26/11/2018

தமிழினத்தின் தலைவர் மேதகு. வே. பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன பாமக நிறுவனர்...


கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்...


கீரை சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்தது தான்..

கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை- அரைக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம். இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

கீரைகளிலுள்ள கரோட்டின் சத்துப்பொருள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்க கீரைகளை நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கேரட்டின் சிதைந்து விடுகிறது. கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.

ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு...

பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம். பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு 50 கிராம். கீரை வகைகள் சிறு பிள்ளைகளுக்கு வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலான தாய்மார்கள் கீரை உணவை பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்கின்றனர். பாக்டிரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலமோ கீரைகள் மாசுபடுகிறது.

எனவே கீரைகளை நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் உணவில் சேர்க்கும் போது வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தலாம். நன்கு கழுவி சுத்தம் செய்து சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வராது. கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும். கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி செய்தால் அவற்றில் உள்ள கரோட்டீன் சத்து வீணாகி விடும். கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்...

தமிழீழம்... தலைவன் இல்லை...


தலைமைக்கான சிறந்த கருத்தியலை விதைத்த சிறந்த போராளி....

தலைவன் என்றால் ஒரு வட்டத்திற்குள் பெருமைப்பேசும் கூட்டமாக மாறிவிடுவாய்..

போராளி என்றால் அவர் செய்ததை, மீள் உருவாக்கம் செய்ய முயல்வாய்...

சீனர்களின் கடவுள் ஒரு தமிழன்...


வரலாற்றின் அதிரடி.. ஆனால், தமிழர்களின் இன்றைய நிலை..?

பிறப்பு : கிபி 475

தந்தை : கந்தவர்மன் என்ற பல்லவ மன்னன்..

தோன்றல் : பல்லவ மன்னன் கந்தவர்மனின் மூன்றாவது மகன் போதி தர்மன் ( ஆதாரம் டான்லின் பதிவுகள் ( Tanlin historical notes) மற்றும் டௌசுவன் வரலாற்றுப் பதிவுகள் ( Dauxuon historical notes).

பிறந்த ஊர் : காஞ்சிபுரம் தமிழ் பாரம்பரிய கல்வியான தற்காப்பு கலை, மற்றும் மருத்துவத்தை சிறுவயதிலே கற்றுதேர்ந்தார்.

பயணம் : 17ம் வயதில் சீன நாட்டுக்கு பயணம்.. புறப்பட்டார். 21ம் வயதில் சீனாவை அடைந்தார்.

வாழ்க்கை வரலாறு : சீனாவில் குங்ஃபூ கலையை சீனர்களுக்கு பயிற்றுவித்தார். மருத்துவ பாடங்களும் எடுத்தார்.

ஆதாரம் : சீனாவில் சாவ்லின் புத்த கோவிலில் உள்ள ( shaolin temple ) கல்வெட்டு.

வாழ்க்கை சாதனை : சீன மத குருமார்களில் கடைசி குருமார் ஆக ( 28ம் குருமார் ஆக ) போதி தர்மன் கருதப்படுகிறார். ( ஆதாரம் – சீன யங்க்சியா பாட்டு ).

வாழ்ந்த வருடங்கள் : 75 (கிபி 550 )
இதிலிருந்து போதி தர்மன் என்ற தமிழன் தான் உலகின் சிறந்த தற்காப்பு கலையான குங்க்ஃபூவை சீனர்களுக்கு சொல்லித் தந்தார் என்றும் சீனர்களால் இன்றுவரை தெய்வமாக போற்றப்படுகிறார் என்பதும் தெரிகிறது…

மனமும் கர்மாவும்...



உங்களுடைய ஆழ்மனம் எதை எவ்வாறு நம்பியிருக்கிறதோ அது தான் உங்கள் கர்மாவை தீர்மானிக்கிறது.

அதாவது உங்களுடைய In Believable System எதை பாவம் என நம்பியிருக்கிறதோ அது பாவமாகவும், எதை புண்ணியம் என நம்பியிருக்கிறதோ அதை புண்ணியமாகவும் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் சராசரி மனிதனால் அந்த In Believable Systemல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல.

இதை உணர்ந்த சித்தமார்கள் அதை எளிமையாக மாற்றி அமைத்து மனித நலனுக்காக சில இயற்கை மீறல்களையும் செய்ய தான் செய்தார்கள்.

