15/03/2018

இராமாயணம் - என் சந்தேகம்...


ராவணன் - ராமன் சண்டை நடந்தது திரோதா யுகத்திலயாம் இது கிட்டத்தட்ட 21 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னராம்..

ஆனால், இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கிற ராமர் பாலம் கட்டப்பட்டது கிட்டத்தட்ட 7000 ஆண்டுகள்தானாம், ஆய்வு முடிவுகள் சொல்லுது..

அதே நேரம், இண்டாவது கடல் பெருக்கினால் இப்போதைய இலங்கையும் இப்போதைய இந்தியாவும் பிரிந்தது கி.மு 6500 ஆண்டுகள்தானாம், அதுவரை எல்லாம் ஒரே நிலப்பரப்பாக இணைந்தே இருந்துள்ளன...

இப்போ என் சந்தேகம்...

ராமன் எப்படி நிலத்தில் நீருக்கான பாலம் கட்ட முடியும்.. என்னங்கடா பாஜக பக்தாள்ஸ் கதை விடுறீங்களா...

போங்கடா டூபாக்கூர்களா...

Disease x இலுமினாட்டிகளும் உலக அழிவும்...


மாயமாக மறைந்த ஒரு கிராமம் - விடையின்றி தொடரும் மர்மம்...


ஒரு மர்ம கிராமம் பற்றி இன்று பார்க்கப்போகின்றோம்..

இது சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு பத்திரிகையில் கென்னியா வைச்சேர்ந்த கிராமம் என்ற தகவலுடன் வாசித்த நினைவு. இப்போது தேடிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

அஞ்ஜிகுனி, கனடாவில் ஒதுக்குப்புறமாக மலையைச்சார்ந்து அமைந்திருந்த கிராமம். சுமார் 2000 மக்கள் சாதாரணமாக வாழ்ந்து வந்தார்கள். ஏரியில் மீன் பிடித்து விற்பதை முக்கிய தொழிலாக கொண்டிருந்தார்கள் அவர்கள்.

1930 ஆம் ஆண்டு கார்த்திகை ( நவம்பர்) மாதம் ஒரு நாள்…

பொறி வைத்து விலங்குகளை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட ஜோ லபல் என்பவர் அந்த ஊருக்கு சென்றார். அது முதல் தடவையல்ல… பல தடவைகள் அவர் அந்த ஊருக்கு சென்றுள்ளார்.

ஆனால் அன்று சற்று வித்தியாசமாக இருந்தது ஊர். ஊருக்குள் கால் வைத்தது முதல் யாரையும் அவர் காணவில்லை. ஊரின் மையப்பகுதிக்கு சென்றும் அவர் கண்களில் யாரும் அகப்படவில்லை. வீட்டுக்கதவுகள் திறந்து கிடந்தன. வீட்டிற்குள் சென்று பார்த்தால் சமைத்த உணவுகள் அப்படியே கிடந்தன. பாதி தைத்த உடைகளில் ஊசி கூட வெளியில் எடுக்கப்படாமல் இருந்தது.
இறுதியாக இரு வாரங்களுக்கு முதல் கூட அங்கே வந்திருந்தார் ஜோ. கிராமத்தவர்கள் அனைவருமே கலகலப்பானவர்கள். சுமூகமான சமூகம்.

ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த ஜோ, பகுதி காவலர்களுக்கு அறிவித்தார். அவர்கள் தேடியும் அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் எங்கே? போன்ற கேள்விகள் தேங்கித்தான் நின்றன.

சுற்று முற்றும் தேடி விசாரித்ததில்…

ஊரின் மறு முனையில் வண்டில்களை இழுத்து செல்லும் நாய்கள் இறந்து கிடந்தன. ( 7 நாய்கள் என்று சில தகவல்களும் சிலது 3 எனவும் மாறுபட்டு இணையத்தில் உள்ளது.) அந்த நாய்கள் எவ்வாறு இறந்தன என்பதை அப்போது பெரிதாக யாரும் சோதனையிடவில்லை.

அருகில் உள்ள ஊரைச்சேர்ந்த பலர் அந்த ஊரின் மலைப்பகுதியில் வெளிச்சத்தத்தை பார்த்ததாக கூறினார்கள்.

கூறப்படும் காரணங்கள்...

வேறு இடம் பெயர்ந்திருப்பார்கள் : சகல வசதிகளும் இருக்கும் அந்த மக்கள் பொருட்களை அப்படி அப்படியே விட்டு விட்டு கிளம்பிப்போக வாய்ப்பில்லை. அப்படி போய் இருந்தாலும் எங்கே?

படையெடுப்பு : ஏதோ ஒரு ஊரைச்சேர்ந்தவர்கள் படையெடுத்து சிறைப்பிடித்திருப்பார்கள். ஊரில் படையெடுப்பு நடந்தமைக்கான எந்த அறிகுறிகளும் இருந்ததில்லை. படையெடுப்பு அமைதியாக நடைபெற வாய்ப்பும் இல்லை.

