சென்றப் பதிவில் சன் ஆஃப் காடு
(Son Of God) என்கின்ற திரைப்படத்தின் அஸ்திவாரத்தை பார்த்தோம் இதிலேயே அதிகமான குளறுபடிகள் இருக்கின்றன.
1.யூதாஸ் இயேசுக்கு முத்தம் கொடுத்துக் காட்டிக் கொடுக்க வில்லை மாறாக இயேசுவே மனமுவந்து காவலர்களிடம் தன்னை ஒப்புவித்தார்.
மேற்ச்சொன்னச் சம்பவம் மத்தேயு மற்றும் மாற்கு சொல்கின்றனர் அதை நிராகரிக்கும் விதமாக
(யோவான்:18:1−7)ல் பார்க்கலாம்.
2.ஒரு கண்ணத்தில் அடித்தாள் மறு கண்ணத்தை காட்டுங்கள் என்ற இயேசுவின் போதனைகளை அவறே பின்பற்ற வில்லை ஆதாரம் (யோவான்18:22−23)
3.யூதாஸ் தான் தன்னை காட்டிக்கொடுப்பான் என்கின்ற முன்னறிவிப்பை இயேசு ஏற்கனவே செய்திருக்க காட்டி கொடுத்தவனை விட்டுவிட்டு காவலரை வெட்டியது அபத்தத்திலும் அபத்தம்.
(மத்தேயு:26:25)
4.இயேசுவுக்கு குடிக்கக் கொடுத்த திராட்சை இரசம் கசப்பு கலந்ததா?அல்லது வெள்ளைப் போலம் கலந்ததா?என்கின்ற கருத்துவேறுபாட்டை நீங்கள் (மத்தேயு−27:34)மற்றும்(மாற்கு−15:23)ல் காணலாம்.
5.அந்த திராட்சை இரசத்தை இயேசு குடித்தாரா இல்லையா என்று கருத்து மோதல்களையும் நீங்கள்
(யோவான்−19:30) காணலாம்.
6.சிலுவையின் நேரத்திலும் குளறுபடி மாற்கு சொல்கிறார் காலை ஒன்பது மணி என்று யோவான் சொல்கிறார் நண்பகல் வேளை என்று
(யோவான்−19:14)
மேலும் கிறித்துவ ஆலயங்களில் இருவருக்கும் மதிப்பளிக்காமல் இயேசு மூன்று மணிக்கு மரித்துப் போனதாகக் கருதி அவ்வேளையில் சிலுவைப் பாதையை செய்கின்றனர்.
7.வலது,மற்றும் இடதில் இருந்த கள்வர்கள் இயேசுவை இகழ்ந்தும் உள்ளார்கள்.(மத்தேயு−27:44)
8.ஆடையின் நிறம் இது தான்,இல்லை இல்லை இது தான் (மத்தேயு−27:28) (யோவான்−19:2)
9.இயேசுவின் கடைசி வார்த்தை இது தான்,தவறு இது தான்,
(மத்தேயு−27:46) (லூக்கா−23:46)
இயேசு இறக்கும் பொழுது யாரை அழைத்தார்?அவர் தானே இறைவன் என்கிறீர்கள் அப்பொழுது அவருக்கும் மேலாக யார் உள்ளார்.இறைவன் இறந்துவிட்டால் இவ்வுலகம் எப்படி செயல்படும்?
10.கல்லறையில் மூடப்பட்ட கல்லின் அளவானது படத்தில் காட்டுவது போல் பல டன் கணமுள்ள கல் ஒன்றுமில்லை அது ஒரு மனிதர் சாதாரணமாக உருட்டும் அளவு தான் இருந்தது
(மத்தேயு−27:60)இந்நிலையில் அப்பாறையை அகற்றி எப்படி உடலை வெளியே எடுத்திருக்க முடியும் எனக் கேட்பது மடமை.
