சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களே..
31/08/2020
கர்நாகத்தில் தமிழ் மொழியின் நிலை...
சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களே..
ஈழத் தமிழினத்தை கருவறுத்த பிரணாப் முகர்ஜிக்கு சோனியாவின் பரிசுதான் குடியரசுத் தலைவர் பதவி...
2012இல் சமூகநீதித் தமிழ்த்தேசம் இதழில் நான் எழுதிய கட்டுரை இது.
தமிழீழ கல்லறையில் குருதி காயுமுன்னே குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது. அப்போது அந்தத் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரித்து ஈழத்துரோகப் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டன. இதை விளக்குவதே இக்கட்டுரை.
( குறிப்பு: மறதி என்பது தமிழர்களுக்கு உண்டு. வரலாற்றுக்கு என்றும் மறதி கிடையாது)
ஈழத் தமிழர் படுகொலைக்குச் சோனியாவின் பரிசு!
சோனியா காங்கிரசுக் கட்சி குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்குத் அதிதீவிரம் காட்டுகிறது.. இந்த அலங்காரப் பதவியில் பிரணாப்பை அமர வைப்பதன் மூலம் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை எளிதாக வெற்றி பெறச் செய்ய முடியுமென்பது சோனியா போடும் கணக்கு. ஒருவேளை தோற்றுப் போனாலும் எதிர்வரும் சிக்கலைச் சமாளிக்க குடியரசுப் பதவியில் தம் கையாள் இருந்தால் உதவக் கூடும் என்பது அவரின் இன்னொரு கணக்கு.
நாற்பது ஆண்டுகள் காங்கிரசுக் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் பிரணாப். அவர் காங்கிரசுக் கட்சியின் நிரந்தர விசுவாசி. குறிப்பாக நேரு குடும்பத்தின் அடிவருடி.பிரதமர் பதவிக்கு ஏங்கித் தவித்தவருக்கு ஆறுதல் பரிசாக இப்பதவி சோனியா கருணையால் கிடைக்க உள்ளது. கருணைக்குக் காரணம் உண்டு.
ஈழத் தமிழினத்தைக் கருவறுக்கத் துடித்த சோனியாவின் கருத்தறிந்து செயல்பட்டவர்தான் இந்தப் பிரணாப் முகர்ஜி. தமிழீழ மக்களைக் கொன்று குவிக்கவே இவருக்கு வெளியுறவுத் துறை வழங்கப்பட்டது. பணி முடிந்ததும் நிதித் துறை வழங்கப்பட்டது.இப்பொழுது குடியரசுத் தலைவராய் முடிசூட்டப்பட உள்ளார். ஈழப்போரின்போது முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி சிங்கள அரசின் ஏவலாளியாகப் பணி செய்தவர். ஈழத் தமிழரின் இரத்தத்தில் நனைந்த கைகள் இவருடைய கைகள்.
இக்கொலைகாரனைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து விருந்து கொடுத்த பெருமைக்குரிய மாமனிதர் தமிழினத் தலைவர் முத்துவேலர் கருணாநிதிஆவார். உதட்டில் ‘டெசோ’ அமைப்பும், நெஞ்சில் பிரணாப்பையும் வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் வித்தையைக் கருணாநிதியைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது.
பிரணாப் மிகச் சிறந்த நிர்வாகி என்று வாய் கூசாமல் புளுகி ஆதரிக்கிறார். கருணாநிதியின் தமிழ்நாட்டுக் கூட்டணியில் உள்ள தொல்.திருமாவளவன், எந்தக் கூட்டணியிலும் இல்லாத மருத்துவர் ராமதாசு, தமிழினத்திற்கு இரண்டகம் செய்வதற்கே பிறப்பெடுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாசு காரத் ஆகியோரும் பிரணாப்பை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர்.
பிரணாப்பை ஆதரிக்கும் மேற்படிக் கட்சிகள் (மார்க்சிஸ்ட் தவிர) முள்ளி வாய்க் கால் படுகொலையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்போது அரங்கேற்றிய நடிப்புக் காட்சிகள் நம்முன்னே விரிகின்றன.
2008 அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி தில்லி அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார். போர் நிறுத்தம் ஏற்படாவிடில், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என அறிவித்தார். அதற்குக் காலக்கெடு வேறு விதித்தார். பிறகு அதே மாதம் 24 ஆம் நாள் மீண்டும் போர் நிறுத்தம் கேட்டு மனிதச் சங்கிலி நடத்தினார். கருணாநிதி நடத்துவதெல்லாம் நாடகமென்று நன்கு அறிந்த தில்லி அரசு அடுத்த இரண்டு நாளில் பிரணாப்பைத் தமிழகத்திற்கு அனுப்பி வைத்து நாடகத்தில் ஒரு திருப்பு முனையை உருவாக்கியது.
போர் நிறுத்தக் கோரிக்கையை அதுவரை வற்புறுத்தி வந்த கருணாநிதியோ பிரணாப்பைச்சந்தித்து விட்டுச் சொன்னார். ‘இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தியளிக்கிறது’.
பிரணாப்பும் கோபாலபுரம் வீட்டு வாயிலில் நின்று செய்தியாளரிடம் பேட்டி கொடுத்தார்.
செய்தியளர் : போர் நிறுத்தம் வருமா?
பிரணாப் : இந்திய அரசு இலங்கை அரசைப் போர் நிறுத்தம் செய்யும்படி கோராது.
செய்தியாளர் : படைக் கருவிகள் கொடுப்பதை நிறுத்துவீர்களா?
பிரணாப் : இலங்கை அரசுக்குப் படைக் கருவிகள் கொடுப்பது இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங் களைப் பாதுகாப்பதற்கு.
செய்தியாளர் : இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்து?
பிரணாப் : இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதை நிறுத்த முடியாது. பன்னாட்டுப் படையினருக்குப் பயிற்சி யளிப்பது போலத்தான் இலங்கைக்கும் பயிற்சி கொடுக்கிறோம்.
பிரணாப்பின் ஆணவம் நிறைந்த பேட்டிக்கு கருணாநிதியிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அவருடைய பதவி விலகல் நாடகமும், மனிதச் சங்கிலி நாடகமும் அப்பட்டமாய் அம்பல மாகியது அன்றுதான்.
அவருடைய உண்ணாநிலைப் போராட்டம் இரண்டாவது நாடகமென்பது தனிக் கதை. தமிழ்க் குடிதாங்கி மருத்துவர் ராமதாசு ஈழத்துத் தமிழ்க் குடிகள் கொல்லப்படுவது தாங்காமல் துடித்தவர்!
