06/03/2019

வயிற்றுக்குள் இருந்தே கற்றுக் கொள்ளும் குழந்தைகள்...


முகபாவனைகளை தாயின் கருப்பையில் இருக்கும் போதே குழந்தைகள் கற்கிறது ஆய்வில் தகவல்..

இங்கிலாந்தில் உள்ள கர்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் தாயின் கருப்பையில் வளரும் குழந்தைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

கர்ப்பபையில் இருக்கும் 24 முதல் 35 வார குழந்தைகளை வீடியோ படம் எடுத்தனர். பின்னர் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

அப்போது குழந்தைகள் தங்களின் முகபாவனைகளை அதாவது முகத்தில் இருக்கும் உறுப்புகளின் அசைவுகளை தாயின் வயிற்றுக்குள் இருந்தே கற்றுக் கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது உதடுகளை சுழிப்பது, மூக்கை வளைத்து சுருக்கத்தை ஏற்படுத்துவது, புருவங்களை நெரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

மொத்தம் 19 கருக்குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் ஒரு குழந்தை அழுதும் மற்றொரு குழந்தை சிரித்தும் தங்களது முக பாவனையை அழகாக வெளிப்படுத்தின.

இதன் மூலம் குழந்தைகள் தங்களது முகபாவனைகளை தாயின் கருப்பைக்குள்ளேயே கற்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்...

இலுமினாட்டி என்றால் என்ன.? பகுதி - 3...


https://youtu.be/qYyL7igCXPY

Subscribe The Channel For More news...

இயற்கை சுவாசம் தரும் சாளரம்...


படத்தில் இருக்கும்  சாளரம் (ஜன்னல்) தான் அந்த இயற்கைக் காற்று மூலமாக இயற்கை சுவாசம் தரும் சாளரம்.

சாளரம் தான் மூடியிருக்கிறதே எப்படி இயற்கை சுவாசம் தரும் என்று கிடுக்கிப் பிடியாகக் கேட்க நினைக்கீறீங்க. இதோ விசயத்துக்கு வந்துட்டேன்.

இந்தசாளரத்தின் சூரிய மின்பலகை மூலமாக ஒரு உறிஞ்சும் விசிறி இயங்கி உள் இழுக்கிறது உள்ளே வரும் காற்றை எதிர் கொண்டு அதில் உள்ள கரிய மில வாயுவை உறிஞ்சிக் கொண்டு ஒட்சிசனை வெளி விடும் படி தாவரங்களும் சாளரத்துக்குள் இருக்கின்றன.

இந்த இந்த அடைத்த காற்றோட்ட அமைப்பின்(sealed ventillation system) பெயரே "இயற்கை சுவாசம்" (Original Breath) தான்.

கதவைத் திறங்க காற்று வரட்டும் என்பது இப்போது சாளரத்தை அடையுங்க சுத்தமான காற்று வரட்டும் என்றாகி விட்டது...

டிடிவி தினகரன் கலாட்டா...


காந்தத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை அழிக்கலாம்...


காந்தம் பொதுவாக சிறுவர்களின் கையில் விளையாட்டுப் பொருளாய் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். கைப்பைகளிலும், சிறு பொருள்களை எங்காவது ஒட்ட வைப்பதற்கும், திசை காட்டியாகவும் பயன்படுத்துகிறோம்.

தற்போது காந்தத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை அழிக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தென்கொரியாவின் யான்செய் பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.

காந்தம், இரும்புத் துகளைப் பயன்படுத்தி புற்றுநோய் கலங்களை தானாகவே அழிந்துவிடத் தூண்டமுடியும் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

ஒவ்வொரு கலத்தின் வெளிப்புறத்திலும் வாங்கிகள் (Receptors) உள்ளன. இதில் மரண வாங்கி (Death Receptor)4 கலம் (Cell)இறப்பைத் தூண்டுகிறது.

காந்தம், இரும்புத் துகள்களைப் பயன்படுத்தி மரண வாங்கி 4களைத் தூண்டுவதன் மூலம் புற்று நோய் கலங்களை அழிக்க முடியும் என்பதை ஆய்வகத்தில் நிரூபித்துள்ளனர்.

