17/09/2020
பெரியார் பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கு?
ஈ.வெ.ராமசாமி தமிழினத்தின் எதிரி.. மாற்று கருத்தே இல்லை...
ஆனால் இந்த திருட்டு பிராடு பெரியார் சொன்னது கூட இந்த திருட்டு திமுக கடைப்பிடித்ததில்லையே...
சென்னை விமான நிலையத்தில் 5 லட்சம் மதிப்புள்ள 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்...
சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவில் இருந்து அமெரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்காக பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்கள் மூலம் பெரும் அளவு போதை மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சரக்கக பிரிவுக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பார்சல்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாண முகவரிக்கு அனுப்புவதற்கு மருந்துவ பொருட்கள் என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டி பார்சல் ஒன்று இருந்தது. அவற்றின் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அதை பிரித்து பார்த்தனர்.
அதில் போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளான மெத்தில்பெனிடெட், சோல்பிடெம் மற்றும் குளோனாசெபம் ஆகிய பெயர்களை கொண்ட 3 ஆயிரத்து 440 மாத்திரைகள் மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.
கொரோனா வைரசுக்கான தலை வலி, காய்ச்சல் மாத்திரைகள் அனுப்பப்படுவதாக நினைத்து சோதனையிடாமல் அதிகாரிகள் விட்டுவிடுவார்கள் என திட்டமிட்டு மாத்திரைகளை ரகசியமாக வெளிநாட்டுக்கு கடத்தும் முயற்சியில் கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விமான நிலைய கூரியர் அலுவலகத்தில் போதை மாத்திரைகளை அனுப்ப வந்த மொத்த மருத்துவ விற்பனையாளரான சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் மொத்த மாத்திரைகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்...
கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ, கேரளாவிலோ திராவிடம் என்ற வார்த்தைக் கூட இல்லையே ஏன்?
தமிழ் நாட்டில் மட்டும் திராவிட முன்னேற்ற கழகங்கள், இயக்கங்கள், தலைவர்கள் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்..
தமிழ் நாட்டில் திராவிடம், திராவிடம் என்று பலர் விடாப் பிடியாக பிடித்து தொங்குவதற்குக் காரணம், திராவிடர் என்னும் போர்வையில் ஒளிந்துக் கொண்டு தெலுங்கரும், கன்னடரும், மலையாளியும் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்பதே..
அண்டை மாநிலங்களில் எல்லாம் கன்னட நடிகர்கள் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம், தெலுங்கு நடிகர்கள் சங்கம் என்று தான் இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர்கள் சங்கமாம்..
தற்போது, இந்த நடிகர் சங்கத் தலைவர் பதவியை, தெலுங்கன் விஷால் ரெட்டி என்னும் நடிகன் அடைந்து விட்டான்..
எனக்கு சில கேள்விகள்...
விஷாலுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
அவர் வேண்டுமென்றால், அவர் மாநிலத்தில் சென்று நடிகர் சங்கத் தலைவராகட்டும், இல்லை மாநில முதல்வராகட்டும், எவரும் கேட்கப் போவதில்லை.
ஆனால், அடுத்தவனுக்கு பரிமாறியுள்ள உணவை பறித்து திண்ணும் (எச்சி பொறுக்கும் வேலையை) வேலையை இந்த திராவிடர் போர்வையில் இருக்கும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் எப்போது விடுவார்கள்?
எல்லா மாநிலத்திலும் அந்தந்த மண்ணின் மக்களின் ஆளுமையே இருக்கிறது. பிற மொழி மக்கள் அதிகப்படியாக வசித்தாலும், அந்த மாநில மண்ணின் மைந்தர்களில் கட்டுப் பாட்டுக்குள்ளேயே அவர்கள் இருப்பார்கள்..
உதாரணமாக, பெங்கலூருவில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் கர்நாடக மண்ணின் மைந்தர்களை மீறி எதுவும் செய்து விட முடியாது..
கேரளாவை மலையாளி ஆள்கிறான்,
ஆந்திராவை தெலுங்கன் ஆள்கிறான்.
கர்நாடகாவை கன்னடன் ஆள்கிறான்.
ஆனால், தமிழ் நாட்டை மட்டுமே திராவிடன் ஆள்கிறான்...
நமது தமிழ்ச் சொந்தங்களின் அறியாமையாலும், பெருந்தன்மையாலும், இயலாமையாலும், கண்டவனை எல்லாம் தலைமை ஏற்று வீண் போனதாலும், ஏழ்மையாலும் இன்று வரை இந்த இழி நிலை தொடர்கிறது..
நன்றாக தமிழ் தமிழ் என்று வீர வசனமெல்லாம் பேசுகிறார்கள் அனைத்துத் திராவிட இயக்கத் தலைவர்களும், ஆனால், எதாவது ஒரு தமிழர் வாழ்வாதாரப் பிரச்சனை, உயிர்ப் பிரச்சனை என்றால், வாய் மூடி மௌனிக்கிறார்கள். இல்லையென்றால், தமிழ்ச் சமுதாயத்திற்கு எதிரான நிலைப் பாட்டை எடுக்கிறார்கள்..
