மனிதன் மரணத்தை கண்டு பல கோடி ஆண்டுகளாக அஞ்சி வந்ததன் காரணம், இறந்தபின் இருக்கும் நிலையை அறியாததே.
ஆம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என்பதை அறியாமலேயே இருப்பதால் தான் அந்த பயம்.
மரணம் மனிதனின் ஆட்டத்தை முடிப்பதாக கருதப்படும் ஒன்று.
ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்ற கோட்பாடே அவர்களை குழப்பம் அடைய செய்தது.
ஆனால் உண்மை அதுவல்ல, உறங்குவது போலாம் சாக்காடு உறங்கி விழிப்பது போலாம் பிறப்பு.
மரணம் என்பது ஆன்மா எடுத்துக்கொள்ளும் தற்காலிக ஓய்வே.
நாம் ஒவ்வொரு பிறவியிலும் பலவித சிக்கலான அனுபவங்களை பெறுகிறோம்.
மரணத்திற்கு பின் நாம், செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப இனிமையான மற்றும் துக்கமான எண்ணங்களால் அலைக் கழிக்கபடுகிறோம்.
ஆவி நிலையில் நாம் பெற்ற அனுபவங்களை நினைத்து நினைத்து சுக துக்கங்களை அடைகிறோம்.
ஆம் அதிகம் பாவம் செய்த ஆன்மா கேட்பாரற்று ஆதரவற்று நிர்கதியாக தனிமையில் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கி தவிக்கிறது.
புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவோ சொர்கம் எனும் பரிமாணத்தில் நிறைய ஆன்மாக்களோடு கூடி மகிழ்கிறது.
வாழ்க்கை ஒரே முறை தான். தயவு செய்து வாழ்க்கையை வாழுங்கள்...