20/10/2018
கவாடபுறம்...
விசயம் தெரிந்தவர்கள் எடுத்தப்படம்...
எல்லாவற்றையும் மிகத்தெளிவாக சொல்லிவிட்டார்கள்....
இதில் வரும் சிங்கம் தான் Highlights..
நாங்கள் சொல்லும் போது நகைத்த மூடர்கள் இதை நோக்கவும்....
முட்டை கோஸ்ஸின் மருத்துவக் குணங்கள்...
முட்டைகோஸ்ஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன.. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.
மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்… முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன.
எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.
ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது. உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்...
பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் புதனன்று கைது செய்யப்பட்டுள்ளார்...
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் காஞ்சன் சிங். மீரட்டில் உள்ள ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில் 10 வருடங்கள் பணிபுரிந்து வந்தார். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இவரின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து அவர் உளவுத்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
குறிப்பாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப்பிரிவுடன் "இரகசியமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை" அவர் பகிர்ந்து கொண்டதாக விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காஞ்சன் சிங் புதனன்று காலையில் கைது செய்யப்பட்டதை உறுதி செய்ததாக உத்தரபிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதுபோல ஒரு குற்றச்சாட்டின் காரணமாக மஹாரஷ்ஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது...
ஆழ்மனம் இரகசியம்...
மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி...
ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.
வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும்.
முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது.
visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்வது ஒன்றும் சிரமம் இல்லை.
கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார்.
ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார்.
அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார்.
ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.
பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.
இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.
அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள்.
ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்...
தலைமுடி பேண சித்தவைத்திய முறை...
வழுக்கை தலையில் முடிவளர...
வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
முடி உதிர்வது மற்றும் நரை போக்க..
1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.
4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்...
மலாக்கா செட்டிகள் மொழிச் சிதைவின் அடையாளம்...
இன்று வரலாற்று நகரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மலாக்கா 14ஆம் நூற்றாண்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகத் திகழ்ந்துள்ளது. ஐரோப்பிய – ஆசிய நாட்டு வாணிபர்கள் தங்களின் கப்பல் பயணத்தில் மலாக்கா துறைமுகத்தைக் கடந்தே போக வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழர்களும் இங்கே வாணிகம் செய்ய வந்துள்ளார்கள்.
கலிங்கப்பட்டணத்திலிருந்தும் ஏனைய தமிழகத் துறைமுகங்களிலிருந்தும் பாய்மரக்கப்பல்களில் வாணிபம் செய்ய வந்த இவர்கள் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்றே அழைக்கப்பட்டார்கள். ‘செட்டி’ என்ற இந்த வார்த்தை வியாபாரிகள் என்னும் பொருள் கொண்டு மலாய் மொழியில் வழங்கப்பட்டது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கும் இந்த மலாக்கா செட்டிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
14ஆம் நூற்றாண்டில் சுமத்திராத் தீவின் ஒரு நகரமான பலம்பாங் (Palembang) கிலிருந்து வந்த இந்து இளவரசனான பரமேஸ்வரா (Parameswara) முதலில் தமாஸ்சேக் (Tamasek) என்று அப்போது பெயர்பெற்றிருந்த சிங்கப்பூருக்கு வந்து பின் மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றினான். இக்காலகட்டத்தில் தமிழர்கள் இந்தச் சுல்தானின் அரண்மனையில் பிரதம அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் தளபதிகளாக இருந்துள்ளார்கள்.
சுல்தான் பரமேஸ்வராவின் ஆட்சியின்போதுதான் இந்த மாநிலத்துக்கு மலாக்கா என்னும் பெயரை அவன் அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தினான். மலாய் மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் கடற்கரையை வாணிபத் துறைமுகமாக்கியது அப்போது அங்கிருந்த தமிழர்கள்தாம். அவர்கள் மலாக்கா மாநிலத்தில் இருந்தவர்களைவிடக் கல்வியிலும் வியாபாரத்திலும் சிறப்புற்றிருந்தார்கள். எனவேதான் அவர்களைப் பரமேஸ்வரா தனது அரண்மனையில் முக்கியப் பதவிகளில் அமர்த்தினான்.
1414இல் இந்தோனேசியாவின் ஆச்சே (Acceg) நகரத்துக்குச் சென்ற பரமேஸ்வரா அங்கே பாசாய் (Pasai) பகுதி இளவரசியை மணந்ததன் மூலம் முஸ்லிமாக மாறித் தனது பெயரைச் சுல்தான் ஸ்கந்தர் ஸா (Sultan Skandar Shah) என மாற்றிக்கொண்டான். அப்போதைய மலாயாத் தீபகற்பத்தில் இவனே முதல் முஸ்லிம் சுல்தான்.
பரமேஸ்வரா, சுல்தான் ஸ்கந்தர் ஸா என முஸ்லிமாக மாறினாலும் அரண்மனையிலும் வாணிபத்திலும் வெற்றிகரமாக இருந்த தமிழர்கள் யாரும் மதம் மாறாமல் இந்துக்களாகவே இருந்தார்கள். தங்களுக்கென்று சிறிய கோயில் ஒன்றையும் கஜபதி அம்மான் என்னும் பெயரில் இவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
வர்த்தக நிமித்தம் வந்த இவர்கள் திரும்பவும் தமிழகம் திரும்பாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவாகியது. தமிழகத்திலிருந்து பல்வேறு உணவுப் பொருட்களைப் பருவக்காற்றை ஒட்டிவந்த கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து வியாபாரம் செய்துள்ளார்கள்.
வர்த்தகர்களாக வந்த இவர்களில் வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் பெண்களை அழைத்துவரவில்லை. இதன் காரணமாக இங்கே மலாய்ப் பெண்களை மணமுடித்துக் கொண்டார்கள். அப்போது சீனாவிலிருந்தும் மலாக்கா துறைமுகத்துக்குப் பெருமளவில் கப்பல்கள் வரத் தொடங்கின. அப்படி வியாபாரம் நிமித்தம் வந்த சீனர்களோடு உறவு நீடித்ததால் சீனப் பெண்களையும் இந்தத் தமிழ் வாணிபர்கள் மணமுடித்தார்கள்.
அரண்மனையில் அரசியல் செல்வாக்கும் பொருளாதாரத்தில் மேன்மையும் கொண்டிருந்த இவர்களை மணந்துகொள்ள மலாய், சீன இனப் பெண்கள் முன்வந்தது ஆச்சரியமல்ல.
