26/08/2018

வக்கிரம் (Perversion) என்றால்...


நீ, உன் விழிப்புணர்வை இழந்துவிட்டு,

மனித இனத்திற்கு கீழே ஏதோ ஒன்று போல நடந்து கொள்கிறாய் என்று பொருள்.

இந்த திறமை மனிதனுக்கு மட்டுமே உரித்தானது

அவன் விழுந்து விலங்குகளுக்கும் கீழாக நடந்து கொள்ளலாம்.

எழுந்து, கடவுள்களுக்கு மேலாகவும் ஆகலாம்.

மனிதனுடைய பெருமையும், துன்பமும் இதுதான்.

இதுதான் அவனுடைய வேதனையும் பரவசமும்கூட.

இருப்பதிலேயே ஆழமான நரகத்தையும், மிக உயரத்திலிருக்கும் சொர்க்கத்தையும் அடையும் திறமையுள்ள ஒரே மிருகம்,

ஒரே உயிரினம், இந்த உலகத்திலேயே மனிதன் தான்...

தமிழர்கள் இழந்த பகுதிகள்...


1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி...

2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி..

பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டு வரும் பகுதி.

பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டு வரும் அந்தமான்-நிகோபர் தீவுப்பகுதிகள்.

இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும்.

இது துல்லியமானதென்று கூறிவிட முடியாது, ஆனால் இதில் மிகச்சிறிய திருத்தங்களே ஏற்படும் என்று உறுதி கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, இதில் திருவனந்தபுரம் சேர்க்கப்படவில்லை; ஆனால், திருவனந்தபுரம் தமிழர் பெரும்பான்மை பூர்வீக மண்ணே ஆகும்.

தனிநாடு கோரும் அத்தனைத் தகுதியும் நமக்கு உள்ளது.

புரியும்படி கூறினால் தமிழருக்குத் தனிநாடு கோரும் தகுதி இல்லையென்றால் இவ்வுலகில் எந்த இனத்தினருக்கும் அத்தகுதி இல்லை.

அத்தகுதிகளாவன - வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அதில் நீண்ட நெடிய இனவரலாறு மற்றும் வரலாற்றுச் சான்றுகள், தனித்தன்மையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள், திருமணச் சடங்குகள், ஈமக்கடன்கள், பழமொழிகள், சொலவடைகள், செவிவழிக் கதைகள், பண்டைய நிர்வாகமுறை, நகர்க்கட்டமைப்பு, பண்டிகைகள், கேளிக்கைகள், உடற்கூறு, தோற்றம், உறவுமுறைகள், சமூகக்கட்டமைப்பு, தொழில்முறைகள் ஆபரணங்கள் மற்றும் உடையமைப்பு.

தனித்தன்மையுடைய இசை, கலை, நடனம், இலக்கியம், காப்பியங்கள்; கனிசமான எண்ணிக்கை, சுற்றிலும் கலாச்சார, மொழி, தோற்ற ஒற்றுமை கொண்ட வேற்றின மக்கள்..

ஈழம்.. ஒரு முன்னோட்டம்...

ஒட்டு மொத்தத் தமிழருக்கும் ஒரு முக்கியமான பாடம்..

ஈழ மக்கள் அடக்குமுறைக்கு அடி பணியாது போராடிவரும் வீரமறவர்கள்.

தமிழினத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நம் முன்னே வாழும் முன்மாதிரிகள்.

தமிழினம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது, வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம், அழிவுகளைத் தாங்கியபடி முன்னகரும் விடாமுயற்சி, சரியானத் தலைவனைத் தேர்ந்தெடுப்பது அவன் பின்னிற்பது, உலகம் முழுவதும் பரவிய தமது சொந்தங்களை ஒன்று திரட்டுவது, உலகையே வியக்கவைக்கும் சாதனைகள் மற்றும் தாய்மொழித் தமிழ் மீதான பற்று ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள்.

ஆயிரம் இன்னல்கள், பிரிவினைகளை மீறி இனவுணர்வுடன் உறுதியாக தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களிடம் உலகத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.

ஈழத்தில் நடந்த அத்தனையும் தமிழ்நாட்டிலும் நடந்தே தீரும்.
இது உறுதி...

சுப்பரமணியன் - முருகனின் தமிழ்ப்பெயரே தவிர வடமொழிப்பெயர் அல்ல...


முருகன், வேலன், சரவணன்,  வடிவேலன், குமரன், செந்தூரன்  போலவே சுப்பிரமணியன் என்ற பெயரும் தமிழ்ப்பெயரேயன்றி வடமொழிப் பெயர் அல்ல, அது வடமொழியாக்கப்பட்டது.

உதாரணமாக, சென்னையில் கலாசேத்திரப் பார்ப்பனர்கள் எவ்வாறு தமிழர்களிடமிருந்து சதிராட்டத்தை இரவல் வாங்கி, அதற்கு மெருகூட்டி, அதற்குப் பரதம் என்று பெயரிட்டு விட்டு, அதை வடநாட்டுப் பரதமுனிவர் உருவாக்கியதாக கதை விட்டது  மட்டுமன்றி,  அதற்கு எவ்வாறு  பாவம், தாளம், ராகம் என்றெல்லாம் அர்த்தம் கற்பித்தார்களோ, அவ்வாறு தான் முருகனின் இன்னொரு தமிழ்ப்பெயராகிய சுப்பிரமணியன் என்ற பெயருக்கும் சமக்கிருதத்தில் பல கருத்துக்களைக் கற்பித்தனர்.

சுப்பிரமணியன் என்ற முருகனின் பெயர் தமிழா அல்லது வடமொழியா என்பதை நான்  தமிழாசிரியருடனும், வேறு பலரிடமும் முன்பே விவாதித்திருக்கிறேன்.

அவர்களுடைய கருத்துடன்,  சமக்கிருதம் என்று கருதப்படும் பல சொற்கள் உண்மையில் தமிழ்ச்சொற்களே என்பதை தமிழர்கள் அறியும் வகையில் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பலரது கருத்துகளின் தொகுப்பே இதுவாகும். சுப்பிரமணியம் என்பதற்கு சமக்கிருத வாதிகள் கூறும் கருத்துக்களுடன் ஒப்பிடும் போது தமிழில் அதன் கருத்து தான் பொருத்தமானதாக எனக்குப் படுகிறது.

Subramaniam (Tamil: சுப்பிரமணியம் or சுப்ரமணியம்; Telugu: సుబ్రహ్మణ్యం) is a South Indian name. It is also be spelled Subramanian or Subramanyam. The name is derived from merging two common Sanskrit/Tamil words supri-ya (सु), meaning "good" or "dear," and mani-ya, meaning jewel; the name translates loosely as "worthy jewel". Other mistranslations such as "dear to Brahmins" are widespread.

சுப்பிரமணியன் என்பது சுப்பிரியா என்ற சமக்கிருதச் சொல்லும் மணி என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து உருவாகிய பெயர் என்கிறது விக்கிப்பீடியா.

தமிழில் சுப்பிரமணியன் எனும் முருகனின் பெயரின் கருத்தைப் பார்ப்போம்:

சு(ல்) + பரம் + அணியன் = சுப்பரமணியன் =  ஒளிரும் + கடவுள் + நெருங்கியவன் = (தமிழர்களுடைய) நெருக்கமான ஒளிரும் கடவுள் = முருகன்

சுல்:

தமிழில் சுல் என்பது ஒளிப்பொருள் கொடுக்கும் வேர்ச்சொல்.

சுல்3 (சிவத்தற் கருத்துவேர்)

பரம்:

தமிழில் பரம் என்பது பரம்பொருள் (கடவுளைக் ) குறிக்கும்

பரம் > பரமன்
பரம் என்ற சொல் தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டு சமக்கிருதத்தில்  பிரம் ஆகியது.

பரமன் (தமிழ்) – பிரமன் (சமக்கிருதம் )
பரமம் > பிரமம்
பரமண்ணர் > பிரமண்ணர் > பிராமணர்
பரம் + சாதம் (சத்து (மென்மை) என்ற தமிழ்ச்சொல் (சோறு) = பிரசாதம் (கடவுளுக்குப் படைத்த சோறு)
பரம் +அரசு +அதி +பதி = பிரசாதிபதி = பிரம்மம்

அணியன்:

தமிழில் அணியன் என்றால்  நெருங்கியவர் (பிடித்தமானவர்)  எங்களுடையவன், சொந்தக்காரன், என்று பொருள் படும்.

"நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு."     (நாலடியார் 218)

(பொ-ள்.)நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின் சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிக நெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவி செய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?; சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு - கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்த இயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும் அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும்.

"சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்". (திருவாய்மொழி)

தமிழ்க் கடவுளாகிய முருகனின் பெயர்களில் ஒன்றாகிய சுப்பிரமணியன் என்ற பெயர் தான் பார்ப்பனர்களின் மத்தியிலும், தமிழர்களல்லாத திராவிடர்கள் மத்தியிலும் பரவலாக வழக்கத்தில் உள்ளது.

அதனால் சிலர் அதை சமக்கிருதப் பெயர் எனவும், பார்ப்பனீயம் முருகனை சுப்பிரமணியன் ஆக்கி விட்டது, அதனால் சங்ககாலத்தில் தமிழர்கள் வெறியாடல் ஆடி வணங்கிய அந்த முருகன் வேறு, இன்றைக்கு தமிழ்நாட்டில் குன்றுகள் தோறும் குடியிருப்பது மட்டுமன்றி, ஈழத்திலும், ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் கோயில் கொண்டிருக்கும் தமிழ்க்குமரனுக்கும் தொடர்பு கிடையாது என்பது போல உளறத் தொடங்கி விட்டார்கள்.

கதிர்காமத்தில் முருகன் இயந்திர வடிவில் இருப்பதால் அங்கு சிலைகள் கிடையாது, ஆறுமுகங்களுடன் கூடிய திரைச்சீலை மட்டும் தான் தொங்குகிறது. அந்த திரைச்சீலையில் கந்தபுராணம் கூறும் ஆறுமுகப்பெருமான் மட்டும் அங்கே காணப்படுவதால், ஆதித்தமிழர்களின் கடவுளாகிய முருகன் அங்கு கிடையாது, அதனால் தமிழர்களுக்கும் கதிர்காமக் கந்தனுக்கும் எந்த தொடர்புமில்லை, என்று கூறினால், அது எவ்வளவு அபத்தமானது என்பதை சிலர் உணர்வதேயில்லை. தமிழர்களின் வழிபாட்டில், அவர்களின் பாரம்பரியத்தில் பார்ப்பனீயம் பல மாற்றங்களை ஏற்படுத்தி, உருமாற்றி விட்டது என்பதை மறுக்க முடியாது.

அதே வேளையில் சங்ககால முருகன் தான் தமிழர்களின் முருகன், இன்றைக்குச் திருச்சீரலைவாயிலில் சுப்பிரமணியன் என்ற பெயருடன் நிற்கும் முருகன், ஆதித்தமிழர்கள் வணங்கிய உண்மையான முருகனல்ல என்று சிலர் கூறுவது, முருகனை வணங்கும் பெரும்பான்மை தமிழர்களை அவமதிக்கும் அதிகப்பிரசங்கித்தனமாகும்...

குட்நைட், ஆல்-அவுட்டுக்கு டாட்டா... இதோ, கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க... இயற்கை வழிகள்...


நாம் வீடுகளை சுத்தமாக வைத்திருந்தாலும், சுற்றுப்புறம் தூய்மையின்றி இருக்கும்போது, வீடுகளில் கொசுக்கள் மற்றும் பூச்சித்தொல்லைகள் ஏற்பட்டு, கொசுக்கடியினால் வேதனையும் தூக்கமின்மையும், பூச்சிகளினால் ஆரோக்கிய பாதிப்பும், அருவருப்பும் ஏற்படுகின்றன. எப்படி ஒழிப்பது இந்த தொல்லைகளை?

நாம் தனி வீட்டில் வசித்தாலும் குடியிருப்புகளில் இருந்தாலும், சில எளிய வழிகளில், வீடுகளில் மூலிகைச்செடிகளை வளர்ப்பதன் மூலம், கொசு மற்றும் பூச்சிகளை அழித்து, நிம்மதியடையலாம்.

துளசி...

ஆன்மீகத்தில் மிக உயர்ந்த செடியான துளசி, மனிதர்களின் உடல் நலத்தைக் காக்கும் அருந்தன்மை நிறைந்தவை என்பதை நாமறிவோம். அவை, வீடுகளில் உள்ள பூச்சிகளையும் விரட்டும் என்பதை நாமறிவோமா?

துளசிச்செடிகளை துளசி மாடத்தில் மட்டுமன்றி, தோட்டங்களில், வீடுகளின் ஜன்னலோரங்களில் வைத்து வளர்த்து வர, கொசு மற்றும் பூச்சிகள் விலகும். மாலை வேளைகளில் வாரமொரு முறை, காய்ந்த துளசி இலைகளைக் கொண்டு, புகை மூட்டம் வீடுகளில் இட்டு வரலாம்.

தும்பை...

தும்பை, உடலுக்கு நன்மை தரும் அருமையான மூலிகை, கண் பார்வைக்கு சிறந்த வளம் தரும். தும்பைச்செடிகளை வீடுகளின் தோட்டங்கள் மற்றும் வாய்ப்புள்ள இடங்களில் வளர்த்துவர, பூச்சிகள் வீட்டை அணுகாது.

தும்பை இலைகளை அரைத்து, உடலில் தடவி உறங்க, கடிக்க வரும் கொசுக்கள் விலகி ஒடி விடும்.

தும்பை இலைகளை அரைத்து, அவற்றை வெயிலில் உலர்த்தி, மாலை வேளைகளில் வீடுகளில் புகை மூட்டம் போட்டு வர, கொசுக்கள் மற்றும் பூச்சிகள் அழிந்துவிடும்.

பேய் மிரட்டி...

தும்பை செடியினத்தில் ஒன்றான பெருந்தும்பை எனும் பேய்மிரட்டி, சிறந்த கிருமிநாசினி மற்றும் கொசு விரட்டியாகும். மருத்துவ நன்மைகள் மிக்க பேய் மிரட்டி செடிகளை வீட்டின் தோட்டத்தில் வளர்த்து வரலாம், பேய் மிரட்டி இலைகளை நன்கு நீரில் அலசி, அந்த இலைகளை விளக்கு திரி போல சுருட்டி, சிறிய விளக்கில் விளக்கெண்ணை ஊற்றி அதில் இலைத்திரியை இட்டு பற்றவைக்க, பச்சை இலை திரி, பளிச்சென எரியும். மாலை வேளைகளில் இந்த விளக்கேற்றி வர, வீடுகளில் உள்ள கொசுக்கள் மற்றும் நச்சுப்பூச்சிகள் விலகி ஒடிவிடும். மேலும், வீட்டில் நேர்மறை எண்ணங்களை ஓங்கச்செய்யும் ஒரு அற்புத ஒளியும்கூட, இந்த பேய்மிரட்டி திரி விளக்கு!

புதினா...

புதினா, உடல் நலத்திற்கும், மன வளத்திற்கும் உற்சாகம் தரும் ஒரு வாசனை மூலிகை, இந்தச்செடியை வீடுகளில் வளர்த்துவர, பூச்சிகள் அண்டாது. இதன் வாசனைக்கு கொசு, வீட்டுப்பக்கம்கூட நெருங்காது. வீடுகளில் உள்ள கொசுக்களை ஒழிக்க, புதினாவில் இருந்து எடுக்கப்படும் மெந்தால் தைலத்தை சில துளிகள் நீரில் இட்டு, அந்த நீரை, ஒரு சிறிய ஸ்பிரேயர் மூலம், படுக்கையறையில் தெளித்துவர, கொசுக்கள் ஓடிவிடும்.

நூறு ரூபாய் செலவுசெய்து வாங்கி, வீடுகளில் மின்சாரத்தில் பொருத்தும் கொசு விரட்டி எண்ணைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை.

ஒரு ரூபாய்கூட செலவு வைக்காத இந்த மூலிகைகள், நமக்கு தரும் பலன்கள், ஏராளம்.

இதே போல இன்னும் சில மூலிகைச் செடிகளை, நாம் வீடுகளில் வளர்த்து வரலாம்.

பூண்டு...

வெங்காயம் போலே, வேரிலே காய்க்கும் பூண்டுச்செடிகளை வீடுகளில் தோட்டங்களில் வளர்த்து வரலாம். பூண்டின் வாசத்திற்கு கொசுக்கள் காத தூரம் ஓடிவிடும். பூண்டை நசுக்கி, அந்தச் சாற்றை சிறிது நீரில் கலந்து, அதில் ஒரு சிறிய பருத்தித் துணியை நனைத்து, வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பாத்ரூம் டாய்லெட் வெண்டிலேட்டர் அருகில் கட்டி வைத்து வர, கொசுக்கள் வீட்டை எப்போதும் நெருங்காது. பூண்டுத் தைலமும் உபயோகித்து கட்டலாம்.

துளுக்க சாமந்தி செடி...

