23/09/2017

இலுமினாட்டி களின்.. இது வேதாளம் சொல்லும் கதை என்ற படம்...


இலுமினாட்டி என்றால் அவர்கள் வெளிநாட்டில் தான் இருக்க வேண்டுமா..  ஏன் இங்க இருக்க கூடாதா என்று Dialogue வச்சு..

1500 வருடத்திற்கு முன்பு இருந்த தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் Secret society என்று கதை களம் வச்சு வந்திருக்கிறது ஒரு படம்.

அது முழுக்க முழுக்க காவல் கருப்புகளை கட்டி தான் அந்த Society உலகத்தை ஆளுகிறது என்று காட்டி இருக்கிறார்கள்..

வீடியோ பார்க்க :

https://m.youtube.com/watch?v=B1yUgwx4OwI

நடிகை சில்க் சுமிதா (எ) விஜயலட்சுமி க்கு 20ம் ஆண்டு நினைவஞ்சலி...


நடிக்க வராவிட்டால் நக்சல் ஆகியிருப்பேன் என தைரியமாக கூறிய  வீரமங்கை...

முன்னோர் திருவிழா (தீபாவளி)...


தீபாவளி என்பது நரகாசூரன் என்னும் காமரூப (அசாம்) கொடுங்கோலன் இறந்ததற்காகவோ, இராமன் மீண்டும் அயோத்தி வந்ததற்காகவோ ( திரும்பி வந்தது சித்திரை) தமிழர்களால் கொண்டாடப்படுவதில்லை..

இது முன்னோர் வழிப்பாட்டு திருவிழா..

ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயணம் எனப்படும் (தென்முகப்பயணம்).

இந்த காலங்களில், சூரியன் தனது சக்தியை இழந்துக்கொண்டே வரும்.

ஆடியில் சூரியன் தன் ஒளியை இழக்கத் தொடங்கி, ஐப்பசியில் முழுவதுமாக நீச்சம் பெற்றுவிடும்.

மீண்டும் சூரியன் தன் ஒளியை உத்திராயணம் (வடமுகப்பயணம்) தொடங்கும் தையில் பெறத் தொடங்கி, சித்திரையில் உச்சம் அடையும்.

அதனால் தான் சூரியன் உச்சம் பெறும் சித்திரையில் தெய்வங்களுக்கு விழா எடுப்பர்.

அதே வேளையில், சூரியன் நீச்சம் பெறும் ஐப்பசியில் , அதிலும், நிலவு ஒளியிழந்திருக்கும் அமாவாசையில் முன்னோர்களுக்கு விழா எடுத்தனர் தமிழர்.

இதேக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் முன்னோர்களுக்கு விழா உண்டு (ஆவிகள் தினம், கல்லறை தினம் போன்றவை).

நமது பண்பாட்டில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.

உண்மையில், புரட்டாசி அமாவாசை என்பது தவறு. ஐப்பசி அமாவாசை என்பதே சரி.

வடநாட்டினருக்கு ஐப்பசி இருக்கும்போது, நமக்கு இங்கு புரட்டாசி இருக்கும்.

அதனால், வடநாட்டினரின் ஐப்பசியை ஒத்து, புரட்டாசியிலேயே மாலயம் கொண்டாப்படுகிறது.

ஆடி அமாவாசை = முன்னோர்கள் நம்மை காண முன்னோர் உலகத்தில் இருந்து புறப்படுதல்.

ஐப்பசி அமாவாசை = முன்னோர்களுக்கு விழா எடுத்தல், படையல் போடுதல்.

கார்த்திகை முழுநிலவு = மீண்டும் ஒளிவிளக்கில் முன்னோர் உலகத்திற்கு புறப்படுதல்.

தை அமாவாசை = மீண்டும் முன்னோர் உலகம் / இறைவனிடம் சென்று சேருதல்...

கமல்ஹாசன் குறித்து அன்றைக்கே எச்சரித்த ஐயா மணிவண்ணன்...


கோல்மால் செய்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தப்பிய ஓ பன்னீர்செல்வம்: அம்பலப்படுத்தியது இந்தியா டுடே செய்தி சேனல...


வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பன்னீர்செல்வம் மீது 2006'ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில், 2011'ம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற ஓபிஎஸ், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அந்த வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட வைத்துள்ளார்.

இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்கின்றனர் சட்ட வல்லுனர்கள். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டால், முழுவதுமாக  மறுவிசாரணை நடத்த முடியாது. வேண்டுமானால், கூடுதலாக விசாரணைக்கு உத்தரவிடலாம்.

ஆனால் ஓபிஎஸ் வழக்கில், மறு விசாரணை நடத்தப்பட்டது மட்டுமல்லாமல், குற்றப்பத்திரிகையில்  அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளார்.

இது முழுக்க முழுக்க சட்ட விரோதம் என்று கருத்து தெரிவித்துள்ளனர் சட்ட நிபுணர்கள்.

ஆங்கில சேனல் அம்பலப்படுத்திய இந்த செய்தியை வழக்கம் போல் தமிழ் ஊடகங்கள் மறைத்து விட்டன...

பசி அதிகரிக்க இஞ்சி...


இஞ்சி, பசியைத் தூண்டும். உணவில் அவ்வப்போது இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, ஞாபகசக்தியை வளர்க்கும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும்.

இஞ்சியையும், வெல்லத்தையும் சம பாகமாக சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.

அதுமட்டு மல்லாமல், உள்ளங்கையில், உள்ளங்காலில் தோல் உரிவதும் நின்று விடும்...

சாதத்துடன் பிசைந்து சாப்பிடக்கூடிய பொடி வகைகளைப் பார்க்கலாம்...


முதலில் பருப்புப் பொடி:

இது ஆந்திராவில் தினப்படி உணவில் இருக்கும். இது பலவிதங்களில் செய்யப் படுகிறது.

பருப்புப்பொடி 1:

இந்த முறை செலவே இல்லாத ஒன்று. ஆயில் restriction உள்ளவர்களுக்கு ஏற்றது. ஒரு கப் துவரம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சூடாக இருக்கும் இந்தப் பருப்பில் ஒரு ஸ்பூன் பெருங்காயப் பொடி, தேவையான உப்பு, (நான் உப்புக்கு பதில் இந்துப்பு என்று நாட்டு மருந்து கடையில் கிடைப்பதை சேர்ப்பேன்) ரெடிமேட் காரப்பொடி தேவையானது சேர்த்து நைசாக பொடிக்க வேண்டும். அவ்வளவுதான். கட்டை மிளகாய்ப் பொடி வேண்டாம் என்றால் தேவையான வர மிளகாயை சிவக்க வறுத்து சேர்க்கலாம்.

சாப்பிடும் விதம் : சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். நெய்யும் நல்லெண்ணையும் சமமாக சேர்ப்பது இன்னும் சுவையானது.

