03/01/2019

தலை குளிர்ச்சி...


காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.

3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.

மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.

பின்பு அதை வடிகட்டவும்..

வடிக்கட்டின சாரை. 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மூக்கடைப்பு தீர...

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்...

திராவிட கட்டப் பஞ்சாயத்து குரூப் எங்கடா...


பேய்கள் ஜாக்கிரதை...


நாம் வாழும் இந்த பிரபஞ்சத்துல பல விதமான விதிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில் இயங்குகின்றது.

ஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிறது.

ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து தூண்டபடும் சக்தி நிலைக்கு உயர்கிறது.

இவ்வாறு தான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது.

அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது.

ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை.

உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது.

நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே.

அதே போல் நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது.

நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே. சூட்சம உடல் தெரிவதில்லை.

ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல்.

மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது. சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித் திரிகிறது.

பிறகு பிரபஞ்ச அணுக்களின் இடையூரினால் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு கரைந்துவிடுகிறது.

ஒளி உடல் இருக்கும் வரை எண்ண பதிவின் தொடர்பு இருக்கும்.

தீராத ஆசையிலேயும் தீராத பாசத்திலேயும் தீராத கோபத்திலேயும் செத்தவன் ஆவியாக அலைவான்.

ஆவியை அடிக்கடி நினைத்து பயம் கொள்ளும் மனித மூளை அதன் அலைவரிசையில் தற்செயலாக தொடர்பு கொண்டு விடுகிறது.

பிறகு அவர்களுக்கு அமானூசிய அனுபவம் ஏற்படுகிறது.

உயிர் பிரிந்த பின்னும் அது உடலையே சுற்றி சுற்றி வந்து மீண்டும் உடலில் புக முயற்சிக்கிறது.

அந்த ஆவி மற்றவர்களை இடையூறு செய்கிறது.

வேறு உடலில் புகுந்து அந்த உடலை தன் கட்டுபாட்டிற்கு கொண்டு வருகிறது.

அதனால் மந்திரவாதிகளால் பல்வேறு சடங்குகள் செய்து உடலில் இருந்து விரப்படுகிறது.

அந்த ஆவி மிகவும் பயந்து அலைகிறது.

பிறகு மெல்ல மெல்ல உலக வாசனைகள் அற்று மோன நிலையில் ஆழ்ந்த உறக்க நிலையை அடைகிறது.

ஐம்புலன்கள் இல்லாமலேயே ஆவி நிலையில் நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியும்.

சூட்சம உடலால் ஒளி வேகத்தில் பயணிக்க முடியும்.

ஆவிகளை தொடர்பு கொண்டு சாதாரணமாக பேசும் கருவிகளை கண்டு பிடிக்கும் காலம் விரைவில் வரலாம்...

இந்தியாவின் அணு சக்தி ஆய்வங்களின் இரகசியம்...


நோக்குவர்மம் சாத்தியமா.?


நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திலும் மின்காந்த சக்தி உண்டு.

அந்த சக்தி குறையும் போது உடலில் எந்த பகுதி பலவீனமாக உள்ளதோ அந்த பகுதியில் இருக்கும் இணைப்பு இயக்க சங்கிளிகளின் கன்னிகளை தெரிக்க வைக்கிறது.

அதன் மூலம் உடலில் நோய் ஊடுருவுகிறது.

முதுகு தண்டின் கீழ்பகுதி தான் நம் உடலின் சக்தி மையமாக செயல்படுகிறது.

இங்கிருந்து தான் உடலில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் சக்தி பாய்கிறது.

புவியீர்ப்பு விசையின் காரணமாக அந்த சக்தி முதுகுதண்டின் அடியிலேயே உறைந்துள்ளது.

நோக்குவர்மம் என்பது அந்த சக்தியை கண்களுக்கு ஏற்றி அதன் வழியாக எதிராலியின் உடலில் உள்ள 108 வர்ம புள்ளிகளில் எதிலேனும் குவித்து பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நீக்கவோ முடியும்.

நமது உடலில் 6000 கோடி செல்கள் 72000 நாடிகளால் பிணைக்கபட்டுள்ளது.

அந்த நாடிகள் ஒன்றோடொன்று சந்திக்கும் இடங்களே 108 வர்ம புள்ளிகள் ஆகும்.

இந்த வர்ம புள்ளிகள் 7 ஆதார சக்கரங்களில் இணைக்கபட்டுள்ளது.

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சகஸ்ராரம் ஆகியவையே அந்த சக்கரங்கள்.