போர்த்துக்கீசியர்கள் (1511 – 1641) மலாக்காவைக் கைப்பற்றியபோதும் மலாக்கா செட்டிகளின் செல்வாக்குக் குறையவில்லை.
போர்த்துக்கீசியர்களுக்கு அணுக்கமாக இருந்துவந்துள்ளார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகள் மலாக்கா நகரம் போர்த்துக்கீசியர்களின் ஆட்சியில் இருந்தபோது இங்கே மத மாற்றங்கள் நிகழ்ந்தன. வியாபாரத்தைவிட மதமாற்றத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் அதிகக் கவனமுடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. இந்தியாவில் அவர்கள் வந்த இடங்களிலும் இதுதான் நடந்துள்ளது.
இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பெரும் பகுதித் தமிழர்கள் தங்களின் இந்து மதத்திலிருந்து மாறவே இல்லை. பிற இனப் பெண்களை மணந்தபோதும் அவர்கள் கோயில் வழிபாடு போன்றவற்றை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார்கள்.
வெகு சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். மலாய், சீன இனப் பெண்களைப் போர்த்துக்கீசியர்கள் மணந்துகொண்டார்கள். இந்தியாவில் உள்ள ஆங்கிலோ – இந்திய இனத்தைப் போல இங்கே ‘போர்த்துக்கீசியர்’ என்ற தனி இனம் ஒன்று உருவாகியது. இன்றும் போர்த்துக்கீசியர்கள் என்ற அடையாளத்துடன் இவர்கள் வாழ்கிறார்கள். போர்த்துக்கீசியர் காலனி என்றே அரசாங்கம் அதிகாரபூர்வமாக இவர்கள் வாழும் இடத்தை அறிவித்துள்ளது. இவர்களுக்கு அரசியல் சட்டப்படி ‘பூமி புத்ரா’ (மண்ணின் மைந்தர்கள்) என்னும் அந்தஸ்தும் தரப்பட்டுள்ளது.
மலேசியாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி 1957இல் நாடு சுதந்திரமடைந்த போது மலாய்க்காரர்களுக்கு அரசியல் சாசனத்தில் தனிச்சலுகைகள் வழங்கப்பட்டன. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, அரசாங்கக் குத்தகைகள் அனைத்திலும் இந்தச் சிறப்புச் சலுகைகள் ஏற்படுத்தப்பட்டன. பின்தங்கிய சமூகம் என்று அப்போது இதற்குக் காரணம் கூறப்பட்டது.
இந்தச் சிறப்புச் சலுகை பெறும் இனமாகப் போர்த்துக்கீசியச் சமூகமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இதில் பெரிய சோகம் என்னவென்றால் 1511இல் வந்து இங்கே மதமாற்றங்கள் செய்தபோதும் இங்குள்ள பெண்களை மணந்தபோதும்தான் இப்போதுள்ள போர்த்துக்கீசிய சமூகம் உருவானது. ஆனால் ‘பரமேஸ்வரா’ என்ற இந்து மன்னனாகவும் பிறகு மலாயாவின் முதல் முஸ்லிம் சுல்தானாகவும் அதிகாரபூர்வமாக மலாய் வரலாற்றில் கூறப்பட்டவனின் அரசாங்கத்தில் 14ஆம் நூற்றாண்டிலேயே முதலமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்த ‘மலாக்கா செட்டிகளுக்கு’ பூமி புத்திரா அந்தஸ்து வழங்கப்படாதது ஏன்? இதை இங்கே உள்ள இந்திய அரசியல் கட்சிகளும் பேசவில்லை. மலாக்கா செட்டிகளும் இதைப் பற்றிப் பேசவில்லை. அல்லது பேசச் சரியான தலைமைத்துவம் அவர்களிடம் இல்லை.
போர்த்துக்கீசியர்கள் 1511இல் மலாக்காவைக் கைப்பற்றியபோது அவர்கள் ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கியுள்ளார்கள். அதில் கடற்கரையோரம் அமைந்த ஒரு கிராமத்தை ‘கம்போவ் கிலீவ்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
கலிங்கப்பட்டணத்திலிருந்து வந்த தமிழர்களை ‘கிலீவ்’ என்றே மலாய்க்காரர்கள் அழைத்தார்கள். அக்காலத்தில் கௌரவமான சொல்லாக இருந்த இந்த ‘கிலீவ்’ இன்று தமிழர்களை இழிவுபடுத்தும் சொல்லாக மாறிவிட்டது.
போர்த்துக்கீசியர்களோடு மலாக்கா செட்டிச் சமூகம் புரிந்துணர்வுடன் செயல்பட்டுள்ளது. போர்த்துக்கீசியக் கடற்படைத் தலைமைத் தளபதி அல்பான்சோ டி அல்புகர்க் எழுதியுள்ள குறிப்பில் மலாக்காவை அங்குள்ள மக்களிடம் இணக்கமாக அரசாட்சி நடத்த மலாக்கா செட்டி சமூகம் கணிசமாக உதவியதால் உயர்பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குறித்துள்ளார். இவ்வாறு கைகோத்துச் செயல்பட்டதால் மலாக்கா செட்டிச் சமூகம் தங்குதடையின்றி வாணிபம் செய்ய முடிந்துள்ளது.
1641இல் டச்சுப் படை மலாக்காவைப் போர்த்துக்கீசியரிடமிருந்து கைப்பற்றியது. 1824 வரை டச்சு அரசாங்கத்தில் ‘மலாக்கா செட்டி’ சமூகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. டச்சுக்காரர்கள் வாணிபத்தைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டார்கள். அதுவரை வாணிபத்தில் முதலிடத்தில் இருந்த இவர்களின் வாழ்க்கை முறை படுமோசமாகி வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை நாட வேண்டிய சூழலிலிருந்து தொடங்கி இவர்களின் வீழ்ச்சி ஆரம்பித்தது.
‘கம்போவ் கிலீவ்’ என்ற வியாபார இடத்தை டச்சுக்காரர்கள் மலாக்கா செட்டிகளிடமிருந்து பறித்து அதற்கு டச்சுக் கிராமமென்று மறுபெயர் சூட்டினார்கள்.
