13/10/2017

சம்பள உயர்வுக்காக போராடி வரும் SRM மருத்துவமனை செவிலியர்களை மருத்துவமனை நிர்வாகம் மிரட்டுவதாக செவிலியர்கள் குற்றச்சாட்டு...


சுருக்கமான வழி சொல்லவா?


விடுதலை பெறுவது அத்தனை எளிமையன்று..

அதுவும் ஒரு பழமையான இனம் அதன் சொந்த மண்ணில் விடுதலை பெற உலக சிறு-பெரு ஆதிக்கங்கள் விடவேவிடாது..

உலகமே எதிர்த்து வரும்.

ஆனால், தமிழினம் விடுதலை பெற ஒரு சுருக்கமான வழி உள்ளது..

தமிழர்கள் குறைந்த சேதத்துடன் விரைவாக விடுதலை அடைய வேண்டுமேயானால், தமது விடுதலையை எதிர்த்து நிற்கும் கூட்டத்தில் எவனெல்லாம் தமிழனோ அந்த தமிழனையெல்லாம் முதலில் ஒழித்து கட்டிவிட வேண்டும்.

எதிரணியில் நமக்கு சவாலாக அமையப் போகிறவன் தமிழன் தான்.

அது நடக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்..

அது ஒன்றும் கடினமில்லை..

தமிழினவுணர்வு பெற்றுவிட்ட ஒரு தமிழனின் முன்னாள்...

தமிழினவுணர்வு பெறாத ஒரு தமிழனால் தாக்குப்பிடிக்கவே முடியாது...

அரைஞாண் கயிறு இடுப்பில் கட்டுவதன் அவசியம்... மருத்துவ ரகசியம்...


அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு.

எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..

உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?

நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்...

ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது.

ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு..

அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது.

பிறகு அக்கயிறு வெள்ளிக் கொடியாக மாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள்.

இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.

இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி, தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான்.. அது பகட்டுக்கு..

சில விசயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.

நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...

நகம்...


நகம் என்பது நமது தோலின் ஒரு பகுதி.. ஆனால் தோலைவிடக் கடினமானது..

கெரட்டின் எனும் புரதப்பொருள் தான் நகத்தின் கடினத் தன்மைக்குக் காரணம்..

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..

நகம் வெளிறிப் போயிருந்தால் - இரத்தசோகை..

மஞ்சள் நிறத்தில் இருந்தால் - மஞ்சள் காமாலை..

நீல நிறத்தில் இருந்தால் - இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவு..

வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் - கால்சியம் சத்துக் குறைவு..

சுற்றிக் கரும்புள்ளிகள் தோன்றினால் - B12சத்துக் குறைவு..

நத்தைக்கூடு மாதிரி வீங்கினால் - காச நோய்,கல்லீரல்நோய்..

ஸ்பூன் மாதிரி மத்தியில் குழி விழுந்தால் - இரும்புச்சத்து குறைவு...

பாஜக மோடியின் மோசடி தர்பார்...


ஒரு டன் நிலக்கரி  ரூபாய் 25 ஆயிரத்திற்கு வெளிநாட்டில் இருந்து வாங்கி, அதனை டாடா, அம்பானிக்கு ஒரு டன் வெறும் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு கொடுக்க உள்ளது மோடி அரசு..

ஆக, ஒரு டன்னுக்கு 22500.00 ரூபாய் அரசுக்கு நட்டம். இது என்ன மோடி வீட்டு அப்பன் சொத்தா? மக்கள் பணம் எப்படி எல்லாம் போகுது பாருங்க மக்களே..

அதைவிட கொடுமை என்னவென்றால், இந்த நிலக்கரியை இறகுக்குமதி செய்யும் நாடுகளான இந்தோனேஷியா, ஆஸ்திரிலியா ஆகிய நாடுகளில், அந்த நிலக்கரியை வெட்டி எடுக்கும் காண்ட்ராக்டையும், திருவாளர் மோடி அவர்கள் அதே டாடாவுக்கும், அம்பானிக்கும் தரகு வேலை பார்த்து வாங்கி கொடுத்து இருக்கிறார்.

இதில் கூட்டு களவாணியாக மோடியின் பார்ட்னர் அதானியும் சேர்ந்துள்ளார்.
புரிகிறதா மக்களே...

இவங்களே நிலக்கரியை வெட்டி எடுத்து அதை நல்லவிலைக்கு விற்று கல்லா கட்டுவார்களாம், அதை இந்திய மோடி அரசு ஒரு டன் ரூபாய், 25000.00 வாங்க வேண்டுமாம், அதை அதே அந்த கார்பரேட் கொள்ளை கும்பலுக்கு ஒரு டன் ரூபாய்   2500.00 க்கு விற்க வேண்டுமாம்.

எப்படியெல்லாம் இந்த காற்பரேட்டுகள் உயரே செல்கிறார்கள், அதற்கு மோடி அரசு எப்படியெல்லாம் விளக்கு பிடிக்கிறது என்பதற்கு இதை விட சாட்சி வேண்டுமோ?

அந்தக்கால பெண்களின் நீண்ட கூந்தலின் ரகசியம்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 30...


தியானத்தால் மேம்பாடு...

ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல ஒரு எளிய பயிற்சியைப் பார்த்தோம். படிக்கும் போது மிக எளிதாகத் தோன்றினாலும் அதைச் செய்து பார்த்த பலருக்கு அது அவ்வளவு சுலபமானதாக இருந்திருக்காது. மனம் அரைமணி நேரத்திற்காவது அமைதியாக இருப்பது பெரும்பாடாக இருந்திருக்கலாம்.
எண்ணங்களுக்கும் மூச்சிற்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர். மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைக்கையில் மூச்சு சீராக இருக்கும். மூச்சு சீராக இருக்கையில் தானாக மனம் அமைதியடையும் என்பதை அனுபவ பூர்வமாக அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால் பழக்கமில்லாதவர்களுக்கு மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைப்பதற்கு மனம் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும். பல கவலைக்குரிய விஷயங்களையும், கவனிக்க வேண்டிய விஷயங்களையும் சுட்டிக் காட்டி அதையெல்லாம் யோசித்துப் பார்க்கச் சொல்லும். இது பெரிய விஷயமில்லை என்று சொல்லும். அரைமணி நேரம் என்று ஆரம்பித்தாலும் ஐந்து பத்து நிமிடங்களில் இப்போதைக்கு இது போதும் என்று முடித்து வைக்கச் சொல்லும். அதையெல்லாம் கேட்டு தங்கள் முயற்சியை அரைகுறையாய் விட்டவர்கள் முதல் படியிலேயே சறுக்கி விட்டார்கள் என்று அர்த்தம். அப்படியில்லாமல் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் முயற்சி செய்து இருந்தது ஆல்ஃபா அலைகளில் தானா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் அமைதியாக அமர முயற்சி செய்ததே நல்ல ஆரம்பம் தான்.

