04/03/2019

முத்து எப்படி உருவாகிறது....?


விலை உயர்ந்த முத்து கடலுக்கடியில் எப்படி உருவாகிறது தெரியுமா?

இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விசயம்.

கடல் நீரில் உள்ள சுண்ணாம்பு (Calcium carbonate)என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.

அதைத் தெரிந்து கொண்ட சீனர்கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள்.

சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

யப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள்.

அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப் பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன.

அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும்.

அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது.

இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது.

ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்...

பாஜக மோடியும் அவரது நண்பன் அம்பாணியும் இணைந்து வங்கி கொள்ளை...


வளரி...


நமது பழந்தமிழர்கள் பயன்படுத்திய தனித்தன்மை வாய்ந்த ஆயுதம் பற்றிய சிறுபார்வை..

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும்.

இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்..

அமைப்பு...

இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால்
உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது..

பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்து விடும்..

ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல..

வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன..

சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும்..

சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்..

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு..

கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும்..

சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள்..

பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால்
சீவித்தள்ளி விடும்..

எறியப்படும் முறைகள்...

வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு..

பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும்..

இப்படி எறியப்படும் போது.. இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும்... அல்லது சுழலாமலே செல்லக்கூடும்.. அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது..

உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும்..

பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்..

பயன்கள்...

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும்..

பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது..

தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை , மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது..

வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன..

சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள் , மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க
தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது..

சங்க இலக்கியத்தில் வளரி...

வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில்.. ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர்..

சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில்...

மணம் நாறு மார்பின்
மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்.. என்ற
ஒரு குறிப்பு உள்ளது.

அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன்..

என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது..

மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள் ஆரம்பம்...


நான் vs ஆன்மா...


1. ஆணவம் தனக்கு மட்டும் சேவை செய்ய முயலும்...
ஆன்மா மற்றவர்களுக்கும் சேவை செய்ய முயலும்...

2. ஆணவம் எப்பொழுதும் வெளிப்புறமாக அங்கீகரிக்க முயலும்...
ஆன்மா எப்பொழுதும் உள் நம்பகத் தன்மையையாய் இருக்க முயலும்...

3. ஆணவம் வாழ்க்கையை போட்டி மனப்பான்மையோடு பார்க்கும்...
ஆன்மா பரிசாய் கொடுத்த வாழ்க்கையாய் பார்க்கும்...

4. ஆணவம் தன்னை மட்டும் பாதுக்காக முயலும்...
ஆன்மா மற்றவரையும் பாதுக்காக முயலும்...

5. ஆணவம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கும்...
ஆன்மா உள்தொற்றத்தை பார்க்கும்...

6. ஆணவம் பற்றாக்குறையை உணரும்..
ஆன்மா மிகுதியை உணரும்..

7. ஆணவம் அழியும்..
ஆன்மா அழியாது...

8. ஆணவம் காமத்தை ஈர்க்கும்..
ஆன்மா அன்பை ஈர்க்கும்..

9. ஆணவம் ஞானத்தை தேடும்...
ஆன்மா ஞானமாகவே இருக்கும்...

10. ஆணவம் பரிசை மட்டும் அனுபவிக்கும்...
ஆன்மா வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்...

11. ஆணவம் பல வலிகளுக்கு காரணமகா இருக்கும்..
ஆன்மா மனக்காயங்களை ஆற சிகிச்சை முறைக்கு காரணமாக இருக்கும்..

12. ஆணவம் இறைவனை நிராகரிக்கும்..
ஆன்மா இறைவனை அரவணைக்கும்...

13. ஆணவம் பூர்த்தி செய்ய முயலும்...
ஆன்மா அழியாமல் முழுமையாய் இருக்கும்..

14. ஆணவம் என்பது நான்...
ஆன்மா என்பது நாம்...

Chocolate Cup Cake / சாக்லேட் கப் கேக் செய்வது எப்படி.?


https://youtu.be/TfnC66Pjhyw

Subscribe The Channel For More Recipes...

திராவிடத் திருடர்களே பதில் சொல்லுங்கள்..