மலாக்கா செட்டிகள் இந்து மதத்தில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் டச்சுக் கவர்னர் போர்ட் (ஙிஷீக்ஷீt) 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோயில் கட்டுவதற்கு வழங்கியுள்ளார். 1781இல் டச்சு அரசாங்கக் கெசட்டில் இது நிரந்தரப் பட்டாவுடன் கூடிய நிலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது.
‘ஸ்ரீபொய்யாத விநாயகர் மூர்த்தி’ என்னும் பெயரில் இக்கோயில் கட்டப்பட்டது. எழுத்துபூர்வமான மலாயா வரலாற்றில் இதுவே இப்பிரதேசத்தில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோயில் – இன்றும் வரலாற்றுச் சின்னமாக உள்ளது. மலாக்கா செட்டிகளின் ஆதி வரலாறு இது.
ஐந்திலிருந்து ஏழு தலைமுறைகளுக்குப் பின்னர் அவர்களின் இப்போதைய நிலை என்ன?
1962ஆம் ஆண்டிலும் 1999ஆம் ஆண்டிலும் இரண்டு முறை அவர்களின் இருப்பிடம் சென்று சில ஆய்வுகள் செய்துள்ளேன். இப்போது இந்தக் கட்டுரைக்காகவும் அங்கே சென்று வந்தேன்.
சீன – மலாய் இனத்தவரோடு கலப்பு மணம் செய்த காரணத்தால் தங்களின் தாய்மொழியான தமிழை அவர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள். பல்வேறுபட்ட பண்பாட்டு மாற்றங்களுக்குப் பிறகும் அவர்கள் இன்றும் தங்களை இந்து மதத்தவர் எனக் கூறிக்கொள்வதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். தொழில் நிமித்தம் தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங்கு என்று போய்விட்டாலும் இன்றும் சித்திரை மாதம் ஸ்ரீமுத்து மாரியம்மன் திருவிழாவில் கலந்துகொள்வதைக் கடமையாகக் கொண்டுள்ளார்கள்.
மலாக்கா கஜபெராவ் என்னும் இடத்தில் இன்றும் 100 குடும்பத்தினர் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள். தியாகராஜன் என்பவர் இவர்களுக்குத் தலைவராக உள்ளார் – ‘கஜபெராவ்’ என்று அதிகாரபூர்வ நகராக உள்ள இந்த இடம் முற்காலத்தில் ‘காஞ்சிபுரம்’ என்றே விளங்கியுள்ளது.
தலைவர் தியாகராஜனின் மனைவி சீன வம்சா வழியில் வந்த மலாக்கா செட்டியாவார். வீட்டில் சேலை கட்டுகிறார். பூஜை அறையில் அனைத்து இந்துக் கடவுள்களும் இருக்கிறார்கள். அந்த அறையை எனக்குக் காட்டினார்கள். பெருமிதமும் மகிழ்ச்சியும் பொங்க அவர் தேவாரத்தை ராகத்துடன் பாடினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தேவாரம் பாடத் தெரிந்த இவருக்கு ஏன் தமிழ் தெரியவில்லை. எழுதப்பட்ட ஒரு தாள் அவர் கையில் இருந்தது. எட்டிப் பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது. ஆங்கில எழுத்துருவில் எழுதப்பட்டிருந்த தேவாரத்தைத்தான் அவர் பாடியுள்ளார்.
அவர்களுக்கு ஒரே மகள். திருமணம் முடிந்துவிட்டது. திருமண ஆல்பத்தைக் காட்டினார்கள். இந்து ஆகமங்கள் சிறிதும் வழுவாத கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. படத்தில் அனைவரும் வேட்டி, சேலை உடுத்திக் கூட்டமாக இருக்கிறார்கள். மாப்பிள்ளை தாலி கட்டுகிறார். அவர் முகம் அசல் தமிழ் முகமாக இருந்தது.
இவர் ‘மலாக்கா செட்டி’ சமூகத்தவரா என்று தலைவர் தியாகராஜனிடம் கேட்டேன்.
“இல்லை அசல் தமிழர்” என்றார்.
“எப்படி?”
“நாங்கள் எங்கள் மொழியை ஏழு தலைமுறைகளாக இழந்துவிட்டோம். இந்து மதம் மட்டுமே எங்களை அடையாளப்படுத்த எங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற பெரிய சொத்து. அதை விடாமல் காலங்காலமாகக் காத்துவருகிறோம். எங்களை அடையாளப்படுத்த ஐந்து பெரிய கோயில்களைக் கட்டியுள்ளோம். ஐந்து சிறிய ஆலயங்களும் உள்ளன. பண்பாட்டு மாற்றத்தால் நாங்கள் தமிழ்மொழியை இழந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியாது. அதனால் தமிழ் படித்த இளைஞர்களுக்கே எங்கள் பெண்களைத் திருமணம் செய்துவைக்கிறோம். எங்கள் பேரப்பிள்ளைகளாவது தமிழ் தெரிந்தவர்களாக மாறிவிட இதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம். மிக உறுதியாகத் தியாகராஜன் பேசினார்.
மொழியை இழந்துவிட்ட சோகம் அவரின் குரலில் தெரிந்தது. அவர் மனைவி சீனத்தை இழந்துவிட்டாலும் தன் கணவரின் தாய்மொழிதான் தனது மொழி என்பதில் உறுதியாக இருந்தார். மொழி இழப்பு என்பது எவ்வளவு சோகமானது என்பது நம்மில் பலருக்கு விளங்குவதில்லை. தனது தாய்மொழியை இழந்த இந்த மலாக்கா செட்டிகளை அவர்கள் ஒருமுறை வந்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும்.
தியாகராஜன் தன் வீட்டின் எதிர்ப்புறமிருந்த ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். தமிழ் தெரிந்த இளைஞரை மணந்து மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக அமர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உணவு சாப்பிட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள். வீட்டில் இந்துக் கடவுள்களும் சீனக் கடவுள்களும் பக்கம் பக்கமாக இருந்தார்கள். அந்தப் படங்களுக்கு வைக்கப்பட்ட வாழைப்பழங்களில் சீன ஊதுவத்திகள் புகைந்துகொண்டிருந்தன – பண்பாட்டு மாற்றம் ஒன்று அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. இதில் திடுக்கிடும் மிகப் பெரிய ஒரு செய்தியைத் தலைவர் தியாகராஜன் என்னிடம் கூறியபோது என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
“நாங்கள் முதலியார் சாதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் மகளை ஒரு முதலியாருக்குத்தான் திருமணம் செய்துகொடுத்துள்ளேன். எந்தக் காரணம் கொண்டும் சாதியை விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். இப்படி அவர் கூறியபோது சாதி பற்றிய பெருமிதம் அவர் முகத்தில் தாண்டவமாடியது.