நாம் என்ன சொன்னாலும் இந்த நபர் இந்த அரைமணி நேரம் இந்தப் பயிற்சி செய்த பிறகு தான் நாம் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்வார் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் மேல்மனம் இடைமறிப்பது தானாகக் குறையும். மனம் தானாக அமைதியடையும். எனவே இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் அதை ஆரம்பிப்பது நல்லது. இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என்று எஜமானாகக் கண்டிப்புடன் சொல்லி செயல்படுத்தினால் ஒழிய மனம் எந்த நல்ல மாற்றத்தையும் விரும்பி ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

மனம் உண்மையாகவே அமைதியடையவும், ஆழ்மன சக்திகள் சிறப்பான முறையில் கைகூடவும் மிகச் சிறந்த வழி தியானம் தான். தியானம் அல்லாத முன்பு சொன்னபடி சில பயிற்சி முறைகளாலும் ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல முடியும் என்றாலும் தியானப் பயிற்சிகளை முறையாகச் செய்தால் ஆல்ஃபா நிலையை சிறப்பாக நமக்கு வேண்டும்படி பயன்படுத்திக் கொள்ள முடியும். பின்னர் ஆல்ஃபாவிலிருந்து தீட்டா டெல்டா அலை வரிசைகளுக்குச் செல்வதும் எளிதாகும்.

தியானம் என்றாலே அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல. பல மதத்தினரும் பலவித தியானமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்ற போதும் மதங்களைச் சாராதவர்களும், இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட தியானப் பயிற்சியால் விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு தியானம் செய்யலாம். பலரும் செய்கிறார்கள்.

தியானப்பயிற்சியால் ஆழ்மன சக்திகள் மட்டுமல்லாமல் பல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களும், அனுபவஸ்தர்களும் கூறுகிறார்கள். முறையாகத் தொடர்ந்து உண்மையாக தியானம் செய்பவர்கள் தீய குணங்கள் குறைந்து நல்ல குணங்களைப் பெறுவது உறுதி. அன்பு, பொறுமை, மனக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, அமைதியாக ஆராயும் குணம், பக்குவம், அறிவு வளர்ச்சி, மன அமைதி ஆகியவை அதிகமாகின்றன. கவலைகள், கோபம், பொறாமை, அற்ப புத்தி, குழப்பம், பேராசை போன்றவை குறைகின்றன. தியானம் செய்தும் அப்படி ஆகாமல் இருந்தால் உண்மையில் தியானப்பயிற்சி நடக்கவில்லை என்றும் தியானம் என்ற பெயரில் ஏதோ எந்திரத்தனமான சடங்கு நடந்திருக்கிறது என்று பொருள் என்றும் அடித்துக் கூறலாம்.

1996 ஆம் ஆண்டு இரத்த அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றைக் குறைப்பதில் தியானத்தின் பங்கு பற்றி சார்லஸ் அலெக்சாண்டர் (Charles N Alexander Ph.D) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு அமெரிக்காவில் மூன்று மாத காலம் ஆராய்ச்சி செய்தது. தன் முடிவுகளை அமெரிக்க இருதய அசோஷியேசன் வெளியிடும் பத்திரிக்கை Hypertension ல் 1996 ஆகஸ்ட் இதழில் அலெக்சாண்டர் வெளியிட்டார். அதில் வயதான வேறு பல வியாதிகள் இருக்கும் நபர்களும் கூட தியானத்தின் மூலம் இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க முடிகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

1992 ல் USA Today பத்திரிக்கை வயதான தோற்றத்தைத் தடுக்க தியானம் உதவுகிறது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் இளமையான தோற்றமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

1989 ல் Newsweek பத்திரிக்கை முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த முதியோர்களை (சராசரி வயது 81 வயது) மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவு ஆட்களுக்குத் தியானப் பயிற்சியும், இன்னொரு பிரிவு ஆட்களுக்கு வெறும் ரிலேக்சேஷன் பயிற்சியும் அளித்தது. மூன்றாவது பிரிவினருக்கு தியானப் பயிற்சியோ, ரிலேக்சேஷன் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் தியானப்பயிற்சி செய்த அனைத்து நபர்களுமே உயிரோடிருந்தனர். வெறும் ரிலேக்சேஷன் பயிற்சி செய்திருந்த முதியோரில் 12.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர். தியானமோ, ரிலேக்சேஷன் பயிற்சிகளோ செய்யாதவர்களில் 37.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர்.

மேற்கண்ட அனைத்து ஆராய்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்ட தியான முறை மகரிஷி மகேஷ் யோகியின் Transcendental Meditation ™ . அதையும் வேறு சில தியான முறைகளையும் விளக்கமாகப் பார்ப்போம். எல்லா தியானப் பயிற்சிகளிலும் எல்லோரும் தேர்ச்சி பெறுவது கஷ்டம். எனவே இனி விளக்கப்படும் தியானப் பயிற்சிகளில் உங்களுக்கு ஒத்து வருகிற ஒன்றில் தினமும் ஈடுபடுவது போதுமானது. ஆழ்மன சக்திகளுக்கு ஏற்ற அலைவரிசைகளில் நம்மை இருத்தச் செய்வதுடன் மற்றபல மன நலம் மற்றும் உடல் நலமும் தியானத்தால் மேம்படுவதால் முக்கியமான சில தியானங்கள் பற்றி அறிந்து கொள்வோமா?

மேலும் பயணிப்போம்.....

டெல்லி தலைமைச் செயலகத்தின் அருகே நின்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு...


கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்த அருமை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது...


அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை வழங்காமல் ஏமாற்றக் கூடாது- பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை...


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும்  என்று அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் ஊதிய விகிதம் குறித்த குறைகள் களையப்படவில்லை.

மத்திய அரசு பணியாளர்களுக்கான ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்த மத்திய அரசு, ஊதிய உயர்வில் எந்த பிரிவினருக்கும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஊதியக் காரணி என்ற புதிய முறையை பயன்படுத்தியது. அதன்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் 01.01.2016 அன்று வாங்கிய அடிப்படை ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அதனால் ஊதிய உயர்வில் பாகுபாடு காட்டப்படவில்லை. அதேபோன்ற அணுகுமுறையையே தமிழக அரசும் இப்போது பின்பற்றி புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயித்துள்ளது.

