03/01/2019

நோக்குவர்மம் சாத்தியமா.?


நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திலும் மின்காந்த சக்தி உண்டு.

அந்த சக்தி குறையும் போது உடலில் எந்த பகுதி பலவீனமாக உள்ளதோ அந்த பகுதியில் இருக்கும் இணைப்பு இயக்க சங்கிளிகளின் கன்னிகளை தெரிக்க வைக்கிறது.

அதன் மூலம் உடலில் நோய் ஊடுருவுகிறது.

முதுகு தண்டின் கீழ்பகுதி தான் நம் உடலின் சக்தி மையமாக செயல்படுகிறது.

இங்கிருந்து தான் உடலில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் சக்தி பாய்கிறது.

புவியீர்ப்பு விசையின் காரணமாக அந்த சக்தி முதுகுதண்டின் அடியிலேயே உறைந்துள்ளது.

நோக்குவர்மம் என்பது அந்த சக்தியை கண்களுக்கு ஏற்றி அதன் வழியாக எதிராலியின் உடலில் உள்ள 108 வர்ம புள்ளிகளில் எதிலேனும் குவித்து பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நீக்கவோ முடியும்.

நமது உடலில் 6000 கோடி செல்கள் 72000 நாடிகளால் பிணைக்கபட்டுள்ளது.

அந்த நாடிகள் ஒன்றோடொன்று சந்திக்கும் இடங்களே 108 வர்ம புள்ளிகள் ஆகும்.

இந்த வர்ம புள்ளிகள் 7 ஆதார சக்கரங்களில் இணைக்கபட்டுள்ளது.

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சகஸ்ராரம் ஆகியவையே அந்த சக்கரங்கள்.

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினியை கண்களுக்கு ஏற்றி எதிராலியின் பிராண சக்தியை உறிஞ்சி மயக்கத்தையோ அல்லது மரணத்தையோ நிகழ்த்துவதே நோக்கு வர்மம்.

நாம் சுவாசிக்கும் போது பிரபஞ்ச சக்தியான பிராண சக்தியையும் சேர்த்துதான் உட்கொள்கிறோம்.

இதை பிராணாயாம்ம் எனும் மூச்சு பயிற்சியால் சக்தியை அதிகமாக்கி கொள்ளலாம்.

நோக்குவர்மத்தில் தேர்ச்சி பெற்றவனுக்கு நிகர் உலகில் யாரும் இல்லை என்று அகத்தியர் கூறுகிறார்.

எனவே தான் இது சித்தர் பாடல்களில் மறை பொருளாகவே சொல்லபட்டுள்ளது.

அடுத்து ஒரு வித்தியாசமான தலைப்பின் அறிவியலை ஆழமாக அலசுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.