05/08/2017
திராவிட அமைப்புகளே...
காவிரியில் காட்டிக்கொடுப்பு..
கச்சத்தீவில் கழுத்தறுப்பு..
பாலாற்றில் காட்டிக்கொடுப்பு..
முல்லைப்பெரியாற்று உரிமை விட்டுக் கொடுப்பு..
ஈழத் தமிழர்களை அழிக்க துணை நிற்பு..
தமிழ்நாடு முழுக்க தெலுங்கருக்கு சிலைகள்..
கருணாநிதி கட்டிய சட்டமன்றத்திற்கு தெலுங்கன் ஓமந்தூரார் பெயர்..
சென்னையின் ஒவ்வொரு தெருவுக்கும் தெலுங்கன் பெயர் தெலுங்கர் சிலைகள்..
பூங்காக்கள் தோறும் தெலுங்கரின் பெயரில்.
தமிழ்நாட்டு இசையோ தெலுங்கில்..
பள்ளிகளிலோ தமிழே இல்லை.. ஆங்கிலம்..
சாதி ஒழிப்பு சாதி ஒழிப்பு என்று மேடை தோறும் பேசினாலும் மாதத்திற்கொரு சாதிச்சண்டை..
ஆளுங்கட்சி கன்னடர் என்றால் எதிர்க்கட்சி தெலுங்கர்..
அவனை விட்டால் அதற்கடுத்து வருவதற்கு தயாராய் மற்றொரு தெலுங்கர்..
இங்கே தமிழர்கள் கட்சி தொடங்கினால் அது சாதிக்கட்சி..
வந்தேறிகள் தொடங்கினால் அது திராவிடக் கட்சி..
குடிமகன்களாக தமிழர்கள் ஆக்கப்பட்டுள்ள அவலம்..
கூலிகளாக தமிழர்கள்..
வந்தேறிகள் கையில் தொழில் வளம், அதிகாரம், ஊடகம்.
உணவகம் முதல் கக்கூஸ் ஏலம் எடுப்பது வரை வந்தேறிகள் கையில்..
இப்படி இந்த நூறு ஆண்டுகளில் உங்கள் திராவிடத்தால் நீங்கள் சாதித்தது என்ன?
உங்கள் திராவிடத்தின் கொள்கை பிராமண ஒழிப்பா? தமிழின ஒழிப்பா?
தமிழர்கள் தங்களது அடையாளத்தையும், மொழியின் மாண்பையும் இழந்து வருகிறார்கள்...
ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார்.
போர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பேரரசு நிறுவியவர்கள், கலாச்சார ரீதியில் சென்றவர்கள்
என 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம்.
ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். பிரித்தானியர் பேரரசை நிலைநாட்டப் புலம் பெயர்ந்தவர்கள்.
சீனர்களும் லெபனானியர்களும் வணிகர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். கரீபியர்கள் கலாச்சார ரீதியில் புலம் பெயர்ந்தவர்கள். ஆனால் யூதர்கள் மட்டும் முற்றிலும் வேறுபாடான வகையில் புலம் பெயர்ந்தவர்கள்.
தற்போது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களது அடையாளத்தையும், மொழியி்ன் மாண்பையும் படிப்படியாக தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்...
தமிழகத்தில் அழிவது அமெரிக்காவில் வளர்கிறது...
இந்த காலத்திற்கு ஆங்கிலம் மட்டுமே போதும் என்று பெரும்பான்மையான தமிழர்கள் கருதி, தமிழை ஒதுக்கி வைத்து, தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பை அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே அழித்து கொண்டிருக்கிறார்கள்..
அதனால் தமிழகத்தில் தமிழ் வழி அழியுது. அதே நேரத்தில் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழிபயிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது. ஆனால் தமிழகத்தில் அழியும் தமிழ் அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதை நான் சொல்லவில்லை அமெரிக்காவின் புகழ் பெற்ற டிவி நிறுவனமான என்பிசிநியூஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது
Jun 30 2015, 9:10 am ET Tamil Language SchoolsOn the Rise in United States தமிழகத்தில் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழிபயிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது
தமிழகத்தில் ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை? அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் தமிழ் மீதான ஒரு வகையான அறுவருப்பு தமிழர்கள் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் இன்றைய கால கட்டத்தில் நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மம்மி டாடி என்று சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் புலம் பெயர்ந்து ஆங்கிலம் பேச கூடிய நாடுகளில் வசிக்கும் மக்கள் தாய்மொழியின் அருமையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கின்றனர்
அது மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மிக அதிகம் இங்குள்ள குழந்தைகள் ஆங்கில வழி கல்வி கற்பதால் தமிழக்த்தில் இருந்து வரும் ஆங்கிலம் அதிகம் தெரியாத தாத்தா பாட்டிகளிடையே பேசுவது கடினமாக உள்ளது. தாத்தா பாட்டியை விரும்பாத குழந்தைகளே இல்லை. அதனால் இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை கற்று கொடுக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் தாங்கள் கற்றுதருவதைவிட ஏதாவது தமிழ் கற்றுக் கொடுக்கும் இடங்களில் படித்தால் மிக எளிதாக குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். இதனால்தான் என்னவோ ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் அநேக தமிழ் சங்கங்களும் அல்லது அங்குள்ள கோவில்களிலும் தமிழ் கற்று கொடுக்கப்படுகின்றன. இப்படி கற்றுக் கொடுக்கும் குழுக்களில் 1998 ல் ஆரம்பிக்கபட்ட கலிபோர்னியா தமிழ் அகடமி மிக சிறந்த இடத்தை பிடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் தமிழ் பேசமட்டுமல்ல எழுத படிக்கவும் கற்று தருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இசை நடனம் நாடகம் போன்ற தமிழ் பண்பாட்டை போதிக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து நடத்தி வருகிறது என்பது இங்கு குறிப்பிடதக்கது
California Tamil Academy was founded in 1998 in the Bay Area, and now has six branches, 40 affiliated schools http://www.catamilacademy.org/branches.html in 13 other states and two other countries, 5,500 students, and 700 volunteers including teachers and parents. California Tamil Academy provides academic and technical support to help those who want to start independent Tamil schools. Some public schools give students high school credit for studying Tamil at language schools.