இதனால் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வில் எந்த ஏற்றத்தாழ்வும் காட்டப்படவில்லை. ஆனால், இதற்கு முன்பிருந்த ஊதிய விகிதங்களில் உள்ள குறைபாடுகள் இன்னும் களையப்படாமல் அப்படியே நீடிக்கின்றன. 10  ஆண்டுகளுக்கு முன் ஆறாவது  ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவால் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பல்வேறு பிரிவினரின்  ஊதிய விகிதங்கள் தாறுமாறாக மாற்றப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களில் உள்ள குளறுபடிகள் களையப்பட வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகவே அவர்கள் போராடி வந்தனர். ஆனால், அந்தக் குளறுபடிகள் தீர்க்கப்படாத நிலையில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது அவை சரி செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்காமல் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்தியிருக்கிறது. இதனால் ஊதிய முரண்பாடுகள் சரிசெய்யப்படுவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது. உடனடியாக ஒரு நபர் குழு அமைத்து, அடுத்த 3 மாதங்களில் அதன் அறிக்கையைப் பெற்று ஊதிய விகிதங்களில்  நீடிக்கும் முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களின்படி தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்ச ஊதியத்தில் வெறும் 7% மட்டுமே குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் குறைந்தபட்ச ஊதியம் என்பது அதிகபட்ச ஊதியத்தில் 8% ஆக இருந்தது. புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படும் போது  குறைந்தபட்ச ஊதியத்திற்கும், அதிகபட்ச ஊதியத்திற்கும் வேறுபாடு குறைய வேண்டுமே தவிர அதிகரிக்கக்கூடாது. ஆனால், இப்போது இடைவெளி அதிகரித்திருப்பதால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கும்.

அதேபோல், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றின் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சத்துக்கு  இடையிலான வித்தியாசமும் அதிகரித்திருக்கிறது. பொதுவாக அதிகபட்ச ஊதியத்தில் 20 விழுக்காடாவது குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட்டால் தான் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஓரளவாவது மட்டுப்படுத்த முடியும். தமிழக அரசின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்தப்பட்ச ஊதியத்தை, அதிகபட்ச ஊதியத்தில் 10 விழுக்காடாக, அதாவது ரூ.22,500 ஆக நிர்ணயிக்க வேண்டும். அதேபோல்,  குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.12,000 ஆக அரசு உயர்த்த வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக புதிய ஊதிய விகிதங்கள் 01.01.2016 முதல் கருத்தியல் அடிப்படையிலும், 01.10.2017 முதல் பணப்பயன் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.  அதாவது 01.01.2016 முதல் இப்போது வரையிலான 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும். இதற்கு முந்தைய 6 ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போதும் ஊதிய உயர்வு நிலுவை ஒரு தவணையிலோ, பல தவணையிலோ வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோது கூட நிலுவைத்தொகை ஒரே தவணையில் வழங்கப்பட்டது. அவ்வாறு இருக்க தமிழக அரசு ஊழியர்களுக்கு மட்டும் 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க இயலாது என்று அரசு  கூறுவது எந்த வகையில் நியாயம்?

இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் 01.01.2016 முதல் 20% இடைக்கால நிவாரணம் வழங்கும்படி தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. ஆனால், 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க மறுப்பதன் மூலம் அரசு  ஊழியர்களுக்கு சேர வேண்டிய ரூ.26,000 கோடியை ஏமாற்றத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். இது சிறிதும் நியாயமற்றது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை தவணை முறையிலாவது வழங்க தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

கோயில் மண்டபங்கள்...


  1. அர்த்த மண்டபம்
  2. மகா மண்டபம்
  3. நிருத்த மண்டபம்
  4. பதினாறு கால் மண்டபம்
  5. நூற்று (அ) ஆயிரங்கால் மண்டபம்
  6. ஸ்நபன மண்டபம்
  7. கேய மண்டபம்
  8. வாத்திய மண்டபம்
  9. முகமண்டபம்
10. சோபானமண்டபம்
11. கோபுரத்துவார சாலாமண்டபம்
12. ஆஸ்தான மண்டபம்
13. யாக மண்டபம்
14. புஷ்ப மண்டபம்
15. பூசை மண்டபம்
16. விஜய மண்டபம்
17. சுற்று மண்டபம்
18. உத்யான மண்டபம்
19. வல்லி மண்டபம்
20. சூர்ணமண்டபம்
21. நறுமணக் கலவை மண்டபம்
22. நீராழி மண்டபம்
23. கந்தமண்டபம்
24. ஆபரண மண்டபம்
25. மஞ்சனமண்டபம்
26. அலங்கார மண்டபம்
27. வசந்த மண்டபம்
28. உபசார மண்டபம்
29. முரசு மண்டபம்
30. தமிழ்வேதப் பயர்ச்சி மண்டபம்
31. தமிழ் ஆகம மண்டபம்
32. புராண விரிவுரை மண்டபம்
33. தீக்கை மண்டபம்
34. வீணா மண்டபம்
35. கொடியேற்ற மண்டபம்
36.தேர் மண்டபம்.

இப்படிப் பல மண்டபங்களைக் கொண்டது நம் கோயில்கள்...

பாஜக மோடி ஆட்சியில் வளர்ச்சி என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது...


ஊடகம் இதை பேச தயாராக இல்லை ஆனால் நாம் பேசுவோம் பட்டி தொட்டி என்று இதை கொண்டு செல்வோம்...

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரின் போலி முகமூடியை கிழிச்சி தொங்கவிடுவோம்...


அதிமதுரம்...


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தமிழ் பழமொழி...

உடல் பலத்தோடு பொருள் நிறைவு சேரும்போது மனம் மகிழ்ச்சி பெறும். இவ்வுலகில் அனைவரும் விரும்புவதும் வேண்டுவதும் ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வைத்தானே? நல்ல ஆரோக்கியத்துக்கும் அக மகிழ்வுக்கும் அடிப்படையாக விளங்குவது இயற்கை மருத்துவம். நாம் மறந்துவிட்ட இயற்கையையும் இயற்கை நமக்களித்த மருத்துவத்தையும் இங்கே காண்போம்.

அதிமதுரம் என்ற பெயரிலேயே அதன் தனித்துவம் விளங்குகிறது. அதி + மதுரம் = அதிமதுரம். மிகுந்த இனிப்புச் சுவை உடைய மூலிகை என்பது இதன் பொருள்.

அதிக நேரம் இனிப்பது என்பதும் கூட பொருளாகும். அதிமதுரத்தின் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra.

இது Fabaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகை.

