23/05/2017

இந்தியாவை புறக்கணிக்கும் அரசியல் வாதிகள்...


ஒரு மத அடிப்படையில் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நமது நாட்டுக்கென்று சட்ட யாப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்த அக்காலத்து அம்பேதக்கர் போன்ற அறிஞர்கள்.

இந்தியாவில் உள்ள மதங்களின் பிரதிநிதிகளை வைத்து சமமாக உருவாக்கிய சட்டம் தான் இந்திய சட்டவியல் சாசனம்...

இதில் 4 பெரிய மதங்களை தேர்தெடுத்து அவர்களின் பிரதி நிதிகளை அழைத்து ஆய்வு செய்து கலந்துரையாடல் செய்து அழகான முறையில் உருவாக்கியது மிகச்சிறப்பு...

ஹிந்து மதத்தை கடைபிடிக்கும் மக்கள் ஹிந்து மதத்தில் பிறந்தாலும் நான் ஹிந்து அல்ல என்று சொன்னால் அவர்களுக்கு இந்திய சட்டம் துறை ஹிந்து என்ற அடிப்படையில் தான் குறிக்கும்..

கிருஸ்தவ மக்கள் அவர்களுக்கென்ற பிராதன வெளிநாட்டு நபர்களை அழைத்து வந்து கிருஸ்துவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய அனுமதியுண்டு என்ற சட்டம்..

மற்றவகைகளை காட்டிலும் கிருஸ்துவ போதகர்களுக்கு நிலுவை சட்டம் தனியாக உண்டு..

குருகோவித் சிங் தொடக்கம் இந்திய வரலாற்றை சிங் இனத்தவர்களை தவிர்த்து பார்க்க முடியாது.

இஸ்லாமிய மன்னரான அவுரங்க சேப்பிற்கும் அன்றைய காலத்து குரு சிங் குக்குமான நட்புறவே இதற்கு எடுத்துக்காட்டு.

அவர்களுக்கென்று தனி சட்டம் டர்பன், துப்பாக்கி போன்றவகைகளை தனியாகவே அன்றைய காலத்து அம்பேதக்கர்  தொடக்கம் அறிஞர்கள்  உருவாக்கினார்கள்..

அது மற்றுமின்றி.. நீதி மன்றத்தில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்து விசாரிக்கும் பொழுது அவரின் மதத்தை அறிந்து அந்த மதத்தின் புனித நூல்களை கையில் கொடுத்து சத்ய பிரமாணம் செய்ய சொல்வார்கள்..

இஸ்லாமியராக இருந்தால் புனித குரானும்.

கிருத்துவராக இருந்தால் புனித பைபிளும்.

நாஸ்திகராக இருந்தால் அவர்கள் மனதில் கைவைத்து சத்யம் செய்ய சொல்லுவார்கள்.

இதெல்லாம் அன்றைய மரியாதைக்குரிய அறிஞர்கள் நமக்கு வழிகாட்டி செய்து வைத்துள்ள சட்ட ஒப்பந்தம்.

இதையெல்லாம் செய்ய காரணம் என்ன?

எந்த மதத் தலைவர்களையும் ஒதுக்கி விடாமல் அனைவரையும் கலந்து ஆலோசித்து உருவாக்க வேண்டிய அவசியம் என்ன ?

காரணம் எக்காலத்திலும் எந்த மதத்தையும் யாரும் ஏசிவிடக்கூடாது என்பதே...

இப்படியிருக்க ஒரு மதத்திற்கு எதிராக பேசுவது எந்த அளவிற்கு தவறு என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

யோகி ஆதித்யநாத்  சாத்வி போன்றோர்கள் சிறுபான்மை மக்கள் என்று சொல்லக்கூடிய கிருஸ்துவ இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசுவது எப்படி சரியாகும் ?

நேர்மையான நெஞ்சுடைய மக்கள் தவறு என்றே சிந்திப்பார்கள்....

இந்திய இறையாண்மைக்கு எதிரானவை. இந்திய சட்ட யாப்புக்கு எதிரானவை. இவர்கள் பேசுவது..

இந்திய சட்டத்திற்கு எதிராக பேசுவது
தான் வாழும் இந்தியாவை புறக்கணிப்பதற்கு சமம்...

இதோ வந்துட்டார் நம்ம தெர்மோகோல் அண்ணாச்சி...


பூமியின் (அ)பூர்வ கதை - 3...


பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்...

பிறந்த குட்டியாக எதை ஒன்றையும் பார்தாலும் பார்க்க மிக அழகாக இருக்கும் என்ற லாஜிக்  பூமிக்கு பொருந்தாது. காரணம் பூமி பிறந்த போது அது ஒரு மிரட்டும் நரக கிரகம்.

அதன் பரப்புகளில் எட்டி பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உருகிய பாறைகளின் லாவா குழம்புகள் உலா வந்து கொண்டிருப்பதை காண முடியும்..
அந்த சூடான கொழ கொழ பாறை கூழால் தான் இந்த கிரகம் சூழ பட்டிருந்தது.

இந்நிலையில் பூமியின் சுழற்சி வேகம் இன்றை போல 24 மணி நேரமாக இருந்திருக்க வில்லை. அன்றைய ஒரு நாள் என்பது வெறும் 6 மணி நேரங்கள் மட்டும் தான்.

குறிப்பிட்ட காலத்திற்கு எல்லாம் கலந்த கலவையாக இருந்த பூமியின் தனிமங்களை தனித்தனி அடுக்குகளாக வரிசையாக அடுக்கிவைத்த புண்ணியம் பூமியின் ஈர்ப்பு விசையையே சாரும்.

அவைகள் இரும்பு நிக்கல் போன்ற கனமான தனிமங்களை பூமியின் மையத்திலும் ஏனைய கணம் குறைந்த தனிமங்களை படி படியாக மேல் அடுக்கில் ஒன்றின் மேல் ஒன்றாகவும் அடுக்கி வைத்தன.

மையத்தில் உள்ள இரும்பு நிக்கல்  போன்றவையால் பூமிக்கு காந்த புலம் என்ற ஒன்று உருவாகி பூமியை ஒரு ராட்சத காந்தமாக மாற்றியது. இந்த காந்த புலங்கள் சூரியனில் இருந்து வரும் சக்தி யூட்ட பட்ட துகள்களில் இருந்து சூரிய புயலில் இருந்து பூமியை காக்க தொடங்கின. இன்றும் காத்து கொண்டு இருக்கின்றன.

இப்படி ஆர்பாட்டமாக சுற்றி சுழன்று கொண்டிருந்த பூமியின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத விபத்து ஒன்று ஏற்பட்டது... மோதல் விபத்து.