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினியை கண்களுக்கு ஏற்றி எதிராலியின் பிராண சக்தியை உறிஞ்சி மயக்கத்தையோ அல்லது மரணத்தையோ நிகழ்த்துவதே நோக்கு வர்மம்.

நாம் சுவாசிக்கும் போது பிரபஞ்ச சக்தியான பிராண சக்தியையும் சேர்த்துதான் உட்கொள்கிறோம்.

இதை பிராணாயாம்ம் எனும் மூச்சு பயிற்சியால் சக்தியை அதிகமாக்கி கொள்ளலாம்.

நோக்குவர்மத்தில் தேர்ச்சி பெற்றவனுக்கு நிகர் உலகில் யாரும் இல்லை என்று அகத்தியர் கூறுகிறார்.

எனவே தான் இது சித்தர் பாடல்களில் மறை பொருளாகவே சொல்லபட்டுள்ளது.

அடுத்து ஒரு வித்தியாசமான தலைப்பின் அறிவியலை ஆழமாக அலசுவோம்...

கன்னட ஈ.வெ.ராமசாமி கட்டபஞ்சாயத்து குழு...


கோரக்கச் சித்தரின் எதிர்காலத் தீர்க்கம்...


முருகப்பெருமானின் சீடர்களான தமிழ்ச் சித்தர்கள் உலகை ஆழ்வர்..

சித்தபெருமானார் போகரின் சீடரான கோரக்கச் சித்தர் அருளிய சந்திரரேகை 200 என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது..

கலியுகம் பற்றி மகான் கோரக்கர்…

யோகி பர மானந்த கலியின் தோற்றம்
உண்மை நிற சாதி மத பேதம் மெத்த
பாகிதமாய்ப் பிரபலங்கள் பெண்பால் விருத்திப் பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்..

மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில் பூவலகிற் கலியுனுட பான்மை கேளே – கோரக்கர்.

உலகோருக்கு கலியுகத் தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன்..

நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.

பெண் மக்களே நிறைய பிறப்பார்கள்.

ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.

பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள்.

இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப் போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு.

கேளே நன்மனுக்கள் நூற்றுக் கொன்று
கெடியாகப் பிறந்திருத்தல் அரிதே யாகும்
நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க
நடுங்கிடுவர் மனிதர்களும் உயரங்கட்டை
வாளே முன் பின் வயது ஆண்டு நூறு
வயங்கிடுவேன் கலியுதிக்கு மிடத்தைத் தென்பா.. சூளே மெய்ச் சும்பலப் பட்டன் வைணவ தத்தன்.. கொல்லை புண்னை மரத்தின்கீழ்க் கலி செ னிப்பே– கோரக்கர்..

இன்னும் சொல்கிறேன் கேளப்பா இப்பூமியில் நன் மக்கள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே மிகவும் அரிதாக இருக்கும்.

நாளாக நாளாக கலியின் கொடுமைகள் ஓங்கி வளர்ந்து நிற்க்கும்.

மனிதர்களின் உயரம் குறைந்து குட்டையாக ஆவார்கள்.

மனிதர்களின் ஆயுளும் குறைந்து 100 ஆகிவிடுமாம்.


கமபலப்பட்டம் எனும் ஊரில் வைணவ தத்தன் எனும் அந்தணரின் வீட்டின் கொல்லை புரத்தில் உள்ள புன்னை மரத்தின் கீழே தான் கலி புருஷன் தோன்றுவானாம்.

கலியும் பிறந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதையும் கூறுகிறார்.

கலியான ஆண்டு ஐயா யிரம்பின்
கருத்துடனே சாதி மத பேதம் ஒன்று
நலியாது சந்திரகலை ஐயாயிரம் மட்
டானதப்பால் ரவியோட்ட மதிக மாகிப்
பொலிவாகப் பூலோகந் திரண்டே நிற்கும்
பொய்யான அந்தணரின் கொட்டம் போகும்.. வலியுடனே சத்தியத்தான் நிலையே யோங்கி.. வழுவாது மனுக்கள் ஞானி யாமே. — கோரக்கர்..

கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும்.

சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும்.

பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும்.

தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.

தான தரும தத்துவ யோகம் அதிகம் ஆகும்.

தாரணியில் மாந்தர் பல வருண மாவர்
ஈனமின்றி யோக சக்கி ராதி பத்தியம்
இனமுடனே ஆண்டென் பத்தீ ராயிரம்
மோனமுடன் இருந்தாண்டு வசிப்பார்.

நாடு முகமினிய நவரத் தின விளைவுண்டாகும்.. போனகமாய்க் குளிகையிட்டுப் பறப்பார் விண்ணில்
பூரணமாய் ஆயுளுற்று வாழ்கு வாரே — கோரக்கர்..

