இதை செய்தால் சாய்ந்த தென்னை மரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் , வேளான் ஆய்வாளர் கூறும் வழிமுறை...
19/11/2018
கஜா புயலால் மரங்களை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு பயன் பெறும் தகவல்...
இதை செய்தால் சாய்ந்த தென்னை மரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் , வேளான் ஆய்வாளர் கூறும் வழிமுறை...
அதிமுக அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்ட கிராம மக்கள்...
இதில் அந்த வைத்தியலிங்கம் சொட்ட கெட்டவார்த்தைல பேசுறான் மக்களை பார்த்து... கவனியுங்கள்...
தீ வைக்கப்பட்ட 5 அரசு வாகனங்கள்; படுகாயமடைந்த டி.எஸ்.பி -ஆலங்குடியில் பதற்றம்...
புதுக்கோட்டையில் புயலால் ஏற்பட்ட சேதங்களை முறையாகக் கணக்கெடுக்காததால், டி.எஸ்.பி வாகனம் உட்பட 5 வாகனங்களைப் பொதுமக்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இந்த தாக்குதலில் டி.எஸ்.பி படுகாயம் அடைந்தார். திருச்சி மண்டல டி.ஐ.ஜி தலைமையில் காவல்துறை குவிக்கப்பட்டு உள்ளனர்.
கஜா புயலால், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சரிந்தன. 50 ஆயிரம் ஏக்கர் வாழை, தென்னை உள்ளிட்ட விளை நிலங்கள் பயிர்களுடன் முற்றிலும் சேதம் அடைந்தது. மாவட்டத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பயிர்களின் சேதம் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார், வி.ஏ.ஒ உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கணக்கெடுக்கும் பணியினை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் பகுதியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த மக்கள், கொத்தமங்கலம் பகுதியில் தங்கள் வீடுகளையும், பயிர்களையும் கணக்கெடுக்க கூறிச் சிறைபிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆலங்குடி வட்டாட்சியர் ரத்தினாவதியையும் சிறைபிடித்தனர். இதனை அடுத்து, ஆலங்குடி டி.எஸ்.பி அய்யனார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை. வாக்குவாதம் முற்றியதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் சிலர் டி.எஸ்.பி வாகனம் உட்பட 5 அரசு வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தினர். கல் வீசித் தாக்கியதில், டி.எஸ்.பி தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி மண்டல டி.ஐ.ஜி லலிதா தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அங்குப் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
- விகடன்...
நெஞ்செரிச்சல் பிரச்சினையா?
நார்சத்து உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்...
சிலர் நெஞ்செரிச்சல் அல்லது எதுக்களிப்பு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். வயிற்றுப் பகுதி அமிலங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஜீரணக் கோளாறு உண்டாகிறது. இது மாதிரி நிலையில் அமிலங்களுடன் உணவுக்குழாய் நெருங்கி வரும் போது எதுக்களிப்பு சிக்கல் உண்டாகிறது. அதன்பிறகு எது சாப்பிட்டாலும் மேலே வருவது போலவும், கூடவே நெஞ்செரிச்சலும் இருக்கும். இது மாதிரி நிலையில் நார்சத்து நன்றாக கைகொடுக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். (ஏற்கனவே பெருங்குடல் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரழிவு ஆகியவற்றை தடுப்பதில் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.) கூடவே கொழுப்பையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்களுக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்த போது ஒட்டுமொத்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக இருந்தது. உடல் பருமனும் எதுக்களிப்பை தூண்டி விடும் மற்றொரு சிக்கலான காரணி தான். இந்நிலையில் உணவில் இடம்பெறும் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைத்து, நார்ச்சத்தை அதிகப்படுத்தும் பட்சத்தில் எதுக்களிப்பு அறிகுறிகள் கணிசமாக குறைவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் நார்சத்து அதிகமாக காணப்படுகிறது.
எதுக்களிப்பு பிரச்சினையை கண்டு கொள்ளாமல் சும்மா இருந்தால், அல்சர், உணவுக் குழாய் பாதையில் ரத்தக்கசிவு ஆகியவை ஏற்படும். நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றால் உணவுக்குழாய் பாதையில் புற்றுநோய் வரும் ஆபத்தும் உள்ளது. ஆகையால் நெஞ்செரிச்சல் வியாதிக்காரர்கள் உணவில் கொழுப்பை குறைத்து, நார்சத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்...
வர்மக்கலை...
ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்கக் கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நம் தமிழ்ச் சித்தர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?