19.2.2009 அன்று பழ.நெடுமாறன் தலைமையில் கோவையில் கூடிய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுசி கலையரசன் ஆகியோருடன் மருத்துவர் இராமதாசும் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் (இலங்கை அரசைப் போர் நிறுத்தம் செய்யக் கோரி இந்தியா வலியுறத்த முடியாது என்று கூறிய) பிரணாப் முகர்ஜி பேட்டியைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி தந்த மருத்துவர் இராமதாசு,‘பிரணாப் முகர்ஜியின் இந்தப் பேச்சு சிங்கள இனவெறி இராசபக்சேவுக்கு மிகப் பெரிய துணிச்சலையும் தெம்பையும் அளித்துள்ளது என்றும் இதனைத் தாம் கண்டிப்பதாகவும் கூறினார்.
இப்போது அதே இராமதாசு ‘பிரணாப்பிற்கு மாற்றாக நல்ல வேட்பாளர் யாருமில்லையென்பதால் குடி யரசுத் தலைவர் தேர்தலில் அவரை ஆதரிக்கிறோம் என்கிறார். ‘இன்னைக்கு நல்லவரு, நேத்து ஏம்பா கெட்டவரு’ன்னு வடிவேலு பாணியில் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.
தொல். திருமாவளவனோ பூசாரி பிரணாப்பை விட்டு விட்டு நேராகச் சோனியா அம்மனிடமே முறையிட்டார் ‘தாயே! போரை நிறுத்துங்கள்! என்று. கைகூப்பிக் கேட்டும் அவரின் வேண்டுதல் பலன ளிக்கவில்லை. ‘காங்கிரசை வேரோடு வீழ்த்துவேன்’ என்று அன்று சூளுரைத்த அம்மாவீரரே 2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரசு வேருக்கு முதல் ஆளாக நீரூற்றினார்.
அத்தோடு நீர்த்துப்போனது அவரின் ஈழ விடுதலை அரசியல். மதவாத சக்திகள் தலை தூக்குவதைத் தடுத்து நிறுத்தவே பிரணாப்பை ஆதரிப்பதாக இப்போது கூறுகிறார். காங்கிரசு ஆட்சிக் காலத்தில்தான் பாபர் மசூதியை இடித்தார்கள் என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.
இந்தியப் பெருமுதலாளி வர்க்கக் கட்சியென்று காங்கிரசைக் குற்றம் சாட்டும் மார்க்சிஸ்டு கட்சியின் நிலையோ பரிதாபத்திற்குரியது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஊக்குவிப்பதாக முழங்கி வந்த மார்க்சிஸ்டுக் கட்சியினர் இப்போது பிரணாப்பை ஆதரிப்பதாகக் கூறுகின்றனர்.
பாரதீய சனதாக் கட்சியின் ஆபத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் அவரை ஆதரிக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டனராம்! 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டனர். அன்று பாசகவால் ஆபத்து இல்லை, இன்றோ ஆபத்தாம். இப்படிக் கூறுவதில் இவர்களுக்கு வெட்கமே இல்லை. உண்மையை இவர்களின் கூட்டணிக் கட்சியான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது. மேற்கு வங்க அரசியலில் மம்தா பானர்ஜியின் கை ஓங்கியிருப்பதை இக்கட்சி விரும்பவில்லை.
வரும் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ‘வங்காள இனத்தைச் சேர்ந்த பிரணாப்பைப் புறக்கணித்த மம்தாவிற்கு வாக்களிக்காதீர்!‘ என்று பரப்புரை செய்வதற்கு ஏற்ற வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலை மார்க்சிஸ்டு கட்சிப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது என்று அக் கட்சி ஜனசக்தி ஏட்டில் பகிங்கரமாகவே குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்த் தேசிய அமைப்புகளை இனவாத முத்திரை குத்தும் மார்க்சிஸ்ட்டுகள் வங்காள இனவாதத்தில் மூழ்கிப்போவது வெட்கக் கேடான செயலாகும்.
இந்தித் தேசிய இனத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையில் தமிழினம் தனக்கான உரிமைகளை மீட்டெடுக்கவே முடியாது. குடியரசுத் தலைவரும் இந்த அமைப்பு முறைக்குக் கட்டுப்பட்டவரே. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைப்பதற்கே இவரின் அதிகாரம் பெரும்பாலும் பயன்படுகிறது. இப்பதவியால் தமிழக அரசு மூன்று முறை கலைக்கப்பட்டிருக்கிறது. தமிழக மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படாத ஒருவரைத் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும் புகழ்மாலை சூட்டுவதும் தமிழினத்திற்குச் செய்திடும் இரண்டகமாகும்.
அதைக் காட்டிலும், தமிழின அழிப்பில் கோடாரிக் காம்பாகச் செயல்பட்ட பிரணாப்பை ஆதரிப்பதென்பது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.
இப்போதுள்ள பிரதீபா பாட்டில் மூன்று தமிழருக்குத் தூக்கிலிடும் நாள் குறித்தவர். முன்பிருந்த அப்துல் கலாமோ அணு உலையை ஆதரித்துத் தமிழரின் உயிருக்கு உலை வைத்தவர். அடுத்து பிரணாப் பொறுப்பேற்றால் தாயகத் தமிழர்,ஈழத் தமிழர் ஆகியோரின் துயரம் கூடுமே ஒழிய குறையாது. ஆளும் கட்சிகளின் கைப்பொம்மையாகச் செயல்படும் குடியரசுத் தலைவர்கள் நமக்கு இனி வேண்டவே வேண்டாம். செல்லாத காசைக் கொண்டு ஊர் போய்ச் சேர முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அது போலவே தமிழர்கள் அதிகாரமற்ற குடியரசுத் தலைவர் பதவி மூலம் எந்த உரிமையையும் வென்றெடுக்க முடியாது என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை...
பாஜக மோடியும் இந்தியா விற்பனையும்...
நாட்டிலேயே அதிகபட்சமாக 70,000 கோபுரங்களைக் கொண்ட மிகப்பெரிய நெட் வொர்க் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் உள்ளது.
இந்தக் கோபுரங்களைத் தனியார்மயமாக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லா தனியார் ( அம்பானி )தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் 5 ஜி நெட் ஒர்க் அனுமதி கொடுத்த மோடி..
இது வரை 4 ஜி க்கு கூட பிஎஸ் என் எல் க்கு இது வரை அனுமதி தரவில்லை..
தற்போது வரும் ஏப்ரலுக்குள் அனைத்து லாபமீட்டும் பொது துறை நிறுவனங்களையும் விற்று விடுவோம் என்று அபாய சங்கு ஊதி விட்டார்
அவலட்சண நிர்மலா...
இவர்கள் இன்னும் நான்காண்டுகளுக்குள் இந்தியாவையே கூறு போட்டு விற்று விடுவார்கள்...
