26/12/2018

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...?


தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது.

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.

விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம். ஆனால் இப்போது டைனிங் டேபிள்.

இது சரியா..? தவறா..?

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன..?

என்பதைத் தெரிந்துக் கொள்வோம்:-

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது...

வெப்ப மண்டலப் பகுதியான நம் நாட்டில் உஷ்ணம் காரணமாக வியர்க்குரு, உடல் எரிச்சல், கண் எரிச்சல், அதிக தாகம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்படுவது சாதாரணம்...


இவை வராமல் தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்தான் பானகம்/பானக்கரம்.

சின்னம்மை நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் 3 வேளையும் பானகரத்தைக் குடித்து வந்தால் நோயின் தீவிரம் குறையும். இதற்காகவே கோடை காலத்தில் கோயில்களில் பானகம் தருக்கிறார்கள்.

நாம் மறந்த/மறைத்த இப்பானத்தை மீட்டெடுத்து, அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்போம்...

தமிழகத்தில் பாடகர்களும் வந்தேறிகளே...


ஏன் தமிழ் திரைப்பட உலகத்தில் அதிகம் தமிழ் பாடகர்கள் வருவதில்லை?

தமிழை தாய்மொழியாக கொண்ட பின்னணி பாடகர்கள் எத்தனை பேர்?

விரல் விட்டு எண்ண கூடிய சிலரே.

பெரும்பாலும் ஆந்திரா அல்லது கேரளத்தை சேர்ந்த பாடகர்களே தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக கோலேச்சி செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள் / இருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்ட பாடகிகள் மிக மிக குறைவு.

ஏன் இந்த நிலை?

1937 - 1950 வரை தமிழ் திரையில் பின்னணி பாடகர்களில் பலர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

உதாரணம், எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ், எம்.எல்.வி போன்றவர்கள்.

இவர்கள் அனைவருக்கும் இருந்த பொதுவான அம்சம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே கர்நாடக இசையை நன்கு அறிந்தவர்கள்.

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் பின்னணி பாடகர்கள் என்ற குரூப் உருவானது.

அதற்கு முன் இருந்த காலகட்டத்தில் சொந்த குரலில் தான் அனைவரும் பாடினார்கள் ஏனென்றால் சினிமா உருவெடுத்தது 1937 ஆம் ஆண்டு தான்.

அதற்கு முன் நாடகங்கள் தான் பெரிய அளவில் நடைபெற்றன.

நாடக கலைஞர்கள் சொந்த குரலில் தான் பாடியாக வேண்டும்.

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பின்னணி பாடகர்களில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் திரு.டி.எம்.எஸ் அவர்கள்.

டி.எம்.எஸ் சௌராஷ்ட்ரா வகுப்பை சேர்ந்தவர். அவர் சொந்த ஊர் மதுரை. ஆனால், தாய்மொழி தமிழா என்று உறுதியாக தெரியவில்லை.

பெண்களில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி அவர்கள். சுசீலா, ஜானகி இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இவர்கள் ஆதிக்கம் தான்.

நடுவில் ஏ. எம். ராஜா, பீ. பி. ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் பாடினாலும் திரையுலகை ஆக்கிரமித்தார்கள் என்று சொல்ல முடியாது. பீ. பி. ஸ்ரீநிவாசும் ஆந்திராவை சேர்ந்தவர்.

பாடகிகளில் சுசீலாவுக்கு இணையாக பேசப்பட்ட வாணி ஜெயராம் வேலூரை சேர்ந்தவர். தமிழர்.

ஆனால், இவர் தமிழில் பெரிதாக சோபித்தார் என்று சொல்ல முடியாது.

இவர்களுக்கு பின் வந்த ஜென்சி, சித்ரா, சுஜாதா அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். டி. எம். எஸ் அவர்கள் உச்சியில் இருந்த போதே அறிமுகமாகிய எஸ். பி. பி அவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர். அவருடைய சமகாலத்தவர் ஆன காந்தர்வ குரலோன் கே. ஜே. இயேசுதாஸ் கேரளாவை சேர்ந்தவர்.