சித்த மருத்துவத்தில் ‘அதிமதுரம்’ என்றும், வழக்கு மொழியில் ‘அதிங்கம்’, ‘அட்டி’, ‘மதூகம்’ என்று வழங்குவர். சமஸ்கிருதத்தில் ‘யுஷ்டிமது’, ‘அதிரஸா’, ‘மதுரஸா’ என்று குறிப்பிடுவர். உருது மொழியில் முலெத்தி என்று கூறுவர். அதிமதுரத்தின் வேர்களே நமக்குப் பெரிதும் பயன்படுகின்றன. வேர்கள் மிகுந்த இனிப்புச் சுவை கொண்டவை... குளிர்ச்சி தன்மை உடையவை. அதிமதுரத்தை உண்ட பிறகு, அது இனிப்பாகவே மாறும் (பிரியும்) இயல்புடையது. அதிமதுரத்தில் 2 வகைகள் உள்ளன

1. சீமை அதிமதுரம்..

சீமை அதிமதுரம் பெருவிரல் கனத்திலும், சிவப்பு அல்லது சாம்பல் நிறத்திலும், ஒடித்தால் உட்புறம் மஞ்சள் நிறமாகவும் இனிப்பாகவும் இருக்கும். இந்த சீமை அதிமதுரம்தான் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைப்பது. இது வங்கதேசம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.

2. நாட்டு அதிமதுரம்..

நாட்டு அதிமதுரம் சிறியதாகவும், விரல் பருமனாகவும், ஒடித்தால் வெண்மையாகவும், சிறிது இனிப்பாகவும் வழவழப்பாகவும் இருக்கும். இதை ‘குன்றிமணி வேர்’ என்ற பெயரில் நாட்டுமருந்துக் கடைகளில் விற்கின்றனர்.

அதிமதுரத்தில் Glycyrrhizin என்ற கிளைக்கோசைடும், Glycyrrhizic acid, Silicones, Sterols, Amino acids, Amine, Isoflavonoids போன்ற தாவரச் சத்துகளும் உள்ளன.அதிமதுரத்தின் பொதுவான செய்கைகள்...

வறட்சியகற்றி (Emollient), உள்ளழலாற்றி (Demulcent), கோழையகற்றி (Expectorant), உரமாக்கு (Tonic) ஆகிய செய்கைகளாகும்.பொதுவாக அதிமதுரத்தினால் கபத்தால் ஏற்படும் கோழை, பித்த மிகுதியால் ஏற்படும் உடல் சூடு, சுவாச காசம், கோழைக்கட்டு, கண் நோய்கள், வெறிநோய்கள், காமாலை, வெப்ப நோய்கள், வெண்புள்ளி (வெண்குஷ்டம்) முதலியன தீரும்.

அதிமதுரத்தால் வறட்டு இருமல் தீரும். அதிமதுரம், மிளகு, திப்பிலி, கடுக்காய் தோல் ஆகியவற்றை இளவறுப்பாக வறுத்துப் பொடித்து 4 முதல் 6 வராகன் எடை (ஒரு வராகன் எடை: 4.2 கிராம்) அளவு தேனில் குழைத்துத் தரலாம்.

நெஞ்சில் ஏற்படும் கோழைக்கட்டுக்கு அதிமதுரத் துண்டு ஒன்று/இரண்டு வாயிலிட்டு அதன் உமிழ் நீரை விழுங்க வேண்டும்.  அதிமதுரம் நெஞ்சகக் கோளாறுகள், கப நோய்கள் (சீதள நோய்கள்).

நுரையீரல் தொந்தரவுகள், வறட்டு இருமல், காச நோய், சிறுநீரக நோய்கள், தொற்றுநோய்கள், வயிற்றுவலி, வாயுக் கோளாறுகள், சிறுகுடலில் அமில தேக்கத்தினால் ஏற்படும் புண்கள், வயிறு வீக்கம், வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு தனியாகவும் அல்லது பிற மூலிகைகளுடன் சேர்த்து மருந்தாக பாகம் செய்தோ வழங்கப்படும்.

அதிமதுரத்தை பொடித்து வெந்நீருடன் கலந்து அருந்த மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். தடைப்பட்ட மாதவிலக்கைத் தூண்டும். அதிமதுரமும் முட்சங்கன் வேரும் சம எடை எடுத்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து தேற்றான் கொட்டை அளவு உருட்டி பசும்பாலில் ஒரு நாளைக்கு இருவேளை என்று கொடுக்க, மஞ்சள் காமாலைக்கும் மருந்தாகும்.

கர்ப்ப காலத்தில் ஏதேனும் ரத்த ஒழுக்கு ஏற்படின், அதிமதுரமும் சீரகமும் சம எடை எடுத்து 350 மி.லி. நீர் விட்டு எட்டில் ஒன்றாக (1/8) காய்ச்சி, காலை, மாலை - 3 அல்லது 4 நாட்கள் தரலாம். அதிமதுர இலைகளை அரைத்து உடலில் அக்குள்களில் பூசி குளித்து வர - கற்றாழை நாற்றம், சொறி, சிரங்கு, தேமல், படை போன்ற சருமப் பிரச்னைகள் தீரும்.

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை, வகைக்கு 1 பங்கு எடுத்துப் பொடித்து, அதனுடன் கொடிவேலி வேர்ப்  பொடி 17 கிராம் சேர்த்து கலந்து கொண்டு தேனில் குழைத்து, அதிமதுர சூரணமாகத்  தர தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி குணமாகும்.

ஜப்பான் நாட்டில் ஈரலுக்கான ஊசி மருந்தில் அதிமதுரத்தின் சத்தும் சேர்க்கப்படுகிறது. அதிமதுரம் ஈரலை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது...

தலைவலி போக்கும் புதினா இலை...


சித்தர் ஆவது எப்படி - 10...


இருப்பு நிலையின் பொறுப்பு...

இருப்பு நிலை, இருத்தல் நிலை, பற்றி பேசாத குருக்களே இல்லை.. ஓசோ அதிகமாகவே கூறி இருக்கிறார்.. மற்றும் இன்றைய குருமார்கள் மிக அதிகமாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்... இருந்த போதிலும் பஞ்சபூத கூட்டமைப்பில் சில விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் ஆகிறது...

மனத்தின் இயல் நிலையே இருப்பு தன்மை தான்... இதுதான் பஞ்சபூத கூட்டமைப்பில் மிக முக்கியமான இரகசியம்..

இந்த இருப்பு தன்மையை மனம் அடைந்த பின்னே தான் எந்த ஆன்மீகம் மார்க்கமும் தொடங்குகிறது.. அதுவரை எதுவும் துளியும் பயன் தராது..

இருப்பு தன்மை அடையாத பட்சத்தில் மனதில் எந்த கடவுள் உருவமும் எந்த யோகப் பலனும் எந்த நிலையான ஞானமும் எந்த திட சிந்தனைகளும் நிலைத்துநிற்க முடியாது..