தமிழ் நாடு தமிழருக்கே. ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு என்பதை தமிழர்கள் நிலை நாட்டினால் மட்டுமே திராவிடர் என்ற போர்வையில் தமிழரின் எச்சில் இலையிலிருந்து உணவை பறித்துச் செல்லும் திராவிடர்கள் திருந்துவார்கள்...
அற்புத மூலிகை சோற்றுக் கற்றாழை...
சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும். எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை. இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.
சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது. கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
பொல்லாமே கங்க பம்பு ழுச்சூலை குஷ்டரச
மல்லார்மத் தம்பகந்த ரங் குன்ம-மெல்லாம்விட்
டேகு மரிக்கு மெரிச்சற் கிரிச்சமு
மாகு மரிக்கு மருண்டு.
நறுங் கற்றாழைக்கு வாத மேகம் , கப கோபம் , கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி ( குஷ்டம் , பால்வினை நோய்கள் ) , மூலம் , உன்மத்தம் , பகந்தரம் , வயிற்று நோய் , தினவுள்ள பித்த கிரிச்சரம் ( அரிப்பும் , பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு ) ஆகிய வியாதிகள் மருண்டு ஓடும் என்று பொருள்.
மேலும் மது மேகத்தால் ( சர்க்கரை வியாதியில் ) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.
இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு , அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும்.அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும்.
மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை...
எதற்கு டென்ஷன்...
ஓரு மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் உடலில் பயணிக்கிறது.
ஒருவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான்.
750 தசைகளை அசைக்கிறான்.
70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான்.
இந்தச் செயல்களால் மனிதன் களைத்துப் போவதில்லை..
ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன..
இதில் நம் முயற்சி என்று எதுவும் இல்லை.
நாமாக முயற்சி எடுத்துச் செய்யும் சில்லறை வேலைகளால்தான் நாம் களைத்துப் போகிறோம். ஏன்?
இயற்கை, தான் செய்யும் வேலைகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நாம் துரும்பை நகர்த்தினால் கூட கணக்கு வைத்துக் கொள்கிறோம்.
இயற்கை, தன் செயல்களைச் சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவே கருதுகிறான்.
இயல்பாக, மனிதன் மகிழ்ச்சியாக செய்யும் எந்தச் செயலும் அவனுக்கு களைப்பையும், டென்ஷனையும் தருவதில்லை. ஆனால் அப்படிச் செய்யும் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இயற்கை தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவதில்லை. தேவையுள்ளதை மட்டுமே செய்வதால் அனைத்தையும் அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்கிறது.
ஆனால் மனிதன் செய்கின்ற பல செயல்கள் பயன் தராதவையாகவும், தேவையில்லாதவையாகவும் இருக்கின்றன.
அதனால் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய அவனுக்கு நேரம் போதுமானதாக இல்லை.
இயற்கையின் வழி முறைகளைப் பின்பற்றினால், நோ டென்ஷன்...
நவகிரக தோசம் போக்கும் முறை...
ஒரு மஞ்சள் பையில் ஒரு கிலோ நவதானியம் கட்டி வியாழக்கிழமை இரவு அதை தலைக்கு வைத்து படுக்க வேண்டும் வெள்ளிக்கிழமை காலை அதை எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் , தண்ணீர் கலந்து கிரைண்டரில் அரைத்து கட்டியாக உருட்டி பசு மாட்டிற்கு உண்ணக்கொடுக்க வேண்டும்..
பசு மாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உள்ளனர். அவர்கள் நவதானிய சக்தியை ஈர்த்து திருப்தி அடைகின்றனர்.
இதன் மூலம் நவகிரக தோசங்களில் இருந்தும் கண் திருஷ்டி செய்வினை தோசங்களில் இருந்தும் விடுபடலாம்
சபரி மலை செல்பவர்கள் ,திருப்பதி செல்பவர்கள், பழனி பாத யாத்திரை செல்பவர்கள் 5 கிலோ நவதானியங்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்..
அரசு, ஆலம், பூவரசு, வேம்பு தலா அரை கிலோ விதைகளை வாங்கி வைத்துக்கொள்ளவும்..
அவற்றை போகும் வழியில் காடுகளில் வீசி சென்றால் நவகிரக தோசங்களில் இருந்து விடுபடலாம்..
களிமண் உருண்டைகளாக உருட்டி அதனுள் விதைகளை வைத்து வீசி எறிந்தால் மழைகாலங்களில் மண் கரைந்து விதைகள் முளைக்க ஏதுவாக இருக்கும்.
முளைப்பாரி எடுத்து சென்று கிராமத்து கோயில்களில் வழிபடுவார்கள் பின்பு அதனை ஆற்றில் கரைத்து வழியனுப்புவார்கள்..
இது தொன்று தொட்டு வரும் வழிபாடு நவராத்திரி வழிபாட்டின்போது ஒன்பது நாளும் நவதானியம் வளர்த்து ஒன்பதாம் நாள் அதை நதியில் கரைக்கிறார்கள் இது சிறந்த நவகிரக தோசம் நீக்கும் வழிபாடு ஆகும்.
