13/11/2018

தமிழகம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது...


தேனி மாவட்டம் பள்ளி ஆசிரியையம் அவரது கணவரும் மகளும் காய்ச்சல் பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள்.

அவரது மாமியாரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இறந்து போனார். உறவினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஆனாலும் கூட சுகாதார நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து மாத்திரைகள் தரப்பட்டாலும் மாத்திரைகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது.

அரியலூர் நாகப்பட்டினம் கடலூர் விருத்தாச்சலம் போன்ற பல இடங்களில் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

30 சதவீத கமிஷன் அடிப்படையில் வாங்கப் படுவதால் மருந்து எந்தவகையிலும் மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை.

 நாமக்கல்லில் இரண்டு வயது குழந்தை இறந்திருக்கிறது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் கிராமங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 200 புதிய மர்ம காய்ச்சல் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதாக செய்திகள்..

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆறு வார்டுகள் மட்டும்தான் உள்ளன என்கிறார்கள்.

காய்ச்சல் தொடர்பான சிகிச்சை அளிக்கும் வார்டுகள் எல்லா அரசு ஆஸ்பத்திரிகளிலும் குறைவாக இருக்கின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு எல்ஐசி அலுவலர் உட்பட இருவர் பலியானார்கள்.

மதுரை கீழக்குயில்குடி சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டைச் சுற்றியே சாக்கடை ஓடுகிறது.

பல அரசு மருத்துவமனைகளில் சாக்கடை நீர் தேங்கி உள்ளது.

அரசு தரும் மருந்து மாத்திரை தரம் குறைந்தவை.

டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பற்றிய எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் அரசு செயல்படுகிறது.

மழை மேலும் மிரட்டினால் என்ன் ஆகுமோ?

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி எடுக்கப்பட்ட 'மெரினா புரட்சி' படத்திற்கு சென்சார் குழு தடைவிதித்துள்ளது...


மக்கள் போராட்டத்தை ஆவணப்படுத்துவதை தடுக்கவே இம்மாதிரியான தடைகளை  அதிகார வர்க்கம் மேற்கொள்கிறது.

தடையை மீறி அப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற வேண்டும்...

இலவச மிக்சி கிரைண்டர்கள போன்ற இலவசங்களை தவிர்ப்போம் - சர்கார் படத்தில்...


நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல்...


ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும்.

ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும்.

நோபல் பரிசு ஒன்று தான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டு தோறும் கவுரவுக்கிறது.

நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலை பெற்றிருக்கிறது.

இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்து போன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப் போகும் களங்கத்தை துடைத்துக் கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு.

அந்த அழிவு சக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து..

அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல். 1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ் பெற்ற பொறியாளராகவும் கண்டு பிடிப்பாளராகவும் இருந்தவர்.

கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர்.

ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப் போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக் கொண்டார்.

தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதான போது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும்.

நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல் படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார். பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டு பிடித்திருந்தார்.

அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார்.

ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.

கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப் போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர்.

ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார்.

ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது.

அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல்.

ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது. மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார்.

கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டு பிடித்தார்.

அந்த தனது கண்டு பிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.

டைனமைட் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டு பிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.

ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட் தான் பேருதவி புரிந்தது.

அவரது கண்டு பிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத் தொடங்கியது.

ஆனால் ஆக்க சக்தியாக தான் உருவாக்கியதை அழிவு சக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல்.

1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல் தான் இறந்து விட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவு சக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன.

அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்கு பின் உலகம் தன்னை பழிக்கப் போகிறது என்று கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவது தான் என்று முடிவு செய்தார்.

உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற் சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தை கொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார்.

1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார்.

அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார்.

இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின.

ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக் கொண்டது.

இன்று வரை 770 பேருக்கு மேல் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர்.

தன்னை அழிவு சக்தியை கண்டு பிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல்.

அவரது எண்ணம் வீண்போகவில்லை ஆண்டு தோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது.

உண்மையில் அவர் அழிவு சக்தியை கண்டு பிடிக்கவில்லை. ஆக்க சக்தியாக நோபல் கண்டு பிடித்ததை உலகம் தான் அழிவு சக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது.

இருப்பினும் டைனமைட்டை கண்டு பிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன.

அதனால் தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது...

மரபணு மாற்றம் விதைகளுக்கும், விலங்களுக்கும் மட்டும் இல்லை... மனிதனுக்கும் தான்...


Test tube baby  முறையில் உன்னுடைய உயிரணுக்களை வைத்துதான் கருவை உருவாக்குகிறார்கள் என்று நினைத்து கொள்ள வேண்டாம்...

நம் பாரம்பரிய காளையினங்களை அழிக்க வெளிநாட்டு காளையின் உயிரணுவை தான் பசுமாட்டுக்கு செலுத்துகிறார்கள்... இதனால் நம் காளையினம் பாதி அழிந்து போய் விட்டதை நாம் அறிவோம்...

இதே முறைதான் நமக்கும்...நம்மை ஆண்மை இழக்க செய்து  test tube முறையில் சுயசிந்தனையற்ற பொம்மைகளை உருவாக்கிடவே இன்று நகரங்களை சுற்றி உருவாகி கொண்டிருக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்களின் பணிகள்...

குறித்து வைத்துக் கொள்ளுங்கள் எதிர்கால்த்தில் குழந்தைகள் உருவாக்கி இறக்குமதியும் செய்வார்கள், ஏன் என்றால் இப்போது அந்த ஒன்றை மட்டுமே விட்டு வைத்துள்ளார்கள்...

செயற்கைமுறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டு பிறந்த குழந்தைகள் பல மூளை வளர்ச்சி இல்லாமல் உள்ளது... அவ்வாறு பிறந்த குழந்தையில் என் உறவினர் குழந்தையும் ஒன்று...

உணவுபொருட்களின் மாற்றம் இதற்கு முக்கிய காரணியாகவும் உள்ளது...

1983-ல் வந்த பத்திரிக்கை...


இந்த அரசியலை இங்கு இருக்கும்
அரசியல்-வியாதிகள் யாராவது..