இந்த வர்மக்கலை ஒரு கடல். இதைப் பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரும், ஞானபண்டிதரான முருப்பெருமானின் முதற் சீடருமான, கும்பமுனி, குருமுனி என அழைக்கப்படுவரும், 1008 அண்டங்களையும் அருளாட்சி செய்பவரும், அகத்தியம் என்ற தமிழ்நூலைப் படைத்தவருமான சித்தபெருமான் அகத்தியர்.
இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ). தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே. என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்குச் சாட்சி.
சித்தபெருமான் அகத்தியர் கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்", "அகஸ்தியர் வர்ம கண்டி", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம் ", "அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு", "அகஸ்தியர் வர்மக் கண்ணாடி", "வர்ம வரிசை", "அகஸ்தியர் மெய் தீண்டாக்கலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன்" என்ற மன்னன் தான் இதில் வல்லவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத் தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்குப் பின்னர் வந்த சோழர்கள் இதனைக் கற்றனர்.
பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்தமதத்தைப் பரப்பச் சீனா சென்ற போது இந்தக் கலையும் அங்கு பரவியது. “Tenjiku Naranokaku" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India" என்ற பொருளைத் தருகின்றது. "ஹு ஷிஹ் " என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது "இந்தியா ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். 1793ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது தாங்கள் இந்தக் கலை மூலமாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தமிழக இளைஞர்கள் வர்மக்கலை பயில்வதைத் தடை செய்தனர்.
அன்று ஆரம்பமான அழிவு, இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது. இந்தக் கலையை அனைவருக்கும் கற்றுத்தர மாட்டார்கள். இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார். வர்மக்கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறையைக் கையாள வேண்டும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.
இதை எந்த வயதினரும் கற்கலாம். ஆனால் யார் மட்டுமே கற்க முடியும்? "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே" என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது.
வர்மக் கலைகளின் முக்கியமான வகைகள் " "தொடு வர்மம்", "படு வர்மம்", "தட்டு வர்மம்", "நோக்கு வர்மம்" என வகைப் படுத்தப்பட்டுள்ளது. தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார். இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்தப் பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும். படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பாதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும். தட்டு வர்மம் யாருக்கும் கற்றுத் தரப்படமாட்டாது. இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும். நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது. யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும். உதாரணத்திற்க்குச் சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம். அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம்.
ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரைத் தாக்கும் வல்லமை கொண்டது இந்தக் கலை. ஆனால், இது யாருக்கும் இலகுவாகக் கற்றுத்தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் மட்டுமே இதைக் கற்கலாம்.
தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.
இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை...
அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்....
அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், பார்வை படக்கூடாது என்றுதான் கட்டிவிடுறோம் என்று சொல்லுவார்கள்.....
உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை...
அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது.
முதலாவது பலன்...
அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி..கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும் ஏழைகளுக்கு கரம் கொடுக்கும் ராச(ஜ) தந்திரி அது.. விடம் கொண்ட பூச்சிகள், பாம்பு தடம் பதித்து ஊடாடும் போது அவர்களுடன் வசிப்பவை அவை. எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விடத்தின் கடிவாய்க்கும்
இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன்.
கையினால், விடம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.
மருத்துவ பலன்...
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக் கொடியாக மாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள்.
இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது பார்வைக்காக என்று புறம்பு கூறுவதும் தவறு....
நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுக்காது சிறுசிறு விடயங்களையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....
ESP (Extra Sensory Perception)...
சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP என அறியப்படுகின்றது.
இந்த ESP சக்தியில்..
இறந்த காலத்தை சொல்பவர்கள்
எதிர்காலத்தை சொல்பவர்கள்
நிகழ்காலத்தில் நடப்பவற்றை சொல்பவர்கள்
பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்
இன்றும் பலவகை உள்ளது, அது அவரவர் மூளையையும் அதன் சக்தியையும் வெளிப்படுத்துவதனைப் பொறுத்து வகைப்படும்.
மூளைக்குச் செல்லும் இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தி அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன.
இது நாம் யோசனை செய்யும் போது தலையை கைகளால் கசக்கிக் கொள்வது அல்லது நெற்றியின் பக்கத்தை தட்டுவது போன்ற செயற்பாடுகளை நாம் செய்வது இந்த வகையில் மின்னதிர்வினை ஏற்படுத்தும் செயல் முறையே.
சில எலிகளின் மூளையை பயன் படுத்தி இந்த மின்திர்வு செயற்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இதன் காரணமாக மூளையில் பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணரப்பட்டது.
