11/02/2018

ஆவாரம் பூ பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?


ஆவாரம் பூ சர்க்கரை நோய்க்கு அருமருந்து...

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ.. என்ற மருத்துவப் பழமொழி உண்டு..

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்...

இப்படி எல்லாம் பன்னா பாஜக எப்படி பொழப்பு நடத்துறதுயா...


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமத்திரா பாலகிருஷ்ணன் குஜராத்தில் நடந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று 2 தங்க பதக்கங்கள் பெற்று உள்ளார்... தங்க தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்...


தமிழகத்தில் மதம் என்ற பொய் வேடமிட்டு பெரிய ஆயுதங்களை வைத்து கொல்ல முடியாது...


காரணம் என் மக்கள் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையை வளர்ப்பவர்கள்..

ஆனால் நாங்கள் மத ஒற்றுமைவாதிகள் என கூறும் சிலரே மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்துகின்றனர்..

உன் வரலாற்றையும், வரலாற்று சின்னங்களையும் நீ நல்லவர்கள் என நம்பும் மத ஒற்றுமைவாதிகள் அழிக்க தொடங்கி விட்டனர்..

இன்னுமா..? நீ அவர்களை நம்ப போகின்றாய்..?

4D யும் தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் – ஏலியன்ஸ் 1...


அன்றும் இன்றும் ஒரு மர்மமாகவும் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் ஏலியன்ஸ் எனும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றியதாகும்.

அவ் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய முழு ஆய்வாக அமைய இருக்கிறது இந்தப்பதிவு.

ஏலியன்ஸ் பற்றி பார்க்க முதல் பரிமாணம் பற்றிப் பார்த்தாக வேண்டும்.

பரிமாணம் (dimensions) எனும் போதே… ஐன்ஸ்டைன் (einstein) எனும் மாமேதையையின் தியரி ஒஃப் றிலேட்டிவிடி ( theory or relativity)  தொடர்பாக பார்க்க வேண்டியது முக்கியமானதாகும்.

எனினும்… அதற்கு முன்னர் பரிமாணம் என்பது தொடர்பாக சின்னதொரு அறிமுகத்தை பார்க்கலாம்…

தற்சமயம்…. நீளம், அகலம், உயரம் என்பனவே 3 பரிமாணங்களாக கொள்ளப்படுகிறது.

அதாவது… 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்கதாக உள்ள பரிமாணங்கள் இவையே.

(இவற்றை விட காலம் ( டைம்) எனும் நான்காவது பரிமாணம் தியரி ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.)

சினிமா துறையில் மோஷன் எனப்படும் அசைவுடன் கூடிய தொழில் நுட்பம்… 4ம் பரிமாணமாக கருதப்படுகிறது.

இவற்றை விட இன்னும் பல பரிமாணங்கள் இருக்கலாம்…. என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

ஆனால், எமது அறிவினாலோ… அல்லது எமது தோற்றத்தாளோ அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்பதே… உண்மை.

சரி… நாம் எம்மால் உணர முடியாத பரிமாணங்களை விடுத்து. தியரி
ரீதியிலாவது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் எனும் பரிமாணத்தை ( ஐன்ஸ்டைனால் வெளியிடப்பட்டது.) பற்றி முதலில் பார்ப்போம்….

காலம் தொடர்பாக விளக்குவது கடிணமானதாக உள்ளது.  இயன்றவரை விளக்குகிறேன்.

ஒரு மனிதன் ஒரே தூரத்தை நடந்து கடப்பதுக்கும்… காரில் கடப்பதுக்கும்… ரெயினில் கடப்பதுக்கும் வித்தியாசமுள்ளது.

நடப்பதை காட்டிலும் ரெயினில் பயணிக்கும் போது நேரம் மிச்ச படுத்தபடுகிறது.

நடக்க 1 மணி நேரம் எனின்… ரெயினில் 5 ஓ 10 ஓ நிமிடம்தான் எடுக்கிறது.

எனவே, இரு இடங்களுக்கிடையே தூரம் வித்தியாசபட வில்லை. காலம் வித்தியாசப்படிகிறது.

இதை ஐன்ஸ்டைன் சிம்பிலாகவும்… சுவாரஷ்யமாகவும் கூறியுள்ளார்…

அதாவது…

ஒரு காதலன் தனது காதலிக்காக வெயிட் பண்ணும் போது… 1 நிமிடம் என்பது மிகப்பெரிய காலப்பகுதியாக தோன்றுகிறது.

அதே, காதலி வந்ததும்… அந்த 1 நிமிடம் ஒரு மிக சிறிய விரைவாக கடந்துவிடும் பகுதியாக தோன்றுகிறது.

சரி… இனி தியரி ஒஃப் ரிலேட்டி விட்டியில் ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் என்பதை எனக்கு விளங்கிய வகையில் சொல்ல ரைபண்ணுறன்.

தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டி...

அதாவது ஒளியின் வேகத்தில் (3*10^8 மீட்டர்/ செக்கன் அல்லது 3 ம் 8 சைபரும் ) எம்மால் பயணிக்க கூடியதாக இருந்தால்… எம்மால் இறந்த காலத்துக்கு செல்ல முடியும்.

அதாவது… தற்போது 2010 ஆம் ஆண்டு எனின்… நாம் ஒளியின் வேகத்தில் பயணிப்போமானால்… 2000… 1990… அப்படியே எமது இறந்த காலத்துக்கு செல்லலாம்.