மேரிகோல்ட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துளுக்க சாமந்தி செடியை, தோட்டங்களில் வைத்துவளர்க்கலாம், வீடுகளில் வைத்தும் வளர்க்கலாம். மேரிகோல்ட் செடி மருத்துவப்பலன்கள் கொண்டவை, அழகுமிக்க இவற்றின் மஞ்சள் வண்ணப்பூக்கள், காண வசீகரமாக இருந்தாலும், இவற்றின் நறுமணம் சற்றே மூக்கைத்துளைக்கும் நெடியுடன் விளங்கும். இந்தச்செடியை வீடுகளில் தண்ணீர் தேங்கும் இடங்களில் வளர்த்துவர, அவை கொசுக்களின் வளர்ச்சியைத்தடுத்து, அழிக்கும் தன்மையுடையவை. இதர பூச்சிகள் நாளடைவில் முற்றிலும் நீங்கி விடும்.

வேறு சில செடிகள்...

இதுபோல மேலும் சில செடிகளை, வீடுகளில் வளர்த்து வர, பூச்சிகள் மற்றும் ஈக்கள், கொசுக்கள் ஓடிவிடும்.

ரோஸ்மேரி செடி - வீட்டில் வளர்க்க ஏற்ற செடி, இதன் எண்ணை கொசுக்களை விரட்டும், உடலிலும் தடவிக் கொள்ளலாம்.

சிட்ரோனெல்லா புல் - இந்தப் புல் வகையை வீடுகளில் வளர்த்து வரலாம்., தொற்று ஜுரத்தை ஏற்படுத்தும் கொசு இனத்தை அழிக்கும் ஆற்றல் மிக்கது. நறுமணமிக்க இதன் எண்ணை, பலவித வாசனை திரவியங்கள் மற்றும் மெழுகு தயாரிப்பில் பயனாகிறது. இதன் எண்ணையை உடலில் தடவி வர, கொசுத்தொல்லை விலகும்.

காட்னிப் செடி - புதினா போன்று மின்ட் குடும்பத்தைச்சேர்ந்த செடியான காட்னிப், கொசுவை விரட்டுவதில், சிறப்பானது. வீடுகளில் வளர்த்து, இதன் இலைகளை அரைத்த சாற்றை அல்லது எண்ணையை உடலில் தடவிவர, கொசுக்கள் ஓடிவிடும்.

கற்பூரவல்லி - அநேகம்பேர் வீடுகளில், சதைப்பற்று மிக்க இலைகளைக் கொண்ட ஓமவல்லி எனும் செடிகள் இருக்கும் அதன் மறுபெயர்தான், கற்பூரவல்லி. இருமல் ஜலதோஷம் போக்கும் இந்தச்செடியிலிருந்து எடுக்கப்படும் தைமால் எனும் தைலத்தை, உடலில் தடவி வரலாம் அல்லது புகை மூட்டம் போட, கொசுக்கள் ஓடிவிடும்.

காயகற்ப வேப்பமரம் - வேப்பமரம், கிருமிநாசினி, கொசுக்களை விரட்டும், வேப்பெண்ணையில் விளக்கேற்றிவர, கொசுக்கள் ஓடிவிடும். வேப்பிலைகளை காயவைத்து வீடுகளில் மூட்டம் போட, கொசுக்கள் உள்ளிட்ட பூச்சிகள் ஓடிவிடும்.

லாவெண்டர் செடி - புதினா...

குடும்பத்தைச்சேர்ந்த லேவெண்டர் செடிகளும், வீடுகளில் வளரும் தன்மைமிக்கது, இதன் வாசனை எண்ணை, சென்ட் மற்றும் முக அழகு சாதனங்களில், நறுமணத்திற்காக சேர்க்கப்படுகின்றன. இதன் எண்ணையை உடலில் தடவிவர, கொசுக்கள் நெருங்காது.

லெமன் பாம் - புதினா...

குடும்பத்தைச்சேர்ந்த மற்றொரு செடியான லெமன் பாமின் தைலமும், கொசுக்கடியை விரட்டும். வீடுகளில் வளர்த்து வரலாம்.

இந்தச் செடிகளைப் பற்றி அறிந்துகொண்டாலும், அவற்றை வீடுகளில் வளர்க்க வாய்ப்புகள் இல்லை, நாங்கள் எப்படி, கொசு,எறும்பு மற்றும் பூச்சிகள் தொல்லைகளில் இருந்து விடுபடுவது, என்கிறீர்களா?

எறும்புகளை விரட்ட...

வீடுகளில் தொல்லை தரும் எறும்புகளை விரட்ட, ஒரு எளிய வழி இதோ...

வீடுகளில் உணவுப்பாத்திரத்தை அடுப்பறையில் வைக்கமுடியாதபடி, எங்கிருந்தோ வரும் எறும்புக்கூட்டம், உணவில் கலந்து, நாம் உணவைப்பயன்படுத்த இயலாத சூழலை ஏற்படுத்திவிடும். காய்ச்சிய பால், தயிர், சர்க்கரை, இனிப்புகள் போன்ற அனைத்து பொருட்களிலும் அவை ஏறி, நமக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிடும்.

இதுபோன்ற சிரமம் தரும் எறும்புத்தொல்லைகளை உடனே போக்க, வீடுகளில் உள்ள பெருங்காயம் மற்றும் கிராம்பு இவற்றை அரைத்து தூளாக்கி, அந்தத்தூளை, எறும்பு பாதிப்புள்ள இடங்களில் இரவில் தூவி வர, காலையில் எறும்புகள் விலகி, இடம் தூய்மையாகி விடும். இந்தத்தூளை சிறிது நீரில் கலந்து,. அதை எறும்பு உள்ள இடங்களில் தெளித்து வர, எறும்புகள் ஓடிவிடும்.

பூச்சிகளை விரட்ட...

சில வீடுகளில் கரப்பான் மற்றும் பூச்சிகள் தொல்லை, பாத்ரூம் மற்றும் டாய்லெட்களில் அதிகம் காணப்படும், இந்த பாதிப்பைத்தீர்க்க, குழந்தைகளின் உடல்நலம் காக்கும் வசம்பு, உதவி செய்யும்.

வசம்புத்தூளை, இரவில் மேற்கண்ட இடங்களில் நன்கு தூவிவிட்டு, காலையில் சென்று பார்த்தால், ஒரு பூச்சியும் அங்கு இருக்காது.

வெந்நீரில் வசம்பு, வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து, கிருமிநாசினியாக அந்த நீரை வீடுகளில் பூச்சிகள் உள்ள இடங்களில் தெளித்துவரலாம். இந்த நீரை, ஹேண்ட்வாஷ் போல கைகளை கழுவவும் உபயோகிக்கலாம்.

மேலும் வசம்பு, நொச்சி இலை, தும்பை, பேய்மிரட்டி, ஓமவல்லி, வேப்பிலை, மாவிலை இவற்றின் காய்ந்த இலைகளை தேங்காய் ஓட்டில் வைத்து எரித்து, புகை மூட்டம் போட, வீடுகளில் உள்ள கொசுக்கள் உள்ளிட்ட பூச்சிகள் யாவும் அழிந்துவிடும்.

கொசுக்களை அழிக்கும் தட்டான்கள்..

வீடுகளில் கொசு விரட்டி செடிகள் வளர்க்கத்தேவையில்லை, புகை மூட்டம் தேவையில்லை, இவை எல்லாவற்றையும் விட, வீடுகளின் சுற்றுப்புறங்களில், தட்டான்கள் அதிகம் வளரும் சூழலை உருவாக்கினாலே போதும். தட்டான்கள், கொசுக்களை முட்டைப்பருவத்திலேயே அழித்து, கொசுக்கள் பரப்பும் வியாதிகளில் இருந்து நம்மைக்காக்க வந்த, இறைக்கொடை.

நாம் மறந்துவிட்டோம்! தட்டான்கள் இன்று அழிவின் விளிம்பில்...

East-central Alberta, Canada...


கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து – 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள தீக்குச்சிகள் எரிந்து நாசம்...


கோவில்பட்டி அருகே கழுகுமலை வெங்கடேஸ்வரபுரத்தினை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ராஜேந்திரன்(56). இவர் கழுகுமலை புது பஸ்ஸ்டாண்டு செல்லும் சாலையில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். மேலும் ஆலையின் ஒரு பகுதியில் குடும்பத்தினருடன் குடியிறுந்து வருகிறார். இன்று காலையில் இவரது தீப்பெட்டி ஆலையில் ஒரு பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக ராஜேந்திரன் வந்து பார்த்த போது அங்கு இருந்து மருந்து தீக்குச்சிகள் வைத்திருந்த அறையில் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கும், கழுகுமலை போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பொன்ராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீ ஆலையின் மற்ற பகுதிகளுக்கு செல்லவிடமால் தடுத்து அணைத்தனர். இருப்பினும் அறையின் கட்டிடம் சேதமடைந்தது மட்டுமின்றி, சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்து தீக்குச்சிகள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது...

