24/10/2021

திமுக ஊழல் மன்னர்கள் ஆ.ராசா, கனிமொழியை வெளுத்து வாங்கிய அதிமுக விந்தியா...

 


திமுக வும் மதவெறியும்...

1969‍-ல் நாகர்கோவில் பாராளுமன்றத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டாக்டர் மத்தியாஸ் போட்டியிட்டார்.

மத்தியாஸ்_க்கு ஆதரவாக‌ பிரச்சாரம் மேற்கொண்ட கலைஞர், கிறிஸ்தவ பெருமக்களே... உங்கள் ஓட்டு சிவகாமியின் மகனுக்கா? மேரியின் மகனுக்கா? என்றார்.

காரணம், காமராஜர் இந்து. மத்தியாஸ் கிறிஸ்தவர்.

தமிழகத்தில் முதன்முதலில் மதவெறியைத் தூண்டி பிரச்சாரம் மேற்கொண்டவர் திமுக தலைவர் கலைஞர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...

உன்னை சுற்றி பின்னப்படும் வலைகளை அறிந்துக்கொள்ள...

 


பிராடு பாஜக மோடியின் பெட்ரோல் கொள்ளையர்கள்...

 


தாங்க முடியாத தலைவலி க்கு உடனடி வைத்தியம்...

 


தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக் கூடிய சாதாரண விஷயம் தலைவலி.

தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும்.

ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்.

கிராம்பும் உப்பும் கலந்த கலவை...

கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு...

ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ்...

தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

சூடான பால் அருந்துதல்...

சூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

பட்டையை அரைத்துத் தடவுதல்...

தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல்..

சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

சந்தனத்தை அரைத்துத் தடவுதல்...

சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல்...

நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல்...

சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

கால்களை வெந்நீரில் வைத்திருத்தல்...

ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப் போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.

சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வர வேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல்...

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல்...

தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல்...

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையை அரைத்துத் தடவுதல்...

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல்...

தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும்.

இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும்.

அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைவலியிலிருந்து விடுபட வேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நன்றாக தூங்குதல்...

பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும்.

மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.

இவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்...

3ம் உலகப் போரை நோக்கி...

 


நீ Lock down போடு போடாம போ... நாங்க வெளியில போறது போறது தான்...

 


சித்தராவது எப்படி - 32...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் எட்டு...

சுவாச ஒழுங்கு இப்படியாகத் தான் தொடங்கும்...

கவர்ச்சி அற்ற நிலையில் தொடங்கும் சுவாச ஒழுங்கு சிறுக சிறுக கவர்ச்சியான பிரமாண்டங்களை காட்டத் தொடங்கும்.. கவர்ச்சிக்கு கவர்ச்சி சேர்ப்பது சுவாச ஒழுங்கு அள்ளி தரும் ஆற்றலே..

ஒரு குழந்தை சோர்வுற்ற நிலையிலும் பசியோடு இருக்கும் போதும், தூங்குவதற்காக ஏங்கும் போதும் அதற்கு மிக பிடித்த விலை உயர்ந்த பொம்மையை கொடுத்தாலும் தூக்கி போட்டு விடும்.. காரணம் அதை அனுபவிக்க வேண்டிய மன ஆற்றல் இல்லாததே..

உற்சாகமாக உள்ள குழந்தை ஒரு சாதாரண பொம்மையை வைத்துக் கொண்டு அதிக நேரம் விளையாடிக் கொண்டிருக்கும்... மன ஆற்றல் தான் வாழ்வின் இனிமையை நிர்ணயக்கூடியது..

மனிதன் பொருள் ஆசை பெருகக் காரணம் அவனுடைய குறைந்த மன ஆற்றலுக்கு ஈடு கொடுக்க மிக உயர்ந்த கவர்ச்சியான பொருட்கள் தேவை படுவதே.. இங்கே ஈடு கொடுத்தல் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்..

மன ஆற்றல் பெருகும் பட்சத்தில் தேடுதல் அறவே குறைந்து, அந்த ஆற்றலே அவனுக்கு மிகுந்த உற்சாகம் தரும் பொருள் ஆகி விடும்.. எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அது ஆற்றல் தான்..