11.சிலுவையில் தொங்கவிடப்பட்டிருந்த வசனத்திலும் கருத்து மோதல்கள் தென்படுகின்றன.(லூக்கா−23:38)
(யோவான்−19:19) (மாற்கு−15:26)
12.இயேசு காட்சியளித்த விதத்தின் பின்னனி:
மரித்துப் போன இயேசு தன் தாயைக் காண்பதற்கு மாறுவேடத்தில் வந்திருந்தார்.ஏற்கனவே யூதர்களால் கொல்லப்பட்ட இயேசு மறுபடியும் மாறுவேடத்தில் சாவுக்குப் பயந்து ஏன் மறைந்து வரவேண்டும் என்கின்ற கேள்வி எழுகின்றது."மனிதர் ஒரேமுறை சாவுக்கு உட்படுகிறார்.பின்னர் இறுதிதீர்ப்பு வருகிறது.
(எபிரேயர்−9:27) அவர் முதல் தடவை சாகவில்லை என்பதற்காகவே இம்மறை மாறுவேடத்தில் வந்திருக்கிறார் மேலும் இவ்வசனம் அதனை தெளிவும் படுத்துகிறது(லூக்கா−20:35−36)
13.மரியாள் கல்லறைக்கு எந்த நேரத்தில் சென்றார் என்ற பகுதியில் சர்ச்சைகள் குடிகொண்டுள்ளன.
14.மேலும் இறந்து மூன்று நாட்களான பிணத்தின் கதியை உங்களுக்கேத் தெரியும் அப்பிணத்திற்கு மரியாள் நறுமணங்களை பூசச் சென்றுள்ளதாகவும் கதைகள் ஆர்ப்பறிக்கின்றன.(லூக்கா−23:56)
15.காட்டிக் கொடுத்ததாக சொல்கின்ற யூதாஸும் இரு வேறாக இறந்துள்ளான் ஒன்றில் தூக்குப்போட்டு மற்றொன்றில் வயிறு வெடித்து குடல் சிதறியும்.
16.கல்லறைக்குச் சென்றது எத்தனைப் பெண்கள் என்பதிலும் குழப்பங்கள்!
17.கல்லறையில் தோன்றிய வானவர்கள் ஒருவர் என்று மத்தேயு மொழிய அதனை மறுத்த லூக்கா இருவர் என்கிறார்.
18."அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்"(மத்தேயு−28:7)
என்று வானதூதர் மகதலா மற்றும் மரியாவிடம் சொன்னதாக மத்தேயுவும்.
"உயிரோடு இருப்பவரை கல்லறையில் தேடுவதேன்?"(லூக்கா−24:5)என்று வானதூதர்கள் மகதலா மரியாவிடம் கேட்டதாக லூக்காவும் பதிவு செய்துள்ளனர் இதில் எந்த சட்டம் சிறந்த சட்டமோ அதற்கு ஏற்றவாறு நாமும் நம்பலாம்.
19.சிலுவையில் மரித்ததாக சொல்லும் இயேசு கிறிஸ்து பின்பு உடலோடு வந்ததாகவும் சாப்பிட்டதாகவும் விவிலியம் நமக்கு பரிசாற்றுகிறது. இறந்தப் பின் ஆவியானவர் எப்படி உண்ணவும் பகிரவும் இயன்றிருக்கும். இதிலிருந்து சிலுவை மரணம் எனப்படுவது கேள்விக்குரியதாகிறது?
(லூக்கா−24:40−41)
20.இது தான் குழப்பம் என்றால் இதனை தொகுத்தவரையும் குழப்பம் விட்டுவைக்கவில்லை..
ஒரு இடத்தில் இயேசுவின் குரலை மற்றவர்கள் கேட்டதாகவும், மற்றுமொறு இடத்தில் கேட்கவில்லை எனவும் பவுல் அடிகளார் விலாசித்தள்ளியுள்ளார்.
(திருத்தூதர் பணிகள்−9:7−22:9)
உயிர்த்தெழுதல் சம்மந்தப்பட்ட ஆதாரங்களை மட்டும் தான் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.இதனை தவிர்த்த முரண்பாடுகள் ஏராளம்..
இறுதியாக இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?அல்லது இல்லையா? என்ற கேள்வி இப்பொழுது உங்களை ஆட்கொள்ளும் பொறுங்கள் அடுத்தப் பதிவில் சந்திக்கிறேன்.
- தொடரும்...