ஸ்டெர்லைட் ஆலைக்கு மாமா வேலை செய்யும் எச்ச ஊடகங்கள்...


நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.. எந்த டெக்னாலஜியும் இல்லாம எப்படி கிணறு வெட்டுனாங்க?


அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று..  கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

உலக மகா பச்சோந்தி திமுக...


திமுக அமித்ஷாவுடன் கொஞ்சி விளையாடுவதால் மட்டும் தி.மு.க தமிழர் விரோத கட்சி என தமிழர்கள் நினைத்தால் அது மிக மிக தவறான பார்வை...


கறுப்பு பலூன்களை பறக்க விட்டது எப்படி ஒரு அடையாள நிகழ்ச்சியோ அதே போல அமித்ஷா வருவதும் ஒரு அடையாள நிகழ்வு. கருப்பு பலூன்களை பறக்க விடும் அதே நேரத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் அமித்சாவுடன் தொலைபேசியில் சிரித்து பேசி கொண்டிருப்பார்.இப்போது அமித்ஷா ஸ்டாலின் பேசும் போது கனிமொழி காங்கிரஸ் கட்சியை சமாதானப்படுத்துவார்.

தி.மு.க வின் தமிழர் விரோத போக்கை பார்க்க வேண்டுமானால் முக்கியமான தருணங்களில் அது எப்படி தமிழர் வாழ்வியலை,தமிழகத்தின் உரிமைகளை நிரந்தரமாக ஊனமாக்கும் செயல்களை செய்கிறது என்று பாருங்கள்.அதுவே தி.மு.க கட்சியின் அடையாளம்.

• 2009 இன அழிப்பில் பங்கு.
• நீட் தேர்வுக்கு ஆதரவான வாக்கு.
• ஜி.எஸ்.டி க்கு ஆதரவான வாக்கு.
• மீத்தேன் கையெழுத்து.
• எட்டு வழி சாலைக்கு ஆதரவு.
• உணவுப்பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவான வாக்கு.

தமிழர்களுக்கு வேண்டுமானால் அரசியல் இல்லாமல் இருக்கலாம். தி.மு.க விற்கு தமிழர்களை அழிக்கும் தெளிவான அரசியல் இருக்கிறது.

அது காங்கிரஸ் உடன் சேரும்.பி.ஜெ.பி உடன் சேரும். தமிழர்களை முழுவதுமாக அழிக்கும் வரை அது யாருடனும் சேரும்.

தி.மு.க வின் அடையாள நடவடிக்கைகளை தவிர்த்து விட்டு முக்கியமான தருணங்களில் அதன் செயல்பாட்டை கவனியுங்கள்.

தி.மு.க வை முழுவதுமாக புரிந்து கொள்ளுவீர்கள்...

அதிமுக ஊழல் அரசே பதில் சொல்...


இனியாவது விசிக திருந்துமா..?


இனியாவது விசிக திராவிடம் என்று பெணாத்துவதை நிறுத்திவிட்டு திமுக காங்கிரசிற்கு முட்டுக்கொடுக்காமல் தமிழ்தேசிய கொள்கையை ஏற்று தனித்து நிற்குமா?

காலம் பதில் சொல்லட்டும்...

தமிழ்நாட்டில் சிலர் ராஜ ராஜ சோழனை மட்டும் தாக்குவதேன்?


தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிடர்களின் வாரிசுகள்  ராஜ ராஜ சோழனை வசை பாடுமளவுக்கு கன்னட/தெலுங்கர்களாகிய விஜயநகர ஆட்சியாளர்களை வசைபாடுவதில்லை என்பதை  நான் பல இணையத்தளங்களிலும் வலைப்பதிவுகளிலும், கட்டுரைகளிலும் பார்த்திருக்கிறேன்.

ஏனென்றால் தமிழ்நாட்டில் வாழும் திராவிட எச்சங்களுக்கு  அவர்களின் முன்னோர்கள் மீது இன்றும் அவ்வளவு பாசம் உண்டு.

உண்மையில் ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்குப் பின்னர், கன்னடர்/வடுகர்/மராத்தியர்களின் ஆட்சியின் கீழ் தான் தமிழ்நாட்டில் சாதிப்பாகுபாடு வளர்க்கப்பட்டது.

வந்தேறிகளுக்கு தமிழர்களின் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழர்கள் நிலமற்றவர்களாக்கப்பட்டனர்.

தமிழர்களின் கோயில்களிலிருந்து தமிழ் வெளியேறியது.

ராஜ ராஜ சோழனின் காலத்தில் மதிப்பும், மரியாதை மிக்கவர்களாக இருந்த தேவ அடியார்கள் தேவடியாளாக மாற்றப்பட்டதும், தமிழரல்லாத விஜயநகர, நாயக்க ஆட்சியாளர்களின் காலத்தில் தான் என்ற உண்மையை அவர்கள் பேசுவதில்லை. 

பார்ப்பனர்களின் மீதுள்ள காழ்ப்புணர்வால், தமிழ் நாட்டிலுள்ளவர்கள் சிலர் ராஜ ராஜ சோழன் மீது அநியாயமாக குற்றங்களைச் சுமத்துகின்றனர்.

அதாவது தமிழர்கள் யாரைப் போற்றுகிறார்களோ, தமிழர்கள் யாரை எண்ணிப் பெருமைப் படுகிறார்களோ, எந்த ராஜ ராஜனின் கொடி ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்து, தமது விடுதலைக்கு, ஆயுதமேந்திப் போராடுமளவுக்கு வீரத்தையும், வலுவையும் அளித்ததோ அந்த ராஜ ராஜ சோழனை இழிவு படுத்தி தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை இல்லாமல் செய்வது தான் அவர்களின் நோக்கம்.

ராஜ ராஜ சோழன் காலத்தில் தமிழ் கோலோச்சியிருந்த தமிழ்நாட்டுக் கோயில்கள் எல்லாம், பார்ப்பனர்களின் வசமானது கன்னட/தெலுங்கர்களின் விஜய நகர ஆட்சியில் தான். 

உதாரணமாக, ராஜ ராஜ சோழனின் கல்வெட்டுக்களில் கோயில்களுக்கும், சடங்குகளுக்கும், கோயில்களில்  அன்றாடம் பாவனையில் உள்ள பொருட்களுக்கும் தூய தமிழ்ச் சொற்களே உள்ளன. 

விஜயநகர (தெலுங்கு, கன்னட)ஆட்சியாளர்கள் தான், தெலுங்கு ரெட்டிகளையும், நாயுடுகளையும், நாயக்கர்களையும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் கிராமத் தலைவர்களாக, அதிகாரிகளாக நியமித்து, தமிழர்களின்  விளைநிலங்களைப் பறித்து அவர்களிடம் கொடுத்தார்கள், அவர்களின் காலத்தில் நிலங்களை இழந்த வேளாளர்கள் தான், தமிழ்நாட்டை விட்டு, யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள் எனவும் சிலர் கூறுவர்.

விஜயநகர ஆட்சியாளர்களால் தான் இன்றும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் ரெட்டிகளும், நாயுடுக்களும், நாயக்கர்களும், ஏனைய தெலுங்கர்களும், தமிழர்களுடன் ஒப்பிடும் போது, அவர்களை விடக் கூடியளவு நிலச் சொந்தக்காரர்களாக உள்ளனர்.

ஆயிரம் வருடம் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனைத் தாக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தமது முன்னோர்களாகிய விஜயநகர் ஆட்சியாளர்களை குற்றம் கூறாமல், ராஜ ராஜ சோழனை மட்டும் வசைபாடுவதன் சூக்குமத்தை தமிழர்கள் அறியார் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் போல் தெரிகிறது.

உண்மையில் இன்று தமிழ்நாட்டிலுள்ள சாதிப்பிரச்சனைக்கும், உண்மையான தமிழர்களின் நிலமற்ற இழிநிலைக்கும் கன்னட/தெலுங்கு வடுக/ மராத்திய ஆட்சியாளர்களைத் தான் வசைபாட வேண்டும்.