இது நான் விளங்கி கொண்டது மட்டுமே.

ஆனால்… என்னை பொறுத்த வரையில்… ஒளியின் வேகத்தில் (சரியாக) பயணிக்கும் போது எம்மால் பின்னோக்கி செல்ல முடியாது.

ஆனால், எமக்கு காலம் ஓடும் வேகம் 0 ஆக இருக்கும்.

அதாவது… வெளியுலகத்தாருக்கு… காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது.

2010 இல் நாம் ஒளியின் வேகத்தில் புறப்பட்டோம் எனின். 10 வருடத்தின் பின்னரும் நாம் அதே 2010 இல் தான் இருப்போம். ஆனால்… மற்றவர்கள் 2020 இக்கு போயிருப்பார்கள்.

ஆனால்… நாம் ஒளியின் வேகத்தை தான்டி… (3*10^8 ஐ மிஞ்சி) பயணிக்கும் போது… நாம் இறந்த காலத்துக்கு போவது சாத்தியம்…

2010 இல் வெளிக்கிட்டோமானால்… 2009 இக்கோ… 1800 இக்கோ நாம் போகலாம்…

அது நாம் ஒளியின் வேகத்தை விட எவளவு அதிகமான வேகத்தில் பயணிக்கிறோமோ என்பதை பொறுத்தது.

10 வருடகாலப் பகுதியிலோ அல்லது சில மணிப்பொழுதிலோ நாம் இறந்த காலத்திற்கு போகலாம்… ஆனால் நாம் பயணிக்கும் வேகம் தான் முக்கியமானது.

நாம்… தற்சமையம் மக்ஸிமம் 70,220 மீட்டர்/ செக்கன் ஐயே அடைந்துள்ளோம் இதுவும் இறுதிவேகம் தான்…

சராசரி வேகமல்ல. ( Helios 2). இது கூட மனிதன் பயணிக்க உகந்ததல்ல…

சாதாரணமாக மனிதனுக்கு உகந்ததாக 900 கிலோமீட்டர்/ ஹவர் தான் தற்சமையம் உள்ளது என நினைக்கின்றேன். (Airbus A380.).

ஆகவே… எமது வாழ்நாளில் நாம் பின்னோக்கி பயணிப்பது சாத்தியமே இல்லை….

சரி… இன்னும் நான் சொன்ன தலைப்புகளினுள் புகவில்லை….

அதனால்… முதலாவதாக… ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் சம்பந்தமாக ஆராய்வோம் …

இந்த பிரபஞ்சத்தில் எம்மை தவிர வேறு உயிரினங்கள் இல்லை… பூமியில் மட்டும் தான் உயிரினம் வசிக்கிறது….
என நாம் நினைப்பது சின்னப்பிள்ளை தனமானது..

இந்த மிக பிரமாண்டமான பிரபஞ்சம் இக்குணூண்டு அளவுள்ள நமக்காக (பூமிக்காக) மட்டும்தான் படைக்க பட்டது என நினைப்பது எவளவு முட்டாள் தனமானது.

ஆகவே… நம்மை தவிர வேற்று கலக்ஸிகளிலும்… நட்சத்திர குடும்பங்களிலும்… உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழும்.

இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எள‌லாம்…

எமது விஞ்ஞானிகள் பிரபஞ்சத்துக்கு ஒரு சமிக்ஞை (சிக்னல்) அனுப்பினார்களே… அதுக்கு ஏன் பதில்… அல்லது ரியாக்ஷன் வரல… என்ற கேள்வி எலலாம்.

ஆனால்… அங்கு தான் ஒரு பெரிய சிக்கலே இருக்கிறது…

வேற்று கிரக வாசிகளும் நம்மை போன்றே அதே 3 பரிமாணங்களை கொண்டு இருப்பின் மட்டுமே… அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து அவர்களின் தொடர்பாடல் முறை நமது கருவிகளால் உணரப்பட வேண்டுமே..

எனவே, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்பது பொய்…

ஆனால்…

நாம் கூறிக்கொண்டு இருக்கும்… ஏலியன்ஸ் யார்… வேற்று கிரக வாசிகள்தானா?

இந்தியா வே தமிழர்களின் முதல் எதிரி என்பதை நினைவில் வைத்துக்கொள்...


நெல்லை புத்தக கண்காட்சியில் காலில் செருப்பு கூட இல்லாமல் கடும் ஏழ்மை நிலையிலும் கையில் புத்தகத்தை வாங்கி செல்லும் அரசுப்பள்ளி மாணவன்...


இதுபோன்ற மாணவர்களை CBSE மாணவர்களோடு போட்டி போட்டு நீட் தேர்வு எழுத சொல்வது என்ன நியாயம் ?

இதுவே நாடு, போர், இனவெறி என அவன் உருவாக்கிய கட்டமைப்பு...


மின்சாரத்துறையில் நமக்கு நாமே தொழில்நுட்பத்தை உருவாக்கிய தமிழர்...


அரியலூர் அரசு மருத்துவமனையில், பிறந்த கால் மணி நேரத்தில் ஆண்குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்...


