06/08/2018

சுகப்பிரசவம்...


படத்தில் முந்தைய காலங்களில் கர்ப்ப ஸ்திரீகள் கர்ப்ப காலத்தில் சுகப்பிரசவம் செய்யும் முறை உள்ளது.

கர்ப்ப ஸ்திரீகள் படத்தில் காட்டியுள்ள முறையில் அமர்ந்து பிரசவம் செய்தால் தான் சுகப்பிரசவம் நடக்கும் என்றும் பின்வரும் சந்ததியர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கோவில் சுவரில் கல்வெட்டாக பதித்து காட்டியுள்ளனர்.

தற்சமயம் கர்ப்ப ஸ்திரீகளை படுக்கையில் படுக்க வைத்துதான் பிரசவம் செய்கின்றனர். அப்பொழுது முக்கி முக்கி குழந்தையை வெளியேற்றுவார்கள் அப்படி செய்தால் சுகப்பிரசவம் ஆகாது. மேலும் பிரசவத்தின் போது சிக்கல் உண்டாகும்.

கர்ப்ப ஸ்திரீகளை படத்தில் காட்டியுள்ளபடி தளர்வாக அமர்ந்து (குத்துகாலிட்டு) இரண்டு பெண்கள் கர்ப்ப ஸ்திரீயின் வயிரை கீழ் நோக்கி அழுத்தி விடவேண்டும். அப்பொழுது தான் வயிற்றுக்கும் கர்ப்பபைக்கும் நன்கு அழுத்தம் கிடைக்கும். எனவே பிரசவம் எளிதாக நடைபெறும்.

இதனை நம் முன்னோர்கள் கல்வெட்டில் காட்டியுள்ளனர்.

இந்த சிலை குற்றாலம் செல்லும் வழியில் கடையநல்லூர் என்னும் ஊர் அருகில் தேவர் கால்வாய் என்னும் பகுதியில் இருந்து இடது புறம் ஒன்னறை கிலோமீட்டர் சென்றால் ஒரு இலங்கை அகதிகள் முகாம் அருகில் மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவில் மண்டப தூணில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற பாரம்பரிய மருத்துவ முறையை சொன்னதால் தான் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளார்கள். இது துரதிஷ்டமானது.

கர்ப்பிணி பெண்கள் எளிதாகக் குழந்தை பெற விதி...

1) சிவனார் வேம்பு கொண்டு வந்து முலைப்பாலில் அரைத்து தொப்புளில் சுற்றி தளமாய்ப்பூசினால் சீக்கிரத்தில் பிரசவமாகும்.

2) மேலும் பசலையிலைச்சாறு அரிக்கால்படி, நல்லெண்ணெய் அரிக்கால்படி இவ்விரண்டையும் ஒன்றாய்க் கலந்து கொடுக்க எளிதில் பிரசவமாகும். யாதொரு வலியும் இல்லாமல் நஞ்சுக்கொடியும் விழும்.

எந்த நரிக்குறவர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று பிரசவம் பார்ப்பதில்லை என்பதையும் அறிக.

வாழ்க வளமுடன்.

நமது பாரம்பரிய மருத்துவமுறையை மீட்டெடுப்போம்.

அவசரத்திற்க்கு மட்டும் அலோபதியை பயன் படுத்துவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.