எல்லாம் என்பது ஆற்றலை தவிர்த்த அனைத்துப் பொருள்களின் ஒட்டு மொத்த பயன் தூய்ப்பு அல்லது அனுபவநிலை.. ஆற்றல் என்ற ஒன்றின் உறவினால் எல்லாம் துறக்கக் கூடிய துறவு நிலை தானாகவே கை கூடும்..

தானாக கைகூடும் என்பதை உற்று கவனிக்க வேண்டும்... அந்த துறவால் ஆசைகளை விட்டு ஒழிந்த துறவால் தேவை என்ற கடமைகளை திறம்பட செய்யும் பண்பை கொடுக்கும்.. இதையும் உற்று கவனிக்க வேண்டும்..

இன்றைய நிலையில் மன ஆற்றல் குறைந்த நிலையில் நமது வாசியோகப் பயிற்சி மிகவும் கவர்ச்சி அற்றதாக தோன்றும்..

ஆனால் ஆற்றல் பெருகும் நிலையில் கவர்ச்சி அற்ற பொருள்களில் கவர்ச்சியை சேர்க்கும் அதிசயத்தை உருவாக்குவதால் எல்லாமே கவர்ச்சியாக தோன்றும்..

எங்கெங்கும் காணினும் சிவமயமே என்ற நிலை ஒரு பக்தனுக்கு வருவதற்கு காரணம், அவனுக்கு பெருகிய மன ஆற்றலே... ஆரம்ப தடைகளை வென்று விட்டால் போதும்.. பிறகு சுகப் பயணம் தான்..

சுவாச ஒழுங்கில் சில இரகசியங்களை சொல்ல வேண்டி உள்ளது..

4 வினாடி சுவாச ஒழுங்கு என்பதில் அந்த ஒழுங்கின் எல்லையின் நுணுக்கத்தை வரையறுக்க முடியாது.. ஒரு வினாடியை கோடி பகுதிகளாக நுட்பமாகக் கூட பிரிக்கலாம்..

மனம் அந்த நுட்பத்தை நோக்கி நகர்ந்து நகர்ந்து ஆயிரம் சந்தேகங்களை எழுப்பி எழுப்பி சுவாச ஒழுங்கில் இணைய மறுக்கும்..

சுவாச ஒழுங்கில் ஒரு தோராயமான கால அளவை விழிப்பு நிலையில் வைத்துக் கொண்டு பயில வேண்டும்..

ஓம் நமசிவய என்ற மந்திர கால அளவு நமக்கு மிகவும் பயன் படும்..

முக்கியமான விசயம் என்னவென்றால் சுவாச ஒழுங்கின்மை விழிப்பில் கவனிப்பதே சுவாச ஒழுங்கில் கிடைக்கும் பலன் கிடைக்கும்.. எந்த நொடியிலும் சுவாச ஒழுங்கின் போக்கை விழிப்பால் கவனித்தால் போதும்..

கணக்கு பார்ப்பது, உடனடியாக பலனை எதிர்பார்ப்பது எல்லாம் மனதின் வேலை.. இவை எல்லாம் இல்லாமல் இருப்பது விழிப்பின் இயல்பு..

சுவாச ஒழுங்கின் கால அளவு, தேக அளவில் நிர்ணயக்கப் பட்ட ஒன்று.. அதற்கு தோராயமாக அந்த கால அளவில் பயிலும் போது தேகம், ஆற்றலை பெற இசைந்து இருக்கக் கூடிய தகுதி பெறுகிறது.. அவ்வளவே..

அதிகமான கால நுணுக்கத்தை ஆராயக் கூடாது..

விழிப்பு நிலை பெருக பெருக அந்த விழிப்பே கால அளவை, மனம் தாண்டிய நிலையில் சரியாக தக்க வைத்துக் கொள்ளும்..

இந்த சூட்சமத்தை புரிந்து கொண்டு, எப்படியாவது அகக் குருவை எழ செய்து விட்டால் போதும்... மற்றவை விழிப்பு நிலை பார்த்துக் கொள்ளும்..

சுவாச ஒழுங்கின் மூலம் மேன்மை அடைவது அவ்வளவு சுலபம்.. ஆனால் அது மனதால் ஆகாதது.. புத்தியாகிய விழிப்பு நிலையால் மட்டுமே சிறப்பு அடையும்..