இன்றைய பாடகர்கள் பற்றி நாம் அதிகம் பேச முடியாது. காரணம், இவர் தான் இன்று பெரிய பின்னணி பாடகர் என்று யாரையும் அடையாளம் காட்ட இயலாது.

ஒரே படத்தில் பத்து பேர் பாடுகிறார்கள். இப்போதெல்லாம் நடிகர்களே பாடுகிறார்கள்.

ஏன், தமிழிலிருந்து அதிகம் பாடகர்கள் வரவில்லை? நல்ல தமிழ் பாடகர்கள் இல்லையா? அல்லது ஆந்திரர், கேளரர், கர்நாடகர் நிறைந்த தமிழ் திரைப்பட உலகம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?

Biological weapons பதிவு - 6... எய்ட்ஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதே...


தமிழ் அறிவும்.. உணர்வும்...


தமிழ் அறிவு என்பதற்கும் தமிழ் உணர்வு என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்தும் சிறந்த தேர்ச்சியும் பெற்ற ஒருவர் தமிழ் அறிவு பெற்றவராக ஆக முடியும். ஆனால், அவர் தமிழ் உணர்வு பெற்றவராக ஆக முடியும் என்பது நிச்சயமல்ல.

தமிழைப் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருக்கின்ற செய்திகளை வைத்து தமிழ் அறிவு உண்டாகும். எந்தச் சூழலிலும் சொந்த மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் பேணிக்காக்கும் மனவுறுதியே தமிழ் உணர்வு என்பதாகும்..

என் தாய்மொழியை நான் இழக்க முடியாது; என் தாய்மொழியை அழிக்க இன்னொரு மொழிக்கு இடம் தர முடியாது; எத்தனை மொழிகளைக் கற்றாலும் என் தாய்மொழியைக் கல்லாமல் இருக்க முடியாது என்பவை தமிழ் உணர்வின் சில அடையாளங்கள்..

தமிழ் அறிவு இருந்து தமிழ் உணர்வு இல்லாதவர்கள் தமிழுக்காகப் பெரிதாக எதுவும் செய்யமாட்டார்கள்.

தமிழ் உணர்வு இருந்து தமிழ் அறிவு இல்லாதவர்கள் தமிழுக்குச் செய்வதாக எண்ணி இலக்கு தெரியாமல் எதையாவது செய்துவிடுவார்கள்.

தமிழ் அறிவோடு தமிழ் உணர்வும் பற்றும் உள்ளவர்கள் தான் தமிழுக்காகச் செய்யவேண்டிய உருப்படியான செயல்களைச் செவ்வனே செய்து முடிப்பார்கள்.

தமிழால் கிடைக்கும் எல்லாவகையான ஏந்து (வசதி) களையும் வாய்ப்புகளையும் எப்பாடுபட்டாகிலும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆளாய்ப்பறக்கும் நம்மவர்கள் சிலர், தமிழுக்காக ஒரு சிறு நன்மையும் செய்வது கிடையாது. இவர்களின் இப்போக்கு மாறவேண்டும்; இவர்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வை ஏற்கவேண்டும்...

யார் தியாகி... பாஜக வாஜ்பாய் யா.?


திருப்பதியில் தேங்கியுள்ள 52 டன் வெளிநாட்டு நாணயங்களை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் திணறல்...


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்கள், தங்கம், வெள்ளிப்பொருட்கள், செல்போன் உள்பட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்திய ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கோவிலுக்குப் பின் பக்கமுள்ள, ‘‘பரகாமணி சேவா குலு’’ அறையில் உடனுக்குடன் எண்ணப்படுகின்றன.

