13/10/2018

கன்னட கமல் கலாட்டா...


நீங்கள் சரக்கடிப்பது பிழையில்லை. பின் வாய்க்கு வந்ததை உளருவதும் பிழையில்லை. அது யாருக்கும் புரியாது என்று தெரிந்து வைத்திருப்பதிலும் பிழையில்லை. தெரிந்தாலும் தெரியாதது போல் புரியாத பதிவு போடுவதிலும் பிழையில்லை. புரியாதவர்களுக்கு அகராதி அனுப்புவேன் என்று சொன்னது பிழையில்லை. அனுப்பாமல் டபாய்க்கிறதும் பிழையில்லை...

சென்னையில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 58...


உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என கேட்டது கள்ளர் கூட்டமைப்பு...


வானம் பொழிகிறது! பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி..

இந்த வசனத்தை உண்மையில் பேசியது மதுரை கள்ளர்கள்.

இது ஆங்கிலேயர் ஆவணத்தில் பதிவாகி உள்ளது.

இந்த வசனத்தை காப்பி அடித்து சம்மந்தம் இல்லாமல் கட்டபொம்மு பேசியதாக கதை அமைத்து அதையும் ஒரு கள்ளர் (சிவாஜி கணேசன்) வாயாலேயே பேச வைத்துவிட்டார் இயக்குனர் தெலுங்கு பந்துலு.

Source :The Madura Country: A Manual.

1750களில் பிரிட்டிஸார் மதுரை மண்டலத்தில் வரி வசூல் செய்யும்உ ரிமையை பெற்று தன்னரசு கள்ளர்நா ட்டிற்கு வந்த பொழுது பிரிட்டீஸார்க ள்ளர் நாட்டாரிடம் வரி கேட்ட போது அவர்கள் அளித்த பதில் என்னவென்று பிரிட்டிஸாரே புத்தகம் எழுதியுள்ளனர்.

ராபர்ட் ஓர்ம், s.c ஹீல், எட்கர் தர்ட்சன்எ ழுதிய நூல்களில் பிரிட்டீஸ் அரசு தன்னரசு கள்ளர்களிடம் வரியை கேட்டது அதற்கு அவர்கள் அவமானம்  அளிக்கும் வார்த்தைகளால் பதிலை அளித்தார்கள் என்று கூறுகிறார்கள்.

கள்ளர்களின் பதில்...

வானம் பூமிக்கு மழையைத் தருகிறது,

எங்கள் வயலை நாங்கள் உழுது பயிரிட்டு உழைக்கிறோம்.

அதனால் கிடைக்கும் பிரதிபலனை எங்கள் மக்கள் அனுபவிக்கிறார்கள்.

இதில் என்ன காரணம் உள்ளது நாங்கள் உங்களுக்கு கீழ்பணிந்து வரி செலுத்துவதற்கு?

மேலும் அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த பதிலுக்கு ஏற்றார்போல் எங்களிடம் சண்டையிட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.

சான்றுகள்...

The rebel commandant by S.C Hill

East india magazine by R.Alexander

Castes and Tribes of south India by Edger thurston

நன்றி: சோழ பாண்டியன் - ஏழுகோட்டை நாடு...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் இது சாதாரணமப்பா...


திருச்சியில் இருந்து துபாயிக்கு புறப்பட்ட விமானம் விபத்திற்குள்ளானது...


திருச்சியில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தனது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தில் இருந்த ஏடிசி டவர் (போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனை தொடர்ந்து விமானம் மும்பைக்கு சென்றது.

4 மணி நேரத்திற்கு பின் மும்பை யில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டாலும் 130 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விரிவான விசாரணைக்கு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

சம்பவம்நடந்த இடத்தில் தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்தார்...

பாஜக மோடியின் மற்றொரு சாதனை...


சித்தர் ஆவது எப்படி - 10...


இருப்பு நிலையின் பொறுப்பு...

இருப்பு நிலை, இருத்தல் நிலை, பற்றி பேசாத குருக்களே இல்லை.. ஓசோ அதிகமாகவே கூறி இருக்கிறார்.. மற்றும் இன்றைய குருமார்கள் மிக அதிகமாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்... இருந்த போதிலும் பஞ்சபூத கூட்டமைப்பில் சில விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் ஆகிறது...

மனத்தின் இயல் நிலையே இருப்பு தன்மை தான்... இதுதான் பஞ்சபூத கூட்டமைப்பில் மிக முக்கியமான இரகசியம்..

இந்த இருப்பு தன்மையை மனம் அடைந்த பின்னே தான் எந்த ஆன்மீகம் மார்க்கமும் தொடங்குகிறது.. அதுவரை எதுவும் துளியும் பயன் தராது..

இருப்பு தன்மை அடையாத பட்சத்தில் மனதில் எந்த கடவுள் உருவமும் எந்த யோகப் பலனும் எந்த நிலையான ஞானமும் எந்த திட சிந்தனைகளும் நிலைத்துநிற்க முடியாது..

காரணம் இயல்பாகவே இருப்பு தன்மை வாய்ந்த வெற்றிடத்தில் சித்தத்தின் எண்ண ஆதிக்கம் கொடி கட்டி பறக்கும்..

எங்கே எல்லாம் வெற்றிடம் உள்ளதோ அங்கே எல்லாம் எப்படி காற்று புகுந்து கொள்கிறதோ, அப்படியே இருப்பு தன்மை வாய்ந்த சுத்த மனத்தின் வெற்றிடத்தை, எல்லாம் இந்த சித்தத்தின் எண்ண ஆதிக்கம் ஆக்கிரமித்து விடும்..

அப்படியான மனம் சித்த மயமாகி விட்ட நிலையில் சித்தத்தின் பழைய எண்ண பதிவுகளின் ஆதிக்கத்தின் பிரகாரமே இயங்க தொடங்கும்..

எல்லா விலங்குகளும் அப்படியே அப்படி பட்ட மனதின் பிரகாரம் பூரணமாக இயங்குகின்றன...

ஆகவே தான் அவைகள் தங்கள் இயல்பிலிருந்து மாறி மனிதனை போல் வேறு விசேசமான முன்னேற்றம் மனதளவில் எதையும் அடைய முடிவதில்லை..