வெகுசன மக்களிடம் சேர்த்து இருக்கிறீர்களா..?

சேர்த்து இருக்குறார்கள் என்றால், அது எந்த அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது...

எப்போது பார்த்தாலும் சிங்களன்-தமிழன் என இனச்சண்டையை வைத்தே, அரசியல் பொழப்பு நடத்துவது....

இனம் தான் பிரச்சனை என பிரபாகரன் நினைத்திருந்தால், இந்நேரம் சிங்களம் என்ற இனமே இருந்திருக்காது..

தமிழ் இனத்தின் மீதான, உலக வல்லாதிக்க சக்திகள் கொண்ட பெரும் பகையின் வெளிப்பாடே, தமிழீழத்தின் மீதான இனப்படுகொலை...

வேற்றுகிரக வாசிகள் பற்றிய தகவல்கள்...


இலுமினாட்டி களும் உலகமும்...


உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் வரும் காலங்களில் அனைவரும்
ஒரு ஆட்சிக்குள் நுழைவார்கள்...

உதாரணமாக இந்தியாவில் ஆதார் கார்டு.. வங்கியில் உள்ள டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு.. இதன் மூலம் மக்கள் அனைவரும் ஒன்றிணைக்கப் படுகின்றார்கள்..

இதனை இன்னும் மிக எளிதாக கொண்டு வரப்படும்..

அது மிக முக்கியமாக.. மருத்துவர்கள் துணை கொண்டு.. தடுப்பூசி போட்டால் தான் நோய்களை தடுக்க முடியும்.. நோய் இல்லாமல் வாழ முடியும்  என்பதை போல..

மக்கள் மனதில் பயத்தை சாதகமாக்கி அதே போன்று வரும் காலங்களில் bio chip போன்ற ஒரு சிறு ஊசி குழுந்தைகளுக்கு போடப்படும்..

ஏன் என்றால் அந்த குழந்தைகள் தான் இவர்களது ஆட்சியில் வாழும் சந்ததினர்கள்,

அதன் மூலம் வரும் கால சந்ததினர்கள் அனைவரும் இவர்களது ஆளுகைக்குள்
கொண்டு வரப்படுவார்கள்..

அப்படியானல் உதாரணமாக ஒவ்வொரு மனிதனுடைய அனைத்து பணிகளும் ஒருவருடைய வரவு ,செலவு , எந்த ஒரு சிறு பொருட்களை வாங்கினாலும், விற்றாலும்.. எங்கு போனாலும், வந்தாலும்..

இப்படி காலை முதல் இரவு தூங்கும் வரை.. நம் செயல்கள் அனைத்தும் கண்காணிக்கும் ஒருவன் ஆட்சிக்குள் நுழையப்படுவார்கள்.

அந்த ஒருவனின் ஆட்சி காலம் வந்தே தீரும்..

இந்த ஆட்சியில் இருந்து தப்பிப்பவர்களும் இருப்பார்கள்..

அவர்கள் தான் நம்பிக்கையுடையவர்கள், அந்த நம்பிக்கையாளர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்துவது என்னவென்றால் தடுப்பூசியை நம்பாதீர்கள் மற்றும் அதே தடுப்பூசி போல தான் வரும் காலங்களில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு ஊசி போடப்படும்..

அதை உங்கள் குழந்தைகளுக்கு போட வேண்டாம்.. அவர்கள் தான் நாளை பெரியவர்களாக இந்த ஆட்சியில் கீழ்
வாழ கூடியவர்கள்..

உங்களை நீங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்...

மறைக்கப்படும் உண்மைகள்...


சாகர்மாலா உண்மைகள்...


சாகர்மாலா தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகளின் மூலதனத்தை சார்ந்து தொடங்கப்படுவதால் நாட்டின் கடற்கரைகள் மட்டுமின்றி, தீவுகளும் கார்பரேட்டுகளின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்படும்.

இத்திட்டத்திற்க்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

ஆனால் , நாமோ சர்கார் திரைப்படத்தை நம் சர்க்கார் எதிர்க்கிறது அது சரியா/தவறா என்று தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்...

பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு...


நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலில் அடுத்தவர் நோயால் படும் அவதியை மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களை இந்த வகையில் குணமாக்கவோ, குறைத்து விடவோ முடியும். ரெய்கி, ப்ராணிக் ஹீலிங் போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை முறையாகக் கற்றுத் தேர்வது குணப்படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும். அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக் குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும், பயிற்சிகளைச் செய்து தேர்ந்திருந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி செய்பவர் பெற்றிருக்க வேண்டும்.

இத் தொடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப் பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால் ”அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.

1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.

கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.

ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?

இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?

அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.

பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.

நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.

நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.

அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.

தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.

பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.

ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.

சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த அவசர நவீன காலத்தில் கூட குறுகிய காலத்தில் நிறைய சாதிக்க, அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க, பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள செலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

மேலும் பயணிப்போம்...

சகாயம் ஐயா சொன்னது...


பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்.....


1. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே..

விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

2. அடியாத மாடு படியாது..

விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே.. வாளோடு முன் தோன்றிய மூத்த குடி..

விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு..

விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு..

விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்..

விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்..

விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை..

விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்..

விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

10. சேலை கட்டிய மாதரை நம்பாதே..

விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும் போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

11. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்..

விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது...

1986-ல் வந்த பத்திரிக்கை... இசுரேல் சிங்களத்தின் பின்னால் 1983-ல் இருந்தே இருக்கிறது...


இதைப்பற்றி இங்கு எந்த கட்சியாவது பேசி இருக்கிறதா..?

பேசி இருக்கிறது என்றால், அந்த நிகழ்வு மக்களிடம் முழுமையாக சென்றிருக்கிறதா..?

இறுதிவரை சிங்களன்-தமிழன் இனச்சண்டை என்பதை வைத்தே இங்கு அரசியல் பிழைப்பு நடத்துவார்கள், அனைத்து கட்சி தலைவன்களும்...