சூரியன் சக்தி கோதுமையில் இருக்கிறது சந்திரனின் சக்தி நெல்லில் இருக்கிறது துவரம்பருப்பில் செவ்வாய் சக்தி இருக்கிறது...
சிறுதானியம் பாசிபயிறில் புதன் சக்தி அடங்கி இருக்கிறது கொண்டைக்கடலையில் குருவின் சக்தி இருக்கிறது மொச்சையில் சுக்கிரன் சக்தி இருக்கிறது...
ராகுவின் சக்தி உளுந்திலும் கேதுவின் சக்தி கொள்ளுபருப்பிலும் இருக்கிறது...
குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
மன அழுத்தம் என்பது ஒருவரை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.
மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதே.
ஆனால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கிடையேயான மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு...
முறையான அரவணைப்பு இல்லாதது, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, சமுதாயச் சூழல் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே மன அழுத்தம் ஏற்படுகிறது.
இதனால் அவர்கள், தவறான பாதைக்கு செல்வதாக ஏற்கனவே வெளிவந்த பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த மன அழுத்தத்தை சிறந்த குழுத் திட்டத்தின் மூலம் தடுக்க முடியும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சர்வதேச நிறுவனம், கோச்ரே எனும் புத்தகப் பதிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சியை நடத்தியது. இதில் மன அழுத்தம் அதிகரிப்பதற்கான காரணம் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்தது..
இதுகுறித்து, அக்குழுவில் ஒருவரான, குழந்தைகள் மனநல மருத்துவர் சாலி மெர்ரி கூறுகையில், இந்த ஆராய்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏனென்றால், மன அழுத்த நோய் உலகெங்கிலும் பொதுவாகவே உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள், வளர்ந்த நாடுகளில் மன அழுத்தக் குறைபாடு இரண்டாவது இடத்தையும், வளரும் நாடுகளில் பிரதான இடத்தையும் பெற்றிருந்ததாக அறிவித்தனர்..
இதுகுறித்து, மனநல வியாதியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்து வரும் ஜான் ஹாகின்ஸ் பொது நலப் பள்ளியின் துணை பேராசிரியரான டாமர் மெண்டெல்சன் தெரிவிக்கையில், இந்நோயின் மூலம் இளைஞர்களின் தினசரி மகிழ்ச்சி அடியோடு அழிக்கப்படுகிறது..
மேலும், அவர்களின் பள்ளி மற்றும் சமுதாயத்துடனான உறவையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி, மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும்.
இறுதியில், தொடர்ச்சியான நோய்களில் கொண்டு சென்று நிறுத்தும். முன்கூட்டியே எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் இதனை தடுக்கலாம்.
ஆனால் இம்முறையை குழந்தை களுக்கு செயல்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்...
நாங்கள், பல்வேறு நாடுகளில், ஐந்து முதல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட மொத்தம் 14,406 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 53 ஆய்வுகளை ஒன்றிணைத்தோம். இதில், ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டவர்களிடம் எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை..
குழு சார் தடுப்பு நடவடிக்கை, மற்ற மருத்துவ முறைகளை விட அனைத்து நபர்களிடமும் எளிதில் சென்றடையக்கூடியதாக உள்ளது.
பெரும்பாலான திட்டங்கள், புலனறிவு நடத்தை சிகிச்சை சார்ந்தவையாக உள்ளன. மற்றவை, அழுத்தத்தைக் குறைத்தல், சுயதிறன் மற்றும் அதிர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஒழுங்குபடுத்தும் நுணுக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது.
மன அழுத்தம் என்பது உலகெங்கிலும் உள்ள தனி மனிதர்களிடம் உள்ள ஒரு நோயாகும்.
இந்த ஆராய்ச்சி இளைஞர்கள், பெற்றோர்கள், சுகாதார நல அலுவலர்கள், குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் நபர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.
ஆனால், மன அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்கு அதிக செலவாகும். இதனை பல நாட்டு அரசுகளிடம் விவரித்திருக்கிறோம். அவர்கள் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்...
தன்னை ஜாதி வேறுபாடு பார்க்காத திராவிட தலைவனாக தமிழர்கள் மத்தியில் காட்டிக் கொள்ளும் தெலுங்கர் வைகோ நாயூடு வின் பின்புலத்தை தோலுறிக்கும் குறிஞ்சாங்குளம் பதிவு...
தமிழர்கள் அனைவரும் வாசித்து வைகோவை தெரிந்துக் கொள்ளுங்கள்...
குறிஞ்சாக்குளம் - ஒரு மீள்
பார்வை....
நெல்லை மாவட்டத்தின் கடைக் கோடியிலுள்ள இந்த குறிஞ்சாக்குளம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட ஒரு கிராமம்....
ஜனத்தொகை என்று பார்த்தால் நாயக்கர்களுக்கு இங்கு நாலாவது இடம்தான்.. ஆனால் அதிகாரத்தில் அவர்களே முதலிடம்...
