22/02/2018

திருட்டு திராவிடத்தால் தமிழர்கள் இழக்கும் வேலை வாய்ப்பு உரிமைகள்...


உரிமைகளை இழந்துவிட்ட அடிமை இனத்தவரின் ஆதங்கமே...

எனக்கானதை எனக்கே கொடு என்ற உரிமையை வேண்டுகிறோம் தமிழர் நாடு மட்டும் வேட்டைக்காடா...

நாங்கள் என்ன விலங்குகளா...
தமிழினமே விழி.. தமிழினமே விழி..

உனக்கான உரிமையை இழக்காதே..  போராடு.. இந்த உரிமை போராட்டம் உன் வருங்கால மரபுவழி மக்களுக்கு -ஆ.எழுச்சிக்குமரன்...

தமிழ்நாட்டில் மிகப்பெரும் அளவில் வெளி மாநிலத்தவர் குடியேறி வருகின்றனர். நிலங்களையும், மனைகளையும் கட்டடங்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். வணிகத்தையும், தொழிலையும் கைப்பற்றி இருக்கின்றனர். தொகைத் தொகையாக வந்து தமிழ்நாட்டில் குடியேறும் வடநாட்டவர் மற்றும் பிற மாநிலத்தவருக்கு “ஸ்மார்டு கார்டு” திட்டம், வரைமுறையற்று உள்ளே நுழைவதற்கும், தமிழ்நாட்டில் வழங்கல் (ரேசன்) அட்டை, வாக்காளர் அட்டைப் பெற்று நிலைபெறுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.

நேரடியாகவும், பல்வேறு முறைகேடுகள் – மோசடிகள் வழியாகவும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் வெளி மாநிலத்தவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு வந்தார்கள்.

இதுபோதாதென்று, தற்போது தமிழ்நாடு அரசுப் பணிகளிலேயே வெளி மாநிலத்தவரைப் பணியமர்த்தும் அபாயகரமான புதியப் போக்கு தீவிரம் பெற்றுள்ளது.

கடந்த 07.11.2017 அன்று வெளியான, தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி –விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில், வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள விவரம் வெளியாகக் கூடாது என்பதற்காக, “ஆசிரியர் தேர்வு வாரியம்” திட்டமிட்டே அவர்களின் பெயர்களை மறைத்து, வழக்கத்திற்கு மாறாக பதிவு எண்களுடன் தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.

வெளி மாநிலத்தவர்கள் பலரும் பொதுப்பிரிவில் வந்து இடங்களைக் கைப்பற்றியதோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணைப் பிரிவினர் மற்றும் பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர்க்கு உரிய பிரிவுகளின் கீழும் பல வெளி மாநிலத்தவர்கள் தேர்வாகியிருந்தனர். அதன் காரணமாக, இப்பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்குரிய இடங்கள் அயலாரால் தட்டிப் பறிக்கப்பட்டன.

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவருக்கு 23.11.2017 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவிருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது.

இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு இரத்து செய்யப்பட்டது. இப்போது, மோசடியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியமே திரும்பப் பெற்றுள்ளது.

இந்நிலையில், 14.11.2017 அன்று தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), நான்காம் பணிப்பிரிவில் - 9,351 வேலைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்பணிகளுக்கு தமிழ்நாட்டவர் மட்டுமின்றி – வெளி மாநிலத்தவரும், நேப்பாளம், பூட்டான் போன்ற வெளிநாட்டினரும், பாக்கித்தான், திபெத், மியான்மர் நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் மேற்கண்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்றும் தமிழ்நாடு அரசு சலுகை அளித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தேர்வு ஆவதற்கு தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற வரம்பாவது இருந்தது. கடந்த 2016 செப்டம்பர் 1 அன்று, செயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அன்றைய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து நிறைவேற்றிய “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் - 2016” என்ற புதிய சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளில், தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதற்காக 07.11.2016 அன்று திருத்தங்கள் செய்யப்பட்டது.

இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் கடந்த 16.11.2017 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்தினார். இதனையடுத்து, பல கட்சிகளும் இது குறித்து அறிக்கை வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்..

மகாராட்டிரம், கர்நாடகம், குசராத், மேற்கு வங்கம், சத்தீஸ்கட் போன்ற பல மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலங்களின் அரசுப் பணியில், தமிழ்நாட்டில் நடப்பது போல் வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டினரையும் பணிக்கு அமர்த்த முடியாது!

எனவே, தமிழ்நாடு அரசு – அரசுப் பணிகளில் 100 விழுக்காட்டு இடங்களையும், தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு இடங்களையும் தமிழர்களுக்கே வழங்கிட சட்டமியற்ற வேண்டும்.

- தமிழ் தேசிய பேரியக்கம்...

நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளன் அல்ல நான் இங்குள்ள கட்சிகளில் உட்பொருளைக் கண்டு உண்மையை உணர முற்படுபவன்...


சட்ட விரோதமாக ஸ்பாட்பைன் வசூல்.. வாகன ஓட்டியை மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் மைக்கேல்...


திருப்பூர் மாநகர காவல்துறை
4. வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்களின் கவனத்திற்கு,

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் புதூர் சிக்னலில்  18.02.2018 இரவு 10.30 மணி அளவில் வாகன சோதனை..

தங்கள் கையொப்பம் இட்ட ஸ்பாட் பைன் கேஷ் ரசீது மூலம் சட்ட விரோதமாக காவல் உதவி ஆய்வாளர்
அபராதம் வசூலித்து வருவதாக புகார் வரப்பெற்றுள்ளது.

