24/04/2018
கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அதன்மீது விவாதம் செய்வதற்கு உவன் என்றைக்கும் தயாராக இருக்கிறான்...
ஆனால் விவாதம் மட்டுமே செய்வதால்..?
நீங்கள் எங்களிடம் விவாதம் செய்து எங்களை எதிர்க்கிறோம் என்று நினைக்காதீர்கள்,
நீங்கள் எங்களை எதிர்க்கவில்லை, உங்களை தொடர்ந்து ஏமாற்றுபவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்புக்களை வழங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்..
இத்தனை ஆண்டுகளாக உங்களிடம் அரசியல் என்பதை சேர்க்காத அவர்களிடம் ஒருகேள்வி கூட கேட்பதில்லை..
ஆனால் உங்கள் அரசியலை உங்களிடம் சேர்க்க முயலும் எங்களிடம் தினமும் ஆயிரக்கணக்கான முடிவில்லாத விவாதங்கள்..
ஏன்..?
ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆயிரக்கணக்கில் திரண்ட விவசாயிகள்...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றக் கோரி உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் பல்லடம் பகுதிவாழ் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. காரணம் இதுவரை பல்லடம் நகரில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டங்களில் இதுபோல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதில்லை.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை ஒருமித்த குரலில் வலியுறுத்தி பேசினர்.
அதேபோல் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தின் செயல்வடிவம் பற்றியும் இத்திட்டத்தினால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் இந்நிகழ்வில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக அவினாசி அத்திக்கடவு திட்டக்குழுவினர் செய்ததுபோல ஆனைமலையாறு நல்லாறுத் திட்டம் உடனடியாக வேண்டும் என்ற நோக்கில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப் பகுதியைச் சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் பெயர் பலகைகள் திறக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
பாசனப் பகுதிகளின் முதல் மடை முதல் கடை மடைவரை அனைத்து விவசாயிகளையும் பொதுமக்களையும் கட்சி , அரசியல் சார்பற்று ஒருங்கிணைத்து அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதிகளில் திண்ணைக் கூட்டங்களையும் அறப்போராட்டங்களையும் நடத்துவது என்றும் பின்னர் சென்னை மாநகரத்தில் மிகப்பெரிய போராட்டம் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்திற்காக நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ஏர்கொடி ஏந்தி *வேண்டும் வேண்டும்* *ஆனைமலையாறு* *நல்லாறு* *வேண்டும்* என்று கோஷமிட்டபடி பேரணியாக வருகை தந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
சிறப்பான முறையில் இந்த அறப்போராட்டத்தை ஏற்பாடு செய்த ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினருக்கு அனைத்து பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் சார்பாகவும் எனது சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
மராட்டிய ரஜினியை மார்க்கெட்டிங் செய்வதற்கென்று தந்தி டிவியில் தனி குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வருகிறது...
தமிழ்நாட்டில் உள்ள திமுக-அதிமுக உட்பட எந்த கட்சியின் செய்தியாவது கட்சி தலைவர் முன்னிலையில் நடைபெறாத ஆலோசனை கூட்டம் பற்றி செய்தி வந்ததா சரித்திரமே இல்ல...
ஆனால் ரஜினியின் ரசிகர் மன்ற மாநில பொறுப்பாளர் முன்னிலையில் நடைபெறும் செய்தியைக்கூட ஒரு முக்கிய செய்தியா போட்டு மார்க்கெட்டிங் பண்ணுறான் தந்தி டிவி...
சித்தர் ஆவது எப்படி ? - 11...
பழைய சித்தர் பாடல்களில் அதி கவனம்...
உண்மையை சொன்னால் பூகம்பம்.. அதனால் உண்மைகள் மறைக்கப் பட்டது..
உண்மையை வெளிபடுத்த பொய்யையே பயன் படுத்த வேண்டி, மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உண்மையை பலப்படுத்தாது பொய்யையே பலப்படுத்தியது.. முடிவில் பொய்யே நிலைத்தது..
உலக புகழ் பெற்ற குருக்கள் தேர்ந்தெடுத்த வழிதான் பொய்யை பயன் படுத்தி உண்மையை வெளிப்படுத்த முயற்சித்தது.. முடிவில் தோல்வியே கண்டனர்..