இந்த பௌதீக உடல் அழிந்தாலும் உங்கள் ஆன்மா கர்மாவை சுமந்து சென்றே மறுபிறப்பு எடுக்கும்.

ஆக மனதின் ஊடே கர்மா செயல்படும் என்பது தெளிவாகிறது. அப்படியான மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி கர்மாவை கூட்டவோ குறைக்கவோ அல்லது முற்றிலுமாக அழிக்கவோ முடியும்.

குறிப்பு : முட்டாள்தனமாக இதில் உள்ள சூட்சமம் அறியாமல் யாரும் பாவம் செய்யலாம் என எண்ணி துன்ப படாதீர்கள்...

தற்சார்பின் அவசியம்...


கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரின் தேசப்பற்று...


விடுதலை வேளிவியில் தமிழகம் என்ற புத்தகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரையும் விடுதலைப்போராட்ட வீரராக ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் தெரியுமா?

1935மார்ச் 10-ம் நாள் குடி அரசு மூலம் மானங்கெட்டதனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியை கீழே தருகிறோம்..

காங்கிரஸை எதிர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் ஏகாதிபத்திய அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயாரென்பது ஈரோட்டுப் பாதையின் அரசியல் கொள்கை என்று ப.ஜீவானந்தம் தமது ’ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் கூறுகிறார்.

மேலும் 12-04-1936ல் திருச்சி தென்னூரில் வல்லத்தரசு தலைமையில் சுயமரியாதை சமதர்மக்கட்சி அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேறிய தீர்மானங்களில் மிக முக்கியமான தீர்மானம் என்ன தெரியுமா? இதோ..

சுயமரியாதை இயக்கம் ஏகாதிபத்ய ஆட்சி முறையையும் முதலாளித்துவம் பொருந்திய கட்சிகளையும் ஆதரித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. (அறிவு -1936 மே இதழ்).

ஈ.வே. ராமசாமி நாயக்கர் உயிருடன் இருந்த போது தான் இந்த தீர்மானம் போடப்பட்டது. ஆகவே ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்டவீரர் என்று சொல்வது கடைந்தெடுந்தப் பொய்யாகும்.

மேலும் ஒரு ஆதாரத்தைப் பார்ப்போம்.

கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்..

பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே அவர் இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.

இந்தியாவை விடுதலைக்கு விரோதமாகப் போகவும் தலைப்பட்டார். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கக் கூடாது என்பதிலே அவர் முன்னணியிலே நின்றார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமான போது திராவிடஸ் தான் பிரிவினையையும் அவர் ஆரம்பித்தார்.

பிராமணர்கள் தான் இந்திய தேசிய காங்கிரஸ்; பிராமணர்களுடைய ஆதிக்கம் தான் இந்தியாவில் இருக்கிறது என்பது போல் ஒரு கற்பனையைச் செய்து கொண்டு தென்னாட்டில் அவர்களை ஓழிப்பதற்காகவே வெள்ளைக்காரர்கள், இருக்க வேண்டுமென்ற ஆசையை அவர்கள் மக்கள் மனதில் வளர்க்கத் தொடங்கினார்கள்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வருவதற்கு முன்னால், இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருந்தார்கள்.

அதைப் பற்றி பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும் போது நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன். என்னய்யா யோக்கிதை இது, நீ பாகிஸ்தான் கொடுத்தது போல, திராவிடஸ் தான் கொடுத்துவிட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும் என்றேன். ஆனால் வெள்ளைக்காரனுடைய யோக்கியதைப் பாருங்கள். அதை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவரே பேசியிருக்கிறார். (நூல்: நான் பார்த்த அரசியல்).

ஆகவே ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகும்.

துக்ளக் ஆசிரியர் சோ கூறுகிறார்..

பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த இந்த சிந்தனை பிற்காலத்தில் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போதும் நீடித்தது. இந்தியாவின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் விட்டுவிட்டுச் செல்லுங்கள். ஆனால் சென்னை மாகாணத்தை மட்டும் விட்டுவிட்டுப் போகாதீர்கள் என்று ஆங்கிலேயர்களிடம் கோரிக்கைவிடும் அளவுக்குச் சென்றது (குமுதம்: 03-02-2000).

உடனே இதற்கு சின்னக்குத்தூசி பதில் கூறுகிறார்..