வெம்பயர், காட்டேர்களின் தாக்குதல் குறிப்பிட்ட காலத்தில் வெம்பயர்கள் தொடர்பான அதீத நம்பிக்களைகள் இருந்தமையால் இந்த கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம். மனித இறப்புக்களுக்கான சான்றுகளோ இரத்த அடையாளங்களோ கிராமத்தில் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஏலியன்ஸ் : பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் மலையில் வெளிச்சத்தை பார்த்ததாக கூறியதன் படி, ஏலியன்ஸ் ஒரே தடவையில் அந்த ஊர் மக்களை/ உயிரினங்களை மட்டும் கடத்தி இருக்க கூடும்.

பரிமாணம் : அந்த ஊர் மக்கள் பரிமாண மாற்றத்தில் மறைந்திருக்கலாம். இதுவும் சற்று குழப்பமானது. விரிவாக பின்னர் பார்க்கலாம்.

எமது கருத்துப்படி, மறை உலகம்.. கிட்டத்தட்ட இது பரிமாணத்தை ஒத்துப்போகும். ஏற்கனவே இது தொடர்பாக பார்த்துள்ளோம். மீண்டும் இன்னோர் சந்தர்ப்பத்தில் விரிவாக பார்க்கலாம்.

இவ்வாறு பல கருத்துக்கள் கூறப்பட்டாலும், இந்த கிராம மக்கள் காணாமல் போய் 83 வருடங்களைத் தாண்டியும் இன்னமும் இதற்கான விடையை கனேடிய போலிஸாரும் ஆய்வாளர்களும் கண்டறிய முடியாதுள்ளனர்..

இவ்வாறான மேலும் பல மர்மங்களை அறியலாம்...

நாம் வாழ்கிறோம் அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.. ஆனால் எப்படி வாழ்கிறோம்..?


நம் வளங்கள் நம்மிடம் இருக்கிறதா..?
நமக்கான அரசியல் இங்கு நடக்கிறதா..?
நம் கேள்விகளை யார் செவி சாய்க்கிறார்கள்..?
நம்முடைய தனிமனித தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா..?

இதற்கான பதில் நம்மிடம் எதுவுமில்லை, ஆனால் நாம் வாழ்கிறோம், அவ்வளவே...

இராமேஸ்வரம் நகராட்சி சாதனைக்கு வாழ்த்துக்கள்...


காளான் மருத்துவ பயன்கள் பற்றிய தகவல்...


காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது...

தமிழரை முட்டாளாய் நினைக்கும் எவனுக்கும் இங்க இடமில்லை என்கிற நிலையை உண்டு பண்ணனும்..


வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு...


தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது... எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது....

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...
எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது... ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது....

3. உடல் எடையைக் குறைக்கிறது...
எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது...

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது...

7. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது..

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது..

9. stress ஐ குறைக்கிறது
இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை...

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது...

போட்டோஷாப் பண்ணியே ஆட்சியை பிடிச்ச பாஜக வுக்கு இதெல்லாம் சாதாரணம்...


உலகின் தலைச்சிறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மரணம்...


தனது உடலில் தன்னால் அசைக்க கூடியது தனது கன்னத்தில் சிறு பகுதி சதை மட்டுமே எனும் சூழலில் சொந்தமாக பேசும் ஆற்றல் கூட இழந்து கணினியின் வாடகை குரல் மூலம் பேசும் மிக கடினமான வாழ்க்கை என்றாலும் தன்னை இந்நூற்றாண்டின் மிக பெரிய விஞ்ஞானியாக வளர்த்து கொண்ட ஹாக்கின்ஸ் ஒரு தன்னம்பிக்கையின் சின்னம்.

சாதிக்க நினைப்பவர்களின் தூண்டுகொள்.

அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்...

இலுமினாட்டி இரகசியம் : யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை புத்தகம் வாயிலாக...



முருகன் - பல பெயர்கள் பற்றி பாவாணர்...


பண்டை மாந்தரில் குறிஞ்சி நில மக்கள்,
தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு சேந்தன்(சிவந்தன்) எனப் பெயரிட்டு வணங்கினார்கள்.

சேயோன்-சேய் என்பன இலக்கிய வழக்காகும்.

வேட்டைத் தொழிலில் அவர்கள் மறம் சிறந்திருந்ததனால் தமது தெய்வத்தையும் மறவனாகக் கருதி அதற்கேற்றவாறு அவனை முருகன் இளைஞன் என்றார்கள்.

குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்ற பொருளைக் கொண்டதாகும்.

குறிஞ்சி நிலத்தின் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும் வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும் முருகனுக்கு பெயர்கள் தோன்றின.

முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தியதால் அவனுக்கு கந்தன் என்ற பெயரும் தோன்றியது.

கந்து என்றால் தூண், கந்தம் என்றால் பெருந்தூண் என்று பொருள்.

"கலி கெழு கடவுள் கந்தல் கைவிடப்பலிகண் மாறிய பாழ்படு பொதியில்"

என்ற புறநானூற்றில் 52வது பாடல் மூலம் உதாரணத்தை கந்தம் என்ற சொல்லிற்குகாட்டலாம்...