அதாவது கிட்ட தட்ட 450 கோடி ஆண்டு முன் இளைய பூமியை விண்வெளி பொருள் ஒன்று மிக வேகமாக தாக்கியது.

தாக்கிய அந்த பொருள் ஏதோ சிறிய விண்கல் அல்ல (பூமி வரலாற்று பாதையில் விண்கல் மோதல் என்ற ஒரு நிகழ்வும் நடக்க இருக்கிறது. ஆனால் இப்போது இல்லை அதற்கு இன்னும் சில கோடி ஆண்டுகள் செல்ல வேண்டும். நியாபகமாக இக்கட்டுரை தொடரின் 7 வது அத்தியாயத்தில் அதை பற்றி சொல்கிறேன்)..

மோதிய அந்த பொருள் ஒரு முழு கிரகம் அதன் அளவு கிட்ட தட்ட இன்றைய செவ்வாய் கிரகம் அளவு. அது மோதிய வேகம் அசுர தனமான மணிக்கு கிட்ட தட்ட நாற்பது ஆயிரம் கிலோ மீட்டர் வேகம்.

அந்த தாக்கத்தால் பூமி மிக பெரிய அளவில் பாதிக்க பட்டது அதன் உடலில் ஒரு சிறிய பகுதி பிய்த்து எறிய பட்டு அவைகள் ஈர்ப்பு விசையால் ஒன்றிணைந்து பிறகு பூமியை தொடர்ந்து சுற்ற ஆரம்பித்தது.

பிற்காலத்தில் நிலா என்று அழைக்க பட்டு கவிஞர்கள் கவிதை எழுத.. குழந்தைகளுக்கு காட்டி சோறூட்ட பயன்பட்டது.

(பிய்த்து எறிய பட்ட இடத்தில உண்டான பள்ளங்கள் தான் பிற்காலத்தில் தன்னீர் நிரப்ப பட்டு கடல்கள் என்று அழைக்க பட்டன. இன்று நிலாவின் பருமன் எவ்வளவு உள்ளது என்று கணக்கு போட்டு பார்த்த ஆய்வாளர்கள் அதை உடைத்து தூள் ஆக்கி நமது கடலில் போட்டு நிறப்பினால் கிட்ட தட்ட பூமியின் கடலை தூர்க்கும் அளவு சரியாக நிலா இருப்பதாக சொல்கிறார்கள்).

மோதலில் தான் காதல் உண்டாகிகிறது பிறகு வாழ்க்கை துணை கிடைக்கிறது என்ற சினிமா லாஜிக்கிற்கு ஏற்ப பூமி மோதலுக்கு பின் தனக்கு என்று ஒரு துனையை அதாவது துணை கிரகத்தை உண்டாக்கி கொண்டது.

அந்த துணை கிரகம் சும்மா வெட்டியாக சுத்தி வரவில்லை. பூமியில் பல விஷயங்களை அது நிர்ணயிக்கிறது. (கணவன் செயல்பாட்டில் பின்னணியில் இருந்து உதவும் மனைவியை போல்) குறிப்பாக பூமியின் பருவநிலை.

பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து கொண்டு சுற்றுவதால் தான் பருவ மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று நமக்கு தெரியும். சரி இதில் நிலவின் பங்கு என்ன?

ஒரு மைதானத்தில்  சங்கிலியால் கட்ட பட்ட இரும்பு குண்டு ஒன்றை ஒருவர் கையால் பிடித்து வேகமாக  சுற்றுவதாக கற்பனை செய்யுங்கள் .இப்போது அவர்
அந்த குண்டின் எடையால் பாதிக்க பட்டு ஒரு குறிப்பிட்ட பேலன்ஸ் இல் சுழல்வதை பார்க்கலாம். அந்த குண்டு இவரை இழுத்து கொண்டு சுற்றும். திடீரென  அதை விடுத்தால் அவரும் அந்த சூழல் பேலன்ஸ் இல் இருந்து விடு
படுவார் அல்லவா.

அப்படி தான் நிலாவின் ஈர்ப்பு விசையால் பூமி தனக்கும் நிலவுக்கும் ஒரு கற்பனை கயிறு கட்டி விட்டதை போல அதை இழுத்து கொண்டு சுற்றி வருகிறது.

மேலும்  'பூமி பெலன்ஸி'ல்  நிலா முக்கிய பங்கு வகிக்கிறது. நிற்க போகும் பம்பரம் போல பூமி தலை ஆட்டி நிலையில்லாமல் சுற்றாமல் நிலையான சுழற்சிக்கு இது உதவியாக இருக்கிறது.

பூமி இப்போது இருக்கும் அச்சில் சூழல இதுவும் ஒரு காரணம். அப்படி அந்த அச்சில் சுழல வில்லை என்றால் பருவங்கள் ஏற்பட்டிருக்காது.

இது தவிர நிலவின் ஈர்ப்பு விசை இன்னோரு காரியத்தை செய்தது பூமியை இழுத்து பிடித்து 6 மணிநேரமாக இருந்த பூமியின் சுழற்சி வேகத்தை படி படியாக குறைத்து 24 மணி நேரமாக மாற்றியது.

இப்படி சுற்றி திரிந்து கொண்டிருக்கும் இந்த சூழல் பூமியில் உயிரினங்கள் ஏதும் இன்றி கிட்ட தட்ட 80 கோடி ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.

காரணம் உயிரினங்கள் உண்டாக மிக முக்கிய தேவை ஒன்று இருந்தது.
நீர் இன்றி அமையாது உலகு என்று வள்ளுவன் அப்போதே சொல்லி விட்டு போன நீர்.

பூமியின் அடுத்த கட்ட தேவையாக இருப்பது நீர் உருவாக்கம். அது எப்போ எப்படி உண்டாகியது என்ற தகவல்கள் அடுத்த பாகத்தில்....

- பூமி இன்னும் சுழலும்...

நம்ப முடியாத உண்மைகள்...


பல்லாயிரம் வருடங்களாக நாகரிகத்திலும் , பண்பாட்டிலும், விஞ்ஞானத்திலும் தலை சிறந்து விளங்கிய... பல்வேறு நாடுகளை ஆட்சி செய்த... தமிழ் இனம்....


நேற்று தோன்றிய சிங்களத்திடம்.... தோற்று அடி வாங்கி கொண்டு  அடிமையாக்... உலகம் முன்னிலையில் நாம் இருப்பது ஏன்..... 10 மைல் தொலைவில்  நாம் இருந்தும்.... நம்மால் சிங்களவனின் அட்டுழியங்களை அடக்க முடியாமல் இருப்பது ஏன்......