இந்தியா மற்றும் வெளிநாட்டு சில்லரை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை மூட்டைகளில் கட்டி, வாகனங்களில் திருமலையில் இருந்து திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு, இந்திய சில்லரை நாணயங்கள் எண்ணப்படுகின்றன. வெளிநாட்டு சில்லரை நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் எண்ணப்படாமல் தேங்கி கிடக்கின்றன. அந்த நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் கோணிப்பைகளில் மூட்டை மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

தேங்கி கிடக்கும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை மாற்ற, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. மொத்த வெளிநாட்டுப் பணத்தில் 52 டன் நாணயங்களாகவே உள்ளன. அதில் மலேசிய நாட்டு சில்லரை நாணயம் மட்டும் 40 டன்னும், இதர வெளிநாட்டு நாணயங்கள் 12 டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

2003-ம் ஆண்டு எடை கணக்கில் கொடுத்து, வெளிநாட்டுப் பணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வெளிநாட்டுப் பணத்தை மூட்டைகளில் கட்டி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெளிநாட்டுப் பணம் எடை குறைவாக மூட்டைகளில் கட்டி அனுப்பப்பட்டதாக புகார்கள் எழுந்ததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதைத்தொடர்ந்து 2012-ம் ஆண்டு இ.டெண்டர் மூலமாக மலேசிய நாட்டு நாணயங்கள், பணத்தை மட்டும் இந்திய ரூபாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடைமுறையும் பயனளிக்கவில்லை. பின்னர் ஒரு தனியார் வங்கி மூலம் வெளிநாட்டுப் பணத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. திணறுகிறது தேவஸ்தானம்...

வாஜ்பாய் உருவப்படத்துடன் 100 ரூபாய் நாணயம் வெளியீடு....


எரிந்த நிலையில் கிடந்த சடலம். போலீஸார் தீவிர விசாரணை...


சாயல்குடி அருகே நரிப்பையூர் எஸ். தரைக்குடி  கிராமங்களுக்கு இடைப்பட்ட பனங்காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த தகவலையடுத்து வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு எரிந்த நிலையில் துர்நாற்றத்துடன் இருந்த சடலம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த சம்பவம், இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்த நபர் ஆணா அல்லது பெண்ணா என்றும், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

ஆபத்தை அறியாமல் ஒரு பயணம்...


தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்...


1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தொடக்கம்...


என்.எல்.சி எதிர்த்து பாமக போராட்டம்...

கீழ்வெண்மணிப் படுகொலை குறித்து கன்னட ஈ.வே. பெரியார் விடுத்த அறிக்கை- முழுவிவரம்...


கீழ வெண்மணிப் படுகொலை குறித்து 28.12.1968இல் பெரியார் ஒரே நாளில்  இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். "இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம் தான் கோலோச்சும்" என்ற தலைப்பில்  வெளியிட்ட அவ்வறிக்கையின் முக்கிய சாரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு:

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான். அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகித்தான் ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டிவிட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது!

சட்டம் மீறுதல் மூலமும் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலமும் காரியத்தை சாதித்துக்கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் விட்டார்கள். புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக் கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆக வேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத நிலை ஏற்படுவிட்டது. சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்திரியாகவும் மற்றும் மந்திரிகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலைமையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு 'சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்று கூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வeர்ந்தன என்றால்,

 1. காந்தியார் கொல்லப்பட்டார்.

 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன.

3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்.

4. நீதி ஸ்தலங்கள் , ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப் பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

5.கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டி விட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாச வேலைகளாக காரியங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காரியங்களாகும். இவைகளை அடக்கப்பயன் படும்படியான போதிய சட்டமில்லை. சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழி வாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100-க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் - அமைச்சர்கள் நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் எங்களுக்கு மேலாக இருப்பதால் - எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

 மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றதன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள். அவற்றைக் கட்டு பிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக- எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அது போல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக்கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால் , ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ் நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது இந்தியர்கள் ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநுதர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும்.

ஆதலால் மக்கள் மனித தர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி - அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும். அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையன் ஆட்சிதான் வேண்டும்.

அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்று போலத்தான் இருக்கும். இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத் தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது.

1.காங்கிரஸ்-திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல்ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில் , நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையயன்று உறுதி மொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஓரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும்.சமுதாய- பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும்.

