28/10/2021

அடியே ஏமாற்றுக்காரியே...

 




கடற்கரையில் உன் பெயரை
எழுத நினைத்தேன் ...

எழுதி முடிக்கு முன் அலைகள்
அடித்து சென்றது என்றாய்...

நான் உன் பெயரை 
என் உள்ளத்தில் எழுதினேன்....

அழிக்க முயற்சித்தும் 
முடியவில்லை...

என்னை ஏமாற்றி விட்டு
வேறொருவருக்கு மனைவியாக
வாழும் உன்னை...

நான் மறக்க 
தொடங்கிவிட்டேன்...

என்னை மறந்து சென்ற நீ
இனி எப்போதும் நினைத்துவிடாதே
மீண்டும் என்னை...

நான் ஏமாந்தது 
உன் ஒருத்தியிடம் மட்டும் தான்...

ஆனால் உன்னிடம் ஏமாந்தது
எத்தனை பேரோ... 

என்னை ஏமாற்றி 
காயப்படுத்தியது போல்....

உன் கணவனையும் ஏமாற்றி 
காயப்படுத்தி விடாதே....

சித்தராவது எப்படி - 37...

 


அமைதி அல்லது ஓய்வின் உன்னத நிலை...

ஓய்வின் உன்னதத்தை தெரியாதவர்கள், ஆன்மீகத்தில் ஓரளவுக்கு மேல் துளியும் முன்னேற முடியாது.. அந்த ஓரளவுக்கு முன்னேறியவர்கள் தான் இந்த உலகம் கண்ட சில உத்தமர்கள்..

ஆனால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்று கனவு கண்டார்களோ, அவற்றை துளியும் அடையாமல் சென்று விட்டனர்..

ஒரு குறிப்பிட்ட அளவே தன்னை அறியாமல் எதோ ஒரு பிரபஞ்ச உந்துதலால் அடைந்தார்களே தவிர, தாங்கள் உயர்ந்த நிலையை விழிப்பு நிலையால் உணர முடியாமல், அதில் உள்ள நுணுக்கங்களை அறிய முடியாத காரணத்தால், அவற்றை வெளிப்படுத்த தவறியதால், தனக்கு பின்னால் தன்னை போல் தன் சீடர்களில் ஒருவரையேனும் உருவாக்க முடிய வில்லை..

காரணம் தான் அடைந்த உயர்ந்த நிலை, தனக்கே தெரியவில்லை.. அவர்கள் தன் உயர்வுக்கான நுணுக்கங்களை, முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை..

தானே அனிச்சையாக குருவாகி முடிவில் அழிந்தார்களே தவிர தனக்குள் இருக்கும் அக குருவை பயன் படுத்தி அக்குருவின் மூலம், மேல் நுணுக்கத்தை அறிய தவறி விட்டார்கள்..

ஓய்வு என்பது இறைவனின் வரபிரசாதம்.. இறைவனின் வடிவே ஓய்வு தான்.. மரணம் ஒரு ஓய்வு தான்.. சிவனே மரண தேவதை...

ஆனால் அதையும் தாண்டிய ஒரு ஓய்வு நிறை நிலை மனிதனுக்கு தேவை.. அதனை பின்பு பார்ப்போம்..

ஆனால் இதற்கு முரணாகத் தான் கடவுளை நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.. இதுவே கடவுளுக்கு எதிரான செயல்..

அத்தனை மதங்களும் இந்த ஒரு விசயத்தில் தோற்று போய் விட்டன.. சிவனை யோக நிலையில் மிகுந்த ஆழ்ந்த நிலையில் காண்பவர்கள், அவர்கள் இயக்க நிலையில் உலகத்தையே புரட்டி போடுவார் என்று எதிர் பார்ப்பது முரண் ஆனது..

எவர் ஒருவர் அவருடைய ஆழ்ந்த அமைதியை, உள் வாங்கி இசைந்து வாழ்வதின் மூலம். பிரபஞ்ச ஆற்றலை பெறுகின்றார்களோ, அவர்கள் மட்டுமே சிவன் அருளை பெற்றவர்களாவார்கள்..