காரணம் இயல்பாகவே இருப்பு தன்மை வாய்ந்த வெற்றிடத்தில் சித்தத்தின் எண்ண ஆதிக்கம் கொடி கட்டி பறக்கும்..

எங்கே எல்லாம் வெற்றிடம் உள்ளதோ அங்கே எல்லாம் எப்படி காற்று புகுந்து கொள்கிறதோ, அப்படியே இருப்பு தன்மை வாய்ந்த சுத்த மனத்தின் வெற்றிடத்தை, எல்லாம் இந்த சித்தத்தின் எண்ண ஆதிக்கம் ஆக்கிரமித்து விடும்..

அப்படியான மனம் சித்த மயமாகி விட்ட நிலையில் சித்தத்தின் பழைய எண்ண பதிவுகளின் ஆதிக்கத்தின் பிரகாரமே இயங்க தொடங்கும்..

எல்லா விலங்குகளும் அப்படியே அப்படி பட்ட மனதின் பிரகாரம் பூரணமாக இயங்குகின்றன...

ஆகவே தான் அவைகள் தங்கள் இயல்பிலிருந்து மாறி மனிதனை போல் வேறு விசேசமான முன்னேற்றம் மனதளவில் எதையும் அடைய முடிவதில்லை..

விலங்குகள் மனதில் சித்தத்தின் உச்ச கட்ட ஆதிக்கம் இருப்பதே இதற்கு காரணம்...

பின் மனிதன் எவ்வாறு வேறு படுகிறான் என்பதை பார்க்க வேண்டும்..

மனிதன் ஏதோ ஒரு வகையில் தன் மனதில் புத்தியின் அம்சமான கனலை, சித்தத்தின் ஆதிக்கத்தையும் மீறி மனதில் கனலை தக்க வைத்துக் கொள்ளும் பண்பை உடையவனாக இருக்கிறான்..

இந்த கனல் தான் சித்தத்தின் ஆதிக்கம் வழி செல்லாமல் தடுத்து நிகழ் காலத்திற்கும், நிகழ் கால நிகழ்வுகளை எதிர் கொள்ள பயன் படுகிறது...

இந்த நிகழ் காலத்தை தொலைத்தவனுக்கு விலங்குகள் போல் எந்த முன்னேற்றமும் காண முடியாது...

நிகழ் காலத்தை சந்திக்க முடியாதவனிடம் கனல் என்ற சக்தியின் குறை பாட்டு தன்மையே அதிகம் இருக்கும்.. சித்தத்தின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவிப்பார்கள்...

கனல் பெருக்கம் பெற்றவர்கள் மட்டுமே நிகழ்கால தொடர்பு பெற முடியும்.. இல்லையேல் சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமான இறந்த கால நடப்புகளிலேயே தன் காலத்தை முற்றிலும் தொலைத்து விட்டு வள்ளலாரின் மொழியில் சொன்னால் செத்தாரை போல அதாவது செத்துப் போனவர்களை போல் இருக்க வேண்டியது தான்...

சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாள் காலத்தை 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைதான் நிகழ்காலத்தில் கழிக்கிறான்..

மீதி நேரம் எல்லாம் இறந்த கால எண்ண ஆதிக்கத்தில் விரையம் ஆகிறது.. நிகழ்கால தொடர்பு என்பது சிவநிலை என்றும், சித்தத்தின் இறந்த கால தொடர்பு என்பது சவநிலை என்றும் சொல்லப் படுகிறது..

நாம் ஒரு நாள் வாழ்க்கையில் எவ்வளவு நேரம் சவநிலை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கணக்கிடும் போது நமக்கும் விலங்கிற்கும் அதிக வித்தியாசம் இல்லை..

ஒரு சதவீத வித்தியாசத்தில் மட்டுமே உள்ள நாம் அந்த ஒரு சதவீதத்தால் நாம் எவ்வளவு தூரம் விலங்குவிட மேம்பட்டு இருக்கிறோம் எனபதை கணக்கிட்டு பார்ப்பது மிகவும் அவசியமாகிறது..

அந்த ஒரு சதவீதத்திற்கே இப்படி என்றால் 100 சதவீதம் இருந்தால் எப்படி இருப்போம் என்பதை யூகிக்க வேண்டிய அவசியம் ஆகிறது..

இந்த கனலை எவ்வாறு பெறுவது அல்லது பெருக்குவது என்பது தான் யோகம்.. அப்படி பெருக்கும் எந்த யோகமும் பொதுவாக சிவயோகம் என்றே அழைக்கலாம்.. மற்றவை அனைத்தும் சவயோகம்...

கனலை பெறுவதற்கு முன்னால் நாம் மனதளவில் அடைய வேண்டிய ஒன்று தான் மனதில் இருப்பு தன்னம அல்லது இருத்தல் தன்மை..

அந்த இருத்தல், இருப்பில் மட்டுமே கனல் நிற்கும்.. இருப்பு தன்மை பெற்றால் மட்டும் போதாது, அதில் நீடித்து இருக்க வேண்டிய அவசியம் ஆகிறது..

பெற்ற கன்லை சித்தத்தின் எண்ண ஆதிக்கம் கவர்ந்து போகாதவண்ணம் பாது காப்பதும் அதை விட அவசியம் ஆகிறது..

சும்மா வந்து விடாது சுதந்திரம் என்பார்களே அது போல் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்திலிருந்து, சவநிலையிலிருந்து, மீண்டு சிவநிலைக்கு சுதந்திரமாய் வருவதற்கு ஆரம்பத்தில் மனம் என்ற நெருப்பில் பயின்றால் மட்டுமே முடியும்..

அந்த இருப்பு தன்மையை தக்க வைக்கும் பொழுது பேரண்ட பேராற்றல் கனலாக புத்தியில் நிலைகொண்டு, இருப்பு தன்மையால் மனதை கனலாக மாற்றி, சிவகலப்பாக மாற்றும் பொழுது, மனதில் மோதும் சித்தமும் சிவமாகி போகிறது..

அப்படி சித்தம் எல்லாம் சிவமாகி நின்ற நிலையில் தான் குறைந்த சதவீத கனல் நிலை அதிக சதவீதம் பெருக்கம் அடைந்து மனிதன் மேன்மை நிலை நோக்கி விரைவு கொள்கிறான்..

அந்த நிலையான இருப்பு நிலை பெறுவதற்கான பயிற்சிதான் சித்தர்கள் கண்ட வாசியோகமும் கனல் தீட்சையும்... இருப்பு தன்மை பெறாத வாசியோகம் நாசம் விளைவிக்கும்...