வெள்ளைக்காரனை விரட்ட சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்ட போது, பெரியார் சுதந்திரம் வேண்டாம் என்று தீர்மானம் போட்டார். நாட்டின் மற்ற பகுதிகளுக்கெல்லாம் நீங்கள் சுதந்திரம் கொடுத்தாலும், எங்கள் பகதிக்குத் தர வேண்டாம் என்று பெரியார் கூறியதாக எழுதியிருக்கிறார் சோ.

சோ- எது எழுதினாலும் அதற்கான ஆதாரம் எதையும் காட்டும் வழக்கம் அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. அதனால் தான் பெரியார் தீர்மானம் போட்டார் என்கிறாரே – எந்த வருடம், எந்த மாநாட்டில், எப்போது அப்படிச் சொன்னார் பெரியார் என்று அவர் சொல்லவில்லை. சொன்னால் அவரது தகவல் எவ்வளவு அபத்தம் என்பது அம்பலமாகிவிடும். (குமுதம்-03-02-2000).

இந்த இருவரில் யார் சொல்வது உண்மையாக இருக்கும்?

துக்ளக் ஆசிரியர் சோ சொல்வது தான் உண்மை.

ஆதாரம் இதோ..

27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது. நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு : 1948 (நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு).

இந்த ஆதாரம் சின்னக்குத்தூசிக்கு போதும் அல்லவா, மேலும் ஓர் ஆதாரம்..

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமி நாயக்கரே ஒத்துக் கொள்கிறார்.

ஈ.வே. ராமசாமிநாயக்கர் கூறுகிறார்..

நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும் இந்தப் பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல. (தமிழர் தலைவர் பக். 14).

தான் சுதந்திரத்திற்கு துரோகம் செய்ததை ஈ.வே. ராமசாமிநாயக்கரே ஒத்துக் கொள்கிற போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்யாகுமல்லவா.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் எப்போதாவது சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு போராடியிருக்கிறாரா?

இல்லை..

சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறாரா?

இல்லை..

சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெள்ளையர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை கைது செய்து இருக்கிறார்களா?

இல்லை..

இல்லை. இல்லை. இல்லவே இல்லை..

பின் எப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் இந்த திருட்டு திராவிடர்கள்...

திமுக வும் டூபாக்கூர் வாக்குறுதிகளும்...


தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை துளி...


நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்..

அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம்..

இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்...

இந்த யுத்தத்தில் எமது போராளிகளும் பொதுமக்களும் செய்துள்ள அற்புதமான தியாகங்கள், உலக வரலாற்றில் ஓர் ஒப்பற்ற வீரகாவியமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது...

நம்ம பண்ணுன காரியத்துக்கு இதுவும் சொல்லுவானுக.. இதுக்கு மேலையும் சொல்லுவானுக...


வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவக் குணங்கள்...


முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.

வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

வேப்பம் பட்டையுடன் நீர்,எண்ணெய் மற்றும் பிற மருந்துப்பொருட்களைச் சேர்த்து காய்ச்சி தைலங்களாக தோல் புண்,சொறி, சிரங்குகளின் மீது பூசிவந்தால் அவை குணம் பெறும்...

இன்னும் இருக்கிறது, காத்திருங்கள் சுயநல மக்களே...


இந்த சுயநலம் உங்களை ஒருநாள் சூழ்ந்து அழிக்கும்...

நாம் சந்திக்க போகும் மிகப்பெரிய பொருளாதார ரீதியான பிரச்சனை..

விவசாயத்தின் ஆணிவேர் ஆடிப்போய் இருக்கிறது..

வேறு மாநில சோறு வருமென எண்ணம் இருக்கிறதா..?

அதற்கு அவன் சொல்றது தான் விலையாக இருக்குமென்று,

யோசிக்கிற அறிவு கூட இல்லையா..?

அரசு நிவாரணம் என்ற செய்தி ஊடகங்களில் மட்டுமே வரும்...


போய் சேர்ந்ததா..? என்ற கேள்வி யாரும் கேட்க மாட்டார்கள் ..

ஊடக மாயையில் மூழ்கிய மக்களுக்கு கேள்வி கேட்பது என்பது தெரியாத ஒன்று...

தமிழர் கட்டிடக்கலை...


தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும்.

தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிசுத்(ஸ்)துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள்.

இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டிடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.

ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நாட்டில் கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டிடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின் உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டிடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது.

ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டிட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டிடக்கலை எனப்படுகின்ற கட்டிடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய எல்லாவகைக் கட்டிடக் கலைகளினதும் கூட்டுமொத்தம் தமிழர் கட்டிடக்கலை எனப்படலாம்.

தமிழர் கட்டிடக்கலையில் பொதுவாக மூன்று உறுப்புகள் காணப்படுகின்றன . அவை தாங்குதளம் , சுவர் மற்றும் விமானம் (அல்லது கோபுரம்) ஆகும்...

பாஜக வின் டிசம்பர் கலரவம் திட்டங்கள்...


சிறுநீரக பாதுகாப்பு...


சிறுநீரக பாதிப்பு 90 % இல்லாத மாநிலம் எது?

அதன் காரணம் என்ன?

இந்த வெண்பூசணி மோர்குழம்புதான் அது.

செய்முறை...

கும்பளங்காய் என்று மலையாலத்திலும், கூஷ்பாண்டம் என்று சம்ஸ்கிரதித்திலும் அழகாக அழைக்கப்படும் வெண்பூசணி காயை முதலில் கொஞ்சம் தண்ணீர்விட்டு வேகவைக்கவும்;

பிறகு தேங்காயுடன் பச்சைமிளகாய், சின்னஜீரகம் சேர்த்து அரைக்கவும். பிறகு வழக்கம்போல் எண்ணெய் கடுகு கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்துத் தாளித்து மல்லி இலை தூவி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகப்பை நன்கு வலுவடையும். உடலின் சூடு தணியும்.

கேரளத்தில் இந்த பூசணிக்காய் மோர் குழம்பு உண்பதால் அந்த மாநிலத்து மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு 90% சதவிகிதம் இல்லை...

காலத்தில் அழியாத தமிழர் கலைவண்ணம்...


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம். இந்தப் பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனைத் திறமையா? இல்லை தெருகூத்தாடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை.

அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகம் பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் உண்மையானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்.

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டுசெல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால்குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?

மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும். கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித் தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.

தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம். சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்கவேண்டும். நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும், திறமையும் அற்பனிப்பையும் சொல்லவேண்டும். சிற்பங்களை நாம் பாதுக்கவேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது , குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண்முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டிகேட்க வேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்து சொல்ல வெண்டும் ..

27 லாரி கழிவுகள் - மலையாளிகள் அனுப்பிய நிவாரணம்...


அதில் 4 லாரிகள் ஆபத்தான மருத்துவக் கழிவுகள்..

மீதி 23 வெள்ள வடிந்த பகுதிகளை சுத்தப்படுத்தி எடுத்த குப்பைகள்.

நாம் இளித்தவாயர்கள் என்பது 1008 வது முறையாக நிரூபணம் ஆகியுள்ளது.

தினகரன் வெளியிட்ட செய்தி...

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகளுக்கு அபராதம் விதித்து சுகாதாரதுறை நடவடிக்கை.

தென்காசி: கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.

மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த லாரிகள் தென்காசி அருகே உள்ள புளியரையில் தடுத்து நிறுத்தப்பட்டன.

லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல மாவட்டங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானது.

அப்போது அம்மாநிலத்தில் பயன்படுத்த முடியாத பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டு தமிழகத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது கடந்த 10 ஆண்டுகளாகவே இதுபோன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நெல்லை வழியாக கேரளாவில் கழிவுகளை ஏற்றி வந்த 23 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, அவற்றை பறிமுதல் செய்து சுகாதாரதுறையினரிடம் ஒப்படைத்தனர்.

லாரிகளில் இருந்த கழிவுகள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த 23 லாரிகளுக்கு தலா ஒரு லட்சமும், மருத்துவ கழிவுகளை ஏற்றிவந்த 4 லாரிகளுக்கு தலா 3 லட்சமும் அபராதம் விதித்தனர்...

மனிதனும் கடவுள் ஆகலாம்...


ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிக அடிகளார் அவர்கள் அருளிய உபதேசம்..