இந்த கூறு கெட்ட பாஜக ஆட்சியாளர்கள்...
கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்...
உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.
100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.
அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.
ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.
பி காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.
மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.
கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும ், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை...
தமிழின் பெருமை...
1976 வாவ் அலைவரிசை பற்றி யாருக்காவது தெரியுமா?
அந்த அலைவரிசை வேற்று கிரவாசிகள் அனுப்பியது என்று நாசா முடிவு செய்தது.
ஒரு வேளை வேற்று கிரவாசிகள் பூமிக்கு வந்தார்களேயானால் என்ன மொழி பேசினால் அவர்களுக்கு தெரியும் என ஆராய்ச்சி செய்தார்கள்.
அப்போது கிடைத்த தகவல் படி உலகத்தில் இருக்கும் பழமையான மொழிகளை முதலில் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்தார்கள்.
பின்னர் அவர்களின் ஆராய்ச்சியை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர்.
வேற்று கிரவாசிகள் பேசினால் அவர்களுடன் தொடர்ப ுகொள்ள ஆசிய மொழிகள் இரண்டு மொழிகள் உறுதி செய்யப்பட்டது.
அந்த விலை மதிப்பில்லா இரு மொழிகளான தமிழும், சீனா மொழியும் தான்...
மாதுளையின் மகத்துவம்...
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...
தமிழகத்து தர்கா வழிபாடு...
பள்ளிவாசல் வேறு தர்கா வேறு..
பள்ளிவாசலில் சமயகுரு 5 வேளை பாங்கு கூறி அழைப்பார்.
பிறகு கூட்டு வழிபாடு நடைபெறும்.
இங்கே பிற சமயத்தினரும் இசுலாமியப் பெண்களும் பள்ளிவாசல் செல்வதில்லை.
இந்த குறையை நிவர்த்தி செய்வதே 'தர்கா' வழிபாடு.
தர்கா என்பது இறையடியார் ஒருவர் உடல் அடக்கமான இடத்தைச் சுற்றி எழுப்பப்படும் கோவில்.
(திறந்தவெளிக் கல்லறைகளும் உள்ளன)
பள்ளிவாசலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட பச்சை நிறத்தில் வெள்ளைநிறப் பிறை நிலாவும், விண்மீனும் கொண்ட கொடி ஏற்றப்பட்டிருக்கும்.
இங்கே அந்த இறையடியாரை யாரும் வணங்குவதில்லை.
அந்த இறையடியாருக்காக ஆண்டவனிடம் வேண்டுகிறார்கள்.
இங்கே பல்வேறு சமயத்தவரும் இசுலாமியரும் வந்து போகிறார்கள்.
நேரக்கட்டுப்பாடு இல்லை.
வழிபாட்டு விதிகள் இல்லை.
அதாவது தமது ஊரில் ஒரு பெரிய மனிதர் மறைந்தபிறகு (அவர் இசுலாமியராய் இருந்தாலும்) அவ்வூர் மக்கள் (பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்) அவரது நினைவைப் போற்றும் நாட்டார் வழிபாட்டு முறையே தர்கா வழிபாடு..
சீறாப் புராணம் எழுதிய உமறுப்புலவரின் திறந்தவெளி தர்காவை சுற்றி (பிள்ளைப்பேறு நேர்த்திக் கடனுக்காகக்) கட்டிடம் எழுப்பியவர் 'பிச்சையாக் கோனார் என்பவராவார்.
இறையடியார்கள் இறைவனடி சேர்ந்த நாளில் 'சந்தனக்கூடு' விழா நடக்கிறது.
பத்து நாட்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கம்பில் பச்சைநிறத்தில் பிறை மற்றும் விண்மீன் கூடிய துணி கட்டி ஊர்வலமாக எடுத்துச்சென்று தர்காவின் வாசலில் கட்டுவார்கள்.
(இது தமிழர்கள் அனைவரும் திருக்கோவில்களில் விழா எடுக்கும் முன்பு கொடியேற்றும் வழக்கம்தான்.
தமிழக கத்தோலிக்க தேவாலயங்களிலும் இத்தகைய கொடியேற்றம் உண்டு).
பிறகு பத்துநாட்கள் கல்லறையைச் சுற்றி அமர்ந்து தமிழிலும் அரபியிலும் இறையடியாரின் புகழைப் பாடுவார்கள்.
பத்தாம் நாளில் சந்தனத்தைக் குழைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சந்தனக்கூடை சுமந்து ஊர்வலமாக எடுத்துச்செல்வர்.
இதற்கு பரம்பரை பரம்பரையாக மாடும் வண்டியும் தருவோர் பல்வேறு சமயத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பர்.
இவ்வூர்வலத்தில் சிலம்பாட்டம் கழியாட்டம் போன்ற தமிழ் கலைகளும் இடம்பெறும்.
பிறகு சுமந்துவந்த குடத்திலிருந்து சந்தனத்தை கல்லறை மீது பூசுவர்.
பிறகு சிறிதளவு சந்தனத்தை வீடுகளுக்கு எடுத்துச்செல்வர்.
பிறகு கந்தூரி விருந்து நடைபெறும்.
இதற்கான செலவு அவ்வூர் மக்கள் அனைவரிடமும் பெறப்பட்ட வரியிலிருந்து கிடைக்கிறது.
(நன்கொடை அதிகம் கிடைக்கும் சில பெரிய தர்காக்கள் விதிவிலக்கு).
இரவு அவ்வூரார் அனைவரும் மதவேறுபாடின்றி அமர்ந்து இறைச்சி விருந்து உண்பார்கள்.
தமிழகத்தில் மிக பழமையான தர்கா இராமேஸ்வரத்திலுள்ள ஆபில் காபில் தர்கா.
இவர்கள் ஆதாமின் மகன்கள் ஆவர்.
(ஆபெல், கெய்ன் என்று பைபிள் கூறுகிறது).
மிகவும் புகழ்பெற்ற தர்கா 'நாகூர் தர்கா' ஆகும்.
இவரை 'முகைதீன் ஆண்டவர்' என்று எல்லா மதத்தினரும் அழைக்கின்றனர்.
இதுபோல குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பீர்முகமது தர்கா,
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு அருகிலுள்ள ஏர்வாடி செய்யது இப்ராகிம் தர்கா,
திருச்சியிலுள்ள நத்தார்வலி தர்கா,
ஆகியன குறிப்பிடத்தகுந்த தர்காக்கள்.
இது தவிர வட்டார ரீதியாக புகழ்பெற்ற பல தர்காக்கள் உள்ளன.
நாகூர் தர்கா விற்கு அச்சுதப்பநாயக்கர் எனும் தெலுங்கு மன்னர் முப்பது வேலி நிலம் வழங்கியுள்ளார்.