விலங்குகள் மனதில் சித்தத்தின் உச்ச கட்ட ஆதிக்கம் இருப்பதே இதற்கு காரணம்...

பின் மனிதன் எவ்வாறு வேறு படுகிறான் என்பதை பார்க்க வேண்டும்..

மனிதன் ஏதோ ஒரு வகையில் தன் மனதில் புத்தியின் அம்சமான கனலை, சித்தத்தின் ஆதிக்கத்தையும் மீறி மனதில் கனலை தக்க வைத்துக் கொள்ளும் பண்பை உடையவனாக இருக்கிறான்..

இந்த கனல் தான் சித்தத்தின் ஆதிக்கம் வழி செல்லாமல் தடுத்து நிகழ் காலத்திற்கும், நிகழ் கால நிகழ்வுகளை எதிர் கொள்ள பயன் படுகிறது...

இந்த நிகழ் காலத்தை தொலைத்தவனுக்கு விலங்குகள் போல் எந்த முன்னேற்றமும் காண முடியாது...

நிகழ் காலத்தை சந்திக்க முடியாதவனிடம் கனல் என்ற சக்தியின் குறை பாட்டு தன்மையே அதிகம் இருக்கும்.. சித்தத்தின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவிப்பார்கள்...

கனல் பெருக்கம் பெற்றவர்கள் மட்டுமே நிகழ்கால தொடர்பு பெற முடியும்.. இல்லையேல் சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமான இறந்த கால நடப்புகளிலேயே தன் காலத்தை முற்றிலும் தொலைத்து விட்டு வள்ளலாரின் மொழியில் சொன்னால் செத்தாரை போல அதாவது செத்துப் போனவர்களை போல் இருக்க வேண்டியது தான்...

சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாள் காலத்தை 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைதான் நிகழ்காலத்தில் கழிக்கிறான்..

மீதி நேரம் எல்லாம் இறந்த கால எண்ண ஆதிக்கத்தில் விரையம் ஆகிறது.. நிகழ்கால தொடர்பு என்பது சிவநிலை என்றும், சித்தத்தின் இறந்த கால தொடர்பு என்பது சவநிலை என்றும் சொல்லப் படுகிறது..

நாம் ஒரு நாள் வாழ்க்கையில் எவ்வளவு நேரம் சவநிலை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கணக்கிடும் போது நமக்கும் விலங்கிற்கும் அதிக வித்தியாசம் இல்லை..

ஒரு சதவீத வித்தியாசத்தில் மட்டுமே உள்ள நாம் அந்த ஒரு சதவீதத்தால் நாம் எவ்வளவு தூரம் விலங்குவிட மேம்பட்டு இருக்கிறோம் எனபதை கணக்கிட்டு பார்ப்பது மிகவும் அவசியமாகிறது..

அந்த ஒரு சதவீதத்திற்கே இப்படி என்றால் 100 சதவீதம் இருந்தால் எப்படி இருப்போம் என்பதை யூகிக்க வேண்டிய அவசியம் ஆகிறது..

இந்த கனலை எவ்வாறு பெறுவது அல்லது பெருக்குவது என்பது தான் யோகம்.. அப்படி பெருக்கும் எந்த யோகமும் பொதுவாக சிவயோகம் என்றே அழைக்கலாம்.. மற்றவை அனைத்தும் சவயோகம்...

கனலை பெறுவதற்கு முன்னால் நாம் மனதளவில் அடைய வேண்டிய ஒன்று தான் மனதில் இருப்பு தன்னம அல்லது இருத்தல் தன்மை..

அந்த இருத்தல், இருப்பில் மட்டுமே கனல் நிற்கும்.. இருப்பு தன்மை பெற்றால் மட்டும் போதாது, அதில் நீடித்து இருக்க வேண்டிய அவசியம் ஆகிறது..

பெற்ற கன்லை சித்தத்தின் எண்ண ஆதிக்கம் கவர்ந்து போகாதவண்ணம் பாது காப்பதும் அதை விட அவசியம் ஆகிறது..

சும்மா வந்து விடாது சுதந்திரம் என்பார்களே அது போல் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்திலிருந்து, சவநிலையிலிருந்து, மீண்டு சிவநிலைக்கு சுதந்திரமாய் வருவதற்கு ஆரம்பத்தில் மனம் என்ற நெருப்பில் பயின்றால் மட்டுமே முடியும்..

அந்த இருப்பு தன்மையை தக்க வைக்கும் பொழுது பேரண்ட பேராற்றல் கனலாக புத்தியில் நிலைகொண்டு, இருப்பு தன்மையால் மனதை கனலாக மாற்றி, சிவகலப்பாக மாற்றும் பொழுது, மனதில் மோதும் சித்தமும் சிவமாகி போகிறது..

அப்படி சித்தம் எல்லாம் சிவமாகி நின்ற நிலையில் தான் குறைந்த சதவீத கனல் நிலை அதிக சதவீதம் பெருக்கம் அடைந்து மனிதன் மேன்மை நிலை நோக்கி விரைவு கொள்கிறான்..

அந்த நிலையான இருப்பு நிலை பெறுவதற்கான பயிற்சிதான் சித்தர்கள் கண்ட வாசியோகமும் கனல் தீட்சையும்... இருப்பு தன்மை பெறாத வாசியோகம் நாசம் விளைவிக்கும்...

வறட்டு இருமல் நீங்க...


கோயில் மண்டபங்கள்...