அப்படியே அந்த நிறுவன ஓனர வெளிநாட்டுக்கு பத்திரமா அனுப்பி வையிங்க டா...


பாஜக மோடி என்றால் சும்மாவா.? நம்பர் 1 உலக டூபாக்கூர் டா...


கிட்டத்தட்ட 3கோடி fake id.. ஓட்டு மிசின்லையும் இப்படி தான் கள்ள ஓட்டு போட்டுருபானுங்க...

உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா?


இது வரை நம் தமிழர்களின் சாதனைகளைப் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலே மிகச் சிறந்த ஒன்று இது..

உலகின் மிகப் பெரிய வழிப்பாட்டுத்தலம் எது?

இந்த அதிசயத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன். ஆம். உலகிலேயே மிகப்பெரிய வழிபாட்டுதளம் "கம்போடியா" நாட்டில் நம் தமிழர்களின் கலைத் திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோவில்.

கோயிலைக் கட்டியது யார்?

இரண்டாம் “சூர்யவர்மன்” கம்போடியாவைக் கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்ப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயில் தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே பெரியது.

இந்தக் கோயிலின் அதிசயம் என்ன?

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள்.. அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். (மீண்டும் ஒரு முறை), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோ மீட்டர்கள். மிக அடர்ந்த காட்டிற்கு நடுவே இக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலைக் கட்டிமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆயின?

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது. இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது. பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டு தலமாகவே செயல் பட்டு வருகின்றது.

கோவிலின் சிறப்புகள் என்ன?

இக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும், பிற மலைத் தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. இக்கோயில் நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ளது.

மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது என கூறபடுகிறது. முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது.

தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் தாமரைவடிவ  அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன  உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இச்சுவரின் வெளிப்புறம் தூண்களோடு கூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களின் சுவர்களிலும் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன.

முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது.

இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக்  காட்சிகள் காணப்படுகின்றன.

மூன்றாவது மண்டபம், உயர்ந்த மேல்தளத்தின் மீது ஒன்றோடொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோவில்களைச் சூழ அமைந்துள்ளது.

மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம்  அல்லதுகருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு நூலகங்கள் அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன. அகழிக்கு  வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன.

இக்கோவிலின் தனிப்பெருமைகள் என்ன?

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.

ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக ஒன்று 2014 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை.

வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை.

குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே.

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது...

பாஜக பினாமி அதிமுகவின் தமிழகத்தை அழிக்க அடுத்த சதி வேலை தொடக்கம்...


திருச்செந்தூர் ஹோட்டல்களில் வருமானவரித் துறை சோதனை...


திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள பிரபல ஹோட்டல்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் உள்ள ரமேஷ் ஐயர் ஹோட்டல் மற்றும் அர்ச்சனா ஹோட்டல்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது...

உ.பி. கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி...


திருட்டு திராவிடர்ஸ்...


வெற்றியும் - ஆரோக்கியமும்...


தன்னம்பிக்கையும்- வெற்றியும்- ஆரோக்கியமும்...

உலகில் வாழும் எந்தவொரு சிறு உயிரினமும் தான் வாழும் சூழலில் போராடி தான் உயிர் வாழ வேண்டும். போராடினால் தான் உயிர் வாழ முடியும். இது இயற்கை விதி. உலக பொது நியதி.

இதில் தன்னம்பிக்கை ஒன்றுதான் நம்மை வாழவைக்கும். உறவு பணம் பலம் எல்லாம் இரண்டாம் பட்சமே.

உன்னுள் இருக்கும் உன்னை நம்பினால் உன்னாலும் வெற்றிபெற முடியும்.

நான் ஜெயிப்பேன் என்ற சொல்லும். என்னால் முடியாது என்ற சொல்லும் உன்னிடம் இருந்து தான் வருகிறது . உன் மனம் உறுதி பட்டால் உடல் தன்னால் ஒத்துழைக்கப்போகிறது பிறகு வெற்றி நிச்சயம்.

நீ எதை கண்டும் பயந்து போகாதே. உன்னை சோர்வடைய எப்பொழுதும் அனுமதிக்காதே.

உனக்குள் ஒரு லட்சியத்தை வை அதற்க்காக பாடுபடு. பல தடைகள் வரத்தான் செய்யும் தடைகளை உடைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை தடைகளை எளிதாக தாண்டிச்செல். முன்னேறு முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு.

ஒரு வெற்றிகிடைத்தால் அடுத்த வெற்றிக்கு உடனே ஆயுத்தமாகிவிடு.

யாராவது தனக்கு உதவுவார்களா என எதிர்பார்க்காதே. நீச்சல் தெறியாதவன் தண்ணீரில் விழுந்தால் தன்னை காப்பாற்றிக் கொள்ள என்ன முயற்ச்சி செய்வானோ அதை நீ செய்.

மற்றவர் உண்னை வெற்றிக்கொள்ள பார்க்கிறார்கள் நீ அவர்களை முந்திச்செல்.