இதே தர்காவிற்கு தஞ்சை மராட்டிய மன்னர் 'துக்கோசி' 131 அடி கோபுரம் கட்டித்தந்து இளங்கடமனூர் எனும் ஊரையும் நன்கொடை அளித்துள்ளார்.
இன்று தஞ்சை மராட்டிய மன்னர் கந்தூரி அன்று குடும்பம் சந்தனமும் பட்டுசால்வையும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நாகூர் தர்காவின் கல்லறை மீது போர்த்தப்படும் போர்வை சென்னையைச் சேர்ந்த 'பழனியாண்டிப் பிள்ளை' என்பவரது பரம்பரையினர் அனுப்பி வைக்கின்றனர்.
கோரிப்பாளையம் தர்கா விற்கு கூன்பாண்டியன் (சுந்தரபாண்டியன்) எனும் பாண்டிய மன்னன் 15000 பொன் வழங்கியுள்ளான்.
இதில் ஏற்பட்ட ஒரு பூசலை தீர்த்து பொறிக்கப்பட்ட நாயக்கர்கால கல்வெட்டுச் சான்று உள்ளது.
அருப்புக்கோட்டை பள்ளிவாசல் கட்ட நிலம் கொடுத்தவர்கள் (தெலுங்கு) நாயக்க மக்கள்.
ஏர்வாடி தர்கா விற்கு 'முத்துக்குமார் விஜயரகுநாத சேதுபதி' எனும் சேதுபதி மன்னர் விளை நிலங்களையும் சில வரிகளைகளையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
இதே மன்னர் 1745ல் புதுக்குளம் ஊரை 'ஆபில் காபில் தர்கா'வுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இத்தர்காவில் 19 வலிமார்கள் சமாதிகள் உள்ளன.
இங்கே பல்வேறு சாதியார் பரம்பரை பரம்பரையாக சில பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்.
இங்கே சந்தனக்கூடு குடம் கொண்டு செல்லும் மரக்கூட்டினை வழங்குவோர் ஆசாரிகள்.
கூடுகட்ட கயிறு, நார் போன்றவை நாடார்கள் பொறுப்பு.
கூடு அலங்கரிப்பு பறையர் மற்றும் கோனார் பொறுப்பு.
நெய்பந்தத்துணி வண்ணார்கள் பொறுப்பு.
சந்தக்கூடு விழாவில் அனைத்து மதத்திலிருந்தும் 2லட்சம் பேர் கூடுவர்.
திருநெல்வேலி-மதுரை சாலையில் காட்டுப் பள்ளிவாசல் என்ற தர்கா உள்ளது.
'இப்ராகிம் ராவுத்தர்' என்பவரும் அவரது நண்பர் 'முத்துக்கோனார்' என்பவரும் இங்கே அடக்கமான இறையடியார்களுக்கு சிறிய அளவில் வழிபாட்டைத் தொடங்கினர்.
இன்று கூரையில்லாத கட்டிடம் தர்காவாக இயங்குகிறது.
மதுரையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் திருப்பத்தூர் அருகேயும் ஒரு "காட்டுப் பள்ளிவாசல்" இருக்கிறது.
ஏழு பார்ப்பனப் பெண்களையும் இரண்டு பிராமணக் குழந்தைகளையும் காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த 'சையது பக்ருதீன்' அடக்கமான தர்கா இது.
இராமநாதபுரம் மன்னர் 'கிழவன் சேதுபதி' (1674-1710) இத்தர்காவுக்ககு கொடைகள் வழங்கியுள்ளார்.
இங்கே நடக்கும் சந்தனக்கூடு விழாவில் கள்ளர் சாதியினர் பெருமளவு கலந்து கொள்கின்றனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு பார்ப்பன பெண்ணுக்கும் அவரை கள்வர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த "பக்கிரி சாய்பு"வுக்கும் தர்கா உள்ளது.
தூத்துக்குடி வைப்பாறு சிற்றூரில் "ஒலியுல்லா தர்கா"வின் கந்தூரி விழாவில் தெலுங்கு கம்பளத்து நாயக்கர்கள் பெரிய பங்களிப்புகளைச் செய்கின்றனர்.
ஊத்துமலை தேவர்குளம் அருகே "கான்சாமாடன்" எனும் தர்காவை மறவர் மக்கள் வணங்குகின்றனர். ஊத்துமலை ஜமீன்தார்கள் முன்னின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை நடத்துகின்றனர்.
ஊர்மக்கள் பசுமாடு ஈன்றபிறகு கறக்கும் முதல் பாலை இச்சமாதியில் ஊற்றுகின்றனர்.
நாகூருக்குத் தெற்கேயுள்ள "முத்துப்பேட்டைத் தர்கா" 'கருப்பையாக் கோனார்' என்பவர் கட்டியதாகக் கூறுகிறார்கள்.
திருப்பத்தூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள "அகோரி கானுமியா ஒளி" தர்காவிற்கு மருதுபாண்டியர் மானியம் வழங்கியுள்ளனர்.
கி.பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மீனாட்சி சுந்தரம் ஐயர் தமிழிலும் இசையிலும் நல்ல புலமை பெற்றவர்.
அவர் இசுலாத்தைத் தழுவி 'மீனா நூர்தின்' என்று பெயரை மாற்றிக்கொண்டார். இவரது தர்கா மதுரை தெற்கு வெளிவீதியில் உள்ளது.
நாகப்பட்டிணத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் இடையில் "பாப்பாக்கோயில் தர்கா" உள்ளது.
இரண்டு இறையடியார்களுடன் இசுலாத்தைத் தழுவிய பார்ப்பனப் பெண் (ஹபீஸ் அம்மா) ஒருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்-பெங்களூர் சாலையில் தொப்பூர் என்ற இடத்தில் "ஹாவாலிக் தர்கா" உள்ளது.
இங்கேயும் இசுலாமைத் தழுவிய பார்ப்பனப் பெண் அடக்கமாகியுள்ளார்.
இங்கே அசைவ விருந்து கிடையாது.
இங்கே அன்னதானம் நடக்கும்போது முதலில் இசுலாமியரல்லாத சிலருக்கு வழங்கிவிட்டு பிறகே அனைவருக்கும் அன்னதானம் தொடங்குகிறது.
தஞ்சை நகரின் கிழக்கே மாரியம்மன் கோவில் பழைய தெருவில் "பாப்பாத்தியம்மன் தர்கா" உள்ளது.
இவரும் பார்ப்பனராயிருந்து இசுலாமைத் தழுவியவரே.
கி.பி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ நாயன்மார் சேரமான் பெருமாள் (சேர மன்னர்).
'பொன்வண்ணத்தந்தாதி', 'திருவாரூர் மும்மணிக்கோவை', 'திருக்கயிலாய ஞான உலா' போன்ற சைவ இலக்கியங்களைப் படைத்துள்ளார்.
