அதற்கு மெய் (தீர்வு) என்ன...?
கற்பனை தேடலுக்கு வருவோம்
ஓவ்வொரு தினமும் வந்து கொண்டே இருக்கிறது என்று மனிதனின் முதல் கற்பனை...
அந்த கற்பனை எவ்வாறு மனிதர்கள் நினைக்கிறார்கள் , கடந்த காலத்தை நினைத்து கொண்டே வருத்தம் கொள்வது.. எதிர்காலத்தை நினைத்து கொண்டே ஆசை கொள்வது... இதுவே மனிதர்களை தினமும் ஈர்த்து கொண்டே வாழ்வை வாழ விடவில்லை.
ஆனால் இது இரண்டுமே மனித மனதின் கற்பனை இங்கு இருப்பது தினம் மட்டுமே..
தினம் என்பது என்ன.?
மனிதனை தவிர எந்த உயிரனங்களும் கடந்த காலம் எதிர்காலத்தை நினைத்து கொண்டே இருப்பது இல்லை..
அதனால் அவைகள் தன் கணத்தில் ( நிகழ்காலத்தில்) வாழ்வை வாழ்கிறது.
அதனால் அவைகள் மகிழ்வாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறது..
எ:க நீங்கள் மகிழ்வாகவும் சந்தோஷமாகவும் சிரிப்பாகவும் இருக்கும் போது அந்த கணத்தில் ( நிகழ்காலத்தில்) வாழ்வீர்கள் அப்போது உங்களுக்கு கடந்த காலத்தின் கவலையும் தோன்றுவதில்லை எதிர்காலத்தின் ஆசையும் தோன்றுவதில்லை..
அங்கு இருப்பது உங்கள் இயற்கை தன்மை மட்டுமே அன்பு, மகிழ்வு, சிரிப்பு, இதுதான் உங்களின் உன்மையான நிலையான சந்தோஷம்..
கற்பனை தேடல் தொடரும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.