தலைக்கவசம் அணியாமல் வந்த பால முரளி என்ற  இளைஞரிடம்  ₹100 ரூபாய் மற்றும் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாததினால் ₹500. சேர்த்து ₹600 ரூபாய் அபராதம் தங்கள் பெயரில் வசூலித்து இருக்கிறார்கள்.

தங்களிடம் இருக்க வேண்டிய. அபராத ரசீது உதவி ஆய்வாளரிடம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

தங்கள் கையொப்பம் இட்டு  அபராதம் வசூலிக்க காவல் உதவி ஆய்வாளருக்கு அதிகாரம் வழங்கி உள்ளீர்களா?

அல்லது தங்களுக்கு தெரியாமல் நடை பெறுகிறதா?
என ஐயப்பாடு எழுகிறது.

அறிவிப்பு நோட்டீசில் காவல் உதவி ஆய்வாளரின்  கையொப்பம் இடப்பட்டுள்ளது.

உடனடி அபராதம் ₹600 செலுத்தி ரசீது பெற்று சிறிது நேரத்தில்  திரும்பி அதே பகுதியில்  அந்த இளைஞர்  செல்லும் போது மீண்டும் வாகன சாவியை புடுங்கி எடுத்து வைத்துள்ளனர்.

அபராதம் இப்ப தான் சார் செலுத்தினேன் என அந்த இளைஞர் கூறி உள்ளார்.

வாகன சாவியை கொடுங்கள் என கூறி உள்ளார்.

உதவி ஆய்வாளரை எதிர்த்து பேசுகிறாயா?

கேஷ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

காவல் ஆய்வாளர் கையொப்பம் இட்ட ரசீது மூலம் சட்ட விரோதமாக உடனடி அபராத தொகை வசூலித்ததுடன்,
வாகன சாவியை எடுத்து வைத்து கொண்டும் கேஷ் போட்டு ரிமாண்ட் பண்ணி ஜெயிலில்  அடைத்து விடுவேன்.
அப்புறம் வக்கீல் வைத்து தான் வெளியில்  வர வேண்டும் ஜாக்கிரதை!  என சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் உதவி ஆய்வாளர் பொது இடத்தில் வாகன ஓட்டியை மிரட்டுவது ஏற்புடையது தானா?

இத்துடன் அறிவிப்பு நோட்டீஸ் நகல், ஸ்பாட் பைன் கேஷ் ரசீது நகல் மற்றும் உதவி ஆய்வாளர் மைக்கேல் என்பவர் பேசிய காணொலி தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

உதவி ஆய்வாளர்கள் உடனடி அபராதம் வசூலித்து வருவதாக பல புகார்கள் வரப்பெற்றுள்ளது.

நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.

குறிப்பு : அறிவிப்பு நோட்டீஸ் எண் ஸ்பாட் பைன் ரசீதில் தவறாக குறிப்பிடப் பட்டுள்ளது.  இது போலி ரசீது என்பது இதன் மூலம் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
உலாபேசி :98655 90723
திருப்பூர். 18.02.2018...

தமிழர்களே எச்சரிக்கை.. இங்கு அனைத்தும் சூழ்ச்சிகளாகவே உள்ளது...


Sbi வங்கியை இனியும் நம்ப போகிறீர்களா மக்களே...


200 வருடங்களாக இப்படி ஒரு அறிக்கை வெளியிடாதவர்கள் தான்...

தற்போது மல்லையா, நீரவ் மோடி போன்ற இன்னும் பலரது மோசடிகள் வெளி வந்ததும் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது...

இன்னும் நம்புங்கள் எனச் சொல்கிறார்கள் நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்...

இனியுமா நம்ப போகிறீர்கள்...

கார்பரேட் Gold winner எண்ணை இரகசியம்...


தமிழன் என்றோர் இனமுண்டு.. தனியே அவற்கொரு குணமுண்டு... என்ற பாடல் அடிகளை நாமக்கல் கவிஞர் பாடினார்...


பள் – பண் – பண்படு – பண்பாடு
மண்ணைப் பண்படுத்துவது போல் மனதை பண்படுத்துவதே பண்பாடாயிற்று. பண்ணைகள் நிறைந்த இடம் ஊர் எனப்பட்டது. ஊர்மக்களிடம் பண்பாடு நிறைந்திருக்கும்.

ஒப்புநோக்கிப் பார்க்க,
பண்படு – பண்பாடு
கூப்பிடு – கூப்பாடு
சாப்பிடு – சாப்பாடு. இவ் எடுத்துக்காட்டு மாணவன் கூறியது.

நகு (மெல்லிய பல்லைக்காட்டி புன்னகைத்தல்).
நகு – நகர் – நகரகம் – நகரிகம் – நாகரிகம்.

வெண்பூச்சுகளால் அமைக்கப்பட்ட இருப்பிடங்கள் மாட மாளிகைகள் கோயில் கோபுரங்கள் அமைந்த இடத்தை நகர் என்றனர். அங்கு தோன்றியதே நாகரிகம். அறிவியலில் நோக்கின் அவை உண்மையே...

குறிப்பு...

பண்பாடு மாறாத் தன்மை கொண்டது. மனத்தின் உயர் பண்புகள் மனித வாழ்வில் மாறாதது. நாகரிகம் மாறும் தன்மையுள்ளது.

மக்கள் கூட்டத்தில் உணவு, உடை, உறையுள்(தங்குமிடம்) உலகத்தில் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே போகும்.