இவ்வுலகில் தானங்களும் தர்மங்களும் சிறப்புடன் நடைபெறும் தத்தவ ஞானங்களும் விஞ்ஞானங்களும் யோகமும் நிறைந்து விளங்கும்.

இத்தரணியில் மாந்தர்கள் பல வர்ணமாக இருப்பர்.

ஏக சக்கிராதிபத்தியம் ஏற்பட்டு குறைவின்றி இருந்து எண்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் வரை நடக்கும்.

நவரத்தினங்கள் விளைந்து நாட்டில் செல்வங்கள் உண்டாகும். குளிகையான கற்பங்களை உண்பார்ள். விண்ணில் பறப்பார்கள். பூரணமாய் ஆயுளுடன் வாழ்வார்கள்.

அந்தநாள் அக்காலம் நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந் தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி.. வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி.. மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும்.. மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே..

கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன்.

ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம்.

மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும்.

அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும்.

சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.

கதிரவணுங் கடும்பனியுங் காருங் கோடைக் கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில் மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல.. மகாரூப ரூப வெளி மதி மேற் காணும் துதியாக நாழி இரு இருபத் தைந்தில் தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும்.. சதியாக வடதேசம் தன்னி லோர்பால் கடல் போங்கி நெருப்பு ரத்த மழையுடண் டங்கே..

கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும்.

கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும்.

சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும்.

யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும்.

கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும்.

வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும்.

மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.

எங்கெங்கும் சாதுக்கள் ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய் எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளை பாத கன்றான்.. பக்தர்களை சிறை கொள்வன் பட்ச மின்றி.. மங்கி செக தீசனையே பூஜிப்பார் கூவி.. மாநிலந்தான் பிரளயம்போல் மயங்கிக் காணும்.. சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென் றறைந்து போனார்..

எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக் கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள்.

அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக் கொள்வான்.

பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள்.

பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள்.

சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்...

சந்திரரேகை 200 என்ற நூலில் போகரின் சீடரான கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்...

தமிழா விழித்துக்கொள்...


விழித்துக்கொள் மனிதா...


இயற்கை ஒருபோதும் உன்னை போன்றே பிறரை படைப்பது கிடையாது..

மற்றும் உன்னை போல ஒருவனும் இங்கு இருந்தது கிடையாது..

இருக்க போவதில்லை...

நீ உன்னை நேசி
உன்னை காதல் செய்
உன்னை விரும்பு
உன்னை தேடு

நீ அடுத்தவர் போல் இருக்க வேண்டிய அவசியமில்லை...

மனம்...


ஓவ்வொரு நாளையும்
மகிழ்வுடன் கொண்டாடுங்கள்...

மனம் நமக்கு அடிமை ஆகிவிட்டால்
நாம் மகிழ்வில் இருப்போம்...

தென் கேரளாவில் தமிழர் பகுதிகள்...


ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்ஷல் நேசமணி கேட்டபகுதிகள் சிவப்பாக குறிக்கப்பட்டுள்ளன.

நெடுமங்காடு 60% தமிழர்கள் வாழ்ந்த பகுதி இதை புள்ளிவிபரங்களில் குறிப்பிட்ட நேசமணி பெரும்பான்மையாக இருந்தாலும் அதனை விட்டுக்கொடுத்தார்.

இதில் தற்போதைய கன்னியாகுமரி வட்டங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு உள்ளேயும் ஒட்டியும் இருந்த பகுதிகள் மட்டுமே கிடைத்தன.

முல்லைப் பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டம்.

திருவனந்தபுரம் அமைந்துள்ள நெய்யாற்றின்கரை ஆகியன கிடைக்கவில்லை.

30 தமிழர்களுக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

1948 முதல் 1956 வரை நேசமணி தலைமையில் நடந்த தீவிரமான அறப்போராட்டங்கள் மற்றும் அவரது தளபதி அப்துல் ரசாக் தமிழகத்து மக்களின் பேராதரவுடன் இராஜாஜி ஜீவானந்தம் ஆகியோரின் ஒத்துழைப்புடன்  விளைவாக எடுத்த முயற்சிகள் விளைவாக நியாயமாக கிடைக்க வேண்டிய நிலத்தில் பாதி பகுதிகளாவது தமிழகத்திற்கு கிடைத்தது...

ஊடகங்கள் சொல்லும் இஸ்லாமிய தீவிரவாதிகள் இவர்கள் தான்...


