மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அதை நாலாபுறமும் சிதற விட்டால் ஒன்று சேர்ப்பது கடினம்.
இளம்மூங்கில் எளிதாக வளைவது போல, இளமையிலேயே மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவது அவசியம்.
நான் என்னும் அகங்காரத்தை அழித்து விட்டவன் கடவுளின் காட்சியைப் பெற்று மகிழ்வான்.
கடவுள் கற்பக மரம் போல கேட்டதையெல்லாம் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றார்...
நல்லவா்களின் கோாபம் நீடித்திருப்பதில்லை. தண்ணீரி்ல் இட்ட கோலம் போல உடன் மறையும்...
நல்ல மனிதா்களின் சோ்க்கை நாளும் உங்களை உயா்த்தும்.
குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு, கடவுள் மீது பக்தி செலுத்துபவனே வீரம் மிக்கவன்.
மனதில் நல்ல எண்ணம் இருந்தால் தான் துாயபக்தி உண்டாகும் .
கடவுள் என்னும் எஜமானனுக்கு பணிவிடை செய்து வாழ்வது தான் பிறவிப்பயன்.
படிப்பதை விட கேட்டு அறிவது உயர்ந்தது. நேரில் கண்டு உணர்ந்து கொள்வது இன்னும் சிறந்தது..
மேலும் விவேகம் இல்லாதவனுக்கு எத்துணை சாஸ்திர ஞானம் இருந்தாலும் அதனால் பயன் ஒன்றுமாகப் போவதில்லை... விவேகத்தை கடைபிடியுங்கள்..
நீங்கள் உங்கள் தேவைகளை கேட்காமலே அள்ளித்தர இறைவன் இருக்கின்றான்.
இன்றைய நற்சிந்தனைகளின் வழிநடப்போம்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.