இனி, பாடநூல் கட்டுரையைக் கவனிப்போம். தமிழர் பண்பாடு பற்றிக் கூறிய கட்டுரையிலிருந்து சொற்களுக்கு பொருள் விளக்கம்.

விழுமியங்கள் – சிறப்பியல்புகள்
விலங்குகள் – மிருகங்கள்
புலால் – இறைச்சி வகை (துர்நாற்றம் தரக்கூடியன)
மரவுரி – மரப்பட்டை
உறையுள் – தங்குமிடம்
வியக்கத்தகு – ஆச்சரியம்
மானம் – பெருமை( மன் – மான் – மானம்), குற்றம் ( மால் – மான் – மானம் (கருமை – குற்றம்).
கவரிமா – மானை ஒத்த விலங்கு
வள்ளல் – கொடையாளி
ஈகை – கொடை
கொடை – அள்ளிக்கொடுத்தல்.

திருக்குறள்களும் அதற்குப் பொருள்களும்...

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

மயிர்/நீப்/பின் வா/ழாக் கவ/ரிமா வன்/னார்
உயிர்/நீப்/பர் மா/னம் வரின்.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.

பொருள்: தமிழர் பண்பாட்டில் தலைசிறந்தது மானம். மானம் என்பது ஒருவன் தன் நிலையிலிருந்து தாழாதிருப்பது; தாழ்வு வரும் போது உயிர்வாழாதிருப்பது. தமிழர் மானமிழந்து உயிர் வாழ விரும்பமாட்டார்.

அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார்
என்பு முரியர் பிறக்கு.

அன்/பிலா ரெல்/லாந் தமக்/குரி/ய ரன்/புடை/யார்
என்/பு முரி/யர் பிறக்கு.

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறக்கு.

பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே என்றே வாழ்வர் ஆனால் அன்பு உள்ளவரோ உடலுக்கு உரித்தாய் உள்ள எலும்பைப் போல தம்மை எல்லா உயிருக்கும் உரியர் என்று எண்ணி மனிதர்களாய் வாழ்வர்.

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்/கம் விழுப்/பம் தர/லாம் ஒழுக்/கம்
உயி/ரினும் ஓம்/பப் படும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

பொருள்: ஒழுக்கமானது சிறப்பைத் தருவது ஆதலால் ஒழுக்கம் உயிரை விட மேலானது என்ப.

ஒருவர் எத்துணை உயர் அறிவு பெற்றிருப்பினும், மக்கட் பண்பு உடையவராக வாழ்ந்தாலே அவருக்குச் சிறப்புத் தருவதாகும். அன்றேல் (இல்லையேல்), அவர் ஆறறிவு படைத்தவராயினும், ஓரறிவுள்ள மரத்துக்கு ஒப்பாக கருதப்படுவர்.

ஒழுக்கத்தால் சிறந்தவரைத் தமிழர், ‘சான்றோர்’ எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.

கேள்விகளுக்கு பதிலைக் கூறியும் எழுதியும் பழகுக.

1.நாகரிகம் என்ற சொல் குறித்து நிற்பது யாது?
2.’பண்பாடு’ என்பது விளக்குவது யாது?
3.தமிழ்மக்களின் கொடைப்பண்பு எத்தகையது?
4.சான்றோர் எனப்படுபவர் யாவர்?
5.கணைக்கால் இரும்பொறையின் மான உணர்வை விளக்கும் நிகழ்ச்சி யாது?
6.குமணனின் ஈகைப் பண்பை விளக்கும் வரலாற்று நிகழ்ச்சியை எழுதுக.

பழமொழியைக் கூறிப்பழகுவோம்...

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகம் = உள்ளம், மனம், சிந்தை.
மனத்தில் உள்ளதை அப்படியே காட்டக் கூடியது முகம். அதனாலேயே இப்பழமொழி தோன்றிற்று.

மறைமொழி...

அட்டாலும் பாற்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

அட்டாலும் – காய்ச்சினாலும், குன்றா – குன்றாது, அளவளாய் – ஒன்றுபட்டு, நட்டாலும் – நட்புக் கொண்டாலும், நண்பல்லார் (நண்பல்லர்) – நட்பில்லாதவர், கெட்டாலும் – ஏழ்மை, மேன்மக்கள் – உயர்ந்தோர், சுட்டாலும் – சுடுவது.

பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அதன் சுவை மாறாது. சங்கைச் சுட்ட போதிலும், அது வெண்மை நிறமாகவே இருக்கும். அவை போல பண்புடைய மேலோர்கள் வறுமையால் துன்புற்ற போதிலும், பெருந் தகைமையோடு இருப்பார்கள். பண்பு இல்லாதவர்கள் நண்பர்களாக இருந்த போதிலும், நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்...

தற்போது அனைத்திலும் நமக்கு கேரளாவே சிறந்த முன்னோடி மாநிலமாக காட்டப்படுகிறது முன்னர் புதுச்சேரி போல...


சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்...


மலேரியா காய்ச்சல் தீர : மிளகு, சீரகம் சேர்த்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டுவரவும்.

டைபாய்டு தீர : புன்னைப்பூவை உலர்த்தி பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை சாப்பிட குணமாகும்.

குளிர் காய்ச்சல் தீர : முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடவும்.

இதயப் படபடப்பு குறைய : மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கவும். (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்).

மாரடைப்பு : தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட விரைவில் குணமாகும்.

தொடர் வயிற்றுப் போக்கு : பப்பாளிப்பழம் சாப்பிட்டால் சரியாகிவிடும்.