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு மருத்துவமனை துப்புறவு தொழிலாளர் ஒருவர், குப்பைத்தொட்டியில் குழுந்தை இருப்பதை கண்டுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமும், மருத்துவமனை செவிலியர்களிடமும் இத் தகவலை தெரிவித்துள்ளார். குப்பைத் தொட்டியில் இருந்த ஆண் குழந்தைக்கு செவிலியர்கள் முதலுதவி அளித்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த குழந்தை பிரசவ வார்டில் பிறக்கவில்லை என்றும், செவிலியர்கள் யாரும் பிரசவம் பார்க்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

புறநோயாளிகள் பிரிவுக்கு அருகில் உள்ள கழிவறையில் சென்று பிரசவித்துவிட்டு வெளியே உள்ள குப்பைதொட்டியில் குழந்தையை வீசிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்...

அரசாங்கம் எதற்கு சிந்தியுங்கள்.?


தற்பெருமை...


தற்பெருமை கொள்ளுதல் ஒரு மனிதனுடைய நல்ல குணநலன்களையும் கெடுத்து விடும்.

நிறை குடம் தழும்பாது என்பது ஒரு பழமொழி.

எல்லாம் கற்று தெரிந்த ஒருவன் மிகவும் அமைதியாக இருப்பான். ஏதோ அரைகுறையாக தெரிந்து கொண்டவன் எல்லாம் தெரிந்தது மாதிரி நடந்து கொள்வான்.

நீ ஒரு செயலை முடித்து விட்டால் நீயாகவே உன்னை உயர்த்தி சொல்லக் கூடாது. உனது செயலை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும்.

அதைவிட்டு நீயே பேசினால் அது தற்பெருமை.

மற்றவர்கள் பேசினால் அது பெருமை.

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை..

ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார். பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.

இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ''ஐயா.. நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான்.

விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்...

மருத்துவ மாப்பியா உண்மைகள்...


மூலிகையின் பெயர் - எலுமிச்சை...


1. மூலிகையின் பெயர் - எலுமிச்சை.

2. தாவரப்பெயர் - CITRUS MEDICA.

3. தாவரக்குடும்பம் - RUTACEAE.

4. பயன்தரும் பாகங்கள் - இலை மற்றும் பழம்.

5. வளரியல்பு - எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை கடந்தது. எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது. சுமார் 15 அடிவரை வளரும். தமிகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. செம்மண்ணில் நன்கு வளரும். இதில் பலவகையுண்டு நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டு. எல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். பூ விட்டுக் காய்கள் உருண்டை மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். முற்றினால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சையை அரச கனி என்பர். இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர். கடவுளுக்கு மிக உகந்தது. வழிபாட்டில் வரவெற்பிலும் முதன்மை வகிப்பது. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் - பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும். இதன் சாறு டீயுடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.

பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

பழச்சாற்றை கண், காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.

பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம், குமட்டல், பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும். வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லி. சாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.

இதன் சாறு 30 மி..லி. இந்துப்பு-15 கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த நோய், வயிற்றுக்கோளாறு, பக்க சூதக வாதம், கப நோய் குணமாகும்.

இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, சூடு குணமாகும்.

பற்பம் என்பது சுண்ணாம்பு சத்துடையதாம். எலும்பு, சுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும், சங்கு, பவளம், முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.

இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.

படை, கருமையாகத் தடிப்பாகப் படர்தல், இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.

வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம் இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டு. மூப்பு நீங்கும், நரை, திரை படராது. ஆயுள் பெருகும். உடல் ஊட்டம் பெறும். ஆனால் புளி, காரம், புலால், புகை ஆகாது.

எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளும் தவராது சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம் எற்படும்.

இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல் மயக்கம் தீரும்.

குடற்புண், காச்சல், டைப்பாய்டு சுரம் எனப்படும். இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து, ஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்...

பாஜகவும் திமுகவும் இரகசிய கூட்டாளிகள் என்பதற்கு இது ஒரு சான்று...


தமிழன் எம்மதத்தையும் சாராதவன் விழித்துக்கொள்...


இந்து மதம் தோன்றுவதற்கு முன்னால்..

கிருஸ்து மதம் தோன்றுவதற்கு முன்னால்...

இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னால்...

எம் மொழி தோன்றியது..

மனிதன் தோன்றிய பின் தான் கடவுள் கற்பிக்கப்பட்டான்..

நான் நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன்..
தமிழ் மொழி சிறப்பனது தான் என்று...

பாஜக வில் இருப்பவர்கள் அனைவருமே தமிழின விரோதிகள் என்பதை நினைவில் கொள் தமிழா...


கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே வயிறு எரிகிறது...


வந்தவரெல்லாம் வாழ வேண்டும், தமிழன் ஓட்டை சட்டியை வைத்துக் கொண்டு அரசியல் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்து விட்டு கையேந்தி நிற்க வேண்டும்.. என்ற நிலையில் தான் தமிழினம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது..

எதிரிகளை ஏளனம் செய்ய கோடி கோடியாக கொள்ளையடிப்பார்கள், இருப்பதை எல்லாம் சுரண்டுவார்கள், நாம் ஏன் என்று கேட்க கூடாது.

தமிழனுக்கு ஏன் எந்த அதிகாரம் கூடாது என்று மற்ற மாநிலத்தார் நினைக்கிறார்கள்...

தன்னை தமிழன் என்று நினைத்துவிட கூடாது. தான் வாழ தமிழனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தினால் “வந்தாரை வாழ வைக்கும்” தமிழகம் என்று மேலே தூக்கி வைத்து காலில் போட்டு நசுக்குகிறான்.

தமிழன் ரத்தத்தை 3-மாநில திராவிட அட்டைப்பூச்சிகள் உறிஞ்சிக்குடிப்பதற்கு வசதியாக தங்கள் கொடியில் ரத்தம் எனும் குருதியை (சிகப்பு) அடையாளமாக வைத்தார்கள்..