ஏற்கெனவே இந்தப் பகுதியில் அரசியல் அதிகாரத்தில் கொடிகட்டி பறந்த கலிங்கப்பட்டி வையாபுரி நாயக்கரின் வீட்டிற்கு வந்தவர்களின் பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கே புரியும், வைகோவின் அன்றைய
அதிகாரம்.....
இந்திராகாந்தி
காமராசர்
எம்ஜிஆர்
கருணாநிதி
பக்தவச்சலம்
ஜெயலலிதா ஆகியோர்...
குருவிகுளம் யூனியன் சேர்மனாக தன் அதிகாரத்தை ஆரம்பித்த வைகோ இவ்வளவு எளிதாக உயர்ந்த அதிகாரபீடத்தை நோக்கி நகர்வார் என யாரும் எதிர் பார்க்கவில்லை.....
அருகிலுள்ள மீன்துள்ளி என்ற ஊருக்கு வைகோ வின் சகோதரி மணமுடித்துப் போனார்....
அதனால் கலிங்கப்பட்டிக்கும்.. மீன்துள்ளிக்மிடையே இந்த கூண்டு வண்டிகள் அதிகமாய் பறந்து கொண்டு இருக்கும். திரைச்சீலைகளால் மூடிதிறையிடப்பட்ட அந்த கூண்டு வண்டியை பார்ப்பதற்க்கே தமிழ்சாதிகளை சேர்ந்தவர்கள் அச்சம் கொள்வார்கள். அந்த அளவிற்கு வைகோவின் ஆதிக்கம் கொடி கட்டி பறந்த காலம்.
90விழுக்காடு பள்ளர்களை கொண்ட மீன்துள்ளி கிராமத்தில் வெறும் 6விழுக்காட்டு நாயக்கர்கள் சுதந்திரத்திற்கு பின் 40 ஆண்டுகள் அதிகாரத்தை கையில் வைத்திருந்தது தான் காலத்தின் கோலம்..
இப்படித்தான்1980களின் பிற்பகுதியில் குறிஞ்சாகுளம் காந்தாரியம்மன் கோவில் பிரச்சனையும் வைகோவின் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும். அதுவரை குறிஞ்சாகுளத்தில் உள்ளூர் பிரச்சனையாக இருந்த காந்தாரியம்மன் கோவில் பிரச்சனை இப்போது உலக பிரச்சனையாக மாற்றப்பட்டுவிட்டது.
ஏற்கனவே திமுக வின் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், அசைக்க முடியாத பெரும் பொறுப்புகளில் இருந்த வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டிற்கு சென்ற இந்த பிரச்சனை அவரின் தம்பியால் விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டது..
1991ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதத்தின் இறுதியில் காந்தாரியம்மனுக்கு ஒரு பீடத்தை கட்டி முடித்தார்கள் அங்குள்ள ஆதித்தமிழர்கள்..
கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த பீடத்தில் காந்தாரியம்மன் சிலையை தூக்கி வைத்தவர் அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளராக. இருந்த ஜான்பாண்டியன்..
இருதரப்பும் கைகலப்பில் இறங்கியது. வழக்கம் போல் காவல்துறை வைகோவின் அரசியல் அதிகாரத்திற்கு பயந்து காந்தாரியின் சிலையை தூக்கி எறிந்தது..
1991ஆம் ஆண்டு வைகோவின் அரசியல் அதிகாரத்தால் தூக்கி எறியப்பட்ட காந்தாரி 24 ஆண்டுகளாக தனக்காக கட்டப்பட்ட பீடத்திற்கு அருகே உள்ள வானொலி பெட்டி அறையில் முடங்கி கிடக்கிறாள்..
இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வருவதற்க்காக அன்றைக்கு சங்கரன் கோவில் கோட்டாச்சியர் அலுவலகத்தில் சமதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்றைக்கு அந்தப்பகுதியில் இருந்த அத்தனை MF டிராக்டரிகளிலும் சங்கரன் கோவிலில் வந்து குவிந்தார்கள் நாயக்கர்கள்..
அப்பாவிகளான உள்ளூர் தமிழர்கள் அன்றைக்கு திருவேங்கடத்திற்கும் சங்கரன் கோவிலுக்கும் இடையே ஓடிகொண்டிருந்த அஜீஸ் நகரப் பேருந்தில் ஏறி சங்கரன் கோவில் சென்றார்கள்..
கோட்டாச்சியர் அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக நின்று கொண்டிருந்த நாயக்கர்களை பார்த்ததும் கூனிக்குறுகி போய் இருக்க வேண்டும் அவர்கள்.
வைகோவின் வானுயுயர்ந்த அதிகாரத்தின் கீழ் எதுவும் செய்ய முடியாத சங்கரன் கோவில் கோட்டாச்சியர் அரிதிலும் அரிதான தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.
அதாவது தமிழர்கள் தங்கள் பட்டா நிலத்திலும் நாயக்கர்கள் தங்கள் பட்டா நிலத்திலும் நடந்து கொள்ளலாம்.....