உன் தன்னம்பிக்கையை விட சிறந்த தோழன் யாருமே இல்லை.  தன்னம்பிக்கை இருந்தால் தான் இறைசக்தியும் வேலைசெய்யும் என்பதை நினைத்து பார். தன்னம்பிக்கை சக்தி எவ்வளவு வலிமையானது என்று உனக்கே புரியும்.

மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கையை வை அது ஆயிரமாயிரம் தைரியத்தை உன்னுள் சேர்க்கும். முயன்று பார் தெறியும். முடங்கிவிடாதே.

உன் இறப்பு இப்போதைக்கு இல்லை அதுவரையில் வாழத்தான் போகிறாய் தன்னம்பிக்கையின் துனண கொண்டு வெற்றியை பதிவிட்டுச் செல்லேன்.

வெறுமனே சாவது ஒரு வாழ்க்கையா?  வாழ்க்கையை தோல்வியோடு முடிப்பதை விட கடைசி வரை வெற்றிக்காக போராடி மடிவதே மேல்.

மடிவது குற்றமல்ல. அது போர்க்களமாக இருக்கட்டும்...

முதன் முதலாக நீங்கள் பார்க்கும் செய்தியின் உண்மைத்தன்மையை பற்றி நீங்கள் நினைக்கும் கருத்தை, ஊடகங்களின் தொடர் அதைப்பற்றிய செய்திகளால் நீங்கள் நினைத்த கருத்தை தவறான கருத்து என யோசிக்க வைப்பதுதான் ஊடகங்களின் ஆகச்சிறந்த பலம்...


நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தர்களையென்னி...


கடலுக்குள் போகாதே கச்சதீவை
விற்றுவிட்டோம்..

காட்டுக்குள் போகாதே நீயூட்ரினோக்கு விற்றுவிட்டோம்..

காவேரிகரைக்கு போகாதே மணலை விற்றுவிட்டோம்..

விவசாயம் செய்யாதே ஹைட்ரோகார்பனுக்கு விற்றுவிட்டோம்..

மருத்துவம் படிக்காதே வடஇந்தியருக்கு(நீட்) விற்றுவிட்டோம்..

TNPSC எழுதாதே தமிழே தெரியாதவனுக்கு விற்றுவிட்டோம்..

நெல்லைக்கு போகாதே ரஷ்ய அனுஉலைக்கு விற்றுவிட்டோம்..

தூத்துக்குடிக்கு போகாதே ஸ்டெர்லைட்டுக்கு விற்றுவிட்டோம்..

ராம்நாடு போகாதே அதானி மின்திட்டத்துக்கு விற்றுவிட்டோம்..

தஞ்சாவூர்க்கு போகாதே மீத்தேனுக்கு விற்றுவிட்டோம்..

நாகை போகாதே பெட்ரோகெமிக்கலுக்கு விற்றுவிட்டோம்..

மலையேற போகாதே க்ரானைட் குவாரிக்கு விற்றுவிட்டோம்..

வெள்ளயங்கிரி போகாதே ஜக்கிவாசுதேவ்கு விற்றுவிட்டோம்..

சதுரகிரிக்கி போகாதே யாருக்கோ _______ விற்கபோகிறோம்..

எந்த கருமத்தையும் கண்டுக்காதே ஏனெனில் உன் வாக்கை நீ விற்றுவிட்டாய்...

 நாங்க விலைகொடுத்து வாங்கியதை லாபத்திற்கு விற்றுவிட்டோம்...

பொருளாதார ரீதியாக கட்டமைக்கப்பட்ட இந்த சமூகத்தில், எப்படியாக வாழ்ந்துவிட வேண்டும் என தினமும் யாரோ சிலர் வாழ்வதற்காக நாம் ஒடிக்கொண்டிருக்கிறோம் என்றால், அடுத்த தலைமுறை இங்கு எப்படி வாழும்..?


தயவுசெய்து அடுத்த தலைமுறைக்கு வீடு, பணம் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று மட்டும் கூறாதீர்கள்..

ஏனெனில் கடந்த தலைமுறை நம்மிடம் கொடுத்த எதையுமே, நாம் அடுத்த தலைமுறையிடம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம் என்பது தான் நிதர்சனம்...

ஆறு கால் ஆச்சரியம் எறும்பு...


நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம்.

இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?

எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது. ஆனால் மோப்ப உணர்வு அதிகம்.

இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள உணர்ச்சிக் கொம்பு (Antenna) போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச் செல்லும் போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.

எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.

எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக் கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்து விட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது. இதை நீங்கள் நேரில் பார்க்கும் போது கவனித்திருக்கலாம்.

உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்து வைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும் போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

உணவுப் பாதை போடுவது போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புக் காலனிக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகின்றன. இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன.