தமிழ் மண்ணில் தமிழன் இங்கு ஆட்சி செய்ய முடியாதது ஏன்.....
சொந்த மண்ணில் எதிர் கட்சியாக கூட வரமுடியாத மோசமான நிலை ஏன்..

இலங்கையில் வலுகட்டாயமாக அடிமையாக வைக்க முயல்கிறார்கள் ராணுவத்தின் மூலம்....

இங்கு தமிழ்நாட்டில் நாமே வலிந்து வலுகட்டாயமாக அடிமையாக இருப்பது ஏன்..

இனியும் நீங்கள் தமிழ் இனமாக ஒன்று பட்டு உணர்வு கொண்டு எழுச்சி பெற வில்லை என்றால்......

விரைவில் தமிழ் இனத்தின் இறுதி வரலாறு இலங்கையிலும்... பிறகு (தமிழகத்திலும்)  இங்கும் எழுதப்படும்......

அது வரை நீங்கள் பொறுமையாக தான் உண்டு தன் வேலை உண்டு நமக்கேன் என்று  இருக்க போகிறீர்களா....

போராட்டமே வாழ்கையாகவும் , வாழ்கையே போராட்டமாகவும் வாழும் ஈழ தமிழர்களுக்கு..... நீங்கள்  தர விரும்பும் பரிசு என்ன மரணமா , இல்லை விடுதலையா...

உங்களிடம் பணம் இல்லையா உதவ ..பரவா இல்லை

உங்களின் உயிரை கொடுக்க விருப்பம் இல்லையா , பரவாயில்லை ...

ஆனால் அனைவரும் உணர்வை.. தமிழன் என்று உணர்வை ... கொடுக்கலாமே... உங்கள் உணர்வை.... நீங்கள் அழுத்தமாக பதிவு செய்தால்....
உலகம்  திரும்பி பார்க்கும்... அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்....

உயிர் இருந்தால்.... மூளை செத்து போக வில்லை என்றால்..... உணர்வு கண்டிப்பாக இருக்கும்..... அதை வெளிபடுத்துவதில் உங்களுக்கு தயக்கம் ஏன்....

அதனால் உங்களுக்கு மரண தண்டனையா.....?

உங்கள்  பணம் விரயம் ஆகிறதா....?

உங்கள் தொழில் நஷ்டம் அடைகிறதா..?

இல்லை தமிழன் என்ற உணர்வு மட்டும் இல்லையா........

உணர்வை மட்டும் கொடுங்கள் தமிழினத்தின் உரிமையை பெற.

உங்களால் முடியும் உதவிகளையே கேட்கிறோம்....

அவற்றை தாராளமாக் கொடுங்கள்........

வருங்காலங்களில்  தேர்தலில் தமிழ் இன உணர்வு ஈழ ஆதரவு கூட்டனிக்கு வாக்களியுங்கள்.....

தமிழ் இன உணர்வு ஆதரவு போராட்டங்களில் பங்குகொள்ள பாருங்கள்....

உங்கள் நெருங்கிய நண்பர்கள் , உறவினர்களிடம்..  இன உணர்வை மேலோங்க செய்ய.... விழிப்புணர்வு உண்டாக்குங்கள்...... அவர்களிடம்  அவர்களின் நெருங்கிய நண்பர்களிடம், உறவினர்களிடம்... கொண்டு செல்ல சொல்லுங்கள்......

இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்....

உங்களுக்கு நேரம் இருக்கும் போது,.

போராட்டம் நடை பெற்றால் அவசியம் பங்கு பெறுங்கள்...

மற்றவர்களுடன்  உரையாடும் பொது... .. தமிழ் இனத்தின்  விடுதலை பற்றி கொஞ்சம் உரையாடுங்கள்.....

உங்களிடம் பழகும் பிற மாநில , வெளிநாடு மக்களிடம் ஈழம் பற்றிய நிலையை எடுத்து கூறுங்கள்.... ஆதரவு கேளுங்கள்....

தமிழ் இனத்திற்கு தமிழனே உதவ முன்வரவில்லை என்றால் பிறகு மற்றவர்கள் எப்படி முன்வருவார்கள்.....

நீங்களும் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப ,போராட்டம் செய்யலாம்...., போராட்ட வடிவத்தை மாற்றலாம்.... இனத்தின் எழுச்சிக்கு.....

வித்தியாசமான முறையிலும் உங்களுக்கு  தோன்றும் வழியில் போராட்டம் செய்யலாம்.... மக்களிடம்  உலகத்திடம் .. ஈழத்தின் தேவையை உணர்த்த வேண்டும், சென்றடைய வேண்டும்...

உன் தாய் நாடான தமிழ் நாட்டில், தமிழா உன் உரிமை எங்கே ?


கேரளா அரசு பணியாளர் தேர்வாணையம் (Kerala puplic service commision) நடத்திய தேர்வில் அங்கு வாழும் மாற்று இனத்தவர்கள் தேர்வு எழுத கேரளா அரசால் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மலையாளி மொழியை திறம்பட கற்றறிந்து , பல தலை முறையாக கேரளாவில் வாழ்ந்து வரும் தமிழருக்கு, கேரளா அரசு ஊழியராகும் தகுதி இல்லை என கேரளா அரசு கூறியுள்ளது . பல தலை முறையாக இங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மலையாளிகள் அல்ல என்று கூறி கேரளா அரசு மாற்று இன மக்களுக்கான உரிமையை மறுத்துள்ளது.

நடுவண் அரசு தொடர் வண்டி தேர்வு எழுத, 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்ற ஆண்டு ஆந்திராவிற்கு சென்றனர். ஹைதராபாத்தில் நடந்த தேர்வு மையத்தில் தெலுங்கர்களால் தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

காரணம் ,ஆந்திராவில் உள்ள நடுவண் அரசு வேலை வாய்ப்பு தெலுங்கர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் மாற்று இனத்தவருக்கு கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஆந்திர அரசு காவல் துறை ஆதரவுடன் தமிழர்கள் கடுமையாக தாக்கப் பட்டனர். இன்று வரை குற்றவாளிகளின் மீது சிறு வழக்கு பதிவு செய்ய ஆந்திர அரசு மறுத்து விட்டது .

கர்நாடகாவிலும், தமிழருக்கு அரசு வேலை வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கூறி வழக்காடு மன்றம் வரை சென்று கர்நாடக அரசு வாதிட்டது .கன்னடத்த வருக்கே முன்னுரிமை கன்னடதவருக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு என்பதில் கன்னட அரசு இன்று வரை உறுதியாக உள்ளது .செயல் படுத்தி வருகிறது .

தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் அரசு வேலையை பெறலாம் என்ற முறையை இங்குள்ள திராவிட அரசுகளால் நடை முறை படுத்தப்பட்டு வருகிறது .

பத்து ஆண்டுக்கும் முன்பு குடியேறிய வட இந்தியர்கள் கூட, தமிழக அரசு ஊழியராக பணி ஆற்றுகின்றனர். அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் , வளம் மிகுந்த பதவிகளில் 70 விழுக்காடு மாற்று இனத்தவரே பணி புரிகின்றனர். இவர்கள் பெரும் பாலும் தமிழர்களுக்கு எதிராக தன் இன மக்களுக்கு ஆதரவாகவே இன்று வரை செயல் பட்டு வருகின்றனர்.குறிப்பாக காவல் துறைகளில் பணி புரியும் திராவிடர்களால் தமிழர் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன.

50 ஆண்டு கால திராவிட ஆட்சியில், தமிழர் என்ற போர்வையில் இங்குள்ள திராவிடர்களால் அரசு வேலையை பறித்து விட்டனர் .

மலையாளிகளும் தெலுங்கர்களும் ,கன்னடர்களும் , வட இந்தியர்களும் அரசு துறையில் ஊடுருவியதால் இன்று தமிழர் நாட்டின் அசைக்க முடியாத ஆற்றலாக வளர்ந்து விட்டனர். தமிழ் நாட்டை ஆளும் அரசு மற்றும் அதிகாரிகள் வர்கதினரே மாற்று இனத்தவர்தான் . அரசு துறையில் ஒருவர் பதவியேற்றால் அவர்களை 40 ஆண்டு வரை தமிழர் நாட்டின் தலை விதியை எழுதும் வல்லாதிக்கர்கலாக மாறுகின்றனர் . இந்த நிலை ஒழிக்க பட வேண்டும் .

நமது அண்டை மாநிலங்களில் (கேரளா ஆந்திரா கர்நாடகா ) அந்த மாநில மண்ணின் மைந்தர்களை தவிர வேறு யாரும் அரசு பதவியை பெற முடியாது என்று அந்தந்த மாநில அரசுகளே சட்டம் இயற்றி செயல் படுத்தி வருகிறது .

தமிழ் நாட்டை ஆளக் கூடியவர்கள், தமிழர் அல்லாதவர்களாக , திராவிடர்களாக இருப்பதால், அவர்கள் தங்கள் திராவிட மக்களுக்கும் , மாற்று இன மக்களுக்கும் ஆதரவாக செயல் பட்டு வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் , இவர்களை தொடர்ச்சியாக ஆள விட்டால் இங்குள்ள திராவிட மாற்று இன மக்களிடம் கையேந்தி பிச்சை கேட்கும் நிலைக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவார்கள் .

தமிழக தமிழர்களையும் , தமிழீழ தமிழர்களையும் காக்க , தமிழர் நாட்டையும் , தமிழீழத்தையும் மீட்க, தமிழர் நாட்டை தமிழர்களே ஆள வைக்க திராவிடத்தை வீழ்த்த வேண்டும் . திராவிட கொள்கையை வீழ்த்துவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

யார் ஆள வேண்டும் என்பதை விட தமிழர் அல்லாதோர் ஆள கூடாது என்பதில் உறுதியாக இருந்து செயல் படுவோம் .

திராவிடம் என்ற ஆலமரத்தை அடியோடு வீழ்த்த நான்கு இன மக்களுக்கான பெரியாரின் திராவிட கொள்கையை வேரறுப்போம் . திராவிட போர்வையில் இருக்கும் ஆரிய கும்பலை கருவருப்போம்...

தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு...


என்று பாடி வைத்தார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை.

ஆனால் இன்றைய தமிழனுக்கு ஜாதி அபிமானம் ஒன்றுதான் தமிழனுக்கான தனிக்குணமாக இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

இந்து மதத்தில் நிலவிய தீண்டாமை, இஸ்லாம் மதம் வந்தது, கிறிஸ்தவம் வளர்ந்தமை

வெளியே தமிழ், தமிழன் என்று பேசினாலும் தமிழர்களின் நடைமுறை வாழ்க்கை ஜாதீய அடிப்படையில் சிக்கி இருக்கின்றது...

தமிழர்களின் வாழ்க்கையில் அறிவுக்கு கொடுக்கும் மரியாதையை விட உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கு அளிக்கும் மரியாதை மிக அதிகம்...


சங்ககால இலக்கியங்களில் காணப்படும் தேவையில்லாத புகழ்ச்சி பாடல்கள் முதல் இன்றைய குத்துப்பாடல்களின் மகிழ்ச்சி வரையிலும்.  இது சரியா? தவறா? என்று யோசிப்பதே இல்லை. தன்னை கவர வேண்டும்.  தன்னுடைய புலன்கள் தூண்டப்படவேண்டும்.  அது திரை என்றாலும், அரசியல் தலைவர்களின் உரையாக இருந்தாலும் சரி?

ஒவ்வொரு தலைவர்கள் இறக்கும் போது நம்மவர்களின் உணர்ச்சி தூண்டுதல் மிக அதிகமானது.

தற்கொலை,தீக்குளிப்பு, சாலை மறியல், சமூகத்தை நிர்கதியாக்கும் அத்தனை சம்பவங்களும் அன்று முதல் இன்றுவரையிலும்.  ஆனால் வெவ்வேறு பெயர்கள்.  தூண்டப்பட்டவனின் குடும்பம் துண்டாக நடுத்தெருவில் நிற்கும்.  அதனால் கிடைத்த ஆதாயத்தை பெற்ற தலைவர் அச்சமில்லாமல் ஆட்சியில் அமர்ந்து இருப்பார்.

இன்றைய இன அழிப்பு போராட்டத்தில் எத்தனை உயிர்கள் மாண்டது? எத்தனை போராட்டங்கள்?  எத்தனை அறிக்கைகள்? எத்தனை எத்தனை மேடைப்பேச்சுகள்?  என்ன முடிவு கிடைத்தது?

தொடக்கத்தில் திரையில் கோலோச்சிய வாழ்ந்த பாகவதர் குறித்து பல கதைகள் இன்னமும் உண்டு.  திருச்சிக்கு வருகிறார் என்றால் காலை முதல் ரயில் நிலையத்தில் காத்திருந்த உணர்ச்சிக்கூட்டம் அது.  தொடர்ந்த கதாநாயகர்கள் முதல் நேற்றைய இடுப்பைக்கிள்ளிய கதாநாயகி வரையிலும் உணர்ச்சி தமிழனாகவே வாழ்ந்து வருகின்றான்.