பருப்புப்பொடி 2:

துவரம்பருப்பு ரெண்டு பங்கு என்றால் கடலைப்பருப்பு ஒரு பங்கு, பாசிப்பருப்பு அரை பங்கு வேண்டும். (நான் பங்கு என்றது அவரவர் தேவைக்கு ஏற்ற அளவில் எடுக்கவே).

மூன்று பருப்புகளையும் வாணலியில் தனித்தனியாக பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும். கட்டிப் பெருங்காயம் எடுத்து அதையும் நன்றாகப் பொரியும்படி வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே தேவையான மிளகும் கல்லுப்பும் சேர்த்து கொஞ்ச நேரம் வறுத்துவிட்டு எல்லாவற்றையும் பொடிக்கவும். இதிலும் எண்ணெய் இல்லை. சாப்பிடும் விதம் மேலே சொன்ன மாதிரிதான்.

பருப்புப்பொடி 3:

கடலைப்பருப்பு மட்டும் அரை கப் எடுத்து மேலே சொன்ன படி எண்ணெய் இல்லாமலோ அல்லது ஒரேயொரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டோ வாசனை வரும் வரை சிவக்க வறுத்து, தேவையான மிளகாய் பெருங்காயம் வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே கால் கப் பொட்டுக்கடலையை பிரட்டி உப்புடன் அரைக்கலாம். இதில் பொட்டுக்கடலை சரி சமமாக சேர்ப்பதும் உண்டு. எவ்வளவு நாள் ஆனாலும் கெடாது, (எங்கள் வீட்டில் இதை ஏதோ அமிர்தம் ரேஞ்சுக்கு பார்க்கிறார்கள்.).

பருப்புப்பொடி 4:

வாணலியில் கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு 2 பங்கு துவரம்பருப்பு, 3 பங்கு கடலைப்பருப்பு, தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து வாணலியில் உள்ள அந்த எண்ணைப் பசையிலேயே தேவையான மிளகாய், கொஞ்சம் மிளகு ( இது ஒரு வாசனைக்குத்தான்), ஒரு கட்டி பெருங்காயம் சேர்த்து வறுத்துவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு 2 பங்கு பொட்டுக்கடலையும் போட்டு வறுக்கவும். தேவையான உப்புடன் அரைத்து உபயோகிக்கலாம்.

இந்த வகையில் அரைக்கும் பொடி இட்லி தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். ரொம்பவே கொஞ்சம் எண்ணைதான் உள்ளது என்பதால் டயட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்றது...

யாரை கேட்டு தகுதிநீக்கம் செய்தீர்கள்.. வாங்கிக் கட்டிக் கொண்ட எடப்பாடி: விஷயம் வீதிக்கு வந்ததால் ஆட்சியை கலைக்க ஆளுநர் திட்டம்?


தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சில நாட்களாக தமிழக அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனால் ஆளுநர் கடும் அதிருப்தியில் உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வந்த தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள்? நடவடிக்கை எடுக்கப் போவதை நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்று கடுமையாக வசைபாடியிருக்கிறார் ஆளுநர்.

இதனால் அதிர்ந்து போன எடப்பாடி, நாங்கள் அருண் ஜெட்லிகிட்ட அனுமதி கேட்டுத்தான் இதை செய்தோம், உங்களுக்கு அங்கிருந்து தகவல் வந்திருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தோம் என்று கூறியிருக்கிறார்.

இதனால் கடுப்பாகிப்போன ஆளுநர் , மற்றவர்கள் சொல்லுவார்கள் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் தான் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்.

நீங்க அவசரப்பட்டு முடிவு எடுத்திட்டீங்க, அதனால் என்னுடைய பெயர் இப்பொழுது கெட்டுப் போய் விட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் என்மீது குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

ஒருபக்கம் அரசியல் கட்சிகள், இன்னொரு பக்கம் நீதிமன்றம் என்று மாறி மாறி என்னிடம் கேள்வி கேட்பார்கள்.

அனைத்திற்கும் நான் தான் இப்போது பதில் சொல்லியாக வேண்டும் என்று கடும் கோபத்துடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேசியுள்ளார்.

அதன் பிறகு தலைமை செயலாளர் கிரிஜாவை தொடர்பு கொண்ட ஆளுநர், இனி நிர்வாகத்தில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் என்னிடம் சொல்லி விட்டுத் தான் செய்ய வேண்டும்.

அமைச்சர், முதலமைச்சர் என்று யார் சொன்னாலும், என்னிடம் அனுமதி வாங்கி செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

அதனோடு நிற்காமல், தனது ஆந்திர நண்பர்களிடம் தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை செய்துள்ளாராம் தமிழக ஆளுநர் .

மேலும், ஜனாதிபதியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரத்தை எடுத்து கூறி, ஆட்சியை கலைத்து விடலாம் என்கிற ஆலோசனையை கூற இருக்கிறாராம் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

இதனால் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது...

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்...


உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு..

முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....

எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது, குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்....

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும் போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

தீபாவளி யும் உண்மைகளும்...


உலகநாடுகளில் பல இடங்களில் Halloween Day = Oct 31 (ஆவிகளின் திருவிழா) என்றும்...

கல்லறைத் திருவிழா = Nov 2 என்றும் கொண்டாடப்படும் திருவிழா..

இந்தியாவில் மட்டும் இறந்த முன்னோர்களை  விரட்ட கூடிய நாளாக மாறியது எப்படி?

தீபாவளி = அக்டோபரின் இறுதி நாட்கள் (அ) நவம்பரின் ஆரம்ப நாட்கள் (ஐப்பசி அமாவாசை).

மற்ற இரு பண்டிகைகளிலும் (இருளை) முன்னோரின் நினைவலைகளை கொண்டாடும் போது தீபாவளி மட்டும் இருளை விலக்கச் சொல்வதில் முரண் தெரிகிறது.

ஐப்பசி - ஐ -கருப்பு  பசி.

கருப்பு பசியாக இருக்கும் மாதம் அம்மாவாசை நாள்.

'ஐ' எனப்படும் இருள்சக்தி உச்சத்தில் இருக்கும் நள்ளிரவு 12.00 to 2.00 மணிக்கு கிடாய் வெட்டினால் தான் அதிகாலை 4.00 to 6.00 கறி சமைக்க முடியும்.

தீபாவளி அன்று மட்டும் அதி காலையிலேயே எழுந்து கறி சமைக்கும் வழக்கம் தமிழர்களிடையே இன்று வரை தொடர்வது முன்னோர்களுக்கு படையல் போட்டதின் நீட்சியாக இருக்கலாம்.

