியின் புதிய உலக கட்டளைகளுக்கு எதிராக நகரும் நாடுகளை இலகுவாக அடிபணியச் செய்யலாம்..


இப்போது, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பருவமழை பொய்ப்பதற்கும், திடீர் மழைகளுக்கும் இலுமினாட்டியின் திட்டம் காரணமாக இருக்க கூடும்…

ஆராய வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் நமது கடமைகள்…

இரண்டாம் புகைப்படத்தில் உள்ள Real weather satellites don’t just report the weather, they change it என்ற வார்த்தை.. காலனிலையை கணிக்க உதவும் செய்மதிகள் காலனிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமிக்ஞைகளை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது.

அதனுடன் சம்பந்தமான ஒரு படமே இந்த 3 ஆவது புகைப்படம். இது காலனிலை மாற்றத்தால் ஏற்படுத்தத்தக்க புயல்கள் பற்றி குறிப்பதாக கருதப்படுகிறது.
the day after tomorrow திரைப்படம் அனைவருக்கும் நினைவிருக்கலாம்… அதே நபர் தான் 2012 எனும் திரைப்படத்தையும் எடுத்தார்… அதில் குறித்த நபர்கள் மட்டும் தப்புவது போன்றும் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது, White House Down திரைப்படத்தை இயக்கியுள்ளார்…

அடுத்து இலுமினாட்டி அட்டைகளின் அடிப்படையில், இலுமினாட்டியின் அரசியல் ராஜதந்திரங்களையும், மேலும் பல மர்மமான தகவல்களையும் பார்க்கலாம்… இணைந்திருங்கள்…