சிவனோ அல்லது உலகம் கற்பித்துக் கொண்ட வேறு இறைவனோ, உலகத்தில் இயங்கி எந்த ஒரு காரியத்தை செய்ய இயலாது.. இது ஒரு முற்றிலும் முரணான சொல்லாக இருக்கலாம்.. எல்லோரும் கொதிப்பு அடையலாம்..

ஆனால் இறைவன் நடத்துகின்ற உண்மை திரு விளையாடலோ வேறு விதமாக உள்ளது.. எல்லாம் செயல் பாடுகளும் இறைவனின் பேரமைதியை உள்வாங்கிய ஒன்றால் பிரபஞ்ச ஆற்றலை இசைந்து வாழ்ந்து அந்த ஆற்றலை பெறக்கூடிய விதத்தில் மட்டுமே எதுவும் நடைபெறுகிறது..

இறைவனை ஓய்வின் அடையாளமாகவே எந்த மதங்களும் மறை முகமாக வைத்துக் கொண்டு இருக்கிறது.. புத்தருடைய தியான உருவம் சிவலிங்கம் ஏசுவின் சிலுவையில் செயலற்ற நிலை, இஸ்லாமியர்களின் சமாதி அமைப்பின் வழி பாட்டு நிலை போன்ற பல உதாரணங்களை காட்டலாம்..

முடிவில் இறைவன் நிலையே ஓய்வு அல்லது அமைதி ஆகும்.. அது பிரபஞ்ச ஆற்றலை அளவற்ற நிலையில் இசைந்து வாழ்ந்து உள் வாங்கும் நிலையில் உள்ளது..

அமைதியை மையப்படுத்தி பேராற்றலை உள் வாங்கும் திறமை ஒன்றால் மட்டுமே உலகில் உத்தமர்கள் தோன்ற முடியும்..

இறைவனை அமைதியின் வடிவாய் மட்டுமே காண வேண்டும் என்பதே சரியான முறை..

ஆனால் இதற்கு புறம்பாகவே எல்லாம் நடக்கிறது.. அன்பே சிவம் என்பது காரியப்பட்ட ஒன்று..

ஆனால் அமைதியே சிவம் என்பது காரணப்பட்ட ஒன்று.. காரணப்பட்டு ஒன்று பலப் படாமல் காரியப் பட்ட ஒன்று நிகழாது..

அமைதியே சிவம் என்பதிலிருந்து தான் அன்பே சிவம் தோன்றி உலகம் காரியப் படுகிறது..

இந்த அமைதி அல்லது ஓய்வு இரண்டு நிலையில் உள்ளது.. ஒன்று, ஏற்பட்ட ஓய்வு.. மற்றொன்று ஏற்படுத்திய ஓய்வு..

ஏற்பட்ட ஒய்வு ஒன்றையே, கண்டுதான் இதுவரை மகான்கள் தோன்றி இருக்கின்றார்கள்.. அதனால் தான் ஒரு வரைக்கு மேல் செல்ல முடியவில்லை..

ஆனால் ஏற்படுத்திய ஓய்வுக்கு எல்லையே இல்லை.. அதனால் பெறும் ஆற்றலுக்கும் எல்லையே இல்லை..

ஏற்படுத்திய ஓய்வு அல்லது அமைதியின் மூலம் அளவற்ற ஆற்றலை பெற்றால் மட்டுமே ஒரு நிறைநிலை மனிதன் உருவாக முடியும்..

அவன் ஒருவனே இன்றைய ஆணவ உலகத்தை திருத்த முடியும்..

வேறு இதுவரை உலகம் கண்ட, காணும் உலக குருமார்களின் போதனைகள், துளியும் உதவாது என்பது கண்கூடாக காணும் காட்சி...

நிறை நிலை மனிதன் அடைவதற்கான ஒரு பெரும் அமைதி புரட்சியை தொடங்கி செயல் படுத்த ஆவன செய்வதின் மூலம் அன்புடையவர்களாக ஆவோம்...அதனால் சிவமாவோம்..