தமிழும் திராவிடமும் ஒன்று தான் என்று சொல்கிறீர்கள்..

அப்படியானால் தெலுங்கு திராவிடமில்லையா? தெலுங்கரான நீங்கள் திராவிடரில்லையா?

மலையாளியான எம்.ஜி.ஆரும் கன்னடரான செயலலிதாவும் திராவிடரில்லையா?

இல்லை, கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம், தமிழ் ஆகியன தான் திராவிடம் என்றால், ஏன் திராவிட ஆட்சியில் ஒரு தமிழர் கூட தலைமைப் பதவிக்கு வர இயலவில்லை?

ஆக, திராவிடம் என்பது தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் அரசியல் கருத்தியலா? இல்லையா?

திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று அச்சிட்டது, சிலை வடித்தது, விருது கொடுத்தது போன்ற மேலோட்டமான செயற்பாடுகளைப் பட்டியலிடுகிற நீங்கள்..

திராவிடம் ஆட்சிக்கு வந்தபின் நடந்த கேடுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

கீழ வெண்மணிப் படுகொலை,
குறிஞ்சாக்குளம் படுகொலை,
உஞ்சனை, மேலவளவு, கொடியன்குளம், தாமிரபரணி, பரமக்குடி என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும் சாதி மற்றும் இன ஒடுக்குமுறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே!

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக் கொண்டு வந்த திராவிட இயக்கங்கள் தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது!

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆட்சிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப் பலககையில் இருக்கிறதா?
ஆட்சி மொழியாக இருக்கிறதா?
வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?
பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை?

ஆட்சிக்கு வந்த அத்தனைத் திராவிட இயக்கத் தலைமையின் மீதும் அடுக்கடுக்காக வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யா?

வீராணம் முதல் அலைக்கற்றை வரை ஊழலில் தி.மு.க. செய்தது சாதனையா?

அல்லது தி.மு.க.வின் எதிரணியில் இருக்கிற அ.தி.மு.க.வின் தலைமை இன்றைக்கும் பெங்களூர் நீதி மன்ற வளாகங்களிலே படியேறி இறங்குகிறதே இவையெல்லாம் சாதனைகளா?

இல்லை வேதனைகளா?

தமிழகத்தில் திராவிடம் மலர்ந்ததாக மார் தட்டிக் கொள்ளும் இதே காலகட்டத்தில் தானே ஈழத்தில் தமிழர்கள் தன்னுரிமைக்காகப் போராடி வந்தார்கள். பல கோடித் தமிழர்களின் தலைமையை ஏற்ற திராவிடம் சில லட்சம் தமிழர்கள் ஈழத்தில் அல்லலுற்ற போது என்ன செய்தீர்கள்?

குட்டிமணி செகனைக் காட்டிக் கொடுத்ததிலிருந்து முள்ளி வாய்க்கால் படுகொலை வரை நீங்கள் போட்ட நாடகங்கள் எத்தனை எத்தனை?

காவிரியைக் கன்னடர்களிடம் காவு கொடுத்தது எப்போது?

பாலாறு பாழனாது திராவிடத்தின் ஆட்சியில் இல்லையா?

முல்லைப் பெரியாறு சிக்கல் முற்றியதிலும் உங்கள் கையாலாகாத் தனமும் காட்டிக் கொடுப்பும் இல்லையா?

கிழக்குக் கடற்கரையில் 900 மீனவத் தமிழர்கள் அன்னியநாட்டுப் படையால் காக்கைக் குருவி போல சுட்டுத் தள்ளப்பட்டபோது கைசூப்பிக் கொண்டு கடுதாசி போட்டீர்களே தவிர உருப்படியாக எதைச் செய்து அப்படுகொலைகளைத் தடுத்தீர்கள்?

கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட போது என்ன செய்தீர்கள்?

இறுதியில் திராவிடத்தின் சாதனைதான் என்ன?

ஊழல் சாதனைகள்,

கொள்ளையடித்து குடுமபத்தை வளர்த்த சாதனைகள்,

தமிழரல்லாதவர்கள் கொற்றத்தை இந்தத் தமிழ் மண்ணில் வேறுரூன்ற வைத்த சாதனைகள்!