கவர்ச்சிகரமான பொய்களை பலவற்றை தேர்ந்தெடுத்து அதில் உண்மையை மறைமுகமாக உபதேசம் செய்ய துணிந்தனர்...
நேரடியான உண்மையை சொன்னால், கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற வள்ளலார் நிலைக்கு செல்ல வேண்டி வருமே என்ற தயக்கமே..
இதற்கு நல்ல உதாரணம் ஓசோ..
பல கவர்ச்சி பேச்சுகள் நகைசுவை பல சம்பவங்கள் நடுவே உண்மையை சொல்ல முயன்றார்.. ஆனால் அவரின் நகைசுவையிலும், கதைகளில் ஈர்க்கப் பட்டார்களே தவிர அவர் சொன்ன உண்மையில், எவரும் கவனம் செலுத்தவே இல்லை..
ஓசோ சொன்னவை அற்புதம் அற்புதம் என்று சொல்லுபவர்கள் எல்லாம் அவர் சொன்ன கதைகளையும் நகைசுவைகளையும் மட்டுமே..
அவர் சொன்ன இருப்பு தன்மை, Beingness, existential, Emptiness சூன்யம், அன்பு போன்றவைகள், அவரின் கவர்ச்சி பேச்சில், தொலைந்து போய் விட்டது... உண்மைகளை பற்றி குறிப்பாக பேசும் ஓஸோ அன்பர்கள் ஒருவரையேனும் இன்று காணோம்.. அன்றும் ஒசோ காலத்திலும் இல்லை....
அதே போலத்தான் சித்தர்கள் சொன்ன கவர்ச்சியற்ற சத்திய உண்மைகள் துளி அளவும் எடு பட வில்லை... அதை போக்க சின்ன தவறு செய்தார்கள்..
சற்று கவர்ச்சி கூட்ட இரசவாதம், இரசமணி, முப்பு என்று உலகியலையும் அகயியலையும் குறிக்கும் இரண்டு பொருள் பட கொண்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தினார்கள்..
உண்மை புரியாமல் மறைப்பு பொருள் என நம்பி உலகத்தார் உலகியல் பொருள் அர்த்தமாக கொண்டு அதை தேடி தேடி பல நூற்றாண்டுகளாக தங்கள் வாழ்வினை வீணாக்கினர்..
அந்த மறைப்பு பொருளில், தான் உண்மையை கண்டு கொண்டதாக சொன்னவர்கள் தனது பிழைப்புக்காகவும், பின் தான் தப்பித்து கொள்வதற்காகவும், சித்தர் பாடல்களை திருத்தி திருத்தி மக்களை திசை திருப்பினர்..
பழைய சித்தர் பாடல்களை அடையாளம் தெரியாமல் எரித்து விட்டனர்..
பழைய சித்தர்கள் பாடல்கள் அனைத்தும் பிழைப்புக் காரர்களால் சித்தர் நடையிலே பாரப்பா, வாருமப்பா, சேரப்பா என்ற தோரணையில் திருத்தி எழுதப்பட்டவையே..
அந்த பிழைப்புக் காரர்கள் கவர்ச்சியற்ற உண்மையை சொல்ல முயன்ற திருமுலர், சிவ வாக்கியர் போன்றோர் நூல்களில் கைவைக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டனர்..
காரணம் இலக்கணம் என்ற முத்திரை பலமாக பதிக்கப் பட்டதால் அவைகளில் கைவைக்க முடியவில்லை..
காட்டில் வாழ்ந்த சித்தர்கள் இலக்கணம் இலக்கியம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தாமல் யதார்த்த நடையிலே சொன்னதால் பிழைப்புக் காரர்கள் அவர்களின் பாடல்களை நன்றாகவே தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு, எங்கும் கிடைக்காத சித்தர் பாடல்களை தனக்கு மட்டுமே கிடைத்தது என அப்பாவி மக்களுக்கு ஏமாற்றி, திருத்திய பாடல்களை விற்றார்கள்..