பயன்படுத்திக்கொள்ளலாம்..
நாயக்கர்கள் எந்த காரணத்தை கொண்டும் தமிழர்களுடைய பட்டா நிலத்திற்குள் வரக்கூடாது. இது தமிழர்களுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டார்..
தமிழர்கள் கண்ணீர் வடித்தார்கள் குடிசைகளில் மட்டுமே தங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொண்ட ஆதித்தமிழர்களுக்கு அந்த கரிசல்காட்டில் சொந்தம் கொண்டாட கையலக நிலம் இல்லை....
கோட்டாச்சியர் தீர்ப்பு வழங்கிய மறுநாளில் இருந்து குறிஞ்சாகுளத்து தமிழச்சிகளுக்கு தங்களுடைய காலைக்கடனை கழிப்பதற்க்கு கூட வழியற்று போனார்கள்....
அதுவரை விவாசய வேலைகளுக்கு கூப்பிட்ட நாயக்கர்கள் இப்போது புறக்கணிக்க ஆரமபித்தார்கள்.. வாழ வழியற்ற மண்ணின் மைந்தர்கள் முறையிட ஆள் இன்றி தவித்து போனார்கள்.
இடையில் அன்றைக்கு ஒடுக்கப்பட்ட சமூக தலைவர்களாக இருந்த இளையபெருமாள், பசுபதிபாண்டின், சாத்தை பாக்கியராஜ் போன்றவர்கள் எல்லாம் குறிஞ்சாகுளத்திற்கு வந்து போனார்கள். இவர்களில் முக்கியமானவர் வை.பாலசுந்தரம்.
1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ம் தேதி.... குறிஞ்சாக்குளத்து தமிழர் தெருவைச் சேர்ந்தவர்கள் .. அருகில் உள்ள திருவேங்கடம் சங்கர். திரையரங்கத்திற்கு நடிகன் திரைப்படம் பார்ப்பதற்காக சைக்கிளில் சென்றார்கள்...
திரைப்படம் பார்த்துவிட்டு இரவு பதினோரு மணியளவில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்து இடைமறித்த இனவெறிக் கும்பல். சைக்கிளில் வந்தவர்களை சராமரியாக தாக்கி வெட்டியது....
அப்பாவிகள் நாலுபேர் துடி துடிக்க தங்கள் உயிரை நீத்தார்கள்....
ஒருவருடைய ஆண் உறுப்பை வெட்டி செத்துப்போன இன்னொருவரின் உறுப்பிலும் வைத்து வெறியாட்டம் ஆடியது காலிக்கும்பல்....
செய்தி காட்டுத்தீயாய் பரவியது.. ஆனால் எதுவும் நடக்கவில்லை....
செத்த நான்கு பேரை இரண்டு குழிகளில் போட்டு மூடினார்கள்....
கொலைவழக்கு விடுதலை ஆனது..
இந்தக்கொலைக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பது அன்றைக்கு நெல்லை மாவட்ட காவல் துறைக்கு தெரியாமலில்லை..
ஆனால் வைகோவின் அசுர பலத்திற்கு முன்னால் காவல்துறை மண்டியிட்டது..
உலகத் தமிழர்களுக்காக
குரல்கொடுத்து கண்ணீர் சிந்திய வைகோ அவர்கள்.....
கூப்பிடு தூரத்தில் குறிஞ்சாக்குளத்தில் நடந்த நான்கு அப்பாவிகளின் படுகொலைக்காக இன்றுவரை ஒரு இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்....
குறிஞ்சாக்குளம் உலகம் கண்டிராத ஒரு பெருந்துயர்...
மனுதர்மம் ( சாதி ) பார்ப்பனர் படைத்ததா?
பிராமணிய கொடுநெரிகளைச் சட்ட வடிவமாக்கிய 'மனு நூல்' அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.
அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து பெரியார் எனும் ஈ.வே.ரா முன்னோர்கள் (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்...
மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது..
'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.
அதையொத்த...
ஆவத்தம்பா சூத்திரம்,
போதாயன சூத்திரம்,
நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்...
இதில் நகைச்சுவை என்னவென்றால் சாதியை உருவாக்கிய திராவிடனே...
சாதியை ஒழிக்க போராடுவதைப் போல் நடித்து நம்மை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறான்...
அதை தமிழன் நம்பி ஏமாந்துக் கொண்டிருக்கிறான்...
ஆரியன் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?
ஆரியன் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..
அது என்னய்யா..
ஆரியன் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே..
மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க..
இழிவு நிலையை பேசும் போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க..
அடுத்து, தமிழன் என்றாலே ஆரியனும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க..
தமிழ் என்றாலே சாதி என்று சொல்லுறீங்க..
அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?
சாதிய தலைவர் அல்லது ஆரிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே...
பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...
சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்.
இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.
அது எங்கே?
இது மூடிமறைக்கப்பட்டது எவ்வாறு?
17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இதைத் தவறவிட்டது யார்?
பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு ஊடகம் கூடவா இல்லை?
தலித் கட்சிகளும் ஊடகங்களும் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?