  1. அர்த்த மண்டபம்
  2. மகா மண்டபம்
  3. நிருத்த மண்டபம்
  4. பதினாறு கால் மண்டபம்
  5. நூற்று (அ) ஆயிரங்கால் மண்டபம்
  6. ஸ்நபன மண்டபம்
  7. கேய மண்டபம்
  8. வாத்திய மண்டபம்
  9. முகமண்டபம்
10. சோபானமண்டபம்
11. கோபுரத்துவார சாலாமண்டபம்
12. ஆஸ்தான மண்டபம்
13. யாக மண்டபம்
14. புஷ்ப மண்டபம்
15. பூசை மண்டபம்
16. விஜய மண்டபம்
17. சுற்று மண்டபம்
18. உத்யான மண்டபம்
19. வல்லி மண்டபம்
20. சூர்ணமண்டபம்
21. நறுமணக் கலவை மண்டபம்
22. நீராழி மண்டபம்
23. கந்தமண்டபம்
24. ஆபரண மண்டபம்
25. மஞ்சனமண்டபம்
26. அலங்கார மண்டபம்
27. வசந்த மண்டபம்
28. உபசார மண்டபம்
29. முரசு மண்டபம்
30. தமிழ்வேதப் பயர்ச்சி மண்டபம்
31. தமிழ் ஆகம மண்டபம்
32. புராண விரிவுரை மண்டபம்
33. தீக்கை மண்டபம்
34. வீணா மண்டபம்
35. கொடியேற்ற மண்டபம்
36.தேர் மண்டபம்.

இப்படிப் பல மண்டபங்களைக் கொண்டது நம் கோயில்கள்...

எந்த முட்டுச் சந்தில்டா போனீங்க...


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் திடீர் ஆய்வு...


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான 3 பேர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

2004-ம் ஆண்டு 3 சிலைகள் மாயமானது குறித்து கோயில் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரின் கடவுள் மறுப்பு எனும் டூபாக்கூர் வேலை...


நீர் நிலைகள்...


ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47...

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.

(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.

(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

(12) கடல் (Sea) - சமுத்திரம்.

(13) கம்வாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

(15) கால் (Channel) - நீரோடும் வழி.

(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.

(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.

(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.

(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.

(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.

(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.

(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.

(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.

(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்...

கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்த அருமை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது...


தாரணை - (அட்டாங்க யோகம்)...


தாரணை...

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலுமாமே. - 591

விளக்கம்...

(சூரியன் சந்திரன் இருக்கும் இடங்களில்) கடைபாகத்திலுள்ள வழியைக் கட்டி இன்பமாக உள்ளே செல்லும்படி இருத்தி அபானனை எழுப்பி (பிராணாபானனுடைய சேர்க்கைக்காக பிரணவத்தின்) நடு வீட்டைப் பார்க்க நீ செல்லும் படியான வழியில், மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கைப் போல இமையாமல் பார்த்துக் கொண்டிருபவர்கள் நாசமாகாமல் ஊழிக்  காலம் வரை சாகாமலிருக்கக் கலுமாகும்.

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே. -  593

விளக்கம்...

(பிரணவத்தின் நுனியிலுள்ள) சுழி முனையைத் திறந்து கொள்ளாதவர்கள் மனத்திற்குள் சந்தேகம் என்னும் மாடு ஒன்று இருக்கிறது.  சுழிக்கதவைத் திறந்தால் தான் பிராணன் அபானனை அந்த வழியைப் பாய்ச்சுவார்கள்.  சுழிமுனை வாயைத் திறக்கச் சத்தியில்லாதவர்கள் தங்களிடமுள்ள சொற்ப புத்தியைக் கொண்டு அது இது என்று யோசிப்பார்கள்.  சிவமிருக்கும் பரணியைத் திறவாவிட்டால் தவறுதலுடையதாகும்.

கோய் = பரணி.

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலுமாமே. -- 595

விளக்கம்...

நிறைந்திருக்கும் தசவித வாயுக்களில் முக்கியமான வாயுக்கள் பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் என்கிற ஐந்தும் முதலில் வெளிப்பட்டுப் போனால் இதில் விழித்திருந்து என்ன செய்யப்போகிறாய் மூடமே.  எல்லையைக் குறித்துக் கொண்டு அதனால் ஏற்படும் வழியைச் செய்து கொள்பவர்களுக்குக் குரங்கினை (குரங்கு சந்திரன், சந்திர கலையை) பிரணவக் கோட்டையில் அடைக்கலாம்.

குறிப்பு...

ஔவையார் "மோன மென்பது ஞான வரம்பு" என்ற கொன்றை வேந்தனில் அருளிச்செய்துள்ளார்கள்.  (ஞானவரம்பு - ஞானநிலை)

வரம்பினைக்கோலி என்பதும் ஞானவரம்பு என்பதும் ஆசாரியன் சொல்லும் ஒரு மொழி.

அரித்த வுடலை ஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஜம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.  -- 597

விளக்கம்...

ஆராய்ந்து எடுக்கப்பட்ட பிரணவத்தை பஞ்ச பூதத்தில் கலக்கும்படி வைத்து அலையும் பஞ்சபூத சத்திகளை பிரணவத்தின் முடிவில் செலுத்தி அலையும் மனத்தையும் பிரணவத்தின் முனையில் ஊன்றியிருக்கத் தத்பதத்தோடு ஒன்றிவிடும் இதுதான் தாரணை.

தாரணை முழுவிளக்கம்...

மனிதனுடைய ஞான வாழ்க்கையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாகிய மனதைத் தன்னிஷ்டம் போல் நடத்தப் பக்குவம் செய்து கொள்வதே தாரணையாகும்.

நிராசையோடு கூடிய மனத்தைக் குறிப்பாக நிறுத்திக் கொண்டு கரனியாச தந்திரத்தினால் குண்டலியோடு சிதாகாயமும் பொருந்த துவாதசாந்த வெளியைப் பார்வையானது நோக்க முன்னிலையிலுள்ள எதையும் பாராமலும் செவியினால் பஞ்சேந்திரிய சம்பந்தமான எந்த சிறுசத்தத்தையும் கேளாமலும் இருப்பவர்களுக்குச் சிவ தத்துவங்களைக் காணவும் தசவித நாதங்களைக் கேட்கவும் கூடும். 

இவ்விரண்டு விஷயங்களினால் மனமானது தன்னுடைய கிருத்தியங்களினின்று மீண்டு அசைவற்று நிற்கும்.  அச்சமயத்தில் பிரணவ உச்சியிலிருந்து அமுத தாரையானது உண்டாகும்.  அந்த மார்க்கமாக மனதையும் பார்வையையும் பிசக வொட்டாதபடி மேல் செலுத்தினால் உச்சியில் மறைந்து போகாத ஆனந்தமாகிய ஜோதிஸ்வரூபம் உதித்து நிற்கும்.  அதில் மனமானது மற்றப் புற விசயங்களில் செல்வதொழியும்.