மனிதன் கடவுளாக வேண்டுமென்றால் சரியை, கிரியை, யோக, ஞானம் ஆகிய நான்கும் அவன் அறிந்திருக்க வேண்டும். இதை அறியாமல் ஆன்ம லாபம் பெற முடியாது. கிரியை, சரியை, யோக, ஞானம் என்று முன்பு இருந்திருக்கலாம். காலப்போக்கில் சரியை, கிரியை, யோக, ஞானம் என்று மாறிவிட்டது.

சரியை என்பது பிற உயிர்களுக்கு நன்மை செய்தலும், நன்நெறியை கடைபிடித்து நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படியாகும்.

கிரியை என்பது கடவுள் ஒருவன் உண்டு என்று அறிவதும், அதற்கு துணையாக இருப்பது உருவ வழிபாடாகும்.

ஆரம்பகாலத்தில் ஒரு உருவத்தை சுட்டிக்காட்டினால்தான் அதை பூஜித்து கடவுள் அருள் பெறுவார். கடவுளை எந்த உருவத்தில் வணங்கினாலும் கடவுள் மனமிரங்கி அருள் செய்வார்.

"எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம்
அன்றேயிரங்கி யீந்தருளும் பதம்.
என்போன்ற வாக்குமிகு பொன்போன்ற
கருணைதந்து இதயத்திருக்கும் பதம்."

-மகான் இராமலிங்க சுவாமிகள் அருளிய
 - அருட்பா - திருவடிப்புகழ்ச்சி.

ஆகவே கடவுள் அருள்பெற வழிபாடு செய்வதே கிரியை மார்க்கமாகும்.

யோகம் என்பது தன் உடல் கூற்றை அறிந்து அதற்குள் இயங்கும் ஆன்மாவை அறிந்து அந்த ஆன்மா இயக்கத்திற்கு மூச்சுக்காற்றுதான் காரணம் என்று அறிந்து அந்த மூச்சுக்காற்றும் நாள் ஒன்றுக்கு 21,600 சுவாசமாக (போகின்ற காற்று மற்றும் வருகின்ற காற்று) ஆக 21,600 முறை இயங்கினால்தான் ஆன்மா இயக்கமும் மனித வாழ்க்கையும் நடைபெறும்.

இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றேயாகும். ஆகவே, மூச்சுக்காற்றை அறிந்து அந்த காற்றின் இயக்கமாகிய இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகும். இடகலை என்பது இடது மூக்கில் வருகின்ற காற்றும், பிங்கலை என்பது வலது மூக்கில் வருகின்ற காற்றும், சுழிமுனை என்பது புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்றும் ஆகும்.

இதை நன்கு அறிந்து ரேசக, பூரக, கும்பகம் ஆகிய தன்மையை உணர்ந்து காற்றை இழுத்தல், ஸ்தம்பித்தல், நிறுத்தல் ஆகிய ரகசியத்தை(காற்றை நிறுத்துதல் என்பது புருவ மத்தியாகிய சுழிமுனையில் காற்றை ஒடுக்குதல்) அறிவதே யோக மார்க்கமாகும். இது அனைத்தும் ஆசான் அகத்தீசன் அருள் இல்லாமல் யோகத்தை அறிந்துகொள்ள முடியாது.

ஞானம் என்பது இயற்கையின் இயல்பறிந்து அது உடம்பினுள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை அறிந்து, அந்த இயற்கை தூலதேகமாகிய புற உடம்பாகவும், சூட்சும தேகமாகிய அகஉடம்பாகவும் இருக்கின்ற இந்த இயல்பை அறிந்து அதே இயற்கை மும்மலமாகிய காமதேகமாகவும், மலமற்ற ஞானதேகமாகவும் அமைந்துள்ளது.

இயற்கையின் இயல்பறிந்து அதனுடைய இயல்பாகிய (மாசு அல்லது களிம்பு) களிம்பு அற்றால் சதகோடி (100 கோடி) சூரியப்பிரகாசமான ஒளி உள்ளே தோற்றும். இதை அறிவதே ஞானமாகும். அந்த ஜோதியை காணவேண்டும் என்றால் ஆசான் அகத்தீசன் அருள்செய்ய வேண்டும்.

"களிம்பறுத் தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான் அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே"
-திருமந்திரம் உபதேசம் - கவி 114.

ஆகவே, சரியை, கிரியை, யோக, ஞானமாகிய நான்கும் ஆசான் அருள்கொண்டுதான் அறிய முடியும்.