மூளையில் இருக்கின்றன 4 பில்லியன்ஸ் செல்கள் ஆனால், மனிதர்கள் அதில் 10% வீதம் கூட முழுதாக பயன்படுத்துவதில்லை என்பதே ஆச்சரியம் மிக்க உண்மை, கணித அறிவியளாலர்களுக்கும் படிக்காத மனிதனுக்கும் கூட 100 செல்களுக்குள் தான் வித்தியாசம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 500 தொடக்கம் 1000 செல்களை படுத்திய காரணத்தால் அவர் அளப்பரிய கணித அறிவியளாலராக மாறினார் என்பதும் உண்மையே.
அமெரிக்காவில் மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம் பல விஞ்ஞானிகள் இணைந்து ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் தன்மைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள்..
அப்போது டாக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் கண்களை தியானத்தில் ஈடுபட்டுள்ளார் பின்னர் அவரது உடல் தானாக மேல் எழுந்து அவர்கள் கூடியிருந்த கட்டிடம் வழியாக சென்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
பௌதீக விதிகளை மீறிய இந்த செயல் காரணமாகவே ஆழ்மனதின் ஆற்றலும் ESP எனப்படும் மூளையின் அதீத சக்தியின் மேல் நம்பகத்தன்மை வளர்ந்து ஆராய்ச்சிகள் தொடர்ந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளில் ஒரு மனிதன் தனது ESP சக்தியின் மூலம் தன்னுடைய உடல் எடையினை அதிகரிக்க முடியும் 50 கிலோகிராம் உள்ள ஒருவர் 200 கிலோ கிராம் வரை தனது எடையினைக் கூட்டிக் கொள்ள முடியும் அதுவும் சர்வ சாதாரணமாக என கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வகையான பல ஆராய்ச்சிகளின் முடிவாக எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அவை மூளையின் சக்தியினால் செயற்படுத்த முடியும் என்பதும் அறியப்பட்டது...
புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?
மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது.
புதிய ஆடைகள் அணிந்திருக்கும் போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை..
இது மட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம், எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம்.
புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்து வித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது...
அரிசிக் கஞ்சியின் மகத்துவம்...
சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும்.
பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது.
இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி கழுவிய நீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்ற எலும்பு பலம் பெறும்...
புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?
நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.
உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக் கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.
இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.
அதை எப்படி வளர்த்துக் கொள்வது?
எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.
Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.
ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?
நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.
அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.
தயவு செய்து இனி படுத்த பிறகு அந்த நேரத்தில் பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகி விடும்.
உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்து விட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.
அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.
ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?
நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.
சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.
வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.
ஆம் நாம், பூமி, இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்...
ஆம் இந்த அரசு கஜா புயலை வெற்றிகரமாக கையாண்டுள்ளது...
சேத மதிப்பு வெளியே தெரியாத வண்ணம் கையாள்கிறது. ஒவ்வொரு அமைச்சருக்கும் ஓசியில் விளம்பரம்.
இன்று வரை தகவல் வராத பேராவூரணி பட்டுக்கோட்டை பகுதிகள் முழுவதுமாக சிதிலமடைந்துள்ளன.
முன்னறிவிப்பால் மனித உயிர் சேதாரம் கொஞ்சம் குறைந்துள்ளது.
மீட்பு நடவடிக்கை நிவாரணம் சுகாதாரம் என எதுவுமே துவக்க முடியவில்லை.
டெல்டா சோறு கேட்காது. ஆனால் இழந்த பொருட்கள் என்பது சென்னையை விட நூறு மடங்கு...
நான் படித்த உளவியலில் இருந்து ஊக்குவித்தல் (Motivation) பற்றி தெரிந்துக் கொள்வோம்...
ஊக்குவித்தல் (Motivation) என்ற சொல் இலத்தின் மொழிச் சொல்லான mover or motum எனும் சொல்லில் இருந்து உருவானது.
இச்சொல்லிற்குச் ‘செயல்படு’ அல்லது ‘செயல்பாட்டிற்கு உட்படுத்து’ என்று பொருள்.
எந்த ‘ஒரு செயல்’ ஒருவரை உடலியல் மற்றும் உளவியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம் ஒருவருடைய தேவையையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்கின்றதோ, அச்செயலே ‘ஊக்குவித்தல்’ எனப்படுகிறது..
.