இதற்கு சாட்சி பல நூற்றாண்டுகள் முன்பு எழுதிய பாடல்களில் குறுகிய காலத்தில் பயன் பட்ட வார்த்தைகளை சேர்ந்து இருப்பதே..
இதனை பல தமிழ் அறிஞர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.. நம்பகதன்மை அற்ற நிலையை நிரூபித்து இருக்கிறார்கள்..
அப்படி திருத்திய பாடல்களில் சிக்கிய மனித குலம் அன்று முதல் இன்று வரை மீளவே முடியாமல் இருக்கிறது..
இரசவாதம் ரசமணி முப்பு போன்றவற்றிலும், சில யோக நூல்களும், உண்மைக்கு புறம்பாக திருத்தி எழுதப் பட்ட நிலையில் சிலர் அதனை வேத வாக்காக கொண்டு பித்தர்கள் போல் அலைந்து தன் வாழ்நாளை வீணாக்கி பரிதாப நிலைக்கு செல்லுகிறார்கள்..
இதுவரை ஒருவரும் முப்பை கண்டதும் இல்லை; இரசவாதத்தில் தங்கம் பண்ணவும் இல்லை..
மனம் என்ற பூதம் மட்டுமே நெருப்பு தன்மையால் இராசயன மாற்றம் ஏற்படுத்தக் கூடியது.. மற்ற பூதங்கள் பௌதிக மாற்றம் மட்டுமே செய்யும்..
இராசயன மாற்றம் செய்யும் நெருப்பு என்ற பூதம் தன் இருப்பு தன்மையில் இரசம் என்ற சத்துப் பொருளான பிரபஞ்ச ஆற்றலை கனலாக தக்க வைக்கவும், வெளிச்சமாக மாற்றி, பொறி புலன்களில் வெளியேற்றவும் செய்ய வல்லது..
பல பல ஜென்மங்களின் பதிவுகளின் அம்சமான சித்தத்தின் வெளிச்சத்தை, அளவற்ற கனலாக மாற்றி மிக பெரிய சக்தியை, தன் இரசாயன மாற்றத்தால் கனலாக மாற்றி வாதம் என்ற காற்று பூதமான புத்தியில் கலக்க செய்யும் யுக்தியே இரசவாதம்..
பிழைப்புக் காரர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றியதால் பல பேர் தங்கம் மாற்றும் வித்தையில் சித்தம் கலங்கி போய் இருக்கிறார்கள்..
நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவெண்றால் இப்படி திருத்தி அமைக்கப் பட்ட சித்தர் பாடல்களிலே சிக்குண்டவர்கள் பேச்சுக்கள் நடைமுறைகள் அனைத்தும் சித்தம் கலங்கியது போலவே இருக்கும்..
தாங்கள் கற்றதை, விடமுடியாமல் ஏற்கெனவே சொன்ன பொய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள, வகை அறியாமல் சொன்னதையே சொல்லி சொல்லி தன்னை காத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள்..
உண்மையை அறிந்தாலும் தன்னை காத்துக் கொள்ள பொய்யை விடமாட்டார்கள்..
இத்தகையவர்களிடமிருந்து உண்மையை துளியும் பெற முடியாது என்பது இயற்கையே...
அவர்களை பாவம் என்று விட்டு விட வேண்டியது தான்..
கவர்ச்சி இல்லாத சித்தர் பாடல்களில் கவனம் செலுத்த, வெளிச்சமான மனம் ஒரு போதும் உதவாது.. புத்தி ஒன்றே உதவும்..
ஆகவே தான் கனல் மயமான புத்தியை அதாவது சத்திய வழி காட்டலான அககுருவை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஆகிறது..
இனி வரும் பகுதிகளில் சத்தியத்தை, உண்மையை, நோக்கி சிறுக சிறுக ஆனால் உறுதியான பிடிப்போடு முன்னேறுவோம்..
ஜோதிடம் - புத்திர தோசமும் பரிகாரமும்...
5ஆம் அதிபதி 6ஆம் அதிபதியுடன் கூடி இருந்து சுபர் பார்வை இல்லையெனில் சாதகன் பிள்ளையின்றி தவிப்பான்.
5ஆம் அதிபதி 5இலே இருந்து சுபர் பார்வை இல்லையெனில் தெய்வ சாபத்தால் ஆண்பிள்ளை இருக்காது.