நுரையீரல் பலப்பட : தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

திக்குவாய் சரியாக : இலந்தை இலைச் சாறு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல் தீர : அகத்தி கீரையை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ணவேண்டும்.

ஈறு பலமடைய : மாசிக்காயை தூளாக்கி நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளித்தால் பலப்படும்.

இரத்தக்குழாயில் அடைப்பு நீங்க : தினம் ஒரு கப் தயிர் சாப்பிடவேண்டும்.

தேவையற்ற கொழுப்பு குறைய : பூண்டு, வெங்காயம் இவற்றை அடிக்கடி உணவில் அதிகமாக சேர்த்து வரலாம்.

எடை கூடாமல் தடுக்க : தேநீரில் எலுமிச்சம் பழசாறு கலந்து காலையில் குடித்துவர எடை கூடாமல் தடுக்கும்.

உதட்டில் வெடிப்பு : அத்திக்காயை உட்கொண்டால் வெடிப்பு குணமாகும்...

பாஜக டிஜிட்டல் கார்பரேட் ஊழல் மோடிக்கு செருப்படி...


நம் உணர்வுகளின் சக்தி...


1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம்தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2. உங்கள் உணர்வுகள் தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்து தான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.

4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.

5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும் வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.

6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.

7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வது தான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.

8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.

9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது. ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.

10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள். உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.

11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும். முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.. உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும் , முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும்.

உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...

ஐயா அப்துல்கலாம் அவர்களை நேசிப்பவர்களின் கவனத்திற்கு...


எம்.ஜி.ஆர் திருடிய திருச்செந்தூர் முருகனின் வைரவேல்...


சின்னப்ப தேவர் தன் குலதெய்வமான மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்தார்.

அதைத் திறந்து வைக்க எம்.ஜி.ஆரை அழைக்க அவர் தி.மு.க வில் இருந்து கொண்டு ஆன்மீக நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று கூறி விடுகிறார்.

உடனே தேவரின் தாய் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் ஒத்துக்கொண்டு விழாவிற்கு வந்தார்.

இதை பலரும் பெருமையாகக் கூறுவார்கள்...

ஆனால் இதே 1980 வாக்கில் எம்.ஜி.ஆர் திருச்செந்தூர் முருகனுடைய வைரவேலைத் திருடி பலகோடிக்கு விற்றார் அப்போதிருந்த அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இதற்கு உடந்தை.

தி.மு.க வினர் இதை பெரிய பிரச்சனையாக்க சி.ஜே.ஆர்.பால் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் கூட அமைக்கப்பட்டது.

ஆனால் வேல் கடைசிவரை கிடைக்கவில்லை.

கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியபிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

(இதைக் கண்டித்து கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் என்று மதுரை முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் கூட போனார் 1981ல்).

அதன்பிறகு இதே எம்.ஜி.ஆர் பல கோடி மதிப்புள்ள ராமேஸ்வரம் லட்சுமணர் சிலையை திருடினார்.

அது தொடர்பான வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி வைரவேலை கண்டுபிடிக்க முயன்றிருப்பார் என்று நினைத்தால் நீங்களும் அன்றைய தமிழர்கள் போல அப்பாவியே.

அன்று கருணாநிதி குற்றம் சாட்டிய ஆர்.எம்.வீரப்பனும் சண்முகநாதனும் இன்று அவரது உயிர் நண்பர்கள்.

தமிழக கோவில்களில் சிலைகள் திருட்டு போவது மிகவும் சகஜமாகி...

அதன் பிறகு அதற்கென்று தனி தடுப்புத்துறை உருவாக்கப்பட்டு..

அதன் பிறகும் சிலை திருட்டு திராவிட மாபியாக்களால் நடந்து கொண்டே தான் இருக்கிறது...

உலகின் மிகச் சக்தி வாய்ந்த காந்தம் நம் மனம் தான்...


பிளாக் பேந்தர் விமர்சனம்...


முதல் முழு நீள கறுப்பின சூப்பர் ஹீரோ படம் எனும் முத்திரையுடன் வந்திருக்கிறது பிளாக் பேந்தர் படம்.

(அப்போ wesley snipes நடித்து blade சீரிஸ் படங்கள் என்னவாம் ? என்ற கேள்வியை யாரும் கேட்க வில்லையா அவர்களிடம்).

வைப்ரேனியம் சூட்.. ஹை டெக்னாலஜி .. சூப்பர் பவர்.. விரைந்து குணமாகும் சக்தி எனும் கலவை உடன் நமக்கு ஒரு புதிய சூப்பர் ஹீரோ ரெடி..

ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டில் உலகத்தின் கண்ணில் தெரியாமல் மறைந்து இருக்கும் ஹைடெக் நாடு வகாண்டா.. அங்குள்ள உயர் தொழில் நுட்பம்.. பாதுகாப்பு.. விஞ்ஞானம் யாவற்றிற்கும் காரணம் அங்குள்ள உலகின் மிக விலையுயர்ந்த பொருளாகிய வைப்ரேனியம் சுரங்கம்.
(அது நீண்ட நாள் முன்பு விண்வெளியில் இருந்து வந்தது ).

தனது தந்தையின் சாவிற்கு பின் வகாண்டாவின் புதிய மன்னனாக பதவி ஏற்கிறார் டிச்சாலா. அவனுக்கு எதிரியாக வந்து வாய்கிறார் killmonger. யார் இந்த கில்மோன்கர் ?