ஆண்டுக்கு 12 அமாவாசை இருந்தும் குறிப்பாக ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அசைவம் சமைக்கக் கூடாது என்னும் கட்டுப்பாடு விதித்து கடுமையான கேதார கௌரி விரதம் இருக்கச் சொல்வதின் நோக்கம் என்ன? இது எவன் செய்த வேலை ?

வீதியெங்கும் விளக்கேற்றுவது
தீயசக்தியை விரட்ட.

வீதியெங்கும் பட்டாசுகள் வெடிப்பது
தீயசக்தியை விரட்ட.

அசைவம் சமைக்காமல் விரதம் இருப்பது
தீய சக்தியை விரட்ட.

வருடத்தில் எவ்வளவோ அமாவாசை இருக்கும் போது ஏன் அன்னைக்கு மட்டும் இதையெல்லாம் செய்யச் சொல்கிறார்கள்.?

தீய சக்தி உச்சத்துல இருக்குற அன்னைக்கு தானே அதை விரட்ட வேண்டிய தேவை வருதுன்னு சொல்லாம சொல்லுறாங்க.

அந்த தீய சக்தி வேறு யாரும் இல்லைங்க. நம்மோட முன்னோர்களின் நினைவலைகள் தான். அந்தப் பண்டிகை தீபாவளி.

தீர்வு :  ஐப்பசி அமாவாசை தான் தீபாவளி. இது உறுதி. தீபாவளி எப்ப வருதுன்றது முக்கியம் இல்ல. நமக்கு ஐப்பசி அமாவாசை தான் உண்மையான தீபாவளி. முன்னோர்களின் நினைவலைகளுக்கு படையல் போட வேண்டும். இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கௌரி கேதார நோன்பு என ஒன்றை உருவாக்கி தீபாவளியன்று வைத்தான்.

அந்த விரதம் கடை பிடிக்கப்படும் நாளுக்கு முந்தைய நாளிலும். பிந்தைய நாளிலும் கட்டாயம் சைவ விரதம் இருந்தே ஆக வேண்டும். எதிரி நம் முட்டாள் மக்களுக்கு சொருகிய பெரிய ஆப்பு. புரியுதா?

நம்மால் இந்த கணித வலையிலிருந்து தப்ப முடியும்...


உங்கள் வாழ்நாளை சுரண்டும் இந்த கணிதவலை 9..

நீங்கள் சாப்பிடும் இந்த ஒவ்வொரு பருக்கைக்கும் இந்த ஒன்பதுக்கும் சம்மந்தம் உள்ளது.

உழைத்தால் தான் சோறு இதை உருவாக்கியது யார் இயற்கையா?

இந்த இயற்கை நீங்கள் உண்ணும் உணவுக்கு பணம் கேட்டதா?

எங்கு இருந்து வந்தது இந்த பணம்? நாகரிகமா?

சரி பணம் கேட்காமல் கொடுக்கும் இயற்கை எங்கே போனது?

நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அடிமை ஓட்டத்திற்கு காரணமான பணத்தின் சூத்திரம் ஒன்பது, இதன் இயக்கவியல் ஒன்பது.

அதாவது பணத்தை அளவீடு செய்வது வணிக வருடம் (commercial year, finacial market).

360 நாள்கள் (360 days) 3+6+0=9.

எல்லா வங்கிகளும் இதன் அடிப்படையில் தான் இயங்குகிறது.

எதற்காக ஓடுகிறோம் என சிந்தித்து பாருங்கள்.

சரி இதற்கு என்ன நிரந்தர தீர்வு என கேட்கிறீர்களா?

பதில் அதே 360 நாட்கள் தான்...

உலகில் உள்ள ஓவ்வொரு மனிதனும் இந்த அடிமை ஓட்டத்தை 360 நாட்கள் நிறுத்தினால் என்னவாகும் என யோசித்து பாருங்கள்.

இந்த 360 நாட்களும் நாம் எதும் செய்ய வேண்டாம் ஒரு புல்லையும் புடுங்க வேண்டாம்.

நமக்காக இந்த இயற்க்கையே செய்யும் காகம், குருவி, புழு, பூச்சி என எல்லா இயற்கை படைப்புகளும் செய்யும்.

மரங்கள், செடி, கொடிகள் தானாக வளரும் காடுகள் கிடைக்கும்.

இயற்கையை மீட்டெடுக்கலாம்.

இந்த அடிமை ஓட்டத்தை எப்படி ஓடலாம் என 15% மட்டுமே சிந்திக்கும் இந்த மூளை, இயற்கை சூழ்நிலையில்  இயற்கையோடு இயற்கையாய் இருக்கும் போது அதற்கு மேலும் செயல்படும் உங்களின் ஓவ்வொரு அசைவும் இயற்கையை உணரும்...

1953 சித்தூர் மீட்புக்கு தமிழகம் தந்த ஆதரவு...


17.05.1953 தேதியிட்ட இந்த 'செங்கோல்' இதழில் 'சித்தூர் கிளர்ச்சிக்கு ஆதரவு' என்ற தலைப்பு உள்ளது.

கீழே திருவண்ணாமலையில் நடந்த ஊர்வலத்தின் படம் உள்ளது.

சித்தூர் தமிழகத்துடன் இணைய 1953 மே மாதத்தில் தமிழகம் முழுவதும்  ஆதரவான கூட்டங்கள் நடந்ததைக் குறித்து செய்திகள் மாவட்ட வாரியாக உள்ளன.

சென்னையில்,வண்ணையம்பதி (வாணியம்பாடி)யில் பொதுகூட்டம் நடந்தது.

திருச்சி நகரிலும் உறையூரிலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

தஞ்சையில்,  திருத்துறைப்பூண்டியிலும் கும்பகோணத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

சேலத்தில்,கொண்டாலம்பட்டி பொதுக்கூட்டத்தில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

சித்தூரின் 6 தமிழ் தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைய தீர்மானம் இயற்றப்பட்டது.

கிச்சிப்பாளையத்திலும் சித்தூர் தினம் கொண்டாட்டமும், கிருஷ்ணகிரியில் 3மைல் நீள ஊர்வலமும் நடத்தப்பட்டன.

வட ஆற்காட்டில்,ஆம்பூரில் சர்வகட்சிக் கூட்டமும் கலவையில் கூட்டமும் திருப்பத்தூரில் ஊர்வலமும் நடந்தன.

மதுரையில்,பழனியில் ஊர்வலமும் மேலூரில் சித்தூர் தினக் கொண்டாட்டமும் நடந்தன.

சித்தூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

வள்ளிமலையிலும், அத்திமாஞ்சேரியிலும் பொதுக் கூட்டங்கள் நடந்தன.

திருத்தணியில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலியில்,சங்கரநயினார் கோயிலில் (சங்கரன்கோயில்) கூட்டம் நடத்தப்பட்டது.