“உங்கள் மனைவி சீனச் சமூகத்தவர்போல் இருக்கிறாரே. அவர் என்ன சாதி?”
அவர் அந்தக் கேள்வியை எதிர்பார்த்தவர்போலவே என்னைப் பார்த்துச் சிரித்தார்.
“என் மனைவியின் அப்பா முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அதனால்தான் என் அப்பா இந்தக் கலியாணத்தை நடத்தினார்.”
அவருக்குத் தமிழ் தெரியவில்லை. மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் என்னிடம் உரையாடினார். ஆனால் சாதி பற்றிச் சொல்லும்போது ‘முதலியார்’ என்று அழுத்தமாகத் தமிழில் கூறினார்.
1824இல் ஆங்கிலேயர்கள் மலாக்காவைக் கைப்பற்றினார்கள். காலனித்துவ ஆட்சியில் அரசாங்கத்தின் சாதாரண வேலைகளில் இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. 1941 வரையில் ஜப்பானியர் படையெடுப்புக்கு முன்புவரை இவர்களின் வாழ்க்கை சிறிது மாறியது.
1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவர்கள் இந்திய அரசியல் கட்சிகளாலும் இந்து சங்க அமைப்புகளாலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களே கோயில்கள் கட்டிக்கொண்டு தீபாவளி, பொங்கல், மாரியம்மன் திருவிழா என வாழ்ந்துவருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் என்று தங்கள் பிள்ளைகளுக்குக் கோயில்களில் வகுப்பு நடத்துகிறார்கள். தங்கள் மூதாதையர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் விட்டுச்சென்ற இந்து மதப் பண்பாட்டை விடாமல் காப்பதில் அவர்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளத் தயாராய் இல்லை. இப்போது தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்கும் ஆவலோடு தங்கள் பிள்ளைகளைத் தமிழ் தெரிந்த முதலியார்களுக்கே திருமணம் செய்துவைக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். உணவு வகையில் தமிழ் வகை உணவுகளையே கடைப்பிடிக்கிறார்கள்.
அரசாங்கம் ‘மலாக்கா செட்டி’ என்ற இவர்கள் வாழும் பகுதியைச் சுற்றுலாப் பகுதியாக்கியுள்ளது. இவர்கள் வாழும் பகுதியின் நுழைவாயில்கூட இந்து மதக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பற்றி ஒரு குறிப்பையும் இங்கே பளிங்குக்கல்லில் வைத்துள்ளார்கள். இவர்களின் அடையாளங்களைக் காணச் சிறிய மியூசியமும் உள்ளது.
மிக மென்மையானதாகவும் அன்பின் அடையாளமாகவும் இந்தச் சமூகம் உள்ளது. இவர்கள் அமைதியானவர்கள். இந்த அமைதிதான் இவர்களுக்கு எதிரியாகவும் இருக்கிறது.
மலேசிய சுற்றுலாத் துறை தங்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிய அளவு தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களின் கவலையாக இருக்கிறது. ஒருவேளை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த மலாக்கா செட்டி சமூகம் இதேபோல் இருந்தால் தான் அத்துறைக்கு இலாபமாக இருக்கக்கூடும்...
கிஸ் மிஸ் பழம் பற்றிய தகவல் ( உலர் திராட்சை )...
கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் கு ணமடையும்.
உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.
இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடகாத்திரமாக வளரும்.
தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.
மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்...
பாவம் - புண்ணியம்...
நல்வினை தீவினை என்று இருவகையால் சொல்லப்படும் கருவினில் தோன்றி வினைப்பயன் விளையுங்காளை, உயிர்களுக்கு மாபேரின்பமும், கவலையும் காட்டும்
- மணிமேகலை
ஊழின் பெருவளி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும் - திருக்குறள்
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர், நாழி (படி) முகவாது நானாழி - தோழி, நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம் விதியின் பயனே பயன்.
அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் பருவத்தாலன்றி பழா
- மூதுரை
பரிகாரத்தின் கதி என்னவாகும்?
மேற்படி ஞானிகள் ஊழ்வினைப் படியே உலக மக்கள் வாழ்க்கை நிர்ணயிக்கப் பட்டுள்ளதை கூறியிருக்கும் பொழுது பரிகாரத்தின் மூலம் தவிர்த்துக் கொள்ள முயல்வது மூட நம்பிக்கையாகும்.
கடவுளின் மீது அன்பு செலுத்துங்கள். "அன்பே சிவம்" அவன் தங்களின் ஐம்புலன் அறிவைக் கொண்டு மனதின் மூலம் மனிதனை வழி நடத்துக்கின்றான். ஆகையால் அறிவும் மனமும் நம் உடன்பிறந்த தெய்வமாகும் என்று உணர வேண்டும். மற்றவை குருமுகம் அறிதல்.
உண்மை, உயிர், அறிவு, கடவுள் ஒருவன் இருக்கின்றான். அவனை சிந்தித்து ஆன்ம லாபமடைய மக்களுக்கு உதவுங்கள். அறிவான கடவுள் மனிததேகத்தில் விஞ்ஞானி ரூபத்தில் வெளிப்பட்டு மக்கள் முன்னேற புதுயுகத்தை படைத்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை உணர்த்த வேண்டுகிறோம்.
ஆகவே செய்திதாள்களும், சின்ன திரை, பெரிய திரைகளில் வரும் கற்பனை காட்சிகளில் நம் நாட்டு பாமர மக்கள் அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும் அழுந்திவிடாமல் விழிப்புணர்வு செய்திகளும், படங்களும் வெளியிட்டால் நம் தமிழ்த்தாய் பெற்ற செம்மொழிக்கு அரியாசனம் அமைத்து கொடுத்த முழுமையான பங்கு தங்கள் அன்பு உள்ளங்களைத்தான் சாரும்.
எந்த புராணக்கதையாக இருப்பினும் கதை முடிவில் அந்தக் கதையில் உண்மை கருத்தை, தத்துவத்தை கூறி முடிப்பது நலம், விளக்கவில்லை எனில் "கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கம்தான் வளரும்" என்று உணர்கிறோம்.