சர்க்கரை பாதிப்பில் இருந்து நீக்கும் ஆரைக்கீரை. வேறு பயன்கள் என்ன..?


தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த
ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால்
நீராரைக் கீரையது நீ
     
- அகத்தியர் குணவாகடம்..

பொருள்...

இது நன்கு சுவையைத் தரும்.  மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும்.  முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும்.  அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்..

நான்கு இதழ்களைக் கொண்ட இவை நீர்பகுதிகளில் அதிகம் வளர்வதால் இதனை நீராரை எனவும் அழைக்கின்றனர்.

இக்கீரையை சமைத்து உண்டு வந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்..

நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும்  அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆரைக்கீரை சூப்..

ஆரைக் கீரை        - 1 கைப்பிடி

கறிவேப்பிலை    - சிறிதளவு

கொத்தமல்லி இலை    - சிறிதளவு

சின்ன வெங்காயம்     - 5

பூண்டுப்பல்        - 3

மிளகு        - 5

சீரகம்        - 1 ஸ்பூன்

சோம்பு        - 1 ஸ்பூன்

இஞ்சி        - 1 சிறு துண்டு

உப்பு        - தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும்.  அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும்.  மலச்சிக்கல் தீரும்.  அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது.  பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும்.

வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்...

புதிய கட்சியை தொடங்கிய கவுதமன்...


பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க...


கிராமப் பகுதியில் மாலை நேர விளையாட்டுகளில் இந்த பச்சைக்குதிரை விளையாட்டு நிச்சயம் இருக்கும், அதுவும் நிலா வெளிச்சத்தில் தான் அதிகம் விளையாடுவோம். பக்கத்து வீட்டு பசங்க, அவர்கள் உறம்பறை பசங்க என எல்லாரும் கூட்டமாக சேர்ந்து சின்ன பையனில் இருந்து பெரியவர் வரை வரிசையாக நின்று கொண்டு, அதில் ஒருவனை தேர்ந்தெடுத்து குனிய வைத்து வரிசையாக தாண்டுவதும், தாண்ட முடியாமல் கீழே விழுபவர்களைக் குனிய வைத்து விடுவோம்.

குனிந்து இருப்பவர் படிப்படியாக உயரம் அதிகரித்து குனிந்து நிற்பார், அப்போது தூரத்தில் இருந்து ஒடியாந்து குதித்து தாண்டும்போது சுற்றி இருப்பவர்களின் கரவோசம் மிக சந்தோசமாக இருக்கும், இதில் வெற்றி பெறுபவர்கள் 10 நாளைக்கு இந்த கதையவே சொல்லி சொல்லி மகிழ்வார்கள்...

இன்றைய குழந்தைகளிடம் பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க என்று சொல்லிப்பார்த்தால் பேந்த பேந்த விழிக்கின்றனர் இதைப்போன்ற பல விளையாட்டுக்களை அவர்கள் அறியாமலே இருக்கின்றனர் என்பது தான் மிக வருத்தமான செய்தி. குழந்தைக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தாலும் பெற்றோர்கள் இது போன்ற பழைய விளையாட்டுக்களை சொல்லித்தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை..

நிச்சயம் தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லாம் நம் சிறார் வயதில் இந்த விளையாட்டை ரசித்து அனுபவத்து விளையாடி இருப்போம்.. நம் அனுபவத்தை அசைபோடுவோம்...

அவர்கள் என நான் கூறுவது குறிப்பிட்ட சமூகத்தை அல்ல, அவர்கள் என்பது உலக பெரும் பணக்காரர்கள் மற்றும் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் என கூறி நம்மை அடிமையாக நடத்துபவர்களை...


விமர்சனம்...


விமர்சனங்கள் பல வகையானவை. அவற்றை எப்படி எதிர்கொள்வது?
 
காகித அம்பு: சில விமர்சனங்கள் எந்த ஆழமும் அர்த்தமும் இன்றி, மேம்போக்காக திட்டம் எதுவும் இன்றி சொல்லப்படும். இத்தகைய விமர்சனங்களை அதிக முக்கியத்துவம் தராமல் புறம் தள்ளுங்கள்.

கால்பந்து: சில விமர்சனங்கள், விளையாட்டாக, உங்களின் முக்கியத்துவம் தெரியாமல் நேரம் கழிப்பதற்காக அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்படும். விளையாட்டு கால்பந்தாக அதைத் திருப்பி அனுப்புங்கள்.

கண்ணாடி: சில விமர்சனங்கள் உங்களுடைய தற்போதைய நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி போல அமையும். உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

கத்தி: சில விமர்சனங்கள் உள்நோக்கோடு உங்களைக் காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும். நீங்கள் காயப்பட்டு விடாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியைப் பிடிப்பது போல அவர்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள். விலகி விடுங்கள்...

அதிமுக எடப்பாடியின் ஏமாற்று வேலைகள்...


சோழர் ஆட்சியில் மருத்துவம்...




சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை எனும் இலவச மருத்துவ முகாம் இருந்துள்ளது.

மற்றும் மருந்து எழுதிக் கொடுக்கும் பணியாளரும் சல்லியக் கிரியை என்றழைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றியும் கல்வெட்டு உள்ளது.

மருந்து இட பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

கல்வியோடு மருத்துவமும் கற்றுக் கொடுத்த கல்லூரியும் இருந்துள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்ட கூலி விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன...

சக்கரை யால் நோய் எப்படி வருகிறது...


இப்படி உன் உணவு முறையை மாற்றி கெமிக்கல் விஷத்தை உட்செலுத்துகிறான் கார்பரேட் நாய்கள்...

இறுதி எச்சரிக்கை… உலகம் அழியப் போகிறது – அலூனா சொல்லும் செய்தி...


இது இறுதி எச்சரிக்கை… எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள். நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல் கலந்து, நீர் நிறைந்து வரக் கூடிய பேரழிவைக் கண்களால் காணப் போகிறீர்கள்…

18,000 அடி உயர மலை உச்சியில் உட்கார்ந்து அவர் சொல்லுவதை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார் மொழி பெயர்ப்பாளர்.