இனி இதைப் பற்றிய ஆராய்ச்சியிலும் நாம் தான் ஆராய வேண்டும் போல...
குறிப்பு : தலீத்தியம் என்பது திராவிடம் போல் வந்தேறிகளுக்கானது...
செட்டிச்சி பாப்பாத்தி...
பாப்பாத்தி என்ற பட்டம் பறையர் பெண்களைத் தான் குறிக்கும் என்று நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார்...
அவருக்கு நட்புரீதியான என் பதில்..
தமிழர் மண்ணான பெங்களூரில் சொக்கப் பெருமாள் ஆலயம் தொம்லூர் (Domlur) என்ற இடத்தில் உள்ளது..
தமிழ் கல்வெட்டுகள் பல உள்ள இக்கோவிலில் 1270ம் ஆண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று உள்ளது..
இக்கோவிலைக் கட்டிய தலைக்காடு பகுதியைச் சேர்ந்த 'திரிபுராந்தகன் செட்டியார்' மற்றும் அவரது மனைவி 'செட்டிச்சி பார்ப்பார்த்தி' ஜலப்பள்ளி மற்றும் விண்ணமங்கலம் குளம் பகுதிகளை கொடையாக அளித்தது பற்றியும் கூறுகிறது..
(சான்று: epigraphica carnatica vol 9,
insc of banglore, no 10&13 )
பார்ப்பனர், பார்ப்பார், பார்ப்பாத்தி, பார்ப்பனத்தி போன்றவை சோழர்கள் காலத்தில்கூட ஒரு சாதியைக் குறிக்கவில்லை.
சங்ககால இலக்கியங்களில் இத்தகைய பெயர்கள் தொழிலைக் குறிக்கவே பயன்பட்டன..
சோழர் காலம் வரை அதுவே நடைமுறை..
அதாவது யார் வேண்டுமானாலும் பார்ப்பனர் ஆகலாம்..
தெலுங்கு நாயக்கர் ஆட்சியிலேயே பிராமணீயமும் சாதியமும் நடைமுறைப் படுத்தப்பட்டது...
வர்மக்கலை...
ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்கக் கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நம் தமிழ்ச் சித்தர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?
இந்த வர்மக்கலை ஒரு கடல். இதைப் பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரும், ஞானபண்டிதரான முருப்பெருமானின் முதற் சீடருமான, கும்பமுனி, குருமுனி என அழைக்கப்படுவரும், 1008 அண்டங்களையும் அருளாட்சி செய்பவரும், அகத்தியம் என்ற தமிழ்நூலைப் படைத்தவருமான சித்தபெருமான் அகத்தியர்.
இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ). தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே. என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்குச் சாட்சி.
சித்தபெருமான் அகத்தியர் கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்", "அகஸ்தியர் வர்ம கண்டி", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம் ", "அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு", "அகஸ்தியர் வர்மக் கண்ணாடி", "வர்ம வரிசை", "அகஸ்தியர் மெய் தீண்டாக்கலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன்" என்ற மன்னன் தான் இதில் வல்லவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத் தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்குப் பின்னர் வந்த சோழர்கள் இதனைக் கற்றனர்.
பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்தமதத்தைப் பரப்பச் சீனா சென்ற போது இந்தக் கலையும் அங்கு பரவியது. “Tenjiku Naranokaku" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India" என்ற பொருளைத் தருகின்றது. "ஹு ஷிஹ் " என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது "இந்தியா ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். 1793ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது தாங்கள் இந்தக் கலை மூலமாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தமிழக இளைஞர்கள் வர்மக்கலை பயில்வதைத் தடை செய்தனர்.
அன்று ஆரம்பமான அழிவு, இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது. இந்தக் கலையை அனைவருக்கும் கற்றுத்தர மாட்டார்கள். இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார். வர்மக்கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறையைக் கையாள வேண்டும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.
இதை எந்த வயதினரும் கற்கலாம். ஆனால் யார் மட்டுமே கற்க முடியும்? "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே" என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது.
வர்மக் கலைகளின் முக்கியமான வகைகள் " "தொடு வர்மம்", "படு வர்மம்", "தட்டு வர்மம்", "நோக்கு வர்மம்" என வகைப் படுத்தப்பட்டுள்ளது. தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார். இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்தப் பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும். படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பாதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும். தட்டு வர்மம் யாருக்கும் கற்றுத் தரப்படமாட்டாது. இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும். நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது. யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும். உதாரணத்திற்க்குச் சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம். அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம்.
ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரைத் தாக்கும் வல்லமை கொண்டது இந்தக் கலை. ஆனால், இது யாருக்கும் இலகுவாகக் கற்றுத்தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் மட்டுமே இதைக் கற்கலாம்.
தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.
இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை...
பாஜக மோடி அரசு... மாநில அரசுக்கு தர வேண்டிய 1.50 லச்சம் கோடி GST பணத்தை தர நிதி இல்லை என்கிறது...
அடேய் இது அனைத்தும் அந்தந்த மாநில மக்களிடம் இருந்து நீங்கள் வரியாக பறித்த பணம்...