ஆனால் ராஜ ராஜ சோழனைத் தாக்குகிறவர்கள்  கன்னட/தெலுங்குவடுக/ மராத்திய ஆட்சியாளர்களைத் அப்படிச் செய்வதில்லை, ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மையினரின் முன்னோர்கள் கன்னட/தெலுங்கு வடுகர்/மலையாளிகளாக இருப்பதாலோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

ராஜ ராஜ சோழன் காலத்தில் சாதிப்பாகுபாடும், பார்ப்பன ஆளுமையும் இருந்திருந்தால்,அவனுக்குப் பின்னால் ஆண்ட கன்னட/தெலுங்கு/மராத்தியர்கள் ஏன் அதை மாற்றவில்லை.

பிற்காலத்தில் ஆண்ட தம்மவர்களை விட்டு, ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனை மட்டும் தாக்குவதும், இழிவுபடுத்துவதன் நோக்கம் என்ன என்பதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் சாதிப்பிரச்சனை இருந்தது பற்றிப் பேசுகிறவர்கள், அதற்குப் பின்பு ஆண்ட திராவிடர்கள் (கன்னட/வடுகர்கள்) சாதிப்பிரச்சனையை ஏன் நீக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி அவர்களை ஏன் வசைபாடுவதில்லை என்ற கேள்விக்கு இதுவரை யாரும் பதில் கூறியதில்லை.

சீனக் கம்யூனிஸ்டுகள் கூடத் தான் சீனப்பெருஞ்சுவரை தமது முன்னோர்களின் சாதனையென எண்ணிப் பெருமைப்படுகிறார்கள். அதைப் பெருமையுடன் பாதுகாக்கிறார்கள். அதைப்பற்றிப் பீற்றிக் கொள்கிறார்கள் சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்த்தில் கொல்லப்பட்ட ஏழைகளின் எண்ணிக்கையை விடவா தஞ்சைப்பெரிய கோயில் கட்டப்பட்ட போது கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் தஞ்சை பெரியகோயில் என்பது இலட்சணக்கான தொழிலாளர்களை கொன்று குவித்ததன் சின்னமாக இருக்கிறது. என்று உளறும் போலி வர்க்கப் போராளிகளை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.

இன்று சிலைவணக்கத்தை எதிர்க்கும் எகிப்திய அரபு முஸ்லீம்கள் கூட, தமது முன்னோர்கள் கட்டிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் நினைத்துப் பெருமிதப்படுகிறார்கள், அவற்றைக் கோடிக்கணக்கான பணச்செலவில் பாதுகாக்கிறார்கள். பிரமிட்டுகள் கட்டப்பட்டபோது கொல்லப்பட்ட ஏழைகளையும், அடிமைகளையும், தொழிலாளர்களையும் விடவா, தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட போது இறந்திருப்பார்கள்?

ஐரோப்பாவிலுள்ள பிரமாண்டமான தேவாலயங்களைப் பற்றிப் பெருமிதப்படும் ஐரோப்பியர்கள் தமது முன்னோர்களை அவர்கள் எவ்வளவு கொடிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் வசைபாடுவதில்லை. ஆனால் ராஜ ராஜ சோழனையும், தமிழர்களின் கட்டிட, தொழிநுட்ப, அறிவியலை உலகுக்குப் பறை சாற்றும் கோயில்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் சிலர் தூற்றுகிறார்கள், அவர்களைத் தமிழர்கள் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும்.

பிரச்சனை என்னவென்றால், உலகிலேயே மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவனாகிய ராஜ ராஜ சோழன் தனது ஆட்சியில் நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எழுதி வைத்துப் போனான். அவனுக்குப் பின்னால் ஆண்ட கன்னடர்களும், தெலுங்கு வடுகர்களும், மராத்தியர்களும் தமிழ்நாட்டைச் சுரண்டி, தமிழர்களைத் தமிழ்நாட்டிலேயே தமது அடையாளத்தை இழந்தவர்களாக்குவதில் குறியாக இருந்தார்களே தவிர, ராஜ ராஜ சோழனைப் போல் ஒன்றையும் எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.

இன்று கூட பல நாடுகளில் மதகுருமார்கள் வரி செலுத்துவதில்லை அத்துடன் விவசாயிகளுக்கு சிறப்பான மானியங்கள் உண்டு. அக்காலத்தில் சமூகத்திலிருந்த சாதிக் கட்டமைப்பின் படி, சமூகத்தில் அவர்களின் சேவையின் தேவையைக் கருதி அவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டிருக்கலாம், உதாரணமாக, கனடாவின் பூர்வீக குடிகளுக்கு வரிவிலக்கு சலுகைகள் உண்டு ஆனால் ஏனைய கனேடியர்கள் தமது வருமானத்தின் கணிசமான பகுதியை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்துகின்றனர்.

·அத்துடன் பணக்காரர்கள், சமூகத்தின் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் குறைந்தளவில் வரி செலுத்துவதாக மேலைநாடுகளில் கூட முறைப்பாடுகள் உண்டு. அதனால், ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் போய், ராஜ ராஜ சோழனை இழிவு படுத்துகிறவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அவர்களின் பின்னணி என்ன என்பதைத் தமிழர்கள் ஆராய வேண்டும்.

·இலங்கையில் இக்காலத்திலும் மத குருமார்களுக்குஅவர்களை மதத்தைக் கற்க, வேத பாடசாலைகளுக்கும், பெளத்த பிரிவேனாக்களுக்கும், கிறித்தவ தேவலாயங்களுக்கும் வரி விலக்குண்டு. பல நாடுகளில் இது இன்றும் வழக்கத்திலுண்டு. அது அந்த நடைமுறை அக்காலத்தில், ராஜ சோழன் காலத்தில் மட்டுமல்ல, கன்னட/தெலுங்கு/நாயக்கர் ஆட்சியிலுமிருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனை வசைபாடுகிறவர்கள், அவர்களை ஏன் வசைபாடுவதில்லை.

·அரசர்கள் சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலைவாங்கிய அக்காலத்தில் ஆடுமாடுகளை பாராமரிக்குமாறு  நம்பிக் கொடுத்து, கோயிலுக்குக் கொடுக்கும் கடமையைச் செய்து விட்டு, மீதியை நீயே வைத்துக் கொள், என்று கூறிய ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையை சிலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கை அரசர்கள் சம்பளம், எதுவுமே கொடுக்காமல் “ராஜகாரியம்” என்ற முறையில் வேலை வாங்கினார்கள், அந்த வழக்கத்தை, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு  ஆங்கிலேயர்கள் தான் தடை செய்தார்கள்.

·சோழர்கள் கட்டிய கோயில்களில் வேலை செய்ய பிறமண்ணிலிருந்து வந்தவர்கள் பிராமணர்கள், அவர்கள் எதற்காக ஊர்காவலுக்கு வரி செலுத்த வேண்டும். ஊர்காவல் வரியை ஊர்ச் சொந்தக்காரர்கள் தான் செலுத்த வேண்டும்.

·வறுமையினால் மக்கள் அடிமையாவது இன்றும் இந்தியாவில் உண்டு. இந்த 21ம் நூற்றாண்டிலும் எத்தனையோ தமிழர்கள் கூட இந்தியாவில் கொத்தடிமைகளாக உள்ளனர். பல ஆபிரிக்க முஸ்லீம் நாடுகளில் இன்றும் அடிமைகளை வைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அடிமை, குடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அதற்கு ராஜ ராஜ சோழனை மட்டும் வறுத்தெடுப்பது ஏன்?

.கோயில்களுக்கும் அரச தேவைகளுக்கும், வேறு பல திட்டங்களுக்கும் நிலங்களை மக்களிடமிருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் எல்லா நாடுகளிலும் உண்டு. சோழர்கள் கட்டிய பெருங்கோயில்களில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்ட பார்ப்பனர்களுக்கு கோயிலுக்கருகில் வீட்டு வசதி செய்து கொடுக்க காணிகள் அரசால் எடுக்கப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களை இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் குடியேற்றிய போது சிங்களக் கிராமங்களிலிருந்து சிங்களவர்களை வெளியேற்றி, அவர்களின் காணிகளைப் பறித்து. தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி, அதில் இந்திய வம்சாவழித் தமிழர்களைக் குடியேற்றினர் ஆங்கிலேயர்கள். .

·மதகுருமார்களுக்கும், மடங்களுக்கும், கோயில்களுக்கும் நிலங்கள் வழங்குவது மானியம் வழங்குவதும், வரிவிலக்கு அளிப்பதும் இன்றும் வழக்கத்தில் உண்டு. பார்ப்பனர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரமதேயங்களில் ஒன்றையாவது காட்ட முடியுமா?

