14/02/2019

இந்திய நாடாளுமன்றம் தேர்தல் தேதி அறிவிப்பு...


MP Elections 2019 For All India...

1)Bihar  -  April 10, 17, 24, 30 & May 7, 12.
2)Odisha  -  April 10,17
3)West Bengal  -  April 17, 24, 30 & may 7, 12.
4)Jhadkhand  - April 10,17,24
5) Chatisgarh  -  10, 17,  24
6)MP  -   April 10, 17, 24
7) Goa -  April 17
8)Gujarat  -  April 30
9) Maharashtra  -  April 17, 24
10) Rajasthan  -  April 17, 24
11) Haryana  -  April 10
12)Himnchal Pradesh  -  May 17
13)J&K  -  April 10, 17,  24,  30 &  May 7
14) Uttarakhand   -  May 7
15) Karnataka  -  April 17
16) Kerala  -  April 10
17)Tamilnadu  -  April 24
18)AP & Telangana  -  April 30th
19)Manipur  -  April 9,  17
20) Meghalaya  -  April 9
21) Mizoram -  April 9
22) Nagaland  -  April 9
23) Arunanchal Pradesh  -   April 9
24) Assam  -  April 7,  12,  24
25)Simon  -  April 12
25)Tripura  -   April 7, 12
26) Andaman   -  April 10
27) Chandigarh   -  April 10
28) Badranagar habeli   -    April 30th
29) Lakshdip  -  April 10
30) Delhi  -  April 10

சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்...


சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என  ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை..

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.

மேலும் விபரங்கள் கீழே...

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு   மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்து பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும், விரலையும் அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி..

இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது..

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள். முடிவில் மரணத்தை தான் தழுவ வேண்டும். இதுதான் நிலை..

இதற்க்கு கண்கண்ட மருந்து..

ஆவாரம் இலை..

இந்த இலையை அம்மியில், மிக்ஸியில், அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிட வேண்டும்.

இதுபோல் ஒருநாள் விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிா்ந்து பலாின்  கால்களை விரல்களை காப்பாற்றுவோம்...

Stretch Mark Remedy / தழும்புகள் மறைய வைப்பது எப்படி..?


https://youtu.be/iKTjX0wCB6w

Subscribe the channel for more tips...

ஆட்சிமொழி ஆகக்கூடிய தமிழ் வழக்காடு மொழியாகக்கூட இல்லையே?


ஜனநாயகப் படுகொலையாளர்கள் பாதுகாப்பாக ஒழிந்து கொள்ள ஒரு இடம் இருக்கிறது என்றால் அது அம்பேத்கர் எனும் மாய பிம்பம்.

ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில மொழியைத் தான் உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த முடிவெடுத்தால் அப்புறம் உச்சநீதிமன்றத்தை மூடிவிட்டு போக வேண்டியது தான்.. என்று 1948ல் மொழிவாரி மாநில அமைப்பின் வாரியத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் அம்பேத்கரே சொல்லி விட்டாராம்.

அது என்ன அம்பேத்கரே ? அவரென்ன கடவுளா?

எல்லா ஹிந்தியனும் எப்படி சுற்றி வளைத்தாலும் இறுதியில் தமிழனுக்கு எதிராகவே வந்து நிற்கிறான்.

எங்கள் மாநிலத்தில் எங்கள் உயர்நீதிமன்றத்தில் எங்கள் மொழியில் வழக்காட உரிமை கொடுக்காத இந்த அராஜக நாடும் அதன் கையாலாக திகழும் உச்ச நீதிமன்றமும் எங்களுக்குத் தேவையில்லை.

எங்கள் மாநிலத்தை  நாடாக்குவோம்...

எங்கள் மொழி ஆட்சிமொழி ஆகும்...

பிறகு எங்கள் உயர்நீதிமன்றமே உச்சநீதிமன்றம் ஆகும்...

அதற்கு மேல் ஐ.நா சபை அல்லது போர் என்ற நிலையே உருவாகும்...

கார்பரேட் பொருள்களை உண்ணாதே...


காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா?


என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா? என்று கேட்காதீர்கள்.

எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர்.

இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது.

மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கிறார்.

தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க...

பாமக, அதிமுக, பாஜக கூட்டணி பற்றி என்ன சொல்கிறார் அன்புமணி இராமதாஸ்...?


https://youtu.be/9pcsk6DAjR8

Subscribe the channel for more news...

வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம், சென்னையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக சிலர் தகவல்...


எனினும் வங்க கடல் நில நடுக்கத்தால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?


உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும்.

ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை.

இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்...

கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்...

கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை...

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் இரத்த அழுத்தம்...

உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக் கோளாறு...

சுவாசக் கோளாறான சுவாசகாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே சுவாசகாசம் உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி...

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு...

பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விசயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விசயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்...

மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

மேற்குறிப்பிட்ட விடயத்தை நன்கு புரிந்து உங்கள் உடல் நலத்தைப் பாதுகாப்பதுடன், உங்களைச்சூழ உள்ளவர்களின் நலத்திலும் ஒரு சிறுதளவுதானும் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்...

டிக்டாக் ஆப்பை தடை செய்தால் அதை நான் முதலில் வரவேற்பேன் எங்களை போன்றவர்களை அதில் கிண்டல் செய்கிறார்கள் - பாஜக தமிழிசை பேட்டி...


ஆல்பா தியான நிலை...


இந்த ஆல்பா நிலை தியானத்தின்போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.

மனித உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவில்லாத்து என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை. எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audio & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது. வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.

பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெறமுடியும் என்று பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள். எடிசன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.

ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம் நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம். இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாக்க் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிறபோது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும். அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.

இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள். இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும்பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.

கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கற ஒருமுறை. நேரடி சிந்தனை (Straight Thinking) கணக்குப்போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை.

இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையென்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம். பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை...

நடுவானில் குழந்தை பிறந்தால் எந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படும்.. சுவாரசிய தகவல்....


விமான ஓடுபாதையில் கால்நடையோ, பிற விமானமோ அதீத பலத்துடன் வீசும் பக்கவாட்டு காற்றோ இருந்தால் தரை இறங்க முடியாது. எனவே மீண்டும் டேக் ஆப் ஆகி வட்டமடித்து கொண்டு இருக்கும்.

நடுவானில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என்று எண்ணம் பலருக்கும் ஏற்படும். இதை மூன்று வகையில் தீர்மானிக்கிறார்கள்.

பதிவு பெற்ற விமானத்தின் நாடு, எந்த நாட்டின் மேலே பறக்கிறதோ அந்த நாடு அல்லது எந்த நாட்டில் தரையிறங்குகிறதோ அந்த நாடு என்ற விதிமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலும் விமானம் பதிவு செய்யப்பட்ட நாடே கணக்கிடப்படுகிறது.

மின்னல், சூறாவளி, பறவைகள் போன்றவை தாக்காதவாறு தற்போதைய விமானங்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உள்ளன.
விமானம் விபத்திற்கு உள்ளாகும் போது சட்டென்று பலருக்கும் பாராசூட் கொடுக்க முடியாது.

அதில் இறங்க பயிற்சியும் இருக்காது என்பதால் இம்முறை கடைபிடிப்பதில்லை. மேலும் மிதமான வேகத்தில் பறக்கும் விமானத்தில் இருந்தே பாராசூட்டில் குதிக்க முடியும்.

மேலும் 16 ஆயிரம் அடிக்கு குறைவாக இருந்தால் மட்டுமே பாராசூட்டுடன் வெளியேற முடியும். விமானத்தில் கடைசி 5 இருக்கையில் இருப்பவர்களுக்கு விபத்துகளில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு 50 சதவீதம் உள்ளது...

கிறிஸ்தவ மதமாற்றம் செய்ய வற்புறுத்தி பைபிள் கொடுத்த பெண் மீது, அதிரடி புகார், காவல்நிலையத்தில் வழக்கு பதிவு...


கோவை மாவட்டம் சாமிசெட்டி பாளையத்தில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா கோவை பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, கடந்த 8 ஆம் தேதி, தனியாக நான் வீட்டில் இருந்த போது திவ்யா என்ற பெண்மணி தன் வீட்டிற்கு வந்து பைபிள் புத்தகத்தை கொடுத்து, தான் எகோவா சாட்சி என்றும், கடவுளை பற்றி சொல்ல வந்ததாகவும் தங்களுடைய கடவுள் தான் உண்மையானவர் என்று வழிபட சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் திவ்யா என்ற பெண்மணி மீது பவித்ரா புகார் கொடுத்துள்ளார்.

அதன்படி திவ்யாவிடம் தக்க விசாரணை மேற்கொண்டு,நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவித்ரா கேட்டுக் கொண்டு உள்ளார்...

திமுக ஓசி சோறு மதிமாறன் கலாட்டா...


உயிருக்கு உலை வைக்கும் பிராய்லர் மீன்கள்.. தமிழகத்தை குறி வைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன?