எல்லாம் வல்ல பரம் பொருள் நம் இதயத்தின் உள்ளேயே சோதியாக உள்ளது. அதை அகக்கண்ணால் அறியலாம். இவ்வுலக உயிர்களாகிய நாம் ஒரு சூரியன், சந்திரன் கீழ்தான் உயிர் வாழ்கின்றோம். இதிலிருந்து நாம் உணர வேண்டியது என்னவெனில், நாம் எல்லோரும் சகோதரர்கள். ஆன்ம நேயத்துடனும், மனித நேயத்துடனும் ஒரு ஒளி சோதியின் கீழ் வாழ்வதை உணர்ந்து அனைவரும் அன்பாய் வாழ்ந்திடுவோம்...
சோழ மன்னர்களின் பட்டியல்...
முற்காலச் சோழர்கள்...
கி.பி. 1 முதல் கி.பி 150 வரை ஆண்ட சோழர்கள்...
1. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான்
2. கிள்ளிவளவன்
3. பெருநற்கிள்ளி
4. கோப் பெருஞ்சோழன்
கி.பி. 150 முதல் கி.பி 300 வரை ஆண்ட சோழர்கள்...
1. நெடுமுடிக்கிள்ளி
2. இளங்கிள்ளி முதலியோர்.
வேறு முற்கால சோழ அரசர்கள் சிலர்.
(இவ்வரசர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில்
கூறப்பட்டிருந்தாலும் மிகுதியான
வரலாற்று செய்திகள் அறிவதற்கு ஏதும்இல்லை)
01. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
02. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி
03. வேல்பல் தடகைப் பெருநற்கிள்ளி
04. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி
05. தித்தன்
06. சோழன் நல் உருத்திரன்
07. முல்லைக்கலி சோழன்
08. நல்லுத்தரன்
09. குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
10. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
11. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
12. வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி
13. அத்திரிசோழன்
14. அரியசந்திரசோழன்
15. அண்டசோழன்
16. அடைவளைசோழன்
17. அன்னசோழன்
18. அன்பசோழன்
19. ஆந்தைசோழன்
20. ஆதனழிசிசோழன்
21. ஆலங்கிள்ளிசோழன் (ஆலசோழன்)
22. ஆதிராசேந்திரசோழன்
23. ஆனைச்சேவகசோழன்
24. அபயகுலசேகரசோழன்
25. கலிக்காமசோழன்
26. கடம்பசோழன்
27. கடையசோழன்
28. கண்டர்கிள்ளிசோழன்
29. காங்கமசோழன்(காந்தமசோழன்)
30. கிள்ளிசோழன்
31. கொள்ளிசோழன்
32. குடசோழன்
33. குருசோழன்
34. குமாரமகீதரசோழன்
35. கூரசோழன்
36. கொள்ளிசோழன்
37. கோப்பெருஞ்சோழன்
38. பஞ்சநதசோழன்
39. பாண்டுசோழன்
40. பாலையசோழன்
41. பாதிரிசோழன்
42. பாம்பசோழன்
43. புத்திகழிசோழன்
44. பசுபோகசோழன்
45. புகழ்ச்சோழன்
46. புலவசோழன்
47. பூதசோழன்
48. பெருந்திருமாவளவசோழன்
49. பெரும்பற்றசோழன்
50. பைஞ்ஞீலசோழன்
51. பொன்னசோழன்
52. பெரியசோழன்
53. பேரெயில்சோழன் (பேர்சோழன்)
54. மண்ணிசோழன்
55. மயில்சோழன் (மயிலாடுசோழன்)
56. மறவசோழன்
57. மஞ்சசோழன்
58. மதுராந்தகசோழன் (சோழவல்லபன்)
59. மாந்தைசோழன்
60. முள்ளிசோழன்
61. வடமசோழன்
62. வாஞ்சிசோழன்
63. வாலிசோழன்
64. வீரவாதித்தசோழன்
65. வெட்டுவசோழன்
66. வெண்டசோழன்
67. வெண்ணிசோழன்
68. சந்திரசோழன்
69. சங்கரசோழன்
70. சாளுவசோழன்
71. சித்தசோழன்
72. சிரசோழன்
73. சுந்தரசோழன்
74. செங்கமலசோழன்
75. சென்னிசோழன்
76. சேந்தசோழன்
77. நல்லுருத்திரசோழன்
78. நீவசோழன்
79. ஓடம்போகிசோழன்
80. ஐவசோழன்
81. உலகநாதசோழன்
82. ஈச்சோழன்
83. தக்கோலசோழன்
84. திருமலைசோழன்
இளஞ்சேட்சென்னி
கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கண்ணன்
பெருநற்கிள்ளி
மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848
இடைக்காலச் சோழர்கள்
விசயாலயச் சோழன் கி.பி. 848-871
ஆதித்தச் சோழன் கி.பி. 871-907
பராந்தகச் சோழன் I கி.பி. 907-950
கண்டராதித்தர் கி.பி. 949-957
அரிஞ்சயச் சோழன் கி.பி. 956-957
சுந்தர சோழன் கி.பி. 956-973
ஆதித்தக் கரிகாலன் கி.பி. 957-969
உத்தம சோழன் கி.பி. 970-985
இராசராசச் சோழன் I கி.பி. 985-1014
இராசேந்திரச் சோழன் கி.பி. 1012-1044
இராசாதிராசச் சோழன் கி.பி. 1018-1054
இராசேந்திரச் சோழன் II கி.பி. 1051-1063
வீரராசேந்திரச் சோழன் கி.பி. 1063-1070
அதிராசேந்திரச் சோழன் கி.பி. 1067-1070
சாளுக்கிய சோழர்கள்...
குலோத்துங்கச் சோழன் I கி.பி. 1070-1120
விக்கிரமச் சோழன் கி.பி. 1118-1135
குலோத்துங்கச் சோழன் II கி.பி. 1133-1150
இராசராசச் சோழன் II கி.பி. 1146-1163
இராசாதிராசச் சோழன் II கி.பி. 1163-1178
குலோத்துங்கச் சோழன் III கி.பி. 1178-1218
இராசராசச் சோழன் III கி.பி. 1216-1256
இராசேந்திரச் சோழன் III கி.பி. 1246-1279...
சூரியனை பார்க்க கூடாத நேரம் என்ன?
கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்..
பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி வந்தனர்..
சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன..