அமைதியே சிவம் என முதலில் உணர்ந்து அன்பே சிவம் என நிலைக்கு உயர்வோம்...

பிராடு பாஜக மோடி Vs மக்கள்...

 


பொய், பித்தலாட்டம், ஊழல், கொலை இவை அனைத்தின் பிறப்பிடம் பாஜக...

 


அண்ணே... நீ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டனே...



பாஜக & திமுக கிட்ட எப்படி பொய் சொல்லி ஏமாத்தனும் கத்திட்டு வா ணே...

பெரியாரும் திருட்டு திராவிடமும்...


சுயமரியாதை தன்மானம் என்று எவற்றை வரையறுத்தார் பெரியார். இதனால் தமிழர்களும் தமிழகமும் பெற்ற கல்வி அறிவூட்டல் என்ன..? பொருளாதார நன்மை என்ன..?

தமிழ் தேசிய உணர்வை இது எந்த வகையில் வளர்த்தது..?

ஏன் திராவிடத்தை தமிழகம் முதன்மைப் படுத்துகிறது..?

இதற்குள் தான் தமிழன் என்பவனின் இனத்துவ சுயமரியாதையும் தன்மானமும் அடங்கி இருக்கிறதா..? அப்படி என்றால் எந்த வகையில்..?

இந்த சுயமரியாதையும் தன்மானமும் 21ம் நூற்றாண்டில் தமிழர்களை தயார்படுத்தி 22ம் நூற்றாண்டில் எப்படி செயற்பட வைக்கப் போகிறது உலக அரங்கில்...? இதற்கு தமிழகத்தின் பங்கு என்ன..?

ஈழத்தில் தமிழ் தேசிய உணர்வோடு.. ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து நிற்க ஏன் தமிழகம் தயங்க வேண்டும்..?

இதற்கும் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் ஏதாவது தொடர்பை காண்பித்திருக்கிறதா தமிழகம்..?

தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழர்கள் தானா..?

ஓரிரண்டு குரல்களைத் தவிர ஏனைய தமிழ்மக்களின் குரல் ஏன் நசுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தமிழீழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்குகிறது..?

இன்னும் இந்திய தேசியத்துக்கு அடிபணிந்து தானே உள்ளது தமிழகம். அப்படி இருக்க..

இந்த சுயமரியாதையும் தன்மானமும் எதைக் குறித்து எழுந்து நிற்கிறது. தமிழர்களின் திராவிட அடையாளம் குறித்தும் பார்பர்ன பிராமண இந்து சமய எதிர்ப்பு குறித்து மட்டும் தானா..?

ஏன் தமிழகத்தில் மதமாற்றம் செய்யும் இதர மதங்களை நோக்கி மக்களை அன்போடு வழி அனுப்பி வைக்கும் போது எங்கே போகின்றது இந்தச் சுயமரியாதையும் தன்மானமும் பகுத்தறிவும்.?

அது ஏன் இந்து சமயத்தை மட்டும் கண்டவுடன் இவை விழித்துக் கொள்கின்றன. மற்றைய மதங்களை ஏன் மென்போக்கோடு அணுகுகிறது.?

பகுத்தறிவுவாதிகள் எவராவது இறந்த மனிதன் ஏசு உயிர்த்ததற்கு சான்று கேட்டிருக்கின்றனரா..? அல்லா எங்கிருக்கிறார்.. அவருக்கு என்ன உருவம் என்பதற்கு சான்று கேட்டுள்ளனரா..?

அது ஏன் பகுத்தறிவு இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து நிற்கிறது. மூடநம்பிக்கைகள் சமயம் மட்டும் சார்ந்து தானா எழுந்துள்ளது. வேறு வகைகளில் இல்லையா.?