இது தவிர பறித்த பணத்தில் 30% சதவீதமே அந்த மாநிலத்திற்கு திருப்பி தருகிறீர்கள்..
இது சனநாயக படுகொலை கூட்டாட்சி தத்துவத்தை படுகொலை செய்வதும் பாசிச சர்வாதிகார அரச பயங்கரவாதம் என்பதை அறிவார்ந்த இதன் சுதேசி மக்கள் நன்றாக அறிவார்கள்...
நீ எல்லா பணத்தையும் உன் முதலாளிகள் அம்பானி & அதானிக்கு கொடுக்க...
நாங்க என்ன மயித்துக்குடா வரிக்கட்டணம்..?
விபாசனா தியான முறை...
1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத்திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். சத்தங்களே இருக்கக்கூடாது என்பதல்ல நம்மை அதிகமாக அலைக்கழிப்பது போன்ற சத்தங்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியம்.
2) உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ அமருங்கள். நீண்ட நேரம் அமர்கையில் உங்களுக்கு சிரமமாக இருக்கும்படியாக மிக இறுக்கமாக அமராதீர்கள். அதே நேரம் கூன் போட்டோ, விறைப்பாகவோ இல்லாமல் முடிந்த அளவு நேராக நிமிர்ந்து இருங்கள். உதாரணத்திற்கு வயலின் தந்தி மாதிரி இருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக இறுக்கமாகவோ, தளர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
3) உங்கள் வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படியாக கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். கண்களை மூடியோ, லேசாகத் திறந்தோ வைத்துக் கொள்ளலாம்.
4) உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் வையுங்கள். உங்கள் உள் வாங்கும் மூச்சினால் உங்கள் வயிறு விரிவடைவதையும், வெளி விடும் மூச்சினால் வயிறு குறுகுவதையும் கவனியுங்கள். உங்கள் கவனத்தை அதைத் தவிர வேறெதிலும் வைக்க வேண்டாம். ஆரம்ப நாட்களில் அதை “விரிவடைகிறது”, “குறுகுகிறது” என்று மனதில் பெயரிட்டு கவனத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் உங்கள் மூச்சை அலசப் போக வேண்டாம். ’உள் மூச்சு ஆழமாகிறது” “வெளிமூச்சு முழுமையாக இல்லை” போன்ற விமரிசனங்களுக்குப் போகாதீர்கள்.
5) போகப் போக அந்த பெயரிட்டு அழைப்பதையும் நிறுத்தி வயிர்றின் அசைவுகளை மட்டும் உணர ஆரம்பியுங்கள். இது படிக்க சுலபமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் உங்கள் கைகளை முன்பு சொன்ன நிலையிலேயே வயிற்றை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளலாம். கைகளாலும் அந்த அசைவுகளை உணர்வது தியானத்தை ஆழப்படுத்த உதவும்.
6) மூச்சை நீங்களாகக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். அது இயல்பாக இருக்கட்டும். மூச்சினால் ஏற்படும் வயிற்றசைவில் மட்டும் வைக்கையில் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது அடுத்த அசைவைப் பற்றி சிந்திக்காதீர்கள். உதாரணமாக உள்மூச்சின் அசைவில் கவனம் வைக்கையில் வெளிமூச்சின் அசைவைப் பற்றி முன்பே நினைக்க ஆரம்பிக்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரை அந்த ஒரு கணம் மட்டுமே கவனமிருக்கட்டும். மனம் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் கவனத்தை பெரும்பாலும் சிதற வைக்கும் மனதிற்கு நிகழ்காலம், அதுவும் சுவாரசியம் இல்லாத இந்த மூச்சு ஏற்படுத்தும் அந்த ஒரே அசைவில் கவனம் வைப்பது இமாலயப் பிரயத்தனமாகவே இருக்கும். ஆனால் அவசரமில்லாமல், அலைபாயாமல் அந்த நிகழ்கால கணத்தின் அந்த அசைவில் மட்டுமே மனம் வையுங்கள்.
7) மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சலிக்காமல் அதைத் திரும்ப வயிற்றின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஆரம்பத்தில் தோன்றலாம். அது இயற்கையே. ஆனால் எந்தப் புதிய வித்தையும் ஆரம்பத்திலேயே சுலபமாகக் கை கூடாது என்கிற போது அது கைகூடுகிற வரை பொறுமையுடன் பயிற்சி செய்யத் தான் வேண்டும் என்கிற போது இந்த தியானப் பயிற்சியில் ஆரம்பத்திலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் அல்லவா?