இந்த தலைப்பை பார்த்த எல்லோருக்குமே நடுங்கிடும் அளவிற்கு பயம் நிச்சயம் உண்டாகும். ஆனால், இதுதான் உண்மை மக்களே! சாப்பிட கூடிய உணவுகள் அனைத்துமே விஷ தன்மை வாய்ந்ததாக இப்போது மாறி வருகிறது. முன்பெல்லாம் விஷத்தன்மை கொண்ட உணவுகள் மிக குறைவு. ஆனால், இன்று உணவு முழுவதுமே விஷயமாக மாறியுள்ளது. சைவ உணவுகளை விட அசைவ உணவுகளையே பெரும்பாலானோர் விரும்பி உண்ணுகின்றனர்.

இந்நிலையில் இவர்களை குறி வைத்தே மிக பெரிய வியாபார சந்தை மறைமுகமான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது. கோழிக்கறி, ஆட்டுக்கறி முதலியவற்றில் நடந்த அதே அபாயம் இப்பொது மீன்களின் பக்கம் திரும்பி உள்ளது. நாய்கறி பற்றிய சர்ச்சை இப்போது தான் ஓய்ந்த நிலையில், புதிதாக பிராய்லர் மீன் சர்ச்சை கிளம்பி உள்ளது. இதை ஆராய்ச்சியாளர்களும் நிரூபணம் செய்துள்ளனர். பெரும்பாலும் இது போன்ற விஷ தன்மையுள்ள மீன், கறி, போன்றவற்றை விற்க ஏன் தமிழ்நாட்டை குறி வைக்கின்றனர்..? இதன் பின் மறைந்துள்ள மேலும் பல உண்மைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.

விஷமே உணவு...

இன்றைய கால கட்டத்தில் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிட கூடாது என்கிற குழப்பத்திலே நம்மை அலைய விடுகின்றனர். காரணம், எங்கும் விஷம்! எதிலும் விஷம்! என்கிற சூழல் தான். சமீபத்திய காலங்களில் நாய்கறி பற்றிய சர்ச்சை கிளம்பி பலரையும் பீதி அடைய வைத்தது. ஆனால், இப்போது பிராய்லர் மீன் என்கிற சர்ச்சை புதிதாக எழுந்துள்ளது.

பிராய்லர் மீனா..?

இது வரை பிராய்லர் சிக்கனை தான் நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால், இப்போது மீனிலும் பிராய்லர் மீன் வந்துள்ளதாம். பிராய்லர் சிக்கனை சாப்பிட்டால் எப்படிப்பட்ட ஆபத்துகள் மனித உடலுக்கு உண்டாகும் என்பதை நாம் நன்கு அறிவோம். இதே வீரியம் இந்த பிராய்லர் மீன்களிலும் உள்ளது.

வித்தியாசம் என்ன?

சாதாரணமாக நாம் சாப்பிடும் மீன்களுக்கும் இந்த வகை பிராய்லர் மீன்களுக்கும் பலவித வித்தியாசங்கள் உண்டு. இந்த வகை மீன்கள் பலவித இராசயன முறைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டு மீன்களை போன்று இல்லாமல் இவை ஏற்றுமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

பெயர் என்ன?

நாட்டு மீன்களான கெளுத்தி, அயிரை, உழுவை, கெண்டை போன்ற மீன் இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்க இந்த புதுவித மீன்கள் இப்போது படையெடுக்க தொடங்கியுள்ளன. இவற்றை பாஷா மீன், நெய் மீன், பங்கசியஸ் போன்ற பெயர்களில் சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

எங்கிருந்து?

வியட்னாம் நாட்டில் தான் இந்த வகை மீன்கள் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின் இதை உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்த வகை மீன்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்க இவை ஏன் நம்மை குறி வைத்து வருகின்றன? என்பதை சற்று யோசியுங்கள்.

மக்கள்...

நம் மக்களுக்கு எப்போதுமே ஒரு மனோபாவம் உள்ளது. எதை எளிதில் அடைய முடியும், எது மலிவான விலையில் கிடைக்கும், இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் நம்மை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த வகை மீன்களில் முட்கள் மிக குறைவு, அவ்வளவு சீக்கிரத்தில் கெட்டும் போகாது, துர்நாற்றமும் மிக குறைவு, இதில் எந்த வகை உணவுகளை சமைத்தாலும் பிரமாதமான ருசியை தரும். இங்கு தான் அவர்கள் விரித்த வலையில் நாம் மாட்டி கொண்டுள்ளோம்.

பண பேய்கள்...