4ல் பாவிகளும், 12ல் 5ஆம் அதிபதியும் சனியும் இருந்து பாவிகளின் தொடர்புபட தாயின் சாபத்தால் குழந்தை பிறக்காது.
2 மற்றும் 12ஆம் வீடுகளில் சுபர்கள் இருக்க, அவை பாவிகளின் வீடாகி, 9க்கு உரியது 12இலும், பாவிகள் 5இலும் இருந்து லக்னாதிபதி அஸ்மனம் அடைந்து இருந்தால் புத்திர தோசத்தால் குலம் அழியும்.
1-8-12களில் சனியும் செவ்வாயும் இருந்தால் பிள்ளை பிறக்காது.
புதனும் சுக்ரனும் 8-10களிலும், 8க்குடையது 5இலும், இலக்னாதிபதி பாவருடன் கூடி 10இலும் இருக்க புதல்வர் இல்லை.
5ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் நீதிவாய்ந்த ஒருபிள்ளை மட்டுமே பேர் சொல்ல இருப்பான். மற்றபடி குழந்தைகள் பிறந்தாலும் இறந்துவிடும்.
5-7ஆம் அதிபதிகள் கேந்திரந்தில் இருந்து வலுப்பெற, 6ஆம் அதிபதி வலுப்பெற்று சேர்ந்தாலும் பார்த்தாலும் அச்சாதகனுக்கு பிள்ளை இல்லை.
குலதெய்வ வழிபாடு அவசியம்.
அந்தியில் குளித்தபின் உறவின்போது முழங்கால் மடித்து முழுவதும் உள்வாங்கி சிந்தை ஒன்றி செய்தால் கருத்தரிப்பாள்.
உங்கள் ஆழ்மன பதிவை சுயக்கருத்தேற்றால் மாற்றினால் குழந்தை பிறக்கும்.
தகவலை மாற்றினால் அனைத்தையும் மாற்றலாம்...
உடல் எடையை குறைக்க முயற்சி பண்றீங்களா? கவலையை விடுங்க...
இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது மென்பொருளில் (In software) வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.
பச்சை மிளகாய் சாப்பிடுங்க... உடல் எடை குறையும்...
உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.
எனவே உடலை குறைக்க இனிமேல் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (gym) சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.
மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்...
பிரபஞ்ச சக்தி...
நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம்.
அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
முதலில் அடுத்தவர் நோயால் படும் அவதியை மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களை இந்த வகையில் குணமாக்கவோ, குறைத்து விடவோ முடியும்.
ரெய்கி, ப்ராணிக் ஹீலிங் போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை முறையாகக் கற்றுத் தேர்வது குணப்படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும்.
அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக் குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும், பயிற்சிகளைச் செய்து தேர்ந்திருந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி செய்பவர் பெற்றிருக்க வேண்டும்.
இத் தொடரின் ஆரம்பத்தில் மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப் பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்.
கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே.
ஆனால் அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.
சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.
1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.
கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.
ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?
இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?
அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?
எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.
பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.
நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.
நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.
அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.
தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.
பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.
ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.
சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்.
இதையெல்லாம் பார்க்கையில் இந்த அவசர நவீன காலத்தில் கூட குறுகிய காலத்தில் நிறைய சாதிக்க, அதுவும் மிகச் சிறப்பாக சாதிக்க, பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ள செலவழிக்கும் காலம் மிக நல்ல முதலீடு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது...
மக்களதிகாரம் செயல்பாட்டு வரைவு (திட்ட அறிக்கை)...
நம் வாழ்வாதார பிரச்சனைகளை கண்டு ஆற்றாமையால் துவண்டதும், கொதித்ததும் போதும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திப்போமா..?
1. இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன?
2. நமக்கு தேவை ஆட்சி மாற்றமா அல்லது.. அடிப்படை மாற்றமா?
3. எத்தகைய மாற்றங்கள் நம்மையும் நமது அடுத்த தலைமுறைகளையும், இயற்கையையும் பாதுகாக்கும்?