ஏன் அறிவியல் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகளில் மூடநம்பிக்கைகள் இல்லையா..? மத நம்பிக்கைகள் இல்லையா..? அவர்கள் ஏன் அறிவியலை ஊட்டுகிறார்கள்.. பகுத்தறிவு என்பதையும் சுயமரியாதை என்பதையும் தன்மானம் என்பதையும் உச்சரிச்சுக் கொண்டு மத எதிர்ப்பை சமூக எதிர்ப்பைச் செய்யவில்லை..?

அது ஏன் ஊருக்கு சொல்லும் சுயமரியாதை பகுத்தறிவை நீங்களும் உங்கள் குடும்பங்கள் மட்டும் கடைப் பிடிப்பதில்லை.. அனைத்தும் தொண்டனுக்கும் தமிழனுக்கும் மட்டும் தானா?

இப்படி பல தொடரான வினாக்களுக்கு நீங்கள் விடை கூறத் தயாரா..?

நான் ஒரு சாதாரண விவசாயி, ஒரு சில ஆடுகள் மட்டும் தான் இருக்குனு சொல்லுவான் பாஜக கன்னடன் அண்ணாமலை 😶

 


அர்ஜூன் சம்பத் எனும் மாமா பய கலாட்டா...

 


தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்...

 


தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல் வயிற்றுப் போக்கை சரிசெய்ய கூடியதும், புண்களை ஆற்றவல்லதுமான அருகம்புல், வயல்வெளி, புல்வெளியில் வளரக்கூடியது..

எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது.

ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.

அருகம்புல்லை கொண்டு கண் நோய்க்கான மருந்து தயாரிக்கலாம்.

அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.

அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும்போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.

அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட அருகம்புல், ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல்நோய்கள் வராமல் தடுக்கிறது.

கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும்.

வெள்ளைப்போக்கு, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

அருகம்புல் சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.

அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய, குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்...

அருகம்புல் சாறு, மிளகுப்பொடி, நெய். ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விட்டு சூடுபடுத்தவும்.

இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்க்கவும். லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்.

இது உடல் உஷ்ணத்தை குறைக்கும். வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கைகால் வீக்கத்தை போக்குகிறது.

மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும், வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆறும்.

எளிதில் நமக்கு கிடைக்க கூடிய அரும்கபுல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது...

இப்படி மாஸ்க் போடுறதுக்கு கொரோனா வந்தே சாகலாம் டா...

 


வா குருநாதா😂

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




என்
கவிதைகளெல்லாம்
எட்டா
உயரத்தில் உள்ள
உன் அழகை
எட்டி தொட நினைக்கும்
ஏணி படிகள் மட்டும் தான்...

சித்தராவது எப்படி - 36...

 


குண்டலினி சக்தி பயணம்--- பாகம் பணிரெண்டு...

விழிப்பும் உணர்வும் - எண்ணமும் மறைப்பும்...

எங்கெல்லாம் விழிப்பு நிலை உள்ளதோ, அங்கெல்லாம் உணர்வு இருக்கும்.. விழிப்பிலேயேயும் உணர்விலேயேயும் நம் இருப்பு தன்மை உள்ளது.. அந்த இரண்டில் நாம் நாமாக உள்ளோம்.

எண்ணத்தில் நாம் பிறராய் உள்ளோம் அல்லது மற்றவர்களாய் உள்ளோம்.. அதில் இருப்பு தன்மைக்கு மறைப்பு ஏற்பட்டு தன்னில் தானாய் இருக்கும் நிலை மறைக்கப் பட்டு நாம் எதை எண்ணுகிறோமோ அதுவாய் மாறி விடுகிறோம்..

கோபம் காமம் பொறாமை வெகுளி போன்ற குணங்களில் நம்மை இழந்து விட்டு நாம் எண்ணுகின்ற வடிவங்களாய் நமது ஆற்றல் அனைத்தும், அந்த வடிவங்களாய் மாறத் துடிக்கிறது..

அந்த வடிவத்தை பற்றிய எண்ணங்கள் தூண்டக்கூடிய சூழ்நிலை உருவாகும் போது எண்ணங்கள் தலை தூக்க ஆரம்பித்து, அந்த வடிவமாய் மாற துடிகின்றது..