இந்த நிலமை நீடித்தால் வருங்காலத்தில் தமிழகத்தில் வளரும் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ள அமெரிக்கா நோக்கி வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை..
அது போல அமெரிக்கா குழந்தைகள் தண்ணி அடிக்க கற்றுக் கொள்ள தமிழகத்திற்குதான் வர வேண்டி இருக்கும்... எப்படி ஒரு மாற்றம்...
தமிழன் திராவிடன் அல்ல.. திராவிடன் தமிழன் அல்ல...
என்று நான் கூறியபோது எதிர்த்த தமிழர்களே...
இதோ திமுக நேரு ரெட்டியார் என்ன சொல்லியிருக்கிறார் என்று நாளிதழ் செய்தியை படியுங்கள்.. சிந்தியுங்கள்...
இனம் இனத்தோடு தான் சேரும்..
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..
தமிழர் நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடா?
தமிழனை ஆள தெலுங்கு வந்தேறியும்?
கன்னட வந்தேறியுமா?
வந்தேறிகளை புறகணிப்போம்...
தமிழராய் ஒன்றிணைவோம்...
மூன்றாம் உலகப்போரும் தமிழின எழுச்சியும்...
ஓட்டோமான் பேரரசின் (Ottoman empire) ஆதிக்கத்தை எதிர்த்த 'செர்பிய இனவெழுச்சி' முதல் உலகப்போரைத் (WW1) தோற்றுவித்தது.
முதல் உலகப்போரில் வென்றநாடுகளின் (Allied powers) ஆதிக்கத்தை எதிர்த்த 'ஜெர்மானிய இனவெழுச்சி' இரண்டாம் உலகப்போரைத் (WW2) தோற்றுவித்தது.
இந்திய ஆதிக்கத்தை எதிர்த்த 'தமிழின எழுச்சி' மூன்றாம் உலகப்போரைத் (WW3) தோற்று விக்கலாம்...
மரணம் இப்படித் தான் இருக்குமா...?
யோகி முதல் போகி வரை கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பது தான்..
போகுமிடம் என்றால் என்ன? மரணத்திற்கப் பின் நம் உயிர் பறவைக்கு உடல் கூட்டிலிருந்து விடுதலை கிடைத்தபின் அது அடையக் கூடிய நிலை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் போகும் இடத்தைப் பற்றிய விவரங்கள் சுலபமாகக் கிடைத்து விடும். அத்தகைய உயர்நிலையை அறிந்துகொள்ள செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆதாரமாக கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் பல நபர்களின் வாக்கு மூலங்கள் முழுமையாக நமக்குக் கிடைத்து இருக்கிறது. இருப்பினும் பெரும்பாலான வாக்கு மூலங்களில் அந்தந்த நபர்களின் சுய கற்பனைகளும் பய உணர்ச்சியால் ஏற்பட்ட வார்த்தை தடுமாற்றங்களும் நிறைந்து இருக்கின்றன என்பதை மறப்பதற்கில்லை. ஆனாலும் அந்த வாக்கு மூலங்களில் சில உண்மைகளும் பல ஒற்றுமைகளும் இருக்கிறது. அவைகளைப் பற்றி சிறிது பார்ப்போம்.