அதே சமயம் புற்று நோய் கலம் அல்லாத கலங்களிலும் இதே வாங்கிகள் இருப்பதால் அவற்றை அழித்து விடாமல் புற்று நோய் கலங்களை மட்டும் அழிக்க முடியுமானால் புற்று நோய் சிகிச்சையில் காந்த சிகிச்சை (Magnetic Therapy) மிகப்பெரும் முன்னேற்றத்தைத் தரும் என நம்புகின்றனர்.

ஆண்டிற்கு 7 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இறப்பதற்குக் காரணமாக இருக்கும் கொடிய நோய்க்கு இந்த புதிய மருத்துவ முறை முடிவு கட்டும் என நாமும் நம்புவோம்...

தோழர் முகிலன் பற்றி ஒரு காவல் ஆய்வாளரின் பதிவு முகிலனுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கலாம்...


தூக்கம் ஏன் ஏற்படுகிறது......?


தூக்கம் ஏன் ஏற்படுகிறது? என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தங்கள் கண்டரிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

நம் உடலில் உள்ள உறிப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.

நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதியில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.

இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர்.

இதையை நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம். நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இனைப்புகள் தடைபடுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளையின் அடிப்பகுதி (Hypothalamus)பகுதியே தூக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று சிலர் கூறுகின்றனர்.

தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிருபிக்க விசு(ஸ்)கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும்.

விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும். மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்கவேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதிப்பிக்கப்படுவதற்கும் அதிகநேரம் தூங்கவேண்டும் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்கவேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

அமெரிக்க விஞ்ஞானி தாமசு(ஸ்) ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்...

இனி தமிழர்களை ஏமாற்றி திராவிடம் என்ற பெயரில் திமுக அரசியல் செய்ய முடியாது...


https://youtu.be/SIiOjojskqI

Subscribe The Channel For More News...

ஜாதகப்படி நோய் தீருமா...?


பொதுவாக ஜோதிடத்தின் நம்பிக்கை இல்லாதவர்கள் எங்கோ வெகுதொலைவில் இருக்கின்ற கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும் எதற்காக அது ஒருவனுக்கு நன்மையையும் இன்னொறுவனுக்கு தீமையும் செய்யவேண்டும் என்று கேட்பார்கள் அந்த கேள்வி சரியானதாகவும் நமக்கு தோன்றும்.

ஆனால் ஒருவிஷயத்தை மிக சுலபமாக நாம் மறந்துவிடுகிறோம் பூமி மேல்பரப்பின் மீது உயிர்கள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் அயன வெளியில் கிரகங்கள் ஒழுங்கு முறையில் சுற்றுவதற்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு வித ஈர்ப்பு சக்தி காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்வதை நாம் அறிவோம்.

பூமியில் உள்ள தாவரங்கள் ஒளி சேற்கையினால் தங்களது உணவை தாங்களே சமைத்து கொள்வதை விஞ்ஞானம் ஆதார பூர்வமாக நிறுபித்து காட்டுகிறது சூரிய ஒளியை சின்னஞ்சிறிய செடிகள் எப்படி ஈர்த்து கொள்கிறதோ அதற்கு எந்தவிதமான சக்தி தாவரங்களுக்குள் மறைந்திருந்து செயலாற்றுகிறதோ அதே போன்ற சக்தி அல்லது அதை விட சற்று மேம்பட்ட சக்தி மனித சரீரத்துக்குள்ளும் மறைவாக இருந்து செயலாற்றுகிறது.

அப்படி பட்ட மறைபொருளான ஈர்ப்பு சக்தி கிரகங்களின் சுபம் மற்றும் அசுப தன்மைகளை மனிதனுக்குள் கொண்டு வந்து பல காரியங்களை செய்கிறது செய்விக்கிறது சரி அப்படி செய்வதாக இருக்கட்டும் எதனால் இந்த கிரகங்கள் மனிதனுக்கு நல்லதையும் கெட்டதையும் செய்ய வேண்டும் அதன் மூல காரணம் என்ன என்ற அடுத்த கேள்வி நம் மனதிற்குள் எழும்பும்.

இந்த இடத்தில் நமது விஞ்ஞான புத்தியை சற்று தூரவைத்து விட்டு மெய்ஞானத்தை நாட வேண்டும் உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அல்லது அறியாத கர்ம கொள்கையை நமது இந்து மதம் சொல்கிறது இந்த கர்ம கொள்கைக்கு எளிமையான விளக்கம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு செயலுக்கான பலனை பெறுவது என்று சொல்லலாம் அதாவது நன்மை செய்தால் நன்மையான பலனும் தீமை செய்வதினால் தீமையான பலனும் அடைவது இதன் அடிப்படையாகும்.