நம்பினவர்கள் முகத்தில் கரியைபூசும் கேலமானமானவர்கள் என்பதால் (கருப்பு) நிறத்தை தங்கள் கொடியில் பூசினார்கள்.

இந்த கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே தமிழனுக்கு வயிறு எரிகிறது.

சண்டாளர்களே சுரண்டிய தெல்லாம் போதாதா, ரத்தம் குடிக்கும் நரிகளே இனியாவது தமிழர்களை வாழ விடுங்கள்...

பாஜக மோடியின் டிஜிட்டல் ஊழல்...


பழந்தமிழரின் வானியல் அறிவு...


உலக நாடுகளில் வசதி படைத்தவைகள் எல்லாம் நாம் வாழும் பூமிக்குப் புறத்தே என்ன இருக்கின்றது என்று அறியத் துடிக்கின்றன. அதற்காக ஆய்வு அமைப்புகளை ஏற்படுத்தி பெரும் பொருளைச் செலவிட்டும் வருகின்றன.

விண்கலங்களை நிலவுக்கும் செவ்வாய்க்கும் ஏன் சூரியனுக்கும் கூட ஏவி வேவுபார்த்து வருகின்றன. தம்முள்ளே நிலவும் இராணுவப் பகைமைகளை மறந்து கூட்டு முயற்சிகள் மூலமாவது ஏதாவது பலன் கிடைக்குமா என்று பணிந்து போகின்றன விண்வெளி ஆய்வு மையங்கள். நாடுகள் தோறும் விஞ்ஞானப் பரீட்சைகளை நடத்தி குட்டி விஞ்ஞானிகளை இனம் கண்டு கொள்கின்றன.

எனினும் இவர்களை விட வானியலைப் பற்றி அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தனர் பண்டைக்காலத் தமிழர்கள். அப்படித் தெரிந்து வைத்திருந்தவர்கள் கணியன் என்று அழைக்கப்பட்டனர். கணிக்கத் தெரிந்தவர்கள் கணியனாக இருக்கலாம். சங்க இலக்கியங்களும் தேவாரங்களும் இராமாயணமும் தனிப்பாடல்களும் அதற்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன.

சங்கத் தமிழர்கள் வான் கோள்களில் தாமே ஒளிவிடக் கூடியவற்றையும் சூரியனிடம் இருந்து கடன்பெற்று ஒளிவிடுவனவற்றையும் கண்டறிந்து நாண் மீன்கள் கோள் மீன்கள் என்று பெயர் சூட்டி அழைத்தனர்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோள்மீன் போல

என்று பட்டினப்பாலை என்ற சங்கநூல் இதனை அழகாகப் பேசும். அது போல வெள்ளி எனும் கோள் வடக்கு திசையில் நின்றால் மழை உண்டு என்றும் தெற்கு ஏகினால் மழை இன்மையும் ஏற்படும் என்றும் பதிற்றுப் பத்தும் சொல்கின்றது. அது போல சூரியனிலிருந்து சிதறும் துகள்களே எரி கற்கள் என்பதும் அவர்களுக்கத் தெரிந்து இருந்திருக்கிறது. இதனை வெங்கதிர் கனலி துற்றும் என்றது புறநானூறு. அது போல கோள்கள் சுற்றும் பாதைகள் பற்றியும் அவர்கள் அறிந்து இருந்தனர்.

பௌர்ணமி நாளில் சூரியனும் சந்திரனும் எதிர் எதிரே நிற்கும். ஆனால் நிலவு தோன்றும் கணத்திலேயே சூரியன் மறைந்து விடும் என்ற உண்மையையும் அவர்கள் பாடியிருக்கிறார்கள்.

உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந்து ஆங்கு

இதிலே வியப்பு என்ன வென்றால் நிலவு தோன்றும் பொது சூரியன் மறையும் என்றால் அவற்றில் ஒன்றுதான் கண்ணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிஎயன்றால் ஒன்றுக்கு ஒன்று எதிராக நின்ற உண்மை எப்படி அறியப்பட்டது என்பதே.

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சு10ரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.  இதையெல்லாம் நேரே போய்ப் பாhத்து ஆராய்ந்து அறிந்த வந்த வானியல் அறிஞர்களும் எம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே


இது அவன் பாடிவைத்த பாடல். இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆயு;வு செய்யப் போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பாhத்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு தான் விடை சொல்கின்றது.

இன்று உலகம் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறது? அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. இதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப


இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம் வலவன் என்றால் சாரதி ஏவாத என்றால் இயக்காத வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட றைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டிதொன்றாகும்.

விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும். எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏற்றிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்; என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்தால் கெலியாக இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.


கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும். உண்மைதான்! ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்வார்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்

பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.

மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார். ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது. அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று ஒரு மந்திரியான மணிவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது. அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும்! பைதகரஸ் என்ற கணித மேதை மூலை விட்டத்தை அளப்பதற்கு ஒரு விதி சொன்னார். ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தின் வர்க்கமானது மற்ற இருபக்கங்களின் வர்க்கத்தின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாக இருக்கும் என்பது அவரின் கண்டுபிடிப்பு. இதை அவர் பிறப்பதற்கு முன்னரே ஒரு தனிப்பாடல் அதுவும் தமிழ்ப்பாடல் இப்படிச் சொல்கிறது.