பிரணவ மேருவின் உச்சியின் சார்பில் இருக்கும் பார்வதியாகிய பரநாத சக்தியோடு அதோ முகத்திலிருக்கும் பரவிந்துவின் கலையாகிய சிவ ரூபத்தை எழுப்பி மேல்கொண்டு போய்ச் சத்தியுடன் கலக்க வைக்க, பால ரூபத்தையடைந்து ஆனந்தமானது பொங்கித் ததும்ப மனமானது பரவசத்தினால் சோர்வையடைந்து விடும்.  பிரணவத்தின் உச்சி நேர்கிழக்கு, வலது செவியின் பக்கம் தெற்கு, இடது செவியின் பக்கம் வடக்கு, அதோமுகம் மேற்கு, இவ்விதமாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது.  இந்தச் சாதனையானது ஸ்காந்த புராணத்தினால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. 

சிவ பெருமான் யோகத்திலிருந்து எழுந்தவுடன் மன்மதனை எரித்துச் சுப்பிரமணியரை உற்பத்தி செய்ய மேருவுக்குப் போய்ப் பார்வதியை விவாகஞ் செய்துகொண்டு இருந்தாரென்று சொல்லப்படும் புராணத்தின் கருத்து இதுவே.

சூரிய சந்திரர்களிருக்கு மிடங்களின் உள்கடை வாயிலைக்கட்டி, அவர்களை இன்பமாக உள்ளே செல்லும்படிசெய்து, பிரணவத்தின் மத்திய பாகத்தில் பார்வையையும் மனதையும் நிறுத்தி, அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாசத்தை அடையாமல் சிரஞ்சீவியாய் இருப்பார்கள்.  பிராணாபானணுடைய சேர்க்கையும் உண்டாகும்.  இந்த இரண்டு வாயுக்களும் ஒன்று சேருவதால் அசைவற்றுக் காலமுஞ் ஜயமடைந்து விடும்.  ஆராய்ந்து கண்டுபிடித்த பிரணவத்தைப் பஞ்ச பூதத்தில் கலக்கும்படி வைத்து அதனால் உதயமாகும் பஞ்ச பூதசக்திகளைப் பிரணவத்தின் முடியின் மீது செலுத்தி, அவைகளையும் மனதையும் பார்வையையும் ஒன்று படுத்தி உச்சியில் நிறுத்த அவை தத்பதத்தோடு ஒன்றிவிடும்.  இந்தச் சாதனைகள் தாரணையைக் சித்திக்கச் செய்யும்...

பாஜக மோடியின் நாடகம் மீண்டும் ஆரம்பமாகப் போகிறது...


மெரினா புரட்சிக்கு தடை..


ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியை பேசும் மெரினா புரட்சி படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் உள்ள மறு சீராய்வு கமிட்டிக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறியுள்ளனர்...

இந்திய மக்களை ஏமாற்றிய டூபாக்கூர் பாஜக மோடி...


கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி இப்போது தான் உண்மை வெளியில் வர தொடங்கி இருக்கு...


இந்திய வரலாற்றையே மாற்றி அமைக்கப் போகும் கீழடி - தமிழரின் தொல்நாகரிகத்தை பற்றிய ஆய்வை அர்த்தமற்றதாக்கும் முயற்சியா.?

கீழடியில் 2014-2018 வரை அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட அமர்நாத்துக்கு மத்திய தொல்லியல்துறை விதித்த தடை உத்தரவை திரும்பப் பெற்று, அறிக்கையை எழுத அனுமதிக்க வேண்டும்...

கன்னட ஈ.வே.ரா - வின் அடித்தளம்...


திராவிடக் கட்சிகளுக்கு அடித்தளம் திராவிடர் கழகம்..

இது 'நீதிக் கட்சியும்' 'சுயமரியாதை இயக்கமும்' இரண்டறக் கலந்து 1944ல் உருவானது..

இவ்விரண்டில் (ஸ்வய மர்யாதா என்பதை தமிழாக்கி) 'சுயமரியாதை இயக்கம்' என்பது ஈவேரா காங்கிரசிலிருந்து ஆறாண்டுகளுக்குப் பிறகு விலகி 1925ல் தொடங்கியது..

1926ல் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து நடத்திய பிராமணரல்லாதார் மாநாடு மதுரையில் நடைபெற்றது..

இதற்கு தலைமை தாங்கியவர் தெலுங்கரான சர்.ஏ.பி.பாத்ரோ..

1927ல் இதேபோல கோவையில் பிராமணரல்லாதார் மாநாடு நடந்தது..

இதற்கு தலைமை வகித்தவர் தெலுங்கரான குமாரசாமி ரெட்டியார்..

1928ல் நடந்த முதல் சுயமரியாதைக் கூட்டத்தில் முன்னிலை வகித்தவர் தெலுங்கு பிராமணரான 'மணத்தட்டை சேதுரத்தின ஐயர்'...

1929ல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை, கன்னடன் என்று தன்னைக் கூறிக்கொண்ட தெலுங்கர் ஈவேரா...

1930ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தலைமையேற்றவர் எம்.ஆர்.ஜெயகர் என்ற வடஹிந்தியர்..

1931ல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுக்கு சர்.ஹரி சிங் என்பவர் அழைக்கப்பட்டார். அவர் பாதிவழிவரை வந்து உடல்நலமின்றி திரும்பிவிட்டார்..

அதனால்  தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தலைமைதாங்கினார்...

1933ல் கோவை சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமைதாங்கியவர் கே.ஐயப்பன் என்ற மலையாளி..

அடித்தளமே இப்படியென்றால்.. ஆட்சி எப்படி என்பது இப்போது தெரிகிறதல்லவா?

பாஜக வும் ஏமாற்று வேலைகளும்...


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு போராடிய இந்திய மாணவர் சங்கம் மாணவர்களை காவல் துறை தடியடி நடத்தியதை கண்டித்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது...