இப்படியாக வழிகாட்ட, ஆண் எறும்பை ஈர்க்க, எச்சரிக்கை செய்ய என பல்வேறு செயல்பாடுகளுக்காக எறும்பு வெளியிடும் எல்லா வேதிப்பொருளும் ஃபெரமோன்தான். ஆனால், ஒவ்வொரு செயல்பாட்டுக்கான ஃபெரமோனின் வகையும் வேறுபட்டிருக்கும். இந்த வேறுபாட்டை வைத்தே, மற்ற எறும்புகள் விஷயத்தை புரிந்துகொள்கின்றன. இப்படியாக எறும்புகளின் வாழ்க்கையில் வேதியியல் மிகப்பெரிய பங்காற்றுகின்றது.

இந்தியாவில் 1903இல் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய புத்தகம்தான் இந்தியாவில் எறும்புகளைப் பற்றிப் பேசிய முதல் புத்தகம். அதற்குப் பிறகு ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகியும்கூட, எறும்புகள் பற்றிய விரிவான நூல்கள் அதிகமாக வரவில்லை.

தமிழகத்தில் நமக்குத் தெரிந்தவை சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்றுப் பெரியதாக இருக்கும். கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் வெளிர் சிவப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு ஆகிய நான்கு வகைகள்தான். கட்டெறும்பு பெரும்பாலும் மாமரங்களில் அதிகம் இருக்கும்.

சுள்ளெறும்பு என்று அழைக்கப்படும் சிவப்பு எறும்புகளும், கட்டெறும்புகளும் எதிரி என்று கருதுபவர்களைக் கடிக்கும். அப்போது உடலில் படும் வேதிப்பொருளால் நமக்கு சிறிது நேரம் வலிக்கிறது. அந்த வேதிப்பொருளின் வீரியம் குறையும் வரை வலிக்கும்.

சாமி எறும்புகள் எனப்படும் கறுப்பு எறும்பு பெரும்பாலும் கடிப்பதில்லை. கூசுவது போல ஓடிச் சென்று விடும். சில நேரம் பளிச்சென்ற நிறம் ஏதுமில்லாமல் சிறியதாக, வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் எறும்புகளைப் பார்த்திருக்கலாம். அவை முழு வளர்ச்சி அடையாத குட்டி எறும்புகள்.

எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர்கள் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது...

மராட்டிய ரஜினி vs கன்னடன் கமல் இருவரின் ஏமாற்று அரசியல் இவ்வளவு தான்...


மூதேவி...


யாரையாவது வசைபாட மூதேவி என்ற சொல் அதிகமாக பயன்படும். என் பாட்டி மாலையில் விளக்கு போடு, இல்லையென்றால் மூதேவி வந்துவிடுவாள் என்பார்கள்.

அழுக்காக , நாற்றம் வீசுகிற , சோம்பலாக இருப்பவர்களிடம் மூதேவி வந்துவிடுவாள் என்னும் சொல்லாடல் உள்ளது. இது ஒரு வரலாற்று திரிபாகும்.

மூத்ததேவி என்ற சொற்பதம் மருவி மூதேவியாயிற்று. மூத்ததேவி தமிழ் பெண் தெய்வம். சங்க காலத்திலிருந்த ஒரு பெண் தெய்வம்.

இலையும்,தழையும் , சாணமும், சேறுமான மண்சார்ந்த அழுக்கினை உரமாக மாற்றும் மூலவளத்தின் தெய்வம் மூத்த தேவியாகும்.

8ம் நூற்றாண்டின் பல்லவர்களின் தாய் தெய்வம். நந்திவர்ம பல்லவனுக்கு குலதெய்வம். வைதீக மரபை ஏற்காத குடவரை கோவில்களில் மூத்த தேவிக்கு சிலை உள்ளது. மூத்த தேவி ஜோஷ்டா தேவி ( வட மொழியில் மூத்தவள் ) என்றும் அழைக்கப்படுகிறாள்.

சங்க இலக்கியங்களில் இவள் மாமுகடி,தவ்வை, காக்கை கொடியோள், பழையோள்,சேட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.

வைதீக மதம் விரிவடையும்போது அதை ஏற்றுக்கொள்ளாத யாவும் அதனுள் கரைக்கப்பட்டு அதற்கு வேறு சாயம் பூசப்பட்டது (இழிவாக மாற்றப்பட்டது )  வரலாற்று உண்மை.

உதாரணமாக " சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே" என்று மூத்ததேவி வறுமையின் சின்னம் என தொண்டரடிப் பொடி ஆழ்வார் நகை யாடுகின்றாள். குழந்தை வரம் தரும் தெய்வமாகவும், வண்ணார் தெய்வமாகவும் மூத்த தேவி இருந்தாள். 

மூத்த தேவி கோவில்கள் ( வரலாற்று தொல்லெட்சம் )

1. திருப்பரங்குன்றத்தில்  குடவரை கோவில்.
2. கங்கை கொண்டானுக்கு அருகில் ஆண்டிச்சிப்பாறை குடவரை கோயில்.
3. காஞ்சி கைலாசநாதர் கோயில்.
4. புதுகோட்டை மாவட்டம் காளியபட்டி சிவன் கோயில்.
5. திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில்.
6. திரு கொண்டீஷ்வரம் பசுபதீஸ்வரர்  கோயில்.
7. திருச்சி திருவனைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில்.
8. கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்.