4. வன்முறை அற்ற, நிரந்தர தீர்வைப்பற்றி, நடைமுறைக்கு சாத்தியப்படும் வகையில் வடிவமைக்க நேர்மறை எண்ணமும், ஆர்வமும், தேடலும் , அதிக நேரமும் செலவிட நான் தயார் என்பவர்கள் மட்டும் குழுவில் இணைந்து பங்கெடுக்க உங்கள் கருத்துகளை பதியவும்.
5. மாற்று அரசியல் மற்றும் வாழ்வியல் மாற்றம் ~ தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு செயல்பாட்டு வரைவை உருவாக்க ஒற்றை கருத்தியல் கொண்ட சிறுகுழுவில் திட்ட அறிக்கை தயார் செய்து முழுவடிவம் கிடைத்தவுடன் மக்களிடம் கொண்டு செல்வோம்...
இராவணன் வெட்டு என்பது...
இராவணன் தனது தாயாரில் மிகுந்த பாசம் உள்ளவன். அவனது தாயார் தினமும் கோணேசர் கோவிலுக்கு சென்று லிங்கத்துக்கு பூசை செய்வாராம். ஒருசமயம் அவனது தாயார் இறக்கும் வகையிலான நோய் அடைந்தார்.
அதனால் அவரால் கோணேசருக்கு பூசை பண்ண முடியவில்லையே என வருந்தினாராம். அப்போ இராவணன் அம்மா நீ ஏன் கோணேசர் மலைக்கு போகனும் அந்த மலையையே நான் வெட்டி எடுத்து உன்னிடம் கொண்டு வருகிறேன் என்று சொல்லி போனானாம்.
அவன் கோணேசர் மலையை தோண்டி எடுக்க தனது வாளால் அந்த மலையின் அடிப்பக்கத்ததில் வெட்டிய வெட்டுக்குப் பெயர்தான் இராவணன் வெட்டு என்பது.
அந்த வெட்டுப்பட்ட மலை இன்னும் அங்கே இருக்கிறது (அதாவது வெட்டப்பட்ட மலை இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள்).
மலை அசைந்ததால் அங்கே இருந்த பார்வதி பயந்து போய் சிவனைக் கட்டிப்பிடித்தாராம். அப்போ சிவன் தனது காலால் அம்மலையை அமர்த்தினாராம்.
அந்த அழுத்தம் மலையை தூக்க ஆரம்பித்த இராவணனால் தாங்க முடியாமல் போனதாம்.
உடனே அவன் தனது தலை ஒன்றையும் கை ஒன்றையும் பிய்த்து வீணை செய்து தனது நரம்புகளால் வீணைக்கு நரம்பு பூட்டி வாசித்தானாம்.
அவனது நாதத்துக்கு மயங்கி சிவன் காலை எடுத்தாராம். அப்போது இராவணன் தப்பினானாம்.
இது நடந்து வீட்டுக்கு வரும் போது தாய் இறந்த செய்தி கேட்டு உடனே வாளால் தர்ப்பணம் செய்ய மண்ணில் குத்தினானாம் அதனால் உருவானது தான் வெந்நீர் ஊற்றுகள்...
மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்...
இதைச் செய்வது அறநிலையத் துறையா அல்லது மக்களுக்கு நல்லது செய்வதாக நினைக்கும் அமைப்புக்களோ, தனிநபர்களோவா தெரியாது.
ஆனால் இது முட்டாள்தனம்...
ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்யூபிரஷர் செருப்பு வாங்குவதை விட, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்யூபிரஷர் உபகரணங்கள் வாங்குவதை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு அக்யூபிரஷர் தெரப்பிஸ்ட்டுகளைப் பார்க்க காத்திருப்பதை விட...
எளிய, காஸ்ட் எஃபெக்டிவ் பிராஸஸ் கருங்கல் தரையில் நடப்பது.
கோயிலை ஐம்பது சுற்று சுற்றுகிறேன், நூறு சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு சுற்றிவிட்டு உடலும் மனமும் ஆரோக்யமாக இருப்பதை வியப்பார்கள். அந்தப் பலனை ஆண்டவனுக்கு அட்ரிப்யுட் செய்வார்கள்.