இந்த வகை மீன்கள் எல்லா கால சூழலிலும் தாக்கு பிடித்து வாழ இயலும் என்பதற்காகவே இதை அதிகஅளவில் பண்ணை உரிமையாளர்களும் உற்பத்தி செய்கின்றனர். யார் எப்படி போனால் என்ன..? எனக்கு என் லாபம் தான் முக்கியம் என்கிற நோக்கில் செயல்பட இன்று பலர் தயாராக உள்ளனர். இந்த வகை மீன்கள் விரைவாக வளர ஹார்மோன் ஊசிகள் இவற்றிற்கு செலுத்தப்படுகிறது. இதனால், உற்பத்தியாளருக்கு மட்டுமே பயன் அதிகம்.

விஷம்...

மீன்கள் அதிக எடையுடன் வளர வேண்டும் என்பதற்காகவும், மிக சீக்கிரத்திலே உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதற்காகவும் இவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யும் போது ஹைட்ரஜன் பெராக்ஸைட், STPP, சிட்ரிக் அமிலம் போன்ற விஷ வேதிகளை கொண்டு இவை சுத்தம் செய்யப்படுகின்றன. இவற்றை சாப்பிடும் நமக்கு என்னென்ன அபாயங்கள் உண்டாகும் என்பதை நீங்களே யூகியுங்கள்.

பேராபத்து...

இது போன்ற பிராய்லர் மீன்களை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த மீன்களை சாப்பிடுவதால் புற்றுநோய், விந்தணு குறைபாடு, கருமுட்டை வளர்ச்சியின்மை, எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பேராபத்துகள் மனித இனத்தை சூழும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடவே கெட்ட கொழுப்புகள் அதிகரித்து இதய நோய்களும் உண்டாக கூடும்.

அழிவு...

இந்த பிராய்லர் மீன்கள் நாட்டு மீன்களையே சாப்பிட கூடிய தன்மை கொண்டவை. ஆதலால், சுற்றுசூழல் சமநிலை பாதிக்கப்படும். முன்பு வரை கடல் மீன்கள், நாட்டு மீன்கள் போன்றவை சுமார் 3035 வகைகள் இருந்தன. ஆனால், இப்போது நமக்கு இவற்றில் தெரிந்த மீன்களும், சந்தையில் விற்கப்படும் மீன்களும் வெறும் 5 முதல் 10 வகைகள் மட்டுமே. இதிலிருந்தே மீன் இனத்தின் அழிவை நாம் உணரலாம்.

உணவகங்கள்...

இன்று வீடுகளில் சாப்பிடுவதை விட வெளியில் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி கோடிக்கணக்கில் சில உணவகங்கள் இப்படிப்பட்ட மீன்கள், இறைச்சிகளின் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். குறிப்பாக உயர்தர உணவகங்களில் தான் இந்த முறைகேடுகள் அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தீர்வு...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்கிற வாய்மொழிக்கு ஏற்ப நாம் விழிப்புணர்வுடன் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் நடந்து கொண்டே இருக்கும். விலை மலிவு, அதிக சுவை, விரைவான உற்பத்தி போன்ற காரணிகளால் இந்த வகை உணவுகளை சாப்பிட்டால் பாதிக்கப்படுவது நாம் தான்...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து தஞ்சையில் அணி திரள்வோம்...


கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன் உள்ளிட்ட எரிபொருட்களை எடுக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நெற்களஞ்சியாகத் திகழும் காவிரிப் படுகையில் திணிக்காதே, எமது வேளாண் மண்டலத்தை அழிக்காதே என்று வலியுறுத்தி பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் தஞ்சையில் பிப்ரவரி 23 சனிக்கிழமையன்று மாபெரும் மக்கள் பேரணி நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளது தமிழக காவல்துறை.

தமிழ்நாட்டின் மீது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக – தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் - ஹைட்ரோகார்பன் மற்றும் கெய்ல் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டங்கள், அணு மின் திட்டங்கள், அனல் மின் திட்டங்கள், நியூட்ரினோ, 8 வழிச்சாலை, 6 வழிச்சாலைத் திட்டங்கள், துறைமுகங்களை விரிவுபடுத்தும் சாகர்மாலா திட்டங்கள் ஆகியன திணிக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் யாவும் தமிழ்நாட்டின் வேளாண் பூமியான காவிரிப் படுகையையும், மக்களின் வாழ்வாதாரங்களுக்கு அரணாக திகழ்ந்துவரும் இயற்கைச் சூழலையும், நிலத்தடி நீர், காற்று, கடல் என்று அனைத்தையும் மாசுப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஜனவரி 25ஆம் தேதியன்று, இயற்கை ஞானி நம்மாழ்வார் ஐயா பிறந்த இளங்காடு கிராமத்தில் தொடங்கப்பட்டது. பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் க.கா.இரா.இலெனின் தலைமையில் தங்க. சண்முக சுந்தரம் உள்ளிட்ட தோழர்களோடு தொடங்கிய பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தேன். இந்த மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் போது நீங்கள் துண்டறிக்கைகள் எதையும் மக்களிடம் வழங்கக்கூடாது என்று தோழர் இலெனினிடம் காவல்துறையினர் நிபந்தனை விதித்தனர். ஏனெனில் தமிழ்நாட்டை பாலையாக்கும், தமிழ் மக்களை அகதியாக்கும் பேரழிவுத் திட்டங்களின் அபாயங்களை விளக்கி ‘தமிழ் மக்கள் மீதான பேரழிவுத் திட்டங்களை முறியடிப்போம்’ என்ற பெயரில் இலெனின் அவர்கள் எழுதியுள்ள 16 பக்க புத்தகம் அச்சிடப்பட்டு ரூ.20 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு அப்போதே வழங்கப்பட்டது. இதனைக் கண்டதும் அதற்குத் தடை விதித்தது மாவட்டக் காவல்துறை!