இது போன்று பல  தெய்வங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதில் மூத்த தேவியும் ஒன்று...

ழ தமிழர்களாகிய எங்கள் உயிர்...


கொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவல்....


முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.

ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும்,

நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.

இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.

மலச்சிக்கலால் பாதிக்கப் படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.

இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.

கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.

இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா.

இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்...

உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.

முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.

மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில்  இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.

இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.

எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.

இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.

பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும்.

அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.

ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.

இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.

அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்...

பாஜக பினாமி அதிமுக அரசின் தமிழகம் விற்பனை திட்டத்தின் அடுத்த வியாபாரம்...


தமிழக மீன்வளம் மற்றும் நீர் வாழ் உயிரின மேம்பாட்டிற்கு ஆஸ்திரேலிய வர்த்தக ஆணையத்துடன்  தமிழக அரசு ஒப்பந்தம்...

ஐந்து தலைமுறையாக நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறோம் நாங்களும் தமிழர்கள் தான் - திராவிட வந்தேறிகள்...


பல தலைமுறையாக தமிழ்நாட்டில் இருந்தாலும் வீட்டுக்குள் எங்கள் மொழியான தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டும்தான் பேசுவோம்..

வீதிக்கு வந்ததும் செந்தமிழே, முத்தமிழே, பைந்தமிழே, தமிழ் என் மூச்சே என்று பேசி தமிழர்களை ஏமாற்றி ஆட்சியை பிடிப்போம். நாங்களும் தமிழர்கள் தான்.

அதே ஐந்து தலை முறையாக கர்நாடகம் ஆந்திரம் கேரளா பிரதேசங்களில் தமிழர் வாழ்கிறார்கள்.

அவர்கள் எப்பவுமே தங்களை தமிழர்கள் என்று மட்டுமே எண்ணுகிறார்கள்.

அவர்களும் தெலுங்கர் கன்னடர் மலையாளி என்று சொல்லி அரசு பணியாளராகவும் மற்றும் ஆட்சி அமைக்கவும் விடுவீர்களா...

இந்தியாவின் தீவிரவாதி அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.. பாஜக தான்...


இந்தியாவில் பயங்கரவாத அமைப்பு என்று 4முறை நிருபிக்கப்பட்டு தடைச் செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ் தான்...

இந்தியப் புற்று நோயால் செயலிழந்து வரும் தமிழினம்.. இந்தியா என்பது புற்றுநோய்...


இந்தியப் புற்றுநோய் குறித்து 25 வருடங்களுக்கு முன்பே தெரிந்திருந்தும் அதுகுறித்து அதிக கவனம் செலுத்தாததால் இன்று தமிழினம் தனது இருப்பைத் தொலைத்து அழிவடையும் உச்சத்தை எட்டியிருக்கிறது.

மன்னர்கள் ஆட்சிக்காலத்திற்கு பின்னர் ஏராளமான வரலாற்று படிப்பினைகளையும் நமது மூதாதேயரின் வாழ்வு பற்றியதுமான ஏராளமான பொக்கிசங்கள் இருந்தும் அதை தூசுதட்டி தலைமுறை தலைமுறையாக சொல்லிக் கொடுப்பதைவிடுத்து சினிமா ரசிகர்களாகவும் கிரிக்கட் ரசிகர்களாகவும் மாற்றப்பட்டனர் தமிழர்கள்.

விதிவிலக்காக உரிமை மறுப்பை எதிர்த்து வீட்டுக்கு வீடு ஆயுதம் தூக்கி எதிரியை களத்தில் சந்தித்தது தமிழீழம். இருந்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மூடி மறைத்து எவ்வளவு விரைவாக தமிழகத்தை சல்லடைபோட்டு செயலிழக்க செய்ய முடியுமோ அவ்வளவிற்கு செயலிழக்க பண்ணிவிட்டு தமிழீழத்தை சூறையாடியிருக்கிறது இந்தியப் புற்று நோய்.

கல்வெட்டுக்களில் இருக்கும் தமிழ் மன்னர்களின் வீர வரலாறு தமிழீழ தாயமெங்கும் வியாபித்து நிற்கும் பொழுது திரைச்சீலைகளுக்கு பின்னால் கவர்ச்சி நடிகைகளின் நடனங்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழகம் இன்று தன்னை சுதாகரித்துக் கொள்ள முயற்சித்தாலும் இந்தியப் புற்று நோயால் முழுமையாக பீடிக்கப்பட்டு எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்வதென்று தெரியாமல் திணறுகிறது.

இந்த பூமிப்  பந்தில் எட்டுக் கோடிக்கு மேல் ஒரே மொழிபேசும் இனமாக, ஒரே இலக்கணம் கொண்ட சனமாக, ஒரே இலக்கியத்தை படிக்கும் மக்களாக இருந்தும் தனக்கென்று சொந்த நிலமும் அதற்கொரு கொடியும் தனியொரு படையும் கொண்ட அரசாக, தன்னைத்தானே ஆழும் இனமாக தமிழினம் இல்லாததற்கு காரணம் இந்தியப் புற்றுநோய்தான் என்றால் மிகையாகாது.