கஜா புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை இருக்கைகளாக வடிவமைத்த இளைஞர்கள்...


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெய்வத்தளி கிராமத்தில் தன்னார்வ இளைஞர்களை கொண்டு நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழு உருவாக்கப்பட்டது. தென்னை மரங்கள் சாய்ந்து  கிடக்கும் தோட்டங்களுக்கு சென்று சொந்த செலவில் இயந்திரங்களைக் கொண்டு மரங்களை அறுத்து அகற்றி தோட்டங்களின் ஓரங்களில் அடுக்கி வைப்பதுடன் தோட்டம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தென்னை மட்டைகளையும் தோட்டங்களில் கிடக்கும் கழிவுகளையும் தீ வைத்து எரித்து தோட்டங்களை சுத்தம் செய்து கொடுக்கிறார்கள்.

இவர்களுக்கான செலவுகளை சில தன்னார்வ நண்பர்கள் வழங்கினாலும், தோட்டக்காரர்கள் மதிய உணவு கொடுக்கிறார்கள். இல்லை என்றாலும் சொந்த செலவிலேயே பணி செய்கிறார்கள். கூடுதலாக தென்னை மரங்களை தூக்கி அகற்றும் இயந்திரம் கிடைத்தால் விரைவில் பல கிராமங்களின் தோட்டங்களை சுத்தம் செய்ய முடியும் என்கிறார்கள்.

இந்த நிலையில் தான் தாங்கள் இயந்திரம் மூலம் அறுத்து அகற்றும் தென்னை மரங்களின் அடிப் பகுதியை டிராக்டர் போன்ற வாகனங்களில் ஏற்ற முடியாமல் சிரமமப் பட்டனர். அப்போது உதித்தது தான் இருக்கை தயாரிக்கும் யோசனை..

அதாவது சாலை ஓர தேநீர் மற்றும் சிற்றுண்டி விடுதிகள், கேளிக்கை விடுதிகள், கடற்கரை விடுதிகள், பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் மற்றும் கல் இருக்கைகளை போல அடிப் பகுதியை மேஜையாகவும் நுனிப் பகுதியை இருக்கையாகவும் வடிவமைத்தனர். ஒருவர் தென்னை மர இருக்கையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு தேனீர் குடிக்க வசதியாக அந்த இருக்கை அமைந்தது. அதன் பிறகு அவர்கள் அகற்றிய அத்தனை தென்னை மரங்களின் அடி, நுனி பகுதிகளை மேஜை, இருக்கைகளாக அமைத்து வைத்துள்ளனர்.

இது குறித்து நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் நெவளிநாதன் கூறும் போது.. இன்னும் கஜா புயலின் தாக்கத்தில் இருந்தும் அதிர்ச்சியில் இருந்தும் மீளமுடியாத விவசாயிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த குழு பல தோட்டங்களில் மரங்களை அகற்றி மறு நடவு செய்ய நிலத்தை கொடுத்திருக்கிறது.

அப்படி மரங்களை வெட்டி அகற்றும் போது மரத்தின் நடுப்பகுதிகளை சுமார் 8 அடி முதல் 10 அடி துண்டுகுளாக வெட்டி தோட்டங்களின் ஓரங்களில் அடுக்கிவிட்டோம். ஆனால் அடிப்பகுதியும் நுனிப் பகுதியும் தேவையில்லாம் கிடந்தது. அதை என்ன செய்யலாம் என்ற போது தான் கேளிக்கை விடுதிகள், சொகுசு விடுதிகளில் இதுபோல ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு தேனீர் குடிப்பது போல இருக்கை தயாரிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. சில அடிப்பகுதிகளையும் நுனிப் பகுதிகளையும் அறுத்து வைத்து பார்த்தோம் அழகாக இருந்தது. அதன் பிறகு அவற்றை அப்படியே செய்து வைத்துள்ளோம்.

செங்கல் சூலை மற்றும் கட்டுமாணப் பணிகளுக்கு நல்ல மரங்களை அறுத்துக் கொண்டு அடியும் நுனியும் போட்டுவிட்டு செல்கிறார்கள். அவற்றை அகற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். அதனால் விடுதிகள் நடத்துபவர்கள், விடுதி தொடங்க நினைப்பவர்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விதமாக தென்னை மரங்களில் இருந்து அறுக்கப்படும் அடி, நுனி பகுதிகளை வாங்கிச் சென்று அழகாக இருக்கைகளாக அமைத்துக் கொள்ளலாம். பல ஆயிரங்களை செலவு செய்து கல், இருக்கைகள் செய்வதை விட குறைந்த விலையில் விவசாயிகளுக்கு கை கொடுக்க இயற்கையோடு இந்த இருக்கைகளை அமைக்கலாம் என்றவர் நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழு சார்பில் விரையில் சாலை ஓர விடுதி தொடங்கி இந்த இருக்கைகளை பயன்படுத்த உள்ளோம் என்றார்.கார்டனுடன் இணைந்து இயற்கையான விடுதிகள் நடத்தும் தொழில் அதிபர்கள் விவசாயிகளுக்கு கை கொடுக்க இந்த இருக்கைகளை பயன்படுத்தலாம்...