ஓடிய நீளம் தன்னை
ஓரெட்டுக் கூறது ஆக்கி
கூறதில் ஒன்றைத் தள்ளிக்
குன்றத்தில் பாதி சேர்த்தால்
நீடிய கரணம் தானே..

ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை. பைதகரஸ் மடடுமே வெளிச்சத்துக்கு வந்தார்.

இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கும்
உயர்ந்த உலகம் புகும்.

வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது? பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். வள்ளுவருக்கும் வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது இஸ்ரோவுக்கும் முதல்..

இதையே இராமாயணம் பாடிய கம்பர் வாலியின் இறப்புப் பற்றிப் பேசும் போது வாலி இறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான் என்று குறிப்பிடுவார்.

தன்னடி ஆழ்த லோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டிப் நீயிது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்.

அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.

பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்

ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது.

இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி! இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பாhத்தால் வேற்றுக் கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை! பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப் படவுமில்லை! ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள். அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும். இருக்கத்தான் செய்யும்.

அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது சங்க இலக்கியங்கள் விஞ்ஞானிகளால் தேடிப் படிக்கப்படும்...

வாட்சப்பில் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்...


வாட்சப் லேட்டஸ்ட் வெர்சனை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு பணம் அனுப்பிக் கொள்ளலாம்...

மனம்...


மனமற்றிருக்கும் சக்தியை விட பெரிய சக்தி வேறு எதுவும் கிடையாது..

உங்கள் எண்ணங்களுடன் சம்பந்தம் இல்லாமல் விலகியே நில்லுங்கள்..

எண்ணங்கள் மறையும் கணங்களில் மனமற்ற..

நிலையின் கண நேரக் காட்சியை நீங்கள் காணலாம்..

நீங்கள் தனித்திருக்கும் போது மனம் தேவைப் படாது..

தியானம் உங்களை மனமற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்..

தியானத்தின் தொடக்கம் சாட்சி
பாவம்..  தியானத்தின் முடிவு மனமற்ற நிலை..

மனமற்ற மனிதனின் வார்த்தைகளில் உண்மை இருக்கும்..

இந்த மனம் செயலற்று விடுகிற போது பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கும்...

பாஜக மோடி கலாட்டா...


சென்னை, திருவான்மியூரில் செயல்பட்டு வந்த விலங்குகள் நல வாரியம் ஹரியானா மாநிலத்திற்கு மாற்றம்...


விலங்குகள் தொடர்பான புகார்கள், விவரங்களுக்கு ஹரியானா மாநில விலாசத்தை தொடர்பு கொள்ள செயலாளர் வேண்டுகோள்...

அமித்ஷா சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கோரி ஜனாதிபதியிடம் 114 எம்பிக்கள் மனு...


நாட்டுப்புற தமிழரின் வானியல் அறிவு...


காலநிலையினையறிந்து வறட்சி, புயல் ஆகிய இயற்கை அழிவிலிருந்து இயற்கையையும் பயிரையும் காத்துக் கொள்வதும் தொன்றுதொட்டு வழங்கிவரும் பழக்கங்களாகும். மனிதன் என்று சமவெளியில் தங்கி பயிர்த் தொழிலில் ஈடுபடத் தொங்கினானோ அன்றே பருவங்களை உணரத் தலைப்பட்டுவிட்டான்.

இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் ஐ.ஆர்.எஸ். வகை விண்கலங்களை விண்வெளியில் செலுத்தித் தட்ப வெப்பநிலையையும், வானியல் மாற்றங்களையும் அறியத் தலைப்பட்டுவிட்டான். இருப்பினும் நமது முன்னோர்கள் பண்டைக்காலந்தொட்டு வானினை இரவும், பகலும் உற்றுநோக்கி கோள்கள், சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள், மேகம், இவற்றின் இயக்கங்களைக் கணக்கிட்டு காலத்தைப் பாகுபாடு செய்தனர்.

மழையின் வருகையைக் கண்டறிந்தனர் என்பதை தொல்காப்பியம் சங்க இலக்கியம், தொடங்கி தமிழ் இலக்கியம் நெடுகிலும் காண்கின்றோம். இதே வானியல் அறிவு நாட்டுப்புற வழக்காறுகளிலும் காணப்படுவதை இக்கட்டுரை இங்கே பதிவு செய்ய முயல்கின்றது.

பண்டைத் தமிழரின் வானியல் அறிவு...

வேளாண்மைத் தொழிலுக்கு அடிப்படையாக இருப்பது சூரியனது ஆற்றலும் அதனால் பெறப்படும் மழையுமாகும். இதனால்தான் தமிழிலக்கியங்கள் சூரியனை பலவாறு வாழ்த்துகின்றன. போற்றுகின்றன. இளங்கோ சிலம்பில் திங்களையும், ஞாயிறையும் போற்றுவார். சூரியனுக்கு வேளாண் மக்கள் நன்றி சொல்ல எழுந்ததே தமிழரின் பொங்கல் திருநாள். இதனை நாட்டுப்பாடலும்

சந்திரனே சூரியனே சாமி பகவானே இந்திரரே இப்ப மழை பெய்ய வேணும்....