சாதிபேதங்கள் இன்றி, வரட்டுக் கௌரவங்கள் இன்றி, ஊழல் இன்றி இன விடுதலையை மட்டுமே இலட்சியமாக கொண்டு தங்களால் தனிப்பெரும் படையை கட்டியெழுப்பவோ அல்லது ஆழும் அந்திய சக்திகளுக்கு எதிராக போரிடவோ தெரியாத அல்லது முடியாத தமிழகம் ஆகக்குறைந்தது இந்திய வல்லூறுகளை தமது சொந்த நாட்டுக்குள் முடக்க தெரிந்திருந்தால் கூட இன்று "தமிழீழம்" என்ற தனிப்பெரும் தமிழர் நாடு மலர்ந்திருக்கும்.

சொல்வதற்கு கடினமானதென்றாலும் ஒரு உண்மையை சொல்லியே ஆகவேண்டும். தன்னைத்தானே வருத்தும் தியாக மனப்பாண்மை கொண்ட தமிழக வீரர்களால் எதிரியை திணறடிக்கவோ அல்லது எதிரியின் சூழ்ச்சியை புரிந்து அதற்கேற்போல் போராடவோ தெரியாது.

இன உணர்வுடன் தன் சொந்த மக்களை மட்டுமே நம்ப கூடியதும் தன் சொந்த மக்களை வைத்து எந்தப்பெரும் அரசையும் ஆட்டம் காண வைக்க முடியும் என்ற நம்பிக்கை வைத்து ஒரே இலட்சிய கொள்கையுடன் களத்தில் இறங்கி மக்களை வழிநடத்தக் கூடிய தலமை தமிழகத்திற்கு அவசரமாக தேவைப்படுகிறது.

தமிழ் மன்னர்களின் வீர வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட வகையில் வரலாறுகள் அழிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

சொந்த நிலமும் தன்னைத்தானே ஆழும் ஆட்சியும் என்பது ஒரு இனத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு. தமிழீழத்தை சுவம்சம் செய்து பறித்து  சிங்களத்திடம் கொடுத்த இந்தியம் தமிழகத்தை நாசுக்காக கூறுபோட்டுவிட்டது.

இன்றைய நிலவரத்தில் தமிழகத்தில் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு தமக்காக போராட முடியாத அடிமை நிலமை ஏற்படுத்தியாகிவிட்டது. அடக்கு முறைக்களுக்கு எதிராக தொடர்ச்சப் போராட்டங்களை செய்யவும் சூழ்நிலைக்கேற்றவாறு அதன் வடிவத்தை மாற்றவும் முடியா நிலை உருவாக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.

தமிழகமே...

இனிவரும் தமிழினத்தின் சந்ததிக்காகவேனும் உனக்கென்றொரு செங்கோல் ஆட்சியை உருவாக்கு.

மத - சாதிகளால் பிளவுண்டு கிடக்கும் முட்டாள்களே...

உங்கள் பெற்றோர்களையும் பெற்றோரின் பெற்றோர்களையும் திட்டமிட்டு சகதிக்குள் தள்ளியிருக்கிறான் எதிரி அதன் தொடரச்சியாக அந்த சகதிதான் உங்கள் வாழ்கை என்று உங்கள் தலைமுறையையும் அந்த சகதி நாற்றத்திற்குள் வைத்திருக்காதீர்கள்.

தனி இனமாக தமிழ் இனமாக இந்த ராஜ்ஜியத்தை ஆண்டது தான் தமிழினம்.

தமிழினமாக உருவெடுங்கள்.

தமிழனத்திற்கு எதிராக பேசுபவர்கள் முதல் செயற்படுபவர்களை உங்கள் மண்ணில் இருந்து விரட்டுங்கள். இறுக்கமாகவே இருங்கள். இறுக்கம் இனத்தை காக்கும்...

தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போட எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் பாஜக தயாராக உள்ளதாம்...


காவிரி படுகையில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து பாலைவனமாக்குவதா?



24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் காவிரி பாசன மண்டலம் பாலைவனமாக மாறிவிடும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அங்கு அடுத்தடுத்து பெட்ரோலியத் திட்டங்களைச் செயல்படுத்தி பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கொள்கையின்படி அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களை கண்டறியவும், எடுக்கவும் ஒரே உரிமம் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி தமிழகத்தில், கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையிலான 731 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதியில் குறிஞ்சிப்பாடி அருகே ஒரு கிணறு, புவனகிரி பகுதியில் 6 கிணறுகள், சிதம்பரம் பகுதியில் 3 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

இவை தவிர, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரை 10 கிணறுகள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை 4 கிணறுகள் என மொத்தம் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

இவற்றுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 3-ம் தேதிவரை பெறப்பட்டு ஜூன் மாதம் உரிமங்கள் வழங்கப்படும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் வளங்களும் எடுக்கப்படலாம். காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்ற மக்களவையில் எனது வினாக்களுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இருமுறை பதிலளித்திருந்தார்.