பம்பாயில்,தாராவியில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

ம.பொ.சி நடத்திய மண்மீட்பு அறப்போருக்கு தொடர்ச்சியாக ஆதரவு தந்த செங்கோல் எனும் இவ்விதழின் ஆசிரியர் ஆ.கோ. வெங்கட ராமானுஜன் என்று உள்ளது.

பெயரை வைத்தும் முகவரி திருவல்லிக்கேணி என்று இருப்பதை வைத்தும் இவர் பார்ப்பனத் தமிழர் என்று ஊகிக்க முடிகிறது...

வரலாற்றில் சூனியக்காரிகளின் வேட்டை 2...


உண்மையில் சூனியக்காரிகள் என்றால் யார் ?

இவர்களால் எரித்து கொல்லப்பட்ட சூனியக்காரிகள் என்பவர்கள் ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவல்
அவர்கள்உண்மையில்

மருத்துவச்சிகள்...

மருத்துவம் பார்க்கும் பெண்களை எப்படி சூனியக்காரிகள் என்று ஆனது என்பதற்கு காரணம் அவர்களின் நடவடிக்கையும் தேவாலயங்களின் சபையினரை எதிர்த்தாலும் தான்.

எப்படி என்று பார்ப்போம்..

மருத்துவச்சிகள் கர்ப்பிணி பெண்களை பரிசோதிக்க கையில் எலும்பு துண்டுகளை வைத்து இருப்பார்களாம் [டெதஸ் கோப்போன்று]..

வயிற்றில் உள்ள குழந்தையை கவனிக்க கையில் வாத்துடைய எலும்பை வைத்து குழந்தையின் சப்தத்தை கேட்பார்களாம்...

அடுத்தது குழந்தை பெறக்கூடிய நேரத்தில் அந்த தாயை சமாதானம் செய்ய வாய்களை முணுமுணுத்து கொண்டே இருப்பார்களாம்.. அந்த முணுமுணுப்பு பிற்காலத்தில் மந்திரம் என்று சித்தரிக்கப்பட்டது.

அதன் பிறகு பேறுகால வலியின் உச்சக்கட்டத்தில் கதறிக்கொண்டு இருக்கும் அந்த தாயின் கவனத்தை திசை திருப்ப தலை விரி கோலம் கொண்டு ஆட்டம் ஆடுவார்களாம்.. அந்த ஆட்டத்தை கண்ட அப்பெண் பயத்தில் கூட குழந்தையை ஈன்று விடுவாள் என்ற வரலாறும் உண்டு.

அடுத்து ரண மருத்துவம் தெரிந்த அவர்களுக்கு இரத்தத்தை கண்டு பயம் இருக்காது அல்லவா [மருத்துவர் இரத்தத்தை பார்த்து பயந்தால் நோயாளியின் நிலை என்ன?]..

அப்படியாக பிறந்த  குழந்தையை இரத்தத்தோடு தூக்கி மக்கள் மத்தியில் காண்பிப்பார்களாம்..

ஆனால் அன்றைய காலகட்டத்தில் இரத்தம் ஒரு தீமையின் அடையாளமாக கருத்தப்பட்டது, அதன் காரணமாகத்தான் மாதாந்திர தீட்டுள்ள பெண்களை கூட சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

இப்படி தான் எலும்பு துண்டு, இரத்தவாடை, தலை விரி கோலம்
கருப்பு ஆடை..

அனாச்சார விஷயங்களில் கலந்து கொள்ளாமல் ஊருக்கு ஒதுக்குபுறமாக மருத்துவம் மூலிகை என்று வாழ்வதால் தனிமை தேவை.

இப்படி இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இவை..

இதில் கிருஸ்துவ சபை எங்கே எதிர்க்கப்பட்டது என்றால்..

அக்காலகட்டத்தில் ஒரு நம்பிக்கை.. வயிற்றில் கரு கலைந்து விட்டால் அவள் குற்றம் செய்தவள் ஆகவே கடவுள் அவளை தண்டிக்கிறார் என்று ஒரு தவறான நம்பிக்கை இருந்தது..

இதை எதிர்த்து போராடியது இந்த மருத்துவச்சிகள் தான் கரு கலைவதற்கு காரணம் உண்டு. இதற்கும், தண்டனைக்கும் சம்பந்தம் இல்லை என்று வாதிட்டனர்..

இதான் பிரச்சனை..

சபையை எதிர்த்து பேசுவது கடவுளை எதிர்ப்பதற்கு சமம் என்ற ரீதியில் இவர்கள் அனைவரும் சூனியக்காரிகள் என்று பரப்பப்பட்டு இந்த கொடூரம் அரங்கேறியது..

எந்த அளவுக்கென்றால் Malleus Maleficarum என்ற புத்தகத்தை ஜெர்மனி கேத்தலிக் பிரிவை சார்ந்த ஹென்ரிச் கேறாமற் என்பவர் எழுதியுள்ளார்..

இந்த புத்தகத்தில் சூனியக்காரிகளை [மருத்துவச்சிகளை] எப்படியெல்லாம் கொல்வது என்பது தான் இப்புத்தகத்தில் உள்ளவைகள்...

ஆரம்பத்தில் பார்த்த அந்த கிங் ஜேம்ஸ் வேறுயாருமில்லை பைபிளை தொகுத்தவர்..

ஆம் கிங் ஜேம்ஸ் வர்சனை தொகுத்த இந்த மன்னர் தான் சூனியக்காரிகளை கொல்ல வேண்டும் என்று முதன் முதலில்
கட்டளை இட்டவர்...

பின்னாளில் இதை உணர்ந்தவர் தனது பாவத்தை கழுவ எண்ணியே பைபிளை தொகுத்தார் என்ற கூற்றும் உண்டு, ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை....

நீ எந்த சாதிக்காரனாக இருந்தாலும்... உன் குல தெய்வம் சிவபெருமான் தான்ய்யா...


பறையர்...

பறை = இசைக்கருவி.
இசை = நாதம். நாதமையமானவன் சிவபெருமான். பறை நாதத்தை விரும்புபவன் தான் சிவபெருமான். பறை நாதத்தை விரும்பும் ஈசனுக்கு அடியவர் தான் பறையர்.

ஐயர்...

ஐயன் = உயர்ந்தவன்.
எல்லாவற்றையும் விட உயர்ந்தவர் ஈசன். எல்லாவற்றையும் விட உயர்ந்த ஈசனுக்கு அடியவர் தான் ஐயர்.

வன்னியர்...

வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்டவர் ஈசன். வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்ட ஈசனுக்கு அடியவர் தான் வன்னியர்.

செட்டியார்...

கொழுந்து விட்டு எரியும் சோதியை போன்ற சென்நிற (சிவந்த நிறம்) மேனியை கொண்டவன் சிவபெருமான். சென்நிற மேனி உடைய ஈசனுக்கு அடியவர் தான் சென்நியர். சென்நியர் என்ற பெயரே காலப்போக்கில் செட்டியார் என்றானது.