மேற்கண்ட சரியை, கிரியை, யோக ஞானத்தின் சாரம்

சரியை என்பது நெறியுடன் வாழ்வதாகும். கடவுளைப் புறத்தில் உருவாக நினைத்து வழிபாடுவது கிரியை ஆகும்.

யோகம் என்பது மூச்சுக்காற்றைப்பற்றி அறிந்து, மூச்சுக்காற்றை ஞானபணடிதன் ஆசியோடு புருவ மத்தியில் ஒடுக்குவதே யோகமாகும்.

ஞானம் என்பது எல்லாம் வல்ல பரம்பொருள் உள்ளும் புறமுமாக இருப்பதை அறிந்து உள்ளெழும் ஜோதியை கண்டு தரிசிப்பதே ஞானமாகும்...

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்...


சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும்.

உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்..

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்..

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்..

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய்..

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள்..

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம்..

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய்..

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து..

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய்..

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை..

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை..

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய்..

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன..

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன.

இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும்.

அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்..

தமிழக துரோகி திந்தி ஊடகம்...


தமிழர் இனத்த அழிச்ச ராசபக்சேவை பேட்டி எடுப்பது...

மராத்திய கூத்தாடிக்கு(ரசினி) காவடி தூக்குவது...

வட நாட்டான் மத அரசியலை தமிழ்நாட்டில் புகுத்துவது...

என தந்தி தொலைக்காட்சி முழு நேர தமிழர் விரோத ஊடகமாக செயல்பட்டுக் கொண்டிருக்க காரணம் அதன் தலைமை செய்தி தொகுப்பாளர் பாண்டே தமிழர் அல்லாதவர் என்பதே...

தமிழ்ச் சித்தர்கள் கண்டு பிடித்த ஆமை அதிசயம்...


ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து - திருக்குறள் 126..

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்..

ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார்.

இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று கூறி விடலாம்.

ஆனால் திருமந்திரம் இதற்கு மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல் (Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.

இதையே திருமூலரும் கூறுகிறார்..

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே
-திருமந்திரம் 2264, 2304..

மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் - ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்..

வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும்..

ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும்..

அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும்..

திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு...

சீனா - பாகிஸ்தான் நகரம்...


தமிழினத் தலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களை பற்றி தெரியாதவன் தமிழனே இல்லை....


என் தலைவனின் தனி பெருமையை , தனி திறமையை என் ஈழ தமிழகமே சொல்லும் என் தமிழகழும் சொல்லும்....

தன்னை பெற்ற தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு தான் குடிப் போகும் புது இல்லத்திற்கு அன்னையர் இல்லம் என்று பெயர் வைக்கும் மூடர்கள் வாழும், கோமாளிகள் வாழும் இந்த தமிழ் நாட்டில் பிறந்ததற்காக பெருமை கொள்ளவில்லை...

நான் தமிழ் பேசுகிறேன் நான் தமிழ் நாட்டில் வாழ்கிறேன் அதனால் பெருமைப்பட்டு கொள்ளவில்லை....

மாறாக என் தலைவன் ஒரு தமிழன் அந்த தமிழன் ஒரு ஈழ தமிழன் திரு.பிரபாகரன் பிறந்த இந்த தமிழ் வம்சத்தில் தான் நானும் பிறந்திருக்கிறேன் என்பதால் தான் நெஞ்சு தட்டி தோள் தூக்கி பெருமை கொள்கிறேன்....

காவிரி படுகையை காப்பாற்றுங்கள்...


தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் பற்றி...


தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் (1984) தங்கியிருந்த போது பெசன்ட் நகரில் ஒரு வீட்டில் முதன் முதலாக நேர்காணல் நடத்த காத்திருந்தார் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்....

சூப்பர்மேன் வருவாரென எதிர்பார்த்திருந்த அனிதா சற்று உயரம் குறைவாக வந்தமர்ந்த தலைவரைப் பார்த்து இயக்கத்தைச் சேர்ந்தவர் என நினைத்த அனிதா, ஜன்னலுக்ரு வெளியே தலைவரைத் தேடி தன் பார்வையை ஓட்டினார்.

புரிந்து கொண்ட தலைவர்., சற்று மௌனத்திற்கு பிறகு 'நான்தான் பிரபாகரன்' என்றவரின் மென்மையான குரலைக் கேட்டதும் அனிதா வியந்தாராம்.