தமிழ்ச் சாதிகளுக்குள் மோதல் போக்கை உருவாக்கி குளிர்காய்ந்த சாதனை!

சாராயத்தை ஆறாக ஓடவிட்ட சாதனை!

திரை மாயையைத் திணித்த சாதனை!

இவைகள் போக, வேறு என்ன சாதனை செய்தீர்கள்?

இப்படிப்பட்ட திராவிடம் தமிழ் மண்ணில் இருக்க வேண்டுமா? இல்லை இல்லாது போக வேண்டுமா?

என்னதான் நீங்கள் எட்டி எட்டி குட்டிக்கர்ணம் போட்டாலும் தமிழர்கள் இன்னும் ஏமாற மாட்டார்கள் என்று மட்டும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...

தமிழக விபச்சார ஊடகங்களின் பின்புலங்கள் வெட்ட வெளிச்சமாக்கப்படும்....


செவி முத்திரை அல்லது சூன்ய முத்திரை...


செய்முறை...

கட்டை(பெரு) விரலால் நடு(பாம்பு) விரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். 

நடு விரலின் நுனி பெரு விரலின் அடிப்பாகத்தை தொடவேண்டும். மற்ற விரல்களை நேராக வைத்துக் கொள்ளவும்.

வானம் (ஆகாயம்) செவியுடன் தொடர்புடையது அதனால் தான் வானத்தை குறைக்கிறோம்.

பலன்கள்...

காதுவலி குறையும்.
காது கேளாதவர்கள் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்பதில் முன்னேற்றம் இருக்கும்.

காது வலி போனவுடன் அல்லது காது கேட்க ஆரம்பித்தவுடன் இம்முத்திரையை செய்வதை நிறுத்தி விட வேண்டும்...

என் வளங்கள் எனக்கில்லாத போதும், அதை அழிக்கன்ற போதும் நான் எதிர்ப்பது எனது முதல் உரிமையாக இருக்கிறது, அதை வல்லாதிக்க சக்திகள் அடக்குவது அவர்களின் கடமை...


அந்த சூழ்நிலையில் எனது மனநிலை எந்த சூழ்நிலையிலும், நான் பின்வாங்காமல் எனது வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதற்காக நான் எல்லா வழிகளிலும் அவர்களை எதிர்ப்பேன்...

வேம்பு என்பது வேப்ப மரம் தான்...


இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாகிசுத்தானும் தான்.

பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். இது சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது.

நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம்.  பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள்.

வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம்.

இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்...

வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.

வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.

வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.

வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.

உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீழ் வாதம் தீரும்.

5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.

வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.

வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.

வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். தொழுநோய் (குஷ்ட )நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.

வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு குவளை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி இவை குணமாகும்.

வேப்பம்பட்டை 5 பலம், காசறை (கஸ்தூரி) மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு 50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும்.

உரிய பதம் வந்ததும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால்  மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.

வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.

எல்லாப் பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேம்பு வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும்.
வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல் துலக்கி வந்தால் வாய் துர் நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

காய சித்தியாகும் கடி யசிலேச்(ஷ்)ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம் – தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்தக்கும் வேம்பதற்கு தேர்.
                                                            அகத்தியர்.

குட்டநோய் பதினெட்டும் தீர்வதற்கு...

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
ஏனமுதற் ச(ஜ)லமிக்க கொழுந்தைக் கிள்ளி
இன்பமுடன் தின்று வாயிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டுப் போகும்ப்பா அறிந்து கொள்ளே
கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
குட்டமென்ற பதினெட்டு வகையுந் தீரும்.

கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும்.

வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.

காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்...

திமுக கனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம்... தூத்துக்குடியில் தேர்தல் தொடங்கியாச்சு...


https://youtu.be/Jtt6Y3QYYoI

Subscribe The Channel For More News...

வாசனைப் பொருட்களின் ராணி ஏலக்காய்...


சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர், செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பொசுபரசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், கீ(ஹீ)யமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அசீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.

ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

ஏலக்காய் தூள், தேயிலைத் தூள் இரண்டையும் சேர்த்து தேநீர் தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.

நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.

ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கசாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.

வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.

ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.

அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.

ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.

செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படு

ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோசங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெறலாம்.

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

தடிமனால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் தேநீர்’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரைக் கிண்ணம் தண்ணீரில் போட்டு, கசாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை கிண்ணம் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கசாயத்தைக் குடித்தாலே போதும்.

வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை தேக்கரண்டி எடுத்து, அரை கிண்ணம் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது...

தமிழினமே விழித்துக்கொள்...


பிராணாயாமம்...


நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது.

மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது, இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன.

உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும், உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றைகó கொண்டு பிராணாயாமம் என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்.

மேலும் பிராணாயாமப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர், இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது, நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமப் பயிற்சி வழி வகுக்கிறது...

சிந்தித்து விழித்துக்கொள் தமிழினமே...


சாதாரணமாக கைகளை தேய்த்து கழுவினாலே போதுமானது, அப்படி இருக்க இதை வழிய வந்து பொது இடங்களில் இலவசமாக பயன்படுத்த வைத்து பழக்கப்படுத்தி வீட்டிலும் வாங்கி பயன் படுத்த வைத்து விட்டான் .

அதனின் தாக்கம் வீடுகளிலும் பயன் படுத்ததுவங்கிவிட்டோம் , ஒரு வீட்டுக்கு ஒன்று வாங்கினாலே எத்தனை லாபம் அதான் "வணிக மூளை" நாமும் ஏன் எதற்கு என்று கேட்பதுமில்லை. இதில் என்ன கலவைகள்(Ingridients)உள்ளது என்று சிந்திப்பதுமில்லை.

விளைவு மருத்துவ வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது புற்றுநோயில் தள்ளப்படுவதினால்.

வணிகனின் செலவு விளம்பரத்திற்க்கு மட்டுமே.

ஏமாறும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டே இருப்பான்....

நீங்கள் எப்படி?

ரவுடி திமுக ஒழிக...


ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு....


கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்.

அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில....

குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்...

ஐ.ஜே.கே பச்சமுத்து பாமக வை ஏன் எதிர்க்கிறார்.?


பச்சமுத்து சிறைக்கு செல்ல காரணமே பாமக தான்...

https://youtu.be/CX59B9JToYc

Subscribe The Channel For More News...

ஊளைச் சதையை குறைக்கும் பெருஞ்சீரகம் (சோம்பு) நீர்...


இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்...

கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு...


என்ன மணியா 20 தொகுதியில் தனித்து போட்டினு சொன்னது எல்லாம்... இந்த 1 தொகுதிக்கு தானா...?

கல்வி & ஏரி கொள்ளையன் பச்சமுத்துவின் ஐஜேகே.. திமுக கூட்டணியில் கூட்டணியில் இணைகிறது...


திருடனுக்கு ஆதரவு இன்னொரு திருடன்...

1000 பேர் கூட இல்லாத ஒரு கட்சி என்று உலகத்திற்கே தெரியும்...

கம்யூனிசம் - திராவிடம் - இந்தியம் - ஆரியம் - கிருஸ்துவம் - இஸ்லாம்.. இவை அனைத்தும் வேற்றினத்தாரின் பதுங்கு குழியே...


ஒரு வேளை.... டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு பதிலாக......

ரஸ்ய நிருவனம் ஒப்பந்தம் செய்ய இருந்தால்....

நமது பொதுவுடைமை புரட்சியாளர்கள் என்ன செஞ்சுருப்பாங்க....

நான் சிந்தித்து பார்த்தேன்....

குழப்பமா இருக்கு...

முற்போக்கு எனப்படுவது யாதெனில்..

செவ்விந்தியர்களின் போராட்டத்தை ஆதரிப்பது..
தமிழர்களின் போராட்டத்தை இனவெறி என்பது..

பாலஸ்தீன போராட்டத்தை ஆதரிப்பது..
தமிழின போராட்டத்தை எள்ளி நகையாடுவது..

ஜெய்தாப்பூர் அணு உலையை எதிர்ப்பது..
கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பது..

