வருடம் 1977, ஒரு கோடைகால இரவு, வழக்கம் போல தான் ஆய்வகதில் விண்வெளியை பற்றியும், வேற்றுலக வாசிகளை பற்றியும் ஆராய்சி செய்து கொண்டு இருந்தார் ஜெர்ரி எஹ்மான்,(Jerry Ehman).
அன்று இரவு வழக்கத்திற்கு மாறாக அவரது கணினி ஏதோ ஒரு ரேடியோ சிக்னலை பதிவு செய்தது..
அந்த சிக்னல்(தகவல்/ சாமிக்ஞை) ஒரு 72 நொடிகளுக்கு தொடர்ந்து கிடைத்தது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்ல்வு ஜெர்ரியை திகைப்படைய வைத்தது.
உடனேயே அந்த சிக்னலை, செய்தியாக கணினியின் உதவியுடன் பரிமாற்றப்பட்டது. இதற்கு மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. அவ்வாறு பரிமாற்றப்பட்ட வார்த்தை தான் வாவ்..
அதாவது நாம் பூமியில் வாழும் உயிரினகளால் அனுப்ப படாத, நம் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து பெறப்பட்ட ஒரே தகவல்.
இந்த தகவல் டௌ சகிட்டரீ (Tau Sagittarii), என்ற நட்சதிரனின் சுற்றுப்புரதத்திலிருந்து வந்ததாக பின்னர் கண்டறியப் பட்டது.
இந்த நட்சதிரம் பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் (1 light-year= 9.4605284 × 10^12 kilometers) தொலைவிலிருந்து வந்தது.
ஆனால் அது தான் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து நாம் பெற்ற முதல் மற்றும் கடைசி தகவல்.
அந்த தகவல் அனுப்பப்பட்ட அலைவரிசை 1420MHz . இந்த ரேடியோ அலைவரிசை விண்வேளி ஆய்விற்கு உகந்ததாக உள்ளதால் இந்த அலைவரிசை மற்ற வானொலி, தொலைக்கச்சியின் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த அலைவரிசைக்கு ஹைட்ரஜன் லைன் என்று பெயர்.
1977ல் பெறப்பட்ட பிறகு இன்று வரை வேறு எந்த சிக்னலும் பெறப்படவில்லை.
ஒரு வேலை வேறு எந்த சிக்னலும் அனுப்ப படவில்லையா, அல்லது அந்த தகவல் அனுப்பப்பட்டு நம்மால் பெற முடியாமல் போனதா என்று இன்றுவரை விடை இல்லை.
35 வருடங்களாக பூமியிலிருந்து பல சிக்னல்கள் அந்த சிக்னல் வந்த திசை நோக்கி அனுப்பப் பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு நாள் அந்த சிக்னலை பற்றிய ஆய்விற்கு சரியான விடை கிடைக்கும். அப்போது ஏலியன்கள் பற்றிய மர்மங்கள் விலகும்.
அவர்கள் இருப்பது உன்மயானால், அது நம் பூமியின் வரலாற்றை வேறு ஒரு புதிய பாதை நோக்கி அழைத்து செல்லும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.