இவர்கள் நினைத்தால் மக்கள் தொகைகேற்ப இயற்கை விதைகளை பரப்பி விவசாயத்தை முன்னேற்றி இருக்கலாமே?


திராவிடத்தால் வீழ்ந்தோம்...


திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப்  பெரியார் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்.

சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார். ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.

"திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ்(திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிரார்கள்.அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556)

என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

"திராவிடர் என்று நம்மைக் சொல்லிக்கொள்ளவே பெரும்பாடாக இருக்கும்போது, தமிழர் என்று எல்லாரையும் ஒர்மையாக்க முயற்சிஎடுப்பதால் இன்னல்கள் கூடும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தெலுங்கர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550)

இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ,தெலுங்கர்களோ,மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும். இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு.

தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை

'நமது மொழி தமிழ் என்றார்; எனது மொழி கன்னடம் என்றார்" (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்.

இப்படி தமிழின உணர்வை அழித்து திராவிட மாயை தீணித்த தமிழினத்தின் எதிரியை வழிகாட்டி என்று சொல்லி ஏற்றுக் கொண்டவன் எல்லாம் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வான்...

சிந்தி முட்டாள் தமிழினமே...

நாட்டுச் சக்கரையை உபயோகிப்போம்...


பாஜக வின் ஊழல் லிஸ்ட்...


காங்கிரஸ் கட்சிலாம் பக்கத்தில் நிற்க முடியாது, அந்த அளவிற்கு ஊழல் செய்து இருக்கிறார்கள் பாஜக.

மோடி வந்த மூன்று ஆண்டுகளின் கார்ப்பரேட்  வளர்ச்சியை பாக்கும் போது தலை சுற்றுகிறது...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை...


தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்...

தமிழன் பொருளாதாரத்தின் முன்னோடி...


ஆன்மாக்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் இறைவன் கைப்பற்றுகிறான்...


எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான்.

சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளது.. குர்ஆன் 39: 42..

இந்த வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மைகளை மனிதர்களுக்கு கூறிக் கொண்டுள்ளது.

பலருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். உயிர் என்பது என்ன? ஆன்மா என்பது என்ன?

இந்த குழப்பம் நீண்ட நாட்களாக எனக்கும் இருந்தது. மேலே உள்ள வசனத்தை வாசித்து உள் வாங்கிக் கொண்டவுடன் எனக்கு ஓரளவு உயிருக்கும் ஆன்மாவுக்குமுள்ள வித்தியாசம் புரிய ஆரம்பித்தது.

நாம் பழக்கத்தில் உபயோகிக்கும் உயிர் என்றால் என்ன?

சுவாசத்தை சீராக்குதல், உணவு செரிக்கப்படுதல், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படுதல், இரத்தம் சுத்தமாக்கப்படுதல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படுதல், தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படுதல், உடலுக்கு தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படுதல் ஆகிய இந்த செயல்களை, உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் ஊட்டிக் கொண்டு இருப்பதையே உயிர் என்கிறோம்..

உயிர் இருக்கும் வரை அந்த செயல்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன.... உடலும் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் உயிர் எப்பொழுது உடலினைப் பிரிகின்றதோ அப்பொழுது அந்த செயல்கள் எல்லாம் நிறுத்தப் பட்டு உடலும் அழியத் துவங்குகின்றது.

மனிதன் தூங்கும் போதும் மரணிக்கும் போதும் ஆன்மாக்களை கைப்பற்றுவதாக இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் கூறுகிறான்.

நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது உடலின் மற்ற அங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை இறைவன் கைப்பற்றினால் நாம் இறந்து விடுவோம்.

ஆனால் இங்கு இறைவன் தூக்கத்தில் கைப்பற்றி திரும்பவும் விட்டு விடுவதாக குறிப்பிடுகிறான்.

எனவே இறைவன் கைப்பற்றுவது நமது உயிரை அல்ல. நமது ஆன்மாவை என்ற முடிவுக்கு வருகிறோம். குழப்புகிறதா? 

இதனை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளங்க முயற்சிப்போம்.

அன்றாடம் நாம் பயன் படுத்தும் வாகனத்தை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

உடல் = வாகனம்
ஓட்டுனர் = ஆன்மா
என்ஜின் = மனம்
பெட்ரோல் = உயிர்

வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் போது எரிபொருள் (பெட்ரோல்) காலி ஆகிவிட்டால் வண்டி நின்றுவிடும். மனிதன் இறந்து விடுகிறான்.

எரி பொருள் தீர்ந்ததால் ஓட்டுனர் (ஆன்மா) வண்டியை விட்டு இறங்கி விடுகிறார். இந்த உடலை விட்டு உயிர் பிரிந்ததும் ஆன்மாவும் உடலை விட்டு வெளியேறி விடுகிறது..

ஆன்மா, மனம், உயிர் இதில் எது, அதிக சக்தி வாய்ந்தது? என்றால் ஆன்மா தான்.

ஆன்மாவிற்கு அழிவில்லை. இந்த ஆன்மாவைத்தான் இறைவன் உறங்கும் போது தன் கைவசம் எடுத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் நமது உடலுக்கு திரும்பவும் அனுப்புகிறான்.

இப்போது உயிருக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறதல்லவா?

இனி ஆதாரபூர்வமான நபி மொழி ஒன்றை பார்போம்.

நபியவர்கள் கூறினார்கள்...

ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்து விடுகின்றார். (முஸ்லிம்).

இந்த நபி மொழியின் படி குழந்தையின் 40 வது நாளில் ஒரு வானவர் இறை கட்டளைபடி ஊதுகிறார் அல்லவா? அதுதான் இறைவன் அனுப்பும் ரூஹ். அதாவது ஆன்மா.

அதற்கு முன்னால் விந்தணுவும் கரு முட்டையும் சேர்ந்து சதைக் கட்டியாக 40 நாள் வரை வளருகிறதே அதுதான் உயிர்.