மனிதன் தனது வாழ்நாளிலும் வாழ்வுக்கு முந்தைய நாளிலும் நல்லதும் கெட்டதுமாக பல செயல்களை செய்கிறான் அதனுடைய விளைவுகளையும் வாழ்நாளை தாண்டியும் அனுபவிக்கிறான் அப்படி என்றால் நன்மை செய்தவனுக்கு நன்மையையும் தீமை செய்தவனுக்கு தீமையும் வகையறிந்து வழங்க சக்தி மிக்க நீதிபதி வேண்டும் அந்த நீதிபதியை தான் ஆத்திகன் கடவுள் என்கிறான் நாத்திகன் இயற்க்கை என்கிறான்.

நீதிபதியின் தீர்ப்பை செயல்வடிவம் படுத்த சில புறக்கருவிகள் வேண்டும் அதே போலவே கடவுளின் தீர்ப்பையும் மனிதனுக்கு கொண்டுவந்து சேர்க்க சில புறக்கருவிகள் தேவைபடுகிறது இந்த் இடத்தில் தான் ஜோதிட சாஸ்திரம் நுழைகிறது கடவுளின் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளே கிரகங்கள் என்கிறது அதாவது கர்மாவின் பயனை மனிதனுக்கு நேரடியாக கொடுப்பது கிரகங்கள் தான்.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது மனிதன் அனுபவிக்கும் எல்லாவிதமான அனுபவங்களுக்கும் கிரகங்கள் என்பது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் காரணமாக இருக்கிறது அதாவது மனிதனுக்கு நோய் வருவதற்கும் விலகுவதற்கும் கூட கிரகங்கள் காரணமாக இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம்.

சின்னஞ்சிறிய குழந்தை என்ன பாவம் செய்தது அதற்கு ஏன் இத்தகைய பிணிகள் வந்து துயரத்தை கொடுக்க வேண்டும் என்று நமது இளகிய பணம் சிந்திக்கும் இப்போது கண்ணெதிரே குழந்தையாக இருக்கும் இந்த சிறிய குழந்தை நேற்று அதாவது முற்பிறப்பில் பெரியவனாக இருந்துதான் மாண்டிருக்க வேண்டும் அந்த காலகட்டத்தில் செய்த வினைகளுக்கான பலனை இப்போது அனுபவிக்க வேண்டிய சூழல் இருக்கலாம் அதன் விளைவுதான் பல குழந்தைகள் நோய்களாலும் வறுமையாலும் துன்பப்படுவது.

திருமதி மைதிலி சுப்ரமணியன் குழந்தை அனுபவீக்க்ம் வேதனைக்கும் இது தான் காரணம் என்று ஜாதகம் சொல்கிறது குழந்தையின் ஜனன ஜாதகத்தின் சந்திரன் வலுவிழந்து மாந்தியால் பார்க்க படுகிறான் இதனால் தான் சீதள சம்பந்தமான நோய் அந்த குழந்தையை வாட்டி வதைக்கிறது மேலும் அதன் ஜாதகப்படி வரப்போகும் குரு பெயர்ச்சி நல்ல பலனை கொடுக்க இருப்பதினால் கர்மாவினால் ஏற்பட்டிருக்கும் இந்த நோய் இன்னும் மூன்று மாதத்திலிருந்து படிப்படியாக குறையத்துவங்கி விடும்.

]இருந்தாலும் குழந்தை தற்போது அனுபவிக்கும் வேதனையிலிருந்து விடுபட ஒரு எளிய வழிமுறை இருக்கிறது அந்த வழிமுறை நமது சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டதாகும் அதை பின்பற்றினால் குழந்தையின் கஷ்டம் ஓரளவு குறைய ஆரம்பிக்கும்.