கனடா நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் 1954ம் வருடம் மார்ச் மாதம் 17ம் தேதி காலை 8.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து மூன்று மணி நேரம் கழித்து திடீரென தனது சாவுப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். வழி தவறி அடையாளம் தெரியாத இடத்தில் அகப்பட்டு மீண்டும் தனது சொந்த இடத்தை எதேச்சையாக அடைந்த நபர் போல மிரண்டுபோய் இருந்தார். அவரிடம் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று கேட்டபோது காலையில் தன்னால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கு உடலில் இனம் தெரியாத வலி இருந்தது. அதனால்தான் மிகவும் வேதனையும் சோர்வும் அனுபவித்தேன். திடீரென்று தன்முன்னே வெள்ளை நிறத்தில் தேவதைகள் போல் மூன்று நபர்கள் வந்தனர். அவர்கள் தன்னை தன் உடலுக்குள் இருந்து வெளியே இழுத்தனர். அப்போது படுக்கையில் கிடக்கும் எனது உடலைப் பூரணமாக என்னால் பார்க்க முடிந்தது. அதன்பின் அந்த மூன்று நபர்களும் வெளிச்சம் மிகுந்த ஒரு பாதையில் தன்னை அழைத்துச் சென்றனர். அவர்களுக்குள் புரியாத பாஷையில் ஏதேதோ பேசிக் கொண்டனர். அதில் ஒரு வார்த்தைக் கூட எனக்குப் புரியவில்லை. சிறிது தூரம் கடந்தபின் அவர்களுக்குள் பேசி ஏதோ முடிவுக்கு வந்து என்னை மீண்டும் உடம்பிற்குள்ளேயே தள்ளிவிட்டு விட்டனர். அதன் பின்னரே தான் எழுந்து உட்கார்ந்ததாகவும் கூறினார். அந்த மூன்று தேவதைகளின் முக அழகு இன்னும் தனது மனதில் பூரணமாக நிறைந்து இருப்பதாகக் கூறி சந்தோஷப்பட்டார்.
இதே போன்ற ஒரு சம்பவம் அபுதாபியில 1975ம் வருடம் ஜனவரி மாதம் நடந்தது. 30 வயது இளைஞர் ஒருவர் இதய நோய் கராணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் இறந்து விட்டதாகக் கருதி உடல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வீட்டுக்கும் அனுப்பிவிட்டனர். உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்த போது உறவினர்கள் பிரமிப்பு அடையும் வகையில் மரணத்திவிருந்து எழுந்தார். எழுந்தவர் இரண்டு நாள் வரையில் பித்து பிடித்தவர் போல் யாரிடமும் பேசாமல் இருந்தார். அதன் பிறகு கூறிய விஷயங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.
என் இதய வலியை நீக்கவும் இதயத் துடிப்பை சமப்படுத்தவும் டாக்டர்கள் போராடிக் கொண்டு இருந்தனர். என் மீது என்னென்னவோ கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. அறை முழுவதும் மருந்துகளின் வாடை. எனக்கு அந்கச் சூழல் பயத்தை மேலும் அதிகரித்தது. அப்போது என் கண் முன்னே 3 நபர்கள் தோன்றினார்கள. அவர்கள் கால்வரையில் வெள்ளை அங்கி அணிந்திருந்தார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மூன்று பேருமே வெளிச்சமாகவும் அழகாகவும் இருந்தனர். என்னை வா என்று அழைத்தனர்.
நான் அவர்களின் அழைப்பை ஏற்று எழுந்தேன். ஆனால் என் உடல் படுக்கையில்தான் கிடந்தது. கருவிகள் பொருத்தப்பட்டுக் கிடந்த என் உடலைப் பார்ப்பதற்கு எனக்கு அப்போது ஏனோ வேடிக்கையாக இருந்தது. ஆனால் அந்த மூன்று பேரும் உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் கீழும் மணலால் சூழப்பட்ட ஒரு சுரங்கப் பாதைக்குள் என்னைக் கூட்டிச் செல்வது போல் இருந்தது. அந்த நிலையில அந்த மணல் சுரங்கம் எனக்குப் பயத்தையும் இனம் புரியாத திகிலையும் தந்தது. அங்கு இதுவரை நான் அனுபவித்து இராத உயரிய நறுமணம வீசியது. சுரங்கத்திலிருந்து ஒரு மணல் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றனர். அந்த அறையினுள் வெளிச்சமும் குளிர்ச்சியும் இருந்தது. அந்த 3 நபர்களும் திடீரென்று என்னை அந்த அறையினுள் இருந்து வெளியே கூட்டி வந்து என் வீட்டிற்குள் இருந்த உடம்பிற்குள் என்னைத் தள்ளி விட்டனர். அவர்கள் தள்ளிய வேகமும் உடலுக்குள் புகும்போது நான் அனுபவித்த இனம்புரியாத கிலியும் என்னை பிரம்மையில ஆழ்த்தி விட்டது என்று அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியான வார்த்தைகளால் கூறினார்...
தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது மத்திய உள்துறை...
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு 90 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிபிஐ-ன் குற்றச்சாட்டையொட்டி கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தேடப்படும் நபர் மீது அவுட்லுக் சுற்றறிக்கையை மத்திய உள்துறை அறிவித்துள்ளது...
பாஜக டூபாக்கூர்களா...