ஒரு பொருளுக்கு உயிர் இல்லை என்றால் அது நாற்பது நாள் தாயின் வயிற்றில் வாழ முடியாது. வளர்சியும் இருக்காது.

ஆன்மாவுக்கும் உயிருக்கும் உள்ள வித்தியாசங்களை இப்போது நாம் புரிந்து கொண்டோம்.

இந்த ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே சிறப்புத் தகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.

நன்மை எது தீமை எது என்பதை பகுத்தறியும் பகுத்தறிவை இறைவன் மனிதனுக்கு மட்டுமே விஷேசமாக வழங்கியுள்ளான்...

தமிழ்நாடு தமிழர் நாடாக மாற வேண்டுமா இல்ல பெரியார் பூமியாகவே இருக்க வேண்டுமா என்பதை தமிழர் தான் முடிவு செய்ய வேண்டும்...


இந்திய இளைஞர்கள் காவு கொடுக்கப்பட்டு கொண்டுள்ளார்கள்.?


சமீபத்தில் பிரிக்ஸ் மாநாடு என்று ஊடகங்கள் வாயிலாக நாம்  தெரிந்து கொண்டோம் அல்லவா ?

அந்த மாநாட்டில் முக்கியமாக பங்குபெற்ற நாடுகள் இந்தியா, சைனா, பிரேசில், சவுத் ஆப்பிரிக்கா..

இங்கு கூறப்பட்டுள்ள ஒரு தகவல் தான்...

இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்றும் படித்த மாணவர்கள் உள்ளனர் என்றும் பெருமிதமாக பேசியது..

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் இளைஞர் படை அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது..

கிட்டத்தட்ட  25 % இளைஞர்கள் இந்தியாவில் உள்ளவராகவும் தெரிவிக்கப்பட்டது..

இந்தியாவில் கிட்டத்தட்ட 30 கோடி இளைஞர்கள் உள்ளனர் என்றும் கூறப்பட்டது..

பலத்த கைத்தட்டலுடன் இந்தியன்டா என்று பெருமை பீற்றிக்கொண்டது இந்திய ஊடகமும்..

இது அப்படியே இருக்கட்டும்....

மருத்துவ நோய் கண்டறியும் காரணி துறையில் ஒன்றுதான் எப்பிடமாலஜி என்ற துறை..

இவங்க இந்தியாவுக்கு ஒரு ஆய்வறிக்கையை சமர்பிக்கிறார்கள்.

அது தான் தொற்றாத வாழ்வியல் நோய் [non communicable diseases]..

நீரழிவு நோய், இரத்த கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய், நுரையீரல் நோய், மற்றும் உளவியல் நோய், இவை தான் இதில் அடங்கும்..

இதை கட்டுப்படுத்த நடவடிக்கை உடனே இந்தியா எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது..

செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று தான்..

இதில் அடுத்த வார்த்தை தான் மிகவும் முக்கியம்..

இது 25 வயது முதல் 40 வயது இளைஞர்களுக்கு தான் வேகமாக பரவுகிறது என்றும் கூறுகின்றது அந்த ஆய்வு..

அதெல்லாம் இல்லைங்க பரம்பரை நோய் அது..

அப்பாவுக்கு இருந்தால்  பிள்ளைக்கும் சக்கரை நோய் இருப்பது சகஜம் தானே என்று சிலர் ஆசுவாசப்படுத்தி கொண்டு இருக்கும் நிலையில் தான்..

ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகம் ஒரு ஆய்வை கடந்த ஆண்டு வெளியிட்டது..

அதில் கூறியுள்ள வாசகங்கள் என்ன தெரியுமா ?

காலையில் 8 மணிக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் கூலி தொழிலாளியின் மகனுக்கு கூட சக்கரை நோய் வருகிறது..

பாரம்பரிய நோய் என்பதை தாண்டி கடந்த 4 வருடத்தில் சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.. முக்கியமாக இதில் கிட்டத்தட்ட 75 % பேருக்கு பரம்பரையில் சக்கரை நோய் இல்லை
எல்லோருக்குமே புதிதாக சக்கரை நோய் வந்துள்ளது என்பது தான் அந்த ஆய்வு ...

என்ன நடக்கிறது ?

நாம் சிறு வயதாக இருந்த காலத்தில் தேன் மிட்டாய் கடலை மிட்டாய் ஜவ்வு மிட்டாய்.. ஏன் வாழையிலையில் கூட முதலில் இனிப்பை தானே
வைப்பார்கள்..

எல்லாவற்றையும் தானே உண்டு வந்தோம்..

இப்பொழுது குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்கவே பயப்படுகிறோம் ஏன் ?

நீரழிவு நோய்க்கு இந்தியா தான் தலைமை பீடம் என்ற கட்டுரையை கடந்த ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது படித்தால் மயக்கம் வராத குறை தான்..

நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/India-is-the-diabetes-capital-of-the-world/articleshow/50753461.cms

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3920109/

இப்பொழுது முதல் பகுதியில் கூறிய விடயமும் இறுதியான விடயமும் ஒத்து போகிறதா ?

ஏன் இளைஞர்கள் காவு கொடுக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ?

இன்றைய அரசியல் வாதிகளுக்கு தான் வெளிச்சம்...

சாட்டையை சுழற்றுவோம்...

விசிக தொண்டர்களே தமிழின துரோகி திருமா வை காரி துப்புக்கிறார்கள்...


வெங்காயம் : பெயரோ சிறியது பலனோ பெரியது...


தினமும் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத் தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.  உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம். 

வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

உடல் சூட்டைக்  குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம்.  உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  ரத்த ஓட்டத்தை சீராக்கும். கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.

கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம். வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.  வடகம் கெட்டுவிடாமல் பதப்படுத்திப் பாதுகாக்க, சின்ன வெங்காயம் சேர்த்துத் தயாரித்தால் போதும்.

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மை போல அரைத்துக் கொள்ளவும். இதை, நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவில் சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி.   இப்படி செய்யும் போது  ஷாம்பு மாதிரி பொங்கி வரும்.  அதை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில்  குளிக்க வேண்டும்.முட்டை வாடை  நீங்க, சிகைக்காய் பவுடரை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.வாரத்தில் ஒருநாள் வீதம், இரண்டு மாதத்துக்கு  இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அம்மை நோய் வராமல் தடுக்கவும்  வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்...