அதாவது நூறு கிராம் ஓமத்தை லேசாக இடித்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சவும் அது நூறு மில்லி அளவு வற்றியவுடன் வடி கட்டி அரைலிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி பதம் வந்ததும் இறக்கி வைத்து ஐம்பது கிராம் கற்பூரத்தை பொடிசெய்து கலக்கி வைத்து கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு மூச்சிறைப்பு மற்றும் சளி தொல்லை ஏற்படும் போது மேலே நான் சொன்ன எண்ணெயை மார்பிலும் முதுகிலும் போட்டு நன்றாக அழுத்தாமல் அனல் பறக்க தேய்த்துவிட வேண்டும் இது உடனடியாக நல்ல பலனை தரும் மேலும் இந்த எண்ணெய் ஆஸ்துமா நெஞ்சுவலி முதுகுவலி போன்றவைகளுக்கு நல்ல நிவாரணத்தை தரக்கூடியது.

சித்தர்கள் குறிப்பிட்ட இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி பாருங்கள் இப்போது கிரகங்கள் நல்ல நிலையில் வர ஆரம்பித்து இருப்பதினாலும் இந்த மருந்தின் வேகத்தாலும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்...

கெளுத்தி மீன் சாப்பிட்டால்.. இதெல்லாம் நடக்குமா.?


https://youtu.be/6PakRQedxz0

Subscribe The Channel For More News...

பேய்களுக்கு கால்கள் உண்டா?


சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம், பிராணமயகோசம், ஞானமய கோசம், என்று மூன்று வகைப்படும்...

கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது  அதாவது சதை, எலும்பு, ரத்தம் சம்பந்தப்பட்டது.

பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது.

ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப்பட்டது. இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்.

உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுகிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது.

இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்.

ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல..

அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு.

தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன.

எனவே பேய்களுக்கு கால் உண்டு.

பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்.

நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...

பாமக அமைத்த கூட்டணியினால் மக்களுக்கு தொடர்ந்து ஏற்படும் நன்மைகள்...


அவினாசி- அத்திக்கடவு ஆரம்பம்.

தர்மபுரி - மொரப்பூர் ரயில்பாதை தொடக்கம்.

டாஸ்மாக் விற்பனை நேரம் குறைப்பு.

ஏழை தொழிலாளர்கலுக்கு 2000 ரூ...

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்...


பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்.. மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்?

தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை..

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது.

அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே.

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "புவிக்குஇணை" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது.

இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது..

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்...

அதிமுக வெறும் அடிமைகள் தான்.. ஆனா திமுக பரம்பரை கொத்தடிமைகள்...


பாறைப் பல்லாங்குழிகள் பழனியில்...


சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள், பாறைப் பல்லாங்குழிகள் பழனியில் கண்டுபிடிப்பு. பழனி அருகே சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறைப் பல்லாங்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

பழனியில் இருந்து கொழுமம் செல்லும் வழியில் உள்ளது கரடிக்கூட்டம் மலை. இதில் கிழக்கு திசை நோக்கி இருக்கும் வழுக்குப் பாறையின் மேல் மூன்று குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குகையின் தாழ்வாரத்தில் பாறையில் வரையப்பட்ட ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

இது குறித்து பழனியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியும், தண்டபாணி என்பவரும் ஆய்வு மேற்கொண்டனர். இது பற்றி ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது இந்த ஓவியங்களை பாறை ஓவியங்கள் என்று சொல்வதை விட ஓவியக் குறியீடுகள் என்பதே பொருத்தமானது.

இரண்டு குறியீடுகளுமே வெள்ளை நிறத்தில் உள்ளன. இடதுபுறக் குறியீடு சதுர வடிவில் 11 செ.மீ நீளம், 11 செ.மீ உயரம் கொண்டதாக இருக்கிறது. சரிசமமாக பிரிக்கப்பட்ட நான்கு சதுரம்போல உள்ள வலதுபுறக் குறியீட்டின் நீளம் 10 செ.மீ., உயரம் 9 செ.மீ ஆகும். இவை வரையப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டவையாக இருக்கக்கூடும். இவை சிந்து சமவெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளைப் போல் உள்ளது. இவற்றின் பயன்பாடு பற்றியும் புரியவில்லை.

இவற்றின் மூலம் தமிழர்களின் பண்பாட்டின் எடுத்துக்காட்டாக சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது என்று தெரிகிறது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் உள்ள மலை, பழனியில் உள்ள கல்வெட்டுகளில் பன்றிமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்றிமலையின் ஓரத்தில் பெருவழிப்பாதை என்று ஒன்று உள்ளது.