இவர் சுந்தரரின் நண்பர்.
கேரளமான்மியம் என்ற வடமொழி நூலும் கேரளோற்பத்தி என்ற மலையாள நூலும் இவர் மெக்கா சென்று நபிகள் நாயகம் முன்னிலையில் இசுலாமைத் தழுவியதாகக் கூறுகின்றன.
'சிராஜிதின்' என்று பெயர் மாற்றிக் கொண்டாராம். திரும்பும் வழியில் மரணமடைந்ததாகவும் இவரது உடல் தூத்துக்குடி குலசேகரப் பட்டிணம் அருகே கரை ஒதுங்கியதாம்.
அங்கேயே கடற்கரையில் இவருக்கு தர்கா உள்ளது.
இங்கே கல்லறை அறையில் ஒரு சன்னல் சிதம்பரனாதர் கோவிலின் நுழைவாயிலுக்கு நேராக அமைக்கப்பட்டுள்ளது.
அதன் வழியாகப் பார்த்தால் கோவிலின் கருவறையைக் காணமுடியும்.
திருநெல்வேலி நான்குநேரி அருகே விஜயநாராணம் என்ற ஊர் உள்ளது.
அங்கே செய்யது முகம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை என்பவர் வசித்துவந்தார்.
இவரது நண்பர் மாடசாமித் தேவர்.
மாடசாமித் தேவரின் தங்கைக்கும் மேத்தப்பிள்ளைக்கும் தவறான உறவிருப்பதாக மேத்தப்பிள்ளையின் வேலைக்காரன் சொல்ல
மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளையையும் தனது தங்கையையும் கொன்றுவிட்டார்.
வேலைக்காரன் சொன்னது பொய் என்று தெரிந்த பிறகு மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளைக்கு தர்கா எழுப்பினார்.
தன் தங்கைக்கு நடுகல் நட்டார்.
இன்றுவரை அவரது வம்சாவளியினர் அந்த தர்காவுக்காக அனைத்து உதவிகளையும் செய்கின்றனர்.
தன் குழந்தைகளுக்கு மேத்தப்பாண்டியன், மேத்தா என்று பெயர் வைக்கின்றனர்.
அதோடு நடுகல் வைத்த இடத்தை 'கன்னியம்மன்' தெய்வமாகவும் வழிபடுகின்றனர் மாடசாமி வம்சத்தார்.
"மேத்தப்பிள்ளை அப்பா தர்கா" என்ற பெயருடைய இந்த தர்காவில் ஆடி 16 அன்று சாதிமத பேதமில்லாமல் ஆயிர்காணக்கில் மக்கள் கூடுகின்றனர்.
இங்கே வாழும் மறவர் மக்கள் தங்கள் வீடுகளில் மக்களைத் தங்கவைத்து விருந்தோம்புகின்றனர்.
240 ஆண்டுகளாக இது நடந்துவந்தாலும் இதுவரை காவல்துறை வந்து நடத்தித்தந்தது கிடையாது.
இதுபோல இன்னும் பலப்பல தர்காக்கள் உள்ளன.
அனைத்திலும் பல சமயத்தாரும் பங்கேற்கின்றனர்.
நன்றி: தர்காக்களும் இந்து-இசுலாமிய ஒற்றுமையும் - ஆ.சிவசுப்பிரமணியன்..
இசுலாமிய தீவிரவாதிகள் தர்கா வழிபாட்டை எதிர்ப்பதற்குக் காரணம் மத நல்லிணக்கனம் ஏற்பட்டால் தம் பிழைப்பை நடத்த முடியாது என்பதால்தான்.
இதிலே ஒருபடி மேலே போய் குரானுக்குப் போட்டியாக தவ்கீத்து சமாஅத்து என்ற கூட்டம் திருக்குறளை வேறு வம்புக்கிழுக்கிறது.
இசுலாம் பரவியுள்ள அனைத்து இடங்களிலும் அந்த அந்த இனத்தின் பழமையான பழக்க வழக்கங்கள் இசுலாமிய வழிபாட்டிற்குள் கலந்துள்ளதைக் காணமுடியும்.இது இயல்பான ஒன்றே.
மக்களுக்காக தான் மதம்.
மதத்திற்காக மக்கள் அல்லர்.
இறைமறுப்பாளனான என் தனிப்பட்ட கருத்து,
தர்கா வழிபாடு செய்யப்படும் இறையடியார்கள் யாருமே அத்தனை பெரிய ஈகி(தியாகி)கள் கிடையாது.
இந்த வழிபாடும் அதனுடன் இணைந்த சடங்குகளும் மூட நம்பிக்கைகளேயன்றி வேறில்லை...
ஒற்றை தலைவலி...
ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும்.
ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
காரணம்: குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுணர்வு ஆனந்தம்.
அறிகுறிகள்: இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்
தீர்வுகள்:பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.
1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.
3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.
4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.
5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.
7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு
(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு, இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.
8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.
செய்ய வேண்டியவை:
1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.
2. 2-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.
3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.
4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.
2. வெயிலில் அலைவது.
3. காரமான உணவு வகைகள்.
4. வயிறு முட்ட சாப்பிடுதல்.
5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை...
இலுமினாட்டி = திராவிடம் = கம்யுனிசம் = ஆரியம்...
இலுமினாட்டிகளை பற்றி பதிவிடுவோருக்கு கம்யுனிசமும் இல்லுமினாட்டிசமும் ஒன்றாகவே தெரியும்..
திராவிடம் எப்படி ஒரு கோட்பாடோ அது போலவே, கம்யுனிசம், மார்சிஸிசம் அனைத்தும் கோட்பாடுகள்!
திராவிடம் எப்படி தமிழர்களை ஏமாற்றி வடுக அரசியலை உள்ளே மறைத்து வைத்ததோ..
அதுபோலவே கம்யுனிசம், மார்சிஸிசம் உலக மக்களை ஏமாற்றி யூத இன ஆதிக்கத்தை மறைத்து வைத்தது..
திராவிடம் ஆதிக்க தெலுங்கர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடு மற்றும் திராவிடத்தால் என்னென்ன இழந்தோம் என்பது தெரியவந்த உடனே உண்மையான தமிழர்கள் திராவிடத்தை எதிர்த்தார்கள்..
அந்த திராவிடத்தால் பயன் அடைந்த தமிழர்கள் துரோகிகளாக இன்னும் திராவிடத்தை பிடித்து தொங்குகிறார்கள்..
இன்னும் சிலர் திராவிட கட்சிகள் செய்த தவறுக்கு திராவிட கருத்தியலை குறை சொல்லாதீர்கள் .. ஈ.வே.ரா ரொம்ப நல்லவர் அவர் கடவுள் மாதிரி என்று சொல்கிறார்கள் .