கேரளாவில் யானைகளை வைத்து திருவிழா நடத்துவதை கமுக்கமாக கடந்து போவது..

தமிழர்களின் ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்பது...

சிரியாவில், ஈராக்கில் கொல்லப்படும் குழந்தைகளுக்காக கதறுவது..

தமிழ் பிள்ளைகள் கொல்லப்பட்டால் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்பது..

பார்ப்பனர்களை வந்தேறிகள் எனக்கூறி திராவிட இன அரசியல் செய்தால் அது முற்போக்கு..

தமிழர்கள் தங்களை தமிழர் என்று சொல்லிவிட்டால் அது பிற்போக்கு..

இப்படியாக தமிழ் நாட்டில் முற்போக்கு வியாபாரிகள் பிஸியாக இருக்கிறார்கள்...

Best 5 Foods For Fair Skin / மிருதுவான சருமம் பெற 5 முக்கிய உணவுகள்...


https://youtu.be/bqIVj0WCtZg

Subscribe The Channel For More Tips...

செயற்கை மழையும் யாகமும்.. மறைந்த உண்மைகள்...


செயற்கை மழையைப்பற்றி எமது பாணியில் பார்க்கலாம்…

18 ஆம் நூற்றாண்டின் பின்னர் அறிவு வளர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு அளவில்லாமல் தேவையற்ற விதங்களில் காடுகளை அழித்து நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியதன் விளைவாக பூமி அதற்கு முன்னர் அறியாத கால நிலை மாற்றங்களை சந்திக்கத்தொடங்கியது.

20 ஆம் நூற்றாண்டில் கால நிலை மாற்றம் உக்கிரமடைய அடிப்படை தேவையான இயற்கை விவசாயத்திற்கான மழை பல இடங்களில் பொய்த்துப்போக ஆரம்பித்தது. அதற்கு தீர்வு தேடி வழமைபோலவே அமெரிக்கா ஒரு திட்டத்தை வகுத்தது.. அது தான் செயற்கை மழைத்திட்டம்.

(இத்திட்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் ஒன்றாக நிற்க‌ சீனா தன் பங்கிற்கு தனியாக தனது தேடலை ஆரம்பித்தது).

1957 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றலாம் என்ற ஒரு உருப்படியான தீர்வு கிடைத்தது. விளைவு 1960களில் சீனா தனது முதல் செயற்கை மழையை பெய்ப்பித்துக்காட்டியது.

இன்னும் மேம்பட்ட விதத்தில் அமெரிக்காவும் கனடாவும் 1970 ஆம் ஆண்டு வெற்றிகரமாக தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் மழையை பெய்ப்பிக்கும் ஆற்றலைப்பெற்றன.

செயற்கை மழையைப்பற்றி பேசும் போது நாம் ஒன்றைக் கவணித்தாக வேண்டும், செயற்கை மழை என்பது உண்மையில் முற்று முழுதாக செயற்கை மழை என்று சொல்லிவிட முடியாது..

ஆம், இன்னோர் இடத்தில் பெய்ய வேண்டிய மழை மேகங்களை வலுக்கட்டாயமாக தேவைப்படும் இன்னோர் இடத்தில் கூட்டி அவற்றிற்கு ஊக்கிகள் மூலம் மழை மேக கருக்கட்டல்களை உருவாக்கி பெய்விப்பதே இந்த செயற்கை மழை..

(செயற்கை மழை தொடர்பான விரிவான தகவல்களை இங்கு பார்க்கலாம்)..

சிம்பிலாக சொல்ல வேண்டும் என்றால், மேகங்கள் மீது ஊக்குவிக்கும் இரசாயனங்களை தெளித்து மழையை பெய்விப்பது செயற்கை மழை என்று சொல்லிவிடலாம். ( இந்த பதிவிற்கு அது போதும்).

சரி, 1970 களில் செயற்கை மழை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு விட்டது. அதில் என்ன மர்மம் இருக்கிறது வரலாறு இருக்கிறது என்பதை இனிப்பார்க்கலாம்.

நாம் எல்லாம் புராண கதைகள் என்ற பெயரில் சிறுவதில் இருந்து பல கதைகளை படித்திருக்கின்றோம். 