இந்த பாதையை தான் பழங்கால மக்கள் மதுரை, பழனி வழியே கேரளத்துக்கு சென்று கடல்வழி வாணிபம் செய்ய பயன்படுத்தினார்கள். இந்த பன்றிமலையின் ஒருபுறம் மூன்று பல்லாங்குழிகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஒன்று மட்டும் நன்கு தெரிகிறது மற்ற இரண்டும் பாறைகள் வளர்ச்சியால் மூடப்பட்டுள்ளன. இவற்றை அந்த வழியாக சென்ற வணிகர்கள் குகையில் தங்கிய போது பயன்படுத்தியிருக்கலாம்.

தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், பஞ்சாப், ஒரிசா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, சி(ஜி)ம்பாப்வே, தான்சானியா ஆகியவற்றின் பழமையான விளையாட்டு பல்லாங்குழி விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது...

பாஜக மோடி சொல்வதெல்லாம் பொய்...


வெற்றிலை போடுவது ஏன்..?


பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து.

மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது.

என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோசங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, சா(ஜா)திபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல வசயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது...

திமுக - விசிக கூட்டணி ஒப்பந்தம் ஆனது...


2 தொகுதிகளில் போட்டியிடுகிறது தமிழின துரோகி விசிக...

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்....


தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ணவேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள்.

இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி... மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விசயங்கள் உள்ளன. அவைகளை இங்கு காண்போம்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது.

2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்.

3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்.

5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்.

4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்.

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )...

அரசாங்கம் என்பது உன்னை பாதுகாப்பதற்காக கட்டமைக்கப்பட்டது இல்லை...


உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதே நீ அறிந்துவிடக்கூடாது என்பதற்காக,

ஏற்படுத்தப்பட்ட தடுப்புச்சுவர் தான் அரசாங்கம்...

உங்களை நம்புங்கள் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன்,       மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13. ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14.  அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20. உங்கள் நேரத்திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொள்ளாதிர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள் தான்.

25. உங்கள் தனிப்பட்ட           நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

உங்களை நம்புங்கள் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்...

திமுக ஸ்டாலின் vs மு.க. அழகிரி...


தென் மாவட்டங்களில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற விடமாட்டேன்...

வட மாவட்டங்களில் அய்யா ராமதாஸ் பார்த்து கொள்வார்...

நீங்கள் 6, 15, 24 எண்ணில் பிறந்தவரா.. தவறாமல் பாருங்க...


https://youtu.be/eBW4oSIHnos

Subscribe The Channel For More News...

உலக முடிவும் 13 ஆம் இராசியும் – நாஸ்ட்ரடாமஸ்...


நாஸ்ட்ரடாமஸ்… தனது அனைத்து கணிப்புகளையும் வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்தே கணித்தார்.

வழமையாக வான சாஸ்திர நூல்களோ… வான சாஸிதிரிகளோ.. 12 ராசிகளைக் கொண்டே கணித்தார்கள்.

ஆனால் நாஸ்ட்ரடாமஸ் இவற்றிலிருந்து விதி விலக்காக 13 ராசி வட்டத்தையும் உருவாக்கி அதைக்கொண்டே தனது கணிப்புக்களை கணித்திருந்தார்.

அந்த 13 ஆவது ராசியில் இருக்கும் ஒரு நட்சத்திரமே ஃப்பீக்கஸ் நட்சத்திரமாகும்.

அது இதுவரை வானில் தோன்றியதில்லை. அது வானில் முதல் முதலாக தோன்றும் போது பூமியில் மிகப்பெரிய மாறுதல்கள் நிகழும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.

இவ் நட்சத்திரம் 2012 ஆம் ஆண்டு தோன்றும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தோன்றவில்லை.

நட்சத்திரம் புதிதாக வாணில் தோன்றும் போது பூமியில் பாரிய மாற்றங்கள் நடைபெறும் எனும் அவரது கூற்று உண்மையாகவே இருக்கும்..

காரணம்… நமது கண்ணிற்கு புலப்படும் அனைத்து நட்சத்திரங்களின் ஈர்ப்பு பாதிப்பும் நமது சூரிய குடும்பத்திற்கு உண்டு. ஆகவே புதிதாக ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்..