நம் பாட்டன் மருத்துவம்...


நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் குறித்து காண்போம்...


உண்மை 1..

3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.

உண்மை 2..

உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.

உண்மை 3..

ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.

உண்மை 4..

சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.

உண்மை 5..

முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.

உண்மை 6..

பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.

உண்மை 7..

இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

உண்மை 8..

ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

உண்மை 9..

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?

உண்மை 10..

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்...

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்...


தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை.

இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.

தோற்றம் :

அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.

அடங்கியுள்ள பொருட்கள் :

ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.

மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

குணங்கள் :

இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?

இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.

மருத்துவப் பயன்கள்:

பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்.

அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.

இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.

அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.

அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.

பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.

அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.

அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.

அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.

அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின் போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.

வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.

அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.

இக்கீரை பித்த நோயை நீக்கும்.

இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்...

அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...


உலக நாகரிகங்களில் தமிழனின் தடம்...


வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய (Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf-யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்?

ஊர் (Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் (Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria-யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் Tigris நதிகள் ஓடும் இன்றைய Iran, Iraq பகுதிகளைத்தான் 5000 வருடங்களுக்கு முன்பு சுமேரியா (Sumeria) என்று அழைத்தார்கள். மனித நாகரீகத்தின் தொட்டில் என்று சுமேரிய நாகரீகத்தை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் இரண்டும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பெருநகரங்கள். இன்றைய Metropolitan City-களுக்கு ஒப்பானவை. அக்கேடிய அரசு, ஊர் நகரத்திலிருந்தே தொடங்கியது. இங்கிருந்து அரசாண்ட அனைத்து சுமேரிய அரசர்களும் தங்களின் பெயர்களுக்கு முன்னால் இந்த ஊர் என்கிற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரமிடுகள் (Pyramid) போன்ற அமைப்புடைய மிக பிரம்மாண்டமான சிகுராத்கள் (Ziggurat) இந்த நகரங்களில் இருந்தது. சிகுராத் என்பது சுமேரியர்களின் வழிபடும் இடம். ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ என்கிற இந்த வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டதாக நடுநிலை வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இப்படி அறிஞர்கள் கருதுவதற்கு காரணம் இந்த இரண்டு நகரங்களிலும் இருந்த தமிழர்களின் செல்வாக்கு. இன்றையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ நகரங்கள் தமிழ் வணிகர்களின் குடியேற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பொதுவாக தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ‘ஊர்’ என்று அழைப்பது வழக்கம். எந்தவித சிறப்பு பெயரும் இல்லாம் ‘ஊர்’ என்கிற ஒற்றை சொல்லே ஒரு நகர்புறத்தை குறிக்கும். ‘நான் ஊருக்கு போனேன்’, ‘அந்த ஊரு ரொம்ப தூரம்’ போன்ற சொல் வழக்குளில் ஒரு இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் ஊர் என்கிற ஒற்றை சொல்லே நாம் பேசும் நகரத்தை குறிப்பிட்டுவிடுகின்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாலும் அவர்கள் வாழும் பகுதி ஊர் என்று அழைக்கப்படுகின்ற காரணத்தாலும் சுமேரியாவின் Euphrates நதிக்கரையிலிருந்த இந்த நகரங்கள் ‘ஊர்’ என்றும் ‘ஊர்க்’ என்றும் காரணப் பெயராக அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க் என்பது ஊர் என்ற சொல்லின் மருவிய வடிவம்.

தமிழர்களின் செல்வாக்கால் பெயர் பெற்ற ‘ஊர்’ நகரம் விவிலியத்திலும், மனித நாகரீகத்தின் முதல் நாவல் என்று அழைக்கப்படும் கில்காமேசிலும் (Gilgamesh) குறிக்கப்பட்டிருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியாவின் எந்த பகுதிக்கு சென்றும் நான் தமிழன் என்று ஒருவர் சொன்னால் உடனே அடையாளம் கண்டுகொள்ளப்படுவார். அதாவது இன்று ஒரு அமெரிக்கர் உலகின் எந்த இடத்திலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதுபோல். இன்றைக்கு தமிழன் தமிழ்நாட்டிலேயே தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ள முடிவதில்லை. இனவெறியன், பிரிவினைவாதி என்று ஆபாசமாக முத்திரைக்குத்தப்படுகிறான். ஈழத்தில் தன் தாய் மண்ணில் இனப்படுகொலைக்கு ஆளாகிறான்.

தமிழகத்தில் கிடைத்த உபரி உற்பத்தியை தமிழர்கள் சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள். சுமேரிய உபரி உற்பத்தியை தமிழகம் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் ஆடம்பர பொருட்களை சுமேரிய அரசர்கள் தாங்கள் இறந்தும் தங்களுடைய கல்லறைகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். சுமேரியாவிற்கு வணிகத்திற்கு சென்ற தமிழன் சுமேரியாவின் நகர நாகரீக வளர்ச்சிக்கும் உதவி செய்திருக்கிறான். சுமேரியா மற்றும் எகிப்திற்கான கடல் வணிக பாதையை உருவாக்கியது தமிழன் என்றால் அது மிகையாகாது.

சுமேரியாவின் வரலாற்றை எழுதும் எவரும் தமிழர்களின் தொடர்புகளை புரக்கணித்துவிடமுடியாது. ஆனால் ஏனோ நம்முடைய வரலாற்று நூல்கள் தமிழர்களின் இத்தகைய சிறப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன. இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர் அகண்ட பாரதத்தை கட்டி எழுப்பும் வரலாற்று புணுகு மூட்டைகளையே ஓட்டுமொத்த இந்திய வரலாறாக அவிழ்த்துவிட துடிக்கிறார்கள். ஆரியவர்தமானமே இந்தியாவின் மானம் என்று கைகூசாமல் எழுதி குவிக்கிறார்கள். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுடனான தமிழர்களின் தொடர்புகளைப் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பதைப் பற்றியும் எழுத துணிச்சல் அற்ற இந்திய பாட நூல் கழகம், தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.

இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று நாகரீகங்கள்தான் நாகரீக கலாச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றன. ஒன்று எகிப்தியர்களுடையது, அடுத்தது சுமேரியர்களுடையது மற்றது தமிழர்களுடையது. சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்கிற காரணத்தால் அது தனியாக இங்கே குறிப்பிடபடவில்லை. உலக வரலாற்று அறிஞர்கள் தமிழர்களின் தொடர்புகளை வெளிகொண்டுவந்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் தமிழன் வரும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூங்கிக் கொண்டே தான் இருப்பான்...