அதில் எல்லாம்… நாட்டில் மழை பெய்யவில்லை என்றது. உடனே அரசன் வழமை போல தனது மந்திரியின் தலையைப்பிடிக்க அவர் பூசாரிகளில் கையைப்பிடிக்க அதன் விளைவாக யாகம் என்ற பெயரில் பெரியதோர் கிடங்கில் பல வகை மரங்கள் திரவியங்களைப்போட்டு எரித்து புகை வரவைப்பார்கள். 

(புகைவருவதற்கு மந்திரம் ஏன் என்பது தெரியவில்லை…. ஒரு வேளை நாம் பாட்டு பாடிட்டே வேலைகள் செய்வது போல் அவர்களும் ஏதோ முனுமுனுத்திருக்கலாம். அல்லது பூசாரிகள் மந்திரம் ஓதினால் தான் புகைவரும் என்ற ரீதியில் பில்டப் பண்ணி மந்திரம் சொல்லி இருக்கலாம். அப்படி செய்யாவிட்டால் அடுத்த கட்டத்தில் மந்திரி தானே இந்த திரவியங்கள் மரங்களை எரித்து புகை வரவைத்திருப்பார். பூசாரிகளின் தேவை இல்லாமல் போய் இருக்கும். பிழைப்பும் போய் இருக்கும்).

புகை என்றவுடனேயே பலருக்கு தெரிந்திருக்கும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று..

ஆம், நாம் தற்போது செயற்கை இரயானங்களை விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலாக கொண்டு சென்று தெளிப்பதன் மூலம் மேகங்களை ஒன்று கூட்டுகின்றோம். ஒரு வேளை அவர்கள் அந்த புகையை வானத்தை நோக்கி நகர்த்துவதன் மூலம் மேகங்களை ஒன்று கூட்டி இருக்கலாம்..

மேகங்களை ஒன்று கூட்டக்கூடிய சக்தியுள்ள புகையை உருவாக்கத்தான் விசேட மரங்களும் திரவியங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்..

இன்று இரசாயன திரவியங்கள் மூலம் கூட்டப்பட்டு பெய்யப்படும் மழை, அன்று யாகங்கள் என்ற பெயரில் பெய்விக்கப்பட்டிருக்கும்.

ஆனால், நாம் யாகம் என்ற சொல்லையே கிட்டத்தட்ட காமெடி சொல்லாக்கி விட்டோம்.

நான் மேலே சொல்லி இருப்பவை கூட பலருக்கு காமெடி அல்லது இந்து மதத்தை பரப்புவனின் பதிவாக தெரியலாம்.

புராணங்கள் இந்துக்களுடையதல்ல… தமிழருடைய வரலாறுகளின் திருபு என பல சான்றுகளுடன் லெமூரியா பதிவுகளில் கூறிவருகிறேன்..

புராண கதைகளில் யாகங்கள் மழைக்கும் செய்யப்படும். நாட்டில் பஞ்சம் என்றாலும் செய்யப்படும்.

அந்த பஞ்சத்திற்கு செய்யப்படும் யாகம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டளவில் ஒரு ஆராய்ச்சி முடிவு விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதாவது, யாகம் செய்யப்பட்ட இடத்தை அன்மித்து விதைக்கப்பட்ட தானியங்கள் சுமார் 2000 மடங்கு அதிவேக ஆரோக்கிய வளர்ச்சியை காண்பித்துள்ளன. சூழலில் தானியங்களை பாதிக்க கூடிய கிருமிகள் அழிக்கப்பட்டிருந்தன..

இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள்..

இவ்வொரு யாகத்திலும், ஒவ்வொரு விதமான திரவியங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு..

ஆனால் இப்போது யாகம் ஏன் செய்யப்படுகிறது என்பதை மறந்து, பூட்டிய கோவிலுக்குள் வாய்க்கு வந்ததை ஐயர் முனுமுனுத்துக் கொண்டு கையில் கிடைத்த வாசனை பொருட்களை எரிக்க அந்த வாசத்தை புனிதமாக கருதி பணத்தை கொடுத்து யாகம் செய்து கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம்...