·இன்றும் தேர்தலில் போட்டியிட காசு, பணம், குறைந்தபட்ச கல்வித் தகுதி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் சாதியையும் முக்கியம். அதனால் ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் அப்படி விதிமுறைகள் இருந்தது மட்டுமல்ல, முடியாட்சியிலேயே, சனநாயகத்தைப் புகுத்திய சோழர்களைப் பாராட்ட வேண்டும். இலங்கையில் கூட 1948 வரை படித்த இலங்கையர்களுக்கு மட்டும் தான் வாக்குரிமை இருந்தது. வெள்ளையர்கள் குடியேறிய பிரிட்டிஸ் காலனிகளில் நிலச் சொந்தக்கார்களுக்கு மட்டும் தான் 1800களின் கடைசிப்பகுதி வாக்குரிமை இருந்தது.

·ஆதித்த கரிகாலனை பிராமணர்கள் கொன்றதன் காரணத்தாலோ என்னவோ இராசராசன் தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பதிலாக திருமுறை ஓதுவதற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறான். ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைக் கண்டு பிடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டாலும் இராஜ ராஜன் அவர்களை சரியாக அடையாளம் கண்டு அழித்தான் என்றும் இவ்வெற்றியை திருவாலங்காட்டுச் செப்பேடு “பரசுராமனது நாட்டை வென்றது” என்று குறிப்பிடுகிறது.

·பிராமணர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கிய செப்புப்பட்டயம் ஒன்று கூடக் கிடைக்காமலிருப்பதும் இவன் பிராமணர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது..

·மேலேயுள்ள குறிப்புகள் சி, இளங்கோ என்பவர் எழுதிய “இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர்” என்ற புத்தகத்தில் 73ம் பக்கத்தில் உள்ளது.

இதன் படி பார்த்தால் உண்மையில் ராஜ ராஜ சோழன் காலத்துக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள், தஞ்சாவூர்க் கோயில் கல்வெட்டுக்களிலுள்ளவற்றை எல்லாம் ராஜ ராஜ சோழனின் தலையில் போட்டு அந்த மாமன்னனை வசைபாடுகின்றனர் தமிழ்பேசும், தமிழரல்லாத திராவிட எச்சங்கள் என்பது தெரிகிறது...

உடைக்கப்பட்ட முக்கொம்பு மேலணை...


சின்ன வெங்காயம்...


சின்ன வெங்காயம் கிராமங்களில் இன்றும் கூட வயல் வேலைகளுக்கு வந்தாலோ, வீட்டில் சாப்பிடும் நேரங்களிலோ சாப்பாட்டுடன் சேர்த்தே சாப்பிடுகிறார்கள், அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகாமாவே காணப்படும்.

ஆனால் இன்றோ நாகரீக வளர்ச்சியில் அடியோடு மறந்து விட்டோம்.

ஒரு வேளையேனும் சாப்பாட்டுடன் எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நோய் வந்த பிறகு வருந்துவதை விட, வருவதற்க்கு முன்பே தடுப்போம்...

இலுமினாட்டிகளும் தமிழின அழிப்பும்...


தீய எண்ணங்களை களைய...


நான் வேண்டாம் என்று நினைத்தாலும் தீய எண்ணங்கள் எழுவதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நான் என்ன செய்யட்டும் ?

வாழ்க வளமுடன். நீங்கள்தான் உண்மையில் மிகவும் நல்லவர். தீய எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும், தீமையை விட்டு விலக வேண்டும் என்ற உங்களது ஏக்கமே அதற்கு சான்றாக அமைகிறது. வணங்குகிறேன். நம் மனதில் இன்ன எண்ணங்கள் தான் எழ வேண்டும் என்று நாம் நினைத்தால் அதற்கு நாம் நம்முடைய நடைமுறைப் பழக்க வழக்கங்களை மாற்றியமைக்க வேண்டும். அப்படியே தீய எண்ணங்கள் எழுந்தாலும் கூட அவற்றை ஆராய்ந்து, கட்டுப்படுத்தி, நெறிப்படுத்திக் கொள்ளவும் முடியும். அதற்கான திறமையும், ஆற்றலும் இயல்பாகவே நமக்கு அமைந்திருக்கிறது.

நம் உள்ளத்தில் எழுகின்ற எந்த எண்ணமும் தானாக எழுவதில்லை. அது ஏற்கனவே சம்ஸ்காரங்களாக, நம் எண்ணங்கள் மற்றும் வினைகளின் வித்துக்களாக நம் சித்தத்தில் புதைந்து கிடக்கின்றன. இனி இப்பொழுது நாம் எண்ணும் எண்ணங்களும் அழுத்தம் பெறும் பொழுது சித்தத்தில் போய் பதிகின்றன. இந்த அழுத்தம் பெறும் பொழுது என்று சொல்வது எதனால் என்றால், நம் வாழ்க்கை என்கிற குறிப்பிட்ட வட்டத்திற்குள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட எண்ணங்களையே மீண்டும் மீண்டும் எண்ணுகிறோம். மீண்டும் மீண்டும் எண்ணுவதே அழுத்தம் பெறுவது என்கிறோம். இதைப் பழக்கம் என்பார்கள். இந்த பழக்கமே எண்ணங்கள் வாயிலாக நம் இயல்பாக அமைகின்றது.

எனவே நாம் இனி செய்ய வேண்டியதென்னவென்றால், உயர்வான எண்ணங்களையே எண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பழகிக் கொண்டால், அதுவே நம் இயல்பாக ஆகி விடும்.

''உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.''

என்று வள்ளுவர் குறிப்பிடுவது இதற்காகத் தான்.

எனவே நல்ல எண்ணமோ, தீய எண்ணமோ நம் மனதில் எழுவதற்கு நாம் தான் மூலக் காரணமாக இருக்கிறோம். மற்றவர்கள் வலிந்து அதை நம் மனதில் திணிக்க முடியாது. நாம் நமது சுயநலம் மற்றும் சுகபோக இச்சைகளுக்கு ஆசைப்பட்டு தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறோம்.

ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் என்றால் விலை குறைவாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறோம். அதுவே நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் மட்டமானதாக இருந்தாலும் ஏதேதோ பொய்களைச் சொல்லி அதை அதிக விலைக்கு விற்க நினைக்கிறோம். பெரும்பாலானவர்கள் மன நிலை இவ்வகையில்தான் இருக்கிறது. இங்கே சுயநலம் மனதில் தீய எண்ணங்களுக்கு வித்திடுகிறது. அதாவது நமக்கு நல்ல எண்ணங்களை எண்ணக் கூடிய அதிகாரமும், சுதந்திரமும் இருந்தும், அவற்றைப் பயன்படுத்தாமல் லாபம் அடையும் சுயநல நோக்கில் தீய எண்ணங்களை எண்ணுகிறோம்.

சிலர் பேசும் பொழுது ''நல்லவனுக்கு ஏது காலம், தீயவர்கள்தான் வாழ்வில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்'' என்று சொல்லக் கேட்கிறோம். இந்த எண்ணம் தவறானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

நீ நல்லவனாக, உயர்ந்த எண்ணம் உடையவனாக இருந்தும் வாழ்வில் உயர்ந்த நிலை வாய்க்கவில்லை என்று உன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதே. நிச்சயமாக அதன் பலன் கிடைக்காமல் போகாது என்பதை உறுதி செய்கிறார்.

நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் எண்ணுவேன் என்று நாம் உறுதியாக இருந்தால் தீய எண்ணங்கள் உள்ளே நுழையவே முடியாது. பழைய தீய சம்ஸ்காரங்களை விட நமது தற்போதைய புதிய வினைப் பதிவுகள் வலுவாக இருந்தால், எவ்வளவுதான் புறச் சூழல்கள் அழுத்தம் கொடுத்தாலும் பழைய சம்ஸ்காரங்களால் செயல்பட முடியாமல் போய் விடும். சிலர் திடீரென்று நல்லவர்களாக மாறி விடுகிறார்களல்லவா ? அது இப்படித்தான்.

எனவே நல்ல எண்ணங்களைத் தவிர எதிர்மறையான சிந்தனைகளுக்கு மனதில் இடம் கொடுக்க மாட்டேன் என்று நமக்கு நாமே மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உன் வாழ்க்கை உன் கையில் என்பார்கள்...

அதாவது நம் வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குவது நம் எண்ணங்களே. அந்த எண்ணங்களை நல்ல விதமாக இருப்பதும், தீயைவைகளாக இருப்பதும் நம் கையில் தான் இருக்கிறது என்பதே அதற்குச்சரியான அர்த்தமாகும்.

நாம் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படும் இயல்பைப் பெற்றவர்கள். எனவே நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நல்ல வார்த்தைகள் என்று பழகிக் கொண்டோமென்றால் தீய எண்ணங்கள் மனதில் எழுவதில்லை...