அறிஞர் அண்ணா அவர்களே "நானும் எம்.ஜி.ஆரும் ஒரே தொகுதியில் போட்டியிட்டால் எம்.ஜி.ஆர் தான் வெற்றி வாகை சூடுவார்" என்று அவர் கூறிய கருத்து இங்கு அத்தனை முக்கியமானது.  காரணம் சங்ககாலம் முதல் நேற்று வரையிலும் அறிவை விட உணர்ச்சிகளுக்கு அதிகம் மதிப்பளிப்பதில் தமிழர்கள் தான் முதன்மையாக இருக்கிறார்கள்.  உள்ளுர் தமிழர்கள் தான் இப்படி என்றால் அக்கரையில் வாழும் தமிழர்கள் இதிலும் இன்று வரையிலும் அந்த உணர்ச்சிகளை அக்கறையாகத் தான் பாதுகாத்து பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

திரைப்பட வெளிநாட்டு உரிமை என்பது ஒரு நடிகருக்கு, தயாரிப்பாளருக்கு ஒரு காமதேனு.  இன்று வரையிலும் இன அழிப்புக்கு என கூட்டப்படும் அத்தனை கண்டன கூட்டங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு நடிகரும் போய் கலந்தே ஆக வேண்டிய கட்டாயம்.  உணர்வு பூர்வமான, நல்ல உள்வாங்கலான எந்த கருத்தையும் எவரும் அங்கு சொல்லிவிட முடியாது.  அந்த தீர்ப்பு நடிகரின் நடிப்பு வாழ்க்கையையே திருத்தி எழுதிய தீர்ப்பாக அமைந்து அவரை திக்குத் தெரியாத காட்டில் நிறுத்தி விடுவது போல் ஆகிவிடும்.

அதனால் தான் நல்ல விசயங்களைத் தேடி படிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வந்தாலும் இன்று வரையிலும் பரபரப்புச் சம்பவங்கள் என்று கட்டம் கட்டிய செய்திகள் , கிசுகிசு செய்திகள் நமக்கு அத்தனை உற்சாகமாய் இருக்கிறது.

விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, நாவலர் நெடுஞ்செழியன், கர்மவீரர் காமராஜ் போன்றவர்கள் தேர்தலில் தோற்றுப் போயிருப்பதை நீங்கள் எந்த வகையில் பார்ப்பீர்கள்? அறிவை விட அன்று தூண்டும் உணர்ச்சிகளுக்குத்தானே நம் தமிழர்கள் மதிப்பு அளிப்பவர்கள் என்பதில் மாற்றம் ஏதும் உண்டா?

அறிவு வசப்படும் மேலைநாடுகளில் வாழும் மக்கள் இதற்கு நேர்மாறாக வாழ்கின்றனர். "வெற்றிச்சின்னம் நமதே"  என்று இரண்டு விரல் காட்டி பிரிட்டன் மக்களை தன்னுடைய ஆளுமையில் வைத்திருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தேர்தலில் ஏன் தோற்கடித்தார்கள்.   ஜப்பான், ஜெர்மனின் தொடர் குண்டு வெடிப்புகளை மிக லாவலமாக கையாண்டு எங்களை, நாட்டை காப்பாற்றியது நீ தான்?  ஆனால் உன்னுடைய ஆளுமை என்பது போருக்கு மட்டுமே சரியானது என்று கருதிக்கொண்ட மக்கள் கொடுத்த பரிசு தான் தோல்வி.

ஆனால் இங்கு ஐந்து வருடங்கள் நேர்மையாக ஆட்சி செலுத்த முற்பட்டாலும் தேர்தலுக்கு பத்துநாட்கள் முன்னால் இயற்கையாக செயற்கையாக இறக்கும் தலைவர் மூலம் அனுதாபத்தின் மூலம் எப்படி மொத்த ஐந்து வருட தியாகமும் அடிபட்டு போகின்றது?

இன்றுவரையிலும் கேரளாவில் நடிகர் என்பவர் அரசியலில் நுழைய வேண்டும் என்று கனவு கூட காண்பது இல்லை.  ஆள்கின்ற ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அடுத்த ஆட்சி நம்முடையது இல்லை என்ற எண்ணத்தில் தான் ஆட்சியில் இருக்கிறார்கள்.  காரணம் அறிவு உந்தப்பட்ட உள்வாங்கல் கொடுத்த பயம் அது.

உலகத்தில் உள்ள அத்தனை இனத்திலும், சமூகத்திலும் நீங்கள் தேடிப்பாருங்கள்.  நம் தமிழனத்தில் உள்ள மேதைகளை விட வேறு எவரையும் நீங்கள் கண்டு விட முடியாது.  இது அதிகப்படுத்தி சொல்லப்பட்டவை அல்ல.  திருவள்ளுவர் ஒருவர் போதும்.  அன்றைய நிலையில் எந்த புத்தகத்தை, எந்த ஆராய்ச்சி நூலை வைத்துக்கொண்டு, குறிப்பு எடுத்துக்கொண்டு மொத்த சமூகத்தின் வாழ்வியலை குறி சொல்பவன் போல் அடியில் நிறுத்தியவர் போல் எவரையும் உங்களால் காட்ட முடியுமா?

விஞ்ஞானம், மெய்ஞானம், அறிவு, ஆட்சி, ஆளுமை, அதிகாரம், களவு, கலவு தொடங்கி அவர் தொடாத துறை உண்டா?  இன்று மேல் நாட்டு அறிஞர்கள் என்று புளாங்கிதம் அடையும் எந்த மேற்கோளும் திருவள்ளுவரின் புலன் அடக்கத்தில் அன்றே கிடைத்த ஞான அறிவு.

முப்பாலையும் உங்களுக்கு தாய்ப்பால் போல் கொடுத்த அத்தனை சுத்தமான பாலையும் நீங்களும் நானும் ஐந்து பத்து மதிப்பெண்களுக்குத் தானே குடித்து வளர்ந்தோம். மேற்கோளுக்காக எடுத்த அத்தனை தமிழின தலைவர்களும், உரை எழுதிய தலைவர்களும் என்ன மாறுதல்களை நமக்கு தந்து விட்டார்கள்?

எத்தனை வருடங்கள் கடந்து போய் விட்டது. இன்னமும் திருந்தாமல் இருந்த காரணத்தால் தானே இன்று ஒரு இனமே முகவரியற்று முள்கம்பிகளுக்குப் பின்னால் திண்டாடிக்கொண்டுருக்கிறது?