மலைகளில் கோயில்கள் அமைத்ததற்கும், பிரஹாரங்களைக் கருங்கல் கொண்டு அமைத்ததற்கும் காரணம் அக்யூபிரஷர் என்பதை அறிக.
வாரம் ஒரு முறையாவது மலையில் அமைந்த கோயில் ஒன்றுக்குப் போய் வாருங்கள்.. உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்...
வீரபாண்டிய கட்டபொம்மன் அல்ல, கெட்டி பொம்மு நாயக்கன்...
கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர் புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது .
வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம், நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல . நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்.
இனி கெட்டி பொம்மனின் வீர தீர செயல்களை நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளதை கொஞ்சம் காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் .
புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே..
முதலில் கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுதுவதே
ஒரு வரலாற்று பிழையாகும் .
மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளத் தடைப்பட்ட பொது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர் , பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர் , இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ளவேண்டும்.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மொழி வழி தேசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும் சூழலிலேயே வீட்டிலும், இரண்டு பிற மொழியினர் தனியே பேசிக்கொள்ளும் போதும் அவரவர் தாய் மொழியிலேயே 'மாட்லாடி கொள்ளும் போது' ஒரு ஆட்சியாளனாக இருந்த தமிழ் மண்ணை ஆண்ட கெட்டி பொம்மு நாயக்கன் திரை படத்தில் வருவது போல் தமிழில் வீர வசனம் பேசியிருப்பானா ?
ஜாக்சன் துரையிடம் டப்பு லேது' என்று தான் மாட்டிலாடியிருப்பார். என்பதை பொய்யுரை பரப்புவோர் கவனிக்க வேண்டும் .
மேலும் இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில்தான் .
முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்துகொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண் பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான் .
அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வர்புரிதிப் பெற்றான், கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான், அவர்களை சாட்டையால் அடித்தும், கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான் .
கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும், நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினான் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும், சாட்டையடியும் வழங்கப்பட்டது.
ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன்போல பொய்யுரை பரப்புவோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள முனைவர் கே .கே . பிள்ளையின் தமிழக வராலாறு , மக்களும் பண்பாடும் என்ற நூலை படிக்கவும்.
மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டிவைத்தான் . அவைகள் கற்றளிகள் அல்ல வெறும் ஓலை குடிசைகளே. அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர்.
ஏனெனில் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர் . இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர் .
ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை. இதை நா.வானமாமலை பதிபுத்துள்ள ''வீரபாண்டிய கெட்டி பொம்மு கதை பாடல்'' நூல் மூலம்அறியலாம்.
ஆயுதம் ஏந்திய பாஞ்சாலன் குறிச்சியின் ஆட்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கூலியாட்களுடன் எட்டயபுரத்தை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் கம்மங் கதிர்களை அறுத்துக் கொள்ளையிட்டு சென்றனர் . இது தொடர்பாக எட்டப்ப நாயக்கன் 15.01.1799-ல் ஜாக்சனுக்கு புகார் அனுப்பினான் .
ஊத்துமலை பாளையத்தில் கங்கை கொண்டான் வட்டத்திலுள்ள மனியகாரரை மிக மோசமாக நடத்தி இரவு நேரத்தில் கால்நடைகளையும் , அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர் என்று 13.06.1799-ல் ஊத்துமலை பாளையக்காரர் லூசிங்க்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
05.08.1799-ல் சிவகிரி பாளையக்காரர் அனுப்பிய புகார், 07.08.1799-ல் ஊத்துமலை பாளையக்காரர் அனுப்பிய புகார் ஆகியவற்றில் கெட்டி பொம்முவின் தம்பி துரைசிங்கம், தானாபதி பிள்ளை ஆகியோருடன் கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, அழகாபுரி, நாகலாபுரம், காடல்குடி, குளத்தூர், மணியாச்சி , மேலமந்தை, ஆத்தங்கரை, கடம்பூர் பாளையங்களை சேர்ந்தவர்களும் கொள்ளையடித்துள்ளனர் என்பதும், எட்டயபுரம், ஊத்துமலை, சொக்கம்பட்டி, ஆவுடயாபுரம், தலைவன் கோட்டை ஆகிய கும்பினிய ஆதரவு பாளையக்காரர் களுக்கும் போதிய பாதுகாப்பு அழிக்க கோரி மேற்கண்ட கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த வரலாற்றை J.F. KERANS - Some Account of the Panchalamkurichy polegar and the State of Trinelvelly . என்ற நூலில் பதியப்பட்டுள்ளது..