இதை இவ்வாரே இந்த கமுனிசத்தோடு பொருத்தி பார்த்தல் வேண்டும்!
முதலில் இந்த கம்யுனிச கோட்பாட்டை உருவாக்கிய காரல்மார்க்ஸ் ஒரு யூதர், டிராட்ஸ்கி ஒரு யூதர், லெனின் ஒரு யூதர், பிரீட்ரிச் ஏங்கல்ஸ் ஒரு யூதர் இப்படி இந்தப் பட்டியல் நீளும்..
மற்றும் இவர்கள் அனைவரும் முதலாளிகள் என்பது ஒரு கசக்கும் உண்மை..
சரி, கமுனிசத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் யூதர்கள், சரி கம்யுனிசத்தால் மக்களுக்கு வந்த பாதிப்புகள்.பற்றி பார்போம்..
1) கமுனிச தலைவர் மாவோ, தனது புரட்சியாக குருவிகள் திங்கும் உணவை எல்லாம் கணக்குப் போட்டு, அதிகமாக தானியங்களை அவை தின்று வீணாக்குகின்றனர்.
ஆகவே குருவிகளை இனப் படுகொலை செய்தார், (எப்படி இங்கே ஈ.வே.ரா தென்னைமரம் வெட்டினாரோ அதேபோல்) விளைவாக ஐந்து கோடி மக்கள் பஞ்சத்தால் இறந்தார்கள்..
2) தனிச்சொத்து கூடாது என்று சொல்லும் கம்யுனிச கோட்பாட்டை முதலில் எதிர்த்தவர்கள் விவசாய மக்களே..
அவ்வாறு எதிர்த்த மக்களின் விவசாய கருவிகளை எல்லாம் கையகப் படுத்தி, பஞ்சத்தை உருவாக்கி 35 மில்லியன் ரஸ்சிய மக்களை கொன்றவன் கொடுங்கோலன் லெனின்..
இது போல் இந்த கமுனிச முதலாளிகள் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல...
ஆக கம்யுனிசத்தால் பதிப்புகள் மக்கள் அடைந்துள்ளார்கள்..
இவையிரண்டையும் பொருத்திப் பார்த்தால் கம்யுனிசம் ஒரு அழிவுக் கோட்பாடு என்று நாம் அறியலாம்.
இல்லுமினாட்டிகளின் அடிப்படை கருத்து...
1)குடும்பம்
2)தனிச்சொத்து
3)பண்பாடு
4)ஆன்மீகம்
5)ஒழுக்கம்
6)தேசபக்தி
இவை எதுவும் மக்களிடம் இருக்கக் கூடாது என்பதே !
இதையே தான் கம்யுனிசமும், திராவிடமும், சொல்லுது..
அதனால் தான் சொல்றோம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது!
இல்லுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை என்று உறுதியாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்மானது.
எங்கள் பார்வையில்
இல்லுமினாட்டி = திராவிடம் = கம்யுனிசம் = ஆரியம்..
முதலில் நமது வரலாற்றுப் பகைவர்களான திராவிடத்தை வீழ்த்துவோம்..
அதற்குப்பின் காலம் நமக்கான வழியைக் காட்டும்..
நாம் விழிப்போடு இருப்பதே நம் இனத்தைக் காக்கும்..
நமக்குள் இருக்கும் மோதல் நம் பகைவர்களையே வலிமை அடைய செய்யும்...
குறிப்பு : இவர்களை யூதர்களாக பார்ப்பது தவறு...
வள்ளலார் கூறும் பாவப் பட்டியல்...
பாவ புண்ணியக் கணக்குகள் மறந்து போய், சுயநலமும் அலட்சியமுமே பிரதானமாய் மாறி விட்ட இந்தக் காலத்தில் துக்கமும், நிம்மதி இன்மையும் தான் எல்லா இடங்களிலும் கோலோச்சுகிறது.
அதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் வள்ளலார் போல் தங்களையே கேட்டுக் கொண்டு, திருத்தியும் கொண்டால் ஒழிய நிம்மதிக்கு வாய்ப்பில்லை.
இதோ வள்ளலாரின் பாவப் பட்டியல்..
நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
வேலையிட்டுக் கூலிலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
கோள்சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ!
தவஞ்செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணை செய்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ...
தமிழரும் மதங்களும்...
தமிழர்கள் இசுலாமியர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.
தமிழர்கள் கிறித்துவர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.
தமிழர் இன்னும் பல மதங்களுக்கு மாற்றப்பட்டதை ஏற்கும் கூட்டம்.
தமிழர் இந்துவாக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறது.
காரணம் அதில் இருக்கும் வழிபாட்டு/பண்பாட்டு முறைகள்.
ஒன்றை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் மதங்களில் இனங்களில் மொழிகளில் எல்லாவற்றிலும் தமிழ்/தமிழர் தாக்கம் இருக்கும். காரணம் தமிழ் தான் முதன் மொழி தமிழர் தான் மூத்த மாந்த இனம்.
இசுலாம் கிறித்து இன்னும் பிற மதங்கள் வேறு நிலப்பரப்பில் இருந்து தமிழர் நிலப்பரப்பினுள் நுழைந்து தமிழரை மதமாற்றம் செய்தது.
ஆனால் இந்து என்று இன்று அழைக்கப்படும் ஆரிய கோட்பாட்டின் கருத்தியல் மதம், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, மொழி, கலை போன்றவற்றை நம் நிலப்பரப்பில் இருந்துகொண்டே, அதை களவாடி(திருடி) பின் திரித்து(ஆரிய கோட்பாடை கலந்து) நம்மிடம் திணிக்கப்பட்டது.
எனவேதான் தமிழர் நாம் இயல்பாகவே தொன்றுதொட்டே நம்மை இந்துக்கள் என்று எண்ணி ஏமாந்து வாழ்கிறோம்.
இதையெல்லாம் அறிந்து தெளிந்து எடுத்துரைத்தால், தமிழர்களே அதற்கு எதிராக நிற்பது, 1800 ஆண்டுக்கும் மேல் அடிமைபட்டு, அடிமைக்கும் அடிமையாகிப் போன நிலை தந்த அறியாமையே.
என் பாட்டன் சொன்னார் என் அப்பன் சொன்னார் என்று நான் மாற மாட்டேன் நான் இப்படித்தான் வாழ்வேன் என்னும் சில வாதங்கள் வேதனைக்குரிய ஒன்று.
நம் பாட்டனும் அப்பனும் அறியாத வரலாற்றை நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து தெளி என் தமிழினமே.
தொன்றுதொட்டு வந்ததை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று மடமையில் விழுந்து உன் இனம் அழிய நீயே வழிகாட்டாதே.