மாஸ்லோ என்ற உளவியல் அறிஞர் ஊக்குவித்தல் என்பது ‘ஒரு தொடர் செயல்’, ‘முடிவுறாதது’, ‘மாறுபடக் கூடியது’ மற்றும் ‘கடினமானது’ என்று கூறுகிறார்..
மேலும் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உரிய குணம் என்றும் குறிப்பிடுகிறார்.
ஊக்கம் என்பது ஒரு மாணவனின் ‘உள்ளத் திட்பம்’. அது அவனுடைய குறிக்கோளை அடைய அகத்தூண்டுதல் காரணியாகச் செயல்படுகின்றது. ஒரு மாணவன் தனது வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை அடைய கற்றல் மிக அவசியமானது...
இலுமினாட்டி களின் 13 துறைகள்...
இலுமினாட்டிகள் உலகை 13 துறைகளாக பிரித்து ஆட்சி புரிகின்றனர். அவை...
1. நுகர்வு பொருட்கள் (Consumer products)
2. ஆற்றல் துறை (Power sector)
3. மருத்துவ துறை (Medical)
4. போக்குவரத்து துறை (Transport)
5. ஆயுதம் (Weapons)
6. ஊடகம் (Media)
7. நிதி (Finance)
8. அரசியல் (Politics)
9. உணவு மற்றும் குடிநீர் (Food & beverage)
10. சமயம் (Religion)
11. கல்வி (Education)
12. உள்கட்டமைப்பு (Infrastructure)
13. தொடர்பாடல் (Communication)
இவற்றை பற்றி ஒவ்வொன்றாக அவர்கள் கட்டுப்படுத்தும் நிறுவனங்களோடு சேர்த்து விரிவாக பின்பு பார்ப்போம்...
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
சில மர்மமான காரணங்களுக்காக, ஓரியன் (கார்த்திகை) என்ற நட்சத்திர மண்டலம் உலகெங்கிலும் உள்ள பண்டைய கலாச்சாரங்களுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
எகிப்தில் இருந்து மெக்ஸிகோ வரை, பண்டைய உலகெங்கும் உள்ள நினைவுச்சின்னங்களில் இந்த நட்சத்திரங்களின் துல்லியமாக சித்தரிக்கப்படுவதால், ஓரியனின் கூட்டு உறவு மனிதர்களிடம் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். அறியப்படாத காரணத்திற்காக, இந்த நட்சத்திர மண்டலம் நமது முன்னோர்களுக்கான வானத்தின் மையமாக இருந்துள்ளது.
வானியல் ரீதியாக சீரமைக்கப்பட்ட உலகெங்கிலும் ஏராளமான கட்டமைப்புகள் இருந்தாலும், சில நினைவுச்சின்னங்கள் வானத்தில் பிரதிபலிக்கின்றன. ஓரியன் விண்மீன் நட்சத்திரம் இரவில் வானத்தில் மிகவும் பிரபலமான நட்சத்திர மண்டலங்களில் ஒன்றாகும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூர்வகால கலாச்சாரங்களினால் எழுதப்பட்ட வரலாற்றுக்கு முன்பாகவும் இது புகழ்பெற்றது.
இந்த விண்மீன் மண்டலம் 8 ஆம் நூற்றாண்டில் இணைக்கப்பட்ட போது, நட்சத்திரங்கள் தலை, தோள்கள், பெல்ட் மற்றும் ஒரு மனிதனின் கால்களை உருவாக்குகின்றன. கிரேக்க புராணத்தின் படி, ஓரியன் மிகுந்த மனிதகுல திறன்களால் பிறந்தார், ஒரு வெண்கல சங்கத்துடன் விலங்குகளை கொன்ற ஒரு வலிமைமிக்க வேட்டைக்காரர்.
கிரேக்க நாயகன் இறுதியில் கொல்லப்பட்டபோது, அவர் நித்தியத்திற்காக நட்சத்திரங்களிடையே வைக்கப்பட்டார். அவரது தந்தை Poseidon ஆவார்.
கிசா பிரமிடு ஓரியன்...
கிசாவின் பெரிய பிரமிட் மற்றும் அதன் துணை அமைப்புகளில் பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை கவர்ந்தன.
இந்த கம்பீரமான கட்டமைப்புகள் கிரகத்தின் மேற்பரப்பில் கண்ணாடி போன்று அப்படியே பிரதிபலிக்கும் வகையில், சுவாரஸ்யமாக ஒரியனின் விண்மீன் கூட்டத்துடன் ஆழமாக இணைந்தது தெரிகிறது.