தமிழக அரசின் பரிபூரண இசைவுடன் தமிழ்நாட்டில் இந்திய ஒன்றிய அரசு திணிக்கும் திட்டங்கள் யாவும் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் என்றே கூறி நடைமுறைப்படுத்தப்படுகிறது. அப்படியாயின் இத்திட்டங்களின் அபாயத்தை விளக்கிப் பேசினாலோ துண்டறிக்கை அளித்தாலோ காவல்துறையை வைத்து அதனை தடுப்பது ஏன்? மக்கள் நலத் திட்டங்கள்தானே? வளர்ச்சிக்கான திட்டம் என்றால் யாருக்காக? என்று அரசும் துண்டறிக்கை கொடுத்து மக்களுக்கு விளக்கலாமே? அதைச் செய்யாமல் துண்டறிக்கை வழங்க முற்பட்டாலே ஏதோ வெடி வைப்பதுபோல் அலறிக்கொண்டு காவல்துறையைக் கொண்டு பரிமுதல் செய்வது ஏன்? அப்படியானால் இத்திட்டங்கள் பற்றி நாங்கள் புத்தகம் போட்டு சொல்வதெல்லாம் உண்மை என்று இந்திய அரசும், தமிழக அரசும் ஒப்புக்கொள்கின்றன என்றுதானே பொருள்?

மன்னார்குடியை மையமாக வைத்து 630 சதுர கி.மீ. பரப்பில் மீத்தேன் எரிவாயு எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதை எதிர்த்து காவிரிப் படுகையை காப்போம் என்று ஐயா நம்மாழ்வார் தலைமையில் மாபெரும் மக்கள் இயக்கம் நடத்தி அத்திட்டத்தை தடுத்தி நிறுத்தியதில் இலெனின் அவர்களுக்கு பேரும் பங்கு உண்டல்லவா? தமிழக அரசு விவசாயிகளின் எதிர்ப்பை நியாயம் என்றுணர்ந்து அத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா நிறுத்தினாரே!

 அந்த தலைவரின் வழியில் நின்று ஆட்சி செய்வதாக கூறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு, எதையும் வெளிப்படையாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகவும் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்கக் கோரும் பேரணிக்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதேன்?

தங்கள் மண்ணின் மீது திணிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக கதிராகமங்கலம், நெடுவாசல், மாதிரிமங்கலம், தென்னஞ்சாறு, காரியமங்கலம், உக்கடம் கமலாபுரம் உள்ளிட்ட எண்ணிலடங்கா காவிரிப் படுகை கிராமங்களில் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்களே?

 ஹைட்ரோகார்பன் திட்டங்களை தங்கள் அரசு அனுமதிக்காது என்றுதான் தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் ஓ.என்.ஜி.சி. தனது பாணியில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து துரப்பணப் பணிகளைத் தொடங்குகிறதே? மக்கள் எதிர்ப்புக்கு எந்த மரியாதையும் இல்லையே?! அதனால்தான் இப்போது திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கிராமத்து மக்கள் கடந்த 15 நாட்களாக தங்கள் பூமியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில்தான் தங்கள் எதிர்ப்பை பலமாக்க காட்ட ஒரு இலட்சம் விவசாயிகளும் பொதுமக்களும் திரண்டு நடத்தவுள்ள தஞ்சை பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் எப்பாடுபட்டாவது நடத்தி, பேரழிவுத் திட்டங்களில் இருந்து காவிரிப் படுகையை காக்கத் திரள்வோம் என்று உறுதி பூண்டுள்ளனர்.

இதற்குப் பிறகாவது தமிழக அரசு தமிழ்நாட்டின் மக்கள்  பக்கம் நின்று காவிரிப் படுகையை காக்க வேண்டும் என்பதற்காகவே இப்பேரணி நடத்தப்படுகிறது. 