சி.பா.ஆதித்தனாரின் அருமையான ஆறு பதில்கள்...



1. கேள்வி: திராவிடர்கள் யார்?

பதில்: திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்தவர்களான திரி- வடுகர்களே திராவிடர்கள்.

2.கேள்வி: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா?

பதில்: பொருந்தாது. 1875ஆம் ஆண்டிற்கு முன் திராவிடர் என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த 'திராவிடர்' என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியும் எழுதினார். அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால் முன் காலத்தில் இருந்து மூன்று தெலுங்கு நாடுகளைத் தான் திரிவடுகம் என்றும், திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள். திரிவடுகர் நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கும் இந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம். அவரைப் பின்பற்றித் தமிழர்கள் என்று குறிப்பிடதற்குத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் தவறாகும். தமிழன் தன்னைத் திராவிடன் அதாவது திரிவடுகன் அல்லது தெலுங்கன் என்று சொல்வது இழிவாகும். திராவிடன் என்பது தமிழ்ச் சொல் அல்ல. வடவர்கள் தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.

3.கேள்வி: திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா?

பதில்: எந்தத் தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய கால்டுவெல் என்கிற வெள்ளைக்காரர் வட மொழியியிலிருந்து தான் திராவிடம் என்ற சொல்லைக் கண்டு பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.

4.கேள்வி: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை திராவிட நற்றிரு நாடு என்று குறிப்பிட்டு இருக்கிறாரே?

பதில்: தெலுங்கர்களைக் குறிக்கும் 'திராவிடம்' என்ற சொல்லைத் தான் நான் கையாண்டேன் என்று கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர் எழுதியுள்ளார். அதற்குப் பிறகு சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும்.

5.கேள்வி: இலக்கியம், சரித்திரம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள திராவிட நாட்டைத் தாங்கள் மறுப்பது ஏன்?

பதில்: தமிழ்ப் புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடன், திராவிட நாடு என்ற சொற்களே இல்லை. மிக அண்மைக் காலத்தில் அந்நியர்களால் எழுதப்பட்ட நூல்களில் தான் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது.

6.கேள்வி: தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால் இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி ஒன்றுபடக் கூடாது?

பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா? ஒரு மொழி ஒரு நாடு என்பது தான் உலக நியதி.

நன்றி: சிவபாரதி எழுதிய 'தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்' நூலிலிருந்து...

ஸ்டெர்லைட் ஏமாற்று வேலைகள்...


திமுக வின் உலகமகா பிராடுத்தனங்கள்...


1. மாவீரன் பிரபாகரனின் தாயாருக்கு அரசுசெலவில் சிகிச்சை அளித்ததற்கு நன்றி.

2. இலங்கைத் தமிழருக்கு நான்கே நாளில் விடுதலை பெற்றுத் தந்ததற்கு நன்றி.

3. எட்டுவழிச்சாலைக்கு எதிராக நீதிமன்றத் தடையை பெற்றுத் தந்ததற்கு நன்றி...

உலகமகா பிராடு திமுக...

நாம் சுதந்திரமாகவா வாழ்கிறோம்...?


உணவே மருந்து - எப்போது?


நன்றாக பசித்த பின்பு தான் சாப்பிட வேண்டும். பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம். ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும்.

அவசரம் அவசரமாக சாப்பாட்டை உள்ளே தள்ளக் கூடாது. நிதானமாக, நன்றாக மென்று, ஆற, அமர உட்கார்ந்து சாப்பிட வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்?

சாப்பிடும் போது அதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டிவி பார்ப்பதோ, புத்தகங்கள் படிப்பதோ கூடாது. போனில் பேசுவதும் நல்லதில்லை.

எரிச்சலோ, கோபமோ, இயலாமையோ, குழப்பமோ என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிட வேண்டாம். அது உணவின் ருசியை மறக்கச் செய்யும்.

இரவு சாப்பிட்டவுடன் படுத்து விடக் கூடாது. சிறிது தூரம் உலாவி விட்டு வரலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் பின்னர் தூங்குவதுதான் நல்லது.

நல்ல உணவு கிடைக்காமல் உலகம் முழுவதும் பல பட்டினிச் சாவுகள் இன்றளவும் நடக்கிறது. எனவே ஒரு போதும் உணவை வீணாக்காதீர்கள்...

சென்னப்ப நாயக்கர் தமிழரா இல்லையா என்பது வேறொரு சர்ச்சை...


இன்றை சென்னையை ஒரு பகுதியாக கொண்ட தொண்டை நாடு பத்தாயிரம் ஆண்டுகள் கற்கால மனிதர்கள் வாழ்த்த நாடு, தமிழர் பூர்வகுடிகளான முல்லைத் திணையை தாயகமாகக் கொண்ட குறும்பர்களின் நாடு....

பாஜக மோடி vs கர்நாடக குமாரசாமி கலாட்டா...


மனம்...


மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அதை நாலாபுறமும் சிதற விட்டால் ஒன்று சேர்ப்பது கடினம்.

இளம்மூங்கில் எளிதாக வளைவது போல, இளமையிலேயே மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவது அவசியம்.

நான் என்னும் அகங்காரத்தை அழித்து விட்டவன் கடவுளின் காட்சியைப் பெற்று மகிழ்வான். 

கடவுள் கற்பக மரம் போல கேட்டதையெல்லாம் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றார்...

நல்லவா்களின் கோாபம் நீடித்திருப்பதில்லை. தண்ணீரி்ல் இட்ட கோலம் போல உடன் மறையும்...

நல்ல மனிதா்களின் சோ்க்கை நாளும் உங்களை உயா்த்தும்.

குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு, கடவுள் மீது பக்தி செலுத்துபவனே வீரம் மிக்கவன். 

மனதில் நல்ல எண்ணம் இருந்தால் தான் துாயபக்தி உண்டாகும் .

கடவுள் என்னும் எஜமானனுக்கு பணிவிடை செய்து வாழ்வது தான் பிறவிப்பயன். 

படிப்பதை விட கேட்டு அறிவது உயர்ந்தது. நேரில் கண்டு உணர்ந்து கொள்வது இன்னும் சிறந்தது..

மேலும் விவேகம் இல்லாதவனுக்கு எத்துணை சாஸ்திர ஞானம் இருந்தாலும்  அதனால் பயன் ஒன்றுமாகப் போவதில்லை... விவேகத்தை கடைபிடியுங்கள்..

நீங்கள் உங்கள்  தேவைகளை  கேட்காமலே அள்ளித்தர இறைவன் இருக்கின்றான்.

இன்றைய நற்சிந்தனைகளின் வழிநடப்போம்..

பாஜக மோடிய நினைத்தால் தான் சற்று பாவமாக இருக்கிறது...


பெண்களே... மாதவிலக்கின் போது அவஸ்தையா ? இதை மறக்காமல் சாப்பிடுங்க...


நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த ருசியான காய்களில் முதலிடம் வகிப்பது வெண்டைக்காய்.

உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை 2 முதல் 5 கிராம் சாப்பிட்டு வர வேண்டும்.

வெண்டைக்காயில் வேதிச்சத்துகள் இருப்பதால், ரத்தம் உறைதல் மட்டும் ரத்தகட்டிகள் வராமல் தடுக்கிறது.

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் மூளைச் செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

வெண்டைக்காய் பிஞ்சுக்களை மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும்.

வெண்டைக்காய் சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.

வெண்டைக்காயை பொடிப் பொடியாக நறுக்கி, வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால், படுக்கும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் மற்றும் சரியாக கணக்கு போடும் ஆற்றல் அதிகரிக்கும்.

பெக்டின் என்னும் நார்ப்பொருள் வெண்டைக்காயில் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.

வெண்டைக்காயின் வேரை காயவைத்து பொடியாக்கி அதை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், ஆண்களின் ஆண்மை பெருகும்.

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், பொலிவான முக அழகினைப் தருகிறது.

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்து அதிக அளவில் உட்கொண்டால், குடல்புண் மற்றும் தோலில் ஏற்படும் வறட்சி தன்மையை நீக்குகிறது...

மொஸாத் - 5...


இஸ்லாமியர்களின் தொழுகைக்கு இடமளித்த இந்து கோயில் நிரவாகம்...


கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருச்சூர் மாவட்டம் கொச்சுகாடாவூ அருகே உள்ள புரப்பள்ளிகாவூ ரத்தனேஸ்வரி கோயில் நிர்வாகம், இஸ்லாமிய பெருமக்கள் வந்து தங்க அனுமதித்தது. இதுதவிர, கோயிலுக்கு சொந்தமான மண்டபம் இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் அன்று தொழுகை நடத்த ஏற்பாடு செய்துதரப்பட்டது...