செம்படவர்.

செழிப்பான வாழ்வை தந்தருள்பவர் தான் ஈசன். செழிப்பான வாழ்வை தந்தருளும் ஈசனுக்கு அடியவர் தான் செம்படவர்.

குயவர்...

அன்பால் அடியவரின் உள்ளத்தை குழைப்பவர் தான் ஈசன். அன்பால் அடியவரின் உள்ளத்தை குழைக்கும் ஈசனுக்கு அடியவர் தான் குயவர்.

வெள்ளாளர்...

வெற்றியை தன்வசம் வைத்திருப்பவர் தான் ஈசன். வெற்றியை தன்வசம் வைத்திருக்கும் ஈசனுக்கு பிள்ளையான அடியவர் தான் வெள்ளாளர்.

முதலியார்...

தோற்றத்திற்கு வித்தானவர் சிவபெருமான். எல்லாவற்றிற்கும் முதலான சிவபெருமானுக்கு அடியவர் தான் முதலியார்.

கோனார்...

கோமகனார் என போற்றப்படுபவர்.
கோ - கோவில்,பசு காப்பவர்.

வேதியர்...

வேதத்தை தந்தருளியவர் ஈசன். வேதத்தை தந்தருளிய சிவபெருமானுக்கு அடியவர் தான் வேதியர்.

நாயக்கர்...

எச்செயலுக்கும் நாயகமாக திகழ்பவர் சிவபெருமான். அத்தகைய நாயகனுக்கு அடியவர்தான் நாயக்கர்.

நாடார்...

தென்னாடுடைய சிவனே, எந்நாட்டவர்க்கும் இறைவன். தென்னாட்டை தன்நாடாக கொண்ட ஈசனுக்கு அடியவர் தான் நாடார்.

தேவர்...

தேவையை தீர்த்து வைப்பவர் தான் தேவன். அத்தகைய தேவன் தான்  சிவபெருமான். தேவையை தீர்த்து வைக்கும் ஈசனுக்கு அடியவர் தான் தேவர்.

கள்ளர்...

அடியவர் உள்ளத்தை கவரும் கள்வர் சிவபெருமான். அத்தகைய சிவபெருமானுக்கு அடியவர் தான் கள்ளர்.

பத்தர்...

பத்திநெறி அறிவிப்பவர் சிவபெருமான். பத்திநெறி அறிவிக்கும் ஈசனுக்கு அன்பர் தான் பத்தர்.

அப்படியாக........ நீ எக்குலத்தவனாக இருந்தாலும், குலத்திற்கேற்பதோர் நலமிக கொடுப்பது நமச்சிவாயவே. உன் குல தெய்வம் சிவபெருமான் தான் என்பதை மறந்து வாழ்வது மறு பிறவிக்கு வித்தாகும்.

சிவபெருமான்தான் எம் குலதெய்வம். சிவபெருமான்தான் எம் குலம் காக்கும் தெய்வம்.

சிவபெருமான்தான் முழு முதற் கடவுள் என்று உணர்ந்து, சிவபெருமானை வணங்கி வாழ்வதே வாழ்க்கை. அத்தகைய வாழ்வே வழிபாடு.

நற்செயல் உன் வாழ்தலே இனிய வழிபாடு. நமச்சிவாய.

அடுத்த பிறவில் இதே சாதியில்தான் பிறப்போமா?... உத்திரவாதம் உள்ளதா?.

சண்டை, சச்சரவுகளை விடுத்து இறைவனை போற்றி அன்புடன் வாழ்வோம்.

சாதி இறைவனுக்கு சேவை செய்ய உருவாக்கப் பட்டதே தவிர... தலை விரித்து ஆட அல்ல...

இறையே அறம்...

சில சாதிகள் விடுபட்டிருக்கும். குறிப்பு தந்தால் சேர்க்கப்படும்...

கோயில் கொடியை எரித்து மதக்கலவரத்தை உருவாக்க திட்டம்.. சங்பரிவார் தீவிரவாதிகள் கைது...


மத கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்தில் கோயிலில் பறந்த காவிக் கொடியை தாங்களே எரித்த சங்பரிவார் அமைப்பை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நகரிலுள்ள நாயக்கர் வீதியிலுள்ள பிரபல விநாயகர் கோயிலில் பறந்து கொண்டிருந்த காவி கொடியை சம்பவத்தன்று நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மஞ்சு மற்றும் பங்காரா ஆகியோர் கீழே இறக்கி எரித்துள்ளனர்.மாற்று மதத்தவர்கள் கொடியை எரித்துவிட்டதாக கூறி மத கலவரத்தை உருவாக்குவது இவர்கள் நோக்கம் என்று தெரிகிறது. இருப்பினும் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை.

சங்பரிவார் அமைப்பை சேர்ந்த இவர்கள்தான் கொடியை எரித்தது என்று கண்டு பிடித்த போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-21...


ஆழ்மனதின் சக்திகளை விண்வெளியில் ஆராய்ந்த மனிதர் வேறு யாருமல்ல நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்களில் ஒருவரான எட்கார் டீன் மிட்சல் தான். 22-06-1972 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

அப்போலோ 14 விண்வெளிக்கலத்தில் நிலவிற்குப் போய் வருகையில் நான் உலகின் முதல் விண்வெளி ஆழ்மன ஆராய்ச்சியைச் செய்தேன். நட்சத்திரம், சிலுவை, வட்டம், நெளிவு வரி, சதுரம் ஆகிய ஐந்து சின்னங்களை 25 வரிசைகளில் தொடர்பில்லாமல் மாறி மாறி வைத்தேன். அதை அமெரிக்காவில் உள்ள நான்கு மனிதர்கள் யூகிக்க முயன்றார்கள். அந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. குருட்டாம் போக்கில் யூகித்து சொல்வதானால் 3000 தடவை செய்யும் யூகங்கங்களில் ஒரு முறை மட்டுமே சாத்தியமாகும் வெற்றியாக அது இருந்தது.

இளமையில் இருந்தே விஞ்ஞானத்திலும், மெய்ஞானம் மற்றும் ஆழ்மன சக்திகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தவர் எட்கார் மிட்செல். பலரது ஆழ்மன ஆராய்ச்சிகளை ஆர்வத்துடன் கவனித்து வந்த அவருக்கு சந்திரனுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்த போது அவரைப் போலவே ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலர் இது போன்ற ஆராய்ச்சியை விண்வெளியில் ஏன் செய்து பார்க்கக் கூடாது என்று கேட்டனர். இது போன்ற சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற அவர்களைப் போலவே எண்ணிய எட்கார் மிட்செல் ஒத்துக் கொண்டார்.