வீட்டு வாடகை 5000,
கடை வாடகை 7000,
பெட்ரோலுக்கு 3000,
CGST, SGST வரியா எல்லா பொருளுக்கும் சேர்த்து 3000,
மின்சாரம் வீட்டுக்கு 400,
கடைக்கு 800,
இதுக்கே நான் மாசம் 20,000 சம்பாதிக்கணும்டா... இதுக்கு அப்புறம் நான் வாழ 10,000 சம்பாதிச்சா... ரேஷன் இல்லை, கேஸ் மாணியம் இல்லையாடா?
நிஜமாவே உங்களுக்கு ஆளத்தெரியுமா டா ?
கார்ப்ரேட்டுக்கு நாட்ட கூட்டிக்கொடுத்துட்டு வயிறு வளர்க்கிறீங்களே டா?
தொழிலாளித் தமிழன்...
இந்தியாவில் வேறு எந்த இனத்தையும் விட ஆங்கிலேயர்களால் அடிமைகளாக ஆடு மாடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு பல்வேறு நாடுகளில் குடிவைக்கப்பட்டது நம் தமிழினமே.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கன்னடவருக்கு மைசூர் அரசும், மலையாளிகளுக்கு திருவாங்கூர் அரசும், தெலுங்கருக்கு ஐதராபாத்தும் இருந்தன.
ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் முற்றுமுழுதாக நெடுநாட்களுக்கு சிக்கியிருந்தது தமிழர்களே.
பஞ்சம் வந்தபோது விளைந்த கொஞ்சம் நெல்லையும் ஆங்கிலேய அரசு விழுங்கிக் கொண்டு மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கு கடல்கடந்து அழைத்துச்சென்று காட்டில் கொண்டு விட்டது.
மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை மலையகம், மொரீசியஸ், அந்தமான், பிஜி, ரீயூனியன், மார்த்தினிக், ட்ரினிடாட் டொபகோ, சூரினாம், கயானா, தென்னாப்பிரிக்கா என்று லட்சக்கணக்கானத் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டு காட்டைத் திருத்தி தோட்டங்களாக்கும் தொழிலாளர்களாக, வாழ்நாள் கூலிகளாக ஆக்கப்பட்டனர்.
அன்றைய மலேயா (மலேசியா,சிங்கப்பூர்) பகுதிக்குச் சென்ற தமிழர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9லட்சம்.
இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.
தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.
சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.
மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.
பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.
ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.
ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.
ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.
கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.
அதாவது ஏறத்தாழ 20லட்சம் பேர் தாய் நிலத்தை விட்டு வெளியேறினார்கள்.
வெளியேறினார்கள் என்பது முக்கியமில்லை.. இவர்களின் வாரிசுகள் கிட்டத்தட்ட 50லட்சம் பேர் அதே அடிமட்ட தொழிலாளர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.
இது ஆங்கிலேயர் காலத்தில் பிழைக்கப் போன தமிழ் தொழிலாளர் எண்ணிக்கை மட்டும் தான்.
1947க்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிழைக்கப்போன தமிழர் எண்ணிக்கை இன்று 80லட்சம்.
80-90கள் வரை அரேபிய நாடுகளுக்குப் பிழைக்கப்போனோர் 4லட்சம் பேருக்கு மேல்.
தற்போது படித்த இளைஞர்களும் வெளியேறுவது தொடங்கிவிட்டது.
படித்துவிட்டுஐரோப்பிய நாடுகளுக்கு உழைத்துகொடுக்கப் போன பட்டதாரிகளின் அதாவது நாகரீக அடிமைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது கூடிக் கொண்டே போகிறது.
இதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 10லட்சத்துக்கும் மேல்.
இவர்கள் அத்தனை பேரும் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.
இது போக தமிழகத்திலேயே பன்னாட்டு தொழிற்சாலைகளில் நிரந்தரமற்ற வேலைகளில் குறைந்த ஊதியத்துக்கு உழைத்துக் கொட்டுவோரையும் சேர்த்தால்
இன்றைய தமிழ் இளைஞர்களில் 95% உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்களே.
வேலைகிடைக்காதோரைக் கணக்கில் எடுத்தால்....
வேண்டாம் முடிவே இல்லாமல் நீளும்.
ஆக இன்று தமிழினமே தொழிலாளி இனம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்த தமிழரையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
1949ல் 'மலேயா கணபதி' 24 வயதில் ஆங்கிலேயரால் தூக்கில் போடப்பட்டார்.
அவரது தோழர் 'மலேயா வீரசேனன்' 20 வயதிற்குள் ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1950ல் இவ்விருவரது தோழர் வாட்டக்குடி இரணியன் சிங்கப்பூரில் இருந்து தப்பி தமிழகம் வந்து இங்கே தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டார்.
இவரது தோழர்களான ஜாம்பவனோடே சிவராமனும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் சுட்டுக் கொல்லப்பட்டனார்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த 'தில்லையாடி வள்ளியம்மை' 16வயதில் போராடி இறந்தார்.
மொரீசியசில் அஞ்சலை என்ற பெண் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார்.