மலேசிய வரலாறுபடி 200 ஆண்டுக்கு முன் அடிமையாய் இந்த நாட்டுக்கு வந்தோம் என்கிறான். எனவே நான் அடிமையாய் வந்தேன் அடிமையாய் தான் இருப்பேன் என்றால் அது சரியா?
200 ஆண்டுதானா உன் வரலாறு?
உன் பாண்டிய சேர சோழன் காலத்தில் நீ உலகை ஆண்டவனா அடிமையா?
2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன்.
6000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த காப்பியன்.
இவர்கள் தமிழரா இந்துவா?
இதற்கு பதிலுண்டா உன்னிடம். புரிந்துகொள், நீ 50,000 ஆண்டுக்கும் மூத்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட மாபெரும் தமிழர் எனும் தேசிய இனம்.
இனியும் நீ எழாவிட்டால்..
எழு.. மதத்தை தூரப்போடு
குலத்தில் ஏற்றதாழ்வை தூக்கிப்போடு.
இனம் மீள விடுதலை வெல்ல.
உன் களப்பணியை
செய்.... அல்லது செத்துமடி..
தமிழர் வெல்வது உறுதி...
கவரிமான் என்னும் வார்த்தையின் உண்மையான விளக்கம்...
கவரிமா அல்லது யாக் (Yak) என்பது நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம்.
காட்டுக் கவரிமா மாட்டினத்திலேயே பெரிய விலங்குகளுள் ஒன்று.
நன்கு வளர்ந்த கவரிமாக்கள் 1.6 முதல் 2.2 மீட்டர் உயரமும் (தோள் வரை) 325 முதல் 1000 கிலோ எடையும் இருக்கும். பசுவின் எடை காளையின் எடையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியே இருக்கும்.
கவரிமாக்கள் அவற்றின் பால், இறைச்சி, உரோமம் ஆகியவற்றுக்காகவும் சுமைகளை எடுத்துச்செல்லவும் வளர்க்கப்படுகின்றன.
மேலும் கவரிமாவின் காய்ந்த சாணமானது திபெத்தில் ஒரு முக்கியமான எரிபொருளாகும். ஏனெனில் அப்பகுதியில் மரங்கள் எதுவும் இல்லாததால் இது ஒன்றே அங்கு எளிதாகக் கிடைக்கும் எரிபொருளாகும்.
கவரிமாவின் பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய் தேநீர் செய்யவும், விளக்கெரிக்கவும், வெண்ணெய்ச் சிற்பங்கள் செய்யவும் பயன்படுகிறது...
பாஜக திருடர்களே.. உங்களுக்கான கேள்வி...
தமிழ் நாட்டில் டோல்கேட்மூலம் வழிப்பறி ( பணம் பிடுங்கல் ) நடக்கின்றதா ?
கேரளாவில் : 1782*கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் இருந்தாலும், 3 டோல்கேட்களே உள்ளன.
மகாராஷ்டிராவில் : 15,437கி.மீ. தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட மகாராட்டிராவில் 44 டோல்கேட்களே உள்ளன.
5381 கி.மீ .தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 52 டோல்கேட்கள் உள்ளன.
ஆக , கேரளாவுடன் ஒப்பிடும் போது, 9 டோல்கேட்களே இருக்க வேண்டும்.
மகாராஷ்டிராவுடன் ஒப்பிடும் போது, 15 டோல்கேட்களே இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் உள்ள டோல்கேட்களின் எண்ணிக்கை 52
இது வழிப்பறி அன்றி வேற என்னன்னு சொல்லுங்க டா..😤😤😤
இந்துக்கள் ரோட்டில் நடமாட இவ்வளவு பணம் செலுத்தனுமா..🤫🤫🤔🤔
குறிப்பு : நாம் வாகனம் வாங்கும் போது சாலை வரி என்று தனியாக ஒரு மிகப்பெரிய தொகையை செலுத்துகிறோம்.. அப்போ அந்த வரி ஏதற்கு..?
சாராயக் கடவுள்...
சாராய ஆலை.. சாராய வியாபாரி.. என்று தானே நாம் கேள்விப்பட்டுள்ளோம்
அதென்ன சாராயக் கடவுள் ..
கிரேக்கத்தில் மக்கள் தொகை போல, கடவுளின் தொகையும் அதிகம்..
ஏறக்குறைய 30,000 க்கும் மேற்பட்ட கடவுள்கள் உள்ளனராம்..
சாப்பாட்டுக்கு ஒரு கடவுள்..
தண்ணீருக்கு கூட கடவுள் உண்டு..
இதெல்லாம் விட கொடுமையானது தான் சாராயக் கடவுள்..
ஒரு கடவுளின் பெயர் டைனோசயிஸ்..
இவருடைய டிபார்ட்மெண்ட் விவசாயம்..
ஆம் விவசாயத்துக்கு இவர் கடவுளாம்..
ஆனால் இவரு தான் திராட்சை பழத்தில் இருந்து முதல் முறையாக ஒயினை தயாரித்தாராம்..
அதனால் இவருக்கு (god of wine) ஒயினுடைய கடவுள்..
என்ற பெயரும் உண்டு...
பொட்டல்காடு, குலையன்கரிசல் பகுதியில் எரிவாயுக்குழாய் பதிப்பு - போலீசார் குவிப்பு...
தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல், பொட்டல்காடு மக்கள் குடியிருப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் அருகில் எரிவாயுக்குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, மாற்றுப்பாதையை தேர்வு செய்யக்கோரி பொட்டல்காடு கிராம மக்கள் அறவழி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
வாழை, நெல் வயல்களில் எரிவாயுக்குழாய் பதிக்க குலையன்கரிசல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசிடம் பேசி, மாற்றுப்பாதைக்கான ஆய்வு செய்கிறோம் என்று தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி கொடுத்திருந்தது.
இந்நிலையில் பொட்டல்காடு, குலையன்கரிசல் கிராமங்களில் அதிரடிப்படை காவலர்கள் திடீரென குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு படையும் வந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்காடு அருகே IOCL குழாய் பதிப்பு பிரச்சினை குறித்த பேச்சு வார்த்தைக்கு இன்று மாலை நான்கு மணிக்கு மாவட்ட ஆட்சியர் மீண்டும் அழைத்துள்ளார். சென்னை எண்ணூர் - நாகப்பட்டினம் - தூத்துக்குடி பாதையில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி ஸ்பிக், ஸ்டெர்லைட், தாரங்கதாரா உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளுக்கு சாலை வழியாக லாரிகள் மூலம் எரிவாயு கொண்டு வரும் போது அதிக செலவாகிறது என்பதால், நிலத்தடியில் குழாய்கள் பதித்து எரிவாயு கொண்டு வரப்பட உள்ளது.