எந்த சாலைக்கு எந்த மைல்கல்...


மனிதர்கள்...


மனிதர்கள் ஓன்றையே பற்றி கொண்டே இருக்கிறார்கள்..

பின் ஓன்றை விட்ட பிறகு மறுபடியும் ஓன்று இப்படியே அடுத்து அடுத்து..

எதற்காக பற்றி கொண்டான் என்று அவனுக்கும் தெரியாது அவனை சுற்றி உள்ளவர்களுக்கும் தெரியாது..

ஏனெனில் மனிதர்கள் மிக சிறந்த அறிவாளிகளும் கூட மிகப்பெரிய கோமாளிகளும் கூட..

மனம் ஓர் சிறைச்சாலை...

பயணம்...


பொறுமையாக பயணியுங்கள.ள் அனைவரும்...

பொருமை மட்டுமே தேடலுக்கான சாவி..

நான் சிறிது நேரம் தூங்கிவிட்டு வருகிறேன்...

தேமலா கவலை வேண்டாம்.. எளிய வீட்டு வைத்தியம் இருக்கு...


1.கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.

2.கமலா ஆரஞ்சு தோலை பொடி செய்து தினமும் தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.

3.மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.

4.வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.

5.கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர தேமல் குறையும்.

6.முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.

7.சந்தனத்தை எலுமிச்சைச் சாற்றில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர தேமல் குறையும்.

8.நாயுருவி இலை சாறை தேமல் உள்ள இடத்தில் தினமும் தட‌வி வ‌ர‌ தேமல் குறையும்.

9.ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குறையும்...

திமுக ஸ்டாலின் கலாட்டா...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இஸ்ரேலிய பாலைவனத்தில் ஒரு கைவிடப்பட்ட தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் மிக அரிதான ஓவியம் என நம்பப்படுவதை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளனர்.

இயேசுவின் மிக அரிதான இந்த கலை சித்தரிப்பு இஸ்ரேலின் தெற்கே பெரிய நெகேவ் பாலைவனத்தின் இதயத்தில் உள்ள பைசாண்டீன் விவசாய கிராமமான சிவாடாவின் பழமையான தேவாலய அழிவில் காணப்படுகிறது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதலில் சிதைந்த தேவாலயங்களை தான் கவனித்தனர். ஆனால் சுவரோவியங்களைக் கவனிக்கவில்லை என்று தெரிகிறது.
சரியான நேரத்தில்,சரியான வெளிச்சத்தில், திடீரென்று பரிசுத்தரின் கண்களைக் கண்டனர். " அவருடைய ஞானஸ்நானத்தில் முகம் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தது."

துண்டு துண்டான ஓவியமானது ஆறாவது நூற்றாண்டிற்கு முற்பட்டது. இயேசு கிறிஸ்துவின் முகபாட்டு, ஒரு இளம் மனிதனாக குறுகிய முடிகளுடன் வெளிப்படுத்தியதாக ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இயேசுவின் இந்த ஓவியமானது 1920 களில் முதன்முதலில் காணப்பட்டது, மேலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இப்போது மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 2018 ல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விவிலிய நபி ஏசாயாவின் 'கையெழுத்து' கையொப்பத்தை தாங்கிய ஒரு களிமண் முத்திரையும் கண்டுள்ளனர்...

சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய்...


நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க நாம் சாப்பிட வேண்டி உணவு பற்றி பார்க்கிறோம். சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது :

கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

நீரிழிவு நோய்யை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும். சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை.

நோயாளிகள் பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்து விடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள்.ஆனால் அது ரொம்ப ரொம்ப கடினம்.

சாப்பிடுவர்களின் முகத்தைப் பார்த்தால் அவர்கள் முகம் எத்தனை கோணத்தில் போகும் என்று பார்ப்பவருக்கு மட்டும் தான் தெரியும். இந்த நிலையில் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கோவைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கோவைக்காய் பற்றி சில துளிகள்...

மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும்.

இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு.

நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்ப முடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

கோவைக்காயின் ச‌த்துக்க‌ள்...

உயிர்ச்சத்து (vitamin) ஏ 156 மைக்ரோ கிராம் (Micro gram), ஃபோலிக் அமிலம் (Folic acid), கால்சியம் (Calcium), எரியம் (phosphorus), இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.

கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது. நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.

கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். இக்காய் கொஞ்சாம் சூடு. அதனால் உதடு வெடிப்பு, வயிற்றுப் புண் ஏற்ப்படும்.

ஆனால் நாம் நீரிழிவு நோய்யாளிக‌ள் நீர் மோர், எலுமிச்சை சாறு என்று எடுத்துக் கொள்ளுவ‌தால் இந்த‌ சூடு அதிக‌ம் ஏற்ப்ப‌டாது. ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது.

பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். இக்காய்யை நீரிழிவு நோயாளிகள் மட்டும் அல்லாமல் எல்லரும் சாப்பிட்டலாம்...

பாஜக இந்தி திணிப்பு கூட்டத்தை யாராவது பார்த்தீங்களா.?


இன்று முதல் எல்லோரும் துணி பைக்கு மாறுவோம்....


தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. ஆகையால் நாமும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் பைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் இன்னைல இருந்து எல்லோரும் கடைக்கு துணி பை எடுத்துட்டு போவோம்...

செத்தவன் எப்படிடா வாழுவான்... திருட்டு பகுத்தறிவு திராவிடர்களே...


சுதந்திரம்...


நீ எதிலிருந்து விடுபட நினைக்கிறாயோ அவற்றுடனெல்லாம் நீ மேலும் பந்தப்படுவாய்.

ஏனெனில் சுதந்திரம் என்பது எதற்கும் எதிரானதல்ல.

சுதந்திரம் என்பது எதனிடமிருந்தோ அல்லது எதற்காகவோ அல்ல.

சுதந்திரம் என்பது எதனுடனும் உடன்படுவதுமல்ல.

சுதந்திரம் என்பது கடந்து செல்வது.

உடன்பாடு, எதிர்மமறை இரண்டையும் கடந்து செல்வது.

சுதந்திரம் என்பது இருமைத் தன்மையிலிருந்து விடுதலை.

அங்கு உடன்பாடு எதிர்மறை எங்கிருக்கிறது.....?

எதனுடன் சம்பந்தப்படுவது....?

எதை எதிர்ப்பது........?

சம்பந்தம் புத்திசாலித் தனமானதல்ல. எதிர்ப்பும் பழையதோடு சம்பந்தப்பட்டது தான்.

ஆகவே, புரிந்துகொள்-சண்டையிடாதே.

சண்டையிடுவதன் மூலம் யாராவது ஏதாவது அடைந்திருக்கிறார்களா......?

வலியைத் தவிர-தோல்வியைத் தவிர.

ஆகவே, தப்பி ஓடாதே, பதிலாக விழித்துக்கொள்.

தப்பி ஓடுவதனால் ஒருவன் தப்பி ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அதற்கு முடிவு இல்லை.

அறிதலே சுதந்திரம். பயமல்ல, கோபமல்ல, பகையல்ல, எதிர்ப்பல்ல.

அறிதல் மட்டுமே சுதந்திரம்...

பாஜக - அதிமுக கூட்டணி கலாட்டா...


சுவையான குடிநீரைப் பெற...


சுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா?

சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை விசேடமாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.

மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும்.

மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள்.

மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும்.

ஃப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எசு (ஸ்ஸு)க்குக் கீழே இருக்கும் தெள்ள தெளிவாக (Crystal Clear) குடிநீர் இது.

குடிக்கும்போது ஏதாவது ஒரு சுவை (flevour) வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.

தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள்.

ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது...

டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் - பாமக...


குண்டலினி சக்தியின் அதீத ஆற்றல் .....


குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தைச் சீர்படுத்துவதற்காகச் செய்யும் பயிற்சியாகும்.

குண்டலினி =குண்டம்(நெருப்பு) + அலி(பாலின வேறுபாடுக்கு உட்படாத) + னி(உயிர்).

இவ்வண்டம் எவ்வாறு ஐமூல சக்திகளால் (பஞ்சபூதங்கள்) ஆனதோ அதைப் போலவே மனித உடம்பும் ஐமூல சக்திகளால் ஆனது.

ஐந்து முறைகளைக் கொண்டு இயங்குகிறது என்பது யோகக் கலையின் அடிப்படை.

அதில் ஆகாய சக்திக்கு உரிய யோகாவே குண்டலினி.