கொரியாவில் பாண்டியனின் மீன் சின்னம்...


பாண்டியர்களின் கோயில்களில் உள்ள மீன் குறியீடுகள் , கொரியா கொடி சின்னம் ஒப்பிட்டு செய்க..


கொரியா தமிழ் வரலாற்று உறவுகளை தமிழ் நில மண்ணில் , கொரியா மண்ணில் உள்ள திணை கோட்பாடுகளை அவர்களின் நிலம் அதன் பொழுதை அங்கு கலந்துள்ள கடலன் என்று என்ற பாண்டியர்களின் பண்பாடுகளை ஒப்பிட்டு தேடுகின்ற என் போன்றவருக்கு வியப்பை தருகின்றன..

-- கடல்ஆய்வு நிபுணர் கலிங்கா பாலு..

பார்ப்பனத் தமிழ்த் தாத்தா...



இன்று நாம் கொண்டாடும் புறநானூறு, சிலப்பதிகாரம். மணிமேகலை போன்ற காப்பியங்களை மக்கிய ஓலைச் சுவடிகளிலிருந்து மீட்டுத் தந்தவர்.

தமிழ் இன்று செம்மொழி என்றால் அது இந்தத் தனி மனிதரின் கடுமையான உழைப்பே காரணம்.

அம்மாமனிதர் அழியவிருந்த
ஓலைச் சுவடிகளை அலைந்து திரிந்து தொகுத்து அச்சிட்டு வெளியிட்ட புத்தகங்கள்..

1 -அழகர் கிள்ளை விடு தூது 1938
2 -ஆற்றூர்ப் புராணம் 1935
3 -இயற்பகை நாயனார் சரித்திரக்
கீர்த்தனை 1936
4 -உதயண குமார காவியம் 1935
5 -உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
6 -ஐங்குறு நூறு 1903
7 -கச்சி ஆனந்தருத்திரேசர்
வண்டு விடுதூது 1888
8 -கடம்பர் கோயிலுலா 1932
9 -கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
10- கலைசைக் கோவை 1935
11 -களக்காட்டு சத்தியவாகீசர்
இரட்டை மணிமாலை 1932
12 -கனம் கிருணயைர் 1936
13 -குமர குருபர சுவாமிகள் பிரபந்தத்
திரட்டு 1939
14 -குறுந்தொகை 1937
15 -கோபால கிருஷ்ண பாரதியார் 1936
16 -சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
17 -சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
18 -சங்கரலிங்க உலா 1933
19 -சிராமலைக் கோவை 1937
20 -சிலப்பதிகாரம் 1892
21 -சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
1932
22 -சிவசிவ வெண்பா 1938
23 -சீகாழிக் கோவை 1903
24 -சீவக சிந்தாமணி 1887
25 -சூரைமாநகர்ப் புராணம் 1904
26 -செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
27 -தக்கயாகப் பரணி 1930
28 -தண்டபாணி விருத்தம் 1891
29 -தணிகாசல புராணம் 1939
30 -தமிழ்நெறி விளக்கம் 1937
31 -தமிழ்விடு தூது 1930
32 -தனியூர்ப் புராணம் 1907
33 -திரு இலஞ்சி முருகன் உலா 1935
34 -திருக்கழுக்குன்றச்
சிலேடை வெண்பா 1933
35 -திருக்கழுக்குன்றத்துலா 1938
36 -திருக்காளத்திநாதர் இட்டகாமிய
மாலை 1938
37 -திருக்காளத்தி நாதருலா 1904
38 -திருக்காளத்திப் புராணம் 1912
39 -திருக்குடந்தைப் புராணம் 1883
40 -திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
41 -திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
42 -திருநீலகண்டனார் சரித்திரம் 1936
43 -திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்
1908
44 -திருப்பூவண நாதருலா 1904
45 -திருப்பெருந்துறைப் புராணம் 1892
46 -திருமயிலைத் திரிபந்தாதி 1888
47 -திருமயிலை யமக அந்தாதி 1936
48 -திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
49 -திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
50 -திருவாரூர்க் கோவை 1937
51 -திருவாரூர்த் தியாகராச லீலை 1905
52 -திருவாரூருலா 1905
53 -திருவாலவாயுடையார் திருவிளையாடற்
புராணம் 1906
54 -திருவாவடுதுறைக் கோவை 1903
55 -தேவையுலா 1907
56 -நல்லுரைக் கோவை பகுதி 1 1937
57 -நல்லுரைக் கோவை பகுதி 2 1937
58 -நல்லுரைக் கோவை பகுதி 3 1938
59 -நல்லுரைக் கோவை பகுதி 4 1939
60 -நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
61 -நன்னூல் மயிலை நாதருரை 1925
62 -நான் கண்டதும் கேட்டதும் 1936
63 -நினைவு மஞ்சரி - பகுதி 1 1937
64 -நினைவு மஞ்சரி - பகுதி 2 1942
65 -நீலி இரட்டை மணிமாலை 1874
66 -பத்துப் பாட்டு மூலம் 1931
67 -பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
68 -பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
69 -பதிற்றுப் பத்து 1904
70 -பரிபாடல் 1918
71 -பழமலைக் கோவை 1935
72 -பழனி இரட்டைமணி மாலை 1935
73 -பழனி பிள்ளைத் தமிழ் 1932
74 -பாசவதைப் பரணி 1933
75 -புகையிலை விடு தூது 1939
76 -புத்த சரித்திரம், பெளத்த தருமம்,
பெளத்த
சங்கம் 1898
77 -புதியதும் பழையதும் 1936
78 -புறநானூறு 1894
79 -புறநானூறு மூலம் 1936
80 -புறப்பொருள் வெண்பா மாலை 1895
81 -பெருங்கதை 1924
82 -பெருங்கதை மூலம் 1936
83 -மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
84 -மகாவைத்தியநாதையைர் 1936
85 -மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
86 -மணிமேகலை 1898
87 -மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
88 -மத்தியார்ச்சுன மான்மியம் 1885
89 -மதுரைச் சொக்கநாதர் மும்மணிக்
கோவை 1932
90 -மதுரைச் சொக்கநாதர் உலா 1931
91 -மான் விடு தூது 1936
92 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பகுதி 1 1933
93 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பகுதி 2 1934
94 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
பிரபந்தத் திரட்டு 1910
95 -வலிவல மும்மணிக் கோவை 1932
96 -வித்துவான் தியாகராச செட்டியார் 1942
97 -வில்லைப் புராணம் 1940
98 -விளத்தொட்டிப் புராணம் 1934
99 -வீரவனப் புராணம் 1903
100- வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878

கேட்டால் அய்யர் என்பான் பார்ப்பான் என்பான்  உருப்படியாக ஒரு சிலைவைக்காத இன்றைய தமிழன்...

