அதில் 4 லாரிகள் ஆபத்தான மருத்துவக் கழிவுகள்..
மீதி 23 வெள்ள வடிந்த பகுதிகளை சுத்தப்படுத்தி எடுத்த குப்பைகள்.
நாம் இளித்தவாயர்கள் என்பது 1008 வது முறையாக நிரூபணம் ஆகியுள்ளது.
தினகரன் வெளியிட்ட செய்தி...
கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகளுக்கு அபராதம் விதித்து சுகாதாரதுறை நடவடிக்கை.
தென்காசி: கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.
மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த லாரிகள் தென்காசி அருகே உள்ள புளியரையில் தடுத்து நிறுத்தப்பட்டன.
லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல மாவட்டங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானது.
அப்போது அம்மாநிலத்தில் பயன்படுத்த முடியாத பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சேகரிக்கப்பட்டு தமிழகத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது கடந்த 10 ஆண்டுகளாகவே இதுபோன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்லை வழியாக கேரளாவில் கழிவுகளை ஏற்றி வந்த 23 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, அவற்றை பறிமுதல் செய்து சுகாதாரதுறையினரிடம் ஒப்படைத்தனர்.
லாரிகளில் இருந்த கழிவுகள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த 23 லாரிகளுக்கு தலா ஒரு லட்சமும், மருத்துவ கழிவுகளை ஏற்றிவந்த 4 லாரிகளுக்கு தலா 3 லட்சமும் அபராதம் விதித்தனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.