குண்டலினி என்பது சரீரம் சார்ந்த சக்தி. இது முதுகெலும்பின் அடியில் இருக்கும். இதை மூலாதாரத்தில் இருந்து ஆக்கினைக்கு ஏற்றும் போது ஒரு குட்டிப் பாம்பு ஊறுவது போல் மேலே ஏறும்...

குண்டலினி சக்தியின் அதீத ஆற்றல் .....

நமது எல்லா சக்திகளுக்கும், ஆற்றல்களுக்கும் குண்டலினியே திறவுகோள்.

அதைக் கிளப்புவதற்கு மனம் தான் கருவியாக இருக்கிறது.

மன ஒருமைப்பாடும், தாரணை, தியானப் பயிற்சிகளால் அதைக் கிளப்ப முடியும்.

பார்வையாலும், கையாலும், நாக்காலும் கூட கிளப்பிவிடும் ஞானியர்கள் உண்டு.

இப்பொழுதெல்லாம் கட்டணம் வசூலித்து குண்டலனியை கிளப்பி விடும் குருமார்கள் அதிகரித்து விட்டார்கள்.

குண்டலினி கிளம்பும் போது அடிமுதுகில் பட், பட் என்ற சத்தமெழும்பும்.. குறுகுறுப்பு காணப்படும்.

பாம்பு ஊர்ந்து செல்வது போல, பறவை பறப்பது போல, தவளை போல தத்தி, குரங்கு போல தாவி, மீன் போல நீந்தி.. என ஐந்து விதங்களில் குண்டலினியானது மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி சகஸ்ராரத்திற்கு போகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.

குண்டலினி கிளம்பியவர்களுக்கு நரம்புகள் ஊக்கம் பெறும்.

தேகம் ஆரோக்யமாக விளங்கும்.

பசியைத் தூண்டும்.

புலன்கள் விழிப்பு நிலையில் செயல்படும்.

பாலுணர்ச்சி சக்தி அதிகமாக ஊறும்.

அதை விரயம் செய்யாமல் ஓஜஸாக மாற்றிக் கொண்டால் ஆற்றல் அதிகமாகும்.

ஒழுக்கமில்லாதவர்களுக்கு இதனால் வக்கிரமான எண்ணங்கள் தூண்டப்பட்டு, காமவெறி பிடித்தவர்களாக மாறி விடுவார்கள்.

தீயவர்களுக்கு இதை கிளப்பி விட்டால்.. அகங்காரம், கோபம் அதிகமாகி பேராசைக்காரனாக, திருடனாக, ஏன் கொலைகாரனாக கூட மாறிவிட வாய்ப்புகள் உண்டு.

கடவுளுக்கே சவால் விடுவார்கள்..

இதை நாம் புராண காலம் தொட்டு இன்றளவும் நடைமுறையில் பார்க்கிறோம்.

ஆகவே குண்டலினியை கிளப்ப வேண்டுமெனில், முதலில் நல்லொழுக்கங்களை கடை பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

யோகத்தின் நோக்கமே மனிதனை ஒழுக்கம் உள்ளவனாக வாழ வைப்பது தான்.

தீய பழக்கவழக்கங்கள் உள்ள பலகீனமானவர்களுக்கு அதன் சக்தியை தாங்க முடியாமல் போகும்.

மனதிடம் இல்லாதவர்களுக்கு பைத்தியம் பிடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

நல்ல குருமார்கள் சீடர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக மாறும் வரை அவர்களை பக்குவப்படுத்தி போதனைகள் செய்து அவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் என்று உறுதி செய்து கொண்டு அதற்குப் பிறகே குண்டலினியைத் திருப்பி விடுவார்கள்.

அதன் சக்தியைத் தாங்க போதிய பலம் தேவை என்பதினால் ஆசனங்கள், பந்தங்கள், உடல் பயிற்சிகள் யாவும் கற்றுக் கொடுப்பார்கள்.

அதோடு ப்ராணாயாமப் பயிற்சியும் தேவை.

சுவாசம் வசப்பட்டால் மனம் அடங்கும்.

எனவே தான் நாடி சுத்தி அதைத் தொடர்ந்து ப்ராணாயாமம்..

நல்ல குருமுகமாக பயிற்சி மேற் கொண்டால், முதலில் குண்டலினியைக் கிளப்பி, பிறகு ஒவ்வொரு சக்கரமாக இதழ்களை விரித்து அதனுள் அதை ஏற்றி, மீண்டும் கீழிறங்கி விடாமல்..