1977ல் சிவணு லட்சுமணன் சிங்கள அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுபோக தாமிரபரணி படுகொலை, கீழவெண்மணி படுகொலை, சயாம் மரண ரயில் 50,000 தமிழர் படுகொலை போன்ற வேற்றினத்தார் செய்த தொழிலாளர் படுகொலைகளும் வரலாற்றில் உள்ளன.
தமிழ்மண்ணில் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் 'முதலாளியும் தமிழன் தொழிலாளியும் தமிழன்' என்று சொல்ல தமிழ்த்தேசியவாதிகள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது.
தமிழர் நாட்டில் அத்தனை பிரச்சனைகளும் அதற்குரிய வழியில் தீர்க்கப்படும்.
தமிழருக்கு ஒரு நாடு இருந்திருந்தால் உலகத் தமிழர்களுக்கு கைகொடுத்திருக்கலாம்.
மலேயா கணபதி தூக்குக்குப் காத்திருந்த போது இந்தியாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அது வாயை திறக்கவில்லை.
ரிசானா நபீக் செய்யாத தவறுக்கு தலை சீவப்பட்டு கொல்லப்பட்டாளேநம்மால் என்ன செய்ய முடிந்தது?
மலையகத் தமிழர் வெளியேறிய போது அந்தமானில் குடிவைக்க இந்தியா அனுமதி மறுக்க, அவர்கள் நீலகிரியில் குடி வைக்கப்பட்டனர்.
பொறுப்பான ஒரு அரசு இருந்திருந்தால் இத்தனை தமிழர்கள் வெளியேறவேண்டி இருந்திருக்காது.
தாய்நிலத்தில் சரியான வாய்ப்புகள் கிடைத்து இங்கேயே வாழ வழி செய்திருக்கலாம்.
வேற்றினத்தாரின் நேரடி மற்றும் மறைமுக சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் தமிழினம் இனியும் சகித்துக் கொண்டிருக்கக்கூடாது.
எமக்கான ஒரு படையை அமைத்து இழந்த தாய்மண்ணை மீட்டு அதில் ஒரு மக்களாட்சி அரசை அமைத்து தாய்நில வளங்களை சரியாகப் பயன்படுத்தி எந்தக் குறையுமில்லாமல் நமது சந்ததிகள் வாழச்செய்ய நம்மால் முடியும்...
ஆண்களும் அணிந்த தாலி...
தாலி என்பது கழுத்து நகையைக் குறிக்கும் பெயர்ச்சொல்..
இதை பழங்காலத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்தனர்.
ஒரு பெண் ஒரு ஆணை "நான் உன்னைக் கட்டிக்கொள்கிறேன்" என்று கூறுவது முரண்பாடான ஒன்று கிடையாது.
ஆணுக்கு பெண் தாலி அணிவிக்கும் வழக்கத்தையே குறிக்கிறது.
பிறகு இதுவே ஆணின் காலில் பெண் மெட்டி அணிவிக்கும் வழக்கம் வந்தது.
பிறகு அதுவும் பெண்களுக்கு போனது.
புலிப்பல் "தாலி" என்ற அணியை ஆண், பெண்இரு பாலாரும் அணிந்திருந்தனர்
என்பது பண்டைத்தமிழ் இலக்கியங்களில் இருந்து தெரிய வருகிறது .
ஆதிமனிதர் தாம் வேட்டையாடிய சில விலங்குகளின் எலும்புகள், பற்கள், நகங்கள் போன்றவற்றை அணிகலன்களாக்கி அணிந்தணர்.
குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேட்டுவர்கள் தமது பிள்ளைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவித்தது சங்க இலக்கியங்களிலிருந்தும் தெளிவாகிறது.
ஆனால், சிறுவரும், சிறுமியரும் புலிப்பல் தாலி அணிந்தமையால் மறக் குலத்தின் வழிவந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக அணிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவ்வழக்கமே பிற்காலத்தில் "ஐம்படைத் தாலியாக" வளர்ச்சியடைந்தது.
புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது ஆகும்.
ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும்.
சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது .
புறநானூற்றுப் பாடல் ஒன்றில் "தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்" மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக,
"தாலி களைந்தன்று மிலனே"
என்று அவன் தாலியை இன்னும் களையாத சிறுவயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்துவிட்டே கால்களில் கழல் அணியும் வழக்கம் இருந்தது .
"தாலம்" என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது.
ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.
நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை,கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்துகொள்வது பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.
எனவே "தாலம்" என்ற சொல்லிலிருந்து காப்பு அணிகளைக் குறிக்கும் "தாலி".என்ற பொதுச் சொல் தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.
தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாக தெரியவில்லை.
(பெரிய இடத்து இளைஞர்கள் புலிப்பல் போன்ற அமைப்பை சங்கிலியில் அணிவது காணப்படுகிறது.இதை மைனர் செயின் என்கிறார்கள்)
மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது.
ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது.
யாழ்ப்பாணத்து நகைக்கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப் பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும்.
இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு.
சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந்தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.
இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது.
பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர்.
குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் துடக்குக் கழிவுச் சடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது...
http://ta.m.wikipedia.org/wiki/புலிப்பல்_தாலி
சடையவர்மன் சுந்தரபாண்டியன்...
சோழர்கள் தமிழ் வரலாற்றிலேயே பெரிய அரசை நிறுவி உலகின் முதல் கடல் கடந்த பேரரசை அமைத்து பேருரு எடுத்து நின்ற காலம் அது.
அநாபய சாளுக்கியன் என்ற வேற்றினத்தான் சோழ அரசைக் குறுக்குவழியில் கைப்பற்றிய பிறகு சோழப் பேரரசு வீழத் தொடங்கியது..
இந்த நிலையில் 13ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தமிழர்களின் பாண்டிய அரசு
பேரெழுச்சி பெற்றது.
இவர்களில் முதன்மையானவன்
"சடைய(ஜடா)வர்மன் சுந்தரபாண்டியன்".
வடதமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுவிட்ட ஹொய்சளர்களை (கன்னடர்களை)
தோற்கடித்து காவிரியாற்றுப் பகுதியை மீட்டான்.
இலங்கையின் அரசனைத் தோற்கடித்தான்.
தெலுங்கு சோழன் கண்டகோபாலனை போரில் கொன்று காஞ்சியையும் நெல்லூரையும் மீட்டான்.
நெல்லூரில் அந்த வெற்றியைக் கொண்டாடினான்...
தமிழன் ஓவிய கலை...
ஆதி மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பியபோது அவன் வாழ்ந்த இடத்தில் சூழ்ந்திருந்த கற்பாறைகளில் கோடுகளால் வெளிப்படுத்தினான். அந்தக் கற்பாறைக் கோடுகளே ஆதி ஒவியமாக அறியப்படுகின்றன.
புள்ளியில் தொடங்கிய கோடுகள் நீண்டு, வளைந்து, நெளிந்து, பல உருவக் கோடுகளாய்ப் பரவி அவர்களது வாழ்க்கை மகிழ்வுகளையும் ஆடல்பாடல்களையும் வேட்டைக்குப் பயன்படுத்திய கருவிகளையும் ஓவியக் கோடுகளாகத் தீட்டி இருக்கிறார்கள். இக்கோடுகளே வரலாற்றைப் பதிவு செய்யும் சாட்சியங்களாக விளங்குகின்றன.
உலக நாகரிகத்தின் முதன்மையானது என்று குறிப்பிடப்படும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம் முதற்கொண்டு இன்றைய கணினிக் காலம் வரை கோடுகளே முதன்மை பெற்று வருகின்றன.
சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களாக ஏராளமான சுடுமண் சிற்பங்கள் முத்திரைகளாகப் கிடைக்கப் பெற்றுள்ளன.
கற்பனைத் திறத்திற்கு ஏற்ப உருவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். இரண்டு கொம்புகளே உடைய மனிதன், மீன், எருது, வரிக்கோடுகளையுடைய புலி, மரம், காண்டாமிருகம், எருமை, காளை, யானை, உடைந்த பானைகள், பிறப்பு பற்றிய முத்திரைகள் கிடைத்துள்ளன.
இச்சின்னங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
உலகத்தின் பல்வேறு இடங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. ஏடறியா வரலாற்றுக்கு முந்தையக் காலக் கோட்டோவியங்கள் தமிழகத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன.
இக்கோடுகளில் ஆதித்தமிழர்களின் வாழ்நிலை சித்தரிக்கப்பட்டுள்ளது. குகை ஒவியங்கள் பெரும்பாலும் நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
தருமபுரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப்படுகின்றான். இவ்வோவியம் வெண்ணிறக் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு மாவட்டம் கீழ்வாலை என்ற ஊரில் உள்ள இரட்டைப்பாறையில் செம்மண் வண்ணத்தினால் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் பறவையின் முக அமைப்புடைய மனிதர்கள் காணப்படுகிறார்கள். இவ்வோவியம் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணக்கிடுகிறார்கள்.
சேத்தவாரை என்ற இடத்தில் எழில்மிக்க மான் உருவ ஓவியம் காணப்படுகின்றது.
ஐயனார் மலையில் எருமை, கரடி, புலி, மீன் போன்ற உருவங்கள் செம்மண் நிற ஓவியக் கோடுகளால் வரையப்பட்டுள்ளன. உள் பகுதிகளில் வெண்மை நிறம் பூசப்பட்டுள்ளன. இவ்வோவியங்களில் ஒரே ஒரு மனித உருவம் காணப்படுகின்றது. இவை கீழ்வாலை ஓவியத்தை ஒத்திருப்பதாகக் கலையியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் அருகில் உள்ள வேட்டைக்காரன் மலையில் உள்ள ஓவியங்களில் யானையும், குதிரையும், மனிதர்களும் காணப்படுகின்றன. ஆறு மனித உருவங்கள் கைகோர்த்து நடனமாடுவது போல் காணப்படுகின்றன. யானை, குதிரை ஆகிய விலங்குகளில் மனிதர்கள் அமர்ந்திருப்பது போன்ற ஓவியங்களும் காணப்படுகின்றன.