அவர் கண்களில் அத்தனை பயம். சொன்னவர், அமைதியாக எழுந்து அங்கு பச்சை பசுமை, காய்ந்த மஞ்சளாக மாறிக் கிடக்கும் செடிகளை தடவியபடி நடக்கிறார்.

ஸ்பெயின் நாட்டின் கடற்கரையொட்டி இருக்கும் சியரா நிவேடா (SIERRA NEVADA) பகுதியின் டே சேந்த மார்டா ( de SANTA MARTA) மலைப் பகுதி. பல ஆயிரம் வருடங்களாக இங்கு வசித்து வரும் பூர்வகுடிகளான “கோகி” (KOGI) மனித சமுதாயத்துக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கிறார்கள்.

எந்த ஆராய்ச்சியாளர்களும் இதுவரை ஆராய்ச்சி செய்திடாத ஓர் இனம் கோகி. அவர்களை அத்தனை எளிதாக நெருங்விட முடியாது.

அப்படியானவர்கள், 1990-ம் ஆண்டு, பிபிசி நிறுவனத்தின் ஆவணப்பட இயக்குநர், ஆலன் எரெரா ( ALAN ERERA ) என்பவரை அழைக்கிறார்கள். தங்களின் இளைய சகோதரர்களான பிற மனிதர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறார்கள். அந்த செய்தி…

இளைய சகோதரர்களுக்குப் புரியவில்லை. தாய் பூமியை அதிகளவில் காயப்படுத்தி வருகின்றனர். அவளின் இதயம் காயப்படுகிறது. மண்ணைத் தோண்டுவதை, மரங்கள் வெட்டுவதை, கடலை அசுத்தப்படுத்துவதை, இயற்கையை அழித்து நீங்கள் ஏற்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துங்கள். இல்லையென்றால் சூரியன் கோபம் கொள்வான்… வெப்பத்தை கக்குவான். பனிமலைகள் உருகும். நிலங்கள் சரியும். தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும். இன்னும், இன்னும் அழிவுகளை இந்த உலகம் சந்திக்கும். ஆகவே, தயவு செய்து நிறுத்திவிடுங்கள்…

உலகின் இதயத்திலிருந்து… (FROM THE HEART OF THE WORLD) என்ற அந்த ஆவணப்படத்தில் அவர்கள் சொன்ன பல விஷயங்கள் நாம் கடந்து வந்த ஆண்டுகளில் நடந்தேறியுள்ளன. பல ஆண்டுகள் கழித்து ஆலனுக்கு அவர்களிடமிருந்து மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. அது “அலுனா” (ALUNA) என்ற ஆவணப்படத்துக்கு வித்திட்டது. அது மனித சமுதாயத்தின் இறுதி எச்சரிக்கைக்கானது.

அது மிக மிக மிக நீண்ட வருடங்களுக்கு முன்பு… அப்போது பூமியில் ஏதுமில்லை. ஏன், சூரிய, சந்திரன் கூட இல்லை. பூமி, முழுக்க முழுக்க நீரால் நிரம்பியிருந்தது. நீருக்கு சில உணர்வுகள், எண்ணங்கள் இருந்தன. எண்ணங்கள் இன்றி, வாழ்வில்லை என்று நம்புகிறார்கள் கோகிகள்.

அப்படியான எண்ணங்களோடு அவர்கள் உரையாடுகிறார்கள். தேங்கி நிற்கும் நீரின் எண்ணங்களோடு அவர்கள் உரையாடும்போது, நீர் சலசலக்கிறது. இதை “மாமோ”க்கள் எனும் குருமார்கள் செய்கிறார்கள்.

ஒரு “கோகி”, “மாமோ”வாக மாற வேண்டுமென்றால் 18 ஆண்டுகள் அவர் வெளிச்சத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டும். எல்லாவற்றுடனும் எண்ணங்களோடு மட்டுமே உரையாட பழக வேண்டும். இந்த எண்ணங்களைத்தான் அவர்கள் தெய்வமாக கருதுகிறார்கள். அது தான் “அலுனா”…

இவர்களின் இந்தக் கூற்றுகள் வெற்று பிதற்றல்கள் கிடையாது. இவர்கள் வசித்து வரும் சாந்தே மார்டா மலைப்பகுதியை அறிவியல் ரீதியாக “பூமியின் பிம்பம்” என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பனிமலை, பசுமை மாறாக் காடுகள், பாலைவனம் என பலதரப்பட்ட நில அமைப்புகளும் ஒரே இடத்தில் இருக்கின்றன. இங்கு ஏற்படும் மாற்றங்கள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிப்பதாகச் சொல்கிறார்கள். தென் அமெரிக்க கடற்கரையை ஒட்டி இருக்கும் ஆண்டஸ் (ANDES ) மலைத் தொடரின் ஒரு பகுதி தான் சாந்தே மார்டா. ஆனால், அது மட்டும் தனியான டெக்டோனிக் அடுக்குகளைக் ( TECTONIC PLATES) கொண்டுள்ளது பெரும் ஆச்சர்யம்.

வழக்கமாக பூர்வகுடிகளிடம் காணப்படும் கோபம் இவர்களிடம் அதிகமில்லை. இன்றும் கூட பிற மனிதர்களை சகோதர்களாகத் தான் கருதுகிறார்கள். தங்களின் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் சில திட்டங்களை மிக மென்மையான முறையிலேயே இவர்கள் எதிர்த்தனர். பிபிசியின் முதல் ஆவணப்படம் வெளியானதும், ஸ்பெயின் நாட்டு மன்னர் இவர்களை நேரடியாகச் சென்று சந்தித்தார்.