பழைய மன்னன் டிச்சாச்சா வின் சகோதரனின் மகன் அதாவது நம்ம ஹீரோவுக்கு அண்ணன்.

டிச்சாளா வால் கொல்ல பட்ட தனது தந்தையின் மரணத்தால் வெறுப்பில் இருக்கும் killmonger  மண்னனை சவாலுக்கு அழைக்கிறார்.

வகாண்டா விதிமுறை படி யார் வேணா மன்னனை போட்டிக்கு சவாலுக்கு அழைக்கலாம் வென்றவர் தான் மன்னன். அந்த முறை படி நடக்கும் சண்டையில் டிச்சாளா வை வீழ்த்தி அருவியில் தூக்கி போடுகிறார் killmonger. இனி நான் தான் மன்னன் என்று முடி சூட்டி கொள்கிறார்.

ஆனால் அவர் நினைத்தது போல டிச்சாளா சாக வில்லை. தப்பி உயிர் பிழைத்து தனது வகாண்டா நாட்டை மீண்டும் அவனிடமிருந்து மீட்பது தான் கதை.

படத்தில் ஸ்பெஷல் எபெக்டும் சண்டை காட்சிகளும் ஏலியனுக்கு நிகரான தொழில் நுட்பமும்.. படத்தின் பிளஸ்..
கண்ணை கவரும் வகாண்டா நாடு படம் முடிந்து வந்த பிறகும் கண்ணை விட்டு அகல மறுக்கிறது.

படத்தின் பிரமாண்டம் ரசிக்க வைக்கிறது (3d யில் இன்னும் சிறப்பாக ).

பொதுவாக ஆங்கில படத்தில் இருக்கும் குறைந்த பட்ச சஸ்பென்ஸ் அல்லது ட்விஸ்ட் கூட இதில் இல்லை என்பது ஒரு வகை மைனஸ் என்று சொல்லலாம்.

டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் கதை பாணி போல ஆரம்பித்த உடனே இதான் கதை என்று யூகித்து தெரிந்து கொள்ள முடிகிறது.

வாகண்டாவில் காட்ட படும் தொழில் நுட்பம் சாத்தியப்பட வேண்டும் என்றால் அங்கு குறைந்தது 500 விஞ்ஞானிகளாவது இருக்க வேண்டும் ஆனால் அங்கே இருப்பது ஒரே ஒரு விஞ்ஞானி ஹீரோவின் தங்கை தான்.

அப்புறம் மன்னன் என்றால் காமெடி பண்ண கூடாது சிரிக்க கூடாதுனு எல்லாம் ரூல் வைக்காதீங்கப்பா நம்ம thor ஐ பார்த்து திருந்துங்க..

மொத்தமாக பார்க்கும் போது படம் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவற வில்லை. அதனால்
கருஞ்சிறுத்தை கண்டிப்பாக ஒரு ரவுண்ட் வலம் வருவார்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான்...

திருட்டு கன்னட டூபாக்கூர் கமல்...


ஜூலை 1 முதல் செல்போன்களுக்கு 13 இலக்க எண்கள் அறிமுகம் - பிஎஸ்என்எல் அறிவிப்பு...


எண்கள் மாற்றும் நடைமுறை அக். 1-ம் தேதியில் தொடங்கி டிச. 1க்குள் முடிவடையும்...

இதை விட ஐயா அப்துல்கலாமை யாரும் அசிங்கப்படுத்த முடியாது...


வெற்றிலை...

             
பழந்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலை பயன்--சித்த மருத்துவம்...

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர்தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி...

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி...

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்...

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி...

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்...

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்...

நாடு முழுமையாக கார்ப்பரேட் கைகளுக்கு சென்ற பின் நாடு வல்லரசானது என அறிவிப்பு வரும்... அதுவே பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


உங்கள் ஆரோக்கியதிற்கான மேஜிக்...


உங்களின் எண்ணங்களும் , உணர்வுகளும் தான் உங்கள் உடலை இயக்குகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மனது வைத்தால் உங்கள் உடலுக்குள் நீங்கள் நுழைந்து கட்டுபடுத்த முடியும்.

நீங்கள் நோய் /உடல் பிரச்சனைகளை குறித்து மனஉளைச்சல்களில் தவித்து கொண்டு இருந்தாலோ அல்லது அதை பற்றி மற்றவர்களிடம் எடுத்து கூறி கொண்டு இருந்தாலோ உங்கள் நோயின் அணுக்களை அதிகபடுத்துகிறேர்கள்.

உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் ஏற்கனவே குணமாகி விட்டதென முழுதாக நம்புங்கள், உங்களை குணமாக்கியதற்கு மனதார நன்றி என தினமும் கூறி கொண்டே இருங்கள்.

உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்....

மன இறுக்கம் இல்லாமல் எப்போதும் உங்களுக்கு சந்தோசம் தரும் விசயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மனதார நேசித்து செய்யுங்கள்.

நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதாக உணருங்கள். எப்போதும் சந்தோஷமாக உணருங்கள்...

நன்றி ஆரோக்கியமே.
நன்றி உடலே.
என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி.
என்னை குணமாக்கியதற்கு நன்றி.
என்று அடிக்கடி தினமும் மனதார நன்றி கூறி கொண்டே வாருங்கள்.

இதன்மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றபட்டு..

உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் குணமடைந்து ஆரோக்கியமான நிலையை அடைவீர்கள்.