பத்திரிகைகளைப் பெரும்அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக் கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையயன்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக்கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நிலையில் எப்படி இருந்தாலும் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

"Patriotism is the last refuge of a scoundrel" தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் -ஜான்சன்.

(விடுதலை 28.12.1968).

நன்றி: சுகுணா திவாகர், "மிதக்கும் வெளி" இணையப் பக்கத்திலிருந்து இவ்வறிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்ப: கீழ வெண்மணிப் படுகொலை முதன்மை குற்றவாளி கோபால கிருஷ்ண நாயுடு பெயரை எங்கும் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது...

விசித்திர சிலைகள்...


கரைநாட்டு இசையா? கர்நாடக இசையா?


தமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு.

தமிழிசை என்பது தான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறுபட்டவை அல்ல. ஒன்றே.

வடக்கில் உள்ள பல நாடுகளில் கடல் இல்லை. அதனால் கடற்கரையும் இல்லை. ஆனால் தமிழகமோ மூன்று பக்கங்களிலும் கடல்களையும் கடற்கரைகளையும் கொண்டது. சோல மண்டல கடற்கரை, பாண்டி மண்டலக் கடற்கரை, சேர மண்டலக் கடற்கரை என்ற பெயர்கள் இன்றுவரை மக்களிடையே காணப்படுகின்றதாம்.

இதனால் தமிழகத்தைக் கரை நாடு என்றும் தமிழிசையைக் கரை நாட்டு இசை எனவும் வடக்கேயுள்ளனர் குறிப்பிட்டு வந்தனராம். அதையே பலரும் கர்நாட்டிசை என்றனர்.

ஆங்கிலேயனும் அதை கர்நாட்டிக் இசை என்றான். ஆகவே கரை நாட்டு இசை என்பது தமிழ் இசையைக் குறிப்பது.

காலப்போக்கில் வடமொழியின் மீது பற்றும், வட நாட்டின் மீது காதலும் கொண்ட சிலர், கரை நாட்டு இசையை, வட நாட்டு இசை என்றும், தமிழிசை இதற்கு முற்றும் மாறானது என்றும் கூறத் தொடங்கினர்.

தமிழில் உள்ள இசைக்கலை நூல்கள் வடமொழியில் பெயர்த்து எழுதினர். முன்னால் பதிவில் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள தமிழிசைப் பற்றி சிரு விளக்கம் உள்ளது. இதுவே, தக்கச் சான்றாகும்...

தமிழகத்தில் திமுக மட்டுமல்ல இனி அதிமுக விற்கும் சங்கு தான்...


எண்ணெய் கொப்பளித்தல்...


நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்.. என்பது பழமொழி.

இதே போல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக் கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக்காக்கும்.

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை...

சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப்போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக்கொள்ளவும்.

எந்தநேரத்தில் செய்யவேண்டும்?

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும் வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

நன்மைகள்: வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள். தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி , பற்கள் வெள்ளையாகவும் , ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

வாய்துர்நாற்றம்: தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு: ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். பல் கூச்சம் நின்று பல் வலி மறையும்.

உடலின் எனர்ஜி அதிகரிக்கும்: ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

ஒற்றை தலைவலி: ஒற்றை தலை வலியால் அவஸ்தைப் படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.3D Character with head in hands, sitting on the word Stress

சைனஸ் ஆஸ்துமா: சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால் , இந்த பிரச்சனைகள் குணமாகும்.

நிம்மதியான தூக்கம்: தூக்கமின்மையால் அவஸ்தைப் படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

பொலிவான சருமம்: ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.

தைராய்டு: தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக்க ட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பார்வைக்கோளாறு: பார்வைக்கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக் கோளாறானது சரியாகும்.

மூட்டுபிரச்சனைகள்: மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

சிறுநீரக செயல்பாடு: தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக செயல்படும். தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது. கை ,கால், விரல்கள் மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும். தோல் அரிப்புகள் படிப்படியாக குறைந்து 3 மாதங்களில் மறையும். பொடுகு தொல்லை தீரும். பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்...