ஆனால், அதற்கு முற்றிலும் விரோதமான வகையில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் வளங்களை காவிரி பாசன மாவட்டங்களில் எடுக்க முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

அத்துடன், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள 65 ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் 24 திட்டங்களை காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்த முயல்வது அப்பகுதிகளை பாலைவனமாக மாற்றும் சதி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக அனுமதிக்கமாட்டார்கள்.

இயற்கை வளம் மிகுந்த காவிரி பாசனப் பகுதிகளை எண்ணெய்க் கிணறுகளாக மாற்றும் சதியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காவிரிப் பாசன மாவட்டங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிகூட பெறாமல் மொத்தம் 189 எண்ணெய்க் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அடுத்தகட்டமாக நாகை மாவட்டம் நரிமணத்தில் செயல்பட்டு வரும் 10 லட்சம் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையை ஆண்டுக்கு ஒரு கோடி டன் திறன் கொண்ட ஆலையாக விரிவாக்கம் செய்ய தீர்மானித்திருக்கிறது. இதற்காக 600 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி தரும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. நரிமணம் ஆலை விரிவாக்கப்பட்டால் அதற்கு எண்ணெய் வழங்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளை அமைக்கவேண்டியிருக்கும். இதனால் காவிரி பாசனப் பகுதியின் வளம் சீரழிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க மத்திய அரசும், தமிழக அரசும் முடிவு செய்திருக்கின்றன. இத்தகைய சூழலில், 24 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டமும் செயல்பாட்டுக்கு வந்தால் ஒட்டுமொத்த காவிரிப் பாசன மண்டலமும் பாலைவனமாக மாறுவதை தவிர்க்க முடியாது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரிப்பாசன மாவட்டங்கள் நமது கண் முன்பே அழிவதை அனுமதிக்க முடியாது. காவிரிப் பாசன மாவட்டங்களை எண்ணெய் வள மண்டலமாக மாற்றவேண்டும் என்பதற்காகவே காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக விவசாயிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.

நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வளங்களை கண்டறிவதையும், உற்பத்தி செய்வதையும் குறைகூற முடியாது. ஆனால், விலைமதிப்பற்ற வேளாண் வளத்தை அழித்துவிட்டு, எண்ணெய் வளத்தை உருவாக்குவது கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகவே அமையும்.

எனவே, காவிரிப் பாசன பகுதிகளில் இதுவரை செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, வேளாண்மை செழிப்பதற்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்...

இந்திய திராவிட திருட்டு கூட்டத்தால் தமிழகத்திற்கு ஏற்படப் போகும் ஆபத்துக்கள்...


கர்நாடகத்தில் தமிழர் கடைகளை எதிர்த்து கன்னடர்கள் வன்முறை...


சென்னையில் தி நகர்  வெங்கட்நாராயணா ரோடு அறியாதவர் யாரும்  இருக்கமுடியாது...

 இது ஒரு தெலுங்கு பேசும் மக்களின் கோட்டை என்று சொல்லலாம்.

இந்த சாலையில் உள்ள நடேசன் பூங்கா முன் ஒரு தள்ளு வண்டி தோசைக்கடை இருக்கும் . இது ஒரு கன்னடக்காரர் கடை . தள்ளுவண்டியில் வைத்து இருப்பதால் இவர்கள் ஏழை என்று எண்ணி விடக் கூடாது இவர்களுக்கு பாண்டி பஜார் பிரிலியன்ட் டூட்டோரியல் அருகே மிகப் பெரிய ஹோட்டல் இருந்தது .

அந்த ஹோட்டல் இருக்கும் போதே பிரிலியன்ட் டூட்டோரியல் முன் தள்ளு வண்டி கடை போட்டு மிகப் பெரிய வியாபாரத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள்.

இப்ப நடேசன் பூங்கா முன்பும் ஒரு தள்ளுவண்டி கடை இருக்கு. நல்ல வியாபாரம் . இந்த சாலையில் வேறு யாரும் தள்ளு வண்டி கடை போட்டால் காவல் துறை வைத்தே இவர்கள் மிரட்ட முடியும்  என்று செய்திகள் உண்டு.

உடனே காவல் துறை லஞ்சம் வாக்கிட்டு இப்படி செய்கின்றது  எனறு கற்பனை செய்து விட வேண்டாம்.

இந்த கன்னட பணக்கார  தள்ளு வண்டிகாரரிர்க்கு   பிற மொழி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆதரவு எப்பவும் இருக்கும்.

சென்னையில் பிற மொழிக்காரர்க்ள் எங்கும் வியாபாரம் செய்யலாம் காவல் துறை தடுக்காது கார்புரேசன் தடுக்காது..

அதற்கு முக்கிய காரணாம் பிற மொழிக்காரர்கள் உயர் அதிகாரிகளாக இருப்பதே...