அது முதல், ஸ்பெயின் நாட்டில் பதவியேற்கும் எந்த பிரதமரும் இவர்களை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கோகிக்களின் மூதாதைய இனம் “டைரோனா” ( TAYRONA ) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மலையடிவாரத்தில் ஒரு நகரத்தையே அமைத்து இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு விலையுயர்ந்த தங்கம் உட்பட பல புதையல்கள் மண்ணில் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அவர்களின் விலைமதிப்பற்ற வரலாற்று சுவடுகளும் அங்கிருக்கின்றன. அதை ஆராய முற்பட்ட ஸ்பெயின் அரசை இவர்கள் எதிர்த்தனர். இருந்தும் அரசாங்க ஆதரவோடு சில கொள்ளைக்கார கும்பல் புதையல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தங்கள் வரலாறுகளைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் கோகிகள்.

தங்களின் வரலாற்றைக் காக்க போராடும், சில ஆயிரங்களைக் கொண்ட ஓர் இனம்… தங்கள் வரலாற்றைத் தொலைத்து நிற்கும் ஒரு தேசிய இனம்… கீழடியில் நடக்கும் “வரலாற்றுத் தொலைப்பு” நிகழ்வை இதோடு பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நாங்கள் இந்த இயற்கையின் விதைகள்… சகோதரர்களே உங்கள் பேராசையின் பொருட்டு, நீங்கள் வாழும் இந்த பூமியை, நீங்களே அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு பேரழிவுக்குத் தயாராகுங்கள்… என்று தீர்க்கமான பார்வையோடு சொல்கிறார் , 102 வயதான கோகி “மாமோ”..

மீண்டும் கண்களை மூடி தண்ணீரோடு உரையாடத் தொடங்குறார். இந்த முறை அதில் அதிகமான அதிர்வலைகள் ஏற்பட்டன… அது அலுனா...

மூலிகை பெட்ரோல்... தமிழர் தற்சார்பு.. வாழ்த்துகள் ராமர்...


இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும்...


தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது...

இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர்
"இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார்.

அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.

அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாஜியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாஜி ஜெனரல் திலானை அழைத்து கூறினார் -- " இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள்..

இவர்கள் தாவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து" என்றாராம்..

பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். " தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்"..

இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் ஜெனரல் கியானி கூறுகிறார். " தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்டபோதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.

நேதாஜியின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார் " மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூலையில் கட்டியாக உள்ளது" என்றார்.

அதற்க்கு பதில் அளித்த நேதாஜி "
இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் " என்று கூறினார்.

1945 இல் மார்ச் மாதம் நேதாஜி படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள் தூக்கிலிடபட்டனர்..

இந்தியா விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. ஒரு தமிழனாக பிறந்ததால்தான் ராமுத்தேவர், இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை.

தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாஜி 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16 பேர்கள் தமிழர்கள். ஒரு ஈழத்தமிழர் உட்பட..

இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில் 2500 பேர் அணிதிரண்டனர். உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14 வயது சிறார்களும் 16 வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர்..

ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாக இ.தே. ரா.க்கு நேதாஜியிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாஜி பெற்று கொண்டார்.

நேதாஜியை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாஜி சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர்..

ஜெர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில் உள்ள பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி.

நேதாஜியின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு ஜெர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார். குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம்..

மலேயாவிலும் நேதாஜிக்கு ஆதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துஸ்தான் போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன..

ராணி ஜான்சி படையின் தலைவியாக கேப்டன் இலட்சுமி இருந்தார். இந்த படையில் கேப்டன் ஜானகி தேவர் பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தியாவில் பிறக்காதவர், இந்தியாவை பார்க்காதவர். எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள்.

விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரிய மறுத்து தூப்பாக்கி ஏந்தி ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள்.

அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது..

அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் - நேதாஜி...

பாஜக காரனுங்க கருப்பு பணத்தை கொண்டு வருவானுங்க என்று நம்புறவன் ஒரு அடி முட்டாளா தான் இருப்பான்...


நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி...


மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.

சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே “NO” என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மேலும் பயணிப்போம்.....

தமிழகத்தின் விளையாட்டு செய்திகள்...


மராட்டிய ரஜினி கலாட்டா...


இந்த 7 பேரை பத்தி கேட்கவா நீங்க கூட்டமா நிக்குறீங்க..

சாரி நா நீங்க பேட்டை பத்தி கேட்கப்போறீங்கன்னு நெனச்சேன்..

மக்கள்பிரச்னை பத்தி நோ கமெண்ட்ஸ்...

நான் முதல்வராக வந்தா தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்வேன், வேற எதாவது கேள்வி இருக்கா...

பணத்தின் கவர்ச்சி...


ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் பரவாயில்லை.

இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்னெறியைப் பற்றியும், அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.

ஒரு மனிதன் நிகழ்  காலத்தில் வாழும் போது மட்டும் தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.

பணம் என்பது எதிர்காலம்.
எதிர்காலத்துக்கான பாதுகாப்பு.
அதிகாரத்தின் அடையாளம்.

அதனால் தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.

ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது. ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது.

மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.

ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள்.

அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.

அது பணமாக இருக்கலாம்;
அதிகாரமாக இருக்கலாம்;
தன்  மதிப்பாக இருக்கலாம்;
மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம்;
நல்ல குண நலன்களாக இருக்கலாம்.

இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்..

இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை.

இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள். அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.

வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள்.

உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார். எதிர்காலத்தை விட்டுவிடு. அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்...

சர்கார் வசுலில் சாதனை என்று சொன்னவன் எல்லாம் வாங்கடா...


பாஜக மோடிஜியின் அடுத்த அதிரடி இன்கமிங் கால்களுக்கும் கட்டணம்...


இனிமேல் செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதாம்.. 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல இன்கம்மிங் காலுக்கும் காசு கட்ட வேண்டுமாம்.. வாழ்க ஜியோ அம்பானியின் கார்ப்ரேட் மேனேஜர் பாஜக மோடியின் ஆட்சி..

இந்த விகடன் கட்டுரையை முழுதும் படியுங்கள் புரிந்துகொள்வீர்கள்..