அவரது நேர்காணலில்..

எதிர்காலத்தையும் எதிரிகளையும் நிகழ்வுகளையும் முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலும், அவருடைய ஒரே இலக்கு தமிழீழத்தை தவிர வேறில்லை என்பதும், அவர் எவ்வளவு கூர்மையாக உன்னிப்பாக நிகழ்வுகளை விடயங்களை உற்று நோக்குகிறார் என்பதும் புரிந்தது..

மேலும் தலைவர் சொன்ன விடயம், (இந்த விடயத்தை அனிதா பிரதாப் வெளியிடவில்லையாம்) என்றாவது ஒருநாள் நாங்கள் இந்தியாவுடன் போரிடும் நிலை ஏற்படலாம்..

(அதாவது இந்திய அமைதிப்படையுடன் பின்னாளில் ஏற்படப்போகும் போரினை முன்கூட்டியே கணித்திருக்கிறார்).

இதைக் கேட்ட அனிதா அதிர்ச்சியடைந்து
இந்தியா உங்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சோறூட்டும் கைகளையே கடிப்பீர்களா? என வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த தலைவர், தமிழீழம் அமைவதை இலங்கையை விட இந்தியா விரும்பாது. ஏனென்றால் இந்தியாவில் ஐந்து கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றாராம்.

- பிரபாகரன் என தலைப்பிடப்பட்ட நூலிலிருந்து....

வேலூர் சிறையில் உள்ள ராஜீவ் காந்தி கொலை சந்தேக கைதி ரவிச்சந்திரன், சிறையில் வேலை செய்து சம்பாதித்த ரூ. 5000-ஐ கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்...


உலகத் தமிழர்களின் புரட்சித் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.. 2006 ல் நடந்த உண்மை பதிவேடு இது....


2000 ம் ஆண்டு ஆனையிறவு கூட்டு படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளில் வீழ்ந்தபின் இலங்கை தீவில் இரண்டு இராணுவக் கட்டமைப்பு உண்டு என உலகமே ஒத்துக் கொண்ட காலப்பகுதி ..

ஒன்று இலங்கை இராணுவம் , மற்றையது தமிழீழ இராணுவம்... அதுவும் இனிமேலும் தொடர்ந்து போர் நடந்தால் .. அது இலங்கை இராணுவத்துக்கு தான் பேரிழப்பு என்ற ஒரு நிலைமை ... இப்படி இருக்கும் போது தான் இலங்கை அரசு அரசியல் பேச்சுவார்த்தைக்கு அடிபணிந்தது....

அதை தொடர்ந்து எமது தேசியத்தை காணுவதற்கு என்றும் , அரசியல் நல்நோக்கம் என்றும் பல குள்ளநரி கூட்டங்கள் வன்னி நிலப்பகுதிக்குள் படை எடுத்த காலமது .... எரிக் சோல்கைம் என்றும், யஹூசி அஹாசி என்றும் ,ஏன் இன்னும் எத்தனை எத்தனையோ உலக அரசியல் தலைவர்களும் , இப்படி பெரிய பெரிய வித்துவானுகள் எல்லோரும் கிளிநொச்சி வந்து எம் தலைமையோடு கை லாகு கொடுத்த காலமது....

கலகம் தீர்த்து வைப்பது நிச்சயம் என்று நோர்வே திடமாக நின்ற காலமதுவும் கூட....

இந்த உலக நாடுகளை எதிர்த்து இனிமேல் இலங்கை இராணுவம் போர் செய்ய முடியாது என்றொரு சூழ்நிலை.. மாவிலாறு என்று ஒரு ஊர் இருப்பது யாருக்கும் தெரியாததும் கூட .. வழமைபோல ஒரு பெரிய உலக அரசியல் புள்ளி ஒருவர் எமது தேசிய தலைவரை காணுவதற்கு எமது அரசியல் தலைநகர் கிளிநொச்சி வருகிறார் ..

எமது தேசிய தலைவரையும் சந்திக்கிறார் , அரசியல் பேச்சுகளும் சில பேசுகிறார் மீண்டும் வந்த வழியே போய் விடுகிறார்.... எம் தேசிய தலைவருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த தளபதிகள், போராளிகள் அனைவரினதும் முகத்தில் ஒரு சந்தோசம் எதற்கு தெரியுமா .. அதை அவர்களே தலைவரிடம் சொல்கிறார்கள்..