முதல்வர் தூத்துக்குடி வருவதால்,
அதற்குள் போராட்டத்தை முடித்து வைக்க நினைக்கின்றனர் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்...
நாம் தமிழர் கட்சி கலாட்டா...
ஈழ மக்களை கொன்று அழித்த காங்கிரசை கருவறுப்போம்...
வசந்த குமாருக்கு ஆழ்ந்த இரங்கல்..
எழுவர் விடுதலையை எதிர்க்கும் காங்கிரசை வேரறுப்போம்...
தமிழர் வசந்த குமாருக்கு ஆழ்ந்த இரங்கல்...
ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்க்கும் எதிரான காங்கிரசை காலி செய்வோம்..
உழைப்பால் உயர்ந்த உத்தமருக்கு ஆழ்ந்த இரங்கல்...
வசந்த்தகுமார் நாடார் என்பதால் துரோகியும் தமிழனாக தெரிகிறானா..?
தமிழினத் தலைவர் மேதகு. பிரபாகரனை தூக்கிலிடனும் சொன்ன காளிமுத்து போராளியாக மாற்றியதை போல...
போங்கடா.. போய் ஓரமா விளையாடுங்க...
காங்கிரஸ் கட்சி தமிழினத்தின் எதிரி...
காங்கிரஸ்சில் இருக்கும் தமிழர்கள்
தமிழினத்தின் துரோகிகளே...
இதில் எப்போதும் நான் சமரசம் ஆக மாட்டேன்...
நேருவின் குடும்ப வரலாறு...
படிக்கிற காலத்துல "பண்டிட் நேரு", "பண்டிட் நேரு"ன்னு சொன்னாங்க. பிறகுதான் தெரிந்தது அது படித்து வாங்கின பட்டமல்ல, "காசுமீர பண்டிதர்' அப்படி என்றால் பிராமண குலமென்று.
இந்த குழப்பதிருக்கு காரணம். விருதாக பெற்ற பட்டங்களை பெயருக்கு முன்பும் ஜாதியின் பெயர்களை பெயருக்கு பின்பும் போடுகிற முறை இருந்ததுதான்.
ஆனால் எப்படியெல்லாமோ போட்டு அசத்திவிட்டார்.
இவர் மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் சிகரெட்டு பற்றவைத்து கொடுத்துவிட்டு, ஒரு சமத்துவதிற்காக தானும் உடன் சேர்ந்து புகைப்பது உலகப் பிரபலமடைந்த திருத்தப்படாத புகைப்படமாகும்.
இவர்களது உறவு மரணம் வரை நீடித்ததாக வரலாறு கூறுகிறது.
மௌன்ட்பாட்டனின் மனைவியை விமான நிலையம் சென்று வழியனுப்பிய படம்...
புல்ரோரர் - Bullroarer...
இந்த இசைக்கருவியானது கி.மு.17000 ஆண்டை சேர்ந்தது என்று அகழ்வாராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது உக்ரைன் நாட்டினரால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர்.
இதனை ஆசியா, ஐரோப்பா மற்றும் முந்தைய அமெரிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஒரு மரக்கட்டையை சிறு துளையிட்டு அதில் கயிற்றை கட்டி காற்றில் வேகமாக சுற்றுவார்கள்.
அதில் எழும்பும் இசையை அந்த கால மக்கள் வெகு தொலைவில் இருப்பவருடன் தொடர்புக் கொள்ள பயன்படுத்தியுள்ளனர்.
இத்துடன் தாளத்தையும் சேர்த்து பல சடங்குகளிலும் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த இசையை தம் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு இறைநிலையை அடையவும் பண்டைய மக்கள் பயன்படுத்தியுள்ளனர்..
எதிர்காலத் தமிழகமும்: தமிழ் மற்றும் கல்வித்துறை...
1. தமிழ் உலகின் முதல் மொழி என்பதனை சர்வதேச சமூகம் ஆராய்ந்து அங்கீகரிக்க அனைத்து கடலியல், மொழியியல் ஆராய்ச்சி ஏற்பாடுகளும் செய்யப்படும்.
2. தமிழ் மொழியே தமிழ்த் தேசிய மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி, அலுவல் மொழி, தொழில் மொழி.
3. 12 வகுப்புகள் வரை இலவசக் கல்வி, கட்டாயக்கல்வி. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காத பெற்றோர் கைது செய்யப்படுவர்.
4. அனைத்து பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக்கப்படும்.
5. அனைத்தும் இரு பாலார் பள்ளிகளாகவே இருக்கும். ஆண் - பெண் சமத்துவம், இணைந்து செயலாற்றும் திறன் வளர்க்கப்படும்.
6. பள்ளியில் தமிழ் தவிர ஒரு இந்திய மொழி, ஒரு ஐரோப்பிய மொழி கற்றுக்கொடுக்கப்படும் (அவரவர் விருப்பத்திற்கேற்ப). ஆனால் பயிற்று மொழி தமிழே.
7. 12 ம் நிலை முடிக்கும் முன்பாக அனைத்து மாணவருக்கும் நீச்சல் திறன், வாகன ஓட்டும் திறன், கணிணி திறன் இவைகளை கற்றுக்கொள்வது அடிப்படை. கணினி விசைப்பலகையில் (keyboard) தமிழ் மட்டுமே.
8. இங்கு அவர்கள் உருவாக்கும் ஈ மெயில் முகவரி அவர்களுக்கென இறுதி வரை இருக்கும். அரசின் அனைத்து தகவல்களும் அதன் மூலமே அனுப்பப்படும், அவர்கள் வாகன விதி மீறினால் வரும் தண்டனைத் தொகைத்தகவல் உட்பட.
9. அலுவலகம், பள்ளி அனைத்திலும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.
10. விளையாட்டு: தமிழக தேசிய விளையாட்டாக பலர் இணைந்து செயல்படும் வகையில் உள்ள கால்பந்து அறிவிக்கப்படும். வட்டம், மாவட்டம், மாநிலம் வாரியாக ஆண்-பெண் களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒலிம்பிக்கிலும் நேரடியாக பங்குபெற்று பலரும் வெற்றி பெறும் வகையில் பள்ளியிலிருந்தே வீரர்கள் உருவாக்கப்படுவர்.
11. கல்வி முடித்த எவரும் முதல் ஐந்து வருடத்திற்கு தமிழ் நாட்டில் தான் பணி செய்ய வேண்டும்.
12. அயல் நாடு செல்வோர் 5 வருடங்களுக்கு மேல் அங்கு படிப்போ, பணியோ செய்ய முடியாது. தாயகம் திரும்ப வேண்டும்...
Subscribe to:
Posts (Atom)