இந்த வரலாற்றை மாற்றி தமிழர்களை ஏமாற்றி பிழைத்து கொண்டிருப்பது இங்கு திராவிட போர்வையில் இருக்கும் தெலுங்கர்கள்...
கோக், பெப்ஸியால், பக்கவாதம் வரும்.. பைத்தியம் பிடிக்கும் - அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவல்...
கோக், பெப்ஸியை பற்றி பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்தாலும், நமது நடிகர்களை வைத்து, விளம்பரப்படுத்தி அதனை மறக்கடிக்கச் செய்து விடுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ குழு ஒன்று நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 10 வருடங்களாக பக்கவாதம், dementia எனப்படும் மனக்குழப்பம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 4300 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
இதன் மூலம் தெரியவந்தது என்னவென்றால், ஒரு நாளைக்கு ஒரு முறை செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட டயட் கோக், பெப்ஸி மேக்ஸ் குடித்தாலே, பக்கவாதம் மற்றும் dementia வரும் ஆபத்து 3 மடங்கு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆய்விற்கு கோக், பெப்ஸி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இதுபற்றி விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆதாரம் : JUST ONE DIET COKE OR PEPSI MAX A DAY CAN ‘TRIPLE THE RISK OF A DEADLY STROKE’ AND DEMENTIA, RESEARCHERS CLAIM...
கோவில்களில் பாலியலில் சிற்பங்கள் போதிக்கும் தத்துவம்...
இவ்வகையான பாலியல் சிற்பங்கள் கோபுரத்தின் வெளிப்புறத்தில் தான் காணப்படும்.
ஒரு மனிதன் பாலியலில் உச்சத்தில் இருக்கும் போது நான் என்ற சிந்தை இல்லாமல் இருப்பான்.
நான் என்ற சிந்தை எந்த தருணத்தில் அறுந்து போகிறதோ அந்த தருணத்தில் அவன் இறைத்தன்மையை அடைகிறான்.
ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக நான் என்ற அகந்தையற்ற சிந்தனை காமத்தில் 1 நிமிடம் கூட நீடிப்பதில்லை. இதன் காரணமாகவே இதனை சிற்றின்பம் என்று கூறுகிறார்கள்.
இத்தகைய நிலையை தியானத்தின் மூலமாக மட்டுமே ஒரு மனிதனால் நிரந்திரமாக அடைய முடியும். அதனால் இதை பேரின்பம் என்று கூறுகிறார்கள்.
காமத்தை எவ்வளவு தான் உயர்த்திப் பிடித்தாலும் அது வெறும் வெளிப்புற இச்சையாகவே கருதப்படுகிறது. அதன் காரணத்தினால் தான் இத்தகைய சிற்பம் வெளிப்புறமாக செதுக்கப்பட்டிருக்கிறது.
நான் என்ற அகந்தையற்ற சிந்தனையை ஒரு மனிதனால் தியானத்தின் மூலமாக மட்டுமே நிரந்திரமாக பெற்று முக்தியடைய முடியும்.
இங்கே தியானமானது மனதால் மட்டுமே சித்தமாகும் விசயம்.
அதனால் தான் கருவறை முதல் தியான மண்டபம் வரை கோவிலின் உள்ளே இருக்கிறது.
அக புறத்தில் கிடைக்கும் 1 நிமிட இறைத்தன்மையை காட்டிலும் அகத்தின் மூலமாக நித்திய இறைத்தன்மைக்கு வழி வகை செய் என்பதை உணர்த்தவே பாலியல் சிற்பம் கோவிலின் வெளிப்புறம் நிறுவப்பட்டுள்ளது...
Subscribe to:
Posts (Atom)