கெம்ட்ரைலஸ் பதிவு 1...


இராவணனைப் புகழும் பார்ப்பனர்..


பல சாதியாருக்கு பூணூல் போட்டு பார்ப்பனராக்கிய பாரதியர் என்ற தமிழ்ப் பார்ப்பனர், இன்றைய பிராமணர்களைப் போல (வடயிந்தியச் சத்திரியனான) ராமனைப் போற்றவில்லை (தமிழ்ப் பார்ப்பனன்) இராவணனைத் தான் புகழ்ந்துள்ளார்...

அவர் 1935ல் எழுதிய 'குதிரைக் கொம்பு' கதையிலிருந்து சில வரிகள்..

அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங்கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான்..

பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான்..

அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள்..

ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான்.

அங்கு ராமர், லக்ஷ்மணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர்..

சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக் குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்..

அப்படியே ராமலக்ஷ்மணரைப் பிடித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னிதியிலே கொண்டு சேர்த்தனர்..

சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள்..

ராமன் சூர்ப்பநகையிடம் சீதை எங்கே? என்று கேட்டான்..

அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன்.

அவள் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும்.

எது வேண்டுமானாலும் செய்யக் கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன்..

சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான்..

வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சினேகம். இரண்டு பேருமே ஒரே வகுப்பில் கணக்கு வாசித்தார்கள்..

வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்கிரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்து கொண்டு அனுமான் என்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக் கொண்டான்..

கிஷ்கிந்தையின் சுக்கிரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது...

நமது சிநேகிதனைக் கொன்றாய்.
உனது அண்ணனைக் கொன்றாய்.
அரசைத் திருடினாய்.

இந்த ஓலையைக் கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும்..

ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும்.

நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறி விடவேண்டும்.

இந்த உத்தரவுக்கு கீழப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்..

சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான்..

அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்கு படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான்..

இவனுடைய சேனையிலே ராம லக்ஷ்மணரும் போய்ச் சேர்ந்தனர்..

ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதித்துக் கொன்று முடித்துவிட்டன..

ராம லக்ஷ்மணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகசியமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள்..

இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது..

உடனே ராவணன் "ஹா, ஹா, ஹா, நமது நகரத்திற்குள் மனிதர் சேனையை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா, ஹா, ஹா!" எனறு பேரிரைச்சல் போட்டான்..

அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான்..

சூரிய மண்டலம் தரைமேலே விழுந்தது..

பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான்..

பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்..

மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராமனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்து விட்டான்..

அப்பால் ராம லக்ஷ்மணர் அயோதிக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள்...

இது தான் நிஜமான ராமாயணக் கதை...

இலுமினாட்டி களின் தெய்வம்...


தெற்காசிய சிலம்பம் மற்றும் வாள் வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை 3 தங்கம் ஒரு வெள்ளி வென்று சாதனை...


சென்னை மாடம்பாக்கத்தில் வசிக்கும் ராமகிருஷ்ணன் மகாலக்ஷ்மி தம்பதியின் மகள் இமையவள் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய சிலம்பம் மற்றும் வாள் வீச்சு போட்டியில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து எந்த ஊடகங்களும் செய்தி வெளியிடவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்றனர்...

டிசம்பர் 31 க்குள் ஆர்கே நகர் இடைத் தேர்தல் நடத்தப்படும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு...


மூவேந்தர் ஓரினமே...


இராசேந்திர சோழன் வெளியிட்ட தங்க காசு...

இந்த நாணயத்தில் சேர, சோழ, பாண்டிய சின்னங்களான மீன், வில், புலி மூன்றும் உள்ளன...

இது அகமதாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது..

அந்நாட்களில் தமிழ் நாட்டாண்மை (தமிழ் தேசிய) சிந்தனைக்கு எடுத்துக்காட்டு..

என்ன தான் அடித்துக் கொண்டாலும் அவர்கள் தமிழனாகத் தான் இருந்தார்கள்...

தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று...


சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் உங்களைப் பற்றி சொல்வது என்ன தெரியுமா?


ஒவ்வொருவருக்கும் விரல்கள் வேறுபடும். அது வடிவம் மற்றும் நீளத்தில் மட்டுமின்றி, கைவிரல்களில் உள்ள மூன்று பகுதிகளிலும் வேறுபாடு இருக்கும்.

சில கோட்பாடுகளில் கைவிரல்கள் ஒருவரின் குண நலன்களைப் பற்றி சொல்வதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சில மக்கள் சுண்டு விரல் ஒருவரது குணநலன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக நம்புகின்றனர்.

இப்போது சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் ஒருவரது குண நலன்களைப் பற்றி சொல்வது என்று பார்ப்போம்..

பகுதி 1..

சுண்டு விரலின் மேல் பகுதி நீளமாக இருந்தால்,

பல மொழிகளை அறிந்தவராக அனைவரையும் கவரக்கூடியவறாக இருப்பர். மேலும் இத்தகையவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.

சுண்டு விரலின் மேல் பகுதி குட்டையாக இருந்தால் இந்த வகை மக்கள், மற்றவர்கள் விரும்பத்தகாத வகையில் இருப்பர். மேலும் இவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.

பகுதி 2...

சுண்டு விரலின் இரண்டாம் பகுதி நீளமாக இருந்தால்,

அவர்களிடம் உதவும் மனப்பான்மை அதிகமாகவும், மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர். மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள் இந்த வகையினராக இருக்க வாய்ப்புள்ளது.

சுண்டு விரலின் இரண்டாம் பகுதி குட்டையாக இருந்தால், பிடிவாத குணமிக்கவர்களாகவும், சிறிது சோம்பேறியாகவும் இருப்பர். மேலும் இந்த வகையினர் மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

பகுதி 3...

சுண்டு விரலின் கடைசி பகுதி நீளமாக இருந்தால்,

நேர்மையானவர்களாக, எப்போதும் உண்மையே பேசுபவர்களாக இருப்பர். மேலும் இவர்கள் நல்ல சொற்றொடர்பு உள்ளவர்களாக, சமூக திறமை கொண்டவர்களாக இருப்பர். அதுமட்டுமின்றி, இத்தகையவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவர்.

சுண்டு விரலின் மூன்றாம் பகுதி குட்டையாக இருப்பின், அவர்கள் அப்பாவியாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பர். இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் மற்றவர்கள் இவர்களை எளிதில் தன்வசப்படுத்திக் கொண்டு, வேலையை செய்து முடிப்பார்கள்...