14/02/2019

நடுவானில் குழந்தை பிறந்தால் எந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படும்.. சுவாரசிய தகவல்....


விமான ஓடுபாதையில் கால்நடையோ, பிற விமானமோ அதீத பலத்துடன் வீசும் பக்கவாட்டு காற்றோ இருந்தால் தரை இறங்க முடியாது. எனவே மீண்டும் டேக் ஆப் ஆகி வட்டமடித்து கொண்டு இருக்கும்.

நடுவானில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என்று எண்ணம் பலருக்கும் ஏற்படும். இதை மூன்று வகையில் தீர்மானிக்கிறார்கள்.

பதிவு பெற்ற விமானத்தின் நாடு, எந்த நாட்டின் மேலே பறக்கிறதோ அந்த நாடு அல்லது எந்த நாட்டில் தரையிறங்குகிறதோ அந்த நாடு என்ற விதிமுறையை உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலும் விமானம் பதிவு செய்யப்பட்ட நாடே கணக்கிடப்படுகிறது.

மின்னல், சூறாவளி, பறவைகள் போன்றவை தாக்காதவாறு தற்போதைய விமானங்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உள்ளன.
விமானம் விபத்திற்கு உள்ளாகும் போது சட்டென்று பலருக்கும் பாராசூட் கொடுக்க முடியாது.

அதில் இறங்க பயிற்சியும் இருக்காது என்பதால் இம்முறை கடைபிடிப்பதில்லை. மேலும் மிதமான வேகத்தில் பறக்கும் விமானத்தில் இருந்தே பாராசூட்டில் குதிக்க முடியும்.

மேலும் 16 ஆயிரம் அடிக்கு குறைவாக இருந்தால் மட்டுமே பாராசூட்டுடன் வெளியேற முடியும். விமானத்தில் கடைசி 5 இருக்கையில் இருப்பவர்களுக்கு விபத்துகளில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு 50 சதவீதம் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.