1. காலை எழுந்த உடன் ஆழ்ந்த அமைதியுடன் " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது " என்பதை மனதிற்குள் சொல்லி கொண்டே ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்...

2. காலையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..

3. ஹெட்போன் மூலம் நல்ல இசையை மற்றும் பாடல்களை கேளுங்கள்.

4. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.. அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்... எவ்வளவு மனம் விட்டு சிரிகிறேர்களோ.. அவ்வளவு மனபாரம் குறையும்...

5. காலை வேலையில் நியூஸ்பேப்பரில் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....

6. மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று காலை குளிரில் மற்றும் இளம் வெயிலில் வாக்கிங் செல்லுங்கள்.

7. கை கால்களை மடக்கி நீட்டுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்.. இதன்மூலம் ரத்தம் ஓட்டம் புத்துணர்ச்சி அடைந்து உறுப்புக்கள் சுறுசுறுப்பாக ஆகட்டும்.

தினமும் இதை செய்து பாருங்கள்... தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்...

காவிரி : தமிழக உரிமைகள் பறிபோக திமுகவே காரணம்...


ஏன்ப்பா தெலுங்கு லாரன்ஸ் எந்த வருடத்தில் பிப்ரவரி- 31 தேதி இருக்கு பொய் சொல்லுவதற்கு ஒரு அளவே இல்லையா ?


அப்புறம் எப்படி மராட்டியன் வாடகை கொடுக்கிறா மாதிரி கொடுப்பானோ..?

அடேய் நீங்க எல்லாம் எங்க இருந்துடா வர்ரீங்க...

பல் வலி நீங்க எளிய வைத்தியம் உங்களுக்காக...


பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே.

பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும்.

அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும்.

அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும்.

தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்...

மனதில் சுமப்பது குப்பைகளையா?


பாரதியார் குள்ளச் சாமி என்ற ஒரு சித்தரை அறிந்திருந்தார். அவர் மீது மிகவும் மதிப்பும் கொண்டிருந்தார்.

ஒரு முறை குள்ளச்சாமி பழங்கந்தைகளும், குப்பைகளும் கொண்ட அழுக்கு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி வருவதைக் கண்ட பாரதியாருக்கு என்னவோ போல் ஆகி விட்டது.

சித்தராகக் கொண்டாடியவரை இப்படி பழங்குப்பை சுமக்கும் பைத்தியக்காரராகக் காணும்படியாகி விட்டதே என்று பாரதியாருக்கு ஒரே வருத்தம்.

ஐயா ஏனிந்த கோலம். உங்கள் செய்கை பைத்தியக்காராரரின் செயல் போலல்லவா இருக்கிறது என்று கேட்டார் பாரதி.

நான் குப்பைகளை வெளியே சுமந்து கொண்டிருக்கிறேன். நீ உள்ளே சுமந்து கொண்டிருக்கிறாய் என்று புன்னகையுடன் சொன்ன குள்ளச்சாமி பாரதியாரைச் சிந்திக்க வைத்து விட்டு சென்று விட்டார்.

பாரதியாரின் பாடல் இதோ..

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்து கொண்டென் எதிரே வந்தான்.
சற்றுநகை புரிந்தவன் பால் கேட்கலானேன்.
தம்பிரானே இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டை சுமந்திடுவதென்னே? மொழிவாய் என்றேன்.

புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
'புறததேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய்நீ
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும்.

குள்ளச்சாமியின் பதில் பாரதியாரை மட்டுமல்ல நம்மையும் சிந்திக்க வைக்கக்கூடிய உண்மை.

வெளியே குப்பைகளை சுமப்பவரைக் கண்டால் பைத்தியக்காரர் என்று ஏளனம் செய்யும் நாம் அதை விட மோசமானதும் பழமையானதுமாய் எத்தனை குப்பைகளை நம் மனதில் சுமந்து கொண்டிருக்கிறோம்?

புறத்தை சுத்தமாய், அழகாய் வைத்திருக்கும் நம்மில் எத்தனை பேர் அகத்தை சுத்தமாய், அழகாய் வைத்திருக்கிறோம்?

மனதின் உள்ளே இருக்கும் பழைய நினைவுகளில் எத்தனை நினைவுகள் இனிமையானவை? எத்தனை நினைவுகள் பயனுள்ளவை?

இந்தக் கணக்கை ஒவ்வொருவரும் எடுத்துப்பார்த்தால் நன்மையானவையும், பயனுள்ளவையும் நம் மனதில் மிகச் சொற்பமானதாகவே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்வில் நிகழும் நன்மைகளையும், பெற்ற நல்லவற்றையும் நீரில் எழுதி வைக்கிறார்கள். நேர்ந்த தீங்குகளையும், இழந்தவற்றையும், தொலைத்தவற்றையும் கல்லில் எழுதி வைத்துப் பாதுகாக்கிறார்கள். அங்கலாய்க்கிறார்கள்.

அந்தப் பயன்படாத, நிம்மதியைக் குலைக்கும் நினைவுகள் பழங்குப்பைகளே. குப்பைக் கூளங்கள் மிகுதியாக இருக்கும் இடங்கள் நோய்களின் உற்பத்தி ஸ்தானங்கள். எத்தனையோ மனநோய்களின் உற்பத்திக்காரணங்கள் இது போன்ற பழங்குப்பைகள் தான்.

குள்ளச்சாமி சுட்டிக் காட்டிய உண்மை உறைக்க பாரதியார் இது போன்ற குப்பைகள் சுமப்பது முட்டாள்தனம் என்று அழகாய் பாடியுள்ளார்.

சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ.
மேதையில்லா மானுடரே..

கடந்த காலத்தின் இனிமைகளை கல்லில் செதுங்குங்கள். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்று பாடங்களை மட்டும் நினைவு வைத்துக்கொண்டு கசப்பான அனுபவங்களை குப்பைகளாய் எண்ணி அகற்றி விடுங்கள்.

குப்பைகளை சுமப்பதில் அர்த்தம் இல்லை. மேலும் நடந்து முடிந்த, மாற்ற முடியாத விஷயங்களை மனதில் எண்ணி உருகும் போது நிகழ்கால நல்ல விஷயங்களை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். இது இரட்டை நஷ்டமே அல்லவா?

நம் நிம்மதியைக் குலைப்பது நம் பழைய தவறான செயல்கள் என்றால் இனி அப்படி செய்யக் கூடாது என்று உறுதியாக தீர்மானிப்பதைத் தவிர அதுகுறித்து நம்மால் செய்ய முடிவது வேறொன்றுமில்லை.

நம்மை அலைக்கழிக்க வைப்பது அடுத்தவர் செயல்கள் என்றால் இனி அது போன்ற செயல்கள் நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்கேற்ப நம்மைத் தற்காத்துக் கொள்வதே நாம் செய்ய வேண்டிய அறிவார்ந்த செயல்.

அதை விட்டு அப்படியாகி விட்டதே என்று எண்ணி எண்ணி வருந்தியபடியே இருப்பது முட்டாள்தனமே.

பாரதியின் இன்று புதிதாய் பிறந்தோம் என்ற வரியை தாரக மந்திரமாய் எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் ஒவ்வொரு நாளும் நம் வாழ்வின் புதிய பக்கமே. எழுதி முடித்த பக்கங்களைத் திருத்தும் சக்தி நமக்கில்லை என்றாலும் புதிதாய் எழுதப்போகும் பக்கங்களை எப்படி நிரப்புகிறோம் என்பது நம் கையிலேயே அல்லவா இருக்கிறது?

அந்த சுதந்திரத்தை முறையாக நாம் பயன்படுத்திக் கொண்டால் இனிவரும் நாளெல்லாம் இனிய நாளே...

இதில் ஆரியத்தை சேர்க்க வில்லை என்று கேள்வி கேட்காதீர்கள், தமிழன் என்றைக்கும் ஆரியத்தை தன் அரசியலில் சேர்க்க மாட்டான்...


நினைவு கொள்ளுங்கள் ஆரியம் தமிழனின் எதிரி, திராவிடம் தமிழனின் துரோகி...

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்...


தொந்தி கரைய : இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

முடிவளர : எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.

தலைப்பொடுகு நீங்க : கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும்.

நாள்பட்ட புண் ஆற : கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.

கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு பெயர்களும் உண்டு. இக்கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வர வேண்டும்.

இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும்.

கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும். பித்த நீர், கப நீர் வெளியாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க வேண்டும். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.

தேகத்திற்குப் பொற்சாயல் ஏற்படும். இக்கீரை குடலுறுப்பு நோய், காமாலை, குஷ்டம், வீக்கம் ஆகிய பல வியாதிகளைப் போக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.

உடம்பின் உள்ளுறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்க வேண்டுமா னால் கால்சியம் தேவை. கரிசலாங் கண்ணியைப் போல கால்சியமும் பாஸ்பரசும் இணைந்து அதிகமாக இருக்கக் கூடிய வேறு உணவுப் பொருள் இல்லையென்றே கூறலாம்.

இரத்த அழுத்தம், இருதய நோயுள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி ஒரு வரப்பிரசாதமாகும். புரதம் 4.4, கொழுப்பு 0.8, தாதுப் பொருள் 4.5, மாவுப் பொருள் 9.2, சக்தி 62 கிலோ கலோரி, கால்சியம் 306, பாஸ்பரஸ் 462, இரும்பு 8.9, வைட்டமின் இல்லை.

கரிசலாங்கண்ணிக் கீரையில் இரு வகை உண்டு.

1. வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி,

2. மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி.

மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாகும்.

வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து அதிகம்.

இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்...

செயற்கை சோப்பிற்கு பதில் எதை பயன்படுத்தலாம்.?


நவ பாஷாணம்...


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள்.

நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு.

அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.

ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.

நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.

நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்று விடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.

பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.

தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது..

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.

இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்...

இன்னும் நீங்கள் ஊடகத்தையோ, ஊடக நெறியாளர்களையோ நம்பிவீர்கள் என்றால், வாழ்த்துக்கள்..


அவர்கள் வெகு சீக்கிரமாக உங்களையும் அவர்களின் தொழிலில் ஈடுபடுத்துவார்கள்..

ஆரியத்தை எதிர்த்து தமிழர்களுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெரியார் எனும் கன்னட ஈ.வே. ராமசாமி போராடியதாகக் கூறுகிறார்கள்...


அது உண்மையெனில்  பிராம்மணர்களின் பூணூல் அறுப்புப் போராட்டம் நடத்திய பெரியார்...

பிராம்மணர்களின் குடுமி அறுப்புப் போராட்டம் நடத்திய பெரியார்...

ராமர் படத்தைச் செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்திய பெரியார்...

தமிழர்களுக்குச் சொந்தமான கோவிலை விட்டு பிராம்மணர்களே வெளியேறு என்று போராட்டம் நட்த்தவில்லையே ஏன் ?