நம் கண் முன்னே நமது மாபெரும் வேளாண் மண்டலம் அழிவதை தடுத்து நிறுத்துவோம். பிப்ரவரி 23 சனிக்கிழமை, தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் இருந்து திலகர் திடல் நோக்கி நடைபெறும் மாபெரும் பேரணியில் பங்கேற்கத் தயாராவோம். காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் போர்க்கொடி உயர்த்துவோம்...

Benefits of garlics / பூண்டின் நன்மைகள்...


https://youtu.be/VWl6EoqYC4Q

Subscribe the channel for more tips...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பூமியில் நீங்கள் எங்கு பார்த்தாலும் நமது மூதாதையர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குகைளில் வாழ்ந்து. பின்னர் அறிவில் மேம்பட்டு  நம்பமுடியாத பண்டைய தளங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர்.

ஆசியாவில் ஆட்சி புரிந்த மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் இருந்து, அமெரிக்க கண்டத்தை தங்கள் தாய்நாடு என்று அழைத்த கணக்கற்ற பண்டைய நாகரிகங்கள் அனைத்தும். இன்று நீங்கள் பார்க்கவும் கற்பனை செய்யவும், தூண்டும், வேற்றுக்கிரவாசிகள் மற்றும் அவர்களின் பறக்கும் தட்டுகள் 'UFO' வந்து சென்றதை உறுதிப்படுத்தும் விதமாக பல குகை சித்திரங்கள் மற்றும் கல்வெட்டுகளில் பதிவுசெய்து வந்துள்ளனர்.

ஆனாலும் நமது முன்னோர்களின் இந்த விசித்திரமான பதிவுகளுக்கு நாம் பல விளக்கங்களை தந்தாலும், அவர்கள் வானில் கண்ட விளக்கம் கிடைக்காத, நம்பமுடியாத விசித்திரமான உண்மைகளையே பதிவுசெய்தனர், என்பதற்கு ஆதாரமாக நமது காலத்திலேயே ஒரு மிகச்சிறந்த உதாரணம் இருக்கிறது.

(September 1939 – 1945) இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது... ஜப்பான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அருகிலுள்ள ஆஸ்திரேலிய தென் பசிபிக் தீவுகளில் ராணுவத் தளவாடங்களைக் குவித்ததுடன், அப்பகுதியில் விமானத் தளத்தையும் அமைத்தது. அப்போது அப்பகுதியில் வாழ்ந்த, உலகின் தொலைதூர தீவில் வசித்த ஆதிவாசி மக்கள், முதல் தடவையாக விமானங்களைக் கண்டனர்.

மேலும் அமெரிக்க போர்வீரர்களை, வானத்திலிருந்து கடவுள்கள் பறந்து வந்ததாக நினைத்தார்கள். போர் வீரர்களும் தாங்கள் கொண்டு
சென்ற மருந்து மற்றும் உணவுவகைகளை அவர்களுக்குக் கொடுக்க, ஆதிவாசிகள் உண்மையிலேயே இவர்களைக் கடவுளாக நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். விமானங்கள் தீவுகளுக்கு உணவு மற்றும் பொருட்களை வழங்கிய பிறகு,  ஒரு தூதரால் சரக்குகள் கொண்டு வரப்படும் என்று நம்பத் தொடங்கினர்.

போர் முடிந்து அமெரிக்க வீரர்கள் நாடுதிரும்பினர். ஆனால் விமான தளங்கள், பழுதுபட்ட விமான உதிரிப் பாகங்களை அப்படியே விட்டுச்சென்றனர். அமெரிக்கர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பது ஆதிவாசிகளுக்குக் கடைசிவரை தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமட்டும்தான். "ஏதோ ஒரு நோக்கத்திற்காக, வானத்திலிருந்து கடவுள்கள் வந்தார்கள். பிறகு சென்று விட்டார்கள்" என எண்ணினார்கள்.

இதன் விளைவாக, அவர்கள் ஒரு விமானம் பறக்க மேல்நோக்கி பார்த்த போது அவர்கள் ஒரு கடவுளின் பிரதியை உருவாக்க வேண்டும் என, ராணுவ உடையில் வந்த வீரர்கள் மற்றும் விமானங்களை அப்படியே மாதிரி வடிவங்களாக உருவாக்கி வழிபடத் தொடங்கினார்கள்.

பின்னர் 1946 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் வான்வழி ரோந்தில் ஈடுபட்ட போது, இந்த ஆதிவாசிகளின் விமான வழிபாடுகளை முதன்முதலில் கண்டுபிடித்தது. மேலும் இவர்கள் வழிபாடும் கடவுளின் பெயர்
#ஜான்_பிரம் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனென்றால் இந்த அமெரிக்க படைவீரர்தான் தீவில் முதலில் விமானம் மூலம் இறங்கிய கடவுளிடமிருந்து அனுப்பப்பட்ட அவர்களின் தூதர் ஆவார்.