சூரியன் நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சுட்டெரிக்கும் சூரியனைப் பார்க்கக் கூடாது..
பொதுவாக ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும்.
நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு.
விஞ்ஞானமும் இதனை ஒப்பு கொள்கிறது.
ஆனால் காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று.
மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும் என்பது அறியப்பட்ட உண்மை...
வேர்க்கடலையின் பயன்...
வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான விட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன..
ஆனால், வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதை விட வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்..
ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.
வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும்..
ஏனென்றால் அதில் தான் நிறையச் சத்துகள் உள்ளன.
ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் சாப்பிடுகிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்..
வேர்க்கடலையை சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது..
கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.
எனவே புதிதான வேர்க் கடலையையே சாப்பிட வேண்டும்.
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.
இதனால் வேர்க்கடை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் ஏற்படாது.
வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிவிடும்.
தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து அல்லது வறுத்து சாப்பிடவும். எண்ணையில் பொரித்து சாப்பிட வேண்டாம்.
உடல் பருமன் உள்ளவர்களும், உணவைக்குறைத்து உடல் மெலிய விரும்பினால், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒருகைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும்..
இத்துடன் சீனி சோக்காத காபி அல்லதுடீ அருந்தவும்.
பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது.
இதனால் உடல் எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்...
தமிழ்நாட்டில் ஒரு கோடி வட இந்தியர்கள் நுழைந்துள்ளனர்...
இரு மாதங்களில் ரேசன் அட்டை, வாக்குரிமை அட்டை வழங்கப்படுகிறது. விரைவில் வட இந்தியர்கள் தமிழக அரசியலை தீர்மானிப்பார்கள். வட இந்தியர்களால் நாம் விரட்டி அடிக்கப்படுவோம்...
அண்ணன். சீமான் அம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் பேச்சு..
உண்மை. பார்ப்பன பனியா இந்தியா, அதிக மக்கள்தொகை உள்ள வட இந்திய தொழிலாளர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்கள் ஆக்குவதன் மூலம் நம்மை சிறுபான்மை ஆக்குகிறது.
இந்த வட இந்தியர்கள் தமிழ்நாட்டு வாக்காளர் ஆக்குவதன் பின்னணியில் காங்கிரசு, பாசக, கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக கள்ளக்கூட்டும் உள்ளது...
எப்பொழுதோ அழிந்துவிட்ட டீனோசௌரஸை, 11ம் நூற்றாண்டுத் தமிழன் எப்படிக் கண்டிருக்க முடியும்?
கம்போடியா நாட்டில் அன்கோவார்ட் (Ankor wat) என்னும் மிகப் பிரமாண்டமான சிவன் ஆலயம், ஒரு தமிழ் மன்னனால் கட்டப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்..
இந்தக் கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..
எகிப்தில் உள்ள பிரமிட்டுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதேயளவு முக்கியத்துவம் இதற்கும் கொடுக்கப்பட வேண்டும்..
இந்தப் பழமையான கோவிலில் நம்பவே முடியாத ஒரு அதிசயமான நிகழ்வு நடந்திருக்கிறது..
அன்கோவாட்டே ஒரு அதிசயம். அதில் இன்னுமொரு அதிசயம்.
அன்கோவாட் கோவிலின் சுவரொன்றில் ஒரு டீனோசௌரஸின் (Dinosours) படம் செதுக்கப்பட்டிருக்கிறது.
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
டீனோசௌரியாக்கள் பூமியிலிருந்து அழிந்து போய் இலட்சம் ஆண்டுகளுக்கும் மேலாகின்றன.
அவற்றின் எலும்புக்கூட்டுச் சுவடுகளை (Fossils) நவீன மனிதர்களான நாம், 19ம் நூற்றாண்டில்தான் கண்டு பிடித்தோம்..
அந்த எலும்புக்கூடுகளின் சுவடுகளை வைத்து டீனோக்களின் வடிவங்கள் இப்படி இப்படி இருக்கலாமெனத் தெரிந்து கொண்டோம்..
ஆனால் 11ம் நூற்றாண்டிலேயே 'ஸ்டெகொசௌரஸ்' (Stegosaurus) என்ற டீனோவின் உருவத்தை அன்கோவார்ட் சிவன் ஆலயத்தில் செதுக்கியுள்ளார்கள்..
இது எப்படிச் சாத்தியமாகும்?
உண்மையில் நம்பவே முடியாத அதிசயம் இது..
எப்பொழுதோ அழிந்துவிட்ட டீனோசௌரஸை, 11ம் நூற்றாண்டுத் தமிழன் எப்படிக் கண்டிருக்க முடியும்?
அதன் எலும்புச் சுவடுகளைக் கண்டிருந்தாலும், எப்படி அதன் வடிவத்தைக் கணித்திருக்க முடியும்?
கொஞ்சம் யோசியுங்க மக்களே...
பெரியார் என்கிற கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டோருக்காக போராடினாரா?
தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்களை பற்றி பெரியாரின் கண்ணோட்டம் பற்றி ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம்...
துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்..
வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்..
அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்..
இந்த செய்தியை தி.மு.க .நடத்தும் முரசொலி பொங்கல் மலர் 1962 ல் வெளியிட்டு உள்ளது.
இதே செய்தியை 2-3-1962 பெரியார் அச்சகம் வெளியிடும் நாத்திகம் செய்தி தாளிலும் வெளியிடப்பட்டு உள்ளது..
தாழ்த்தப்பட்டோர் பற்றி இப்படி மிக உன்னதமான கருத்துகளை வைத்திருந்த பெரியார் என்கிற ராமசாமி நாயக்கர் அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் எங்கும் எப்போதும் நடத்தியதே இல்லை.
இது அதிர்ச்சி அளிக்க கூடிய மிகவும் கசப்பான உண்மை.
இதில் இருந்து பெரியார் என்கிற கன்னட ராமசாமி நாயக்கன் தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் என்று கூறி வந்தது சரி தானா என்று தீர்மானிப்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்...
1971-ல் கடலுக்குள் இருந்து கிளம்பிய யூஎப்ஓக்கள்...