மோகம் தரும் கலாச்சாரம்.  ஆடை என்பதை மானத்திற்காக உடுத்திய தமிழ் இனம் இன்று மற்றவர்களை கவனிக்கச் செய்ய வேண்டும் , கவர வேண்டும் என்று "காட்டும் பொருளாக"  மாற்றியுள்ளது.  படையெடுத்து வந்தவர்கள் உருவாக்கிய தாக்கங்கள்.  மதம் என்பது மனிதத்தை விட பெரிது என்று அத்தனை பேர்களை பிரித்தாளும் சக்தியாக மாற்றி உள்ளது.  கடவுள் இல்லை என்பவன் கூட எதையும் உடைத்தாக சரித்திரம் சொல்லவில்லை.  உருவான கலப்பின மக்கள் அத்தனை பேர்களும் மூலம் எது என்பதே தெரியாமல் இடையில் உருவாக்கி சென்றவர்களை தொடர்ந்து உள்ளே தொலைந்தும் போனார்கள். உள்வாங்கவும் அறிவும் வளரவில்லை.

வளர்த்துக்கொண்டவர்களை வாய்ச்சவடால் மூலம் நிர்மூலமும் ஆக்கிவிட்டார்கள்.

குற்ற உணர்ச்சி என்பது தொடக்கத்தில் குறுகுறுப்பாய் இருந்தது.  இன்று "நீ பிழைக்கத் தெரியாதவன்" என்ற மாயையில் கொண்டு நிறுத்தி இருக்கிறது.  நல்ல சிந்தனை என்று நீங்கள் சொல்ல வந்தால் "நாயை விட கேவலமாக பார்க்கப்படும்" ஒரு சமூக கட்டமைப்பு நம்மை சுற்றி எழுப்பப்பட்டு விட்டது.

இதில் சிக்கிக்கொண்டவர்களை வைத்து சித்து விளையாட்டு காட்டிய கூட்டம் தான் இனத்தின் காவலன், இனமான காவலர், புடம் போட வைத்தவர்கள் என்று பட்டங்கள் சூட்டிக்கொண்டு பதவி சுகத்தில் வெந்ததை தின்று விதி வந்து சாகாமல் அழிந்து கொண்டுருக்கும் இனத்தில் அவலக்குரலை ரசித்துக்கொண்டுருக்கிறார்கள்?

"எதையும் காரண காரியத்தை வைத்து சிந்திக்க பழகு" என்று சொல்லிச் சென்ற தந்தை பெரியாருக்கு வேறு என்ன பட்டம் பொருத்தமாக இருந்து விட முடியும்.  நம்பிக்கைகள் என்பது போய் அதுவே மூட தனத்தின் நம்பிக்கையாய் உருமாற்றம் அடைந்த போது அவரின் எரிச்சல் நமக்கு துப்பும் எச்சல் போல் தெரிந்து. ஆமாம் இன்று மூடத்தனம் குறைந்து இருக்கிறதே தவிர முழுமையாக கரைந்து மறைந்து போய்விடவில்லை.

அறிவு உந்தப்பட்ட மக்கள் என்பவர்கள் தான், மனித சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பு உருவாக்கி "வணிக நிர்பந்தங்களுக்கான பின்வாங்கல் ஒப்பந்தம்"  தான் இன்று ஐயாமாரு பச்சேயின் பச்சைக்காரியங்களை பலநாடுகளையும் யோசிக்கும் நிலைக்கும் கொண்டு வந்த தொடக்கப்புள்ளியாக மாற்றியுள்ளது.

நம் இனத்தின் முக்கிய புள்ளிகள் எப்போதும் போல முக்கும் புள்ளியாக இருந்து கொண்டு முழுமையும் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதை அக்கறையாக பாதுகாத்து அக்கரையில் இருப்பவர்களுக்கு சேவை செய்து கொண்டுருக்கிறார்கள்.

மடமை, அறியாமை, அறிவற்ற சிந்தனைகள் எல்லாமே மொத்தமாக வளர்ந்து வளர்ந்து மொத்த சமூகத்தில் தமிழன் என்பவன் உணர்ச்சி தமிழனாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கின்றானே தவிர உண்மைத்தமிழனாக வாழவில்லை.

வாழ முடியாத தூரத்தை விட்டு வெகு தொலைவுக்கு சென்று விட்டான்.  அதனால் தூரத்தில் இருப்பவர்கள் அத்தனை மக்களுமே "ஐயாமாருகளே நீங்கள் அமைதியாக இருந்தாலே நாங்கள் எங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்வோம்.  உங்கள் அக்கப்போர் அறிக்கைகளை வைத்து எங்கள் அவல வாழ்கையை உங்கள் ஆதாரமான அரசியல் வியாபார வாழ்க்கையாக பார்க்காதீர்கள்" என்கிறார்கள்.

குழந்தைகள் பாலூக்கு அழுதால் என்ன?  குலக்கொழுந்துகள் கற்பழிக்கப்பட்டால் என்ன?  தந்திரத்தில் எந்திரமாய் வாழ்பவர்களுக்கு ஏராளமான கணக்குகள் இருக்கும்.  அது நமக்கு புரியாது.

இவர்களின் வழித்தோன்றல்களுக்கு ஒரு நாள் புரியவைக்கும்?

சாபக்கணக்கு என்பது சரித்திரத்தை அவர்களின் மொத்த வாழ்க்கையையும் திருப்பி போடும் கணக்கு...

இதெல்லாம் நம் தமிழ் நாட்டில் தான்.. ஆனால், தமிழனுக்கு மட்டும் பேரு சாதி வெறியன்...


இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் - 3..


அடுத்த ஆதாரமாக சொல்லப்படுவது மார்க்சின் The Communist Manifesto. Brussels இருந்த மாசானிக் குழுவின் (சாத்தானிய வழிபாடு செய்யும் குழு) தலைவர் Ragon, 1843 ஜூலை 5-ல் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோவிற்கு உரிய வரைவு அறிக்கையை தயார் செய்து பெல்ஜியத்திலிருக்கும் தலைமைக்கு (Supreme Conseil de Belgique) அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

தலைமை Ragon-னின் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. அது தொடங்கி இந்த புத்தகத்தை எழுத்து வடிவில் கொண்டுவருவதற்கு முயற்ச்சிகள் நடந்துவந்திருக்கிறது.

இந்த நிலையில் Brussels இருக்கும் lodge Le Socialiste மாசானிக் குழுவில் மார்க்ஸ் உறுப்பினராக சேருகிறார்.

இது நடந்தது 1845 நவம்பர் 17-ல் என்று சொல்லப்படுகிறது.