மொஸாத் - 4...


தமிழனுக்கு தெரிந்தது திராவிட மற்றும் தேசிய கட்சியில் இனைந்து தன் இனத்திற்கு துரோகம் செய்வது மட்டுமே...


கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது.....

மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது......

முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது.....

முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது....

குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது....

முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது.....

டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது.....

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது.....

ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்ட பிரமச்சாரியை தெரியாது...

ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது....

வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது.....

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. இவர்களை போல இன்னும் பல லட்சக் கணக்கான பெயர்கள் உள்ளன.

அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரியபடாமல் வைத்து வரலாற்றை அழிப்பதே இன்றைய கட்சிகள் செய்த சாதனை..

உங்களை போலவே உங்கள் தலைமுறைகளுக்கும் நம் தமிழனின் வரலாற்றை சொல்லிக்கொடுக்க தயங்கி வரலாற்றை அழித்து விடுங்கள் இதுவே நீங்கள் செய்யும் சாதனையாக இருக்கட்டும்..

50ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எம் தமிழ் மொழியை இந்த 50 வருடங்களில் அழித்த பெருமை நம்மையே சேரும்...

மொஸாத் - 3...


மஞ்சள் கயிற்றில் தாலி...


நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?

ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.

மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும் போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.

மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..

அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .

அது போல் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.

இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ?

வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி.

கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக் கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர்.

பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்து கொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம்.

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்...

மொஸாத் - 2...


திமுக கலைஞர் நினைவிடத்தில் பஜனைப் பாடல்! எ.வ.வேலுவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்...

 
கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அவரது புகழை இசையுடன் எ.வ.வேலு பாடியது பஜனைப் பாடல் என்று தகவல் பரவியதால் ஸ்டாலின் மிக கடுமையாக கோபம் அடைந்துள்ளார்.
 
கடந்த செவ்வாயன்று திருவண்ணாமலை மாவட்ட தி.மு.கவினர் சுமார் 1000 பேருடன் எ.வ.வேலு கலைஞர் நினைவிடத்திற்கு ஊர்வலமாக வந்தார். பின்னர் கலைஞர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கூடி நின்று கொண்டு தானே எழுதிக் கொண்டு வந்த கலைஞரின் புகழை கூறும் பாடலை இசையுடன் எ.வ.வேலு உள்ளிட்டோர் பாட ஆரம்பித்தனர். அப்போது இசைக்கருவிகள் சிலவற்றையும் எ.வ.வேலு பயன்படுத்த அந்த இடமே உற்சாகமானது.
 
ஒரு கட்டத்தில் மிகவும் உற்சாகம் அடைந்த எ.வ.வேலு பாடல் பாடிக் கொண்ட ஆட ஆரம்பித்துவிட்டார். அவருடன் சேர்ந்து தி.மு.க தொண்டர்களும் ஆட அதுஅஞ்சலி நிகழ்ச்சியா இல்லை உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சியா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் பரவசம் ஆனார்கள். ஆனால் அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அ.தி.மு.க மற்றும் ரஜினி ரசிகர்கள் சிலர் குத்துப்பாடலுடன் இணைத்து எ.வ.வேலு நடனம் ஆடுவது போல் சமூக வலைதளங்களில் பதிவேற்றவிட்டனர்.
   
அதிலும் புளிப்பா புளியங்கா எனும் பாடலுடன் ரீமிக்ஸ் செய்யப்பட்ட எ.வ வேலு நடனம் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப்பில் செம்மையாக வைரல் ஆகிவிட்டது. மேலும் சில பஜனைப்பாடல்களையும் எ.வ.வேலு ஆட்டத்துடன் சேர்த்து சிலர் வைரல் ஆக்கினர். இதனால் உண்மையான பாடல் எது, பொய்யான பாடல் எது என்று கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
 
 பகுத்தறிவாளரான கலைஞர் நினைவிடத்தில் சென்று தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எ.வ.வேலு பஜனைப்பாடல் பாடிவிட்டதாகவும் தகவல்கள் பரவின. இதனால் தி.மு.கவிற்கு எதிராக சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்த விவரங்கள் எல்லாம் தி.மு.க ஐ.டி டீமுக்கு செல்ல அவர்கள் உடனடியாக களம் இறங்கினர். குத்துப்பாடலுடன் சேர்த்து எ.வ.வேலு நடனம் ரீமிக்ஸ் செய்யப்பட்ட வீடியோக்களை எல்லாம் யூட்யூப் மற்றும் பேஸ்புக்கில் இருந்து அவர்கள் அகற்ற வைத்தனர்.
 
 ஆனால் தி.மு.க ஐ.டி விங்க் வீடியோக்களை அகற்ற அகற்ற புதிய புதிய பாடல்களுடன் எ.வ.வேலு டான்ஸ் பதிவேற்றப்பட்டு வைரல் ஆகிக் கொண்டே சென்றது. இதனால் ஒரு கட்டத்தில் தி.மு.க ஐ.டி விங்கே டயர்டாகிப்போனது. மேலும் கலைஞர் மறைவைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தி.மு.க மீது ஏற்பட்டிருந்த ஒரு அனுதாபம் அப்படியே காமெடியாகிப்போனது. இதற்கு எ.வ.வேலு தான் காரணம் என ஸ்டாலினிடம் சிலர் கொளுத்திப் போட்டுள்ளனர். இதனால் எ.வ.வேலுவிடம் ஸ்டாலின் நேரடியாகவே கோபப்பட்டதாக சொல்கிறார்கள்.
 
மூத்த நிர்வாகியான நீங்களே இப்படி இருந்தால் எப்படி? தி.மு.கவின் இமேஜை சமூக வலைதளங்களில் செரி செய்ய அவ்வளவு போராடுகிறோம், ஆனால் ஒருத்தன் என்னடானா? பிரியானிக்கு சண்டை போட்டு நம்மை டேமேஜ் பண்றான். நீங்க என்னடானா கலைஞர் நினைவிடத்தில போய் டான்ஸ் ஆடுறீங்கனு ரொம்ப கோவமா பேசியிருக்கார்.
 
அதுக்கு தான் பாரம்பரிய முறைப்படி இசை அமைத்து கலைஞருக்கு புகழ் அஞ்சலியை மட்டுமே செலுத்தியதாகவும் அதனை சிலர் எதிர்மறை பிரச்சாரமாக்கிவிட்டதாகவும் வேலு வேதனையை தெரிவித்துள்ளார். அதற்கு எல்லாம் நாம் கொடுக்கும் இடம் தான் என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து ஸ்டாலின் சென்றுள்ளார். இதனால் எ.வ.வேலுவும் செம அப்செட்டாகியுள்ளாராம்...

மொஸாத் - 1...


இலுமினாட்டி பற்றி இப்போது ஊடகம் பேசவது ஏன்.?

இவ்வளவு நாள்கள் இல்லாமல் திடீரென பேசப்படுகிறது...

https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11193952/world-of-the-Illuminatis-grip.vpf

அன்பு என்றால் என்ன..?


இந்த யுகத்தில் மனிதர்களுக்கு அன்பை பற்றி நல்ல புரிதல் வேண்டும்...

உலகத்தின் அழிவு பாதையிலிருந்து நம்மை காக்க போகும் பெரும் ஆயுதம் மனிதநேயம்.

அதற்கு முக்கிய கருவியே இந்த அன்பு எனும் ஆயும் தான்.

அதை பற்றி இனி பார்ப்போம்...

அதற்கு முன் அன்பு என்றால் என்ன இன்றைய பாகம்...

துவன்டு விடமாட்டோம்...


உவன் கருத்தியல் செம்மை படுகிறது..

காலத்தால் பன்பட்டு முழு வடிவம் பெரும்.

உவன் அடிமைக்கான வாழ்வியல் குரல்...

Robotic mosquito...


அறிவு தெளிந்தவர்க்ககு... சீவன் சிவலிங்கம்...


இதன் உட்பொருள்...

சீவன் என்பது மூன்று மலம் உடைய உயிர்..

சிவலிங்கம் என்பது மல அற்றா காரண காரியம் உடைய  பரசிவ தத்துவம்.

பரசிவ தத்துவம் ஜீவ தத்துவத்தின்    ஐக்கியம் படும் போது ஜீவதத்துவம் முழுவதும் அருள் ஒளி காரியப்படும்..

இதனை அனுபவத்தில் அறிய வேண்டும்...

இலுமினாட்டி உண்மைகள்...