இங்கு தான் கன்னட தெலுங்கர் ராமசாமி நாயக்கரின் இன நலப்பேராசை பொதிந்துள்ளது..

சிந்தித்து விழித்தெழு தமிழினமே...

கள்ளு ஆரோக்கியமானதே ஏன் தடை? மருத்துவ வியாபாரம் நடக்காது என்பாதாலா?


ஆட்சி மாற்றம் நடக்கும் போது முந்தைய அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை தொடர்வதா வேண்டாமா என்பதை புதிதாக ஆட்சியமைக்கும் அரசு முடிவு செய்யும்...


சட்டசபைக்காக கட்டிய கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியது, பாலங்களில் இருந்த முந்தைய ஆட்சியாளர்களின் பெயர்களின் கல்வெட்டுகளை பெயர்த்தது என்பது போல் இல்லாமல்..

இதே தமிழ்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆட்சி நடந்திருக்கிறது என்பதற்கு திருக்கழுக்குன்றத்தில் கிடைக்கும் இந்த கல்வெட்டு ஒரு எடுத்துக்காட்டு.

திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமான் அடிகளுக்கு இறையிலியாக ஸ்கந்தசிஷ்யன் குடுத்தமையப்படியே பாதாவிகொண்ட நரசிங்கப் போத்தரையரும் அப்பரிசே ரக்‌ஷித்தமையில் ஆண்டுரையான் குணவான் மகன் புத்தன் விண்ணப்பித்தினால் பூர்வராஜாக்கள் வைத்தபடியே வைத்தேன் இராஜகேசரிபரம்மன் இத்தர்மம் ரக்‌ஷித்தான் அடி என் முடி மேலினே...

இதில் கவனிக்க வேண்டியது மூன்று முக்கியமான விசயங்கள்...

1) இந்த கோயிலுக்கு "ஸ்கந்தசிஷ்யன்" என்ற பல்லவ மன்னன் ஒரு தானம் வழங்கி இருக்கிறான். ஸ்கந்தசிஷ்யன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த மன்னனாக கருதப்படுகின்றது. நான்காம் நூற்றாண்டில் ஆட்சியிலிருந்த மன்னன் ஒருவனின் பெயர் வரும் கல்வெட்டு அநேகமாக இதுவாகவே இருக்கக் கூடும். இந்த கோயிலும் நான்காம் நூற்றாண்டில் இருந்தே இருக்கின்றது என்பதற்கு இது ஒரு சான்று.

2) மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பல கைகள் கடந்து கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலம் மாமல்லன் என்ற "நரசிம்ம பல்லவன்" கைகளுக்கு வருகின்றது. அப்போது அவர் தனக்கு முன் இருந்த அரசர் வழங்கிய கொடையை தொடர உத்தரவிடுகிறார்.

3) மீண்டும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆதித்த சோழன் கைகளுக்கு தொண்டை மண்டலம் வருகின்றது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பல நூறு ஆண்டுகள் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து சோழ அரசின் ஆட்சியை நிறுவியவர் ஆதித்தன்.

4) ஆதித்த சோழன் இந்த கோயிலுக்கு மீண்டும் அந்த கொடையை உறுதிப்படுத்தும் போது ஸ்கந்தசிஷ்யன் கொடுத்த கொடையை நரசிம்ம பல்லவன் உறுதிப்படுத்தியத்தைப் போல் நானும் இந்த கொடையை உறுதிப்படுத்துகிறேன் என்கிறான்.

இதில் நரசிம்ம பல்லவனை குறிப்பிடும் போது அவரின் பட்டமான "வாதாபி கொண்ட" என்பதையும் சேர்த்து "வாதாபி கொண்ட" நரசிம்மன் என்று குறிப்பிட்டிருக்கிறார். எதிரியாக இருந்தாலும் அவரின் போர் வெற்றியையும் குறிப்பிட்டு அவரை பெருமைப்படுத்தும் மாண்பு இதே மண்ணில் இருந்துள்ளது...

இந்திய கடன் ரகசியம் - வட்டி மிகவும் ஆபத்தானது...



https://www.nationaldebtclocks.org/debtclock/india

தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம், அரசு, அதிகாரம் என்று இந்தியா கொடுத்திருந்தும்....


தமிழர்கள் அதை திராவிடனிடம் கொடுத்துவிட்டு தீவைத்து தன்னை தானே அழிப்பது கொடுமையில் கொடுமை...

திராவிடமாயை ஒழிப்பே தமிழர் நீர்நிலவள உயிர் பாதுகாப்பின் முதல் படி....

தமிழர் கட்சிகளுக்கு மட்டுமே நமது வாக்கை பதிவுச் செய்யோம் என்று உறுதி எடுப்போம்...

இயற்கை போன்றே இருக்கும் ஆனால் இயல்பான அளவை விட பெரியதாக இருக்கும்.. இந்த தர்பூசிணியை வாங்காதீர்கள்...


மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்...


கணக்கதிகாரம் புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல் இதை தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம்.

இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது.

தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது.

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனை உள்ளது, அதில் "யோசனை" என்ற ஒரு அளவை காண முடிகிறது.

இந்த கணக்கதிகரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புற பொருளுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.

ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என நினைக்கையில்...

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியை பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவை கண்டுபிடித்தனர் (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிட பட்டது/ எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

1 மொழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm ).
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm ).
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm ).
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm ).
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm ).

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்...

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு).

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்..

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தால் 180 km/hr..

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே...

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது.

45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை.

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்...

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km).

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்திருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்...