என்று வேண்டுவதைப் பார்க்கின்றோம். இந்த உலகமானது அனுச்செறிந்த நிலம், நிலத்தில் ஓங்கிய ஆகாஸம், அதனை தம் தடவி வரும் காற்று, காற்றின் கண் தலைப்பட்ட தீ, தீயினின்று மாறுபட்ட நீர் என்ற ஐவகைப் பூதங்களால் ஆனது என்பது பண்டைத் தமிழரின் முடிந்த முடிவு (புறம்-2)ந்த வான்கோள்களை (நவகோள்கள்) ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்று பெயர்சூட்டி அவற்றின் இயக்க திசைகளைக் கொண்டு வானியல் மாற்றங்களை அறிந்தனர்.

விண்ணிலிருந்து விரிநீர்ப் பெருமழையை இம்மண்ணிற்குக் கொண்டுவர உதவுவது வெள்ளிக்கோள் அதாவது வெண்பொன் என்றும் இது தென்திசை சென்றால் தீய நிமித்தம் மழை பெய்யாது வற்கடம் உண்டாகும் என்று அக்கால வானியற் கணிப்பு கூறுகின்றது.

இலங்கு கதிர் வெள்ளி

தென்புலம் படரினும். (புறம்-35)

தென்திசை மருங்கில்

வெள்ளியோடினும்.... (புறம்-117)

வெள்ளி தென்புலத்துறைய

விளைவயல்

பள்ளம் வாடிய பயனில்

காலை... (புறம்-388)

என்று நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். மழைக்கோளாகிய வெள்ளி, தென்திசை செல்லின் வான் பொய்க்கும் அதுபோலவே ஏரி, குளமீன், தாள்மீன் போன்றன தோன்றலும் புகைதலும் உலக வறுமைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளப்பட்டன என்பதை

மிகவானு னெரி தோன்றினும்

குளமீனொருந்தாட்

புகையினும்.... (புறம்-395)

எனும் சான்று பகரும், வெண்மை நிறமுடைய கோள் வெள்ளியாகும். இது மாலை அல்லது காலையில் தான் காணப்படும். இது தென்திசை சென்றால் மழையில்லை என்றறிந்தது போல வடதிசை சென்றால் மழைவரும் என்றும் அறிந்திருந்தனர். (புறம். 24) பொதுவாகவே விண்மீன்கள் தத்தம் நிலையில் இருக்குமாயின் காலந்தப்பாது மழை பொழியும் என்பதை, மீன் வயினிற்ப வானம் வாய்ப்ப... (பதிற்-90.1) எனும் சான்று காட்டும்.

இவ்வாறே மேகத்தின் இயக்கம், நிலவின் இயக்கம் இவையெல்லாம் வானியலை அறிய உதவியதைச் சங்கப் பாடல்களில் காண்கிறோம். தொல்காப்பியர் கூறும்.... மறுவில் செய்தி மூவகைக்காலமும், நெறியின் ஆற்றிய அறிவன் (தேயம்... புறத்தினை- பாபாண்) என்பது மழை, வெயில், பனி எனும் மூவகைக் காலத்தையும் அறிந்து பெறும் கணியன் என்று பொட்படும்.

இந்த வானியல் சிந்தனைதான் இன்று வேளாண் வானியல் எனப்படுகின்றது. இந்த வானியல் அறிவு பண்டைத் தமிழரிடமும், அறிவியல் அறிஞர்களிடமும், நாட்டுப்புற மக்களிடமும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை பின்வரும் அட்டவணை விளக்கும்.

தமிழர் - மழை மற்றும் பருவகாலம் குறித்த வானிலைப் பாகுபாடு...

தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய மரபு:-

1. இளவேனில்: சித்திரை, வைகாசி - ஏப்ரல், மே

2. முதவேனில்: ஆனி, ஆடி - ஜுன், ஜுலை

3. கார்காலம்: ஆவணி, புரட்டாசி - ஆகஸ்ட், செப்டம்பர்

4. கூதிர்: ஐப்பசி, கார்த்திகை - அக்டோபர், நவம்பர்

5. முன்பனி: மார்கழி, தை - டிசம்பர், சனவரி

6. பின்பனி: மாசி, பங்குனி - ஜனவரி, பெப்ரவரி

அறிவியல் மரபு...

கோடைக்காலம்:- மார்ச்சு, ஏப்ரல், மே

தென்மேற்குப் பருவகாலம்:- ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்

வடகிழக்குப் பருவகாலம்:- ஒக்டோபர், நவம்பர், டிசம்பர்.

பனிக்காலம்:- ஜனவரி, பெப்ரவரி

நாட்டுப்புற மரபு:- சித்திரை மழை சின்னப்படுத்தும்

சித்திரை பேய்ஞ்சு கெடுக்கும் பேயாமலும் கெடுக்கும்.

ஆடி அரை மழை ஆடிப்பட்டம் தேடிவிதை

ஆனி குறுகினால் அறுபது நாளுக்கு மழை இல்லை.

புரட்டாசி பெருமழை, ஆவணி மாதம் அழுகை தூரல்

ஐப்பசி அடை மழை,

கார்த்திகை கனமழை,

காய்ந்தால் காயும்

கார்த்திகை.

மார்கழி மழை மண்ணுக்கு

உதவாது.

தை தரையும் குளிரும்,

தை மழை நெய்மழை,

தை பிறந்தால் தலைக்கோடை.

மாசிப்பனி மச்சைத் துளைக்கும்,

பங்குனி மழை முழுதுக்கும் நட்டம்.

பங்குனி மழை பெய்தால் பலனெல்லாம் சேதம்.

பனியிருந்தால் மழையில்லை.