இங்கு இன்னொரு விடையம்… கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன்களின் இராஜ்ஜிய படிவுகளிலும் இந்த புதிய நட்சத்திரம் பற்றி கூறப்பட்டுள்ளதாம்.

எகிப்திய பிரமிட் சுவர்களிலும் வான வெளியை கீறி ஏதேதோ குறிப்பிட்டுள்ளார்கள்… அவை என்ன என சரியாக இனங்கானப்படவில்லை.

அடுத்து… நாஸ்ட்ராடாமஸின் கூற்றுக்களின் படி 7 உலக யுத்தங்கள் நடைபெறும்.

ஏற்கனவே 2 முடிவுற்று விட்டது… இனி வரப்போவது 3 ஆவது… அது 2012 -19 ( சிலர் 2032 இக்குள் என்கிறார்கள்.) ல் வரும் என்று ஒரு ஊகமும் இருக்கிறது.

ஆனால், அத்தோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்ல முடியாது.
அப்படி இருக்குமானால், அவரின் குறிப்புக்களில் 7 உலக யுத்தங்களைப் பற்றியும் தெளிவாக கூறியிருக்கத் தேவை இல்லை.

3750 ம் ஆண்டலவிலேயே இந்த 7 ம் உலக யுத்தம் நடை பெறுமாம். அதற்குப்பிறகு பூமி மனிதன் வாழத் தகுதியற்றதாகி விடும் என குறிப்பிட்டுள்ளாராம்.

மொத்தத்தில் உலக அழிவு பற்றி நாஸ்ட்ரடாமஸ் என்ன சொல்லி இருக்கார் என்று பார்ப்போம்…

40 ( அல்லது 400 குறிப்பு சரியாக இனங்காணப்படவில்லை.) வருடங்களுக்கு பூமியில் ஒரு சொட்டு மழை கூட பெய்யாது… பனிப்பொழிவு நின்றுவிடும்… உலகம் எங்கும் கடுமையான வெப்பம் நிலவும்… அதனால், மரங்கள் தாவரங்கள் என்பன முற்றாக அழிந்து போகும்… மனித இனமும் இக்காலப் பகுதியில் முற்றாக அழிந்துவுடும்.

அதற்குப்பிறகு… 40 ( / 400)வருடங்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும்.. ஆனால், அதை அனுபவிப்பதற்கு பூமியில் ஒரு உயிரினமும் இருக்காது…

40 (/ 400) வருட கால மழையைத் தொடர்ந்து பூமி குளிர்ச்சியடைந்து மீண்டும் தாவரங்கள் உருவாகி… உயிரினம் தோன்றும்…

உலகம் புதுப்பிக்கப்படும்…

இந்தக்கூற்று கிறிஸ்தவ மதத்திலிள்ள நோவாவின் கதையோடு ஒத்துப்போக கூடியது… அது பற்றி இங்கு பெரிதாக எழுத வில்லை….

ஆனால், லெமூரியா பதிவில்… நோவாவின் கதைக்கும்…. இந்துக்களின் வேத நூல்களில் கூறப்பட்டுள்ள கதைக்கும் இருக்கும் ஒற்றுமையை நிகழ்கால வரலாற்றுடனும்… லெமூரிய வரலாற்றுடனும் ஒப்பிட்டு பார்த்துள்ளோம்….

இயன்றவரையில் வேறு மதங்களில் இது போன்ற ஒற்றுமைகளை கண்டறிந்து எழுத முற்சிக்கிறோம்...

நிலத்தடி நீர் குறைந்து வருகிறது.. தமிழினமே விழித்துக்கொள்...


பண்டையத் தமிழர்கள் வீடுகளில் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைத்ததன் காரணம் என்ன?


மைசூரில்  இருக்கும் அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். அதன் முடிவில், 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை' என்று அந்த நிறுவனம் சொல்லியிருகிறார்கள்....

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்தில்  வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்றத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறது...

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்...

தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி குடிக்கறாங்க...

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுகனகான ரூபாய் மிச்சமாகும்...

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான்...

வணிகமயமாக்கப்பட்ட காடுகளும், பூர்வகுடி இடங்களும் சுற்றுலாத்தளமாக... கார்ப்பரேட் அடிவருடிகளாக...


ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்...


ஆந்திராவில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்.