அப்படி மாற நினைகின்ற போது அந்த வடிவத்தின் பஞ்ச பூதங்களில் இணைய முடியாமல், மனம் என்ற ஒரு பூதம் மட்டும் இணைய துடித்து அதுவும் தோற்று போய் விடுகிறது..

மனம் தன் மற்ற நான்கு பூதங்களை விட்டு விலகி நிற்பதால், இங்கா அங்கா என்ற குழப்பத்தில் முடிவில் தோல்வியில் இங்கு என சொல்லப் படும் தன்னிலையில் மீண்டும் சேரவேண்டிய நிலைக்கு வருகிறது..

மீண்டும் எண்ணத்தால் வெளியே செல்ல துடித்து மீண்டும் மீண்டும் தோல்விகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது..

மனம் வெளியே செல்லும் போது மற்ற நான்கு பூதங்களும் மனதை தேடி செல்லுவதால் அவைகளும் செயல் இழந்து போகின்றன..

அதனால் தான் கோபக்காரனுக்கு புத்தி மட்டு அறிவு மட்டு என்கின்றனர்.. மட்டு என்றால் செயல் இழந்த தன்மையை குறிக்கிறது....

எண்ணத்தின் தன்மை இப்படி இருக்க உணர்வு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...

மிகவும் அரிய வகை மாம்பழம் ஒன்றை சுவைக்கத் தொடங்கும் போது, அதனை இரு வகையில் சுவைக்கின்றோம்..

ஒன்று எண்ணத்தால் மற்றது உணர்வால்.. எண்ணத்தோடு சுவைக்கும் பொழுது, அந்த மாம்பழம் எந்த வகையை சார்ந்தது?.

இது போன்ற சுவையோடு கூடியது மாற்று வகை மாம்பழம் வேறு எதாவது உண்டா?

இனிமேல் இது எங்கு கிடைக்கும்? எப்பொழுதெல்லாம் கிடைக்கும்.?. கிடைக்காத பட்சத்தில் நாம் என்ன செய்வது ? இதன் விலை என்னவோ ? இது கிடைக்கும் பருவ காலம் என்ன ? நம் இடத்தில் அந்த மரம் வைத்தால் அது வளருமா?

அதை மற்றவர்களுக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், நமக்கென்று தனிபட்ட முறையில் கிடைக்க என்ன வழி இருக்கிறது?

இது போன்ற ஆயிரம் கேள்விகளுக்கு நடுவே நாம் அதனை சுவைக்கும் போது, நம் மனம் சதா மாம்பழ சுவையை விட்டு விலகி விலகி, ஏனைய நான்கு பூதங்களும் அந்த மாம்பழ சுவையோடு இணைய விடாமலும் செய்து விடுகிறது..

இந்த நிலையில் மாம்பழ சுவையின் அனுபவம் நூற்றில் ஒரு பங்கு கூட நாம் அனுபவிப்பதில்லை..

மீண்டும் அதனை அனுபவிக்க துடிகின்ற போது அது கிடைக்காத பட்சத்தில் அது நிறை வேறாத ஆசைகளாய் சித்தத்தில் பதிந்து விடுகிறது..

அதுவே எண்ண ஆதிக்கமாய் நம்மில் நிறைந்து, மனதை சதாகாலமும் வெளியே ஈர்க்கப் படுகிறது..

மற்ற பூதங்களும் மனதை தேடும் பணியிலே இருந்து தனக்குரிய வேலைகள் செய்ய முடியாமல் போய் விடுகிறது.. இப்படி தான் வாழ்வு வீணாகிறது..

மிக பெரிய சத்தியம், உண்மை என்ன வென்றால் பஞ்சபூதங்களும் ஒருங்கிணைந்த நிலையே, இருப்பு தன்மை..

அதாவது மனம் தன் இச்சைக்கு எதுவும் செய்யாமல் மற்ற பூதங்களோடு இணைந்து இருக்கும் போது, மனம் எண்ண ஆதிக்கமற்ற நிலையில் இருக்கிறது...