சந்திரனுக்குக் கிளம்புவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் நான்கு பேர் கொண்ட குழு அமைந்தது. அந்தக் குழுவில் இருவர் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பாய்ல் மற்றும் டாக்டர் மேக்சி. மற்ற இருவர் ஆழ்மன சக்திகள் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் சிகாகோவில் தன் சக்திகளால் அக்காலத்தில் பிரபலமான ஓலோஃப் ஜான்சன்.

சந்திரனுக்குச் செல்லத் தேவையான ஆயத்தங்களில் முழுமையாக ஈடுபட்டிருந்த எட்கார் மிட்செலுக்கு நேரமின்மை காரணமாக அந்த ஆராய்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த நால்வருமே கலந்து தீர்மானித்தனர். எட்கார் மிட்சல் ஓரிரு முறை அவர்களிடம் சென்று அந்த ஆராய்ச்சி முறையில் மாதிரி பயிற்சிகளில் ஈடுபட்டார்.


அப்போலோ 14ல் இருவர் உறங்குகின்ற நேரத்தில் ஒருவர் விண்கலத்தைக் கண்காணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. எட்கார் மிட்செல் தான் உறங்குவதற்கு முன் சில நிமிடங்கள் ஆழமன ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள சின்னங்களை மனதில் நினைத்து அதை பூமியில் உள்ள நண்பர்களுக்கு அனுப்ப ஒவ்வொரு சின்னத்திற்கும் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.

இந்தத் தனிப்பட்ட ஆராய்ச்சியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் எண்ணம் ஆரம்பத்தில் எட்கார் மிட்சலுக்கு இருக்கவில்லை. ஆனால் விண்கலம் பூமிக்கு வந்து விண்வெளியில் இருந்து அனுப்பிய தகவல்களும், பூமியில் பெற்ற தகவல்களும் சரிபார்க்கப்படும் முன்பே அவர்களது குழுவின் ஓலோஃப் ஜான்சன் பத்திரிகைகளுக்கு இந்த ஆராய்ச்சி பற்றி சொல்லி விட்டார். பின் வேறு வழியில்லாமல் எட்கார் மிட்சலும் அது பற்றி தெரிவிக்க வேண்டியதாயிற்று. பின் அந்த இரு தகவல்களையும் சரிபார்க்கையில் எட்கார் மிட்சல் நியூயார்க் டைம்ஸிற்குத் தெரிவித்தபடி அது வெற்றிகரமான அளவுக்குப் பொருந்தியே இருந்தது.

நாசா(NASA)வின் பல விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தனித்தனியாக இந்த ஆழ்மன ஆராய்ச்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்கள் என்றாலும் வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசத் தயங்கினார்கள் என்று எட்கார் மிட்செல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

எது எப்படியோ அந்த விண்வெளிப்பயணம் எட்கார் மிட்சலுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருந்தது. விண்வெளியில் அந்த இயற்கையின் பிரம்மாண்டத்தை கண்கூடாகத் தரிசிக்கையில் மனிதனின் வேற்றுமைகளும், குறுகிய எண்ணங்களும் அர்த்தம் இல்லாமலிருப்பதை அவரால் உணர முடிந்தது. அது போல ஆழ்மன ஆராய்ச்சிகளின் வெற்றிக்குப் பூமியில் பல மைல் தூரங்கள் ஒரு தடையல்ல என்பதைப் பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தி இருந்தாலும், பூமியைத் தாண்டியும் கூட அந்த அகண்ட இடைவெளி ஒரு பொருட்டல்ல என்பதை அவரால் அந்தப் பயண ஆராய்ச்சி மூலம் உணர முடிந்தது.

அவர் 1973ல் The Institute of Noetic Sciences (IONS) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். மனிதனின் ஆழ்மனம் பற்றியும், அதன் உணர்நிலைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதே அந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. இன்றும் கூட அந்த அமைப்பு கலிபோர்னியாவில் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்மன சக்தியைத் தன் தனிப்பட்ட வாழ்வில் எட்கார்மிட்செல் உணரும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அவர் சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டு விட அதை தொலைதூரத்தில் இருந்து வான்கூவரைச் சேர்ந்த ஆடம் ட்ரீம்ஹீலர் என்ற புனைப்பெயரில் அறியப்படும் ஒரு ஆழ்மனசக்தி பெற்ற இளைஞன் குணமாக்கினான். வான்கூவரில் இருந்தே அந்த இளைஞன் டிசம்பர் 2003ல் இருந்து ஜூன் 2004 வரை அந்த நோயைக் குணப்படுத்த தன் ஆழ்மனசக்தியைப் பிரயோகித்தான் என்று எட்கார் மிட்செல் தெரிவித்தார்.

ஆழ்மனசக்திகள் பற்றிக் குறிப்பிடுகையில் அது குறித்து பழங்கால இந்திய, திபெத்திய சம்ஸ்கிருதப் படைப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன என்று எட்கார் மிட்செல் கூறுகிறார். அந்த நூல்களில் சொல்லப்படுகிற நிர்விகல்பசமாதி என்ற தியானநிலையில் மனிதனின் ஆழ்மன சக்திகள் மிக உயர்ந்த அளவுக்கு விழிப்படைகின்றன என்று ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்ததாக அவர் கூறுகிறார்.

எதையும் வெளிநாட்டுக்காரர்களும், விஞ்ஞானமும் கூறினால் ஒழிய கற்பனை, கட்டுக்கதை என்று முடிவெடுக்கும் மனநிலை நம் நாட்டில் நிறையவே இருந்து வருகிறது. நம் முன்னோர் அடைந்திருந்த உயர் அறிவார்ந்த நிலையை ஒத்துக் கொள்ளவோ, திறந்த மனத்துடன் ஆராயவோ நாம் முற்படுவதில்லை. எட்கார் மிட்சல் போன்றவர்களே ஒத்துக் கொண்டு பாராட்டுகிறார்கள் என்பதை அறிந்த பின்னாவது நாம் அந்த மனநிலையை மாற்றிக் கொள்வது தானே அறிவு?

மேலும் பயணிப்போம்.....

வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்...


விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரி என்றால் அது எலிகள் தான்.

வீட்டிலும், வயலிலும், தானிய சேமிப்பு கிடங்குகளிலும் எலிகள் புகுந்து நாசத்தை விளைவிக்கின்றன.

உயிரினங்களில் மிகுந்த புத்திக்கூர்மையும், சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வதிலும் எலிகள் தனித்திறன் வாய்ந்தவை.

ஒரு மனிதன் உண்ணும் உணவை ஆறு எலிகள் சேர்ந்து உண்டு அழிப்பதுடன் 20 மடங்கு உணவை வீணடிக்கவும் செய்கின்றன.