இதைப்போலத்தான் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களும், சிற்பங்களும் வானத்திலிருந்து வந்தவர்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிகால மனிதர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது மறுக்கமுடியாத கருத்து. நீங்கள் என்னை சந்தேகித்தால், John Frum Cargo Cults: Remote Islanders That Worship An American G.I. இதை பற்றி ஆராய்ந்து பாருங்கள். இன்றும் அந்த ஆதிவாசி மக்களிடம் இந்த வழிபாடு உள்ளது. அமெரிக்கர்களும் அவர்களுக்கு உதவிவருகின்றனர்...

மனித வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு அத்தியாயம் உள்ளது...


தமிழா விழித்துக்கொள்...


காலப்பயணமும் தியரி ஒஃப் ரிலேட்டிவிடியும். – ஏலியன்ஸ் 2...


ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது… நாம் இறந்தகாலத்துக்கு தான் செல்ல முடியும் என சொல்லி இருந்தேன்

ஆனால், நண்பர் ஒருவர்… இல்லை எதிர்காலத்துக்கு தான் செல்ல முடியுமென தனது கருத்தை கூறியிருந்தார்.

நான் நெட்டில் அது சம்பந்தமாக (மேலோட்டமாக) தேடிய வரையில்…
அப்படி எதுவுமே நிரூபிக்க படவில்லை.

ஆனால், காலம் மாறுபடும் என்பது நிரூபிக்க பட்டுள்ளது (time travel theory).

ஒரே முறையில் செய்யப்பட்ட இரு கடிகாரங்களை ஒப்பிட்டு நிரூபிக்கப்பட்டது.

அதாவது, ஒரே மாதிரியான இரு கடிகாரங்களில் ( பொறி முறைக் கடிகாரமல்ல) ஒன்றை, ஒரு விண்கலமொன்றினுள்ளும் இன்னொன்றை ஆய்வு கூடத்திலும் வைத்து… விண்கலத்தை பூமியை வேகமாக ( ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக குறைவானதே…) சுற்ற செய்த போது… பல சுற்றுக்களின் பின்னர், மணிக்கூட்டின் வாசிப்பில் ஒரு சிறு வித்தியாசம் இருந்தது.

இது தான் தற்சமையம் பெளதீக ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

போன பதிவில் கூறிய… மனிதனால், விண்வெளியை நோக்கி விடப்பட்ட சவால் இது தான்….

இன்றைய மனிதனின் உருவம்… பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னான மனித உருவிலிருந்து வேறுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

தொல்பொருள் ஆய்வாலர்களால் கண்டெடுக்கப்பட்ட பழைய எலும்புக்கூடுகளை பார்க்கு போது… வாய் பகுதி நீண்டதாகவும்… கீழ்த்தாடை தடித்ததாகவும்… கைகள் நீண்டதாகவும்… காணப்பட்டுள்ளது.

காரணம், அன்றைய சூழ்னிலையில் அவ் மனிதன் வேட்டையாட மட்டுமே தெரிந்து இருந்தான். எனவே, வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு நீண்ட கைகளும்… உணவை ( பச்சை) சிரமமின்றி உண்பதற்கு ஏற்றவாறு நீண்ட தாடையும் இருந்து இருக்கின்றன.

பின்னர், காலம் செல்ல செல்ல மனிதன் அறிவை பயன் படுத்தி உணவை பதப்படுத்தி உண்ண தொடங்கியதும்… அந்த நீண்ட வலுவான தாடைகளின் அவசியம் அற்றுப்போனது.

அதேபோல், வேட்டையாடுவதிலிருந்து பயிச்செய்கைக்கு மாறிய போது… கையின் பாவணையும் கணிசமான அளவுக்கு குறைந்து இருந்தமையால்… அதனது நீளமும் சற்று குறைந்தது.

என்ன சம்பந்தமில்லாமல் இருக்குதே என்று நினைக்க வேணாம்..

சம்பந்தத்தோட தான் எழுதி இருக்கேன்.
என்ன சம்பந்தம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

விழித்துக்கொள் தமிழா...


கட்டபொம்மன் (தெலுங்கன் கெட்டி பொம்மு நாயக்கன்) முதல் விடுதலை போராட்ட வீரனா..?


சில வரலாற்று பதிவுகள்....

கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும், அவன் வெள்ளையருக்கு எதிராக போர் புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம் நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல.

நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்..