உங்களுடைய வேலிடிட்டி XX-ம் தேதியுடன் முடிவடைகிறது; எனவே அவுட்கோயிங் கால்கள் அனைத்தும் XX-ம் தேதியுடன் நிறுத்தப்படும். சேவையைத் தொடர வேண்டுமென்றால் உடனே வேலிடிட்டி ரீசார்ஜ் செய்யவும் - இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்குக் கடந்த வாரத்தில் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வந்திருக்கலாம்; வராதவர்களுக்கு இனிமேல் வரும். எதற்காக திடீரென இப்படி வருகிறது எனக் குழம்புகிறீர்களா?

இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்...

மேலே பார்த்தது போலவே எனக்கும் சமீபத்தில், உங்கள் அவுட்கோயிங் கால்கள் இந்தத் தேதியுடன் நிறுத்தப்படும் என ஒரு மெசேஜ் வந்தது. இத்தனைக்கும் என்னுடைய மெயின் பேலன்ஸ் ஜீரோவும் இல்லை; சரி, ஒரு 20 ரூபாய்க்கு டாப் அப் செய்துவிடுவோம் என நினைத்து டாப் அப் செய்தேன். இப்போது என் மெயின் பேலன்ஸ் 32 ரூபாய். ஆனாலும், அந்த மெசேஜ் வருவது நிற்கவில்லை. ஏதோ டெலிகாம் ஆபரேட்டர் பிரச்னை என நினைத்து ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால், உங்களுடைய வேலிடிட்டி முடிந்துவிட்டதால்தான் மெசேஜ் வந்திருக்கிறது. ஒன்றும் பிரச்னையில்லை. வேலிடிட்டிக்காக ஸ்மார்ட் ரீசார்ஜ் ஏதேனும் செய்தால் போதும்; சரியாகிவிடும்" என்றனர்.

இதென்ன புதிதாக ஸ்மார்ட் ரீசார்ஜ்... இதுவரைக்கும் மெயின் பேலன்ஸ் மட்டும்தானே டாப்அப் செய்தோம்... என்றால், இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்தத் திட்டம் தொடங்கியிருக்கிறது. இனிமேல் இப்படித்தான் சார்" என்றனர். சரி, அந்த ஸ்மார்ட் ரீசார்ஜ்தான் என்னவெனப் போய் பார்த்தால், இதுவரைக்கும் நாம் சிம்மிற்கு செலவு செய்த விதத்தையே மொத்தமாக மாற்றும் விதமாக இருக்கிறது அதன் விலைப்பட்டியல். குறைந்தது 35 ரூபாயிலிருந்து தொடங்குகிறது இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ். 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 26.66 ரூபாய் டாக்டைம்; 100 MB டேட்டா. கூடவே 28 நாள் வேலிடிட்டி. இதுதான் இங்கே முக்கியம். இந்த 35 ரூபாய்க்கு அடுத்த 28 நாள் மட்டும்தான் வேலிடிட்டி; அதற்குப் பின்னர் உங்கள் மெயின் பேலன்ஸில் பணம் இருந்தாலும், இல்லையென்றாலும் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் நோ அவுட்கோயிங்; நோ இன்கமிங். இந்த ஸ்மார்ட் ரீசார்ஜில் அதிகபட்ச வேலிடிட்டியே 84 நாள்கள்தான். 245 ரூபாய் பிளான் இது. அதற்குப் பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்யவேண்டும். இல்லையெனில் மெயின் அக்கவுன்ட்டில் பேலன்ஸ் இருந்தாலும் பயன்படுத்த முடியாது..

இந்த ஸ்மார்ட் ரீசார்ஜ் இல்லாமல் 5,000 ரூபாய்க்கு டாக்டைம் ரீசார்ஜ் செய்தால்கூட, அந்த 5,000 ரூபாய் என்பது டாக்டைம்க்கு மட்டும்தான் லைஃப்டைம் வேலிடிட்டி. அவுட்கோயிங்கிற்கு 28 நாள்தான். மீண்டும் 35 ரூபாய்க்கு மெயின் பேலன்ஸில் இருந்தோ அல்லது தனியாகவோ ரீசார்ஜ் செய்யவேண்டும். அப்போது அந்த 5,000 ரூபாயிலிருந்து கழிக்கப்பட்ட 35 ரூபாயில் மீண்டும் 26.66 ரூபாய் மெயின் பேலன்ஸில் சேர்ந்துவிடும். இப்படி ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தினால் மட்டுமே இனி இன்கமிங் மற்றும் அவுட்கோயிங். ஒரே ஒருமுறை ரீசார்ஜ் செய்துவிட்டு, எப்போதும் இலவசமாக இன்கமிங் சேவையைப் பயன்படுத்தலாம் என்பதெல்லாம் இனி இல்லை. இந்தப் பிரச்னை. ஏர்டெல்லில் மட்டும் இல்லை. வோடஃபோனிலும்தான். இந்தத் திட்டத்தை முதலில் கொண்டுவந்ததே வோடஃபோன்தான். சரி, எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என டெலிகாம் வட்டாரத்தில் விசாரித்ததில், பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன.

ஜியோவின் வருகைக்குப் பின்னர் இந்திய டெலிகாம் துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அதில் முக்கியமானது பிற டெலிகாம் நிறுவனங்களின் பொருளாதார இழப்பு. இதை ஈடுகட்ட முடியாமல்தான் இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து மூன்றாகிப் போனது. இப்போது இந்தியாவில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் என்றால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் (+ஐடியா) மட்டும்தான். இதுதவிர அரசின் பி.எஸ்.என்.எல். தற்போது இந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்குள்தான் கடும்போட்டி. இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆட்டத்திலிருந்தே விலகிக்கொண்டன. தற்போது இறுதி ஆட்டத்தில் நிற்பது மொத்தம் மூன்றே நிறுவனங்கள்தாம். இதில் ஜியோ மட்டும்தான் அதன் வசந்தகாலத்தில் இருக்கிறது. மற்ற இரு நிறுவனங்களும் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. ஒருபக்கம் ஜியோவோ, வாடிக்கையாளர்கள், வருமானம் என இரண்டிலும் வளர்ந்துவருகிறது. ஆனால், பிற இரு நிறுவனங்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்திய டெலிகாம் துறையில் தற்போது இருக்கும் அளவுக்கு இதற்கு முன்பு பொருளாதார அழுத்தம், கடந்த காலங்களில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே! இந்நிலையில் எதைச் செய்தாவது சந்தையில் தங்களை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகின்றன இந்த இரு நிறுவனங்களும்.