இந்த அட்டவணையில் இடம்பெறும் தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பழந்தமிழர் பருவகாலத்தைக் குறித்துப் பாகுபாடு செய்துள்ள விதம் இன்றைய அறிவியலுடனும், நாட்டுப்புற மரபுடனும் பொருந்தி வருவதைப் பார்க்க முடியும். இந்த ஒற்றுமைக்கான காரணம் இயக்கையைப் பலகாலமும் உற்றுநோக்கி அதன்படி வானியலை கணித்ததே ஆகும் என்பதை உணரலாம். இந்த வேளாண் வானியல் என்பது ஒரு தனிப்பட்ட துறையினுள் அடங்கியதன்று.

இதனுள் வளிமண்டலம் சார்ந்த அறிவியல்கள், மண்ணியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பல்வேறு துறைகளும் அடங்கும். இந்த வேளாண் வானியல் கோளாறுகள், வானிலை மாற்றங்களால் ஏற்படும் பூச்சியினங்கள், நோய்கள், வளிமண்டலம் மாசுபடுதல், மண்ணியல் மாற்றம், பயிர் விளைவால் வீழ்ச்சி மற்றும் திடும்வெள்ளம், காலந்தவறிய மழை, கல்மாரி, புயல் இவற்றை அறிவிப்பது என்று இத்துறை தனது செயல்பாட்டை விரித்துச் செய்து வருகின்றது.

இந்த வானியல் அறிவு காலங்காலமாய் நமது முன்னேர்களிடம் அதாவது மரபு வழியால் நாட்டுப்புற வழக்கில் எவ்வாறு வழக்கிலிருக்கின்றன என்பதை பின்வரும் சான்றுகள் எடுத்துக்காட்டும்.

நாட்டுப்புற வழக்காறுகளில் வானியல் அறிவு...

நாட்டுப்புற வழக்காறுகளில் குறிப்பாக நம்பிக்கை, பழமொழிகளில், வானியல் குறித்த சிந்தனைகள் நிறையக் காணப்படுகின்றன. இந்தச் சிந்தனைகள் நமது முன்னோர்களிடமிருந்து மரபு வழியாகத் தொடர்ந்து வந்தாலும் அதில் காலம், இடம் சூழலுக்கேற்ற வட்டாரத் தன்மையும் காணப்படுவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சூரியன், சந்திரன், நட்சத்திரம், மேகம், காற்று, மின்னல், பனி இவற்றின் போக்குகளைக் கொண்டும், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகளின் செயற்பாடுகளைக் கொண்டும் தாவரம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டும் மழையின் இயக்கத்தை நாட்டுப்புற மக்கள் கணிக்க முயன்றுள்ளனர். இவற்றை பின்வருமாறு விளக்கமாகக் காணலாம்.

கோள்கள், மேகம், நட்சத்திரம் போன்றவற்றின் இயக்கம்...

கார்காலத்தில் மின்னல் வெட்டினால் மழை வரும்

நட்சத்திரங்கள் அடுத்தடுத்து மின்னினால் மழைவரும் என்பது நம்பிக்கை. இதனை,

மாரி மின்னிக்காட்டும் கோடை

குமுறிக்காட்டும்...

என்ற பழமொழி உணர்த்தும் கோடைக்காலத்தில் இடி இடித்தால் மழை வருமென்பது இன்னொரு நம்பிக்கை. வானத்தில் வானவில் தோன்றினால் மழை வரும். அதுவும் மாலை நேரத்தில் கிழக்குத் திசையி லும் காலை நேரத்தில் மேற்குத் திசையிலும் வானவில் தோன்றினால் மழை வரும் என்று நம்புகின்றனர்.

இதனை அந்தி கிழக்கே அதிகாலை மேற்கே.... எனும் பழமொழி உறுதி செய்யும் வானவில்லை இந்திரவில் என்று சங்க இலக்கியம் குறிப்பிடும். இந்திரன் மழையின் கடவுள், நட்சத்திரங்களின் தலைவன், விசும்பின் முதல்வன் என்பதை நாம் இங்கே நினைக்க முடியும்.

இது இல்லாமல் சுண்ட வெயிலடித்தால் மழை வரும். சூரியன், சந்திரனைச் சுற்றி கோட்டை கட்டினால் (ஒளி வட்டம்) மழைவரும். அதிலும்

கிட்டக்கட்டின் எட்ட மழை

எட்டக்கட்டின் கிட்ட மழை

என்பது வழக்கு. இதனை அகல் வட்டம், பகல் மழை.. என்று ஒரு பழமொழி குறிப்பிடும். அந்திச் செவ் வானம் அடைமழைக்குச் சமம், மழை க்காலத்தில் பனி அதிகம் பெய்தால் மழை பெய்யாது என்பதெல்லாம் மழை தொடர்பான வழக்குகளே.

மழையால் ஈழத்து மின்னல் மின்னினால், மேல் திசை, தென் திசை மின்னினால் மழை பெய்யுமென்பது நாட்டுப்புற நம்பிக்கை. தென்மேற்குப் பருவ மழைக்காலம் தான் இங்கே நம்பிக்கை வடிவில் இடம்பெற்றுள்ளது. மலையாளம் மேற்குத் திசையையும் ஈழம் தெற்குத் திசைகளையும் குறிக்கும்.