(கருப்பு வெளிக்கோடு கொண்டு வரையப்பட்டவை)

1) குப்பம்
2) பல்லவநேரி
3) பூதாளப்பட்டு
4) சித்தூர்
5) கங்காதரநல்லூர்
6) நகரி
7) சத்தியவேடு
8) திருக்காளகத்தி
9) திருப்பதி
10) சந்திரகிரி
11) புங்கனூர்
12) வேங்கடகிரி
13) உதயகிரி
14) சூலூர்பேட்டை
15) கூடூர்
16) சர்வபள்ளி
17) நெல்லூர்.

மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்.

(மஞ்சள் நிறம் மட்டும் கொண்டு குறிக்கப்பட்டவை).

1) கோவூர்
2) மதனபள்ளி
3) பில்லேறு
4) தம்பலாப்பள்ளி
5) தர்மாவரம்
6) கதிரி
7) பொதட்டூர்
8) புலிவெண்டளை
9) கொடூர்
10) நெல்லூர் ஊரகம்
11) ஆத்மாகூர்
12) கவாலி
13) சிங்கனமலை

பறிபோனது மண் மட்டும் அல்ல.
அதில் வாழும் மக்களும் அவர்களின் வாக்குகளும் அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரமும் தான்...

இந்தியா வை ஆள்வது இலுமினாட்டி (கார்பரேட்)கள் தான்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஸ்பெயினின் கடற்கரைக் கிராமமான, கொன்னிலில் (Conil de la Frontera) தோன்றும் மர்மமான விளக்குகள். அங்கு வசிக்கும் மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தது. ஒவ்வொரு நள்ளிரவிலும் இந்த மர்மமான ஒளியின் நிகழ்வு அங்கு ஏற்படுகிறது. இந்த நிகழ்வை ஆராய்வதற்க்கு சென்ற ஒரு ஐந்து இளைஞர்கள் குழுவின் ஆய்விற்க்கு பிறகு இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது என்று தெரிகிறது. அந்த ஆய்வு குழுவினரின் ஆய்வு தரவுகளே இந்த பதிவு.

1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 நாள்  இரவு 8:45 மணி அளவில். இந்த குழுவினர் ஒரு தலைகீழ் பறக்கும் பொருளை கவனிக்கிறார்கள். பொருள் அதன் வெளிப்புறத்தில் சிவப்பு விளக்குகளுடன் அரை நிலவு வடிவத்தில் உள்ளது. பொருள் அவர்களை விட்டு மெதுவாக நகர்ந்து கொன்னில் கிராமத்திற்குச் செல்கிறது. ஒரு சில நிமிடங்கள் கழித்து கடற்கரை தரையிறங்கிய அவற்றில் ஒருவித ஒளி ஒன்று தோன்றுகிறது. அந்த ஒளி ஒரு ஒளி சமிக்ஞையாக தொடங்குகிறது. அதே நேரத்தில் அவர்கள் அருகிலுள்ள துறைமுகத்தில் அதே வழியில் பதில் ஒளி ஒன்று வெளிப்படுகிறது.

கடற்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திலுள்ள குழு கடற்கரையில் அமர்ந்து கொண்டிருக்கும் போது இது நடக்கிறது. நள்ளிரவில் அவர்கள் ஒரு இரட்டை தொலைநோக்கி மூலம் பகுதியை கண்காணிக்க. அவர் நம்பமுடியாத ஒன்றை கவனிக்கிறார்; அவர்கள் தண்ணீரிலிருந்து கடற்கரையை நோக்கி நகரும் இரண்டு நபர்களைக் காண்கிறார். இரு மனித உருவங்களும் இரண்டு மீட்டர் உயரத்தில் நிற்கிறது; தங்கள் கைகளை முழுவதும் மறைத்த மஞ்சள் அங்கியை அணிந்துள்ளனர். அவர்களின் தலைகள் வெள்ளையாகவும் வழுக்கை மற்றும்  முகமற்றும் காணப்படுகிறது.