மார்க்சின் திறமை வெகு சீக்கிரத்திலேயே புரிந்துக் கொள்ளப்பட கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டைவை பதிப்பிக்கும் வேலை அவரிடம் கொடுக்கப்படுகிறது.

Hess-ன் பத்திரிக்கையில் அவர் ஆசிரியராக இருந்ததும் ஒரு காரணம்.

மார்க்ஸ் 1848-ல் The Communist Manifesto-வை மாசானிக் குழுவின் சார்பாக வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

இது மாத்திரம் அல்ல மார்க்சும் ஏங்கல்சும் freemasonary-யின் 31st degree உறுப்பினர்களாகவும் இருந்ததாக அந்த ஆதாரங்கள் சொல்கின்றன.

(Freemasonary போன்ற இரகசிய சாத்தானிய வழிபாட்டு குழுக்களைப் பற்றி வரலாற்று தோற்றங்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள என்னுடைய மின்னூல் ‘இலுமினாட்டி உலக தீமைகளின் ஊற்றுகண்?’ படிக்கலாம்).

மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் சாத்தானிய வழிபாடு இரகசிய குழுக்களின் தொடர்பு இத்துடன் நிற்கவில்லை. இருவரும் 1847 வாக்கில் இலுமினாட்டிகளின் மற்றொரு இரகசிய கிளைக் குழுவான The League of Just Men-லும் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த குழுவின் முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் Jakob Venedey. இந்த குழு 1836-ல் பாரிசில் நிறுவப்பட்டது.

இதை நிறுவியவர்கள் தங்களை புரட்சிகர யூத சோசலிஸ்டுகள் என்று அறிவித்துக்கொண்டார்கள்.

இந்த குழு தொடக்கத்திலிருந்தே ஐரோப்பிய அரசாங்கங்களை கவிழ்க்கும் வேலைகளில் ஈடுபட்டதாக உதாரணங்கள் காட்டப்படுகிறது.

இத்தகைய முயற்ச்சிகள் தோல்வியில் முடிந்த காரணத்தால்தான் இலுமினாட்டி தலைமையும் The League of Just Men குழுவும் மிக வலுவான கருத்தியில் பின் புலத்தை தேடியிருக்கிறார்கள்.

அந்த கருத்தியலை கண் மூடித்தனமாக பின்பற்றும் பெரும் கூட்டமும் வேண்டும் அதே சமயத்தில் அது சட்ட விரோதமான கூட்டமாகவும் இருக்க கூடாது என்கிற அவர்களின் வேண்டுகோளைத்தான் மார்க்கசு தன்னுடைய கம்யூனிசமாக வளர்த்தெடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

முன்பே சோசலிசத்தை தங்களுடைய சுயநலத்திற்கு அடிப்படையாக கொண்டிருந்தவர்களின் கண்களில் பட்டது பாட்டாளி வர்கம்.

இலுமினாட்டிகளின் மேலே நாம் பார்த்த அனைத்து விதமான Terms&Conditions-களுக்கும் சரிபட்டு வரக் கூடியவர்களாக கண்களில் அகப்பட்டவர்கள் பாட்டாளிகள். அவர்களை குறிவைத்தே மார்க்சு இலுமினாட்டிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டு பிறகு தோன்றியதே கம்யூனிசம் என்றும் ஆதாரங்களை காட்டுகின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்.

மார்க்சின் வழிகாட்டி Moses Hess இதற்கு முதல் கட்டமாக முன்வைத்த யோசனை The League of Just Men குழுவையே முதல் கம்யூனிஸ்ட் கட்சியாக (Communist Party) மாற்றிவிடுவது என்பது. அதுவும் நடந்தது 1847 நவம்பரில்..
                                   
- தொடரும்.....

வரி செலுத்தும் ஏழை மக்களை நினைக்கும் போது தான் இரத்த கண்ணீர் வருகிறது......


பூமியின் (அ)பூர்வ கதை - 2...


பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்...

இளம் வயதில் ஆர்ப்பாட்டமும் அதிரடியாகவும் நடந்து கொண்டு வயது செல்ல செல்ல சொல்லில் செயலில் நிதானம் பிறந்து அமைதியாகி பிறகு வயதாக வயதாக சாந்த சொரூபியாக மாறும் ஒரு மனிதனை போல தான்...

வெறும் நெருப்புகோளமாக தன் சூரிய தந்தை இடம் இருந்து பிரிந்து வந்த பூமி ஆரம்பத்தில் வெறும் வாயுவாக நெருப்பாக இருந்து படிப்படியாக குளிர்ந்து..

இறுகி உறுதியாகி அமைதியாகி கடல் மலை காடு என படி படியாக பசுமையானது.

பிறந்த குழந்தை'யாக நாம் பூமியை பார்ப்பதற்கு நாம்  கற்பனை  கால இயந்தியந்திரத்தில்  பெட்ரோலை முழுதாக நிரப்பி கொண்டு (நீண்ட பயணம் பா..) இன்றையலிருந்து 460 கோடி ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்.

நான் உங்களை இனி கூட்டி செல்ல இருப்பது ஒரு நீண்ட நெடிய பயணம். பூமியின் 460 கோடி வரலாற்றை பார்க்க போகும் நெடிய பயணம். அதை கால இயந்திரத்தை கொண்டு வேகமாக ஓட்டி மொத்த வரலாற்றை ஒரு சுருக்க பார்வை பார்க்க இருக்கின்றோம். எனவே  கவனமாக பின்தொடர்ந்து வாருங்கள்.

முதல் பயணமாக ஆரம்ப பூமியை அருகே சென்று பார்ப்போம்.

ஆனால் அதற்க்கும் முன்  ஒரு சின்ன அவசர வேலை உள்ளது.. அது அந்த பூமி குழந்தையின் பிளாஷ் பேக்.. அது எப்படி எப்போ எதனால் பிரசவிக்க பட்டது சுற்றுகிற ஆற்றல்... சுழலும் ஆற்றல் எல்லாம் அதற்க்கு கொடுத்தது யார் என்ற ஆரம்ப முன்னுரை கதைகளை தெரிந்து கொண்ட பின் தான் பூமியின் வரலாற்று பாதையை ஆராய முடியும்.

எனவே அதை தெரிந்து கொள்ள நாம் நமது கால இயந்திரத்தை இன்னும் இன்னும் பின்னால் பயணிக்க செய்ய வேண்டும். அதாவது கிட்ட தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்கும் முன்.