டெலிகாம்...

ஒருபுறம் 4G, 5G போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களை அதிகரிக்கவேண்டும். அதற்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இன்னொருபுறம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும், தக்கவைப்பதற்காகவும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற மதிப்புகூட்டு சேவைகளை வழங்க செலவுசெய்யவேண்டும். இந்தக் கூடுதல் பொருளாதாரச் செலவுகள் தவிர்த்து வழக்கமான பணிகளையும் மேற்கொள்ளவேண்டும். இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில் எப்படித் தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் லாபமின்றியே இயங்கமுடியும் எனக் கேட்கின்றன இந்நிறுவனங்கள். டெலிகாம் நிறுவனங்களுக்கு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக இரண்டு வழிகளில் வருமானம் வருகிறது. ஒன்று, வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் செலவு; இரண்டாவது, Mobile Termination Charge (MTC). முதல் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இரண்டாவது விஷயத்தை மட்டும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவில் இன்கமிங் கால்கள் அனைத்துக்கும் 2003-ம் ஆண்டுக்கு முன்புவரை வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. பின்னர் ட்ராய் இதனை இலவச சேவையாக மாற்றியது. எனவே அவுட்கோயிங் கால்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். டேட்டா போன்றவை கூடுதல் செலவு. இதில் இன்கமிங் காலை பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால், மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் குறிப்பிட்ட கட்டணத்தைப் பரிமாறிக்கொள்ளும். சிறிய உதாரணம் மூலம் பார்ப்போம். ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவர் ஜியோ வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்தால் ஏர்டெல், கால் செய்யும் வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் பெற்றுக்கொள்ளும். இதுதவிர ஏர்டெல் நிறுவனத்திடமிருந்துவரும் காலை, ஜியோ தன்னுடைய வாடிக்கையாளருடன் இணைக்க வேண்டுமென்றால் அதற்கு ஜியோவும் பணம் கேட்கும். இதை ஏர்டெல்லிடமிருந்து பெற்றுக்கொள்ளும். இந்த விதி, பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கால்களை தங்கள் நெட்வொர்க்குடன் கனெக்ட் செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த முறைக்கு Calling Party Pays என்று பெயர். இதனை முற்றிலுமாக எதிர்க்கிறது ஜியோ.
வோடஃபோன்

அதாவது, கால்களை கனெக்ட் செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் தருவதே அவர்களின் நெட்வொர்க்கிற்கான முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்காகத்தான். ஆனால், தற்போது சந்தையில் இருக்கும் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை, இதுவரை பெற்ற லாபம் மூலம் திரும்பப்பெற்றுவிட்டன. எனவே, இந்த MTC கட்டணத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ட்ராயிடம் சொன்னது ஜியோ. மற்ற நிறுவனங்களோ இப்போது MTC-க்காக பிற நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிமிடத்துக்கு 14 பைசாவில் இருந்து 30 பைசாவாக உயர்த்தவேண்டும் என்றன. இந்த விவாதம் நடந்தது கடந்த ஆண்டு பிற்பகுதியில். இறுதியில் இதுதொடர்பாக புது அறிவிப்பை வெளியிட்ட ட்ராய், MTC கட்டணத்தை 14 பைசாவிலிருந்து 6 பைசாவாகக் குறைத்தது. இந்த விதிமுறை கடந்த ஆண்டு அக்டோபர் முதலே அமலுக்கு வந்தது. இதனால் ஜியோ தவிர பிறநிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன. இந்தப் பிரச்னை ஒருபக்கம் என்றால், குறைந்துகொண்டே வந்த ARPU இந்த நிறுவனங்களை இன்னும் சிக்கல்படுத்தின.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் அந்த மொபைல் நிறுவனத்துக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்கிறாரோ அதுதான் அந்நிறுவனத்தின் ARPU (Average Revenue Per User). இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவின்படி ஜியோவின் ARPU 135 ரூபாய். ஏர்டெல் ARPU 101 ரூபாய். இந்த ARPU ஜியோவைத் தவிர மற்ற நிறுவனங்களுக்குத் தொடர்ந்து குறைந்துவருகிறது. இதற்குக் காரணம் டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங்கிற்காக ஜியோவையும், இன்கமிங் காலிற்காக மட்டும் ஏர்டெல் மற்றும் வோடஃபோனையும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதுதான். உதாரணமாக ஒருவர் ஜியோ மற்றும் வோடஃபோன் என இரண்டு சிம்களைப் பயன்படுத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் டேட்டாவுக்காக ஜியோவைத் தொடர்ந்து பயன்படுத்துவார். இதனால் ஜியோவுக்குத் தொடர்ந்து வருமானம் வரும். மேலும், ஜியோவின் வாய்ஸ் காலும் இலவசம் என்பதால் வாடிக்கையாளருக்குக் கூடுதல் லாபம். இதுபோக பழைய எண்ணாகவோ அல்லது பேக்அப்பிற்காக மட்டும் வோடஃபோனைப் பயன்படுத்துவார். ஜியோவே இலவசம்தான் என்பதால் தொடர்ந்து அவுட்கோயிங் சேவைகளையும் அதிலேயே பயன்படுத்துவார். ஆனால், அதே சமயம் இன்கமிங் சேவைக்காக மட்டும் வோடஃபோன் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவார். இது வோடஃபோனுக்குப் பெரியளவில் எவ்வித வருமானத்தையும் ஈட்டித்தராது.

ஜியோ...