ஆகவே தான் விழிப்பு நிலையான புத்தியை எழ செய்யும் ஒரே பயிற்சியான சுவாச ஒழுங்கிற்கு அத்தனை முக்கியத்துவம் தரப் படுகிறது..

சதாகாலமும் வஞ்சக உலக குருக்களிடம் வாழ் நாள் முழுவதும் சிக்கி கொள்ளாமல் தன்னகத்தே சத்திய குருவாகிய அக குருவின் துணையை தருவது இந்த சுவாச ஒழுங்கே என்பதை மறக்காமல் இருந்து விட்டாலே போதும்..

மேலும் குண்டலினி சக்தி பயணம் என்ற யோக நெறிக்கு விழிப்பே உதவும்..

விழிப்பு நிலை இல்லாத எந்த பயிற்சியும் பலனை தராது.. பலன் தருவது போல் மனதிற்கு காட்டி, பின், விழிப்பு இல்லாத பயிற்சி, முடிவில் மனிதனை படுகுழியில் தள்ளி விடும்...

பிடரியை நோக்கிய குண்டலினி பயணம் நம் நினைவகத்தை பலப் படுத்துவதால் மனித நிலையில் மேன்மை அடைகிறோம்..

மனிதனையும் விலங்கையும் பிரித்துக் காட்டும் மிக பெரிய வித்தியாசம் இந்த நினைவகம் தான்..

ஆற்றல் பெருக்கம் அடையாமல் பயிலும் அத்தனை குண்டலினி பயிற்சிகள் நிழல் அனுபவத்தை மட்டுமே தரும்.. அதில் நீண்ட பலன் துளியும் இல்லை என்பது அறிந்ததே...

சுவாச ஒழுங்கில் நம்மை நாம் இணைத்துக் கொள்வோம்.. வாழ்வில் சிறப்படைவோம்...

வேறு ஒருத்தன கல்யாணம் பண்ண போற உனக்கு நான் செலவு பண்ணி ஏமாறுவேன் பார்தீயா 😁

 


ஏமாற்றுக்காரியே...

 



உன்னை காண ஆவலுடன்
ஓடி வந்த போது...

பாறையின் மீது மோதிய
காயத்தின் வலி கூட...

மருந்து போட்ட பின் 
ஆறி விடும்...

ஆனால்...

என் இதயத்தில் 
நீ ஏற்படுத்திய காயத்தினை 
எதனை கொண்டு ஆற்றுவது...

பெரியார் ஒரு தமிழ் இன விரோதி - உதாரணத்திற்கு ஆதாரங்கள் 10...

 


1. தமிழைக் காட்டு மிராண்டி மொழி என்றவர் ஈ வெ ராமசாமி என்ற கன்னட தேசத்தைச் சேர்ந்த பெரியார்.

தமிழ் மொழியைத் திட்டியதைத் தவிர அதன் வளர்ச்சிக்கு அவசியமான எந்தச் சீர்திருத்தங்களையும் முன்மொழியாமை மற்றும் அதற்காக பாடுபட முன் வராமை.

(தனது பத்திரிகை விளம்பரத்துக்காக தமிழன்பர்கள் கூடி எடுத்த தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பதை மொழி வளர்ச்சி என்ற நோக்கற்று தனது பத்திரிகை வளர்ச்சிக்காக பயன்படுத்தியதோடு மட்டும் தூங்கிவிட்டமை இதற்கு நல்ல உதாரணம்.).

2. தமிழர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்று உலகில் எல்லா மனிதருக்கும் உள்ள பகுத்தறிவைக் கூட பெரியார் தமிழர்களுக்கு வழங்க மறுத்தமை.

(இக்கூற்றிக்களின் மூலம் தமிழ் மொழியின் தமிழர்களின் தொன்மையை அழித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மற்றும் பிற மாநில மொழி ஆதிக்கங்களினை அனுமதித்து தமிழர்களின் மொழி அடையாளத்தை சிதைக்க முனைந்தவர்.தமிழகத்தில் தமிழ் வழக்கொழிதலைத் தூண்டியவர்.).

3. தமிழ் இனத்தின் தமிழ் தேசிய இருப்பை தமிழர்களின் தனித்துவத்தை திராவிடப் போர்வை கொண்டு அழிக்க முனைந்தமை.

4. தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காத தன்மை, அவர் இந்திய உபகண்டத்தில் தமிழ்களுக்கு என்ற ஒரு நில இருப்பை அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டி நிற்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய நில இருப்பை அவர்களின் சிந்தனையில் இருந்தே அழிப்பதற்கு சமனானது.

5. தன் கூட்டத்தில் இருந்து கொள்கை முரண்பட்டு விலகிய அண்ணாவை பண ஆசை பிடித்த ஒருவன் என்று விமர்சித்தமை. அரசியல் ரீதியாகக் கூட தமிழர்கள் திராவிடத்துக்குள் பதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அண்ணா தமிழர்களுக்கு என்று தனிநாடு கேட்பதைக் கூட எதிர்த்து நின்றவர். தமிழகத்தில் தமிழ் மொழியின் முதன்மைத் தன்மையை சிதைக்க முனைந்த ஹிந்தி திணிப்பை எதிர்க்க மறுத்தமை.

6. பெண்களின் கர்ப்பம் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையென்று கூறி.. பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறி தமிழர்களின் இன விருத்திக்கு சாவு மணி அடிக்க முனைந்தமை.

7. தமிழ் மக்களின் உயர்ந்த கலாசார பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில் ஒருவனுக்கு - ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை சிதைக்கவல்ல கருத்துக்களை "பெண் விடுதலை" என்று காட்டியபடி தமிழர்கள் மத்தியில் சமூக விரோத, மனித இன விரோத கருத்துக்களை விதைத்து.. விலங்குத்தனமான, எழுந்தமானமான ஆண் - பெண் பாலியல் புணர்வை வழியுறுத்தி.. தமிழ் சமூகத்தின் இருப்பையே கொடிய பால்வினை நோய்களைப் பரப்பி.. அழிக்க முயன்றமை.

8. தமிழ் மொழியின் தொன்மை.. இலக்கணக் கட்டமைப்பை சீரழிக்கும் வகையில் இலக்கியங்கள் மீதும்.. தமிழ் இலக்கண, இலக்கிய கர்த்தாக்கள் மீதும் பார்பர்ன.. இந்துத்துவ.. சாதிய சாயங்களைப் பூசியமை.

9. பிராமணர்கள் மீது எதிர்ப்பென்று தமிழர்களிடையே பார்ப்பனர் வர்க்க இருப்பையும்.. ஏனையவர்களை அவர்களுக்கு எதிராகவும் தூண்டி சமூக வன்முறைத்தனமான நிலையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டமை. அதன் தொடர்ச்சியாக மறைமுகமாக சாதிய இருப்பை தமிழகத்தில் தக்க வைத்தமை. அதைக் கொண்டு தமிழகத்தில் சமூகப் பிரிவினையைத் தூண்டி தமிழர்களைப் பிரித்தாண்டு.. சாதிய அரசியலுக்கு வித்திட்டமை. தமிழர்களிடையே தமிழின ஒற்றுமையை இல்லாமல் செய்தமை.

10. தனது திராவிடக் கொள்கையின் கீழ் தமிழகத்தின் தோற்றம்.. இருப்பு என்பதை.. இல்லாமல் செய்து தமிழர்களை திராவிடர்களாக்கி.. அவர்களின் தமிழ் தேசிய அடையாளங்களை திராவிட அடையாளங்களாகக் காட்டி.. தமிழினத்தினதும் அதன் தேசியத்தினதும் இருப்பை.. அழிக்கும் வகையில் சமூகத்தில் மேற்குலக சமூக விரோத சிந்தனைகளை பகுத்தறிவு என்ற பெயரில்..கட்டவிழ்த்து விட்டமை.

உண்மையாக தமிழர்களுக்கும்.. ஒட்டு மொத்த மனித இனத்துக்குக்கும் அவசியமான அறிவியலை தமிழகத்தில் வளர்க்கவோ இனங்காட்டவோ முனையாமை.

இந்துக் கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில் ஏனைய மத ஆதிக்கங்களினால் சிதைந்து கொண்டிருந்த தமிழழிவை ஊக்குவித்து.. சைவத்தால் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் மொழியின் வளர்ச்சியை இல்லாமல் செய்ய முற்பட்டமை...

உருளைக் கிழங்கு 😁

 


மக்கள் Vs அரசு 😁

 


காலை வணக்கம் மக்களே...

 


மீண்டும் காதல் வேண்டாம்...