"அண்ணே எம்மை யார் யாரோ பெரிய ஆட்கள் எல்லோரும் வந்து பார்கிறார்கள் இத்தோடு நாம் பட்ட துன்பங்களுக்கு விடிவு கிடைத்து விடும், எம் மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்கும் காலம் வந்துவிட்டது தானே " என்று கேள்வியாகவும் கேட்டு இருக்கிறார்கள்...

எம் தலைவர் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் பதில் அளித்தார்.. எப்படி தெரியுமா..?

இல்லை அப்படி மட்டும் நினைக்காதீங்கோ.. இனிமேல் தான் எமது இயக்கமும், எமது மக்களும் இதுவரை காலமும் படாத பின்னடைவையும், இழப்புகளையும் சந்திக்க போகிறோம் தயாராக இருங்கள் என்று கூறி இருக்கிறார்..

இதை கேட்ட தளபதிகளுக்கும், போராளிகளுக்கும் மிகவும் குழப்பமாக எம் தலைவரின் முகத்தை பார்த்து இருக்கிறார்கள்.. பதிலுக்கு எமது தலைவர் மெல்லியதாக சிரித்து விட்டு அங்கிருந்து போய் விட்டார்..

அன்றைய எமது தலைவரின் தீர்கதரிசனத்துக்கு 2009 ல் பதில் கிடைத்தது அனைவருக்கும் ...

பின்னடவை கணிக்க தெரிந்த அவருக்கு அதை எப்படி....? சீர் செய்ய வேண்டும் என்பது தெரியமலா போய் இருக்கும்... அதைவிட இன்னும் சில விடயங்கள் அவர் கூறி இருந்தார் என்பதும் உண்மை....

ஆனால் அதை இங்கு எழுத்து வரிகளால் எழுதி எதிரிக்கு ஏன் எங்கள் தகவல்களை கொடுப்பான் என்று நினைக்கிறோம்....

நாம் முன்பு கூறியது போல இந்த உலகமே எதிர்பாராத திருப்பு முனையோடு எம் தலைவர் பிரகாசிக்கும் போது அது என்னவென்று எல்லோருமே புரிந்து கொள்வார்கள்..

ஏன் என்றால் எந்த இனமுமே பெறமுடியாத ஒரு வீரமிகு , ஆற்றல்மிகு தீர்கதரிசனமிகு, இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தலைவரை நாம் பெற்றுள்ளோம்...

அவரின் காலத்தில் நாம் ஈழம் காண்பது உறுதி.. அதனோடு தனி தமிழகமும் பிறப்பதும் உறுதி...

அதுவரை எமது தலைமை எம்மிடம் தந்த பாரிய பொறுப்புகளை நாம் ஒவ்வொருவரும் செவ்வனே, சீராக செய்து முடிப்போமாக ... 

தமிழின துரோகிகளுக்கு செருப்படி...


தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரனின் சிந்தனையிலிருந்து...


விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை.

இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு.

ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக் கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்..

எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள்..

கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்..

தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல..

அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்று தான் சொல்வேன்..

இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்து வரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்...

பாமக தலைமையில் உருவாகும் 3வது அணி...


தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை...


நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்.
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க.

எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்.
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை.

புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்.

எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்...
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு.

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது.
எமது
ஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது.
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்.

நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்.
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது.

நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்.
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...

எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க..

நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன..
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...

உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

1981-ஆம் ஆண்டில் தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை...

டெல்டாவிற்காக ஆஸ்திரேலியா தமிழர்கள்...


தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை துளி...


சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்..

தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும்.பயந்து பயந்து பதற்றத்துடன் வாழ வேண்டும்..

படிப்படியாக அழிந்து போக வேண்டும்..

ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை...

கரூர் மாவட்டம் குளித்தலை மணத்தட்டையில் இயங்கும் சட்ட விரோத மணல் குவாரி மற்றும் இராஜந்திரம் அனுமதியற்ற மணல் கிடங்கை உடனடியாக மூடக்ககோரி 29-11-2018 வியாழக்கிழமை அன்று குளித்தலையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது...


காவேரியைக் காக்க அனைவரும் ஒன்றுபடுவோம்..

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் குளித்தலை....

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு. வே. பிரபாகரன் சிந்தனை துளி...


எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது..

நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்...