இந்த நிகழ்வை கண்ட குழுவினர் அஞ்சத் தொடங்குகிறார்கள். அவர்கள் இப்போது சுமார் 30 மீட்டர் தூரத்தில் உள்ளனர். குழுவினர் தங்கள் முதுகெலும்புகளை சற்று திருப்புவதன் மூலம் அருகில் உள்ள துறைமுகத்தில் இருக்கும் மற்றொரு சிவப்பு, நீல மற்றும் வெள்ளை ஒளியுடன் ஒளிரும் பந்து அந்த மனிதர்களை நோக்கி செல்வதை காணமுடிகிறது. அவர்களை அடைவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, ஒரு புதிய உருவம் அவர்களுடன் இணைகிறது.

அந்த புதிய மூன்றாவது உருவம். இரு கால்களில் நின்று பார்க்கிறது. இந்த உருவம் மூன்று மீட்டர் உயரத்துடனும், ஒரு இறுக்கமான கருப்பு சீருடை அணிந்துள்ளது. அதன் தலை ஒரு தலைகீழ் பெரிப்பழத்தின் வடிவத்தில் உள்ளது. குழுவினர் மீண்டும் பார்க்கும் போது, ​அந்த மூன்றாவது உருவம். இரு நபர்களிடம் ஒருசில ஒளி சமிக்ஞை முடிந்தவுடன் காணாமல் போய்விடுகிறது. மற்ற இரு உருவங்களும் அங்கேயே நிற்கின்றன.

பின்னர் அந்த இரு உருவங்கள் வெளிப்படையாக சாதாரண மனிதர்களாக மாறிவிட்டனர்; ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் போன்ற தற்காலிக துணிகளில் அணிவகுத்த அந்த ஜோடிகள், கொன்னில் கடற்கரை கிராமத்திற்குச் செல்லத் தொடங்குகிறது. கிராமத்திலுள்ள தெருக்களில் அவர்கள் போவதைக் காண்கிறது குழு.

இவை அனைத்திற்க்கும் முடிவாக, அவர்கள் இப்பொழுது கடலுக்கு மேல் கடந்து செல்லும் மேகம் போன்ற ஒன்றைக் கவனிக்கிறார்கள். மேலும் தங்களை அந்த கறுப்பு உருவம் கண்டதாக உணர்கிறார்கள். குழுவினரை அதை நோக்கி நிற்பதை நிறுத்திவிட்டு, தரையில் பதுங்கிக்கொண்டிருந்தனர். ஒரு சில நிகழ்வுகளுக்குப் பிறகு மேகமானது ஒளியின் வேகத்தில் நகர்த்தப்பட்டது.

பின்னர் குழுவினர் இரு நண்பர்களை கடற்கரையில் நிறுத்திவிட்டு, மற்றவர்கள் கொன்னில் கிராமத்திற்குச் திரும்பிச் சென்ற இரு உருவங்களை பின் தொடர்கின்றனர். அந்த இரு உருவங்கள் இப்போது 60 மீட்டர் தூரத்திலிருப்பதை கவனித்த குழு, அவர்களை நெருங்க. திடீரென இருள் சூழ்ந்துகொண்டு அந்த இரு உருவங்களும் மறைந்துவிடுகிறது.

இந்த ஆய்வு குழுவினர் சம்பவத்தால் மர்ம ஒளி நிகழ்வு சில நாட்களில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கிடைக்கும் சாட்சியங்களைத் தொடர்ந்து. அந்த ஐந்து இளைஞர்கள் குழுவினர், குடும்பத்தினருடன் சில வாரங்களில் அரசாங்கத்தால் இடமாற்றங்கள் செய்யப்பட்டதாகவும். பின்னர் அவர்களை பற்றிய எந்தவித தகவலும் அறியவில்லை என்கின்றனர்...

Solve Ur Teeth Problems / அனைத்து பல் பிரச்சனைகளுக்கு தீர்வு...


https://youtu.be/RSmJcWMtHx4

Subscribe The Channel For More Tips...

திருக்குறள் மாநாட்டை கன்னட ஈ.வெ.ரா. நடத்தவில்லை...


இன்றைய இதயம் நல்லெண்ணெய் நிறுவனரும் அவர் நண்பர் வெள்ளைச்சாமி நாடாரும் ஒழுங்கு செய்த திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர் ஈ.வே.ரா. 

எப்படி 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பதினொராவது ஆளாக ஈ.வெ.ரா. கலந்து பின் அவர் தான் முன்னெடுத்த மாதிரி கோயபல்சு பானியில் பரப்பினரோ , அதேபோல் தான் இந்த திருக்குறள் மாநாட்டு கதையும்...