ஒவ்வொரு இதழ்களையும் மூடி, முடிவில் சகஸ்ராரத்துக்கு ஏற்றி ஆயிரம் இதழ்களிலும் நிரப்பி, ஆனந்தந்தைப் பெற வழிவகை செய்வார்கள்..

ஒவ்வொரு சக்கரங்களும் இயங்க மாதக்கணக்கில் பயிற்சி தேவைப்படும்..

பயிற்சியின் முடிவில் அதிகப் புலனாற்றலும், அஷ்டமா சித்திகளும் கைகூடும். பிரகாசம் உள்ளவர்களாக மாறி விடுவார்கள்...

தமிழினம் விரோதி பாஜக மோடி ஒழிக...


மேரி மக்தலின் யார்.?


"ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு"
- தீத்து 3:2 (புனித பைபிள்)

#மரியாள்_சுவிசேஷம்:
(கி.பி 120-180)

மரியாளின் சுவிசேசத்தில் மக்தலின் மரியாள் பல இடங்களில் காணப்படுக்கிறார். இந்நூலின் ஓர் இடத்தில் சீடர்களுக்குள் நடைபெறும் உரையாடலை வாசிக்கலாம்.

பேதுரு மரியாளை நோக்கி,
"சகோதரியே, இரட்சகர் மற்ற பெண்களை காட்டிலும் உங்களை அதிகம் நேசித்தார் என்று எனக்கு தெரியும். எங்களிடம் கூறாத ஏதேனும் போதனைகளை அவர் உங்களுக்கு கூறி இருந்தால் அதனை நாங்களும் அறியும்படி எங்களுக்கும் கூறுங்கள்" என்றார். எனவே மரியாள் ரட்சகரால் தனக்கு வெளிபடுத்தப்பட்டிருந்த போதனைகளை அவர்களிடம் கூறினாள்.

உடனே அந்திரேயா, "இதை இரட்சகர் கூறியிருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை. இவை விசித்திரமான போதனைகள்" என்றார். அதற்கு பேதுரு, "நம்மிடம் வெளிப்படையாக கூறாமல் அவர் ஒரு பெண்ணிடம் தனிப்பட்டு கூறுவாரா? நாம் அவள் கூறுவதை நம்பவேண்டுமா? அவருக்கு நம்மை விட அவள் உயர்ந்தவளா?" என்றார்.

அப்பொழுது லேவி, "பேதுருவே நீ முன்கோபக்காரன், நீ பெண்களை ஏதோ எதிரிகளை போல சித்தரிக்கிறாய். இரட்சகரே அவளை மகிமைபடுத்தும் போது நீ யார் அதை தடுக்க? நிச்சயமாக இரட்சகர் அவளை நன்றாக அறிந்திருக்கிறார், எனவே தான் அவர் அவளை நம்மிலும் அதிகமாய் நேசிக்கிறார்" என்றார் - மரியாள் சுவிசேசம்

#பிலிப்பு_சுவிசேசம்:
(கி.பி 180 - 250)

"மூவர் ஆண்டவருடன் எப்பொழுதும் நடந்தனர், மரியாள் என்னும் அவரின் தாய், அவரின் சகோதரி மற்றும் அவரின் உறுதுணை என்று அழைக்கப்பட்ட மேரி மக்தலின். அவர் தாய், சகோதரி, உறுதுணையாளர் ஆகிய மூவருமே மரியாக்கள் தான் "

#தோமா_சுவிசேசம்: (கி.பி 50-140)

"தங்களின்  சீடர்கள் யாரை போன்றவர்கள்?" என்று மரியாள் இயேசுவை கேட்டாள். சீமோன் பேதுரு அவர்களிடம், "மரியாள் நம்மை விட்டு விலகட்டும், பெண்கள் ஜீவியத்திற்கு பாத்திரர் அல்ல" என்றான். அதற்கு இயேசு, "ஒரு ஆணை போல நான் அவளை வழிநடத்துவேன், எனவே அவளும் ஆண்களாகிய உங்களை போன்று ஜீவியத்திற்கு பாத்திரமாவாள். தன்னை ஆணாக மாற்றிக்கொள்ளும் எந்த பெண்ணும் நிச்சயமாக பரலோகத்தில் பிரவேசிப்பாள்" என்றார்.

இந்த உரையாடலில் மேரி மக்தலின் ரட்சகரால் சீஷர்களை விட மிகவும் நேசிக்கப்பட்டவர் என்றும், சீஷர்களிடம் கூட கூறப்படாத விசித்திரமான போதனைகளை மேரி மக்தலின் இரட்சகரிடம் கேட்டறிந்தவர். மேரி மக்தலின், இயேசுவின் ஒரு சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்தார்...