பாஜக அடிமை அதிமுக வின் தமிழின அழிப்பு...


சோழர் ஆட்சியில் மருத்துவம்...




சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை எனும் இலவச மருத்துவ முகாம் இருந்துள்ளது.

மற்றும் மருந்து எழுதிக் கொடுக்கும் பணியாளரும் சல்லியக் கிரியை என்றழைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றியும் கல்வெட்டு உள்ளது.

மருந்து இட பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

கல்வியோடு மருத்துவமும் கற்றுக்கொடுத்த கல்லூரியும் இருந்துள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்ட கூலி விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன...

பாஜக மோடியின் ரஃபேல் ஊழல்...


பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்...


புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும்.
பித்தத்தைக் குறைக்கும்.
அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
கிட்னியில் சேர்ந்துள்ள. தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

கிட்டி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த கத்திரிகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்...

நடிகர் மாதவனும் ஏமாற்று வேலையும்...


கணவனுக்கு டிமிக்கி கொடுத்து பள்ளி காதலனை திருமணம் செய்த புதுப்பெண்.. புதுமாப்பிள்ளை கதறல்...


வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த இளம் பெண் சமீதா (18). இவருக்கும் சாலை நகரைச் சேர்ந்த உறவினர் சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோயிலில் அவர்களது திருமணம் நடந்தது. திருமணத்தின் போதே போட்டோ எடுப்பதில் மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிறகு சமரசமான நிலையில், இதையே காரணம் காட்டி சமீதா சில மாதங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

 சில நாட்கள் கழித்து, மனைவியின் வீட்டுக்கு சக்திவேல் சென்றுள்ளார். மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து செல்லும் நோக்கோடு சென்றுள்ளார்.

ஆனால், சக்திவேலுடன் கோபமாக இருப்பதாக கூறிய சமீதா, உடன் வர மறுத்துள்ளார். மனைவியுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திவேல், திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளார். அப்போது, மனைவி சமீதா கழுத்தில் புது தாலியுடன், வேறொரு இளைஞருடன் கணவன் - மனைவியாக செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களைச் பின் தொடர்ந்து சென்ற சக்திவேல், சமீதாவை மறித்து விசாரித்தார். அப்போது சமீதா கூறியதைக் கேட்டு சக்திவேல் மேலும் அதிர்ச்சிக்குள்ளானார்.

சமிதாவுடன் கிரிவலம் வந்தவர், பள்ளி பருவத்து காதலன் என்பதும், தற்போது புதிதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மனைவி சமிதா, தன்னை விவாகரத்து செய்யாமல், வேறொரு திருமணம் செய்து கொண்டதாக கூறி, போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சமீதாவிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பள்ளி பருவத்தின்போதே காதல் திருவிளையாட்டில் சமீதா ஈடுபட்டு வந்தது அம்பலமாகியது. சமீதா 11 ஆம் வகுப்பு படிக்கும்போதே, கார்த்திக்கை காதலித்ததாகவும், அப்போதே இருவரும் எல்லை மீறியதால், சமீதா கர்ப்பமானதாகவும் விசாரணையில் வெளியானது.

மேலும், கார்த்திக் தங்களைவிட குறைந்த சாதி என்பதால், சமீதாவின் கர்ப்பத்தை கலைத்த குடும்பத்தினர், பாதுகாப்பாக இருக்க உறவினர் சக்திவேல் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரண்டு மாதம் தங்கியிருந்த நிலையில், சக்திவேலுக்கும், சமீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர் அவர்களது குடும்பத்தினர். இந்த நிலையில்தான், கணவர் சக்திவேலுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற சமீதா, பழைய காதலன் கார்த்திகை சந்தித்து, திருமணமும் செய்து கொண்டார்.

இதன் பிறகு, ஜோடியாக திருவண்ணாமலையில் ஜோடியாக கிரிவலம் வந்துள்ளனர். அப்போதுதான், சக்திவேல் தங்களைப் பார்த்ததாக சமீதா போலீசாரிடம் கூறியுள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமீதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

கல் உப்பு பயன்படுத்துங்கள்...


பிரத்தியாகாரம் - (அட்டாங்க யோகம்)...


பிரத்தியாகாரம்...

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே –578

விளக்கம்: உள்ளே பார்த்துப் பார்த்து நினைவானது பொருந்த மேல்நோக்கினால் உள்ளே அடைந்த்தடைந்து பல வகையான குணங்களைக் காணலாம்.  பழமையாகவே அன்போடு எவ்விடத்திலும் அனாதியான வேதமானது தேடிக் கொண்டிருக்கும் சிவத்தை இன்றே கண்டு இந்த உலகத்திலேயே இருக்கவும் முடியும்.

நாபிக்குக் கீழே பண்ணிரண் டங்குலந்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரத் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்ட டீசன் குடியிருந்தானே – 579

விளக்கம்: பிரணவத்தின் மத்திய பாகமாகியும், உந்தியாகியும், மனிபூரகஸ்தானமாயும் உள்ளயிடத்துக்குக் கீழ்பனிரெண்டு அங்குலத்தில் பொருத்தி வைக்க வேண்டிய மந்திரமாகிய இரகசியத்தை அறிந்து கொண்ட பிறகு பிரணவ நாதத்தோடு சிவன் பிரணவத்தின் உச்சாரண முடிவில் வந்து சேர்ந்து விடுவான்.

அதோமுகத்தின் (கீழ்முகம்) இரகசியப்படி, அதோமுகத்திலுள்ள பரம சிவன் ஊர்த்துவ முகத்திற்குக் (மேல் முகம்) கொண்டுவரும் தந்திரம், மந்திரம் என்பது இரகசியம்.  இது குருமுகாந் திரத்தில் பெற வேண்டியது.