இன்றையலிருந்து கிட்ட தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சம் இருந்திருக்க வில்லை. அது ஒரு அணுவினும் சிறிய இடத்தில சுருங்கி கிடந்து திடீரென ஒரு நாள் இன்று காணும் பிரபஞ்ச அளவாக விரிவடைந்தது. அந்த பெரும் வெடிப்பின் பெயர் பிக் பாங். அது நடந்த ஆரம்ப கணங்களில் பிரபஞ்சம் முழுதும் நிரம்பி இருந்தது ஆற்றலும் அணுக்களும் மட்டும் தான்.

நாம் இன்று பாட்டு பாட ஓட்டம் ஓட வண்டி ஓட்ட ராக்கேட் ஓட்ட தொழிற்சாலைகளை இயக்க பேச.. நடக்க.. வாழ... அல்லது நிலவு அல்லது பூமி வின்வெளியில் பாய்ந்து ஓட என்று நமக்கு தெரிந்த எல்லாவிதமான ஆற்றல்களும் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த பிக் பாங் இன் ஆரம்ப இரண்டு மணி நேரங்களில் உண்டான ஆற்றல்கள் தான். இன்று வரை அந்த ஆற்றல்கள் தான் மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கி கொண்டு இருக்கிறது.

ஆரம்பங்களில் வெறும் ஆற்றலும் அணுக்களுமாக இருந்த பிரபஞ்ச துளிகள் ஆரம்ப கணங்களில் இருந்த  ஹைட்ரஜன் அணுக்களை மிகுந்த ஆற்றலுடன் அழுத்தத்துடன் ஒன்றிணைத்து ஹீலியமை உற்பத்தி செய்தன கூடவே அளப்பரிய ஆற்றலையும். இந்த செயல் முறையினால் முதல் நட்சத்திரம் பிறந்தது பிறகு பிரபஞ்ச தோட்டத்தில் திடீரென லைட் போட்டாற்போல ஆங்காங்கே நட்சத்திரங்கள் ஒளிர தொடங்கியது. அந்த நேரங்களில்  இந்த நட்சத்திரங்களில் உள்ளே என்ன நடந்து கொண்டிருந்தது என்று எட்டி பார்த்தால்  ஹைட்ரஜன் ஹீலியமாக மாறியதை போல மேலும் அணுக்கரு இணைவுகள் நடைபெற்று மேலும் கனமான தனிமங்களை உண்டு பண்ணிகொண்டிருந்தது.

உயிர்களுக்கு அடிப்படையான கார்பன் தொடங்கி நாம் கட்டிடங்கள் கட்ட தேவையான இரும்புகள் முதலிய தனிமங்கள் உண்டானது அப்போது தான்.

ஆனால் யுரேனியம் தங்கம் போன்ற மேலும் கணமுள்ள தனிமங்கள் உண்டாக இவைகளின் ஆற்றல் போதவில்லை . அதன் பிறகு தான் நட்சத்திரங்கள் பேராற்றலுடன் வெடித்து சிதற தொடங்கின. அந்த நிகழ்வுக்கு பெயர் தான் சூப்பர் நோவா.

சூப்பர் நோவாவின்  ஆற்றலில் இணையும் அணுக்கள் யரேனியம், தங்கம்  போன்ற கனமான தனிமங்களை உண்டு பண்ணின. அடுத்த 800 கோடி ஆண்டுகளுக்கு அதன் வேலை தனிமங்களை உண்டு பண்ணுவதாக தான் இருந்தது. புதிய புதிய தனிமங்களை உண்டு பண்ணும் தொழிற்சாலைகளாகவே இவைகள் செயல்பட்டு வந்தன.

பிறகு சூப்பர் நோவா அழிவு மற்றும் புதிய நட்சத்திர பிறப்பு என்று மாறி மாறி நடந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தான்.. இன்றையில் இருந்து கிட்ட தட்ட  460 கோடி ஆண்டுகளுக்கு முன் நமது சூரியன் தோன்றியது.

வான வெளியில் பரவி இருக்கும் ஹைட்ரஜன்கள் குறிப்பிட்ட ஈர்ப்பில் அழுத்தத்தில் இனைந்து சூரியனாக மாறுகிறது. அந்த நிகழ்வில் தன்னில் சிதறிய துணுக்குகளை தனது ஈர்ப்பு விசையால் தன்னை சுற்றி வலம் வரும் படி செய்கிறது. அந்த எரியும் வாயு துண்டுகள் கால போக்கில் குளிர்ந்து இறுகி தனக்குள் கொண்ட கனமான தனிமங்களால் கட்டியாகி பிற்காலத்தில் 'கிரகங்கள் ' என்று அழைக்க படுகின்றன.

தனது மொத்த சூரிய குடும்பத்தின் நிறையில் 99.8 சதம் நிறை சூரியனுடையது. அந்த ஆரம்ப கணத்தில் மற்ற கிரகங்களில் நடந்து கொண்டிருந்தது என்ன என்பதை பார்த்து கொண்டிருந்தால் நமது கட்டுரையின் திசை மாறி விடும் என்பதால் சூரியனில் இருந்து மூன்றாவதாக சுற்றி கொண்டிருக்கும் மிகுந்த வெப்பம் பொருந்திய உருகி ஊற்றும் பாறைகளை கொண்ட பார்க்கவே பயங்கரமாக இருக்கும் அந்த  பந்தை மட்டும் அருகில் சென்று அதில் நடக்கும் நிகழ்வுகளை.. மாற்றங்களை.. வரலாறுகளை  கவணிப்போம். காரணம் பிற்காலத்தில் அது தான் நம்முடைய சொர்க்க பூமி யாக மாற இருக்கிறது. இந்த உருவாக்கம் நடக்கும் கால கட்டத்தில் பிரபஞ்சதின் மொத்த வரலாற்று காலத்தில் 3 இல் 2 பங்கு காலம் உருண்டு ஓடி விட்டிருந்தது.

ரைட் இனி கால இயந்திரத்தை நேரே பூமிக்கு விடுப்பா.....

- பூமி இன்னும் சுழலும்...

இது தான் சார் இந்தியா....


அதிமுக எடப்பாடி அரசிற்கு விரைவில் ஊஊஊ...


ப்ளஸ் 2 தேர்வின் வின் மொத்த மதிப்பெண் 600 ஆக குறைப்பு , ஒவ்வொரு பாடத்திற்கும் இனி 100 மதிப்பெண் வினாத்தாள்...


90 சதவிகித கேள்விகள் பாடபுத்தகத்தில் இருந்தும் 10 சதவிகித கேள்விக் மாணவர்களின் அறிவுத் திறனை பரிசோதிக்கும் பொது கேள்விகளாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசானை இன்று அல்லது நாளை வெளியிடப்படவுள்ளது...