இனி கெட்டி பொம்மனின் வீர தீர செயல்களை நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளதை கொஞ்சம் காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும்.

புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே..

முதலில் கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுத்துவதே ஒரு வரலாற்று பிழையாகும்..

மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை..

வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளப்பட்ட போது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர், பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர். இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ள வேண்டும்..

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மொழி வழி தேசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும் சூழலிலேயே வீட்டிலும், இரண்டு பிற மொழியினர் தனியே பேசிக்கொள்ளும் போதும் அவரவர் தாய் மொழியிலேயே ''மாட்லாடி கொள்ளும் போது'' ஒரு ஆட்சியாளனாக இருந்த தமிழ் மண்ணை ஆண்ட கெட்டி பொம்மு நாயக்கன் திரை படத்தில் வருவது போல் தமிழில் வீர வசனம் பேசியிருப்பானா ?

ஜாக்சன் துரையிடம் ''டப்பு லேது'' என்று தான் மாட்டிலாடியிருப்பார். என்பதை பொய்யுரை பரப்புவோர் கவனிக்க வேண்டும்.

மேலும் இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில் தான்..

முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்து கொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான்.

அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வர்புரிதிப் பெற்றான், கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான் , அவர்களை சாட்டையால் அடித்தும் , கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான். கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும் , நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினர் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும் , சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன் போல பொய்யுரை பரப்புவோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள முனைவர் கே .கே .பிள்ளையின் ''தமிழக வராலாறு , மக்களும் பண்பாடும்'' என்ற நூலை படிக்கவும்..

மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டிவைத்தான். அவைகள் கற்றளிகள் அல்ல வெறும் ஓலை குடிசைகளே..

அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர். ஏனெனில் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர். இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர்.

ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை. இதை நா.வானமாமலை பதிபுத்துள்ள ''வீரபாண்டிய கெட்டி பொம்மு கதை பாடல்'' நூல் மூலம் அறியலாம்..

ஆயுதம் ஏந்திய பாஞ்சாலன் குறிச்சியின் ஆட்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கூலியாட்களுடன் எட்டயபுரத்தை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் கம்மங் கதிர்களை அறுத்துக் கொள்ளையிட்டு சென்றனர். இது தொடர்பாக எட்டப்ப நாயக்கன் 15.01.1799 இல் ஜாக்சனுக்கு புகார் அனுப்பினான்.

ஊத்துமலை பாளையத்தில் கங்கை கொண்டான் வட்டத்திலுள்ள மனியகாரரை மிக மோசமாக நடத்தி இரவு நேரத்தில் கால்நடைகளையும், அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர் என்று 13.06.1799 இல் ஊத்துமலை பாளையக்காரர் லூசிங்க்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

05.08.1799 இல் சிவகிரி பாளையக்காரர் அனுப்பிய புகார் , 07.08.1799 இல் ஊத்துமலை பாளையக்காரர் அனுப்பிய புகார் ஆகியவற்றில் கெட்டி பொம்முவின் தம்பி துரைசிங்கம் , தானாபதி பிள்ளை ஆகியோருடன் கோலார்பட்டி , ஏழாயிரம்பண்ணை , அழகாபுரி , நாகலாபுரம் , காடல்குடி , குளத்தூர், மணியாச்சி , மேலமந்தை, ஆத்தங்கரை , கடம்பூர் பாளையங்களை சேர்ந்தவர்களும் கொள்ளையடித்துள்ளனர் என்பதும், எட்டயபுரம் , ஊத்துமலை , சொக்கம்பட்டி , ஆவுடயாபுரம் , தலைவன் கோட்டை ஆகிய கும்பினிய ஆதரவு பாளையக்காரர் களுக்கும் போதிய பாதுகாப்பு அழிக்க கோரி மேற்கண்ட கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றை J.F. KERANS - Some Account of the Panchalamkurichy polegar and the State of Trinelvelly . என்ற நூலில் பதியப்பட்டுள்ளது.

தமிழர்களே இப்போது சொல்லுங்கள்...

இந்த வடுக வந்தேறியா சுதந்திர போர் வீரன்?

தமிழர்களே நமது வரலாற்றை நாம் ஆழ்ந்து தெளியாமல் வந்தேறிகளின் ஆதிக்கத்திலிருந்து மீள முடியாது.

எனவே இந்திய தேசிய மாயை , திராவிட தேசிய மாயை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு...

இருக்கும் உடமைகளை காக்கவும் , இழந்த உரிமைகளை மீட்கவும், தமிழர் தேசிய விடுதலை களத்தை அமைப்போம்...

தமிழர் நாட்டை தமிழரை மட்டுமே ஆளே வைப்போம்...