8) சில நாட்கள் இப்படியே இந்த தியானத்தை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யுங்கள். பின் அடுத்த கட்டமாக மனம் எப்போதெல்லாம் மூச்சின் அசைவை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறதோ அதன் செயலுக்கு ஒரு பொதுவான பெயரை வைத்து உணர்ந்து திரும்ப மூச்சின் அசைவுக்கே மனதைக் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு கவனம் வெளியே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்பதிற்கு சென்றால், சுருக்கமாக “சத்தம்” என்று மட்டும் என்று பெயரிடுங்கள். அடுத்த கணம் மீண்டும் மூச்சின் அசைவுக்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். மனம் வேறு எதையோ நினைக்கிறது என்று எடுத்துக் கொண்டால் “நினைப்பு” என்று பெயரிட்டு மறுபடியும் மூச்சின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். கால்வலிக்கிறது என்று மனம் சொன்னால் “வலி” என்று பெயரிட்டு உடனடியாக கவனத்தை மீண்டும் திருப்புங்கள்.
9) நீங்கள் கவனச் சிதறல்களுக்கு வைக்கும் பெயர் எப்போதும் பொதுவாகவும் ஒரு சொல் அளவாகவே இருக்கும்படி சுருக்கமாகவும் இருக்கட்டும். வேறெதையும் நினைக்கவே கூடாது என்று தீர்மானமாக உட்கார்ந்தால் கண்டிப்பாக தோற்றுப் போவீர்கள். மனம் கட்டுப்பாடுகள் அதிகமாக அதிகமாக முரண்டும் அதிகமாகவே பிடிக்கும். மாறாக ஒவ்வொரு கவனச்சிதறலையும் நீங்கள் அறிந்திருந்து, அதற்கு ஒரு பெயர் வைத்து அங்கீகரித்து, சலிக்காமல் உங்கள் கவனத்தை உடனடியாக மீண்டும் திருப்புவதே பெரிய வெற்றி.
10) கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும், அது எது விஷயமாக என்று பொதுவாக அறிந்திருப்பதும், அது விஷயமாக மேற்கொண்டு சிந்தனையை நீட்டிக்காமல் எங்கு கவனம் வர வேண்டுமோ அங்கு உடனடியாக மனதைக் கொண்டு வர முடிவதுமே தியானத்தில் முதல் பெரிய வெற்றி. கவனச் சிதறல் எதிலோ ஆரம்பித்து அதிலேயே தொடர்ந்து சில நேரம் இருந்து அதை அறியாமலேயே இருப்பது தான் தியானத்தின் எதிர்மாறான நிலை.
11) உட்கார்ந்த நிலை சில நிமிடங்கள் கழித்து அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தாராளமாக மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எண்ணம் தோன்றியவுடனேயே “மாற்றம்” என்று பெயரிட்டு அந்த எண்ணத்தை அங்கீகரித்து முழுக் கவனத்துடன் மாறி உட்கார்ந்து மறுபடியும் வயிற்றின் அசைவிற்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள்.
12) இப்படி இந்த உள்நோக்கு தியானம் உங்கள் கவனம் செல்லுமிடங்களைக் கூர்மையாக அறியச் செய்வதுடன் கவனத்தின் மீது உங்கள் ஆளுமையை வளர்த்த உதவுகிறது.
13) நாளடைவில் தியானத்தில் இருக்காத நேரங்களிலும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை அறிந்திருக்க இந்த தியானப் பழக்கம் உதவுகிறது. கோபம் வருகிற போது “கோபம்” என்று பெயரிட்டு அறியும் அளவு விழிப்புணர்வு இருந்தால் கூட மனதிற்கு கவனத்தை அதிலிருந்து வேண்டும் இடத்திற்கு திருப்பவும் எளிதில் முடியும் என்பது அனுபவம். விபாசனா என்னும் இந்த உள்நோக்கு தியானம் வாழ்க்கை முறையாக பரிணமிக்கும் போது வாழ்க்கை ஆழப்படுகிறது. அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதக் கூடிய அளவு மேலும் பல பயிற்சிகள் இருக்கின்றன என்றாலும் நம் தற்போதைய குறிக்கோளுக்குத் தேவையான அளவு அறிந்து விட்டோம்...
உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்...
முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள்.
அதைப் போல ராஜயோகத்தில், யோகத்தின் யோகம் என்று குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள்.
நம் மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.
அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி.
குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற கருத்தும் உண்டு.
குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார்.
மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி,
வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு உண்டு.
குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர்.
பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு.
அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம்.
அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும். நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள்.
இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல் திறந்தது என்று சொல்வது இதைத்தான்.
கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.
இதையே திருமூலர், மூலாதாரத் துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர்களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.
மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள் கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.
மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்தி தான் சித்தி எனப்படும்.
மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை, அக்கினி குண்டலினி என்பர்.
அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள்.
அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள்.
முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.
மேலும் குண்டலினியானது தோற்றம்,
நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும்,
மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி
மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில்
உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.
யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும்.
அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போது தான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான். பேரின்பத்தில் திளைக்கிறான். இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள்.
இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள் என்று சொல்லப்பட்டுள்ளது.
அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார்.
முதல் ஆறு சக்கரங்களையும் யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம் போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம்.
ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை.
ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது.
விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம்.
இவையெல்லாம் கூடுமானால் மெல்ல
மெல்லத் திறக்கும்...
Subscribe to:
Posts (Atom)