இவையொத்த ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாசினாக்குடியில் காணப்படுகின்றன. மனிதர்கள் யானையில், புலியில், மானில், மயிலில் அமர்ந்த நிலையில் உள்ளனர். இவர்கள் கடவுளர்கள் என்று நம்பப்படுகின்றனர்.
இவ்வோவியங்கள் 2300 ஆண்டு வகையைச் சேர்ந்தவகையாகும். இவை போல் ஆலம்பாடி, பதியாண்டாள், கொல்லூர், மல்லசமுத்திரம் போன்ற இடங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மல்ல சமுத்திரத்தில் உள்ள ஓவியங்கள் வெள்ளை நிறக் கோடுகளால் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு விலங்கு வியக்கும் வண்ணம் காணப்படுகின்றது. மனிதனின் தலையில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பான தலைப்பாகை காணப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் தலைவன் ஏற்றுக் கொண்ட நிலையை ஏற்றுக் கொண்டது போல் தெரிகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக் குகை ஓவியங்கள் பெரும்பாலும் வெண்ணிறக் கோட்டோவியங்களாகவே காணப்படுகின்றன. இவ்வோவியங்களில் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் அரசனும், இளவரசனும் வீற்றிருக்க அருகில் ஆயுதம் ஏந்திய வீரர்களும் காணப்படுகிறார்கள். இவை சமுதாய வாழ்க்கையில் அரசு உருவான காலத்தைப் எதிரொளிப்பதாக இருக்கலாம்.
திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற ஊரில் உள்ள குகையில் காணப்படும் கோடுகள் மிக மிகத் தொன்மையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
இன்னும் ஏராளமான குகைகளில் நமது முன்னோர்களின் கலைப்படைப்புகள் மறைந்திருக்கலாம். ஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நமது வரலாறு மேலும் விரிவடைய வாய்ப்புண்டு. இருக்கும் ஓவியங்களும் நம் மக்களால் பாதுகாக்கப்படாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
ஓவியக் கோடுகளை நம் கலைஞர்கள் பல்வேறு ஊடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், முத்திரைகள், உலோகத்திலும், சுடு மண்ணிலும் காணப்படுகின்றன. இவை கோட்டு வடிவங்களாகவும், புடைப்பு அச்சு முறையிலும் அமைந்ததாகவும் காணப்படுகின்றன. அரசர்களின் கொடி, அவர்கள் வணங்கிய கடவுளர்கள், அவரவர் சின்னங்கள் ஆகியவற்றையும் கோடுகளால் வரைந்திருக்கிறார்கள். செப்புத் தகடுகளில், ஓலைச் சுவடிகளில் ஓவியக் கோடுகளோடு எழுத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
வரலாற்றை, மருத்துவத்தை, புராணத்தை, இலக்கியங்களை ஓவியத்தோடு படைத்திருக்கிறார்கள். காதல் மங்கையரின் மார்பகங்களிலும், முதுகுகளிலும், செம்பஞ்சுக் குழவையால் ஓவியம் வரைந்ததைத் தொய்யில் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பெண்கள் தங்கள் வீட்டின் முன்வாசலில் சுவரில், தெருக்களில் கோலங்கள் போட்டுள்ளனர். தம் கற்பனைகளில் மிதந்து வரும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பூக்கள் என்று தம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் ஆயிரம் ஆயிரம் கோடுகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.
திரைச்சிலைகளில் முதலில் கோடுகள் போட்டு அதன் தன்மை குலையாமல் வண்ணங்கள் தீட்டும் கலையை நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.
"ஒருமுக எழினியும், பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
ஓவிய விதானத் துரைபெறு நித்திலத்து
மாலை தாமம் வளையுடன் நாற்றி"
என்ற சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதை வரிகளால் அறியலாம்.
தோலைப்பதப்படுத்தி அதில் ஓவியக் கோடுகளை வரைந்து உள்பகுதியில் வண்ணங்கள் குழைத்துத் தீட்டி தோல்பாவை மூலம் மக்களுக்குக் "கதை சொல்லிகளாக" வாழ்ந்து கலையை வளர்த்திருக்கிறார்கள்.
இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா
மரப்பாவை சென்று வந்தற்று
என்ற திருக்குறள் அடிகளில் மரப்பாவை பயிற்று வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். "கை புனைந்து இயற்றாக் கவின்பெறுவனப்பு" என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது. "கண்ணுள் வினைஞர்" என்று ஓவியர்களை பழம்பெரும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஓவியத்தை "ஓவம்" என்கிறார்கள். மணிமேகலையில் "ஓவியச் செந்நூல் உரைநூல் கிடைக்கையும்" என்று வருகிறது.
நடுகல் வழிபாடு என்பது ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை நீண்ட வரலாறு கொண்டதாகும்.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரையில் ஏராளமான நடுகற்கள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பல்லவர் காலமாகும்.
