மீத்தேன் எடுப்புத் திட்டமோ,கனிம சுரங்கப் பணி திட்டமோ அல்லது அணை கட்டுகிற திட்டமோ இந்த திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பாக அப்பகுதியின் சூழலியல் பாதிப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்து, பாதிப்பு ஏதும் இல்லை என்ற அனுமதி பெற வேண்டும்.
அதன் பின்னர்தான் அப்பகுதியில் எந்த திட்டமென்றாலும் நடைமுறைப் படுத்த வேண்டும் என இந்திய முதலாளித்துவ அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986இல் திருத்தம் மேற்கொண்டு 2006 ஆம் ஆண்டுமுதல் இந்த விதி நடைமுறையில் உள்ளது.
காவிரிப்படுகையில் அதுவரை இஷ்டம்போல வேண்டிய இடத்தில துளை போட்டு எண்ணெய் எரிவாவு எடுத்து வந்த ஒ என்ஜி நிறுவனத்திற்கு இந்த விதி எரிச்சலை ஏற்படுத்தும் என்பதில் வியப்பொன்றுமில்லை.
எந்த இடத்தில் பணி தொடங்க வேண்டுமென்றாலும்,அது குறித்த Environment Impact Accessment அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறைக்கோ அல்லது மாநில சுற்றுச்சூழல் கண்காணிப்பு துறைக்கோ அனுப்பி ,திட்டம் தொடங்குவதற்கு முன் அனுமதி வாங்க வேண்டும்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆவணத்தை மக்கள் பார்வைக்காக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தும் , மக்களிடம் கருத்து கேட்ப்பு கூட்டம் நடத்தியும், இந்த கூட்ட முடிவுகளை பதிவு செய்ய வேண்டும்.
இந்த ஆவணங்களை பின்னர் உயர்நிலை ஆய்வு குழுவு (Expert Appraisal Comittee)
ஆய்வு செய்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தனது பரிந்துரைகளை வழங்கும் , இந்த பரிந்துரைகளின் பேரில், அமைச்சகம் இத்திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கும்.
இந்த நடைமுறைகளை முறையாக மேற்கொள்ள வக்கற்ற ஒ என் ஜி சி நிறுவனமானது,புதிதாக குழாய் பதிப்பதற்கு அனுமதி வழங்கக்கோருகிற விண்ணப்பத்தில்,. தவறான தகவல்களை உயர்நிலை ஆய்வு குழுவிற்கு அனுப்பி வைத்து, முறைகேடான வகையில் அனுமதி வாங்க முயற்சித்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் 10-7-14 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்ப்பிற்கு பிறகு எந்தவொரு கருத்து கேட்பு கூட்டமும் நாகை,திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறவில்லை.
தஞ்சையில் நடைபெற்ற அந்த ஒரே கருத்துக் கேட்ப்பு கூட்டமும் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக பாதியில் முடிக்கப்பட்டது..இந்த கூட் மணித்துளியில்,மாவட்ட ஆட்சியரே இதை குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஒ என் ஜி சி நிறுவனமோ ,புதிய குழாய் பதிப்பிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை எனவும் , மக்கள் கருத்து கேட்ப்பு அவசியமில்லை எனவும் பொய்யாகவும் முறைகாடாகவும் உயர்நிலை ஆய்வு குழுவிற்கு அறிக்கை அளித்துள்ளது.
தஞ்சையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்ட முடிவை முற்றிலும் மறைத்து இந்த மோசடி வேலைகளை இந்திய பொதுத்துறை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
எந்த எதிர்ப்பும் இல்லை Notary, Tamilnadu government உம் பிரமாணப் பத்திரம் வழங்கியுள்ளது.
இதை ஏற்றுகொண்ட உயர்நிலை ஆயுவ்குழுவும், புதிதாக குழாய் அமைக்க, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
இது முழுக்க முழுக்க அதன் சொந்த அரசியல் சாசனத்தையே மீறுகிற முறைகேடான வழிமுறையாகும்.இது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் விரிவான வகையில் தமிழக முதலமைச்சருக்கும், தஞ்சை , திருவாருர், நாகை மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் பதிலும் இல்லை , மாறாக, பேராசியர் ஜெயராமன் உள்ளிட போராட்ட குழுவினரை சிறைக்கு அனுப்பியுள்ளது.
எடுபிடி அரசு..அரசும் அதன் சட்ட திட்டங்களும் முதலாளிய வர்க்க நலனுக்குத்தான் என்பது அரசின் ஒவ்வொரு ஒடுக்குமுறையின் பொது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
இணைப்பு:பேராசிரியர் ஜெயராமன், அனுப்பிய கடிதங்கள்...