1952-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோர பகுதியில் இருக்கும் நியூ ஜெர்சியில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியாத பறக்கும் பொருள் (Unidentified flying object - UFO) ஒன்றின் தெளிவான புகைப்படம் சிக்கியது. 1940 மற்றும் 1950-களில் விசித்திரமான இந்த பறக்கும் பொருள்கள் - பறக்கும் சாசர் (Flying Saucer) அல்லது பறக்கும் டிஸ்க் (Fluying Disc) என்ற பொது பெயரில் உலா வந்தது. அவைகளை "அங்கு பார்த்தேன்", "இங்கு பார்த்தேன்" என்று கூறப்பட்டு வந்த நிலையில் தெளிவாக புகைப்படத்தில் சிக்கிய அடுத்த ஆண்டே, அதாவது 1953-ஆம் ஆண்டு அந்த விசித்திரமான பறக்கும் பொருளுக்கு யூஎப்ஓ (UFO) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டு பின் அவைகள் பூமி கிரகத்தை சேர்ந்த பொருள் அல்ல என்ற நம்பிக்கை பரவியது..
விண்ணில் தோன்றும் யூஎப்ஓக்கள் வழக்கத்திற்கு மாறாக 1971-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடலில் இருந்து கிளம்பின, மேலும் அவைகள் தெளிவான முறையில் புகைப்படங்களிலும் சிக்கின.
உலகை உலுக்கிய அந்த புகைப்படங்களை அமெரிக்காவின் தாக்குதல் நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் ட்ரேபாங்க் எஸ்எஸ்என்-674 (USS Trepang SSN-674) பதிவு செய்தது.
வெளியான புகைப்படங்கள் அமெரிக்க கடற்படை படைகளுக்கும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு "நெருக்கமான சந்திப்பு" ஆர்க்டிக் பெருங்கடலின் நிகழ்ந்துள்ளது என்பதை உறுதி படுத்துகின்றன.
இந்த புகைப்படங்கள் 'டாப் சீக்ரெட் மேகசின்' (Top Secret Magazine) என்னும் இதழின் பக்கங்களில் இருந்து ஸ்கேன் செய்து பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு ஏவுகணையை உருவம் கொண்ட அந்த மர்ம பொருள் ஆனது கடலுக்குள் இருந்து வெளியே வருவதை உணர்த்துகிறது
இது பறக்கும் பொருளா..?? கடலுக்குள் நுழைகிறதா அல்லது கடலுக்குள் இருந்து வெளியேறுகிறதா என்பதை பற்றிய ஆய்வு இதன் ஒரிஜினல் புகைப்படங்களை கொண்டு அமெரிக்க ராணுவ ஆய்வகத்தில் ஆராயப்பட்டுக் கொண்டு வருகிறதாம்.
முக்கோண வடிவ யுஎப்ஒ ஒன்று பதிவானது அது கடலில் மூழ்குவதற்கு முன்னதாக பக்கவாட்டாக செல்வது போல பதிவாகியுள்ளது.
மற்றொரு யூஎப்ஓ ஆனது பாதிப்புக்கு உள்ளானது போலவும் அதில் இருந்து புகை வெளியேறுவது போலவும் பதிவாகியுள்ளது
இவை அனைத்துமே தாக்குதல் நீர்மூழ்கியின் அனலாக் கேமிராவின் (analog camera) மூலம் பதிவாக்கப்பட்டுள்ளது.
இது சார்ந்த அதிகாரப்பூர்வமான தகவலோ அல்லது பதிவாக்கபட்ட யூஏப்ஓ-க்களின் ஒரிஜினல் புகைப்படங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...
ஆல்பா தியானம் செய்வது எப்படி?
மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) இருப்பதை அறிவியல் பாடத்தில் அறிந்திருப்போம். அவை வலது பக்கத்து மூளை, இடது பக்கத்து மூளை.
இடது, பக்க மூளை ஐம்புலன்களோடு தொடர்புடையது. நாம் விழித்திருக்கும் போது அல்லது உணர்வோடிருக்கும் போது ஐம்புலன்வழி வருகிற, கிடைக்கிற செய்திகளை பகுத்து, தொகுத்து, ஆய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து அந்த அனுபவங்களை பகுக்கும் போதும், தொகுக்கும் போதும் உண்டான எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.
இந்த இடது பக்கத்து மூளை விழித்துக் கொண்டிருக்கும் போது மட்டும் செயல்படுகின்றது.
இதனை நினைவு மனம் Conscious Min, Rational Mind, Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Min என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.
இந்த இடது பக்கத்து மூளை சிந்திக்கின்ற வேலையைச் செய்கின்றது. கணக்குப் போடும் வேலையை, காரண காரியங்களை கண்டறிகின்ற வேலையைச் செய்கின்றது.
ஆனால், இந்த வலது பகத்து மூளையோ சிந்திக்கின்ற வேலையைச் செய்யாமல் இடது பக்கத்து மூளை தருகின்ற ஒட்டு மொத்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் அப்படியே வாங்கி அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், நிஜமான அனுபவங்களாக இருந்தாலும், கற்பனையான அனுபவங்களாக இருந்தாலும் அவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகிற நினைவு வங்கியாக (Memory Bank) கணினியின் நினைவுத்தகடு (Floppy Disk) போல செயல்படுகிறது.
நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது.
சுயமாக சிந்திபது என்கிற ஆற்றல் அற்றது போல தோன்றகின்றது. இதனை ஆழ்மனம், Sub Concious Mind, Subjective mind, Sleeping Mind, Deep Mind, Involuntary Mind, Female Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.
இந்த வலது பக்க ஆழ்மனம் இடது பக்க நினைவு மனப்பகுதியால் வழி நடத்தப்பட்டு மிகப்பெருஞ்சக்தியாக, எல்லாவற்றுக்கும் தீர்வுகளை பெற்றுத்தருகிற, அற்புதங்களை ஆற்றுகிற அரேபிய கதைகளில் வருகிற அலாவுதீனின் அற்புத விளக்கு போல செயல்படுகிறது.
இந்த Sub Concious mind என்று சொல்லப்படுகிற வலது பக்க மூளையே ஆழ்மனம். இதுவே கற்பனையின் நிலைக்களன்.
இதனைப் பயன்படுத்த அறிந்து கொள்கிற போது தான் புதியன படைக்கவும் உருவாக்கவும் நம்மால் இயலுகிறது.
சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை..
1)ஆல்பா 2)பீட்டா 3)தீட்டா 4)டெல்டா
என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலார்களும் அறிந்து கூறுகிறார்கள்.
ஆல்பா நிலையில் மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec),
பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும்,
தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும்,
டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.
பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State).
ஆல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கமும் அற்ற தூங்காமல் தூங்கும் தியான, மோன நிலை (A Hypnotic State).
டெல்டா என்பது சமாதி நிலை.
நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Conscious Mind) உறக்க நிலையிலும் இருக்கிறது.
உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனத்தை வலது பக்க மூளையை விழிப்படையச் செய்ய, நினைவு மனத்தின் (Concious Mind) செயல்பாடுகளை இயக்க நிலையை குறைக்க வேண்டும்.
நம் ஐம்புலன்களுக்கும் உள்ள உலக தொடர்புகளை துண்டித்தால் நினைவு மனத்தின் செயல் குறையும்.
கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்கமில்லாமல், தளர்வாக, வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ, இன்னும் சொல்லப் போனால் படுத்த நிலையிலோ (படுத்த நிலை உறக்கத்தை உடனே வரவழைத்து விடுவதால், உறக்கம் நினைவு மனத்தின் செயல்பாட்தை முழுவதுமாக தடை செய்து விடுவதால் இந்த நிலை பரிந்துரைக்கப் படுவதில்லை) ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும் போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது. ஆழ்மனம் விழிப்படையத் தொடங்குகிறது.
நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தால் எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும்.
ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும் போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை. எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி.
எல்லா தியான முறைகளையும் தொடங்குவதற்கு இந்த முறையைத்தான் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக அட்டாங் யோகத்தின் சமாதி நிலையை அடைய இதுவே வழி.
தியானம் என்ற சொல்லுக்கு ஏதாவது ஒன்றை எண்ணித்தியானிப்பது என்பது பொருள்.
அதாவது மனதில் சங்கல்பங்களை (முனைந்து உருவாக்கும் எண்ணத் தீர்மானங்கள் ) உருவாக்குவதும் ஒன்றையே தொடர்ந்து இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பதும் தியானம்.
ஆல்பா நிலையில் நினைவு மனத்தின் துணை கொண்டு எந்தப் பொருள் குறித்து, புதிய செய்திகள், உத்திகள் தேவையோ எந்தப் புதிய கண்டு பிடிப்புகளுக்கு விடை தேவையோ, சிக்கல்களுக்கு தீர்வு வேண்டுமோ அது குறித்து சிந்தித்தால் அந்த எண்ணங்கள் ஆழ்மனத்தில் (வலது பக்க மூளையில்) பதிந்து உடனேயோ அல்லது மற்ற சமயங்களிலோ நம்முடைய மனதில் புதிய எண்ணங்களும், கற்பனைகளும் விடைகளும், உத்திகளும் ஊற்றெடுக்கும்.
இந்த ஆல்பா நிலை தியானத்தின் போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.
மனித உடல் அழியக் கூடியது, ஆன்மா அழிவில்லாதது என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை.
எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audio & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது.
வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.
பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெறமுடியும் என்று பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள்.
எடிசன் போன்ற அறிவியல் கண்டு பிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.
ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம், நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம்.
இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.
பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாகக் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிற போது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும்.
அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.
இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள்.
இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும் பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.
கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கற ஒருமுறை.
நேரடி சிந்தனை (Straight Thinking) கணக்குப் போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை.
இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையென்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம்.
பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை...
கருத்தடை உண்மைகள் - 4...
TUBECTOMY Or TUBEL LIGATION
கருத்தடை ( Sterilization) முறையில் நிரந்தரமான தீர்வுகளில் இதுவும் ஒன்று.
Tubectomy அறுவைசிகிச்சையில் பெண்களின் கர்ப்பப்பையில் உள்ள Fallopian Tube இரண்டும் Clamp அல்லது Seal செய்யப்படும்..
இதன் மூலம் கருமுட்டை கர்ப்பப்பையின் ( Body Of The UTERUS ) உள்ளே வராமல் தடுக்கப்படுவதால் கருவுறுதல் நிகழாது....
இந்த Operation Laproscopic முறையிலும் செய்யப்படுகிறது.....
Side Effects...
Tubectomy Operation செய்த பின் வயிற்றின் உள்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படலாம்....நோய்த்தொற்று நிகழலாம்.
Operation முடிந்த பின் வயிற்று பகுதியில் அதிகப்படியான வழி ஏற்படும்....
மேலும் இது பாதுகாப்பான வழிமுறை அல்ல.....ஏனெனில் Ectopic Prgnancy நிகழ வாய்ப்பு உண்டு....
Fallopian Tube சரிவர Seal செய்ய படவில்லை என்றாலோ, இன்னும் சில காரணங்களினால் கர்ப்பப்பை குழாயிலேயே கருவுறுதல் நிகழும்...
இதில் ஆச்சரியமூட்டும் நன்மை யாதெனில் இது ஒரு Reversal Operation....
அதாவது ஒரு பெண்ணுக்கு Tubectomy செய்து இருந்தாலும் தேவையெனில் Labroscopic Operation மூலம் மீண்டும் Clamp எடுத்து பின் கருவுற்று குழந்தை பெற்றுக் கொள்ளலாம்....
தீ விபத்தில் தன் இரண்டு குழந்தையும் பறிகொடுத்த பெண் மீண்டும் கருவுற்று தாயானார் இந்த Reversal Operation மூலம்....
இதில் நன்மை இருந்தாலும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை....
காரணம் அதிக உடல் பருமன் Internal Bleeding Ectopic Pregnancy..
இதில் Ectopic மூலம் உயிரிழப்பும் ஏற்படலாம்... சிலருக்கு மட்டும்,அனைவருக்கும் நிகழ்வதில்லை..
எத்தனையோ மருத்துவ முறைகளில் அதிக பின்விளைவுகள் , தாங்க முடியாத வலிகள் Cancer போன்ற பாதிப்புகள் இருந்தும் பரிந்துரைக்கும் மருத்துவம், Reversal என்ற சாதகமான நிலை இருந்தும் கூட இப்படி முறை இருப்பதை கூட நோயாளிகளுக்கு ஏன் தெரியப்படுத்துவதில்லை என்ற கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது...
பின்குறிப்பு : இவ்வகை Operation அரிதிலும் அரிதாக நிகழ்கிறது என்று நம்புவோமாக..
பதிவுகள் தொடரும்...
Subscribe to:
Posts (Atom)