இவ்வாறு அதிக சேதாரத்தை உண்டு பண்ணும் எலிகளை கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்தலாம்.

வரப்பு வெட்டி அழித்தல்...

நெல் அறுவடை முடிந்த ஒரு வாரத்திற்குள் வரப்பில் உள்ள ஈரத்தை கொண்டு வரப்புகளை வெட்டி எலிகளை அவற்றின் குட்டிகளுடன் பிடித்து அழிக்கலாம்.

விஷம் வைத்து அழித்தல்...

எலிகள் சந்தேகப் பிராணிகள். தனக்கு வரும் ஆபத்தை எளிதில் கணிக்க வல்லவை. கூச்ச சுபாவம் உடையவை. தனக்கான உணவுப் பொருளில் திடீர் மாறுதல்களை கண்டால் அவற்றை தவிர்க்க கூடியவை. இது போன்ற நிலையில் விஷத்தை பயன்படுத்தும் முன்பாக அவற்றுக்கு அரிசிப்பொறி, கருவாடு, வதக்கிய வெங்காயம் போன்றவற்றை எலி நடமாடும் இடங்களில் அவ்வப்போது வைத்து பழகி வரவேண்டும். பிறகு இந்த உணவில், அதாவது 49 பங்கு உணவுப் பொருளுடன் 1 பங்கு சிங்க் பாஸ்பைடு என்ற அளவில் விஷ உணவு தயாரிக்க வேண்டும். உணவுப் பொருளுடன் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலக்க வேண்டும். ஒரு ஏக்கரில் 30 இடங்களுக்கு குறையாமல் எலி நடமாட்டமுள்ள இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு கொட்டாச்சியில் 10 கிராம் என்ற அளவில் விஷ உணவை வைக்க வேண்டும். இது போல 15 நாட்கள் இடைவெளியில் 5 அல்லது 6 முறை வைத்தால் எலிகள் மடிந்து போகும்.

கிட்டி வைத்து பிடித்தல்...

தஞ்சாவூர் கிட்டிகள் அல்லது மூங்கில் கிட்டிகள் ஏக்கருக்கு 20 எண்களை நிலத்தில் வைக்கவும். நிலத்தில் ஓர் அங்குலம் தண்ணீர் இருக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கிட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆன்டிகோயாகுலண்ட் முறை
இது ஒரு விஷ மருந்து முறையாகும்.

இதனை 1 பங்கு எடுத்துக் கொண்டு, எலி விரும்பி உண்ணும் சோளம், கம்பு மாவுகளை 19 பங்கு என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையில் தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்து 100 கிராம் அளவில் எடுத்து ஒரு தட்டில் வைத்து எலி நடமாடும் இடங்களிலும், மறைவான இடங்களிலும் வைத்து விட வேண்டும். ஒரு வாரம் அளவுக்கு இதனை தொடர்ந்து செய்து வர வேண்டும். பின்னர் 1 பங்கு மருந்தை 19 பங்கு நீருடன் கலந்து குடிநீராக வைத்து எலிகளை குடிக்க வைத்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

இது தவிர ஆங்கில டி வடிவ எழுத்திலான நீள கம்புகளை நட்டு வைத்து ஆந்தைகளை கவருவதன் மூலம் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

தகவல்: ப.ராமநாதன், வேளாண்மை துணை இயக்குநர், நீர்மேலாண்மை பயிற்சி நிலையம், விநாயகபுரம்...

தமிழ்நாட்டில் அரசு ஊழியளர்களாக 55 சதவீததிற்கு மேலும், அதிகாரிகளில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேரும் பிறமொழியாளர்களே பணி செய்கின்றனர்...


இது எப்படி சாத்தியம் ஆனது.?

அதற்குக் காரணம் திராவிடர்களின் திருட்டுத் தனமே.

இடஒதுக்கீட்டை தமிழர்களுக்கு நாங்கள் தான் வாங்கிக் கொடுத்தோம் என்று சொல்லும் பெரியாரிஸ்டுகள் , தமிழர்களுக்கு திராவிட முகமூடியை மாட்டி, தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பாத மலையாளிகள், கன்னடர்கள் , தெலுங்கர்கள், மற்றும் பிறமொழியாளர்களும் இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் பயன் பெறச் செய்தது.

ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் ஆந்திரம் தனக்கென தனியாக சட்டமன்றம் அமைத்து, தனது மாநிலத்தில் உள்ள சாதிகளை மட்டுமே அங்கீகரித்து சட்டம் இயற்றி மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சாதிகளுக்கு தங்கள் மாநிலத்தில் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விட்டது.

இதே போல்தான் , கேரளா , கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது.

ஆனால் பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தில் இருந்த அத்தனை சாதிகளுக்கும் இளிச்சவாய்தமிழ் நாட்டில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நியாப்படி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த சாதிகளை தமிழ்நாட்டின் சாதிப் பட்டியல்களை நீக்கி இருக்க வேண்டும். ஆனால் நீக்கவில்லை.

காரணம் நம்மை திராவிடத்தின் பெயரால் ஆட்சி செய்யும் திராவிடர்களே..

இந்த உண்மைகளையெல்லாமல் உணர்ந்து தமிழர்கள் தங்களுக்குள் ஒன்று பட்டு போராடாமல் விட்டுவிட்டால் இனி வரும் காளங்களில் தமிழ்ர்களுக்கு அரசு வேலை என்பது கிடைக்காமலே போய்விடக் கூடிய ஆபத்து உள்ளது...

ஒரு சில கூமுட்டைகள் சொல்கிறது.. எம் தலைவர் எதிர்காத பெரியாரை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று?


ஈழத்தில் திராவிடமும் இல்லை பெரியார் பெயருக்கும் அங்கு வேலையும் இல்லை.. மேலும் தேசிய தலைவர் பெரியாரை ஆதரிக்கவுமில்லை...

பெரியார் சொன்னார் தமிழனுக்கு ஆளும் தகுதியில்லை தமிழ் காட்டு மிராண்டி மொழி என்று கேவலமாக தமிழனை தான் முட்டாளாக்கினார்.

பிறகு நீங்கள் எதற்கு அவர் சிந்தனைக்கு எதிராக செயல்படுகிறீர்கள்..

தமிழினை முட்டாளாக்கி திராவிடத்தை விதைத்த பெரியாரை வழிகாட்டி என்று சொல்லி தமிழ் தேசியம் பேசுவது ஏமாற்று வேலையே...

பெண்களின் ஏழு பருவங்கள்...


1.பேதை (5 முதல் 7 வயது வரை).

2. பெதும்பை (8 முதல் 11 வயது வரை).

3. மங்கை (12 முதல் 13 வயது வரை).

4. மடந்தை (14 முதல் 19 வயது வரை).

5. அரிவை (20 முதல் 25 வயது வரை).

6. தெரிவை ( 26 முதல் 31 வயது வரை).