இதிலிருந்து தென்மேற்கு பருவக்காற்றின் இயக்கத்தை மக்கள் துல்லியமாகக் கணித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழையை இந்த இரு திசைகளின் காற்றின் இயக்கத்தை வைத்தே இன்றைய வானியல் அறிஞர்கள் கணிப்பதை இங்கே நினைக்க முடியும்.

போதிய மழையில் (தென்மேற்கில்) காற்று வீசினால் கோடையிலும் மழையுண்டு. புரட்டாசி 15 க்கு மேல் கீழ்க்காத்து அடித்தால் மழைவரும். இங்கே குறிக்கப்படும் கீழ்க்காற்று என்பது நீர் சுமந்த தாழ்வான மழைமேகம் ஆகும். தவமும் மேகம் தண்ணியுடனும், உயரும் மேகம் நீர் குறைந்தும் காணப்படுவது வானியல் உண்மை. இதனை நெடுநல்வாடை "பெசல் உலந்து எழுந்த" எனும் அடிகளால் குறிப்பிடுவது இங்கு நினையத்தக்கது.

மேகம் கருத்து காற்று வலம் சுழன்றடித்தால் மழைவரும், கொம்பு சுற்றி காற்றடித்தால் மழைவரும் என்பதெல்லாம் நாட்டுப்புற வழக்கு. மழையும் காற்றும் வலம் சூழுமாயின் அவை மிகுதல் இயல்பு இதனை நெடுநல்வாடை "வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ" என்று குறிப்பிடும். இந்த வானியல் ஆய்வும் ஏற்றுக்கொள்கிறது.

பறவை, பூச்சி விலங்கினங்களின் செயல்பாடுகள்...

சேற்று நண்டு வளையை அடைதல்"

"தவளை கத்துதல்"

"தோகை மியில்கள் மோகமுடன் ஆடுதல்"

"சிற்றெறும்பு வாயில் இரை கொண்டுபோதல்"

"சூகை எறும்பு குழிவாயில் கரை கட்டுதல்"

"சில் வண்டு கத்துதல்"

"மான் தன்குட்டியைத் தழுவி அழைத்தல்"

"வெள்ளிப்பூச்சியும் கும்மிடு பூச்சியும் பறத்தல்"

"செம்மறி ஆடுகள் கூட்டமாக வலம் வருதல்"

"பருந்து கூட்டமாக வட்டமிட்டுப் பறந்தால்"

"கழுதை தரையில் மல்லாக்கப்படுத்துகத்தினால்"

"கோழிகள் மல்லாக்கப்படுத்துப் புரண்டால்"

"ஈசல் பறந்தால்"

"வெள்ளைக்கொக்கு கூட்டாகப் பறந்தால்"

மழை வருமென்பது நாட்டுப்புற நம்பிக்கை இங்கே சொல்லப்பட்ட பறவை முதலான உயிரினங்களை ஆதாரமாகக் கொண்ட அனைத்துக் கருத்துக்களும் அவ்வுயிரினங்களை வானிலையை முன்னுணரும் ஆற்றல் வாய்ந்தவை என்னும் கருதுகோளை ஆதாரமாகக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.

எறும்புகள் கால உணர்வு உள்ளவை என்பன போன்ற கருத்துக்கள் அறிவியல் நூல்களில் காணப்படுகின்றன. அவை மக்கள் கூறியுள்ள கருத்துக்களோடு ஓரளவு தொடர்புள்ளவை. ஆயினும் மக்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் சரியானவையா என்பது ஆய்வுக்குரியது என்பார் ஆறு. இராமநாதன் இருப்பினும் மேற்சொன்ன மக்கள் வானியல் அறிவு மழை வருவதனை முன் அறிவிக்கும் அறிகுறிகளே என்பதை மழைக்காலங்களில் நாம் காண முடியும்.

தாவரம் போன்ற பிறவற்றின் அறிகுறிகள்...

"மாங்காய் காய்த்தால் மழை மங்கும்

புளியங்காய் காய்த்தால் மழை பொங்கும்

கோழிக்காளான் பூத்தால் மழையில்லை"

என்பன வழக்காறுகள் தமிழகம் முழுவதும் வழங்கி வருகின்றன. இவையெல்லாம் இயற்கையை மேலும், மேலும் உற்றுநோக்கிக்கண்ட உண்மைகளே எனில் மிகையாகாது. ஏனெனில் வானியல் அறிஞர்கள் கணித்துச் சொல்லும் வானியல் அறிவிப்புக்கள் கூட பல நேரங்களில் பொய்த்துப் போவதைப் பார்த்திருக்கின்றோம். இதனால் "மகப்பேறும் மழைப்பேறும் மகராசனே அறியான் என்ற வழக்காற்றில் உண்மையிருப்பது போல் தோன்றும்."

பழந்தமிழர், அறிவியலார், நாட்டார் ஆகிய மூவரும் காலப்பாகுபாடும், மழை வருகையையும் குறித்துச் சொல்லியுள்ள கருத்துக்கள் ஏறத்தாழ ஒற்றுமையுடயதாகவே இருப்பதை இக்கட்டுரை பதிவு செய்கின்றது.

மேலும் மழைப் பொழிவு குறித்து நாட்டுப்புற வழக்காறுகளில் காணப்படும் வானியல் சிந்தனைகள் இன்றைய அறிவியல் சிந்தனையுடன் நெருங்கிய உறவுடையதாகவே காணப்படுவதையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது...

லஞ்சம் வாங்குவதற்காக இளைஞனின் மண்டைய உடைத்த போலிஸ்... கன்னியாகுமரி, அருமனையில் பரப்பரப்பு...