அன்பும், மகிழ்ச்சியும், சிரிப்பும்...


எந்த
சாமியாருக்கும்,
மதபோகருக்கும்,
பூசாரிக்கும்,
ஏற்படுவதில்லை அவன் பினமாகவே நடந்து  வாழ்கிறான் கடைசி வரை
கூட இருப்பவர்களையும் பிணமாக மாற்றுகிறார்கள்.

அதனால் நான்
சாமியாரும் இல்லை
மத போகரும் இல்லை
பூசாரியும் இல்லை

நான் மனிதன்
பின் நீங்கள் யார்?

இந்த அடிப்படையை உணர்ந்தோர் இயற்கைக்கு எதிராக தவறு செய்ய மாட்டார்கள்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள் - பூமியின் தலவிருட்சம்...


அவதார் படத்தில், பண்டோரா கிரகத்தின் Na'vi மக்கள் மத்தியில், ஒரு பெரிய மரம் உள்ளதை காண்பிப்பார்கள். அதை தங்கள் கடவுள், Eywa வுடன் நெருக்கமான தொடர்பு உள்ளதாகவும், இந்த மரம் நாவிக்கு ஒரு ஆன்மீக அடையாளமாகவும், அது அவர்களை ஒன்றுபடுத்துவதாகவும், காட்டியிருப்பார்கள்.

நாவிகளின் தாய் மரத்தினை போன்ற ஒரு பிரம்மாண்டமான மரம்  "டெவில்ஸ் டவர்" ( Devil towers)  அமெரிக்க  பெல்லே ஃபெச்சே ஆற்றின் மேலே உள்ள வடகிழக்கு வயோமிங், க்ரூக் கவுண்டியில் உள்ள ஹலெட் மற்றும் சன்டான்ஸிற்கு அருகில் பெல்லே ஃபெச்சே நதியின் மேலே 1,267 அடி உயரத்தில், கடல் மட்டத்திலிருந்து 5,112 அடி உயரத்தில் உள்ளது.

இப்போது அதன் எஞ்சிய தண்டு படிவம் மட்டுமே உள்ளது. இந்த மரம் ஆதிமனிதர்களின், எப்படி பண்டோராவில் உள்ள அனைத்து உயிரினங்களும் நரம்பு-ஊடுருவல் இணைப்பு மூலம் தங்களுக்குள்ளும், தங்கள் கடவுள் ஐவாவுடன் இணைக்கப்படுவது, நமக்கு கோட்பாட்டளவில் விளக்குகிறது.

இந்த மரத்தின் அழிவு, அந்த கற்பனை திரைக்கதையில் வருவதுபோல ஒரு வேற்றுகிரக வேட்டைக் கும்பலால் அழிக்கப்பட்டு இருக்கலாம். இது அப்படியே கற்பனை சிந்தனையுடனும், பரஸ்பர சிந்தனைகளுடன் நேரடியாக தொடர்புடையது போலவே தோன்றுகிறது. கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரு இயற்கையான காரியம் என்பதை, இணைப்பில் உள்ள ஆழ்மனம் நம்புகிறது...

பெண்களின் நான்கு பண்புகள்....


அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன?

அச்சம்...

அச்சமில்லாமல் அச்சப்படுவது போல் நடிப்பது.

மடம்...

தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல பண்ணும் பாவனை.

நாணம்...

சொல்ல வந்ததை சொல்லாமல் சிறிது வெட்கத்துடன் சொல்லும் இடம்.

பயிர்ப்பு...

தன் கணவன் அல்லாத ஓர் ஆடவன் தன்னைத் தொடும்போது (தொடுகையே நோக்கம் சொல்லும். நோக்கம் வேறு மாதிரியாகத் தோற்றம் தரும்போது) உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி.

இது அடக்குமுறையா? அல்லது பண்பா? எனக்கு தெரியவில்லை...

கமிஷன் அதிமுக அரசே... ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு...


அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி...


ஒட்டியாணம் என்பது பெண்கள் இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது.

இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடையலங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் முற்காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும்.

ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாணங்கள் விலைக்கு கிடைக்கின்றன. தனி உலோகங்களால் மட்டுமன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங்களும் செய்யப்படுகின்றன.

ஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படுகின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடையணிகளை உடைக்குள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது.

இத்தகைய இடையணிகள் நுண்ணிய உடையினூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைகளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கியங்கள் தருகின்றன....

முழு சுதந்திரம் என்பது நீ நீயாக இருக்கும் போது மட்டுமே...


மனிதன் தினமும் சொல்லும் பொய்யில். சந்தோஷம் இருக்கா?


அதற்கு மெய் (தீர்வு) என்ன...?

கற்பனை தேடலுக்கு வருவோம்

ஓவ்வொரு தினமும் வந்து கொண்டே இருக்கிறது என்று  மனிதனின் முதல் கற்பனை...

அந்த கற்பனை எவ்வாறு மனிதர்கள் நினைக்கிறார்கள் , கடந்த காலத்தை நினைத்து கொண்டே வருத்தம் கொள்வது.. எதிர்காலத்தை நினைத்து கொண்டே ஆசை கொள்வது... இதுவே மனிதர்களை தினமும் ஈர்த்து கொண்டே வாழ்வை வாழ விடவில்லை.

ஆனால் இது இரண்டுமே மனித மனதின் கற்பனை இங்கு இருப்பது தினம் மட்டுமே..

தினம் என்பது என்ன.?

மனிதனை தவிர எந்த உயிரனங்களும் கடந்த காலம் எதிர்காலத்தை நினைத்து கொண்டே இருப்பது இல்லை..

அதனால் அவைகள் தன் கணத்தில் ( நிகழ்காலத்தில்) வாழ்வை வாழ்கிறது.
அதனால் அவைகள் மகிழ்வாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறது..

எ:க நீங்கள் மகிழ்வாகவும் சந்தோஷமாகவும் சிரிப்பாகவும் இருக்கும் போது அந்த கணத்தில் ( நிகழ்காலத்தில்) வாழ்வீர்கள் அப்போது உங்களுக்கு கடந்த காலத்தின் கவலையும் தோன்றுவதில்லை எதிர்காலத்தின் ஆசையும் தோன்றுவதில்லை..

அங்கு இருப்பது உங்கள் இயற்கை தன்மை மட்டுமே அன்பு, மகிழ்வு, சிரிப்பு, இதுதான் உங்களின் உன்மையான நிலையான சந்தோஷம்..

கற்பனை தேடல் தொடரும்...

டிஜிபி யின் ஊழலை அம்பலப்படுத்தும் பாமக...


விரதங்கள்...


புராணத்தில் 27 வகையான உபவாச  குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,

1.உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப் பிடிப்பார்களாம்.

2.தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

3.பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

4.எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

5.காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.

6.பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

7.இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

8.மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

9.மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

10.மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

11.கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

12.மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

13.இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

14.ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

15.ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

16.ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

17.ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

18.ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

19.ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

20.தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.

21.ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

22.ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.

23.ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

24.இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.

25.முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

26.மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

27.வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.

- இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா?

உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்...

இன்னும் ஏழு நாட்கள் தான்.. பிளாஸ்டிக் பயன்படுத்த முடியும் - இன்றே புறக்கணிப்போம்...


பொன்.மாணிக்கவேல் மீது 3வது முறையாக போலீசார் புகார்...


சிலை கடத்தில் வழக்கின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீசார் 3வது முறையாக புகார் அளித்துள்ளனர்.

நியாயமான முறையில் விசாரணை செய்ய முடியவில்லை என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர்...

2022 புதிய இந்தியாவின் யுக்திகள்...


கன்னட தெலுங்கர் பெரியார் என்னும் ராமசாமி நாயக்கரின் தமிழின அழிப்பு...


இந்த புகைப்படத்தை பதிவிட்டபோது இது போலி விசமிகளால் போலியாக உருவாக்கப்பட்டது என்று மறுப்பு கொடுத்தனர் திராவிடர்கள்..