புராதன எகிப்திய நாகரிகம் சிரிஸ் மற்றும் ஓரியன் ஆகியோரிடமிருந்து வந்ததாக நம்பப்பட்டது,ஒசைரிஸ் மற்றும் ஐசிஸ் ஆகியவற்றைக் குறிப்பிடுவதாகவும், புராணங்களின் படி அவர்கள் மனித இனத்தை உருவாக்கிய வேற்றுலக கடவுள்கள் என நம்பினர்.
#தியோஹிகுயாகன்_ஓரியன்.
நாம் உலகெங்கிலும் பாதி வழியில் பயணம் செய்தால், புராதன நகரமான டௌடிஹுகானில் இன்னொரு கவர்ச்சிகரமான சம்பவத்தை கண்டுபிடிப்போம். வல்லுநர்களின் கூற்றுப்படி, தியோடிஹுகானின் முழு நகர அமைப்பும் வானியல் ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்கு மற்றும் கிழக்கில் 15 முதல் 25 டிகிரிக்கு சமமானதாக உள்ளது, மற்றும் சூரியனின் பிரமிட் முன் சுவர் சூரியன் அடுக்கடுக்காக அமைந்துள்ள சூரியன் அஸ்தமிக்கும் புள்ளியில் சரியாகச் செங்குத்தாக உள்ளது.
தியோடிஹுகானின் பிரமிடுகளின் அமைப்பானது அவர்கள் நமது சூரிய மண்டலத்தை பிரதிநிதித்துவப்படும் விதத்தில் வைக்கப்படுகிறது, ஆனால் ஓரியன்'ஸ் பெல்ட். பண்டைய புராணத்தின் படி, இது ஒரு புள்ளியாகும். 3114 பி.சி.யில், தேவதூதர்கள் ஒரு மாநாட்டில் வானத்திலிருந்து பூமிக்கு வந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.
பண்டைய ஹோப்பி ஓரியன்...
நவீன அமெரிக்காவின் வடபகுதிக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்து வந்தால், நாம் இறுதியாக புனித ஹோப்பி நிலத்திற்கு வருவோம். ஹோப்பி நாகரிகம் ஒரு பூர்வீக அமெரிக்க பழங்குடி ஆகும்,
அதன் அண்டவியல், நினைவுச்சின்னங்கள் மற்றும் நிலப்பரப்பு ஆகியவை ஓரியனின் விண்மீனைக் கொண்டிருக்கும் ஆழமான தொடர்பையும், மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா வரையான மற்ற பூர்வ நாகரீகங்களும், ஹோப்பி பழங்குடிகளும் கூட தங்கள் புனிதமான தளங்களை ஓரியன் விண்மீன் கூட்டம் அமைப்பில் வடிவமைத்தனர். இந்த நாகரிகம் அரிசோனா பாலைவனத்தின் மேல், 1.5 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் உள்ள 12 இடங்களை உள்ளடக்கிய.
ஓரியன் விண்மீன் மண்டலத்தின் முழு நட்சத்திர தோற்றத்தையும் பார்த்து, கொலராடோ ஆறு மற்றும் கிராண்ட் கேன்யன் அருகே பரவியிருக்கும் பண்டைய ஹோப்பி நகரங்களுடன் ஒப்பிடுகையில், நிலத்தை மேலே இருந்து நட்சத்திரங்களைப் போன்று இருக்கும் நிலையைக் கொண்டிருக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் ஒற்றுமையை நாம் கவனிக்கலாம்.
அவர்கள் தெய்வங்களுடனும், சில ஆராய்ச்சியாளர்களிடமிருந்தும் தொடர்பு கொள்ள முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஓரியன்ஸ் பெல்ட்டில் நட்சத்திரங்களை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், தென்மேற்கு முழுவதும் மற்ற ஹோப்பி நிலப்பகுதிகளை இணைக்கும்போது, கூட்டுத் தளங்கள் முழு உடையும் ஓரியன் விண்மீன் கூட்டம்.
சீனசியான் பிரமிடுகள் ஓரியன்...
பண்டைய சீனாவின் தலைநகரான சியானில 40 மைல் தொலைவில் அமைந்துள்ளது இந்த பிரமிடுகள்.
நபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பலமுறை, பலவகைப்பட்ட இயற்கை சீற்றத்தால் இப்போது ஒரு தூசி நிறைந்த வெண்மையாக இருக்கிறது இந்த பிரமிடு. இது 1,000 அடி உயர உயரம் கொண்டது - எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை போன்று நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த அசாதாரண கட்டமைப்பால், உலகில் மிகப்பெரிய பிரமிடு என்று கூறப்பட்டது மட்டுமல்லாமல் (எகிப்தின் மிகப்பெரிய பிரமிடு ஒப்பிடுகையில், வெறும் 450 அடி உயரம்); ஆனால், அதை சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளில், டஜன் கணக்கான பிற பிரமிடுகள் இருப்பதாகக் கூறப்பட்டது, இந்த பிரமிடுகளின் வடிவமைப்பும் ஓரியன்
விண்மீன் மண்டலங்களை அப்படியே பிரதிபலிக்கிறது.
சமீப காலம் வரை, சீன அதிகாரிகள் மர்மமான ஷஇந்த பிரமிடுகளைப் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் மற்றும் ஆய்வுகளுக்கும் மறுத்து
வருகின்றனர். இந்த வெள்ளை நிற சீன பிரமிடு பற்றி விளக்கமாக ஒரு பதிவில் பார்ப்போம்..
இந்த விண்மீன் மற்றும் பண்டைய உலகின் அனைத்து நாகரீக கட்டிடகலைகளின் ஒற்றுமை மூலம். எங்களது மூதாதையர்களின் கடவுள்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஓரியனில் இருந்து வந்திருக்கலாம். பூமியின் மேற்பரப்பில் அவற்றை நினைவூட்டுவதற்காகவே இந்த பிரமிடுகள் பண்டைய முன்னோர்களால் கட்டியிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்..
கார்த்திகை நட்சத்திர கூட்டத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக்கூடுமோ?
அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?
சுவாதி நட்சத்திரத்தையும் அதன் புதல்வர்களையும் வழி நடத்துவாயோ?
(யோபு 38:31-32)...
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
அமெரிக்காவின் விஸ்கான்சினில் ஆயிரக்கணக்கான வசிப்பவர்களைக் கொண்ட ஒரு சிறிய நகரமான கோல்ஃபாக்ஸின் அருகே ஏப்ரல் 19, 1978 அன்று, ஊர் காவல்படை அதிகாரி "மார்க் கோல்ட்ரான்" ரோந்துப் பணியில் இருந்தார். அவர் சிறிய தனிமைப்பட்ட பகுதியில், உணவருந்த தனது ரோந்து வாகனத்தை நிறுத்த முடிவு செய்தார்.
அப்போது அவரது பேசும் கருவியில் வெடிக்கும் சத்தம் போன்ற இரைச்சல், தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டிருந்ததை கவனித்தார். பின்னர் அவர் சுற்றுமுற்றும் பார்த்த போது மெட்டல் டிஸ்க் ஒன்று சிறிது தூரத்தில் வானத்தை நோக்கி உயர்ந்ததை கவனித்தார்.
அந்த வட்ட வடிவில் உள்ள பொருள் அவரை நோக்கி நகரும் போது, தனது Polaroid கேமரா மூலம் சில புகைப்படங்கள் எடுத்தார். பொருள் அதன் குறைந்த மேற்பரப்பில் சில விவரங்களை கவனிக்க முடியும் படி, புகைபடங்கள் மிக நெருக்கமாக இருந்தது.
மொத்த கவனிப்பும் ஒரு சில நிமிடங்கள் நீடித்தது, அது தன்னிடமிருந்து நெருக்கமாக போகும் போது தான் அதிர்ச்சியில் உறைந்ததாக கூறினார். அவர் தனது உயர் அதிகாரிகளிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் போது. அனைவரும் ஏளனமாக சிரித்தனர். ஆனால் புகைப்படங்களின் உண்மைதன்மை கண்டதும். அது அவர்களையும் ஆச்சரியம் அடையச்செய்தது..
இவைகள் மிக தெளிவான படங்கள், படக்கலை மாற்றம் என்று, எவ்விதம் எவருமே இதை மறுக்க முடியாது என்று அறிக்கை விடுத்தனர்...
அனைவரும் வேண்டுவோம்...
இயற்கையை மனதில் வேண்டுவோம் தினமும் இனி இந்த மண்ணையும் உயிரனங்களையும் இயற்கை காப்பாற்றும் எந்த தீங்கும் வராது..
இனி இயற்கை நன்மை மட்டுமே செய்யும் செய்கிறது என்று வேண்டுங்கள் மனதார..
நிச்சயம் இயற்கை கைகொடுக்கும் அனைத்து புயலும் தடம் மாறி சென்று அதன் கோபம் தனியும்..
கரம் சேருங்கள் அதிர்வலைகளை கூட்டுங்கள்...
Subscribe to:
Posts (Atom)