போரில் வீர மரணம் அடைந்தோரின் கற்களின் மேற்புறத்தில் செதுக்குச் சிற்பமாகவும், கோட்டுச் சிற்பமாகவும் வடித்துள்ளார்கள். வீரர்களின் பெயர் மற்றும் நிகழ்வுகளை எழுத்தில் பதிவு செய்துள்ளார்கள். பின்னாளில் இதுவே குல தெய்வ வழிபாடாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
தஞ்சை மாவட்டம் குடந்தை அருகே கி.பி. 884 திரும்புறம்பியப் போரில் மாண்ட போர் வீரர்களின் நினைவாகப் "பள்ளிப் படை வீடு" என்ற நடுகல் கோவில் உள்ளது. இதைக் கல்வெட்டு ஆய்வறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் பதிவு செய்துள்ளார்.
நடுகல் செதுக்குச் சிற்பங்கள் இலக்கணங்களை மீறிப் கோட்டோவியங்கள் சிறப்பாக்கப்பட்டுப் பக்க வாட்டில் உருவங்கள் அகழ் ஓவியக் கோடுகளாகவும் வெளிப்படுகின்றன. நடுகற்களே முப்பரிமாண வடிவங்களுக்கு முன்னோடி எனலாம்.
கோடுகள், ஓவியங்கள், செப்புத் தகடுகள், அச்சுகள், துணிகள், கற்கள், உடல்கள், வீட்டு வாசல்கள் என்று பல்வேறு தளங்களில் இருந்த கோடுகளும் ஓவியங்களும் பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், மராட்டியர் காலம் என்று காலங்கள் தோறும் விரிவுபடுத்தப்பட்டு வந்தன.
சோழர்கால ஓவியங்கள் கி.பி. ஆயிரத்தைச் சேர்ந்தவை. இவ்வோவியங்கள் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் கருவறை முதல் தளச் சுற்றுச் சுவரில் பாதுகாப்பாக வரையப் பட்டுள்ளன. இவற்றின் ஓவியக் கலையின் மேன்மை தெரிவதோடு அஜந்தா ஓவியத்தின் சாயலோடு இவை ஒத்துப் போகின்றன. இவை இன்னும் அழியாமல் இருப்பதற்கு FRESCO என்னும் சுவர் ஓவிய முறையில் வரையப்பட்டதும் ஒரு காரணமாகும்.
ராசராச சோழன், கருவூரார், நடன மகளிர், வீரர்கள், நடனமாடும் இசைக்கலைஞர்கள், சிவபூத கணங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. இவையெல்லாம் கவர்ச்சியான பல வண்ணங்களோடு கோடுகளால் சிறப்பான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
ஒன்பதாம் நூற்றாண்டு ஓவியங்களாகப் பாண்டியர் காலச் சித்தன்னவாசல் ஓவியங்கள் திகழ்கின்றன. பனைமலை, காஞ்சிக் கைலாசநாதர் கோவில் ஓவியங்களையும் இவற்றோடு குறிப்பிட வேண்டும்.
சித்தன்னவாசல் ஓவியங்களில் அரசர், அரசி, மீன்கள், வாத்துகள், எருமைகள், நிறைந்த தாமரைக்குளம் ஆகியவை பாண்டியர் கால ஓவியக் கலைஞர்களின் கைத் திறமைக்குச் சான்றாக உள்ளன.
காஞ்சி திருப்பருத்திக்குன்றம், திருவாரூர் கோவில், சிதம்பரம் கோவில், குடந்தை பட்டீஸ்வரம், திருமங்கலக்குடி, தஞ்சை, மதுரை, அழகர்கோவில், திருவலஞ்சுழி என எல்லாக் கோவில்களிலும் ஓவியங்கள் நிறைந்து காணப்பட்டன.
திருவலஞ்சுழி, பட்டீசுவரம், திருமங்கலக்குடி ஆகிய இடங்களிலுள்ள ஓவியங்களைச் குடமுழுக்கு என்ற பெயரால் அழித்து விட்டார்கள்.
திருவாரூர் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓவியங்கள் கேட்பாரற்று வவ்வால் எச்சத்தாலும் மழையின் ஒழுகலாலும் அழிந்து கொண்டிருக்கின்றன.
திருவிடை மருதூர்க் கோவிலில் வரைந்திருந்த ஓவியங்கள் ஏராளம். "சித்திரபிரகாரம்" என்ற சுற்றுப் பாதையில் தற்போது எல்லாம் மறைக்கப்பட்டுத் தமிழன் காண்பதற்கும் கற்பதற்கும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள்.
தமிழனுக்கு என்று இருந்த ஓவியக் கலை வரலாற்றை எழுதுவதை விட, அதைக் காப்பதற்கான முயற்சிதான் இன்று மிக இன்றியமையாத் தேவையாகும். அதைச் செய்வதற்கான வல்லமை தமிழர்களுக்கு என்று வருமோ?
Subscribe to:
Posts (Atom)