அந்த வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு 5 மணி நேரம் மட்டும் இன்கமிங் கால் பேசுகிறார் எனில், (300 நிமிடங்கள் * 0.06 பைசா) 18 ரூபாய் மட்டுமே வோடஃபோனுக்குப் பிற நிறுவனங்களிடமிருந்து வருமானமாக வரும். வேறு எவ்வித வருமானமும் வராது. இதுபோன்ற வாடிக்கையாளர்களால் வோடஃபோனின் மொத்த ARPU குறையும். இந்தக் கதை ஏர்டெல்லுக்கும் பொருந்தும். இப்படி ARPU தொடர்ந்து குறைந்தால் அந்நிறுவனத்தின் லாபம், பங்கு விலை போன்ற பல விஷயங்களில் அது எதிரொலிக்கும். எனவே இதுபோன்ற வாடிக்கையாளர்களை நீக்குவதே சரி என்ற முடிவை எடுத்திருக்கின்றன இந்நிறுவனங்கள். அதனால்தான் தற்போது வேலிடிட்டி பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யச்சொல்லி வற்புறுத்துகின்றன. இந்தப் புதிய முடிவின்மூலம் ஒன்று வாடிக்கையாளர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்து தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து சிம்மை அப்படியே வைத்திருந்து டீஆக்டிவேட் செய்துவிட்டு வெளியேறிவிட வேண்டும். நெட்வொர்க்கில் சுமையாக இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிட்டு, மற்ற வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கிட முடியும். இதுதான் இந்நிறுவனங்களின் தற்போதைய திட்டம்.

மேலும், இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. ஜியோவிடம் ஏர்டெல்லும், வோடஃபோனும் தோற்பது டேட்டா விலை விஷயத்தில்தான். அதனால்தான் டேட்டா என்றால் ஜியோவைப் பயன்படுத்திவிட்டு, கால் செய்யவேண்டுமென்றால் மட்டும் இந்நிறுவனங்களை அதிகம்பேர் நாடுகின்றனர். இந்த டேட்டா + வாய்ஸ் கால் விகிதத்தைச் சரிசெய்யவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றன இந்நிறுவனங்கள். தற்போது இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள ஸ்பெஷல் ரீசார்ஜ் பேக்குகள் மற்றும் ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்குகளில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இரண்டையும் சமஅளவில் கலந்தே கொடுக்கின்றன. நீங்கள் 35 ரூபாய் கொடுத்து ஏர்டெல் ரீசார்ஜ் செய்தால்கூட 100 MB டேட்டா கிடைக்கும். 245 ரூபாய் என்றால், 84 நாள்களுக்கு 2 GB டேட்டா கிடைக்கும். இதைப் பயன்படுத்திதான் ஆகவேண்டும். இதன்மூலம் டேட்டாவுக்கு ஜியோ, காலிற்கு ஏர்டெல் என்ற நிலைமை மாறும் என நம்புகின்றன இந்நிறுவனங்கள். இந்தப் புதிய மாற்றத்தால் இதுவரைக்கும் இருந்த 20, 30, 100 ரூபாய் டாப்அப் பேக்குகள் அனைத்தையும் தற்போது இவை நீக்கிவிட்டன. 10 ரூபாய் டாப்அப் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் மெயின் பேலன்ஸ் மட்டும்தான். வேலிடிட்டி இல்லை. எனவே காம்போ பேக்குகள்தான் இவற்றில் ஒரே வழி.

ஏர்டெல்...

இந்த மாற்றங்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட் ஆகிவருகின்றன. ஏர்டெல் இப்போதைக்கு தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் (மேற்கு) மற்றும் பஞ்சாப் ஆகிய தொலைத்தொடர்பு வட்டாரங்களில் மட்டுமே இதை அமல்படுத்தியிருக்கிறது. இங்கே சோதனை முயற்சிகள் முடிந்தபின்பு நாடு முழுவதும் விரிவுசெய்யப்படும். வோடஃபோனும் இப்போதுதான் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளது. இன்னும் சில நாள்களில் பலருக்கும் மேலே பார்த்த மெசேஜ்கள் வரத்தொடங்கலாம். எவ்வித ரீசார்ஜ்களும் செய்யாமல் வெறும் மெயின் பேலன்ஸூடன் மட்டும் சிம் கார்டை வைத்திருக்கலாம் என்பது மாறி இனி 28 நாள்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யவேண்டிய நிலைமை வந்திருக்கிறது. எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் டெலிகாம் சேவை என்பது மீண்டும் செலவுமிக்க ஒன்றாக மாறியிருக்கிறது. அவ்வளவுதான். சரி, ஜியோ என்ன செய்யவிருக்கிறது?

ஜியோவைப் பொறுத்தவரை இவையெல்லாம் பிரச்னையே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பலரும் இந்த மாற்றங்கள் பிடிக்காமல் MNP மூலம் ஜியோவுக்கு மாறலாம். அது சாதகமான அம்சமே. இரண்டாவது, ஜியோ இதுபோல புதிதாக எந்த மாறுதல்களும் தன்னுடைய சேவையில் செய்யத் தேவையில்லை. ஜியோ முதல் வருடம் தன் சலுகையை அறிமுகம் செய்தபோதே கட்டணத்தில் தெளிவான திட்டமிடலுடன் களமிறங்கியது. வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி, மியூசிக் போன்ற கூடுதல் சேவைகளை அனுபவிக்க வேண்டுமென்றால், பிரைம் உறுப்பினராக வேண்டுமெனச் சொல்லி அப்போதே ஆண்டுக்கு 99 ரூபாய் வாங்கியது. அதன்பின்பு கட்டண விவரங்களில் மாறுதல்கள் செய்த ஜியோ, வேலிடிட்டி விஷயத்தையும் அதற்கேற்ப மாற்றியது. இப்போது ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்யவேண்டுமென்றால் குறைந்தது 98 ரூபாய் செலவிட வேண்டும். அப்போதுதான் வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டையும் பெறமுடியும். இதுவே  ஜியோ போன் என்றால் 49 ரூபாய். இந்தத் திட்டங்கள் ஏற்கெனவே வேலிடிட்டி மற்றும் கட்டணத்தில் சரியாக இருப்பதால் ஜியோவுக்குப் பெரிய பிரச்னையில்லை. வாடிக்கையாளர்களுக்குத்தான் சிக்கல்கள் காத்திருக்கின்றன.

- விகடன் கட்டுரை...