மனதின் வெளி தேடுதல் நிற்கிறது.. எப்பொழுது எல்லாம் மன தேடல் இல்லையோ அப்பொழுதெல்லாம் இருப்பு தன்மை உள்ளே வெளிபடுகிறது..

இருப்பு தன்மையில் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறியும் விழிப்பு நிலை உருவாகுகிறது..

சரி இப்போது உணர்வால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்..

உணர்வோடு இருக்கும் போது பஞ்ச பூதங்களும் அனைத்தும் செயல் படுகின்றன.. அந்த பஞ்சபூத கூட்டில் மனம் வெளியே செல்லாமல் மற்ற பூதங்கங்களோடு இணைந்து இருப்பதால் தன்னில் தானாய் இருக்கும் இருப்பு தன்மையில் விழிப்பு நிலை பெருக்கம் அடைகிறது..

அதே மாம்பழத்தின் சுவையின் உணர்வில் மனம் லயித்து இருக்கும் போது மனம் எழுப்பும் கேள்விகள் காணாமல் போய் விடுகிறது..

புத்தி அதன் சுவையை பூரணமாக எடுத்துக் கொள்ள அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.. ஆகாய அறிவு அதை நீங்காத அனுபவமாக வைத்துக் கொள்ளமுடியும்..

சித்தமும் சுவையை பூரணமாக நினைவில் வைத்துக்கொள்வதால், மீண்டும் அதே அனுபவத்திற்காக நிறைவேறாத ஏக்கங்களாக வைத்துக் கொள்ள அவசியம் இல்லை...

இதனால் தேகத்தில் தேக முழுமைக்கும் சீரான சுவையின் ஊடுறுவல் நிகழ்கிறது.. ஆக அந்த பஞ்ச பூத கூட்டில் விழிப்பு நிலை பெருக்கம் அடைவதால் எல்லாமே உள்ளது உள்ளவாறு விளங்குகிறது...

இப்பொழுது மிக முக்கியமான கட்டத்திற்கு வருகிறோம்.. சுவாச ஒழுங்கை மனதால் பண்ணலாம் அல்லது உணர்வால் செய்யலாம்..

சுவாசமே விழிப்பு நிலையால் நடந்தாலும் மனம் அதை ஒழுங்கின்மை ஆக்கி கொண்டே இருப்பதால் பலர் சுவாச ஒழுங்கு பயிற்சியினை மனதாலே செய்து செய்து மிக குறைந்த பலனையே பெறுகின்றனர்..

உணர்வாலே பயின்று விழிப்பு நிலை பெருக்குவதில்லை... சிலருக்கு மனதாலே செய்து வருவதால் சில உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள்..

உணர்வால் எப்படி செய்வது ? சுவாச ஒழுங்கின் சமயம், காற்றின் ஓட்டத்தை நாசிகளிலும் தொண்டை குழாயிலும். மார்பு விரிவடைதலிலும் உள்ள உணர்வோடு இணைந்து சுவாசிக்க வேண்டும்..

4 வினாடி கால அளவில் உணர்வோடு செய்யும் போது ஏற்படும் விழிப்பு நிலை, அந்த கால அளவை தானே சரியாக கவனித்துக் கொள்ளும்..

மிக முக்கியமானது உணர்வோடு செய்வதில் அக்கரை அதிகம் எடுத்துக் கொண்டால் மற்றவை நல்லவைகளாக பின் தொடரும்..

இதனை உணர்வோடு பயிலும் போது ஏற்படும் மிக பெரிய வித்தியாசத்தை காணலாம்..

மேலே சொன்னது போல் உணர்வோடு சுவாச ஒழுங்கு பயிலுங்கள்.. ஏற்படும் மிகுந்த வித்தியாச அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

பிராடு பாஜக கலாட்டா...

 


காலை வணக்கம்...

 


விரைவில் கொரோனா 3ம் பாகம் நாடகம் ஆரம்பம்...

 


மனிதன் முகத்தில் வாழும் பூச்சி...