7. பேரிளம் பெண் (32 முதல் 40 வயது வரை)...

தமிழகம் சில தகவல்கள்...


1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)...

காணாமல் போனவைகள் - தானிய குதிர்...



பண்டைய பழந்தமிழர் நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு.

குதிரிடல் (ஆங்கிலம்-granary, bunkering) என்பது வேளாண்மையில் பயன்படுத்தப்படும்  முக்கியமான நடைமுறையாகும்.

நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத் தேவைக்காக, விளைந்த தானியங்களைச் சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது.

சிமென்டு, கரி போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.

தமிழகக் கிராமங்களில் உள்ள குதிர்கள் மரம், மண், செங்கல் ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன...

Photoshop & Internet இல்லைனா பாஜக என்ற ஓரு கட்சியே இருக்காது போல...



சிக்கினால் 10 ஆண்டுகள் சிறையில் சேதாரம் உறுதி… ஆதாரம் கையில் இருக்க, பாய்கிறதா இந்திய தண்டனை சட்டம் 328..?


இந்திய தண்டனை சட்டம் [ஐ.பி.சி]328-ன் படி, இந்தியாவில் போதைபொருள்களை விற்பது 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

காலம் காலமாக கடைபிடித்து வரும் இரட்டை வேடத்தை மதுவிலக்கு விஷயத்திலும் கடைபிடித்து நீதிமன்றங்களையும், பொதுமக்களையும் ஏமாற்ற முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

மக்களின் மனநிலையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவது தான் நல்ல அரசுக்கு இலக்கணமாகும். இதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் பொதுமக்களின் விருப்பமாகும்.

தமிழகத்தில் கடந்த மே ஒன்றாம் தேதி நடைபெற்ற கிராம அவைக் கூட்டங்களில், பாட்டாளி மக்கள் கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆயிரக்கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருப்பதே மக்களின் மனநிலைக்கு சாட்சியாகும்.

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 328-ன் படி, ஒருவருக்கு காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது ஒரு குற்றத்தை செய்யும் அல்லது அதற்கு வசதி செய்யும் உட்கருத்துடன் அல்லது அதனால் அனேகமாக அவருக்கு காயம் விளைவிக்கக்கூடும் என்று அறிந்து,

நஞ்சு எதையும் அல்லது மதிமயக்கம் செய்கிற போதை தருகிற அல்லது நலத்தை கெடுக்கிற மருந்துச்சரக்கு அல்லது வேறு பொருள் எதையும் எவர் ஒருவருக்கும் கொடுப்பவர் அல்லது உட்கொள்ளும்படி செய்பவர் எவராயினும்,

பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறைத்தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். அவரை அபாரதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம் என்கிறது.

அதே போல இந்திய தண்டனை சட்டப்பிரிவு ஐ.பி.சி 319-ன் படி ஒருவருக்கு உடல்வலி, நோய் அல்லது வலிமைகேடு விளைவிக்கிற எவரும் காயம் விளைவிக்கிறார் என்று சொல்லப்படுகிறார்.

ஆனால், தமிழக அரசோ டாஸ்மாக் மதுகடைகளை திறந்து இத்தகைய குற்றங்களை பகிரங்கமாக செய்கிறது.

இதன்மூலமாக மக்களின் உயிருக்கும், உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது அரசின் கொள்கை என்பதை தமிழக அரசு உறுதிபடுத்தியுள்ளது.

கொள்கை முடிவு என்று சொல்லி மக்களின் உயிர்வாழும் உரிமையை தமிழக அரசு பறித்து வருகிறது.

இது அரசியல் சாசனத்தின் 21-வது ஷரத்தின்படி மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை பறிப்பதாக உள்ளது.

அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் அமைச்சரவையின் தலைவர் என்ற முறையில் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை இந்திய தண்டனை சட்டம் 328 கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திட வேண்டும்.

தொடங்கப்பட்ட நாளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் கொள்கையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி ஆய்வு செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.

மது விற்பது மட்டும் தான் அரசின் பணி என்ற அபத்தக் கொள்கையை விடுத்து, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு,

மக்கள் நலவாழ்வே அரசின் நோக்கம் என்ற அர்த்தமுள்ள கொள்கையை கடைபிடிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்...

முட்டு கொடுக்கும் திட்டம் என்று ஒன்றை புதியதாக தொடங்கியுள்ளது தமிழக எடப்பாடி அரசு...


நீதிபதிகள் தீர்ப்பு குறித்து மீம்ஸ் போடுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் ? - தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி...


நீதிமன்றங்களின் தீர்ப்பு குறித்து ஆவதூறாக மீம்ஸ் பொடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. அதே நேரத்தில் அவதூறாக மீம்ஸ் போட்டு நீதிமன்றங்களில் கன்னியத்தை கெடுப்பது தவறு என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது...

இலுமினாட்டி கமல் கலாட்டா...


மெர்சல் என்ற பெயரை விஜய் படத்துக்கு பயன்படுத்த ஐகோர்ட் தடை...


தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக மெர்சல் உருவாகியுள்ளது. இதில், முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், வடிவேலு, சத்யன், சத்யராஜ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, சீனு மோகன், யோகி பாபு, மிஷா கோஷல் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு  வெளியாகிறது.  இதுவரை வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆளப்போறான் தமிழன் சிங்கிள் டிராக் போன்றவை சாதனை படைத்த நிலையில், மெர்சல் டீசரும் சாதனை படைக்கவுள்ளது.

மெர்சல் படத்தின் டீசர் இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. டீசர் வெளியான 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி பார்வைகள் பெற்று உள்ளது. எனவே, யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற சாதனையைப் படைத்துள்ளது மெர்சல் டீசர்.

இந்த நிலையில் மெர்சல்  என்ற பெயரை விஜய் தனது படத்திற்கு பயன்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.

தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அக்.3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்து உள்ளது...

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துவர மறந்து வாகனம் ஓட்டுவதை குற்றமாக கருத முடியாது; மறந்துவிட்டு வருபவர்களுக்கு அபராதம் மட்டும் போதுமானது. 3 மாதம் சிறை என்பது தேவையில்லை - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு..


டெல்லியில் போராடும் நம் விவசாயிகளை ஏன் பாஜக மோடி சந்திக்க மறுக்கிறார் என்று கேட்பவர்களுக்கு இதோ ஒரு சான்று...


இதுபோன்ற பாட்டு கேட்க தாளம் தட்டவே முழு நேரம் பற்றாத போது... நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை சந்திக்க எப்படி நேரம் கொடுப்பார்...?

மோடிக்கு விவசாயியா முக்கியம்?
நடிகை, பாடகி போன்றவர்கள் தான்...
அவருக்கு மிக அவசியம்...