1904ல் காசிக்கு பிராமணர்களோடு போய்ட்டு சோறு கிடைக்காத கோவத்தில் பிராமணியத்தை வெறுத்து..

ஊர் திரும்பிய ராமசாமியாரை வரவேற்ற தந்தை வெங்கட்ட நாயக்கர் மகனுக்கு பொறுப்பு வர வேண்டும் என்று..

தன் பெயரில் இருந்த மண்டியை மகன் பெயரில் மாற்றியுள்ளார்..

இப்பெயர் பலகை நாளடைவில் வண்ணம் மங்கவும் உடனே பா.வெ.மாணிக்க நாயக்கர் என்பவரால்,

ஆயில் பெயிண்ட் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது..

எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் அடையாளத்தை இழக்க விரும்ப மாட்டார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு..

இன்றும் ஈரோட்டில் துறவிக் கோல புகைப்படமும் இப்பெயர் பலகையும் இருப்பதாக செய்தி..

இனி மறைக்கப்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல..

கன்னட ஈ.வே. ராமசாமியை எதிர்த்தால் தமிழ்நாட்டில் சாதி வெறியன் மதவெறியன் பட்டமும் உடனே கிடைக்கும்...


முயற்சி செய்து பாருங்க..

டேய் இன்னும் நாங்க அடிக்கவே ஆரம்பிக்கலியே...

இஞ்சி... ஒரு அற்புதமான மருந்து...


இஞ்சி உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் சமையலறையிலும் காணப்படும் ஒரு சிறப்பு சமையல் பொருளாக இருக்கிறது. நம் அன்றாடம் உண்ணும் உணவை காரத்தன்மையுடன் உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் இஞ்சியை தினமும் இரண்டு ஸ்பூன் சாறாக சாப்பிடுவது அவசியம்.

இஞ்சி மருத்துவம்...

இஞ்சி சமையலுக்கு மட்டுமே பிரபலமானது அல்ல, இஞ்சியை ஒரு நாளில் ஒரு எண்ணிக்கை என தினமும் சாப்பிடக்கூடிய இயற்கை மருந்தாக கருதப்படுகிறது?

காலை நோய் மற்றும் எரிச்சல்...

இஞ்சி டீ குடிப்பது காலை நோயை சமாளிக்க சிறந்த வழி. குறிப்பாக கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம். ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும். மாறாக வெறுமனே காலை நோயை போக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சேர்த்து சாப்பிடலாம்.

நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் பெற, இஞ்சியை ஒரு சிறிய துண்டுகளாக மென்று சாப்பிடலாம். இஞ்சி டீ குடிக்க விரும்பாதவர்கள் மாற்றுவழியாக காலை நோயை சமாளிக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சாப்பிடலாம். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற ஒரு சிறிய இஞ்சி துண்டுகளை வெறுமனே சாப்பிடலாம்.

மூட்டுவலிகள் மற்றும் வீக்கம்...

மூட்டுவலிகள் மற்றும் வீக்கங்களை நீக்கும் பண்புகளை கொண்ட ஒரு சிறந்த இயற்கை வலி கொல்லி இஞ்சி. இது ஆர்த்ரிடிஸ் வலியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மிகவும் பயன்படுவது. உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் உடனடி மருந்தாக இஞ்சி டீ சாப்பிடலாம். இஞ்சி மாதவிடாய் பிடிப்புகளுக்கு ஒரு சக்திவாய்ந்த நிவாரணியாக கருதப்படுகிறது.

தொண்டை புண், குளிர் மற்றும் காய்ச்சல்...

குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி ஆகியவற்றிக்கு இஞ்சி ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது இஞ்சி துண்டு அல்லது இஞ்சியின் சாறு இரண்டு டீஸ்பூன் விட்டு கொதிநிலையை அடைந்ததும் ஆவி பிடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.

வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா...

வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா போக்க ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, பூண்டு சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா நிவாரணம் பெறும்...