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே. – 580

விளக்கம்: மூலத்திலுள்ள இருவிரலுக்கு மேலிலும் முதலிலிருக் கின்றதும் அருளைக் கொடுப்பதுமான யோனிக்கு இருவிரலின் கீழ் நின்றதுமான (கைகளினால்) உருவாக்கப்பட்ட குண்டலிக்குள் எழும்பும் நாதபிந்து கலந்ததினால் ஏற்பட்ட சிவந்த அக்னியானது உலகத்தாரால் சொல்லும்.  (நஞ்சுக்கொடி உற்பத்தியான) தொப்பூழுக்கு நாலு வீரற் கடைக் கீழ் வரையில் பிரகாசிக்கும்.

குறிப்பு:  மூலம் என்பதை ஆசாரியன் மூலமாகக் கேட்டு கொள்ளும் ஒரு மொழியில் அடங்கினது.  உலகத்தார் அதை அறிந்து கொள்ள முடியாமல் குதமாக நினைக்கிறார்கள்.  மூலபந்தன முதலிய முத்திரைகளிலும் ஆதாராதத்திலும் குதமாகவே, அனுபோகமும் ஞான ரகசியத்தின் கருத்தும் அறியாத தற்கால கல்வி ஞானிகள் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள்.  மூலம் இன்னது என்று ஏற்பட்டவுடன் உந்தி, யோனி முதலானதும் விசிதமாக விளங்கும்.  இது சத்தியமானதே.

நாசிக் கதோமுகம் பன்னிரண்ட டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே – 581

விளக்கம்: பிரணவநுனிக்கு அதோமுகமாகிய கீழ்முகத்தில் பனிரண்டங் குல நீளத்தில் (பிரணவத்துக்கும் கீழ் பாகத்தில் நீ மனதை நிறுத்தி தியானிப் பாயேயானால் பெருமை பொருந்திய சித்திகளும் பெரிய யோகங்களும் முதன்மையடைந்து சித்தியைத் தரும். சரீரத்துக்கு எக்காலத்திலும் நாசமாகுங் குணம் இல்லாமல் போய்விடும்.

குறிப்பு:  நாசி என்பது மூக்கு என்று உரை செய்து கொண்டு சாதனை செய்தால் அதற்குப் பயனில்லை, துன்பமே.

சோதி இரேகைச் சுடரொளி தொன்றிடற்
கோதில் மரானந்தம் என்றே குறிக் கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே. – 582

விளக்கம்: சோதியுள்ள வரையின் தீக்சிகையினுடைய பிரமானது தோன்றினால் குற்றமிலாத பரத்தின் ஆனந்த மென்று உறுதியாக அடையாளத்தைக் கொள்ளுங்கள்.  எதிரில் இடைபிங்கலைகளின் மத்தியில் பிரகாசம் பொருந்திய சந்திரனுடைய ஒளியானது வந்து சேர்ந்தால் சொல்ல வேண்டியது உன்னுடலானது தத்போதத்தையடையும் என்பதே.

மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே – 583

விளக்கம்: மூலத்திலுள்ள துவாரத்தை (உபதேசப்படி) பூட்டிக் கொண்டு அசைவற்றிரு.  சுழி முனை துவாரத்தின் மீது மனத்தை நிறுத்து.  கூர்மையான நேத்திரத்தை மூடிக் கொண்டு விடாதே.  காலத்தை வெல்லும் கருத்து இதுவே.

பிரத்தியாகாரம் முழுவிளக்கம்...

அதோமுகத்திலுள்ள பிந்துகலையைச் சந்திர பேதினி என்னும் தந்திரத்தால் மேலெழுப்பி அது செல்லும் வழியில் உள்ள ஜோதியையும் பிரிவினைசெய்து அதனால் ஏற்பட்ட அறிவின் வழியாக விந்து கலையைக் கரைத்து லயப்படுத்தி உள்நோக்கிப் பார்ப்பதுவே பிரத்தியாகாரத்தின் செயலாகும்.  அவ்விதமாக உள்நோக்கிப் பார்க்கும்போது அதில் மனமானது பொருந்தி நின்றால் பலவகையான குணங்களைக் காணலாம்.

உந்திக்கமலமாகிய பிரணவத்திலிருந்து பன்னிரண்டு அங்குலத்துக்குக்கீழ் செய்ய வேண்டிய தந்திரத்தை ஆசாரியன் மூலமாகத் தெரிந்து செய்பவர்களுக்கு அதோ முகத்திலிருந்து விந்துகலையானது இரண்டு பிரிவாக மேலெழும்பி அந்த இரண்டுக்கு மத்தியில் சத்தியானவள் பிரவேசிக்க அவளது வலப்புறத்தில் பிரணவயுச்சியில் சிவன் வெளிப்பட்டுக் காட்சி கொடுப்பான்.  நெற்றியில் தரிக்கும் நாமத்தின் குறியும் இதையே தெரிவிக்கின்றது.

நாத விந்துக்கள் குண்டலியாகிய பிரணவத்தில் கலப்பதினால் ஏற்பட்ட சிவந்த அக்னியானது தொப்புளுக்கு நான்கு விரற்கடை வரையில் பிரகாசிக்கும். சாதகர்கள் பிரணவத்தைக் கண்டு அதன் உச்சியிலிருந்து பன்னிரண்டு விரற்கடைக்குக்கீழ் மனதை அசைவற்ற நிலையில் நிறுத்திச் சங்கல்பமற்று இருப்பார்களேயானால் பெருமை பொருந்திய சித்திகளுக்கும் இராஜ யோகத்திற்கும் காரணமாக நிற்கின்ற விந்து கலையானது பிரணவ உச்சியில் வந்து சேரும். தவிர, தேகமானது நாசமாகும் குணத்தை அடையாது.  பார்வையானது பிரணவ உச்சியின் மீதும், மனமானது அதோ முகத்திலும் நிலைத்து நிற்க, தீச்சிகையானது கண்டத்திற்குக்கீழ் நிற்பதைக் காணலாம்.  அதற்கு மேல் பாகத்தில் சந்திர ஒளியானது கண்ணைக் கவரும் படியாகத் தோன்றும், அச்சமயத்தில் சாதகன் தேகமானது பரவச மடைந்துவிடும்...